Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இனி வீட்டிலிருந்தபடியே HIV பரிசோதனை
இனி வீட்டிலிருந்தபடியே HIV பரிசோதனை
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் இறுதி வரை, 485 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஒரு அதிகரிப்பாக நாங்கள் பார்க்கிறோம். இவற்றில் 80% ஆண்கள் மத்தியில் பதிவாகியுள்ளது. எச்.ஐ.வி தொற்று 15-49 வயதிற்கு இடைப்பட்டவர்களிடையே அதிகமாக பரவி வருகிறது.”
இனி வீட்டிலிருந்தபடியே HIV பரிசோதனை
டிசெம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு அறிவூட்டும் விசேட வேலைத்திட்டமொன்றை எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் கலாநிதி ஜானகி விதானபத்திரன குறிப்பிட்டார்.
“பெரும்பாலான வேலைத்திட்டங்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சுற்றியே செய்யப்படுகின்றன, ஏனெனில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் அந்த இரண்டு பகுதிகளிலும் உள்ளன.
“சமூகத்தைக் காப்போம் – எய்ட்ஸ் நோயைத் தடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் வழங்கப்படும் மிகவும் சிறப்பான செய்தி, எச்.ஐ.வி பரிசோதனை செய்து உங்கள் நிலையை அடையாளம் காண்பதாகும்.
தேசிய STD எய்ட்ஸ் திட்டத்துடன் நாடு முழுவதும் 40 தேசிய STD கிளினிக்குகள் உள்ளன. வீட்டில் இருந்தபடியே எச்ஐவி பரிசோதனை செய்ய Know4Sure என்ற செயலியைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.” என்றும் குறிப்பிட்டார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

மேஜர் ஜெனரலின் வாகனம் மோதி ஒருவர் பலி
மேஜர் ஜெனரலின் வாகனம் மோதி ஒருவர் பலி
மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை ஒன்றில் மோதிய விபத்தில் அங்கு பணிபுரிந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை (01) மாலை மாவனல்லை ஹிங்குல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வாகனத்தை ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரே செலுத்தியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய திருமணமானவர்.
மேஜர் ஜெனரலின் வாகனம் மோதி ஒருவர் பலி
குறித்த வாகனம் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாரதியினால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்
வீதியை விட்டு விலகி காய்கறி கடையை மோதி பலத்த சேதம் விளைவித்ததுடன் அருகிலிருந்த தொலைபேசி கம்பத்திலும் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை செலுத்திய மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிக்கப்பட்ட 7 ஏக்கர் சிங்கராஜா வனப்பகுதி
அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிக்கப்பட்ட 7 ஏக்கர் சிங்கராஜா வனப்பகுதி
ஒரு பெரிய தொழிற்சாலையின் தலைவர் ஒரு ஹோட்டல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிங்கராஜா வனப்பகுதியில் உள்ள கொங்கலா மலையின் அடிவாரத்தில் உள்ள மிகவும்
உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை ழிப்பதாகவும், இதற்கு அரசாங்கத்தின் சக்திவாய்ந்த இரண்டு அரசியல்வாதிகள்
ஆதரவளிக்கின்றனர் எனவும் நிலம் மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் சஜீவ சாமிகர கூறுகிறார்.
கொலொன்ன பிரதேச செயலகத்திற்குட்பட்ட உள்ளிடுவ கிராம அதிகாரியின் எல்லைக்குட்பட்ட ஹெஸ்வத்த, கொங்கல பிரிவில் அமைந்துள்ள இந்த
பிரதேசத்தில்தான் கிங் கங்கையின் நீரோடைகள் ஆரம்பிக்கும் எனவும், இப்பிரதேசத்தில் அமைந்துள்ள புல்வெளி அமைப்பு மற்றும் ஈரநில அமைப்பு
அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிக்கப்பட்ட 7 ஏக்கர் சிங்கராஜா வனப்பகுதி
யானைகள் மற்றும் புலிகள் போன்ற விலங்கு இனங்களின் பிரதான வாழ்விடமாகும் எனவும் சஜீவ சாமிகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலம் நிலச் சீர்திருத்த ஆணையத்துக்குச் சொந்தமானது என்றும் அவர் கூறுகிறார்.
இந்த இடத்தில் ஐந்து ஏக்கர் புல்வெளிகளும், இரண்டு ஏக்கர் காடுகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர, இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
வருடாந்தம் 500 பில்லியன் ரூபாய் நஷ்டம்
வருடாந்தம் 500 பில்லியன் ரூபாய் நஷ்டம்
புகையிரத போக்குவரத்து உட்பட இலங்கையின் போக்குவரத்துத் துறை இன்னும் அபிவிருத்தி செய்யப்படாமல் இருப்பதனால் அரசாங்கம் ஒவ்வொரு
ஆண்டும் சுமார் 500 பில்லியன் ரூபாய் வருமாத்தை இழக்கிறது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டிகள், பொதுமக்கள் மற்றும் அரச போக்குவரத்துத்துறையைக் கருத்தில் கொண்டு தன்னால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் மூலமே இந்த இழப்புத் தொடர்பான தகவல் தெரிய வந்துள்ளதாக அவர் எமது சகோதர ஊடகமான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
இதன்படி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறைந்தபட்சம் 40 முச்சக்கர வண்டிகள் ஒரு திசையில் பயணிப்பதாகவும், அதேளை அப்பகுதியில் பொதுப் போக்குவரத்துப் பேருந்து பல கிராமப் பகுதிகள் உட்பட பிரதான
போக்குவரத்து பாதைகளில் மணித்தியாலத்திற்கு ஒருமுறை மாத்திரமே பயணிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக விஜேரத்ன தெரிவித்தார்.
இது நாட்டின் போக்குவரத்துத்துறையின் மதந்தமான மோசமான நிலையைக் காட்டுகிறது.
வருடாந்தம் 500 பில்லியன் ரூபாய் நஷ்டம்
இவ்வாறான மந்தமான போக்குவரத்து முறையினால் தான் முச்சக்கரவண்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஒரு மில்லியன் முச்சக்கரவண்டிகளும் 13,500 பேருந்துகளும் இயங்குகின்றன.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பிற போக்குவரத்து சாதனங்கள் முக்கிய காரணிகளாக குறித்த ஆய்வில் உள்வாங்கப்படவில்லையென அவர் தெரிவித்தார்.
எனவே, உள்நாட்டு போக்குவரத்து முறைமையை உடனடியாக அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
சிறுமி வன்புணர்வு 66 வயதானவருக்கு கடூழிய சிறை
சிறுமி வன்புணர்வு 66 வயதானவருக்கு கடூழிய சிறை
சிறுமி ஒருவரை தனது 44 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி 25 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்றபோது சந்தேகநபருக்கு 44 வயதாகும். தற்போது அவருக்கு 66 வயதாகு
இச்சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு இணங்க பொலிஸார் எம்பிலிப்பிட்டிய
செவனகல மஹகம பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபருக்கு எதிராக எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
சிறுமி வன்புணர்வு 66 வயதானவருக்கு கடூழிய சிறை
சிறுமி மீது குறித்த நபர் 2011 ஆண்டு பல முறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு 12 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
தீர்ப்பினை வழங்கிய நீதிபதி புத்திக சீராகல சிறைத்தண்டனையுடன் சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டை வழங்குமாறும் 25,000 ரூபாய் அபராதத்தை செலுத்துமாறும் தீர்ப்பளித்தார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
பிக்குனி உட்பட அறுவர் கைது
பிக்குனி உட்பட அறுவர் கைது
சட்டவிரோத மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக திவுலப்பிட்டிய நகர எல்லையில் இருந்து புதன்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்ட பேரணியை தடுத்து
நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், பிக்குனி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சசுன ரகுமாவின் குளோபல் மன்றத்தின் அழைப்பாளர் பலாங்கொட காஷ்யப தேரர் மற்றும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
அந்த அமைப்புக்கள் மற்றும் தேசிய பிரஜைகள் ஆலோசகர் சங்கம் இணைந்து ‘சட்டவிரோத மின்சார அதிகரிப்பு எதிரான நடைபயணம்’ திவுலப்பிட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் காலை 8.40 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
பிக்குனி உட்பட அறுவர் கைது
அப்போது, ஒலிபெருக்கி மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் பாலித அமரதுங்க, பேரணியால்
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், பேரணியை நிறுத்துமாறும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் கலைந்து செல்லுமாறும் உத்தரவிடப்பட்டது.
அந்த உத்தரவை மீறி பேரணி ஆரம்பிக்கப்பட்டது. அதனையடுத்தே, இந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
120 மாணவர்களுக்கு தொழுநோய்
120 மாணவர்களுக்கு தொழுநோய்
இலங்கையில் 14 வயதுக்கு உட்பட்ட 120 மாணவர்கள் கடந்த 9 மாதங்களில், தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் கூறுகிறது.
அதிக எண்ணிக்கையான மாணவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 31 ஆகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 பாடசாலை மாணவர்களும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவர்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த காலகட்டத்தில், முழு நாட்டிலும் 1150 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்திகதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை அன்று, பொதுமக்கள்
புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, இந்தியாவில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த
ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் நவம்பரில்
மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் நவம்பரில்
நவம்பர் 20 மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (30) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ அவர்கள் சமுகமளிக்க முடியாததனால் கொக்குதொடுவாய் அகழ்வு பணியானது மீளவும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் நவம்பரில்
அதேநேரம் மிகுதியாக உள்ள செலவுதொகை பணம் எவ்வளவு என்பது தொடர்பாக கதைக்கப்பட்டு அதற்கான கணக்கறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ அவர்களினால் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த பிற பொருட்கள் பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களுக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தேவை என்ற அடிப்படையில் முழுவதும் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.
காணாமல் போனவர்கள் சார்பில் நாங்கள் தோன்றி அதன் கட்டுகாவல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.
ராஜ்சோமதேவ அவர்களினால் குறித்த பகுதியில் 50 மீற்றருக்குள் வேறு மனித எச்சங்கள் இருப்பது சம்மந்தமாக கண்டுபிடிக்க கூடிய ராடர் கருவி ஒன்றினை கொண்டு வருவதற்கான முயற்சிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பான முழுமையான விபரங்களை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி நீதமன்றத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அதற்கான ஒன்றுகூடல் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தில் மேற்கொள்ளப்பட்டு அகழ்வுபணி இடம்பெறவுள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து கணக்காளர் அவர்களும் பிரசன்னமாகி இருந்ததாக மேலும் தெரிவித்தார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
- முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
யாழில் கவிழ்ந்த பேருந்து விபத்து
யாழில் கவிழ்ந்த பேருந்து விபத்து
கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
- முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
யாழில் பூங்கா ஒன்றில் முகம்சுழிக்கும் செயற்பாடு
யாழில் பூங்கா ஒன்றில் முகம்சுழிக்கும் செயற்பாடு
யாழ்ப்பாணம் பகுதியில் சில காலமாக இயங்கி வந்த பூங்கா ஒன்றிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சுமார் 80 பேர்ச்சஸ் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வந்த இத்தோட்டத்தை அழகுபடுத்தும் வகையில் சிறிய அறைகள் கட்டப்பட்டு, அந்த அறைகளில் பல்வேறு தவறான சம்பவங்கள் நடப்பதாக முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், திருமண நிகழ்ச்சிகளின் போது படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற வகையில் இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
யாழில் பூங்கா ஒன்றில் முகம்சுழிக்கும் செயற்பாடு
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளரான 78 வயதான வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த பூங்காவில் உள்ள அறையில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் யாழ். பிரதேசவாசிகளிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம் இந்த பூங்கா தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
கடற்கரையோரம் வயோதிபரின் சடலம் மீட்பு
கடற்கரையோரம் வயோதிபரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடற்கரையோரம் திங்கட்கிழமை (30 ) திகதி வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆரியவன்ச விஜயரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து வீட்டை விட்டு வெளியேறி வந்த குறிப்பிட்ட நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
வீடியோ
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
- முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை
தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை
சம்பந்தன் வடக்கு , கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள்
எவரும் இல்லை – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன்.
பாராளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் கேள்வி – பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிடுவது வழமை.
இவ்வாறு திங்கட்கிழமை (30) வெளியிட்ட கேள்வி – பதிலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் முழு விவரம் வருமாறு, கேள்வி -சம்பந்தன் பதவி விலகல் சம்பந்தமான விடயத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் – அவர் தாம் பதவி விலகத் தேவையில்லை என்று கூறியுள்ளார். அவரைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தனின் பாராளுமன்றக் காலம் 2025 வரை என்று இருந்தாலும் பாராளுமன்றம் அதற்கு முன்னர் கலைக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகம்.
தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை
வடக்கு, கிழக்குத் தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தில் தமது குரலையும் உடலையும் வெளிக்காட்டுவது தான் அவர்களின் கடமை என்று நினைப்பது தவறு.
