Posted in இலங்கை செய்திகள்

பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் சிறை

பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் சிறை

இலங்கையின் அமைச்சராக விளங்கிய பிரசன்ன ரணதுங்காவுக்கு நீதிமன்றம் ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது

வர்த்தகர் ஒருவரை மிரடடிய குற்ற சாட்டில் இவருக்கு இந்த சிறை தண்டனை நீதி மன்றத்தால் வழங்க பட்டுள்ளது

மேலும் பிரசன்னா ரணதுங்க இருபத்தி ஐந்து மில்லியன் இலங்கை ரூபாய்களை பாதிக்க பட்ட வர்த்தகருக்கு வழக்கை வேண்டும் என்றும் நீதிமன்ற கட்டளை தீர்ப்பில் தெரிவிக்க பட்டுள்ளது


இலங்கை அரசியல் வாதிகள் ,வர்த்தகர்கள் மற்றும் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த அமைச்சர் மீதான நீதியான நீதி விசாரணை தீர்ப்பு ரவுடிகளாக வளம் வரும் அமைச்சர்களுக்கு பீதியை ஏற்படுத்தும் விதமாக அமைய பெற்றுள்ளது

இலங்கை ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால் தாங்கள் எத்தனையும் செய்து விடலாம் என்ற அதிகார போதையில் உலவுகின்றவர்களுக்கு

இலங்கை நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் வாயிலாக ஓரளவு இலங்கையில் நீதி நிலை நட்ட பட்டு வருவதை உயிர்ப்பித்துள்ளது

மகிந்த ராஜபக்சே முதலாண்டு ஆட்சியில் அரச ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்தது அன்றைய அமைச்சர் மேர்வின் சில்வா கொடூர தாக்குதலை நடத்தி இருந்தார்

ஆனால் அவருக்கு இதுவரை சிறை தண்டனைகள் வழங்க படவில்லை ,கல்வி அறிவு அற்றவர்காளாகவும் கஞ்சா,போதை வியாபாரிகளாகவும் வலம் வரும் இலங்கை

அமைச்சர்களின் செயல் பாடுகள் இலங்கையை வங்குரோத்து நிலைக்கு இட்டு சென்றுள்ளது

பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் சிறை

வர்த்தகரை மிரட்டி அவரிடம் பணம் பறிக்க முயன்றதாக இவர் மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது


மேல் மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்று அது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பாரப்படுத்த பட்ட வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளது

பிரசன்னா ரணதுங்க அவரது மனைவி ஆகியோர் இந்த குற்றமிழைத்தவர்கள் வழக்கின் கீழ் இணைக்க பட்டு வழக்கு இடம்பெற்று இன்று இந்த தண்டனை காலம் அறிவிக்க பட்டுள்ளது


சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தியும் அரசியல் செல்வாக்கை பயன் படுத்தியும் தப்பித்து வரு அரசியல் வாதிகளிற்கு இந்த வழக்கு பிடிமானம் ஒரு எடுத்த காட்டாக அமைய பெறுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்

    இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்

    இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் உணவுப் பொருட்களை உள் நாட்டில் உற்பத்தி செய்வதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

    இலங்கை கிராம உத்தியோகத்தர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இது நடைமுறைப்படுத்தப் படுமென்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

    தற்போதைய சந்தர்ப்பத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

    இலங்கையில் விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் சிலர் செயற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.

    பெரும்போக பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரத்தைக் கொள்வனவு செய்வதற்கு
    110 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

    இந்த விவசாய நிலங்களுக்கு உரிய உரத்தை பெற்று உள் நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் பட்ஷத்தில் தட்சார்பு பொருளாதாரா முறையை கட்டி எழுப்ப முடியும்

    அதன் ஊடாக இலங்கை நாட்டில் எழுந்துள்ள உணவு தட்டுப்பாட்டை முற்றாக நீக்கி சிறந்த பொருளாதார வளம் வாய்ந்த நாடக இலங்கை மலர ஏற்பாடு செய்யலாம் என அமைச்சர்கள் நம்பிக்கை வெயியிட்டுள்ளனர்

    விவசாய நிலங்கள் உள்ள இலங்கை திரு நாட்டில் அதன் உற்பத்தியை அதிகரிக்கா வண்ணம் பசளை இறக்குமதியை கோத்தபாஜா ராஜபக்ச நிறுத்தினார்

    இதனால் உள்ளூர் உற்பத்திகள் பாதிக்க பட்டன ,மக்கள் விவசாய உறபத்தியில் இருந்து விலகினர் ,அடிப்படை வருமான உயர்வை கோட்டா அரசே தடுத்து நிறுத்தியது

    இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்

    இந்த கண்மூடித்தமான நகர்வின் ஊடாகவே இலங்கையில் இன்று பலத்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதுடன்

    நாள் தோறும் பொருட்களின் விலை அதிகரித்து செல்கிறது பால் ,மா,சீனி,எரிபொருள்,எரிவாயு,பால்மா என அனைத்து விலையும் அதிகரிக்க பட்டுள்ளது

    நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் வரி விகிதம் அதிகரிக்க பட வேண்டும் ,தொடர்ந்து வரிகளின் அதிகரிப்பும் ரொக்கட் வேகத்தில் செல்கிறது

    ஜனாதிபதி கோத்தபாயா அரசின் கண்மூடித்தனமான செயல் பாட்டின் காரணமாக அடித்தட்டு மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை பாதிக்க பட்டுள்ளனர் ,

    இதனை தடுக்க வேண்டும் எனின் கிராமங்கள் தோறும் வீட்டு தோட்டங்களை அதிகரித்து அதன் ஊடாக பெரும் பொருளாதார விளைச்சலை உருவாக்க முடியும்

    இந்த வீட்டு தோட்டம் அதிகரித்தால் அதுவே இலங்கையின் பொருளாதரத்தில் பலத்த எழுச்சி நிலையை உருவாக்கும் என்பதும் ஆளும் இலங்கை அரசின் சிந்தனை கொள்கையாக மாற்றம் பெற்றுள்ளது

    இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்

    Posted in இலங்கை செய்திகள்

    சீனா தூதர் பீரிஸ் சந்திப்பு

    சீனா தூதர் பீரிஸ் சந்திப்பு

    சீனா தூதுவரை இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான சீனத் தூதருடன் 2022 ஜூன் 02ஆந் திகதி அமைச்சில் வைத்து கலந்துரையாடினார்.

