Posted in உலக செய்திகள்

கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது


கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது.

காசர்கோடு அருகே கும்பலா பகுதியில் இருந்து வளைகுடா நாட்டில் பணிபுரிந்த நபர் கடந்த மாதம் முதல் வாரம் கேரளா திரும்பினார்.

அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆனது.

அவர் மூலம் அந்த நபரின் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கணவன் -மனைவி இருவரையும் பரியராம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் -மனைவி இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கணவரை வீட்டுக்கு அனுப்பிய டாக்டர்கள், அவரது மனைவிக்கு பிரசவ நேரம் நெருங்கியதால் அவரை மட்டும் ஆஸ்பத்திரியில் தங்க வைத்தனர்.

நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை நல்ல உடல் நலத்துடன் 3 கிலோ எடையுடன்

காணப்பட்டது. தற்போது காயும், சேயும் ஆஸ்பத்திரியில் நலமுடன் இருப்பதாக அவருக்கு பிரசவம் பார்த்த அரசு டாக்டர்கள்

தெரிவித்தனர். கொரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருப்பது கேரளாவில் இதுவே முதல் முறை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பெண் கடந்த 10-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்தநிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டதால் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு கரூரைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர்

அல்லது உறவினர்களிடம் இருந்து நோய் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது.

Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் கொரானாவுக்கு 561 பேர் பலி -132,591 பேர் பாதிப்பு

பிரான்சில் கொரானாவுக்கு 561 பேர் பலி -132,591 பேர் பாதிப்பு

பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 561 பேர் பலியாகியுள்ளனர்

இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 14,393 பேர் பலியாகியுள்ளனர்


இன்று மட்டும் புதிதாக 2,937 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
132,591 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களில் 6,845 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்

இவ்விரு பாதிக்க பட்டவர்கள் வரும் நாட்களில் மரணிக்க கூடும் என அஞ்ச படுகிறது ,தொடர்ந்து

மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு

தொடர்கிறது ,அத்துமீறி வெளியில் உலவுகின்றவர்களுக்கு தண்டம் அறவிட படுகிறது

பிரான்சில் கொரானாவுக்கு
பிரான்சில் கொரானாவுக்கு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு உதவும் இராணுவம்

யாழில் மக்களுக்கு உதவும் இராணுவம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலும் நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக யாழ்

மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை

விநியோகிப்பதற்கு யாழ் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகளுக்கு

யாழ் பாதுகாப்புப்படை தலைமையகத்தில் உள்ள படையினர் உதவி அளித்தனர்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி உதவி பெறுவோர், சிறுநீரக

நோயாளர்கள், அங்கவீனமுற்றோர், சிரேஷ்ட பிரஜைகளுக்கான உதவி பெறுவோர்

ஆகியோருக்கு நிவாரண நிதியுதவியினை பகிர்ந்தளிக்க படையினரால் உதவியளிக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் இத்திட்டத்தின் ஊடாக நிதி உதவியைப் பெற்றுக் கொடுக்குமாறு

யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரிவுகள், பிரிகேட்கள், மற்றும் இராணுவ முகாம்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு படை கட்டளைத்

தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப அரச அதிகாரிகளினால் அங்கீகரிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு இத்திட்டத்தின்கீழ் ரூ. 5000 வழங்கப்படவுள்ளது.

அரசு அதிகாரிகளுடன் இணைந்து படையினரும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கு வீடு வீடாகச் சென்று

வினியோக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மக்களுக்கு உதவும்
யாழில் மக்களுக்கு உதவும்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 203 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 203 பேர் பாதிப்பு

இலங்கையில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 203 பேர்

பாதிக்க பட்டுள்ளனர் .ஏழுபேர் பலியாகியுள்ளனர் .