தமிழ் மக்களின் வருங்காலம் பாராளுமன்றத்தால் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களின் விருப்புடன் சுமுகமாக நிர்ணயிக்கப்படப் போவதில்லை. ஊரறிய உலகறிய எமது அவலங்களை வெளிநாட்டு அரசாங்கங்களுக்குத்
தெரியப்படுத்தி, இலங்கை சம்பந்தமான பொதுக் கருத்தை வெளிநாடுகளில் எமது புலம்பெயர் சகோதரர் வாயிலாக எழ வைத்து எமது நாட்டின்
அரசாங்கத்துக்கு போதிய நெருக்குதல்களை ஏற்படுத்தினால்தான் ஏதாவது நடக்கும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை பாரப்படுத்தினால் எமக்கு நன்மைகள் கிடைக்கலாம். அப்போதுகூட சீனாவிடம் முழுமையாக சரணாகதி அடைய சிங்கள அரசியல்வாதிகள் ஆயத்தமாக உள்ளார்கள். தமிழர்களின் உரிமைகளை வழங்குவதிலும் பார்க்க எவரிடமும் நாம் மண்டியிடத் தயார் என்பதே அவர்களின் மனோநிலை.
இந்த விதத்தில் தமிழ் மக்களின் தற்போதைய நிலையை அறிய அவர்களின் இதுவரை கால அவலங்களை அறிய, அவர்களின் அபிலாஷைகளை அறிய வெளிநாட்டுத் தூதுவர் அகங்கள் நாடும் முக்கிய நபர் சம்பந்தனே.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்கூட அண்மையில் அவரின் வாசஸ்தலம் சென்று அவரை சந்தித்தார்.
அவர் பேசுவது விளங்காவிட்டாலும் பக்கத்தில் இருந்து அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்த சுமந்திரன் போன்றவர்கள் முன்வரவேண்டும்.
அவரைப் புறக்கணிக்கவோ நீக்கவோ நடவடிக்கை எடுக்காமல் அவரின் பங்கை தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதே – அவரின் பெயரைச் சொல்லி இதுவரை காலமும் அரசியல் நடத்தியோரின் கடமையாகும். வெளி
தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை
உலகம் சம்பந்தனை ஒரு பக்கச்சார்பற்ற ஒரு நம்பகமான தமிழ் தலைவராக நினைக்கின்றது. அவரைப் புறக்கணிக்கவோ நீக்கவோ முனைவது தமிழ்
மக்களுக்கு இடையூறை விளைவிக்கும். அவர் வட, கிழக்குத் தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.
அவரில் பல குறைகள் இருந்துள்ளன – இருக்கின்றன. ஆனால், யாரிடந்தான் குறைகள் இல்லை? அதுவும் தமிழர்கள் மத்தியில் ஒரு தமிழர் பற்றி இன்னொரு தமிழரிடம் கேட்டால் யாரும் நினையாத குறைகள் எல்லாம் நிறைந்தோடி
வெளிவந்து விடுவன. இதனால்தான் நான் அண்மையில் ஓர் ஊடகம் என்னிடம் கேள்வி கேட்டபோது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு கூட்டுத் தலைமை தேவையென்றேன். மாவை சேனாதிராஜா, சிறீதரன், சுமந்திரன் ஆகியோர்
அந்தக் கூட்டுத் தலைமையில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் கூறினேன். தீர்மானங்கள் அவர்கள் மூவராலும் ஒருமித்து எடுக்கப்பட வேண்டும் என்றேன்.
சம்பந்தனை இருக்க விடுங்கள். தற்போதைய பாராளுமன்ற காலம் முடிவடையும்போது அவரின் அங்கத்துவம் தானாகவே முடிந்துவிடும். திருகோணமலை மக்களின் தேவைகளைப் பார்க்க – பாதுகாக்க சம்பந்தன் ஒரு தகுந்த அமைப்பை உண்டு பண்ணுவார். இல்லை என்றால் அதனை அமைக்க இலங்கை தமிழரசுக் கட்சி அவருக்கு உதவி வழங்க வேண்டும். சம்பந்தனை வெளியேற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. சம்பந்தன் அவர்கள் தனது சுயசரிதையை அல்லது தனது காலத்தில் நடந்த முக்கிய அரசியல் சந்திப்புகள் பற்றி ஒரு நூலை வெளியிட முன்வர வேண்டும் – என்று குறிப்பிட்டுள்ளார்.
