Tag: மனைவி பலி
Posted in இலங்கை செய்திகள்
கணவரின் தாக்குதலில் மனைவி பலி
Author: நிருபர் காவலன் Published Date: 30/10/2023
கணவரின் தாக்குதலில் மனைவி பலி
கணவரின் தாக்குதலுக்கு உள்ளாகி மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இரத்தினபுரி – அயகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப தகராறு காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பெண் பொலிஸாரால் அயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதுடன் இவர் 45 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) அயகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன .
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்
- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்
- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு
- நிலச்சரிவைத் தொடர்ந்து ரயில் சேவைகளில் தாமதம்
- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது
- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது
- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்


