    இச் சந்திப்பின் போது, சீனா தூதுவர் ஜென்ஹோங் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்து விளக்கியதுடன்,

    இருதரப்பு ஈடுபாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

    குறிப்பாக தற்போதைய சூழ்நிலையின் போது சீனாவின் தாராளமான உதவிகளையும் ஆதரவையும் பாராட்டிய அதே வேளையில், இலங்கையில் பொருளாதார சவால்களைத்

    தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

    இரு தரப்பினரும் பன்முக உறவுகளையும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பையும் பாராட்டினர்

    சீனா தூதர் பீரிஸ் சந்திப்பு

    இச் சந்திப்பின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சீனாவே காரணமாக மாற்றம் பெற்றது ,அபிவிருத்தி என்ற போர்வையில் கடனை அள்ளி வழங்கியது ,அந்த கடனை மீள அடைக்கமுடியா நிலையில் இலங்கை திணறியது

    மக்களுக்கு வேண்டிய வேலைத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதிகள் புகழந்து திரிந்தனர்

    அபிவிருத்தி என்ற பொறிக்குள் இலங்கையை சிக்க வைத்து அந்தநாட்டின் எழுச்சிமிகு பொருளாதாரத்தை உடைத்து அந்த நாட்டை வறுமைக்குள் சிக்க வைத்த பெருமை சீனாவையே சாரும்

    மதம் சார்ந்த நிலையில் சீனாவோடு மகிந்த ராஜபக்ச குடும்பம் ஒட்டி உறவாடியது இன்று ,அதே சீனா நடத்திய பொறிக்குள் சிக்கி சீரழிந்து தமது ஆட்சி அதிகாரத்தை பறி கொடுக்கும் நிலைக்கு சென்றுள்ளது

    சீனாவோடு முரண் பட்டு கொண்ட இலங்கைக்கு ,சீனாவின் உதவிகளை போன்று இந்தியா அரசு வழங்கியது ,இந்த இந்தியாவின் திடீர் உதவிகளும் இலங்கை மீதான ஆதிக்கம் செலுத்தும் நகர்வுகளும் சீனாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தின

    அதனை அடுத்து தற்பொழுது புதிய திட்டங்களின் கீழ் இலங்கைநாட்டை மறுசீரமைப்பு செய்திட மீளவும் கடன் ,உதவி ,உதவுதல் என்ற ஆசை வார்த்தைக்குள் இலங்கையை சிக்க வைத்துள்ளது ,

    சீனாவின் இந்த சதுரங்க ஆட்டத்தில் இருந்து இலங்கை தப்புமா என்பதும் ,மக்களோ தப்பாது என்ற வகையிலும் தமது என்ன கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர் – வன்னி மைந்தன் –

      Posted in இலங்கை செய்திகள்

      21ம் திருத்தம் மனோ கணேசன் அறிவிப்பு

      21ம் திருத்தம் மனோ கணேசன் அறிவிப்பு

      21ம் திருத்தம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல்குழு 8ம் திகதி தீர்மானிக்கும் என மனோ கணேசன் அறிவிப்பு

      8ம் திகதி கொழும்பு நுகேகொடை செயலகத்தில் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டத்தில் 21ம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.  

      நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, ஜனாதிபதி வகிக்க கூடிய அமைச்சுக்கள், பிரதமரை நீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம், அமைச்சர்களை

      நியமிப்பதற்கான பிரதமரின் அதிகாரம், இரட்டை குடியுரிமை, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுயாதீனம் உட்பட்ட விவகாரங்களை ஆராயும் அதேவேளை இவற்றை விட

      இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் பக்க விளைவாக விகிதாசார தேர்தல் முறைமைக்கும், 13ம் திருத்தம் மூலமான  மாகாணசபை முறைமைக்கும்

      உடனடியாகவோ, காலம் கழித்தோ வரக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அவதானத்தை கொண்டுள்ளதாக மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளார்.  

      இலங்கையை ஆண்டுகளாக ஆண்டு வந்த ஆட்சியாளர்களினால் 21 சட்ட திருத்த மூலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ண கருத்தை கொண்டிருக்கவில்லை

      இன்றைய அரசியல் நிலைகள் காரணமாக இதனை உடன் அமுலுக்கு கொண்டு வந்தது அதில் மாற்றங்களை ஏற்படுத்தி ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிக்க வேண்டும் என கருதுகின்றனர்

      இவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அதனால் பாதிக்க பட்டுள்ள சிறுபான்மை தமிழாக்களுக்கு உரிய தீர்வு கிட்டுமா என்பதே மக்கள் கருத்தாக உள்ளது

      காலம் காலமாக ஏமாற்ற பட்டு உதாசீனம் செய்ய பட்டு வந்த சிறுபான்மை தமிழர்களுக்கு சிங்கள பவுத்த பேரினவாத அரசு உரிய தீர்வினை வழங்கி நாட்டையும் ,மக்களிடத்திலும் நல்லெண்ணத்தை விதிக்குமா என்பது சந்தேகமே

      மைத்திரி சிறிசேன ஆட்சியில் நல்லாட்சி கூட்டு தத்துவம் என கூறப்பட்ட பொழுதும் முடிந்தவரை தனது ஆட்சியை தக்கவைத்து கொள்ள மைத்திரி சிறிசேன முயன்றார் தவிர இலங்கையில் நிரந்தர அமைதியும் சமாதானமும் ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்பவிலை

      இவ்வாறான கசப்புணர்வுளுடன் கரைந்து செல்லும் இலங்கையில் நிரந்தர சமாதானம் எழுந்திட இந்த அரசியல் சட்ட அமைப்பு மாற்றங்கள் வழிகோலுமா என்பதே கேள்வியாக உள்ளது .

