சீனா பெற்றோலினால் பெற்றோல் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்
Posted in இலங்கை செய்திகள்

சீனா பெற்றோலினால் பெற்றோல் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்

சீனா பெற்றோலினால் பெற்றோல் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விற்பனை வீழ்ச்சி நேரடியாக அதன் வருமானத்தை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் சினோபெக் ஒக்டேன் 92 பெற்றோலை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் இவ்வாறு எரிபொருள் தேவை குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீனா சினோபெக் நிறுவனம் ஒக்டேன்ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலினை 358 ரூபாவிற்கும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி நிறுவனம் ஆகியவை ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலினை 365 ரூபாவிற்கும் விற்பனை செய்கிறது.

இந்நிலைமை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இலாபத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா பெற்றோலினால் பெற்றோல் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்

அத்துடன், இதுவரையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஏறக்குறைய 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

எவ்வாறாயினும், தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களை சீன நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் எரிபொருள் பிரிவினையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சினோபெக் நிறுவனம் முன்வைத்த ஒப்பந்தங்களை அவர்கள் பணிகளை தொடங்கும் முன் பூர்த்தி செய்யாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், சினோபெக் குறைந்த விலையில் எரிபொருளை விற்கும்போது, ​​பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி நிறுவனங்கள் அதிக விலைக்கு எரிபொருளை விற்பது நியாயமற்றது என பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீனா பெற்றோலினால் பெற்றோல் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்

பெற்றோலியம் தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படாததால், அதற்கு எதிராக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (11) பிற்பகல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது

காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது

அதிருப்தியடைந்த காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை பெரிதாக்கி அவரது வீட்டின் முன் வாயிலில் ஒட்டிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடம் இருந்து சிறுமியின் மேலும் 4 நிர்வாண புகைப்படங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவை பெரிதாக்கப்பட்டு

திருத்தப்பட்டுள்ளன. மேலும் நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய மடிகணினியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது

23 வயதுடைய முறைப்பாட்டாளரும் சந்தேகநபரும் மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்ததாகவும், பாடசாலை நண்பரான சந்தேக நபருடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெஸ்பேவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன சமரசிங்கவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தந்தை மகள் மீது அமிலத் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

தந்தை மகள் மீது அமிலத் தாக்குதல்

தந்தை மகள் மீது அமிலத் தாக்குதல்

அசிட் வீச்சுத் தாக்குதலில் தந்தையும் மகளும் காயமடைந்துள்ள சம்பவமொன்று முல்லேரிய, அம்பத்தளை பகுதியில் புதன்கிழமை (11) காலை முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் இந்த அமிலத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை மகள் மீது அமிலத் தாக்குதல்

வீதியில் நின்றிருந்த ஒருவரால் இந்த அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த தந்தை, கொழும்பு கண் வைத்தியசாலையிலும் மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது

மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது

கடந்த மாதம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் 06 வயது சிறுமி கொல்லப்பட்டு அவரது தந்தை படுகாயமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சேதவத்தை பகுதியிலிருந்து காரில் பயணித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதியில் கைவிடப்பட்ட காரை விசே் அதிரடிப்படையினர் மீட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் மற்றும் அவர்களுக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர் என மூவரைக் கைது செய்துள்ளனர்.

மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது

செப்டெம்பர் 17ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது தந்தை படுகாயமடைந்தார். வழக்கு ஒன்று தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும் போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

உயிரிழந்த சிறுமியின் தந்தைக்கே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான 36 மற்றும் 65 வயதுடைய ஆதம் லெப்பை, மொஹமட் மின்ஹாஜ் மற்றும் செய்யது இஷாக் மன்சூர் ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசேட அதிரடிப்படை தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் CI நதீக்க சில்வாவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

காவித்துணியுடன் கடற்கரையில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காவித்துணியுடன் கடற்கரையில் சடலம் மீட்பு

காவித்துணியுடன் கடற்கரையில் சடலம் மீட்பு

அடையாம் காணப்படாத சடலம் ஒன்று நேற்று (10) கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் 30-40 வயதிற்கிடைப்பட்ட ஆணொருவருடையதாக இருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காவித்துணியுடன் கடற்கரையில் சடலம் மீட்பு

