மனித புதைகுழி அகழ்வுபணி நாளை
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (21) ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.
அகழ்வுப்பணி தொடர்பாக இன்று (20) தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மனித புதைகுழி அகழ்வுபணி நாளை
அகழ்வு பணி நாளை காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருப்பதாகவும் புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது எனவும், இம்முறை
அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளதாகவும்.
இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாகவும் அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.
- தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை
- பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை
- ராமன்ன பிரிவின் பிரதி தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கப்பெட்டியகோட சிரிவிமல தேரர் காலமானார்
- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்
- அக்போ’ என்ற ஆண் யானையைக் கண்டுபிடிக்க சிறப்பு இராணுவக் குழு அனுப்பப்பட்டது
- அனைத்து நீதிமன்றத் தீர்ப்புகளையும் அரசாங்கம் பின்பற்றும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்
- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்

