        Posted in இலங்கை செய்திகள்

        விழித்திடுவோம் பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!

        விழித்திடுவோம், பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!

        விழித்திடாவிட்டால் பாதகமான விளைவுகளை விட்டு, நமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பொதுமக்களின் அன்றாட

        வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல்வேறு சவால்களையும், சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

        குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் அதன் தட்டுப்பாடும், கூழித்தொழிலாளிகள் பாதிப்பு, வறுமையினால் வீட்டுச்சூழலில் பல்வேறு குடும்பப்

        பிரச்சினைகள், பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் போன்றவற்றுக்கு ஏழை, பணக்காரன் என்ற

        வித்தியாசமின்றி அனைவரது வாழ்க்கையிலும் விரக்தியையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தியுள்ளது விளைவுகளை விட்டு விலகிடுவோம் என்ற நிலையில் மக்கள் உள்ளனர்

        இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் விழித்திடுவோம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகளுக்கான தட்டுப்பாட்டின் விளைவு, இன்னும் அனைவரது

        வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தாவிட்டாலும் எதிர்வரும் காலங்களில் கையிலிருப்பிலிருக்கும் மருந்துப்

        பொருட்கள் முடிவடைந்தவுடன் நோயாளிகளின் நிலைமை என்னவாகும் என்பதை நாம்

        அனைவரும் சிந்திக்க வேண்டும். இதற்கான மாற்றுவழி என்ன? விழித்திடுவோம் மக்கள் பாதகமான விளைவுகளை ஆராய்ந்து வறுமையில் இருந்து விட்டு விலகிடுவோம் அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் காலம் ஏற்பட்டுள்ளது.

        விழித்திடுவோம் பாதகமான எமது நாட்டில் நடைமுறையிலுள்ள சுதேச வைத்திய முறைகளான ஆயுர்வேத, யுனானி, சித்த, பாரம்பரிய, வைத்திய முறைகள் பற்றி இதுவரை காலமும் எம் எண்ணத்திலிருந்து தூரமாகி இருந்ததைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டிய தரும்

        விழித்திட பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!

        வந்துள்ளது. குறிப்பாக, நமது நாட்டிலுள்ள மூலப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்ற மருந்துப் பொருட்கள் மூலம் சிகிச்சை பெறுகின்றபோது, பல்வேறு வகையான

        விழித்திடுவோம் பாதகமான விளைவுகளை நோய்களுக்கு மிகவும் வெற்றியளிக்கக்கூடிய சிகிச்சை மருத்துவ முறையாக இருக்கின்றன.

        இருப்பினும், மேற்கத்தேய மருத்துவ முறையினால் கவரப்பட்டுள்ள நாமும், அதற்கு

        அடிமைப்பட்டுள்ள எமது உடலும் அதிலிருந்து விலகி சுதேச மருத்துவ முறையை பெற்றிட விழித்திட பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!

        திணிப்பதென்பது ஒரு கடினமான, கசப்பான விடயமாக இருந்தாலும் எமது

        நோய்களுக்கான தீர்வை, தற்போது சுதேச மருத்துவத் துறையினூடாக பெற்றுச்செல்ல வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

        விழித்திடுவோம் பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!

        எமது உடம்பில் ஏற்படும் காய்ச்சல், நோவுகளுக்கு பனடோல் மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கமுடையவர்களாகவும், அதனால் எமது உடலுக்குள்

        ஏற்படுத்தப்படும் பாதகமான விளைவுகளை அறிந்தும் அறியாதவர்கள் போன்று இதுவரை காலமும் இருந்துவிட்டோம். சுதேச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள்

        ஊடாக அநேகமான நோய் நிலைமைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம். என்பதை நிலைநிறுத்தி இனியாவது நாம் விழித்துக் கொள்வோம்.

        குறிப்பாக, மேற்கத்தைய மருந்துகளுக்கு அடிமைப்பட்டு
        கடைசிவரை மருந்து மாத்திரைகளை விழுங்கி வாழும் கலாச்சாரத்தை மாற்றி,


        நோய் நிலைமைகளின் ஆரம்பக்கட்டத்திலேயே நமது நாட்டுக்கே உரித்தான மருத்துவத்துறையை


        நாடிச் சென்று அதன் மூலம் கிடைக்கின்ற ஆரோக்கியத்தின் மூலம் நீண்டகால ஆயுளை நாம் எல்லோரும் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.

          Posted in இலங்கை செய்திகள்

          பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

          பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

          அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

          கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றதனால் முதலாம் தவணையின் முதற்கட்டம் கடந்த மாதம் 19ஆம் திகதி நிறைவடைந்தது.

          இன்று ஆரம்பமாகும் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 8ஆம் திகதி நிறைவடையும். இரண்டாம் தவணை அடுத்த மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகும்.

          கடந்த காலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான நாட்களே பாடசாலை

          நடைபெற்றது.இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரா நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டு பாடு நிலவியது

          இதனால் பாடசாலைகள் பேரூந்துகள் மற்றும் பாடசாலை வாகனங்கள் என்பன இயங்கும் நிலையில் இருந்து செயலற்று போயின

          மாணவர்கள் வரவு வீழ்ந்த நிலையில் பாடசாலைகளுக்கு இடைக்கால விடுமுறை

          அறிவிப்பையும் கல்வி அமைச்சு விடுத்தது ,இவ்வாறு நீண்டு செல்லும் இலங்கை பொருளாதார நெருக்கடி அணைத்து தரப்பிலும் பாதிப்பபை ஏற்படுத்தியுள்ளது

          நாள் தோறும் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் கல்வி கற்றல் செயல் பாடுகள் செயல் இழந்து போனதினால் மாணவர்கள் மத்தியில் அந்த கல்வியை உரிய முறையில் கற்று தேர்வு எழுதிட முடியாமல் போனது