மேலும் பதின் மூன்றாயிரத்துக்கு மேற் பட்டவர்கள் நோயின்

சந்தேகத்தில் தனிமை படுத்த பட்டுள்ளனர்


மேலும் தனிமை பட்டவர்கள் தொடர்பில் அவர்க்ளின் தற்கால நிலைகள்

தொடர்பில் ஆராய்வதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு

இலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு

புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயினால் மரணிப்பவரின் பூதவுடல் ,

தகனம் செய்யப்பட வேண்டிய முறை தொடர்பில், விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர். பவித்ரா வன்னியாரச்சியினால்

வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியில் குறிப்பிபடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு

அமைய தகனம் செய்யப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனாவால்
இலங்கையில் கொரோனாவால்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழர் சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழர் சடலமாக மீட்பு

இலங்கை கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் தமிழர் ஒருவர் இறந்த நிலையில் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார்

இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற இவர் மீள திரும்பவில்லை ,தற் பொழுது சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவர் அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் இவ்விதம் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்

ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்ய பட்டுள்ளார் .

போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

கிளிநொச்சியில் அடித்து
கிளிநொச்சியில் அடித்து

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

கொரனோவில் இருந்து பிரிட்டன் பிரதமர் குணமாகி வீடு சென்றார்

கொரனோவில் இருந்து பிரிட்டன் பிரதமர் குணமாகி வீடு சென்றார்

பிரிட்டன் பிரதமர் போரில் ஜோன்சன் கொரனோ நோயின் ஆபத்தில்

இருந்து விடு பட்டு தற்போது மருத்துவ மனையில் இருந்து வீடு சென்றுள்ளார்

இவரை இவரது குடும்பத்தினர் வரவேற்பு வழங்கி அழைத்து சென்றனர் .


சாவின் விளிம்பில் இருந்து இவர் மீண்டு மீள் பிறப்பு எடுத்து வீடு திரும்பியுள்ளதாக

குடும்ப உறவினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்,இவர் வீடு சென்றது

மக்களுக்கு பெரும் ஆறுதலை வழங்கியுள்ளதாக சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துக்கள் பகிர பட்டு வருகின்றன

கொரனோவில் இருந்து
கொரனோவில் இருந்து
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 710பேர் பலி

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் பேர் பலி

பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்து நான்கு மணித்தியாத்தில் 710

பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு எண்னிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது .

மேலும் இதுவரை இந்த நோயினால் பாத்திக்க பட்டு67,000சிகிச்சை பெற்று வருகின்றனர் ,


ஸ்பெயினில் இன்று 366 பேர் பலியாகியுள்ளனர் .அதுபோல நெதர்லாந்தில் 94 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை 2,737 ஆக அதிகரித்துள்ளது ,25,587 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அமெரிக்காவில் 533,115 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இருபதாயிரம் பேர் வரை மரணம் அடைந்துள்ளனர்

பிரான்சில் 129,654 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதுவரை 13,832 பேர் மரணமடைந்துள்ளனர் ர் ,

இத்தாலியில் 152,271 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இங்கும் இதுவரை 19,468 பேர் பலியாகியுள்ளனர்

அதிக உயிர் பலி இடம் பெற்ற நாடாக அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது, இங்கே தான் அதிக தொற்றுக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர்

பிணங்களை வைப்பதற்கு இடம் இன்றி அரசு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது,இதே நிலை பிரிட்டனிலும் தொடர்கிறது

பணிக்கு செல்ல மருத்துவ ஊழியர்கள் மறுத்து வருகின்றனர் ,பிரிட்டன் சுகாதார மந்திரி மன்னிப்பு கேட்ட பொழுதும் ஊழியர்கள்

அதனை ஏற்க மறுத்து வருகின்றனர் ,அரசிடம் பொருட்கள் இல்லாததே இதற்க்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் கொரனோ
பிரிட்டனில் கொரனோ
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் அபாயம் -தீர்ந்த கொரனோ சாதனங்கள் – வேலைக்கு செல்ல மறுக்கும் மருத்துவ ஊழியர்கள்

பிரிட்டனில் அபாயம் -தீர்ந்த கொரனோ சாதனங்கள் – வேலைக்கு செல்ல மறுக்கும் மருத்துவ ஊழியர்கள்

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக PPE ,


முக கவசங்கள் ,கையுறைகள் ,மற்றும் கொரனோவின் முன் தடுப்பு பாதுகாப்பு பொருட்கள் முடிவுற்றுள்ள நிலையில் மருத்துவ

தாதிமார்கள் ,மருத்துவர்கள் ,மற்றும் அம்புலன்ஸ் சாரதிகள் போன்றவர்கள பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர் .

