நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

வித்தியா கொலை நீதிமன்றுக்கு கல் வீசிய வழக்கிலிருந்து விலகினார் நீதிபதி

வித்தியா கொலை நீதிமன்றுக்கு கல் வீசிய வழக்கிலிருந்து விலகினார் நீதிபதி

யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்து 21ஆம் திகதி

யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற சூழலில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலரும் கூடி இருந்தனர்.

இந்நிலையில், போராட்டம் வன்முறையாக மாறி நீதிமன்ற கட்டட தொகுதி மீது கல்வீச்சு இடம்பெற்றது.

தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணிகளின் வாகனங்கள், சிறைச்சாலை வாகனம், நீதிமன்றுக்கு

அருகில் இருக்கும் சுப்பிரமணிய பூங்கா உடைமைகள், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த பொலிஸ் காவலரண் என்பவை சேதமாக்கப்பட்டன.

வித்தியா கொலை நீதிமன்றுக்கு கல் வீசிய வழக்கிலிருந்து விலகினார் நீதிபதி

இவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சுமார் 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசியமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை , பொலிஸ் நிலையம் மீது

கல்வீசியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர்ந்து சந்தேகநபர்களை மன்றில் முற்படுத்தி, வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல்வீசிய வழக்கு விசாரணை சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டதை அடுத்து , மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவந்தன.

குறித்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக தற்போது கடமையேற்று இருக்கும் நீதிபதி டீ. சூசைதாசன் முன்னிலையில் எடுத்து

கொள்ளப்பட்ட போது , தனது தனிப்பட்ட காரணங்களால் இந்த வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக தெரிவித்து விலகி கொண்டுள்ளார்.

இது குறித்த நீதிமன்ற பதிவாளரால், பிரதம நீதியரசருக்கு அறிவிக்கப்பட்டு, புதிய நீதிபதி ஒருவர் குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும்

பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு

மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு

பேராதனை நகரில் மண்சரிவில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாயகிய பிரதேசத்தில் தொலைபேசி சேவை நிலையத்தை நடத்தி வந்த திருமணமாகாத அனுர ஜயவீர (வயது 68) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு

இன்று (22) அதிகாலை 12.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளுடன் இராணுவ அதிகாரிகள் இணைந்து

மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது உயிரிழந்தவரின் சடலம் அதிகாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

பேராதனை நகரில் சுமார் நான்கு வர்த்தக நிலையங்கள் மண்சரிவினால் அழிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீடியோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

65 போலி நாணயத்தாள்களுடன் பட்டதாரி கைது

65 போலி நாணயத்தாள்களுடன் பட்டதாரி கைது

5,000 ரூபாய் பெறுமதியான 65 போலி நாணயத்தாள்களுடன் வெளிவாரி பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் 2021 ஆம் ஆண்டு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் வெளிவிவகார கல்விக்காக பதிவு செய்யப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

28 வயதான சந்தேக நபர் பொல்பிதிகம ஹட்பொகுன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டிலுள்ள 9 மாவட்டங்களுக்கு இன்றிரவு 8 மணிவரை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளை சேர்ந்த மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

வீடியோ

சோறு குழைந்தால் விவாகரத்து செய்யமுடியாது
Posted in இலங்கை செய்திகள்

சோறு குழைந்தால் விவாகரத்து செய்யமுடியாது

சோறு குழைந்தால் விவாகரத்து செய்யமுடியாது

சொதியில் உப்பு கூடிவிட்டது என்றுச் சொல்லியும், சோறு குழைந்துவிட்டது என்று கூறியும் மனைவியை விவாகரத்து செய்யமுடியாது என்று ஸ்ரீ லங்கா

பொதுஜன பெரமுனவின் எம்.பியான ரோஹித அபே குணவர்தன, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறு விவாகரத்து செய்துவிட்டால், யாரை திருமணம் முடிப்பது எனக் கேட்ட, ரோஹித அபேகுணவர்தன,அதனால்தான், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இந்த வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்கின்றது என்றார்.

வீடியோ

இலங்கை மீனவர்கள் ஐவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீனவர்கள் ஐவர் கைது

இலங்கை மீனவர்கள் ஐவர் கைது

இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக

தெரிவித்து இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு படகொன்றையும் கைப்பறியுள்ளனர்.