          இதனை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை மேகொண்டால்

          மட்டுமே புதிய ஆளுமை உள்ள மாணவர் சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் ,கற்றவர்கள் எழுந்து வந்தாலே நாட்டை முன் நோக்கி நகர்த்த முடியும்

          இதனை கல்வி அமைச்சின் அமைச்சர் உரிய முறையில் புரிந்து கொண்டால் மட்டுமே கல்வியால் கற்றல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி இலகு முறையில் கல்வியை மாணவர்கள் பெற்று கொள்ள வழி செய்யும்

          இலங்கை மாணவர்கள் கற்றல் செயல் பாடுகளில் எழுச்சியுள்ளது என்ற தோற்றப்பாடு காண்பிக்க பட்டாலும் ,மேற்குலக மற்றும் தென் ஆசிய நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கல்வி அறிவில் பின்தங்கியுள்ள நிலையிலேயே காணப்படுகின்றனர்

          இலங்கையின் கல்வி தரத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தி நாட்டை

          முன்னோக்கிய நகர்த்தவும் ,மாணவர்கள் மத்தியில் எழுச்சிமிகு கற்றல் ஆர்வத்தை ஏற்படுத்திட கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க படும் விகிதம் முதன்மை பெறவேண்டும்

          பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

          அதற்கு அரச இயந்திரம் உரிய முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி சென்றால் மட்டுமே இலங்கை கல்வியில் மாற்றம் உள்ள புரட்சியை ஏற்படுத்த முடியும்

          இலங்கையில் மட்டுமே மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக விடுமுறை வழங்க படுகிறது ,ஆனால் ஐரோப்பிய நாடுகளில் எட்டுவாரங்கள் மற்றும் ஆறுவரங்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்க படுகிறது

          மாணவர்கள் சலிப்பு இன்றி கற்றலை தொடர்ந்திட இவ்வாறான உளவியல் ஊக்குவிப்பு வழங்க படுகிறது ,

          இலங்கை பாடசாலைக்கும் மாணவர்கள் இவ்விதம் ஆரோக்கியமான கற்றலை மேற்கொள்ள இலங்கை கல்வியால் கட்டமைப்பில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் ஆவலாக உள்ளது – வன்னி மைந்தன் –

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கை வந்தடைந்த எரிவாயு கப்பல்

            இலங்கை வந்தடைந்த எரிவாயு கப்பல்

            இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருங்கடியை திணைக்க தற்போது 2,000 மெற்றிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் ஒன்று இன்று காலை இலங்கையை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

            இந்த கப்பல் இலங்கையை வந்தடைந்த போதிலும் , இன்று எரிவாயு விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.

            எரிவாயுடவை பெற்றுடை மக்கள் நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன் காத்துள்ளனர்

            பல மைல்கள் தொலைவில் நீண்டு செல்லும் நிரையில் காத்து கிடந்த மக்களில் சிலர் மரணித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது ,லிட்ரோ நிறுவனம் தம்மிடம் எரிபொருள்,எரிவாயு கையிருப்பில் இல்லை என கையைவிரித்து வருகிறது

            இதனால் சில எரிபொருள் நிலையங்களில் மக்களுக்கும் ,லிட்ரோ நிறுவன ஊழியர்களுக்கும் இடையில் மோதல்கள் கூட இடம்பெற்றன

            இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் தெளிவற்ற அரசியல் ,பொருளாதார கொள்கை காரணமாக இலங்கையில் இவ்விதமான பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது

            இராணுவ தளபதியாக விளங்கியவர் இராணுவவ சிந்தனையில் நாட்டை ஆழ முயற்சித்து இன்று அவர்கள் ஆட்சி அதிகாரம் இழந்து மக்கள் மன்றில் அவமானப்பட்டு நாட்டை விட்டு ஓடும் நிலைக்கு ராஜபக்ச குடும்ப நிலை சிக்கியுள்ளது

            வீட்டுக்கு சிறந்த தலைவன் இருந்தால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப அந்த தலைவனால் முடியும்

            இவ்வாறான கோட்பாட்டு நிலையில் கோத்தபாய மேற்கொண்ட தவறான அரசியல் நகர்வும் பழிவாங்கும் அரசியல் வங்குரோத்தும் இன்று அவரை பெரும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது

            இலங்கை வந்தடைந்த எரிவாயு கப்பல்

            எரிபொருள் தட்டுப் பாட்டால் மக்களின் அத்தியாவசிய செயல் பாடுகள் செயலற்று போயின ,பேரூந்துகள்,லாரிகள்,முதல் விவசாயமும் செயல் இழந்து போயிற்று

            இதனால் அன்றாட விவசாய ,உணவு உறபத்தியில் பெரும் வீழ்ச்சியும் ,மக்கள் வாழ்வாதாரத்திலும் பெரும் இடி வீழ்ந்துள்ளது

            போரை வென்று மக்களின் மனங்களை வென்றதாக ஆணவ குதிரையில் ஆடி வந்த ராஜபக்ச குடும்பத்திற்கு இலங்கையில் பெரும் அடி வீழ்ந்துள்ளது ,

            தமிழர்கள் முஸ்லீம் எதிரியாக விளங்கிய நிலையில் இன்று சொந்த சிங்கள மக்களுக்கும் இவர்களுக்கு எதிரியாக மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

            மக்கள் வாழ்வாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையிலே ராஜபாக்ச குடும்பம் வீழ்ச்சி நிலையில் சிக்கியுள்ளது

            வீழ்ந்து போன இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் ,அப்பொழுதே ஆட்சியாளர்களின் மனங்களில் ,சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்

            அப்பொழுதே எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் ,மீளவும் இலங்கை இயல்பு நோக்கி நடைபயிலும் ,எரிபொருள் விலை உயர்வு ,மின்சாரம் தட்டுப்பாடு ,காய்கறிகள் விலை உயர்வு ,உரத் தட்டுப்பாடு

            இவ்வாறான நெருக்கடிகள் தொடர்ந்து சென்றால் ஆளும் ஆட்சியாளர்களை மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வழியில்லை என்பதே இலங்கையின் இன்றைய கள நிலவராம் எடுத்து கூறு விடயமாக உள்ளது

            மாற்றங்கள் எழுந்திட அரசியல் தலைவர்கள் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதே நிகழ்காலம் கூறும் விடயமாக பதிந்து கிடக்கிறது .

