Tag: பொலிஸாரின்
பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்
பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்
பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் ,அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை, காரைதீவு, சாய்ந்தமருது, பெரிய நீலாவணை, உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக
வீரமுனை ,மருதமுனை, மண்டூர் , பகுதிகளிலும் அதிகளவான வீடு உடைத்து நகை, பணம் திருடுதல் மற்றும் மோட்டார் சைக்கிள் காணாமல் போன சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
குறித்த சட்டவிரோத சம்பவங்களில் வீடுகள் உடைத்து திருடும் சம்பவம் இரவு 1:00 மணிக்கும் அதிகாலை 4:30 மணிக்கும் இடையில் இடம்பெற்று வருவதுடன்
வீட்டின் ஜன்னல் கம்பிகள் மற்றும் ஓடுகள் பிரிக்கப்பட்டு வீட்டு உரிமையாளர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது இடம் பெறுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தவிர மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் சம காலங்களில் பல்வேறு பொலிஸ் நிலைய பகுதிகளிலும் அதிகரித்துள்ளன. பெரும்பாலும் பொது இடங்களில் தரித்து வைக்கப்பட்ட நிலையிலும் வயல் வேலை காரணமாக வீதி
ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியில் வைத்து விட்டு செல்லும் பொருட்கள் உள்ளிட்டவைகள் திருடப்பட்டு வருகின்றன.
மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் வைத்தியசாலை, பொதுச்சந்தை, நகரப் பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளமை சிசிடிவி காணொளிகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
எனவே இரவு நேரத்தில் வீட்டின் மறைவான இடங்களை பரீட்சித்து பெறுமதியான பொருட்களை பொதுமக்கள் பாதுகாப்பதுடன், வீட்டின் ஜன்னலுக்காக பொருத்தப்படும் கம்பியை உறுதியான வகையில் பொருத்தி
கொள்ளுமாறும், கூரை மின் விசிறி பயன்படுத்தும் வீடுகளில் அதிக திருட்டுகள் இடம்பெறுவதனால் அதிக சத்தம் இடும் இவ்வாறான மின் விசிறிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுள்ளனர்.
அத்துடன் பகல் நேரத்திலோ, இரவு நேரத்திலோ தேவையற்ற முறையில் சந்தேகத்திற்கிடமாக முகக்கவசம் மற்றும் தொப்பி அல்லது தலைக்கவசம்
அணிந்து நடமாடுபவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சட்டவிரோத செயற்பாடுகள் சம்பந்தமாக அவதானமாக இருப்பதுடன் சந்தேக நபர்கள் தொடர்பாக தகவல் ஏதேனும் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்தமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்
பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்
மதவாச்சி பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாகவே தனது மகனின் விரை சத்திரசிகிச்சை மூலம் அகற்ற நேரிட்டதாக அவரது தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும் இளைஞன் தாக்கப்படவில்லை என்றும், அவரைக் கைது செய்யச் சென்றபோது அவர் ஆக்ரோஷமாகச் செயல்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
அநுராதபுரம், மதவாச்சி துலாவெளி கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் கடந்த 7ஆம் திகதி தனது நண்பருடன் லொறியில் மதவாச்சி நகருக்குச் சென்றுள்ளார்.
இதன்போது லொறியின் பின்னால் துரத்திச் சென்ற மதவாச்சி பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் லொறியை நிறுத்தி தனது மகனையும் அவரது நண்பரையும் தாக்கியதாக இளைஞனின் தாய் தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் போது ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக தனது மகனின் விரைகளில் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தன்னையும் தனது நண்பரையும் கடுமையாக தாக்கியதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸாரிடம் வினவிய போது, இரண்டு இளைஞர்கள் பயணித்த லொறியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றதால் துரத்திச் சென்று கைது செய்ய நேரிட்டதாக தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் சட்டவிரோத மதுபானம் இருந்ததாகவும், பின்னர் வாகனத்தில் இருந்து அதனை வெளியே வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின் போது குறித்த இளைஞர் குடிபோதையில் இருந்ததாகவும் அவரிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த இளைஞனின் இடது விரை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.
Featured
பொலிஸாரின் கொடூர தாக்குதலில் யாழ் வாலிபன் மரணம்
பொலிஸாரின் கொடூர தாக்குதலில் யாழ் வாலிபன் மரணம்
வட்டுக்கோட்டை பொலிஸாரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் மரணம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், குறித்த இளைஞனின் சடலமானது பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பொலிஸார் 785 வழித்தட வீதியை முற்றாக வீதித்தடை மூலம் மூடி பயணிகளின் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு விளைவித்தனர்.
பொலிஸாரின் கொடூர தாக்குதலில் யாழ் வாலிபன் மரணம்
இதனால் பயணிகள் சுற்றுப்பாதையை பயன்படுத்தி மிகவும் கடினத்தின் மத்தியில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஐந்து பொலிஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கடமையில் அமர்த்தப்பட்டு
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் வீதியால் செல்பவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரை கேவலமாக திட்டி விட்டு, எச்சில் உமிழ்ந்து விட்டு செல்வதை அங்கு அவதானிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






















