Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பரந்தனில் வாலிபர் வெட்டி கொலை
பரந்தனில் வாலிபர் வெட்டி கொலை
பரந்தன் பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்து வசித்து வந்த வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு
காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவரை கொலை செய்தவர்கள் யார் என்பது இதுவரை தெரியவரவில்லை
போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
தமிழர் பகுதிகளில் வாள்வெட்டு குழுக்கள் அடாவடிகள் அதிகரித்து காணப்படுகின்றமை
குறிப்பிட தக்கது
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றால் தடை
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றால் தடை
வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய வருடந்தோறும் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி துயிலுமில்லங்களில்
தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு ஆண்டு தோறும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு கடந்த 2009 ம் ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஸ்ரிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 2018 ம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிலையில் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது.
இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸாரினால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR 868/21 வழக்கினூடாக முல்லைத்தீவு பொலிஸ் பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இழஞ்செழியன், சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா (கரன்), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன்), சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சமூக செயற்பாட்டாளர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஆகிய பன்னிரெண்டு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
முசுலீம் தீவிரவாதி ஒருவர் கைது
முசுலீம் தீவிரவாதி ஒருவர் கைது
ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முஹம்மட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த நபரொருவர், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால், நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் உயித்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே, காத்தான்குடி 4ஆம் பிரிவைச்சேர்ந்த 37 வயதுடைய கே.ஜி.பி. ஜவ்ராஸ் என்பவரை அடையாளம் கண்டுகொண்ட பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் அந்நபரை, சம்பவதினமான நேற்றிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
இலங்கையில் 60 வயதைத் தாண்டியவர்களுக்கான பூஸ்டர் என்ற 3 ஆவது கொரோனா
தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை இன்று (17) ஆரம்பமாகிறது.
இரண்டாவது தடுப்பூசியை ஏற்றி 3 மாதங்கள் பூர்த்தியடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
இதுவரை பத்து இலட்சம் பாடசாலைகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும்
பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 480 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி
ஏற்றப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கைகளை ஒருசில நாடுகளே
ஆரம்பித்துள்ளன. இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கக் கிடைத்துள்ளமை இலங்கைக்கு கிடைத்த
வெற்றியாகும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கூறினார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 நவம்பர்17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
வட அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு திசையை அண்டி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 18ஆம் திகதியளவில்
தென் ஆந்திரப் பிரதேசத்தையும் அண்மையாகவுள்ள வட தமிழ்நாடு கரையையும் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில்
பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
மழை நிலைமை:
கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய
சாத்தியம் காணப்படுகின்றது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின்
வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது
கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
மகிந்த கோட்டாவால் ஓரங்க கட்ட பட்டுள்ளார் – ரிச்சர்டு
மகிந்த கோட்டாவால் ஓரங்க கட்ட பட்டுள்ளார் – ரிச்சர்டு
இலங்கையில் தமிழர்களை இல்லா தொழித்து அதன் தீவிர வேட்டையில் ஈடுபட்டவர் முசுலிம்
ரிச்சார்டு ஆவர் ,இவர் ஒரு சண்டியர் ,அவரை சிறையில் கோட்டா அடைத்தார் ,அதனால்
சீற்றமுற்ற இவர் மகிந்த நல்லவர் எனவும் அவர் கொட்ட ஆட்சியில் ஓரணிக்கட்ட பட்டுள்ளார் என
கேள்வி எழுப்பியுள்ளார்
வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளர்த்த நபர் – சுற்றிவளைத்த பொலிஸ்
வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளர்த்த நபர் – சுற்றிவளைத்த பொலிஸ்
இலங்கை வெள்ளவாய பகுதியில் 39 வயதுடைய நபர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்தில் ஏனைய
செடிகளுக்கு இடையில் மறைத்து பத்துக்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் வளரத்து வந்துள்ளமை
கண்டு பிடிக்க பட்டுள்ளது
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது
தற்போது நபர் உலர்ந்த கஞ்சா போதையுடன் கைது செய்ய பட்டுள்ளார்
இலங்கையில் புதிய கொரனோ தடைகள் அறிவிப்பு
இலங்கையில் புதிய கொரனோ தடைகள் அறிவிப்பு
இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து தற்போது
மூன்றாவது தடை விதிக்க பட்டுள்ளது
எனினும் இதற்கு எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாது அறிவிப்புகளுடன் வெளியாகியுள்ளது
சுகாதர முறைகளை பின்பற்றி மக்களை நடமாடும் படி எச்சரிக்கை பட்டுள்ளது
இலங்கை காவல்துறை வரலாற்றில் புதிய சாதனை
இலங்கை காவல்துறை வரலாற்றில் புதிய சாதனை
இலங்கை காவல்துறை வரலாற்றில் முதன் முதலாக பொலிஸ் தலைமையக நிர்வாக பிரிவு முதல்
பெண் பணிப்பாளராக SSP லங்கா ராஜனி அமரசேகர அமர்த்த பட்டுள்ளார்
இவ்வாறான முதல் பெரும் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்க பட்டுள்ளது பெண்கள் சகல
துறைகளிலும் நியமிக்க படுவதற்கு ஏற்ப இவை வித்திடுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
சிங்கப்பூர் இலங்கை இடையில் விமான சேவைகள் ஆரம்பம்
சிங்கப்பூர் இலங்கை இடையில் விமான சேவைகள் ஆரம்பம்
இலங்கை சிங்கப்பூருக்கு இடையில் விமான சேவைகள் மீள ஆரம்பிக்க பட்டுள்ளன ,
வாரத்தில் ஏழு தடைவைகள் இந்த சேவைகள் நடை பெறும் எனவும் மக்கள் இதனால் மகிழ்ச்சி
உற்றுள்ளார்கள் என உல்லாசத்துறை தெரிவித்துள்ளது
வெளிநாட்டில் உல்லாச பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 25 டிப்பர் லாரிகள்
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 25 டிப்பர் லாரிகள்
இலங்கை அரச நிறுவனத்திற்கு இந்தியாவின் டாட்டா நிறுவனத்தினால் தயாரிக்க பட்ட புத்தம் புது
டிப்பர் டிரக்குகள் இருபத்தி ஐந்து வழங்க பட்டுள்ளது
மேலும் பல நூறு விரைவில் விநியோககிக்க படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கையின் போக்குவது ,மற்றும் அபிவிருத்தி செயல்களில் இந்த வண்டிகள் பாவனை
முதன்மை வகிக்கும் என ஏதிர் பார்க்க படுகிறது
எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி – அரசு
எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி – அரசு
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் எரிபொருள்
தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரவி வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 17 சதவீத
பெற்றோலும், 29 சதவீத டீசலும் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றன. கேள்விக்கு ஏற்ற
வகையில் போதுமான எரிபொருள் நாட்டில்
இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என தேவையில்லாமல் அஞ்ச வேண்டாமென
அமைச்சு பொதுமக்களைக் கேட்டுள்ளது.
காவல்துறை வேட்டை 86 பேர் கைது
காவல்துறை வேட்டை 86 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட எண்பத்தி ஆறு பேர் கடந்த தினம்
கைது செய்ய பட்டுள்ளனர்
இதுவரை 82 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார்
தெரிவித்துள்ளனர்
கடைகளுக்கு எச்சரிக்கை – மீறினால் அனுமதி இரத்து
கடைகளுக்கு எச்சரிக்கை – மீறினால் அனுமதி இரத்து
பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறார்களா என்பதை
பரிசீலிப்பதற்காக மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, பஸ்களில் இருக்கைகளுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது, முகக்கவசம் அணியாமை, குளிரூட்டப்பட்ட பஸ்களுக்கு நடமாடும் வியாபாரிகள் நுழைதல் போன்ற
நடடிக்கைகளை ஆராய்வதற்காக, இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (14) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலான இரண்டு மணிநேர சோதனை
நடவடிக்கையில், 451 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
318 பஸ் ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பஸ்கள் மற்றும் 505 வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார
வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் கற்க வந்த மாணவி – விபத்தில் மரணம்
இலங்கை
கிளிநொச்சியில் கற்க வந்த மாணவி – விபத்தில் மரணம்
கிளிநொச்சி – ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு, கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்ற மாணவிகள் மூவர், உயர்தர கல்விக்காக, கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு
அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்தனர்.