              Posted in இலங்கை செய்திகள்

              கோத்தபாய ரணிலை ஏமாற்றிய தமிழர்கள்

              கோத்தபாய ரணிலை ஏமாற்றிய தமிழர்கள்

              இலங்கையில் அதிகரித்து செல்லும் பொருளாதார நெருக்கடியையே அடுத்து நாணய பெறுமதி வீழ்ச்சியடைந்து செல்கிறது ,

              இதன் அச்சம் காரணமாக வெளி நாட்டு தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதை அதிகமாக தவிர்த்து வருகினறனர்

              அண்ணியா செலாவணியை பெற்றுக் கொள்வதில் இலங்கை பெரும் நெருக்கடி

              இதனால் அண்ணியா செலாவணியை பெற்றுக் கொள்வதில் இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது ,

              வங்கிகளில் பணம் வைப்பு செய்தாலும் அந்த பணம் அரசுடைமையாக்க பட்டு விடும் என்பதால் வெளிநாட்டு தமிழர்கள் பலர் பணம் அனுபவதை தவிர்து வருகினறனர்

              உலக தமிழர் புரிந்து வரும் இந்த செயலினால் ஆத்திரமுற்றுள்ள இலங்கை பிரதமர் ரணில், விக்கிரமசிங்க மற்றும் கோட்டாபய தமிழர்கள் கோரும் அரசியல் தீர்வை தந்திட இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்

              தமிழர்களுக்குரிய தீர்வுகள் வழங்க பட்டால் ,
              நாட்டுக்கு பெற்று கொண்ட அத்தனை மில்லியன் கடனையும்
              தாம் வழங்குவோம் என உலக தமிழர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்து வருகின்றமை
              இலங்கை அரசை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

              போருக்கு பல மில்லியன் பணத்தை செலவு செய்து வந்த இலங்கை அரசுகள் தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதில் மட்டும் குறியாக செயல் பட்டனரே தவிர தமது பொருளாதரத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும் என அவர்கள் எண்ணவில்லை

              கோத்தபாய ரணிலை ஏமாற்றிய தமிழர்கள்

              அன்று பல கோடிகளில் பாதுகாப்பு செலவீனத்துக்கு ஒதுக்கி வந்த நிலையில் இன்று அதுவே தமது நாட்டை விழுங்கி ஏப்பம் இட்டுள்ளது

              இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீளவும் இயல்பு நிலை நோக்கில் செல்ல வேண்டும் என்றால்

              புரையோடி போயுள்ள தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே இலங்கையால் நிமிர்ந்து நிற்க முடியும் ,

              அதற்கு இன்றுள்ள இந்த அரசியல் வாதிகளுக்கு திறன் இல்லை என்பது அவர்கள் இனவாத சிந்தனையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது

              தொலை நோக்கு பார்வையுடன் மாற்றி சிந்திக்கும் நபர் ஒருவரால் மட்டுமே இலங்கையின் இன்றைய வீழ்ச்சியை தூக்கி நிறுத்த முடியும் என்பது மூன்றாம் தரப்பு சமாதான பணியில் ஈடுபட்டவர்கள் கருத்தாகவும் உள்ளது

              • வன்னி மைந்தன் –
                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு

                இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு

                கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022

                ஏப்பிறலின் 29.8 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 39.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு

                மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது.

                அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஏப்பிறலின் 46.6 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 57.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை,

                உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 22.0 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 30.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

                கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 மேயில் 8.34 சதவீதமாகப் பதிவாகியது. இதற்கு, முறையே 4.87 சதவீதமாகவும் 3.47 சதவீதமாகவும்

                காணப்பட்ட உணவல்லா மற்றும் உணவு வகைகள் இரண்டினதும் பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தது. அதற்கமைய,

                போக்குவரத்து (பெற்றோல், டீசல் மற்றும் பேருந்துக் கட்டணம்), வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (திரவப்பெற்றோலிய வாயு மற்றும்

                இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு

                பராமரித்தலுக்கான/ மீள்கட்டுமானத்திற்கான பொருட்கள்), உணவகம் மற்றும் விடுதிகள் அத்துடன் நானாவிதப் பொருட்கள் மற்றும் சேவைகள் (கார் காப்புறுதி)

                ஆகிய துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களைப் பிரதான காரணமாகக் கொண்டு உணவல்லா வகையினுள் உள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன.

                மேலும், உணவு வகையினுள் காய்கறிகள், உடன் மீன், அரிசி, பாண், கருவாடு, பருப்பு என்பவற்றின் விலைகளில் மாதகாலப்பகுதியில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.

                அதேவேளை, ஆண்டுச் சராசரி பணவீக்கம் 2022 ஏப்பிறலின் 11.3 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

                பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 22.0 சதவீதத்திலிருந்து 2022 மேயில்

                28.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம்,
                2022 ஏப்பிறலின் 8.1 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 10.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்

                  ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்

                  இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரித்து நிற்கும் ஏரோஃப்ளோட் என்ற ரசியா பயணிகள் விமானம் SU-289 பற்றிய குறிப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகின்றது.

                  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதைத் தடுக்கும்

                  வகையில் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக உயர் நீதிமன்றம் 2022 ஜூன் 02ஆந் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது.

                  இந்த வழக்கு ஐரிஷ் நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் 10 லிமிடெட் வாதியால் முதல் பிரதிவாதியான பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனமான ‘ஏரோஃப்ளோட்

                  ‘ மற்றும் இரண்டாவது பிரதிவாதியான எயார் நேவிகேஷன் மற்றும் இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள், கட்டுநாயக்கவின் பதில் தலைவர், திரு.

                  ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்

                  என். சி அபேவர்தன ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வணிகப் பிணக்கு தொடர்பான வழக்கு ஆகும்.