இவ்வாறு பலநூறு ஊழியர்கள் பணிக்கு செல்ல மறுத்து வீட்டில் தங்கியுள்ளனர் ,தமக்கு உரிய பாதுகாப்பு அங்கிகள் ,கவசங்கள்

இல்லாத நிலையில் தாம் ஆபத்தான நோயாளர்களுடன் பணியில் ஈடுபட முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்

விரைவாக வினியோகத்தை மேற்கொள்ளும் படி கேட்ட பொழுதும் ,குறித்த பொருட்களுக்கு தட்டு பாடு நிலவுவதால் அரசிடம்

சேமிப்பில் ஏதும் இல்லை ,அதனால் தற்பொழுது பேராபத்து நீடிக்கிறது

இதனால் மக்கள் பெரும் பீதியில் , உறைந்துள்ளனர் ,நோயால் பாதிக்க படுபவர்களுக்கு பனடோல் மாத்திரைகளே வழங்க படுகின்றன ,

எனினும் இந்த மாத்திரைகளினால் எவ்வித பயனும் இல்லை எனவும் மருத்துவமனை செல்லும் நோயாளர்கள் அங்கேயே இறக்கும் நிலை

ஏற்படுவதாக பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழர்கள் ,தமது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்

எனவே மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,அரசு இதனை தொடர்ந்து கூறிய வண்ணம் உள்ளது

பிரிட்டனில் அபாயம்
பிரிட்டனில் அபாயம்
https://www.youtube.com/watch?v=6E4d3ZSTw9s
Posted in இலங்கை செய்திகள்

கொரானாவுக்கு பிரான்சில் தமிழ் குடும்ப பெண் பலி -பிள்ளைகள் தப்பினர்

கொரானாவுக்கு பிரான்சில் தமிழ் குடும்ப பெண் பலி -பிள்ளைகள் தப்பினர்

பிரான்சில் இளம் குடும்ப பெண் ஒருவர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நேற்று மரணமாகியுள்ளார்


மூன்று பிள்ளைகளின் தயார் இவ்வாறு பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
தனிமை படுத்தலுக்கு தன்னை உட்படுத்தி கொண்ட பின்னர் மருத்துவமனைக்கு சென்ற பொழுதே அங்கு மரணமாகியுள்ளார்

இவர் யாழ்ப்பாணம் சிறுபிட்டியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது .


இவரது பிள்ளைகளும் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருந்த பொழுதும் அவர்கள் தெய்வாதீனமாக அந்த நோயின் தாக்குதலில் இருந்து தப்பித்து கொண்டனர்

இதுவரை பிரான்சில் பத்து தமிழர்கள் பலியாகியுள்ளனர் ,இதில் விடுதலை

புலிகளின் முக்கியஸ்தர் மனைவியும் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

கொரானாவுக்கு பிரான்சில்
கொரானாவுக்கு பிரான்சில்
Posted in உலக செய்திகள் முக்கிய செய்திகள்

கொரனோ வேளை கொண்டாட்ட நிகழ்வு- உள்ளே புகுந்து மக்களை சூட்ட நபர் -பலர் காயம்

கொரனோ வேளை கொண்டாட்ட நிகழ்வு- உள்ளே புகுந்து மக்களை சூட்ட நபர் -பலர் காயம்

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளனர் ,


பல நண்பர்கள் உறவினர்கள் இணைந்தும் இந்த கலியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர் .

இதனை அவதானித்த நபரை ஒருவர் துப்பாக்கியை எடுத்து சென்று அந்த

பாட்டியில் கலந்து கொண்டவர்கள் மீது திடீர் துப்பாக்கிக்கு சூட்டை நடத்தினார்

இதில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,


கொரனோ நோயால் மக்கள் பல்லாயிர கணக்கில் இறந்த வண்ணம் இருக்க ,

உங்களுக்கு கொண்டாட்ட நிகழ்வா தேவை என கத்தியவாறே சுட்டு தள்ளியுள்ளார் இந்த மனிதர்

மக்களை வீடுகளை விட்டு வெளியி செல்ல வேண்டாம் எனவும் ,ஒன்று

கூட வேண்டாம் என அரசு பலமுறை வேண்டுதல் விடுத்து வந்த பொழுதும்

அதனை செவிமடுக்காது அலட்சியம் செய்து மக்கள் இவ்வாறான குதூகல

நிகழ்வுகளை வைத்து வருவது குறிப்பிட தக்கது, இப்போ சொல்லுங்க இந்த நபர் செய்த செயல் சரியா ..? தவறா ..?

