அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி
Posted in இலங்கை செய்திகள்

அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி

அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியையான 36 வயதுடைய பெண்ணும் அவரது 8 வயது மகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் ராஜாங்கனை, தஹதர காலனி பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் குறித்த இருவரும் பயணித்த ஸ்கூட்டருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் விபத்துக்குள்ளான தாய் மற்றும் மகளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

20 கோடி மோசடி செய்த தம்பதி

20 கோடி மோசடி செய்த தம்பதி

20 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கணவன்-மனைவியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 48 மற்றும் 43 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு குரன பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தம்பதி நடத்தும் வர்த்தக நிலையமொன்றில் பெருமளவிலான பணத்தை வைப்பிலிட்ட ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

20 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் வியாபாரம் செய்து வரும் ஒருவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

20 கோடி மோசடி செய்த தம்பதி

அதன்படி சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பு குரன பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தம்பதியினால் நடத்தப்பட்ட இந்த நிறுவனத்தில் எவரேனும் பணத்தை முதலீடு செய்திருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் பலி

காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் பலி

அடையாளம் காணப்படாத நோய் நிலைமை காரணமாக காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மேலும் 05 கைதிகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த தொற்று நிலை கண்டறியப்படவில்லை எனவும், மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்காக சிறைச்சாலையில் முகக்கவசம் பயன்படுத்தப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புலிகள் திருமலை தளபதி புலேந்திரன் தயார் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

புலிகள் திருமலை தளபதி புலேந்திரன் தயார் மரணம்

புலிகள் திருமலை தளபதி புலேந்திரன் தயார் மரணம்

திருகோணமலை மாவட்ட மூத்த தளபதி புலேந்திரன் அவர்களை பெற்றெடுத்த வீரத்தாய் திருமதி. சுந்தராம்பாள் குணநாயகம் அவர்கள் சாவடைந்துள்ளனர் .

இவரது பூதவுடலுக்கு தமிழீழ தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் நேரில் சென்று ,அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தினார் .

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சியில் தனியார் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று (20) மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் கடந்த 19 ஆம் திகதி கிணறு சுத்தம் செய்யும் வேளையில் ஆயுதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு

இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து நேற்று (20) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது பழைய பி.கே.எல்.எம்.ஜி, மற்றும் ஏகே தோட்டாக்கள் 60, செல் 5, டிக்னெட்கள் சாஜர்கள், பழைய இலத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்

வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி

வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தேயிலை துறை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் தமக்கான வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது என தேயிலை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக மஹீபால தெரிவித்துள்ளார்

போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்

மதுரை கொழும்புக்கும் இடையே விமான சேவை

மதுரை கொழும்புக்கும் இடையே விமான சேவை

இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

வாராந்தம் ஆறு தடவைகள், மதுரை மற்றும் கொழும்புக்கு இடையே விமான சேவை இடம்பெறும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தியாவின் மதுரை மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் விமானங்கள் இயக்கப்படும் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை
Posted in இலங்கை செய்திகள்

120 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில்

120 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில்

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத வைத்திய நிபுணர்களே இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி முதல் இந்த வருடத்தின் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 363 வைத்தியர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காகச் சென்றுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நல்லூர் கொடியேற்றம் இன்று
Posted in இலங்கை செய்திகள்

நல்லூர் கொடியேற்றம் இன்று

நல்லூர் கொடியேற்றம் இன்று

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா, 25 நாள்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.

பின்னர், செப்டெம்பர் 14 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையவுள்ளது

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சிதைந்த நிலையில் சிப்பாய் சடலம் மீட்பு

சிதைந்த நிலையில் சிப்பாய் சடலம் மீட்பு

படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரின் சிதைந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குருசிங்ககொட பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிதைந்த நிலையில் சிப்பாய் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி இராணுவ முகாமில் பணிபுரியும் 35 வயதுடைய விஷான் பிரதீப் விதானச்சி என்ற இராணுவ வீரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 6ஆம் திகதி வீட்டுக்கு வந்த குறித்த சிப்பாய், 14ஆம் திகதி வீட்டை விட்டு சென்ற நிலையில், அதன் பின்னர், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தேகம நீதவான், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

பத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணம்

சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணம்

உணவகம் ஒன்றில் சனிக்கிழமை (19) சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா குடித்த வேளை மயங்கி விழுந்துள்ளார்.

கடையில் இருந்தவர்கள் அவரை மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது
Posted in இலங்கை செய்திகள்

லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது

லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் திகதி ரஷியா விண்ணில் செலுத்தியது.

இந்த விண்கலத்தை நாளை (21) நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது. கடந்த 17ம் திகதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷிய விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன.

இந்தியாவுக்கு போட்டியாக ஏவப்பட்ட ரஷிய விண்கலம் நிலவில் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது

திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக ரஷிய விண்வெளி நிறுவனம் கூறியது.

இந்தந்லையில் நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது. லூனா 25- விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷிய விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில் இந்த திட்டம் தோல்வி அடைந்தது.

லூனா 25-ன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் போது நேற்றைய தினம் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவில் மோதியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

களத்தில் குதித்த ஜீவன் ஆவேசமடைந்து வாக்குவாதம்
Posted in இலங்கை செய்திகள்

களத்தில் குதித்த ஜீவன் ஆவேசமடைந்து வாக்குவாதம்

களத்தில் குதித்த ஜீவன் ஆவேசமடைந்து வாக்குவாதம்

மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் வீட்டை உடைத்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை சம்பவ இடத்திற்கு அமைச்சர் அழைத்த நிலையில், தோட்ட நிர்வாகத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, தோட்ட நிர்வாக அதிகாரிகளுடன் ஜீவன் தொண்டமான் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.

களத்தில் குதித்த ஜீவன் ஆவேசமடைந்து வாக்குவாதம்

அதையடுத்து, தோட்ட உயர் அதிகாரி ஒருவர் வருகைத் தந்த நிலையில், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

உடைந்த வீட்டிற்கு பதிலாக, புதிய வீடொன்றை கட்டிக்கொடுக்குமாறு தோட்ட நிர்வாகத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த குடும்பம் தற்போது வாழும் லயன் அறைகளிலுள்ள 10 குடும்பங்களுக்கு பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் ஊடாக வீடுகளை கட்டிக் கொடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான், நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமிக்கு ஆலோசனை வழங்கினார்

கில்மிசா மாமா பாடல்

சினிமாவில் பாட கில்மிஷவிற்கு கிடைத்த வாய்ப்பு |கில்மிசா பாடல்|kilmisha songs ||kilmisha zee tamil
Posted in இலங்கை செய்திகள் கில்மிசா பாடல் kilmisha zee tamil

சினிமாவில் பாட கில்மிஷவிற்கு கிடைத்த வாய்ப்பு |கில்மிசா பாடல்|kilmisha songs ||kilmisha zee tamil


சினிமாவில் பாட கில்மிஷவிற்கு கிடைத்த வாய்ப்பு |கில்மிசா பாடல்|kilmisha songs ||kilmisha zee tamil

சினிமாவில் பாடுவதற்கு கில்மிசாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது , மக்கள் மனதில் குடிகொண்ட கில்மிசாவிற்கு , நல்ல மனிதரான அந்த பிரபலம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்

full video

கில்மிசா மாமா பாடலால் மக்கள் அழுகை|கில்மிசா பாடல்|kilmisha saregamapa song|kilmisha zee tamil
Posted in இலங்கை செய்திகள் கில்மிசா பாடல் kilmisha zee tamil

கில்மிசா மாமா பாடலால் மக்கள் அழுகை|கில்மிசா பாடல்|kilmisha saregamapa song|kilmisha zee tamil


கில்மிசா மாமா பாடலால் மக்கள் அழுகை|கில்மிசா பாடல்|kilmisha saregamapa song|kilmisha zee tamil

கில்மிசா மாமா நினைவோடு பாடிய முள்ளி வாய்க்கால் துயர பாடலால் ,
அந்த அரங்கம் கண்ணீரில் நனைந்தது ,
கில்மிசா மாமா ஒரு விடுதலைப் போராளி

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை ஓபன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சனிக்கிழமை (19) இரவு தங்கியிருந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் முப்பது வயது மதிக்கத்தக்கவர்

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

பணி முடிந்து வீட்டுக்கு வந்து வீட்டின் முன் வீதியில் நின்றிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் வேறு யாரையாவது குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சீனிப் பாணியை தேனாக விற்றவர் மடக்கிப் பிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீனிப் பாணியை தேனாக விற்றவர் மடக்கிப் பிடிப்பு

சீனிப் பாணியை தேனாக விற்றவர் மடக்கிப் பிடிப்பு

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு உட்பட்ட புதிய காத்தான்குடியில் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு சீனிப்பாணியை சுத்தமான தேன் என ஏமாற்றி விற்பனை செய்த நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை(20) சுகாதாரத் துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டார்

குறித்த நபர் தப்பியோடிய போதிலும் அவரிடம் இருந்து ஆறுக்கும் மேற்பட்ட சீனிப்பாணிகளைக் கொண்ட போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட சீனிப்பாணிகளை கொண்ட போத்தல்கள் குறித்த இடத்திலேயே உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

சீனிப் பாணியை தேனாக விற்றவர் மடக்கிப் பிடிப்பு

புதிய காத்தான்குடி அல் அக்சா பள்ளிவாயலுக்கு வருகின்ற உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி குறித்த நபர் சீனி பாணியை சுத்தமான தேன் என ஏமாற்றி ஒரு போத்தல் 2000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்திருக்கிறார்.