                  இந்த விடயம் இன்னும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது. இந்த விடயம் வழக்கமான தூதரக வழிகளிலும் ஆலோசனையில் உள்ளது. என இணை வெளிநாட்டு அமைச்சு அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

                  இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் ரணில்,விக்கிரமசிங்கவும் கருத்து பகிர்ந்துள்ளார்

                  இது இரு நாடுகளுக்கு இடையிலான இராயதந்திர தொடர்பண விடயம் அல்ல என குறிப்பிட்டு இருந்தமை ரசியாவை சமாதான படுத்த ரணில் விக்கிரமசிங்கா மேற்கொண்ட கபாட நாடகம் என்பது அப்பட்டமாக தெரிகிறது

                  இந்தியாவுடன் ரசியா தற்போது உக்கிரேன் மீது மேற்கொண்டுள்ள போர்க் காலத்திலும் நெருங்கி உறவாடி வருகிறது

                  இவ்வேளை இலங்கையை வைத்து அமெரிக்கா காய்களை நகர்த்தி ,இந்த விமானத்தை நிறுத்தியதா என உள்வீட்டு அரசியல் சித்தாந்த வாதிகள்சந்தேகத்தை கிளறி வருகின்றனர்

                  இது இலங்கை ஆட்சியாளர்களினால் தனித்து எடுக்க பட்ட அரசியல் ஆடுகள விளையாட்டாக அமைய பெறாது என்பதே விடயம் அறிந்த வட்டாரங்களிள் ஆழமான கருத்து பகிர்வாக உள்ளது

                  • வன்னி மைந்தன் –
                    Posted in இலங்கை செய்திகள்

                    காணமால் போனவர் சடலமாக மீட்பு

                    காணமால் போனவர் சடலமாக மீட்பு

                    வீட்டில் இருந்து காணாமல் போனவர் ,கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட்டுள்ளார்

                    குடும்பஸ்தரின் சடலம் ஒன்றே இவ்வ்ரு மீட்க பட்டு ,பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

                    அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் கடந்த வியாழக்கிழமை (2) மாலை காணாமல் போயிருந்தார்

                    இவ்வாறு காணமல் போன நிலையில் பொது மைதானத்தில் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.

                    இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டு தடயப்பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.

                    காணமால் போனவர் சடலமாக மீட்பு

                    குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள்

                    இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

                    மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

                    இலங்கையில் தொடராக காணாமல் போபவர்கள் இவ்வாறு சடலமாக மீட்க பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                    இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததன் பின்னர் நீர் நிலைகளில் மர்மமான முறையில் மக்கள் சடலங்கள் மீட்க படுகிறது

                    இது தமிழர் பகுதியை மட்டும் இன்றி தென் இலங்கை ஆதிக்க வெறி சிங்களவர்கள் வசிக்கும் பகுதியிலும் சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன

                    அணைத்து மரணங்களும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுதே ஓரே விதமான முறையில் மரணங்கள் உள்ளதே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

                    இவை திட்டமிடப்பட்ட குழு ஒன்றினால் மேற் கொள்ள படும் மர்ம படு கொலைகளின் பின்புலம் என கருத படுகிறது

                    ஜே ஆர் ஜேவர்தனா இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய பொழுது ஜேவிபி சகோதர படுகொலையை ஆரம்பித்து வைத்தார் ,நீர் நிலைகளில் மிக கோரமான முறையில் ஜேவிபி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அடித்து வீச பட்ட நிலையில் அந்த ஆண் பெண் சடலங்கள் மீட்க பட்டன

                    அது போலவே இப் பொழுது இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .-வன்னி மைந்தன் –

                      Posted in இலங்கை செய்திகள்

                      கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு சடலம்

                      கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு சடலம்

                      கிளிநொச்சி மருதநகர் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் நீர் பாசன கால்வாயில்
                      இருந்து ஒன்றரை வயது சிசு சடலமாக மீட்க பட்டுள்ளது

                      சிசு தவறி விழுந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
                      சடலம் இரண்டு கிலோ மீட்டர் தொலையில் இருந்து மீட்க பட்டுள்ளது

                      கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன


                      இந்த சிசு மரணம் அந்த கிராம பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        காதலி வீட்டை அடித்து நொறுக்கிய காதலன்

                        காதலி வீட்டை அடித்து நொறுக்கிய காதலன்

                        காதலி காதல் தொடர்பை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் கடந்த முன் தினம் இரவு அவனது வீடு சென்று தனது காரால் காதலியின் வீட்டை சேதப்படுத்தியுள்ளஅடித்து நொறுக்கிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

                        காதலன் தனது காரை ஓட்டிச் சென்று காதலியின் வீட்டின் கேட்டை உடைத்து அதன் பின்னர் அங்கிருந்தவர்களை குழு ஒன்றுடன் இணைந்து தாக்க முயற்சித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

                        கடந்த முன் தினம் இரவு இரவு 10 மணியளவில் அனுராதபுரத்தில் உள்ள காதலியின் வீட்டிற்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                        காதலன் தனது காதலியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரையும் தனது காரை கொண்டு பலமுறை கடுமையாக மோதி சேதப்படுத்தியுள்ளார்.

                        அவர் தனது பெற்றோர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக காதலி பொலிஸில் குறிப்பிட்டுள்ளார்.

