Tag: இலங்கையில் மே 11
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் மே 11 பாடசாலைகள் ஆரம்பம்
Author: நலன் விரும்பி Published Date: 12/04/2020 Leave a Comment on இலங்கையில் மே 11 பாடசாலைகள் ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவுவதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தொடர்ந்தும்
முன்னெடுத்து பாடசாலை பிள்ளைகளை பாதுகாப்பதற்காக இவ்வாறு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நடைபெறாத காலப்பகுதியில் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கு தொலை கல்வி வசதிகளை முடியுமானளவு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் திகதி தற்போதைய நிலைமைகளை மீளாய்வு செய்து பல்கலைக்கழக
அதிகாரிகளினதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும்
இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்குமாறு உயர் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.