கொரனோ வேளை
கொரனோ வேளை
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

கொரனோவால் 108,000 பேர் பலி – 17 லட்சம் பேர் பாதிப்பு

கொரனோவால் 108,000 பேர் பலி – 17 லட்சம் பேர் பாதிப்பு

உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி இதுவரை ஒரு லட்சத்து எட்டாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் பதினேழு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இந்த நோயால் அதிகம் பாதிக்க பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம்

பிடித்துள்ளது ,இங்கு இதுவரை இரு பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,நான்கு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதனையே அடுத்து இத்தாலி ,பிரான்ஸ்,ஸ்பெயின் ,பிரிட்டன் இடம் பிடித்துள்ளது ,

தொடர்ந்து உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் செல்கின்றன

கொரனோவால்
கொரனோவால்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் தனிமை படுத்த பட்ட 67 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

கொரனோவால் தனிமை படுத்த பட்ட 67 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

இலங்கையில் கொரனோ நோயின் சந்தேகத்த்தில் கைது செய்ய பட்டு தனிமை

படுத்த பட்ட சுமார் அறுபத்தி ஏழுபேர் இன்று அவர் தம் குடும்பத்துடன் மீள இணைவதற்கு விடுவிக்க பட்டுள்ளனர் .

தியத்தலாவ இராணுவ முகாமில் தடுத்து வைக்க பட்டவர்களே இவ்விதம்

விடுதலை செய்ய பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது

கொரனோவால் தனிமை
கொரனோவால் தனிமை
Posted in இலங்கை செய்திகள்

சிங்கப்பூர்,டோகாவில் தவித்த இலங்கையர்கள் நாடு வந்தனர்

சிங்கப்பூர்,டோகாவில் தவித்த இலங்கையர்கள் நாடு வந்தனர்

சிங்கப்பூர் மற்றும் டோகாவின் விமான நிலையங்களில் தவித்து கொண்டிருந்த

14 இலங்கையர்கள் இவர்களுடன் மேலும் முப்பது பேர் கடந்த இரவு கட்டு நாயகக் விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்

இவ்வாறு வருகை தந்த அனைவரும் தனிமை படுத்த பட்டு கொரனோ

சோதனைக்கு உள்ளாக்க படவுள்ளனர் என தெரிவிக்க படுகிறது

சிங்கப்பூர் டோகாவில் தவித்த
சிங்கப்பூர் டோகாவில் தவித்த
Posted in உலக செய்திகள்

நான் சாக போகிறேன் பிள்ளைகளுடன் இறுதியாக கதைத்த தாய் -கொரனோவால் மரணம்

நான் சாக போகிறேன் பிள்ளைகளுடன் இறுதியாக கதைத்த தாய் -கொரனோவால் மரணம்

பாகிஸ்தானை சேந்த பத்தொன்பது வயதுடைய தாய் ஒருவர் கொரனோ

நோயால் பாதிக்க பாட்ட நிலையில் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார் ,

ஸ்கைப்பில் பிள்ளைகளுடன் உரையாடிய இவர் தான் திரும்பி வரமாட்டேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் .

இவ்வாறு அவர் கூறியதற்கு கணவன் ,பிளளைகள் பேசியுள்ளனர்

ஆனால் அவர் கூறியது போலவே திங்கட்கிழமை மரணமானார்

குறித்த பெண்ணின் இந்த உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில்

வைரலாகி வருகிறது ,

சீன அந்நாட்டு விமானத்தை இவர் பயன் படுத்தியதால் இந்த நோயானது பரவியதாக

கணவன் தெரிவித்துள்ளார் கொரனோ நோயினால் பாதிக்க பட்டவர்கள் மன உணர்வுகள்

அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பது இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன

நான் சாக போகிறேன்
நான் சாக போகிறேன்
Posted in இலங்கை செய்திகள்

இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது

இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை பயன் படுத்தி மாடுகளை இறைச்சிக்காக

கொண்டு சென்ற நபர்கள் காவல் துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது என்ற அனுமதி பத்திரத்தை

பயன் படுத்தி பசு மாடுகளை வெட்ட சென்ற வேளையை இந்த கைது இடம் பெற்றுள்ளது

இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது
இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு கண்டி ,யாழ்ப்பாணத்திற்கு தொடர்ந்து அமுலில்

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா,

களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 16 காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் காலை 06.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு

சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 04.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும்.

இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 14 செவ்வாய் காலை 06.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 04.00 மணி

முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிரப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள்

மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும்

கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்

கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்வது அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற

பயணங்களை தவிர்க்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் புத்தாணடு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும்

தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம்

செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை

வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக

வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி

பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள

பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு

உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மே 11 பாடசாலைகள் ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவுவதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தொடர்ந்தும்

முன்னெடுத்து பாடசாலை பிள்ளைகளை பாதுகாப்பதற்காக இவ்வாறு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நடைபெறாத காலப்பகுதியில் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை

மேற்கொள்வதற்கு தொலை கல்வி வசதிகளை முடியுமானளவு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் திகதி தற்போதைய நிலைமைகளை மீளாய்வு செய்து பல்கலைக்கழக

அதிகாரிகளினதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும்

இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்குமாறு உயர் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மே 11
இலங்கையில் மே 11
Posted in பிரித்தானிய செய்தி வினோத வீடுப்பு

லண்டனில் கொரனோ – வீதியில் நடமாடும் மக்கள் – தண்டம் வழங்கும் பொலிஸ்

லண்டனில் கொரனோ – வீதியில் நடமாடும் மக்கள் – தண்டம் வழங்கும் பொலிஸ்

பிரிட்டனில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள் என அரசு வேண்டுதல் விடுத்து வருகிறது ,


அதனை அலட்சியம் செய்து மக்கள் சிறுவர்களுடன் பார்க்கில் ,குந்தி உள்ளதும் ,உடல் பயிற்சிகள் செய்வதும்
இயல்பான ஒன்றாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

நாள் தோறும் பல நூற்று கணக்கில் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .அந்த செய்திகளை எல்லாம் பார்வையிட்டு இந்த மக்கள்

தமக்கு ஒன்றும் தெரியாதது போல இவ்விதம் இயல்பாக நடமாடி வருவது
பார்ப்பவர்களை கொதிக்க வைக்கிறது

வரும் நிமிடம் யார் உயிரோடு இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மக்கள் இவ்விதம் செயல் படுவதை என்னவென்று கூறிட ..?

மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,மக்களை காப்பாற்றும் மருத்துவர்கள் இறந்தவண்ணம் உள்ளனர் ,
நாடு பெரும் அவலத்தில் சிக்கி தவிக்கிறது

மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடுமென அபாய அறிவிப்புக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது


இவ்வாறான சூழலில் இந்த மக்கள் இவ்விதம் நடந்து கொள்வது ,மனித

மனங்களின் சிந்தனைகள் மீது சீற்றம் கொள்ள வைக்கிறது அல்லவா ..?

லண்டனில் கொரனோ
லண்டனில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

இன்று பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோவால் பலி

இன்று பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோவால் பலி

பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று யாழ்பாணத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் பலியாகியுள்ளனர் .

இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 14 நாட்களுக்கு மேற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர்களும் இதில் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு இறந்தவர்களில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களாவர்கள் .

இதுவரை பிரிட்டனில் பத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர் ,ஐரோப்பா தழுவிய நிலையில் தமிழர்கள்

தொடராக பலியாகிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது

இதில் இருவர் தமிழர் கடைகளில் பணிபுரிந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது

அரசு தொடர்ந்தும் மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரித்து வருகின்றது

இன்று மட்டும் சுமார் 917 பேர் பலியாகியுள்ளதும் ,ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளமையும் குறிப்பிட தக்கது

மேலும் பிரிட்டன் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

இன்று பிரிட்டனில் மூன்று
இன்று பிரிட்டனில் மூன்று