குறித்த நபரின் அருகில் காவி நிறத்துணியொன்று காணப்பட்டதாகவும் அவர் மொட்டைத் தலையுடன் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் ஒரு பௌத்த பிக்குவினுடையதாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலங்களுடன் 7 மணிநேரம் படுத்திருந்து தப்பிய இளம்பெண்
Posted in இலங்கை செய்திகள்

சடலங்களுடன் 7 மணிநேரம் படுத்திருந்து தப்பிய இளம்பெண்

சடலங்களுடன் 7 மணிநேரம் படுத்திருந்து தப்பிய இளம்பெண்

இஸ்ரேலை அடுத்த காசாவை ஒட்டிய கிபுட்ஜ் ரீம் என்ற பகுதியருகே கடந்த வார இறுதியில், சனிக்கிழமையன்று (07) இசை திருவிழா ஒன்று நடந்துள்ளது.

நேச்சர் பார்ட்டி என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். ஆடிப்பாடி, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அடுத்து நடக்க போகும் பயங்கர நிகழ்வை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை ஆயிரக்கணக்கான ஏவுகணைகளால் தாக்கியது. அப்படி அவர்கள் முதலில் தாக்குதல் நடத்திய பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

இதில் சிக்கி திருவிழாவில் பங்கேற்றவர்களில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

லீ சசி என்ற அந்த பெண் மற்றும் 35 பேர் புகலிடம் ஒன்றில் ஓடி சென்று பதுங்கி உள்ளனர். அவர்களை தேடி வந்த ஹமாஸ் குழுவினர், தங்களிடம் இருந்த துப்பாக்கிகளால் சுட்டு தள்ளினர்.

சடலங்களுடன் 7 மணிநேரம் படுத்திருந்து தப்பிய இளம்பெண்

பின்னர் கையெறி குண்டுகளையும் வீசி, தாக்கியுள்ளனர். இதில், பலரும் ஒருவர் மேல் ஒருவர் என அடுத்தடுத்து உயிரிழந்து கிடந்துள்ளனர்.

எனினும், இதில் சசி பாதுகாப்பாக தப்பியுள்ளார். அவர்களில் 10 பேர் மட்டுமே உயிருடன் வெளியே வந்துள்ளனர். உயிரிழந்த உடல்களின் அடியில் மறைந்து இருந்து அனைவரும் உயிர் தப்பினோம் என அவர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

இந்த பயங்கர தகவலை சசி, தன்னுடைய தோழியான நடாஷா ரகேல் கிர்த்சக் கட்மேனிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.

7 மணிநேரம் பதுங்கியிருந்தோம். நான் ஜோக் எதுவும் கூறவில்லை என தெரிவித்து, புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றையும் அதற்கு சான்றாக

வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், பலர் உயிரிழந்த நிலை கிடக்க கூடிய காட்சி அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்ல சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரில் சென்ற பலரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதில் குறித்த நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீடியோ

அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய சீனா கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

சீனக்கப்பல் நவம்பரில் வர அனுமதி

சீனக்கப்பல் நவம்பரில் வர அனுமதி

சீன ஆராய்ச்சிக் கப்பல் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் ”சீன கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எனினும் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் வரமுடியாது ,நவம்பர் மாதத்தில் தான் வரமுடியும்” எனவும் தெரிவித்துள்ளார்.

சீனக்கப்பல் நவம்பரில் வர அனுமதி

”குறித்த கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கை வரமுடியும் என்பது குறித்து அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது .

இது வெறுமனே ஒரு விஜயம் மாத்திரம் இல்லை . கப்பல் இலங்கையில் தரித்து நிற்கும் நாட்களில் அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை வழங்கவேண்டும்.

உள்விவகாரங்களை கருத்தில் கொண்ட பின்னர் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கான திகதியை வழங்கியுள்ளோம். இலங்கைக்கு சீனாவுடனான இருதரப்பு உறவுகள் மிகவும் அவசியமானவை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆபாசப் பட நடிகையின் கருத்தால் சர்ச்சை
Posted in இலங்கை செய்திகள்

ஆபாசப் பட நடிகையின் கருத்தால் சர்ச்சை

ஆபாசப் பட நடிகையின் கருத்தால் சர்ச்சை

ன்னாள் ஆபாசப் பட நடிகையான மியா கலிபா. இஸ்ரேல் போர் குறித்துக் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவர் இப்போது வேலையையும் இழந்துள்ளார்.

ஆபாசப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் மியா கலிபா. அப்போது சர்ச்சைக்குரிய வகையில் சிக்கியதாக இவருக்கு எதிராக மிகப் பெரியளவில் எதிர்ப்பு எல்லாம் கிளம்பியது. இதற்கிடையே இப்போது மீண்டும் அவர் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆபாசப் பட நடிகையின் கருத்தால் சர்ச்சை

30 வயதான மியா கலிபா இஸ்ரேல் போர் தொடர்பாக சில சர்ச்சை ட்வீட்களை போட்டார். இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதனால் அவர் வேலையையும் இழந்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படை கடந்த சனிக்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் மோசமான தாக்குதலை நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் சரமாரியாக 5000 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் படையினர் அங்குள்ள அப்பாவி மக்களையும் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மேலும், பலரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே மியா கலிபா தனது எக்ஸ் பக்கத்தில், சர்ச்சைக்குரிய வகையில் இரண்டு ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.

அவர் முதலில் தனது எக்ஸ் பக்கத்தில், “பாலஸ்தீனியர்கள் இத்தனை காலம் அடைந்த துன்பத்தைப் பார்த்தும் நீங்கள் பாலஸ்தீன ஆதரவாக இருக்கவில்லை என்றால் நீங்கள் இந்த விவகாரத்தில் தவறான இடத்தில் நிற்கிறார்கள் என்று அர்த்தம்.. வரலாறு உங்களுக்குப் பாடத்தைச் சொல்லித் தரும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆபாசப் பட நடிகையின் கருத்தால் சர்ச்சை

மியா கலிபா: அதேபோல மற்றொரு ட்வீட்டில் அவர், “பாலஸ்தீனத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் யாராவது அவர்கள் படும் துயரத்தை ரெக்காட் செய்யச் சொல்ல முடியுமா” எனப் பதிவிட்டிருந்தார். பாலஸ்தீன பயங்கரவாதிகளைச் சுதந்திரப் போராட்ட வீரர்க்கள் என்று மியா கலிபா அழைத்ததே பெரும் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்து. நெட்டிசன்கள் பலரும் மியா கலிபா கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மியா கலிபாவின் இந்த நடவடிக்கை காரணமாக அவருடன் போட்டியிருந்த பிஸ்னஸ் டீலை உடனடியாக ரத்து செய்வதாகக் கனடா நாட்டின் பிரபல வானொலி தொகுப்பாளர் டோட் ஷாபிரோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மியா கலிபா செய்த செயலை ஏற்கவே முடியாது. அவருடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம்.. நீங்கள் செய்தது அருவருப்பானது. தயவு செய்து சிறந்த மனிதனாக மாறுங்கள். கொலை, பலாத்காரம், பிணையக் கைதிகளாக அப்பாவிகளைப் பிடித்துச் செல்வதை நீங்கள் ஏற்பது உண்மையிலேயே மோசமானது. உங்கள் செயலை கண்டிக்க வார்த்தைகளே இல்லை. உங்கள் அறியாமையைக் கண்டு வியக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதேபோல அமெரிக்காவின் பிரபல அடல்ட் மெகசினான ப்ளே பாய் நிறுவனமும் மியா கலிபாவுடனான அனைத்து டீல்களையும் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் தங்கள் கம்யூனிட்டி உறுப்பினர்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் ஹமாஸின் தாக்குதல்களைக் கொண்டாடும் அருவருப்பான மற்றும் கண்டிக்கத்தக்கக் கருத்துக்களைக் கூறியதால் மியா கலிபா உடன் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை, செவ்வாய்க்கிழமை (10) மாலை வந்தடைந்தார்.

         அவருடன் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வந்துள்ளனர்.

        இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான IFC-31 என்ற விசேட விமானம் மூலம் அவர்கள்   செவ்வாய்க்கிழமை (10) மாலை 05.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

            இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வருகைதந்து இந்தக் குழுவை வரவேற்று அழைத்துச் சென்றது.
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் சிதறிய பொலிஸ் வண்டி இரு போலீசார் மரணம்

வவுனியாவில் சிதறிய பொலிஸ் வண்டி இரு போலீசார் மரணம்

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் டிஃபெண்டர் வாகனத்தின் சாரதியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (09) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் சிதறிய பொலிஸ் வண்டி இரு போலீசார் மரணம்

மழையின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பயணித்த டிஃபெண்டர் வாகனம் வீதியில் சென்ற கறவை மாடு ஒன்றின் மீது மோதியதாகவும், பின்னர் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, மடுகந்தையில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் குருநாகல் மற்றும் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தினருக்கு தரம் உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தினருக்கு தரம் உயர்வு

இராணுவத்தினருக்கு தரம் உயர்வு

பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில் இலங்கை இராணுவத்தின் 314 அதிகாரிகள் மற்றும் இதர நிலைகளில் உள்ள 1,565 பேரும் தர முயர்த்தப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த குழு அடுத்த தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேஜர் ஜெனரல் தரத்திற்கு 07 பிரிகேடியர்களும். பிரிகேடியர் தரத்திற்கு 12 கேணல்களும், கேணல் நிலைக்கு 37 லெப்டினன்ட் கேணல்களும், 41 மேஜர்கள் லெப்டினன்ட் கேணல் தரத்திற்கும் உயர்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் மண்சரிவு எச்சரிக்கை

நாடு முழுவதும் மண்சரிவு எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 13 மாவட்டங்களில் 20,480 குடும்பங்களைச் சேர்ந்த 75, 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தினால் 33,488 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மோசமான வானிலை காரணமாக 13 வீடுகள் முழுமையாகவும் 1,125 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 555 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மண்சரிவு எச்சரிக்கை

இதேவேளை, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் பல பகுதிகளில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மூன்றாம் கட்டத்துக்கு உயர்த்தியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இதன்படி காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, இமதுவ, நாகொட, யக்கலமுல்ல, களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, வலலவிட்ட, மத்துகம, மாத்தறை

மாவட்டத்தில் பிடபெத்தர, அக்குரஸ்ஸ, ஹக்மன ஆகிய பகுதிகளும் எச்சரிக்கைக்குரிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறையின் பிரதேசங்கள் மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களுக்கு அபராத பணம் அறவீடு
Posted in இலங்கை செய்திகள்

மான் கறி சமைத்த சிறுமிக்கு தண்டம்

மான் கறி சமைத்த சிறுமிக்கு தண்டம்

விலானகம பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மான் கறி தயாரித்துக்கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி, அலவத்துகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த சிறுமி கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மான் கறியை அழிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மான் ஒன்று கொல்லப்பட்டுள்ளதாகவும், வீட்டில் மான் கறி மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்

விமான பறப்பு கட்டணம் அதிகரிப்பு

விமான பறப்பு கட்டணம் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டின் விமானச் சுழற்சி வசதிக் கட்டண விதிமுறைகள் எண். 1ஐத் திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை (09) கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த யோசனைக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது.

கொழும்பு விமான தகவல் வலயத்தின் ஊடாக பறக்கும் விமானங்களுக்கு விமான போக்குவரத்து கட்டணத்தை விதிக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டு விமான

போக்குவரத்து வசதிகள் ஒழுங்குமுறைகள் இயற்றப்பட்டன.குறித்த விதிமுறைகள் கடந்த காலத்தில் திருத்தப்படவில்லை என அரசாங்கம் கூறுகிறது.

எனவே, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் கொள்கைகள் மற்றும் தற்போதைய உலகளாவிய போக்குகளைக் கருத்தில் கொண்டு, விமான போக்குவரத்து

விமான பறப்பு கட்டணம் அதிகரிப்பு

வசதிகள் விதிமுறைகள் திருத்தப்பட்டு, விமானப் போக்குவரத்து வசதிகள் விதிமுறைகள் 2023 எண் 1 என வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் புஹுரிய சந்தியில் நேற்றிரவு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியோரம் வாகனங்களைச் சோதனை

செய்து கொண்டிருந்த போது, கந்தளாயிலிருந்து கடுவலை நோக்கிச் சென்ற டிப்பர் ட்ரக் பொலிஸ் கான்ஸ்டபிளை மோதியுள்ளது.

படுகாயமடைந்த நிலையில், குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்
Posted in இலங்கை செய்திகள்

கணவரை காணவில்லை; மனைவி முறைப்பாடு

கணவரை காணவில்லை; மனைவி முறைப்பாடு

வவுனியா – சிதம்பரம், முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த 4ஆம் திகதி முதல் காணவில்லை என அவரின்

மனைவி சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

வீட்டிலிருந்த குறித்த நபர் கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று வரை வீடு திரும்பவில்லை.

இதனை அடுத்து அவரின் மனைவியினால் கணவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கணவரை காணவில்லை; மனைவி முறைப்பாடு

வீட்டிலிருந்து அவர் வெளியேறுகையில் நீல நிறம் சரம் மற்றும் ரோஸ் கலர் சட்டையும் அணிந்து சென்றிருந்தார்.

எனவே இவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0776289460 (மகன்), 0774136383 (மனைவி), 0762477411 (மகள்) ஆகிய இலக்கத்திற்கு அறிவித்து உதவுமாறு தெரிவித்துள்ளனர்

மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு

மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு

தென்மராட்சி – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஞாயிற்றுக் கிழமை (08) காலை தனது கால்நடைகளை கொண்டு சென்ற பெண் ஒருவரால் குறித்த ஆயுதங்கள் வயல் பகுதியில் பற்றையோரமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு

இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ஆயுதங்களை பார்வையிட்டதுடன் அவ்விடத்தில் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவினை பெற்று குறித்த ஆயுதங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்

களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை கிழித்தெறியும் சமூக ஊடக அடக்குமுறைச் சட்டத்தை நீக்கும் நோக்கில் களுத்துறை நகரில் திங்கட்கிழமை (09)

ஆரம்பிக்கப்படவுள்ள மக்கள் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். .

களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பொலிஸ் நிலையங்களில் இருந்து கலவர எதிர்ப்பு குழுக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் காணப்பட்டனர்.

களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்

தலவ்வ, போதி வளாகம் மற்றும் இரண்டு களுத்துறை பாலங்களுக்கு இடையில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமை உட்பட பல இடங்களில் பொலிஸ்

குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவப் படையினர் களுத்துறை நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லயன் கொள்ளையடித்த கும்பல் கைது
Posted in இலங்கை செய்திகள்

ATM இலிருந்து கோடி கொள்ளை

ATM இலிருந்து கோடி கொள்ளை

புத்தளம் – மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் இருந்து சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் சனிக்கிழமை (07) இரவு 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது, மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் ATM இயந்திரத்தை நோக்கி முகங்களை மறைத்த மூவர் மோட்டார் சைக்கிளில் வந்தமை குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கமெராவில் பதிவாகியுள்ளது.

ATM இலிருந்து கோடி கொள்ளை

அங்கு வருகை தந்த கொள்ளையர்கள், ATM இயந்திரம் பழுது என்றும் அதனை திருத்தப்போவதாகவும் கூறி, திறப்பு ஒன்றின் மூலம் ATM இயந்திரத்தின் பின் கதவைத் திறந்து பணம் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்குள்ளே சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனையடுத்து, இரகசிய இலக்கங்களை உட்செலுத்தி குறித்த ATM இயந்திரத்தை திறந்த கொள்ளையர்கள் அந்த இயந்திரத்தில் இருந்த சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துணிகரமான கொள்ளைச் சம்பவத்தில் ATM இயந்திரத்திரத்திற்கோ அல்லது பாதுகாப்பு அறையின் கதவுக்கோ எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தனியார் வங்கியுடன் தொடர்புடைய ஒருசிலரின் உதவியுடன் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் பொலிஸ் தடயவியல் பிரிவினரும், கைரேகை பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் காமினி விக்ரமசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.