இதன் போது, ஏ9 வீதியில் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக உள்ள மஞ்சல் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது, ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.
இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது, பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதில், ஹன்ரர் வாகனம் பட்டாவுடன், மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகள் மீது மோதியுள்ளன.
இதன்போது சம்பவ இடத்திலயே, திருவாசகம் மதுசாளினி (வயது 17) என்ற மாணவி உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார்.
குறித்த மாணவியின் தந்தை, சைக்கிளில், நாளாந்தம் ஊற்றுப்புலத்தில் இருந்து கிளிநொச்சிக்கு விறகு வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளி என்பதுடன், மிகவும் வறுமைக்குட்பட்ட நிலையில் தனது மகளை உயர்தரத்துக்கு கற்பித்து அனுப்பிய நிலையில், முதல் நாளே இப்பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்தை அடுத்து, சிவில் சமூக அமைப்பினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் என பல்லும் இணைந்து, கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்
வீதி ஒழுங்குகளை கடைபிடிக்க வேண்டிய பொலிஸார் உரிய காலத்தில் கடமையில் இருப்பதில்லை என்றும் வாகன சாரதிகள் விழிப்புணர்வின்றி வாகனங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல விடயங்களை கண்டித்து, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வீட்டில் பாரிய வெடிப்பு – இருவர் காயம்
வீட்டில் பாரிய வெடிப்பு – இருவர் காயம்
இலங்கை அலவ்வயில் பன்கொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் தீடிரென வெடிப்பு சம்பவம்
இடம்பெற்றுள்ளது
இதன் பொழுது அங்கிருந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி வெடிப்பு தொடர்பில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்னைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை
தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 நவம்பர்15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது மத்திய அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 17ஆம் திகதியளவில் மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. அதன்பின் அது தொடர்ந்தும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18ஆம் திகதியளவில் ஆந்திரப் பிரதேசத்திற்கு அண்மையான கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
வாள்கள் ,கோடாளியுடன் மூவர் கைது
வாள்கள் ,கோடாளியுடன் மூவர் கைது
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் வாள்கள் கோடாலியுடன் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
இவர்கள் சமூக விரோத செயல் பாட்டில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் தொடரும் மர்ம கொலைகள் – வீட்டுக்குள் தூர் நாற்றம்
இலங்கையில் தொடரும் மர்ம கொலைகள் – வீட்டுக்குள் தூர் நாற்றம்
இலங்கையில் ஆளும் கொலையாளிகள் ஆட்சியில் நாடெங்கும் பல மர்ம கொலைகள் இடம்பெற்ற
வண்ணம் உள்ளன, இவை நேரடி பார்வைக்கு தற்கொலை என காண்பிக்க படும் ,ஆனால்
அவையோ திரை மறைவில் திட்டமிடப்பட்ட படுகொலைகளாக பெற்றுள்ளன
இவ்விதம் புத்தளம் பகுதியில் வீடொன்றுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்
மீட்க பட்டுள்ளது
இது தற்கொலை என தெரிவிக்க படுகின்ற பொழுதும் அவை திட்டமிட்ட பட்ட படுகொலை என்ற நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்
இலங்கையில் கொரானாவுக்கு 22 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 22 பேர் மரணம்
நேற்று முன்தினம் இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இருபத்தி
இரண்டு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் அதே நாளில் எழுநூறுக்கு மேற்பட்டவர்கள் புதிய தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்
மழைக் காலத்தில் மேற்படி நோயானது வேகமாக பரவி வருகின்றமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது











