இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்
Posted in இலங்கை செய்திகள்

லொறி, ஆட்டோ நேருக்கு நேர் மோதால் ! மூவர் பலி

லொறி, ஆட்டோ நேருக்கு நேர் மோதால் ! மூவர் பலி

வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் வருணகம

பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

லொறி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று (10) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள்தாக தெரிவிக்கப்படுகிறது.

      Posted in இலங்கை செய்திகள்

      புதுக்குடியிருப்பில் மனித எலும்பு கூடுகள் மீட்பு – அச்சத்தில் மக்கள்

      புதுக்குடியிருப்பில் மனித எலும்பு கூடுகள் மீட்பு – அச்சத்தில் மக்கள்

      தமிழர் பகுதியாக விளங்கும் புது குடியிருப்பு பகுதியில் மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்க பட்டன .

      சம்பவ இடத்திற்கு விரைந்த நீதவான் லெனின் குமார் அதனை பார்வையிட்டு விசாரணைக்கு உத்தரவிடடார்

      போர்க்காலத்தில் புதைக்க பட்ட மனித உடலா ,அல்லது காணாமல் போனவர்

      இவ்விதம் எலும்பு கூடாக கண்டு பிடிக்க பட்டனரா என்பது தொடர்பில் போலீசாரை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          கொலண்ட் Amsterdam-London க்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்

          கொலண்ட் Amsterdam-London க்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்,Amsterdam-London க்கு நேரடி ஈரோ ஸ்டார் ரயில் சேவை இந்த வருடம் முதல் நேரடியாக ஆரம்பிக்க படவுள்ளது

          இதற்கான ஒப்பந்தத்தில் பிரிட்டன் நெதர்லாந்து அரசுகள் கைச்சாத்திட்டுள்ளன

          விரைவில் பிரான்ஸ் லண்டன் சேவைகள் போல இந்த சேவைகள் இடம்பெறவுள்ளன

          இவ்விதம் ரயில் சேவைகள் ஆரம்பிப்பதல் அதிக உல்லாச பயணிகள் விரைவாக வந்து செல்ல இலகுவாக இருக்கும் என கருத்துரைக்க பட்டுள்ளது

          லண்டன் ,நெதர்லாந்து மக்களுக்கு இது மிக பெரும் மகிழ்ச்சியான செய்தியாகும்

          கொலண்ட் Amsterdam-London
          கொலண்ட் Amsterdam-London
              Posted in இலங்கை செய்திகள்

              அவுஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கொன்சியுலர் ஜெனரல்- பிரதமர் இடையிலான சந்திப்பு

              அவுஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கொன்சியுலர் ஜெனரல்- பிரதமர் இடையிலான சந்திப்பு

              அவுஸ்திரேலியாவின் சிட்னி, நிவ் சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லண்ட் ஆகிய மாநிலங்களுக்கான இலங்கையின்

              கொன்சியுலர் ஜெனரலாக லக்ஷ்மன் ஹுணுகல்லே நியமிக்கப்பட்டுள்ளார்.

              அவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி, நிவ் சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லண்ட் ஆகிய மாநிலங்களுக்கான இலங்கையின்

              கொன்சியுலர் ஜெனரலாக கடமையை பொறுப்பேதற்காக புறப்பட்டு செல்வதற்கு முன்னர் நேற்று(2020.07.08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

              லக்ஷ்மன் ஹுணுகல்லே தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் (MCNS) பணிப்பாளர் நாயகமாகவும், அரச சார்பற்ற

              நிறுவனங்கள் தொடர்பான செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், தேசிய கால்நடை அபிவிருத்தி

              சபையின் (NLDB) உப தலைவராகவும், இலங்கை கொமர்ஷல் வங்கியின்

              பணிப்பாளராகவும், வோடர்ஸ் எட்ஜ் (Waters Edge) ஹோட்டலின் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர் ஆவார்.