                        இச்சம்பவத்தால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு பொலிஸாரிடம் குறித்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

                        அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                          Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

                          மக்களே உதவுக சீமான் video

                          மக்களே உதவுக சீமான் video

                          மக்களே போரால் பாதிக்க பட்டுள்ள எமது மக்கள் தற்பொழுது ராஜபக்ஸ்சா
                          ஆட்சியில் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கின்றனர்

                          இவ்வேளை உதவி அற்று துடிக்கின்ற மக்களுக்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ


                          உதவிகளை அனுப்புங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்

                          செந்தமிழன் சீமான் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்

                          மக்களே உதவுக சீமான் video

                          மேலும் பணம் அனுப்பிட விரும்புகிறவர்கள் தமது இந்திய வங்கி கணக்கு அனுப்பி வைக்கும் படி அதன் விபரங்கள் வழங்க பட்டுள்ளது

                          உலகம் எல்லாம் பரவி வாழும் மக்களே உங்கள் உதவிகளை இங்கே வழங்குபடி செந்தமிழன் சீமான் அவர்கள் வேண்டியுள்ளார்

                          மக்களே உதவுக சீமான் video
                          மக்களே உதவுக சீமான் video


                          மக்களே உதவுங்கள் சீமான் வேண்டுகோள் ,சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றித்து இந்த உதவிகளை வழங்குவீர்கள் என அவர் எதிர் பார்க்கிறார்

                          இதில் அழுத்தி காணொளி பார்க்க

                          Posted in இலங்கை செய்திகள்

                          யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசு

                          யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசு

                          இலங்கை வடக்கு யாழ்ப்பாண பகுதியில் வசிக்கு சமூர்த்தி பணியாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபா அவர்களின் வங்கியில் வைப்பிலிட பட்டு வருவதாக யாழ்ப்பாண அரச அதிபர் தெரிவித்துள்ளார்

                          யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசின் செயல் திட்டம் தற்கால நிலையில் மக்களுக்கு மகிழ்வை தருகிறது ,எனினும் அனைத்து பணியார்களுக்கும் கட்டம் கட்டமாக இந்த பணம் வழங்க படும் என தெரிவிக்க படுகிறது

                          எதிரிகளாக தமிழர்களை பார்க்கும் ஆளும் கோத்தபாயா அரசினால் , இந்த மக்களின் கோரிக்கைகள்
                          உரிய முறையில் நடைமுறை படுத்த படுமாஎன்ற சந்தேகம் எழுந்துள்ளது

                          யாழ் மக்கள் ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக, எதிர் போராட்டங்களில் ஈடுபடாத பொழுதும் ,புலி தமிழர்கள் என ஆளும் அரச இனவாதம் முத்திரை குத்தி வைத்து பழிவாங்கும் அரசியலை நடத்தி வருகின்றமை தெரிந்ததே.

                          யாழ் மக்கள் ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக, எதிர் போராட்டங்களில் ஈடுபடாத பொழுதும் ,புலி தமிழர்கள் என ஆளும் அரச இனவாதம் முத்திரை குத்தி வைத்து பழிவாங்கும் அரசியலை நடத்தி வருகின்றமை தெரிந்ததே.

                            Posted in இலங்கை செய்திகள்

                            போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

                            போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

                            இலங்கை சீனன்குடா பொலிஸ் பிரிவில் போதை மாத்திரை வைத்திருந்த பொலிஸ்
                            அதிகாரி ஒருவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

                            போதை பொருளுடன் கைது செய்ய பட்ட உயர்நிலை பொலிஸ் அதிகாரி தீவிர விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்

                            இலங்கை பாதுகாப்பு படைகள் போதைவஸ்த்திற்கு அடிமையாகி ,குறித்த போதை பொருட்களை கடத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்

                            தமது அரச வாகனத்தில் மறைத்து எடுத்து செல்லும் பொழுது சிலர் சிக்கியும் இருந்தனர் ,
                            இலங்கையில் போதை பொருளுடன் நாளாந்தம் பலர் கைதாகி வருகினறனர்

                            போதைக்கு அடிமையான பெண்கள் உள்ளிட்ட சிறார்கள் கடத்தி ,கற்பழித்து கொலை செய்யப் படுகின்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது

                            மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி போதை பொருளுடன் கைது
                            செய்ய பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              சுமந்திரன் வீட்டருகில் இராணுவ சிப்பாய் மரணம்

                              சுமந்திரன் வீட்டருகில் இராணுவ சிப்பாய் மரணம்

                              தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினராக விளங்கி வரும் சுமந்திரன் வீட்டின் அருகில்
                              இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவர் மதற்கொலை புரிந்துள்ளார்

                              இவரது இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,
                              இருபத்தி இரண்டு வயதான இந்த இளம் சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை புரிந்துள்ளதாக முதல்கட்ட விசாரங்களில் தெரிய வந்துள்ளது

                              தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமன் சுமந்திரன் வீடருகில் இடம்பெற்ற இராணுவ சிப்பாய் தற்கொலை சமபவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                              இலங்கை இராணுவத்தின் இளம் இராணுவ சிப்பாய் மேற்கொண்ட இந்த தற்கொலை சம்பவவத்திற்கு உரிய காரணம் இதுவரை தெரியவில்லை

                              சமீப காலங்களாக இலங்கை இராணுவ சிப்பாய்கள் இவ்விதமான தற்கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றமை அதிகரித்து செல்கின்றது

                              இது அவர்கள் உளவியல் உரனில் ஏற்பட்ட
                              அதீத தாக்கம் காரணமாக இடம் பெருகின்றமை குறிப்பிட தக்கது

                                Posted in இலங்கை செய்திகள்

                                விமானம் தடுத்து வைப்பு – கொதிப்பில் ரசியா

                                விமானம் தடுத்து வைப்பு – கொதிப்பில் ரசியா

                                இலங்கையில் ரசியாவின் Aeroflot பயணிகள் விமானம் ஒன்று தடுத்து வைக்க பட்டுள்ளது,


                                இந்த ரசியா விமானம் அங்கு தடுத்து வைக்க பட்டுள்ளதால், ரசியா கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது

                                இரு தினங்களுக்கு இடையில் ரசியா பயணிகள் யாவரும் முற்றாக விடுதலை செய்ய படுவார்கள் என இலங்கை தெரிவித்துள்ளது

                                விமானம் தடுத்து வைப்பு சம்பவம் இலங்கை ,ரசியாவுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது


                                கொட்டல்களில் தங்க வைக்க பட்டுள்ள மக்கள் இலங்கை மீது
                                வெறுப்புணர்வில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ரயிலில் மோதி சிதறிய யானைகள்