உள்ளூர் சுற்றுலா பயணிகள் இருவருக்கு இரண்டு சீனிப்பாணி போத்தல்களை விற்பனை செய்த நிலையில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பட்ட தகவலை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்ட

நபரை மடக்கிப்பிடித்த போது குறித்த இடத்திலிருந்து அவர் தப்பியோடி இருக்கிறார் இருந்தபோதிலும் சுகாதாரத் துறையினர் அவரிடம் இருந்த சீனிப்பாணி போத்தல்களை கைப்பற்றி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீ குச்சியை கொளுத்திய காதல்ஜோடி கைது
Posted in இலங்கை செய்திகள்

தீ குச்சியை கொளுத்திய காதல்ஜோடி கைது

தீ குச்சியை கொளுத்திய காதல்ஜோடி கைது

தீக்குச்சியை பற்றவைத்து காட்டுக்குள் வீசியமையால் அந்த காடு எரிந்துள்ள சம்பவத்தை அடிப்படையாக வைத்து காதல் ஜோடி​ ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

குருநாகல் ஏத்துகல மலை உச்சியில் தீக்குச்சிகளை ஏற்றி தீ வைத்த குற்றச்சாட்டின் கீழ் இந்த ஜோடி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டது.

இளம் ஜோடியை திங்கட்கிழமை (21) வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் பதில் நீதவான் சட்டத்தரணி நளீன் ஜே எதிரிசிங்க உத்தரவிட்டார்.

மஹவ நாகொல்லாகம பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் (28) மற்றும் அவரது காதலி என கூறப்படும் கண்டி வத்தேகம பகுதியை சேர்ந்த யுவதி (20) ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தீ குச்சியை கொளுத்திய காதல்ஜோடி கைது

குருநாகல் மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் குருநாகல் தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெரும் முயற்சியுடன் தீயை அணைத்தனர்.

வடமேற்கு மாகாண சபை வளாகத்திற்கு அருகில் உள்ள பழங்கால கல் படிக்கட்டு நுழைவாயிலின் நடுவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சந்தேகநபரான தம்பதியினரின் கவனக்குறைவால் தீ கட்டுக்கடங்காமல் பரவியிருந்தால் இந்த நாட்களில் நிலவும் வறண்ட காலநிலை மற்றும் காற்று காரணமாக அதுகல பிரதேசம் மற்றும் குருநாகல் புறநகர் பகுதிகளில் பல பகுதிகள் தீப்பிடித்து பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஏத்துகல உச்சியில் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை மற்றும் தொலைபேசி தொடர்பாடல் நிலையத்திற்கும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நல்லூர் சுற்று வீதிகள் இன்றுமுதல் பூட்டு
Posted in இலங்கை செய்திகள்

நல்லூர் சுற்று வீதிகள் இன்றுமுதல் பூட்டு

நல்லூர் சுற்று வீதிகள் இன்றுமுதல் பூட்டு

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி வரை நீடிக்குமென யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளைய தினம் (21) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (20) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் என யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் சுற்று வீதிகள் இன்றுமுதல் பூட்டு

நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்ப்பாண மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ்ப்பாண நகரை அடைய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் வசிப்பவர்கள் வாகனங்களை உட்கொண்டு செல்ல யாழ்ப்பாண மாநகர சபையினால் நிபந்தனையுடனான விசேட அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இளம் யுவதிக்கு எமனாக வந்த ரயில்
Posted in இலங்கை செய்திகள்

இளம் யுவதிக்கு எமனாக வந்த ரயில்

இளம் யுவதிக்கு எமனாக வந்த ரயில்

கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டே புகையிரதத்தில் பயணித்த யுவதி ஒருவர் (19) மாலை 4.30 மணியளவில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் குடாகம பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மேகா என்ற (17) வயதுடைய யுவதியே புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கிப் பயணித்த யுவதி புகையிரதப் பாதையில் கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டு வீடு திரும்பிக்

கொண்டிருந்த வேளையில், ஹட்டனுக்கும் கொட்டகலைக்கும் இடையிலான 60 அடி பாலத்திற்கு அருகில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற 1008 ஆம் இலக்க ரயிலில் யுவதி உயிரிழந்துள்ளார்

இளம் யுவதிக்கு எமனாக வந்த ரயில்

புகையிரதத்தில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரயிலில் ஏற்றிவிட்டு மீண்டும் கொட்டகலை நிலையத்திற்கு ரயில் செலுத்தப்பட்டு சடலம் அந்த நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள- பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்