இந்திய கடலோர காவல்படை இன்று (21) கைது செய்து விசாரணைக்காக தமிழக கடலோர காவல் குழுமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் விசார​ணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

வீடியோ

சரிந்த ராஜபக்ஸ கோட்டை வெறுக்கும் மக்கள் video
Posted in இலங்கை செய்திகள்

ராஜபக்ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு சபையில் சலசலப்பு 5 நிமிடங்கள் சபை ஒத்திவைப்பு

ராஜபக்ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு சபையில் சலசலப்பு 5 நிமிடங்கள் சபை ஒத்திவைப்பு

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட சிலரே காரணமானவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதுதொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

அவருடைய உரையை தடுக்கும் வகையில், ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம் விளைவித்துக்கொண்டிருக்கின்றனர்.

அத்துடன், சபைக்கு நடுவே வந்தும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதியும் பொறுப்பாளி என உயர் நீதிமன்றம் கடந்த 14 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியிருக்கின்றது.

ராஜபக்ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு சபையில் சலசலப்பு 5 நிமிடங்கள் சபை ஒத்திவைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மட்டுமன்றி நிதி அமைச்சர்களாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் பசில் ராஜக்ஷ,

ஜனாதிபதியின் செயலாளராக இருந்த பி.பி.ஜயசுந்தர, மத்திய வங்கி ஆளுநர்களாக இருந்த அஜித் நிவாட் கப்ரால் மற்றும் டபிள்யூ டி. லக்ஷ்மன,

திறைசேரி செயலாளராக இருந்த எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் நிதிச்சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் சபையை கொண்டுச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டமையால் சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு

ஒத்திவைத்துவிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அக்கிராசனத்தில் இருந்து எழுந்துச் சென்றுவிட்டார்.

வீடியோ

பொலிஸாரின் கொடூர தாக்குதலில் யாழ் வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரின் கொடூர தாக்குதலில் யாழ் வாலிபன் மரணம்

பொலிஸாரின் கொடூர தாக்குதலில் யாழ் வாலிபன் மரணம்

வட்டுக்கோட்டை பொலிஸாரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் மரணம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், குறித்த இளைஞனின் சடலமானது பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பொலிஸார் 785 வழித்தட வீதியை முற்றாக வீதித்தடை மூலம் மூடி பயணிகளின் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு விளைவித்தனர்.

பொலிஸாரின் கொடூர தாக்குதலில் யாழ் வாலிபன் மரணம்

இதனால் பயணிகள் சுற்றுப்பாதையை பயன்படுத்தி மிகவும் கடினத்தின் மத்தியில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

​ஐந்து பொலிஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கடமையில் அமர்த்தப்பட்டு

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் வீதியால் செல்பவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரை கேவலமாக திட்டி விட்டு, எச்சில் உமிழ்ந்து விட்டு செல்வதை அங்கு அவதானிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதிமன்றுக்கு சென்று இழப்பீடு கோரலாம்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் நீதிமன்றுக்கு சென்று இழப்பீடு கோரலாம்

மக்கள் நீதிமன்றுக்கு சென்று இழப்பீடு கோரலாம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மேலும் அதிகமாக வரி விதித்து மக்கள் மீது சுமையை ஏற்படுத்தாது, கடன்களை செலுத்துவதற்கும்,

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பவும் “திருடப்பட்ட சொத்துக்களை” மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை திவாலாக்கியதற்கு யார் காரணம் என்ற வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு அரிய மற்றும் சிறந்த தீர்ப்பு.

மனுவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க மனுதாரர்கள் கோராததால், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் தண்டனை விதிக்கவில்லை என சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் அவர் தெரிவித்துள்ளார் .

மக்கள் நீதிமன்றுக்கு சென்று இழப்பீடு கோரலாம்

இந்நாட்டு மக்கள் நீதிமன்றத்திற்குச் சென்று, உயர் நீதிமன்றத்தால் வங்குரோத்து நிலைமைக்குக் காரணமானவர்களென தீர்ப்பளிக்கப்பட்டவர்களிடமிருந்து தண்டனை மற்றும் இழப்பீடு கோர முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

“வேலைவாய்ப்பை இழந்த குடிமக்கள், தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி வெட்டப்பட்டுகின்றவர்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பட்டினியில் கிடக்கும் 2 மில்லியன் குழந்தைகளின் பெற்றோர்கள் அதற்கான பரிகாரம் தேடலாம்,” என்று அவர் கூறினார்.

வெளிநாட்டுக் கணக்குகள் மற்றும் நிறுவனங்களில் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் அல்லது இலங்கையில் உள்ள காணிகள், ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும்

பணத்தையும் பொலிஸ் விசாரணைகள் மூலம் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்க பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

“திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான உதவிகளை வழங்கும் தனிப் பிரிவை உலக வங்கி கொண்டுள்ளது. அவ்வாறாக பிலிப்பைன்ஸில் உள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு தங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன,” என்று அவர் கூறினார்.