              அவுஸ்திரேலியாவின்
              அவுஸ்திரேலியாவின்
                  Posted in இலங்கை செய்திகள்

                  பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் நிறத்தை பயன்படுத்த திட்டம்

                  பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் நிறத்தை பயன்படுத்த திட்டம்

                  பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மஞ்சள் நிறத்தில்

                  இருப்பதை கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரயாணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

                  இதன்படி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை

                  எதிர்காலத்தில் மஞ்சள் நிறத்தில் மாத்திரம் இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                  ஏனைய வாகனங்கள் இந்த வாகனங்களை இலகுவாக இனங்கண்டு

                  கொள்ளும் வகையில் இவ்வாறு மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படும்.

                  அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த யோசனைக்கு பொலிஸ் அதிகாரிகளும்

                  மாணவர்களை ஏற்றிச் செல்லும் சங்கங்களின் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      ஐந்தாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது

                      ஐந்தாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது

                      . இலங்கையில் சிக்கியிருந்த 153 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 0282) மூலமாக 2020 ஜூலை 08 ஆம் திகதி கொழும்பிலிருந்து டில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கொவிட்19

                      காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு

                      அனுப்புவதற்கான, இந்திய அரசின் ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தினுடைய நான்காவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                      1. இலங்கையிலிருந்து அடுத்த விசேட விமானம் ஏர் இந்தியா AI 0282 கொழும்பிலிருந்து டில்லிக்கு 2020 ஜூலை 18 ஆம் திகதி பயணிக்கவுள்ளது.
                      2. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்திருந்த இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள், அப்பயணிகளின் பாதுகாப்பான
                      3. பயணத்துக்காக வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார். இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகளை சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் இலங்கை
                      4. அரசாங்கத்தினதும் மக்களினதும் ஒத்துழைப்புக்காகவும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
                      5. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட
                      6. பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில்
                      7. இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர்
                      8. , கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர்
                      9. மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்குவெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை
                      10. அமைச்சினால் வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டுமுறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.
                      11. கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்த நாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை
                      12. வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை, 2020 மே 29, ஜூன் 15, ஜூன் 22 மற்றும்
                      13. ஜூலை 03 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட ஏர் இந்திய விமான சேவைகள், ஏனைய பல விசேட விமான
                      14. சேவைகள் மற்றும் நேற்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 1600 க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
                      15. நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரும் இணையத்தளத்தில் பதிவு
                      16. செய்யுமாறு கோரப்படுகிறார்கள். https://hcicolombo.gov.in/COVID_helpline நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக
                      17. ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
                          Posted in இலங்கை செய்திகள்

                          கனடாவில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

                          கனடாவில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

                          வழங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இந்தியர் ஒருவர் பம்பலபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

                          நேற்று (01) மதியம் 1.30 மணியளவில் குறித்த நபர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                          32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

                          சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          ரிஷாட் பதியுதீன் CID இல் ஆஜர்

                          ரிஷாட் பதியுதீன் CID இல் ஆஜர்

                          முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை

                          வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

                          உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

                          ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              176 துப்பாக்கிகள் மீட்பாம் – இராணுவம்

                              176 துப்பாக்கிகள் மீட்பாம் – இராணுவம்

                              நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு வகையான 176 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                              2020.06.06 முதல் 2020.07.08 வரையான காலப்பகுதியிலேயே குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              அதனடிப்படையில் ரி 56 துப்பாக்கிகள் 11, ரி 81 ரக துப்பாக்கி ஒன்று, போரா 12 துப்பாக்கி 42, பிஸ்டல் 4, கல்கடஸ் 29, ரிபீடர் 74 மற்றும் வேறு வகை துப்பாக்கிகள் 15 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              இதன்போது 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கைக்கு ஜப்பான்1,400 மில்லியன் ரூபாய் நிதி உதவி

                                  இலங்கைக்கு ஜப்பான்1,400 மில்லியன் ரூபாய் நிதி உதவி

                                  கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிராக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதற்காக

                                  மருத்துவ சாதனங்களை பெற்றுக் கொள்ள 800 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 1,400 மில்லியன் ரூபாய்) தொகையை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

                                  இந்த நன்கொடை தொடர்பான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்

                                  எஸ்.ஆர்.ஆடிகல ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சில் நேற்று (08) இடம்பெற்றது.