                                  ரயிலில் மோதி சிதறிய யானைகள்

                                  கடந்த இரவு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த பயணிகள் தொடரூந்தில் மோதி இரு காட்டு யானைகள் பலியாகியுள்ளன

                                  கபரண பகுதிக்கு அருகில் ரயிலை கடக்க முயன்ற பொழுது ,ரயில்வே பாதையில் மோதி சிதறின
                                  சம்பவ இடத்தில இரு யானைகளும் பலியாகியுள்ளன

                                  இதனால் அந்த வழி தொடரூந்து சேவைகள் பலமணி நேரம் பாதிக்க பட்டுள்ளது

                                  இலங்கையில் தொடரூந்துகளில் யானைகள் மோதி பலியாகி வருகின்றமை அதிகரித்த வண்ணம் உள்ளது ,
                                  ரயிலில் மோதி சிதறி யானைகள் உடல்கள் மீட்க பட்டு நல்லடக்கம் செய்ய பட்டுள்ளன

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்

                                    தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்

                                    ஒடுக்கப்படும் தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்கள். நாம் அன்றிலிருந்து “கோடா-கோ-ஹோம்”தான்..!


                                    போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன்
                                    “தம்பி, இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக நாம் துடிதுடிக்கவில்லை. அப்படி துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள்.

                                    எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள். இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக எமக்கு தகுதி இல்லாமல் இல்லை. அவை நிச்சயமாக எமக்கு இருக்கின்றன.

                                    ஆனால், நாம் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுள்ள எமது மக்களை விடுவிக்கவே இன்று துடிக்கிறோம்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

                                    தமிழ் முற்போக்கு கூட்டணி- அனைத்து கட்சி போராளிகள் குழு சந்திப்பு, இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் இல்லத்தில் நிகழ்ந்தது. தமிழ் முற்போக்கு

                                    கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரமும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

                                    தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், காலிமுகதிடல், “அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) தூதுக்குழுவினக்கும் இடையில் எனது இல்லத்தில் நிகழ்ந்தது. இந்த சந்திப்பில்

                                    திகாம்பரம் எம்பியும் கலந்துக்கொண்டார். அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) சார்பில், விபீதக பொத்துவகே, நிராஷான் விதானகே, மனிஷ் கலப்பத்தி, கெலும் அமரதுங்க ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

                                    இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் நடைபெற்ற பேச்சுகளின் போது, தொடர்ந்து தமுகூ-அகபோ இடையில் பரஸ்பர தொடர்புகளை பேணி செயற்படுவது என்று முடிவானது. மலையக மக்கள், இலங்கை தேசிய தளத்தில் உள்வாங்கப்படுவது தொடர்பான, தமுகூ யின் மலையக அபிலாஷை ஆவணமும் அனைத்து கட்சி போராளிகளுக்கு வழங்கப்பட்டது.

                                    இவர்களிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நான் எடுத்து கூறியது, “தம்பி, நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆக வேண்டும் என துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை

                                    ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள்”

                                    “தமிழர்களாகிய எங்களுக்கு இந்த உணவு இல்லை, மின்சாரம் இல்லை,.. என்பவை பழகிப்போன பிரச்சினைகள். போர் காலத்தில் பல்லாண்டுகளாக தமிழ் மக்கள் இப்படி

                                    வாழ்ந்தார்கள். மலை நாட்டில் போர் இல்லாமலேயே நம் மக்கள் தோட்ட சிறைகளுக்குள் இப்படிதான் வாழ்கிறார்கள்.”

                                    தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்

                                    “கலவர காலங்களில் எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆகவே இவை எமக்கு சகஜம். ஆகவே புதிய இலங்கையை உருவாக்குவோம். இவை அனைத்திற்கும் தீர்வு தேடுவோம். மாற்றத்தை கொண்டு வர சொல்லிவிட்டு, நீங்கள்

                                    ஓரமாய் ஒதுங்கி நிற்காதீர்கள். அந்த தேடலில் நீங்களும் நேரடியாக பங்களியுங்கள். அந்த தீர்வு உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றுக்கு அப்பால் இருக்க வேண்டும்.”

                                    “மலையக தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோட்டங்களில் பின்தங்கி வாழ்கின்றனர். அவர்களை தேசிய தளத்தில் உள்வாங்க அரசு இயந்திரத்தில் பெரும் தயக்கம் காணப்படுகிறது. அதை நாம் முறியடிப்போம். நீங்களும் உதவ வேண்டும்.”

                                    இவற்றுக்கு, அனைத்து கட்சி போராளிகள் (அகபோ)
                                    சார்பில் பதிலளித்த பேச்சாளர் கெலும் அமரதுங்க கூறியதாவது,
                                    “நாம் உங்களை தேடி வந்து சந்தித்தமைக்கு காரணம் உண்டு. ஏனைய தமிழ்,


                                    முஸ்லிம் கட்சிகளையும், ஜனநாயக கட்சிகளையும் நாம் சந்திக்கிறோம்.
                                    இன்று விலகி போக இருந்த கோதாபய ராஜபக்ச,
                                    ரணில் விகிரமசிங்கவின் உள்நுழைவால் கொஞ்சம் மூச்சு வாங்குகிறார்.

                                    நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நீங்கள் கூறுவது போன்று,
                                    உணவு, மின்சாரம் ஆகியவற்றுக்கு அப்பால் ஆனது. அதில் நாம் இந்நாட்டின் அனைத்து இன,
                                    மத மக்களுடன் பயணிக்க விரும்புகிறோம். நாம் பலரை சந்தித்தோம்.

                                    மாற்றத்துக்காக எம்மை நேரடியாக பங்களிக்கும்படி இதுவரை யாரும் கூறவில்லை.


                                    நீங்கள்தான் திறந்த மனதுடன் அதை கூறுகிறீர்கள். உங்களுடன் தொடர்புகளை பேண விரும்புகிறோம்.
                                    மலையக தமிழ் மக்களையும் நாம் சரிசமமாக கவனத்தில் எடுப்போம்.”