சபைக்குள் இருந்து அஞ்சல் செய்ய தடை
Posted in இலங்கை செய்திகள்

சபைக்குள் இருந்து அஞ்சல் செய்ய தடை

சபைக்குள் இருந்து அஞ்சல் செய்ய தடை

சபைக்குள் இருந்து, கையடக்க தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் ஊடாக, சபை நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்களுக்கு அஞ்சல் செய்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபையில் குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து காலை 10:35 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கை காலை 11:14 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்பின்னர் விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றிய போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்​கண்டவாறு தெரிவித்தார்.

மனித புதைகுழி விடயத்தில் மெத்தன போக்கு ரவிகரன் குற்றச்சாட்டு
Posted in இலங்கை செய்திகள்

மனித புதைகுழி விடயத்தில் மெத்தன போக்கு ரவிகரன் குற்றச்சாட்டு

மனித புதைகுழி விடயத்தில் மெத்தன போக்கு ரவிகரன் குற்றச்சாட்டு

மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கம் மெத்தன போக்கினை காட்டுகிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

நேற்று (20) கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

கொக்கு தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணியானது நீண்ட இடைவெளிக்கு பின்பு இடம்பெறுகின்றது.

அரசாங்கமானது நினைத்தால் நிச்சயமாக இந்த உடலங்கள் தொடர்பில் ஒரு தெளிவான அறிக்கையை தரலாம் .

ஆனால் அகழ்வு பணியினை மேற்கொண்டு முடிவுகளை சரியான வழியிலே செய்ய வேண்டும் என்று ஏனையவர்கள் கோரிக்கை விடுமளவிற்கு அரசாங்கம் அந்த நடவடிக்கையில் மெத்தன போக்கினை காட்டுவது போல் தெரிகின்றது.

மனித புதைகுழி விடயத்தில் மெத்தன போக்கு ரவிகரன் குற்றச்சாட்டு

இன்றும் முதலில் நம்பிக்கை இருக்கவில்லை. இருந்தாலும் அதன் பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்களால் குறித்த பணி நடைபெறுகின்றது.

ஆனால் தொடர்ந்தும் அகழ்வு பணி நடைபெற வேண்டும். இதற்கான முடிவுகள் கிடைக்க வேண்டும் என்பது தான் மக்களுடையதும் எங்களுடையதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

உண்மைத்தன்மை வெளிப்பட வேண்டும். பொறுப்பு கூறல் விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்பு கூறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு என மேலும் தெரிவித்தார்

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

எனது ஆவணத்தை பறித்துவிட்டனர் சஜித் குற்றச்சாட்டு

எனது ஆவணத்தை பறித்துவிட்டனர் சஜித் குற்றச்சாட்டு

தான் முன்வைத்த விசேட கூற்றின் விபரங்கள் அடங்கியிருந்த கோவையை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் பறித்துச் சென்றதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (21) குறிப்பிட்டார்.

நாட்டை வங்குரோத்து செய்ய உழைத்தவர்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி ராஜபக்ஷர்களிடம் இருந்து நட்டத்தை மீட்பீர்களா? என்றும் பாராளுமன்றத்தில் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

கேள்வி முன்வைக்கப்பட்ட போது, ​​ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், பாடசாலை

மாணவர்களும் கலரியில் இருக்கின்றனர். ஆகையால், தொடர்ந்தும் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனது ஆவணத்தை பறித்துவிட்டனர் சஜித் குற்றச்சாட்டு

இந்த சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார வீடியோ எடுத்தார். அவ்வாறு வீடியோ எடுக்க வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நளின் பண்டாரவிடம் கேட்டுக்கொண்டார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி எதிர்க்கட்சித் தலைவர் தனது கேள்வியை முன்வைத்ததையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து எதிர்க்கட்சித் தலைவரை அணுகினர்.

இதன்போது, ​​படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ மற்றும் ஏனைய சேவிதர்கள், எதிர்க்கட்சித் தலைவரின் அருகில் வந்து அவரைப் பாதுகாப்பதைக் காணமுடிந்தது.

இதையடுத்து அவையை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மீண்டும் 11.14க்கு ஆரம்பித்தார்.

அப்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை ஆளும் கட்சி உறுப்பினர் சனத்

நிஷாந்த அபகரித்தார். அதனை, சமர விக்ரமவிடம் கொடுத்தார். அத்தனையும் பிரதமர் முன்னிலையிலேயே நடந்தது.