                                  கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது, மனித குலத்துக்கு பெரும் ஆபத்தைத் தோற்றுவித்துள்ளதுடன், சமூகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

                                  இந்த அவசர மருத்துவ நிலையை கவனத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம், 2020 மார்ச் மாதம் முதல் ஜப்பானிய அரசாங்கத்தினால் மருத்துவ சாதனங்கள் மற்றும்

                                  தொழில்நுட்ப உதவிகள் போன்றன வழங்கப்பட்டவண்ணமுள்ளன. இந்த சவால் நிலையை கட்டுப்பாட்டினுள் பேணுவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உறுதியான

                                  தலைமைத்துவத்தை பாராட்டியதுடன், ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கையில் தொடர்ந்தும் மருத்துவ

                                  சேவைகளை வழங்குவதற்கு மேம்படுத்திப் பேணும் வகையில், உதவிகளை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                                  இந்த நன்கொடையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சாதனங்களில் MRI ஸ்கானர்கள், CT ஸ்கானர்கள், சிஸ்டம்கள் மற்றும் சென்ரல்

                                  மொனிடர்கள் போன்றன அடங்குகின்றன. இவை உடனடியாக கொவிட்-19 சிகிச்சைகள் வழங்கப்படும் தெரிவு செய்யப்பட்ட

                                  வைத்தியசாலைகளிலும், சிகிச்சை நிலையங்களிலும் பொருத்தப்படும்.

                                  இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால மற்றும் சுமூக உறவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், கொவிட்-19 பரவலை

                                  கட்டுப்படுத்துவது மாத்திரமன்றி, இலங்கையில் நிலைபேறான மருத்துவ கட்டமைப்பை உருவாக்குவதிலும் ஜப்பானிய அரசாங்கம்

                                  பங்களிப்பு வழங்கும். இது இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும்.

                                      Posted in உலக செய்திகள்

                                      டெல்லியை துரத்தும் கொரோனா: 3200-பேர் பலி

                                      டெல்லியை துரத்தும் கொரோனா: 3200-பேர் பலி

                                      டெல்லியில் ஒரே நாளில் 2,033 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.04 லட்சத்தைக் கடந்துள்ளது.

                                      டெல்லியை துரத்தும் கொரோனா: 3200-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை
                                      வெப்ப நிலையை பரிசோதிக்கும் ஊழியர்
                                      புதுடெல்லி:

                                      சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

                                      இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

                                      நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.20 லட்சத்தை தாண்டியுள்ளது.

                                      இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,033 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,04,864 ஆக

                                      அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 48 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,213 ஆக உயர்ந்துள்ளது.

                                      மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தைக் கடந்துள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

                                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                          லண்டனில் வீட்டின் மேலே வீழ்ந்த கிறையின் -ஒருவர் பலி -4 பேர் காயம்

                                          லண்டனில் வீட்டின் மேலே வீழ்ந்த கிறையின் -ஒருவர் பலி -4 பேர் காயம்

                                          இன்று கிழக்கு லண்டன் பகுதியில் மதியம் இரண்டு முப்பது மணியளவில்

                                          வீட்டின் கூரைகள் இடிந்து வீழ்ந்தன ,பதறி போன வீட்டு காரர்கள் ஒடி சென்று

                                          காடின் வழியாக பார்வை இட்டனர் ,அப்பொழுது சிவப்பு நிறத்திலான கிரேன் ஒன்று வீட்டின் மேலே வீழ்ந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது

                                          இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் .

                                          மேலும் நல்லவர் பாடுகாயமடைந்தனர்

                                          சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்புலனஸ் காயமடைந்தவர்களை மீட்டு சென்றது


                                          மீட்பு படையினர் கிரையினை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்

                                          மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              Stop Fighting Start Voting’ ஈழத்தமிழர்களுக்கும் பொதுவாக்கெடுப்பு கோரும் பன்னாட்டு இயக்கம்

                                              Stop Fighting Start Voting’ ஈழத்தமிழர்களுக்கும் பொதுவாக்கெடுப்பு கோரும் பன்னாட்டு இயக்கம்

                                              சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக ‘Stop Fighting Start Voting’ எனும் முழக்கத்துடன் ஜனநாயகத்துக்கான பன்னாட்டு பிரச்சார இயக்கமொன்று உலக மக்களின்

                                              உரிமைக்கான குரல்களில் ஈழத்தமிழர்களின் அரசியற் பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்தியுள்ளது.

                                              பிணக்கைத் தீர்க்க ஓர் அமைதியான வழியாக மக்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்தும் பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பினை முன்னிறுத்தி 60 விநாடிகள் ஒடும்

                                              காணொளிப் பரப்புரையில் ஹொங்காங் முதல் சிறிலங்கா வரை உள்ளடக்கப்பட்டுள்ளது. (https://vimeo.com/424953043 ) இதில்

                                              இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களின் நெடுநாளைய விடுதலைப் போராட்டத்தின் அரசியற் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்துகின்றது.

                                              அமெரிக்காவைத் தளமாக கொண்ட Citizens in Charge Foundation எனும் அறக்கட்டளையால் தொடங்கப்பெற்ற www.stopfightingstartvoting.org இவ்இயக்கத்தின் இந்த பிரச்சார முழக்கத்தில் பிரசித்தி பெற்ற பன்னாட்டு ஜனநாயக வல்லுநர்கள், ஆய்வாளர்கள், சட்டத்தரணிகள், அரசுசாரா அமைப்புகள், கல்வியாளர்கள், அமைப்புக்கள் என பலரும் இணைந்துள்ளனர்.

                                              Daniela Bozhinova, Chair, Bulgarian Association for the Promotion of Citizens Initiative; vice-president Democracy International / Paul Jacob, President, Citizens in Charge and Citizens in Charge Foundation / Bruno Kaufmann, Co-president, Global Forum on Modern Direct Democracy;

                                              president of the Initiative and Referendum Institute Europe; board member Democracy International / Joe Mathews, Co-president, Global Forum on Modern Direct Democracy; California journalist; Professor of practice,

                                              Arizona State University; board member Democracy International / John Matsusaka, Charles F. Sexton Chair in American Enterprise ,University of Southern California (USC); Professor of Finance and Business Economics,

                                              USC; Executive Director of Initiative and Referendum Institute, USC / Matt Qvortrup, Professor of Political Science, Coventry University / Dane Waters, Founder and Chair, Initiative and Referendum Institute, USC; board

                                              member Citizens in Charge Foundation; board member Democracy International / Dr. Yanina Welp, Research Fellow at the Albert Hirschman Centre on Democracy

                                              ORGANIZATIONS

                                              Bulgarian Association for the Promotion of Citizens Initiative, a non-governmental, non-profit organization, having 16 years of experience nationally and internationally in the area of democracy, democratic citizenship and human rights.

                                              Citizens in Charge Foundation, a non-partisan organization that works to protect, defend, and expand initiative and referendum rights.

                                              Initiative and Referendum Institute Europe, a European think-tank dedicated to research and education on procedures and practices of modern Direct Democracy.

                                              Initiative and Referendum Institute at the University of Southern California, a non-partisan educational organization dedicated to the study of the initiative and referendum process.

                                              உலகளவில் கொள்கை வகுப்பாளர்கள், இராஜதந்திரிகள் மட்டத்தில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தி வரும் (Citizens in Charge Foundation) இவ்வமைப்பு , இப்பிரச்சாரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

                                              ” சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக” என்ற பரப்புரை இயக்கம் நெடுங்காலமாகத் தீராமலிருக்கும் பிணக்குகளுக்கு அமைதிவழியில் தீர்வு காண்பதற்குதவும் முக்கியக் கருவியாக பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்தி

                                              தொடங்கப்பெற்றது. ஹொங்காங், கட்டலோனியா, தைவான் குறித்தும், சிறிலங்காவில் தமிழர்கள் குறித்தும் நீடித்து வருவன போன்ற பிணக்குகளுக்கு இவ்வழியில் தீர்வு கானலாம்’ என்று Citizens in Charge Foundation யின் தலைவர் பால் ஜேக்கப் கூறுகின்றார்.

                                              சண்டையிடுவதை நிறுத்துக வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கம் உலகெங்குமிருந்து பொதுவாக்கெடுப்பு பொறிமுறைக்கான வல்லுநர்களும் அமைப்புகளும் –

                                              ஆராய்ச்சியாளர்கள், சட்டத்தரணிகள், அரசுசாரா அமைப்புகள், கல்வியாளர்கள் – அளித்த ஆதரவுடன், இலாபநோக்கற்ற பொறுப்புக் குடிமக்கள் அறக்கட்டளையால் தொடங்கப்பெற்றது. இந்தப்

                                              பரப்புரை இயக்கமானது பிணக்குகளில் உள்ளோடும் சிக்கல்களில் ஆதரவு அல்லது எதிர்ப்பை எடுத்துரைப்பதில்லை. ஆனால் – முன்முயற்சிகள், பொது வாக்கெடுப்பு ஆகிய வடிவில் – நேரடி ஜனநாயகத்தைப் பயன்படுத்தி இந்தப் பிணக்குகளுக்கு அமைதித் தீர்வு காண முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறது. ஏற்புடைத்த பன்னாட்டு நெறிகள், நடைமுறைகளின்படி நேரடி ஜனநாயகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

                                              ‘நேரடி ஜனநாயகத்தின் பயன்பாட்டைப் பன்னாட்டளவில் அறிந்தேற்கப்பட்ட சட்ட வரையறைகளுக்குள் நடைமுறைப்படுத்தினால்தான் தேசங்களின் குழாம் அதனை மக்கள் விருப்பத்தின் முறையான வெளிப்பாடாக ஏற்றுக் கொள்ளும்’ என
                                              Bulgarian Association for the Promotion of Citizens Initiative இன் தலைவர் டேனியல் பொழினோவா குறிப்பிடுகின்றார்.

                                              சண்டையிடுவதை நிறுத்துக வாக்களிக்கத் தொடங்குக பரப்புரை இயக்கத்தைத் தொடங்கி வைக்கும் முகத்தான் 60 நொடி விளம்பரம் இன்று உலகெங்கும் சமூக மின்னியல் மேடைகளில்

                                              வெளியிடப்பட்டது. ஹொங்காங்கில் தீராதுள்ள சிக்கல், சிறிலங்காவில் தனியாகத் தமிழர் தாயகம் அமைத்தல் தொடர்பான சிக்கல் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இது செய்யப்பட்டது. பொது வாக்கெடுப்பின்

                                              துணைக்கொண்டு அமைதிவழியில் தீர்வு காண முடியும் என்னும் படியாக உலகெங்கும் நீடிக்கும் பிணக்குகளை அனைவரும் அறியச் செய்வதற்கான காணொலிகளையும் இவ்வியக்கம் தொடர்ந்து ஆக்கம் செய்து வெளியிடும்.

                                              ‘பிணக்கும் பூசலும் உலகில் நிறைந்துள்ளன. குருதி சிந்தச் செய்யும் சண்டை மட்டுமன்று, பிரிவினையைக் கூடுதலாக்கும் சொற்களாலும் செயல்களாலும் சண்டையிடுவதும் கூட இந்தப் பிணக்குகளின் தீர்வுக்கு வாய்ப்பில்லாமற் செய்து விடும்.

                                              சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக என்னும் இந்தப் பரப்புரை இயக்கத்தில் பொதுவாக்கெடுப்பு பொறிமுறைக்கான வல்லுநர்கள் ஒன்றுபட்டு, இந்தப்

                                              பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நெறிமுறைசார்ந்த அமைதிப் பாதை பற்றிய விழிப்புணர்வை வளர்க்கத் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள் – பொதுவாக்கெடுப்பினை பயன்படுத்தி வாக்களிப்பதே அந்த வழி’ என்றார் தென் கலிபோர்னியா

                                              பல்கலைக் கழகத்தில் முன்முயற்சி மற்றும் பொதுவாக்கெடுப்புக் கழகத்தின் தலைவராக இருக்கும் (Founder and Chair, Initiative and Referendum Institute, USC; board member Citizens in Charge Foundation; board member Democracy International) டேன் வாட்டர்ஸ் கூறுகின்றார்.

                                              நேரடி ஜனநாயகத்தை மேம்படுத்துவது

                                              நேரடி ஜனநாயகத்தின் கருவிகளை மேம்படுத்துவதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ அல்லது பன்னாட்டளவில் ஏற்புடைய நெறிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரண்பாடான

                                              விதத்தில் அவற்றைப் பயன்படுத்துவதற்கோ உலகெங்கும் நடக்கும் முயற்சிகள் குறித்தும் விழிப்புணர்வைக் கூடுதலாக்க இந்தப் பரப்புரை இயக்கம் பாடுபடும்.

                                              இன்று ருமேனியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு முன்மொழியப்படுகிறது. ஆனால் அதற்கான விதிகளும் நெறிமுறைகளும் அதன் பயனுடைமைக்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லாமற்செய்யும் வகையில் உள்ளன. இந்தப் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதில் அது யாருக்குப் பெரிதும்

                                              தேவைப்படுகிறதோ அந்தக் குடிமக்களின் கைக்கு எட்டாத படி செய்து விடுகின்றன. மேலும், இப்போது சில பொதுவாக்கெடுப்புகளுக்கு எடுத்துக்காட்டாக றஸ்யாவில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது; ஆனால் பொதுவாக்கெடுப்பின் முடிவுகளை முறையானவை ஆக்கும்படியான வரன்முறைகளுக்குள் அது நடத்தப்பட அதிக வாய்ப்பில்லை.

                                              ‘இந்தச் சிக்கல்கள் மீது வெளிச்சம் படர நாம் உதவ வேண்டும் இவ்வழியில் பொதுவாக்கெடுப்பின் அந்தக் குறிப்பான வடிவம் அல்லது அதன் பயன்பாடு பன்னாட்டளவில் ஏற்புடைத்த நெறிமுறைகள், நடைமுறைகளின் அடிப்படையில்

                                              முறையானதுதானா என்று தீர்மானிக்கும் போது என்ன தேடுவது என்பது ஊடகங்களுக்கும் கருத்து வழிகாட்டிகளுக்கும் மக்களுக்கும் தெரிந்திருக்கும்’ என்றார் கொவெண்ட்ரி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் மட் க்வோர்ட்ரப்.

                                              சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இந்த இயக்கம் உலகெங்கிலுமிருந்து பொதுவாக்கெடுப்புக்கான வல்லுநர்களும் அமைப்புகளும் அடங்கிய ஓர் அறிவுரைக் குழுவை அமைத்துள்ளது. இந்த இயக்கம் குறித்தும் நேரடி ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளில் சில:

                                              ‘ஜனநாயகம் என்பது தொடர்சியான உரையாடல் ஆகும். இவ்வாறான உரையாடல்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியலமைப்புகளைக் கொண்ட நாடுகள் நிரந்தரமாக மோதல் வளர்க்கும் நாடுகளைக் காட்டிலும் சிறந்து விளங்குகின்றன. ஆகவே, குடிமக்களின் முன்முயற்சிகள், மக்கள்சார் பொதுவாக்கெடுப்புகள் போன்ற நவீன கால பொதுவாக்கெடுப்பு வடிவங்கள் எப்படி வார்க்கப்பட வேண்டும் என்றால், அவை பிறர் தலையில் ஓங்கியடிக்கும் முரட்டுச் சம்மட்டிகளாக இல்லாமல் சிக்கல்களைப் பொருத்திக் காட்டும் திறமான திருப்புளிகளாக வார்க்கப்பட வேண்டும். உரையாடல்கள் பெருகுவதும் மோதல்கள் அருகுவதும் இன்றைய உலகின் தேவை. சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக’ என்றார் நவீன கால நேரடி ஜனநாயகம் பற்றிய உலக மன்றத்தின் இணைத் தலைவர் புருனோ காஃப்மன்.

                                              ‘ஜனநாயகம் என்பது தமது வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் பொது முடிவுகளை எடுப்பதில் மக்களுக்குப் பங்கிருக்க வேண்டும் என்ற எளிய கருத்தாகும். பிணக்குகளுக்கு அமைதியாகவும் நியாயமாகவும் தீர்வு காண்பதற்கு இது வரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் ஆகச் சிறந்த ஏற்பாடு ஜனநாயகமே ஆகும். ஜனநாயகத்தின் திறமிகு கருவிகளில் இரண்டாகிய முன்முயற்சி பற்றியும் பொதுவாக்கெடுப்பு பற்றியும், முகன்மையான முடிவுகளில் மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் செய்தி பரப்புவதே இந்த இயக்கத்தின் நோக்கம்’ என்றார் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அமெரிக்க முனைவின் தலைவரும், தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்முயற்சி மற்றும் பொதுவாக்கெடுப்புக் கழகத்தின் செயல் இயக்குநருமாகிய சார்லஸ் எஃப். செக்ஸ்டன்.

                                              ‘அரசியலின் மாற்றியமைக்கும் வல்லமை குறித்து நம்பிக்கையின்மை வளர்ந்து வரும் சூழலில், பிரதிநிதிகளின் அதிகாரத்துக்கு வரம்பிடவும் மக்களுக்குதவாத முடிவுகளை இழுத்துப் பிடிக்கவும் கொள்கை வகுப்பின் செயல்நிரலைத் திறக்கவும் பொதுவாக்கெடுப்பு கருவிகள் உதவ முடியும். ஆனால் நேரடிப் பங்கேற்புக் கருவிகளின் ஒழுங்காறும் நடைமுறையும் பன்னாட்டளவில் ஏற்புடைத்த நெறிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உடன்பட்டிருக்க வேண்டும். சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இந்த இயக்கம் இத்துணை முகன்மையாவதன் காரணம் இதுவே’ என்றார் ஆல்பர்ட் ஹிர்ஷ்மன் மையத்தைச் சேர்ந்த யனினா வெல்ப்.

                                              Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                              லண்டனில் வேலை இல்லாதவர்களுக்கு பணம் ,தொழில் தொடங்க பண உதவி – ஊழியர்களுக்கு 8 ஆயிரம் போனஸ் video

                                              லண்டனில் வேலை இல்லாதவர்களுக்கு பணம் ,தொழில் தொடங்க பண உதவி – ஊழியர்களுக்கு 8 ஆயிரம் போனஸ் video

                                              பிரிட்டனில் கொரனோ நோயலால் நாடு பெரும் பொருளாதார சந்திப்பை சந்தித்தது ,இதனை


                                              அடுத்து தற்போது அதிரடி திட்டங்களை ஒன்று புதன்கிழமை அரசு அறிவித்துள்ளது

                                              அதன் படி நீங்கள்வேலை செய்பவராக இருந்தால் உங்களுக்கு 520 போனஸ் வழங்க படுகிறது ,அது தவிர


                                              தொழில் தருனர் ,ஒருவரை அறிமுகம் செய்து இருப்பின் அவருக்கு 8,000 போனஸாக வழங்க படுகிறது

                                              அது தவிர வீடு வாங்குபவர்களுக்கு ,வரி இல்லாது ,முத்திரை ,வீடுகள் வாங்கிட முடியும் ,இவை இரண்டு முதல் ஐந்து லட்சம் வரையிலான வீடுகளுக்கு உள்ளடக்க பட்டுள்ளது,அப்டி என்றால் 15 ஆயிரத்துக்கு மேல் மிச்சம்

                                              மேலும் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் கடன் வழங்க படவுள்ளது ,இந்த பணம் வங்கி வழங்கும் ஆனால் அரசே இந்த கடன்

                                              உதவிக்கு பொறுப்பாக நிற்கும்,அதாவது கடனைபெற்று விட்டு சுத்த முடியாது காட்டியே தீர வேண்டும் .

                                              வங்கி ரெப்பசி அடிக்க முடியாது ,வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட அரசு பல்வேறு பட்ட வழிகளை செய்து வருகிறது ,அதன்

                                              பிரகாரம் இந்த அதிரடி அறிவிப்பை நிதி அமைச்சர் பாரளுமன்றில் அறிவித்தார் .