பேருந்தின் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்
பேருந்தின் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்
கொஸ்கம – அளுதம்பலம பகுதியில் தனியார் பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
122 ஆம் இலக்கத்தில் (கொழும்பு – அவிசாவளை) இயங்கும் தனியார் பேரூந்து ஒன்று கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி இன்று (30) மாலை பெய்த கடும் மழைக்கு மத்தியில் பயணித்த போது மரம் ஒன்று பேரூந்தின் மீது வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

- முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது

- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டியவர் கைது
பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டியவர் கைது
உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டி கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீதே, சந்தேகநபர் மேற்கண்டவாறு செய்துள்ளார்.
மரணமடைந்த அந்த பிச்சைக்காரன், அந்த ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் “நீ குளிக்கமாட்டீர் இல்லையா?
பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டியவர் கைது
குளிக்காவிட்டால் தீ வைப்பேன்” என பலமுறை அந்த சந்தேநபர் கூறியுள்ளார். அதேபோல, ஞாயிற்றுக்கிழமை (29) இரவு பெற்றோலை ஊற்றி கொளுத்திவிட்டார்.
விபரீதத்தை கண்ட அங்கிருந்தவர்கள், பிச்சைக்காரனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர் திங்கட்கிழமை (30) காலை மரணமடைந்தார்.
64 வயதான தர்மதாஸ என்பவரே மரணமடைந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் 27 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
- முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
5 சிறுமிகள் தப்பியோட்டம்
5 சிறுமிகள் தப்பியோட்டம்
மெட்டியகொட பிரதேசத்தில் சிறுவர் இல்லமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக மெட்டியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஐந்து சிறுமிகளும் ஞாயிற்றுக்கிழமை (29) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளதாகவும் மெட்டியகொட பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தப்பியோடிய 17, 14 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் படபொல, கொழும்பு, ஹிக்கடுவ, எல்பிட்டிய மற்றும் நெலுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பியோடிய சிறுமிகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
- முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
கணவரின் தாக்குதலில் மனைவி பலி
கணவரின் தாக்குதலில் மனைவி பலி
கணவரின் தாக்குதலுக்கு உள்ளாகி மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இரத்தினபுரி – அயகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப தகராறு காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பெண் பொலிஸாரால் அயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதுடன் இவர் 45 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) அயகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன .
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
- முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
விபத்தில் கணவன் பலி மனைவி கைது
விபத்தில் கணவன் பலி மனைவி கைது
விபத்தொன்றில் கணவன் படுகாயமடைந்து பலியான சம்பவத்தை அடுத்து, அவரது மனைவியும், முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனெல்ல எலயபொல வீதிப் பகுதியில் காரொன்று மோதியதில் படுகாயமடைந்த ஒருவர், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
விபத்தில் கணவன் பலி மனைவி கைது
இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், இது சாதாரண விபத்து அல்ல, இறந்தவரின் மனைவி மற்றும் அவரது முறைக்கேடான கணவன் இணைந்து செய்த கொலை எனத் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்தே உயிரிழந்த கணவனின் மனைவியும், மனைவியின் முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
உலக வங்கிக் குழுவினர் யாழுக்கு விஜயம்
உலக வங்கிக் குழுவினர் யாழுக்கு விஜயம்
இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு தினம்திங்கட்கிழமை (30) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது.
அதன் போது , உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்காக கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழு விஜயம் செய்துள்ளது.
உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் தலைமையில் குறிப்பிட்ட விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
ஆய்வை ஆரம்பிக்கும் சீன கப்பல்
ஆய்வை ஆரம்பிக்கும் சீன கப்பல்
நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான “ஷி யான் 6”, நாரா நிறுவனத்துடன் இணைந்து இன்று (30) நாட்டின் மேற்குக் கடலில் தனது ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
“ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இது தொடர்பான ஆய்வுகளை இன்றும் நாளையும் (31) மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
ஆய்வை ஆரம்பிக்கும் சீன கப்பல்
இந்த ஆராய்ச்சிக்கு அமைய கப்பலின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்குக் கடலின் நீர் மாதிரிகள் எடுக்கப்படவுள்ள நிலையில், அதில் நாரா நிறுவனம் மற்றும் கடற்படை வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த ஆய்வின் போது கடல் நீரின் உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இந்த சோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.