என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை இவ்வாறு அபகரிக்க முடியுமா? ​அல்லது 22/7இன் கீழ், சிறப்பு கூற்றொன்றை எனக்கு விடுவிக்க உரிமை இல்லையா? என்றும் வினவினார்.

துப்பாக்கி தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்து பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

போலிக் கடிதம் கேட்டு மிரட்டிய பொலிஸார்

போலிக் கடிதம் கேட்டு மிரட்டிய பொலிஸார்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் நிலவரங்களை பார்வையிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ்

காட்டுமிராண்டித்தனமான கொலை ஒன்று அரங்கேறியிருப்பதை என்னால் உணர முடிகிறது என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனையும் அவரது நண்பரையும் பொலிஸார் காரணமில்லாமல் கைது செய்து சட்டத்திற்கு முரணாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல் நடாத்தியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு உரிய முறையில் வைத்திய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. பின்னர் இந்த விடயங்களை வெளியே சொல்ல வேண்டாம் என அச்சுறுத்தி

உள்ளார்கள். அது மாத்திரமில்லாமல் அந்த அச்சுறுத்தலின் விளைவாக தற்போது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

போலிக் கடிதம் கேட்டு மிரட்டிய பொலிஸார்

அவரோடு கைதுசெய்யப்பட்ட மற்றைய இளைஞரும் சிறைச்சாலையில் இருக்கின்றார். அவருக்கும் காயங்கள் காணப்படுகிறது. அவரது குடும்பத்திடம்

சென்று பொலிஸார் தாங்கள் அவரை தாக்கவில்லை என கடிதம் தருமாறு அச்சுறுத்தியிருக்கின்றார்கள்.

இந்த விடயங்களை நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவர இருக்கின்றோம். இந்த இடத்தில் பாரிய ஒரு அச்சுறுத்தல் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரிய ஒரு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகிறது.

இங்கே குற்றம் இழைத்ததும் பொலிஸார். அந்த குற்றத்தை விசாரிக்க போவதும் அவர்களே தான்.

ஊடகங்கள் இந்த வழக்கிற்கு முழுமையான ஆதரவை தர வேண்டும். அல்லது இந்த வழக்கின் உண்மைகள் குழி தோண்டி புதைக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இரத்தக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் மீட்பு

இரத்தக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் மீட்பு

வயல் ஒன்றின் வரப்பில் இரத்தக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாரின் விசாரணைகளின் படி உயிரிழந்தவர் வெனிவெல்பிட்டிய, ஹல்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரத்தக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் மீட்பு

இரத்தக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் மீட்பு
அங்குருவத்தோட்ட, வெனிவேல்பிட்டிய பிரதேசத்தில் வயல் வயல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வயல் ஒன்றின் வரப்பில் இரத்தக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாரின் விசாரணைகளின் படி உயிரிழந்தவர் வெனிவெல்பிட்டிய, ஹல்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.ethiri.com/?s=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Posted in இலங்கை செய்திகள்

சிறுவர்களால் வருடாந்தம் 5000 குற்றச்செயல்கள் பதிவு

சிறுவர்களால் வருடாந்தம் 5000 குற்றச்செயல்கள் பதிவு

இலங்கையில் வருடாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் செல்போன் பாவனையே இவ்வாறான பல குற்றச் செயல்களுக்கு வழிவகுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”இலங்கையில் வருடாந்தம் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் சுமார் 5,000 பதிவாவதாக இந்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

எமது நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள போதைப்பொருள் பிரச்சினையே.

சிறுவர்களால் வருடாந்தம் 5000 குற்றச்செயல்கள் பதிவு

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றுமொரு மிகப்பெரிய காரணி. இலங்கையில் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பதிவாகும் சிறுவர்கள் தொடர்பான குற்றங்கள் பற்றி எங்களுக்குத் தெரியும்.

கையடக்கத் தொலைபேசிகள் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு இட்டுச் செல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறியுள்ளது. இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைக்க நாம் முயற்சி எடுத்தால், பெற்றோர்கள் கண்டிப்பாக வீட்டில் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த வேண்டும்.” என அவர் குறிப்பிட்டார்.

வீடியோ

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலகுவேன்
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலகுவேன்

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலகுவேன்

எதிர்க்கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாகவும் இது குறித்து சபாநாயகருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார கூறினார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

பாராளுமன்றத்தில் தான் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில், தன் மீதும் தன்னுடைய குழுவை சேர்ந்த இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொய்யான

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலகுவேன்

குற்றசசாட்டுக்களை மறுப்பதாகவும், முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை விசாரணை செய்வதன் மூலம் அது நிரூபிக்கப்பட்டால் தான்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தாயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், என் மீது குற்றம் சுமத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதாரன, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக இனம்காணப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார கூறினார்

கைகளை கட்டி வாலிபனுக்கு வதை
Posted in இலங்கை செய்திகள்

கைகளை கட்டி வாலிபனுக்கு வதை

கைகளை கட்டி வாலிபனுக்கு வதை

கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி அடித்து, சித்திரவதை புரிந்ததுடன், பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பையொன்றினால் முகத்தை மூடி சித்திரவதை

புரிந்தனர் என, பொலிஸாரினால் சித்திரவதையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் இளைஞன் வைத்தியசாலையில் கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 25) எனும் இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (19) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் தான் இளைஞன் உயிரிழந்துள்ளார் என குற்றம் சட்டி வருகின்றனர்.

கைகளை கட்டி வாலிபனுக்கு வதை

அந்நிலையில், உயிரிழந்த இளைஞன் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது, தனக்கு நடந்த சித்திரவதை தொடர்பில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் ” என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கினார்கள்.

துணி ஒன்றினால் முகத்தினை மூடி கட்டி தண்ணீர் ஊற்றி தாக்கினார்கள். பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பை ஒன்றினை முகத்தில் போட்டு சித்திரவதை புரிந்தார்கள்.

பின்னர் எனக்கு குடிக்க மது தந்தார்கள். தாக்குதல்கள் சித்திரவதைகள் தொடர்பில் வெளியில் சொல்ல கூடாது என கடுமையாக என்னை மிரட்டினார்கள்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 6 உடற்பாகங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மனித புதைகுழி அகழ்வுபணி நாளை

மனித புதைகுழி அகழ்வுபணி நாளை

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (21) ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

அகழ்வுப்பணி தொடர்பாக இன்று (20) தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மனித புதைகுழி அகழ்வுபணி நாளை

அகழ்வு பணி நாளை காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருப்பதாகவும் புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது எனவும், இம்முறை

அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளதாகவும்.

இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாகவும் அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

வீடியோ

வெள்ளத்தில் மிதக்கும் ஹட்டன் டிக்கோயா photo in
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை

வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை

அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச

செயலகங்களுக்குட்பட்ட மஹா ஓயாவின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மஹா ஓயாவின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் சில பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மஹா ஓயா பகுதியில் பராமரிக்கப்படும் ஆற்று மானிகளின் நீர் மட்டப் ஆய்வு மற்றும் மழை நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அப்பகுதி மக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

வீடியோ

பிரிட்டனில் வட்டி வீதத்தை குறைக்க நடடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

யா​ழில் இடம்பெறும் பாரிய பண மோசடி

யா​ழில் இடம்பெறும் பாரிய பண மோசடி

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.

இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் மட்டும் இவ்வாறான பண மோசடி தொடர்பான 7 முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யா​ழில் இடம்பெறும் பாரிய பண மோசடி

அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து இரண்டரைக் கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்களே மோசடியில் ஈடுபடுகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் வட்ஸ் அப் குழுக்களில் காணப்படும் விளம்பரங்களை நம்பியே பெரும்பாலானவர்கள் மோசடியாளர்களிடம் சிக்கியுள்ளனர்.

மோசடியாளர்கள் போலியான விசா ஆவணங்களைக் காட்டி நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் இங்குள்ள உறவினர்களை அழைக்க முடியும் என்ற நடைமுறையைக் காட்டியும் பல மோசடிகள் நடந்துள்ளன.

முகவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் பல்வேறு காரணங்களைத் தெரிவித்து ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பணம் கோரியுள்ளனர்.

இதற்கான பணம் பல தடவைகள் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

யா​ழில் இடம்பெறும் பாரிய பண மோசடி

ஒரு கட்டத்தில் முகவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்பவர்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த மாதம் மட்டும் இவ்வாறான 10 முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் பதிவாகியுள்ளன.

சுமார் 6 கோடி ரூபா வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளமை இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறைப்பாட்டாளர்களும் பல லட்சங்களை மோசடியாளர்களிடம் இழந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களிலும், குழுக்களிலும் பகிரப்படும் விளம்பரங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும்,

பயண முகவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்டவர்களா என்பதைப் பொதுமக்கள் உறுதிப்படுத்திக்

கொள்வது அவசியம் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.