                                              குடி பாணங்கள் ,மற்றும் சூடான உணவுகளுக்கு வரி கழிவு வழங்க படுகிறது .ஐந்து வீதமாக குறைக்க படுகிறது

                                              இவை குறுகிய காலத்திற்கு மட்டுமே செல்லும் படியாகும் நிலையில் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது ,அது தவிர அனைவரும் வேலைக்கு

                                              செல்லும் வகையில் புதிய திட்டங்கள் அறிமுக படுத்த படுவதுடன் ,புதிய தொழில் தொடங்குனர்களை அறிமுகம் செய்து வைக்கிறது அரசு

                                              இதோ காணொளியில் மேலதிக முழுமையான விபரங்கள் அப்புறம் என்ன குஷி தான்

                                              இந்த நல்ல விஷத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ,யாவரும் பயன் பெறட்டும் ,தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  மருத்துவ மனையில் மோதல் – இரு மருத்துவர்கள் காயம்

                                                  மருத்துவ மனையில் மோதல் – இரு மருத்துவர்கள் காயம்

                                                  இரு வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் வைத்தியசாலை சொத்துக்கள் சேதமடைந்த சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

                                                  இம்மோதலினால் பாதிக்கப்பட்ட இவ்விரு வைத்தியர்களும் ஏட்டிக்கு போட்டியாக இரு வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                                                  குறித்த சம்பவம் நேற்று (7) காலை 9.30 மணியளவில் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

                                                  குறித்த இரு வைத்தியர்களுக்கும் இடையே இருந்த நீண்ட கால முறுகல் நிலையே இம்மோதலுக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

                                                  சம்பவ தினமன்று பணி நிமிர்த்தம் இரு வைத்தியர்களும் வைத்தியசாலைக்கு சமூகமளித்த நிலையில் கடமை

                                                  அறிக்கையிடும் புத்தகம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலில் ஆரம்பித்து கைகலப்பில் முடிவடைந்துள்ளது.

                                                  இதன் போது இரு வைத்தியர்களின் மோதலினால் வைத்தியசாலையின் மருத்துவ சாதனங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் கதிரைகளும் உடைந்துள்ளன.

                                                  இச்சம்பவத்தினை அடுத்து அங்கு சென்ற சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன்

                                                  காயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை விடுதி இல 5 இல் வைத்தியர் ஒருவரும் அட்டாளைச்சேனை பிரதேச

                                                  வைத்தியசாலையில் மற்றுமொரு வைத்தியரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      யாழில் நபரை ஓடஓட வெட்டிய கும்பல்

                                                      யாழில் நபரை ஓடஓட வெட்டிய கும்பல்

                                                      யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று காலை (08) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

                                                      சம்பவத்தில் காயமடைந்த உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                                                      சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

                                                      இன்று காலை தேசிய கீதம் இசைப்பதற்கு சற்று முன்னர் அலுவலகத்திற்கு வந்த உத்தியோகத்தர் மாவட்ட செயலக

                                                      நுழைவாயில் நின்றிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரில் இருவர் உத்தியோகத்தரை வாளால் வெட்டியுள்ளனர்.

                                                      பின்னர், உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் என நினைத்து வேறு ஒரு நபரின் மோட்டார் சைக்கிளை வெட்டி சேதப்படுத்தியுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

                                                      இதேவேளை, சந்தேகநபர்களில் ஒருவர் அவரது பணப்பையை சம்பவ இடத்தில் தவறவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          பளை குண்டு வெடிப்பில் காயமடைந்த நபர் பலி

                                                          பளை குண்டு வெடிப்பில் காயமடைந்த நபர் பலி

                                                          பளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபர் இன்று (08) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

                                                          கடந்த ஜுலை மாதம் 03 திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்

                                                          சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த சந்தேகநபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

                                                          வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான 44 வயதுடையவர் என கிளிநொச்சி பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

                                                          இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் பயங்கரவாத விசாரணை

                                                          பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                                                          குறித்த வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் 3, கரும்புலி நாளை குறிக்கும் பதாகை ஒன்றும், வெடிப் பொருட்கள்

                                                          சிலவும், முன்னாள் போராளி ஒருவரின் புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

                                                          உயிரிழந்த நபரின் மனைவி 43 வயதானவர் எனவும் அவர் இயக்கச்சி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிப் புரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                                          குறித்த இருவரும் எந்த நோக்கத்திற்காக இவ்வாறு வெடிப் பொருட்களை தயாரித்தார்கள் என்பது தொடர்பில் கண்டறிய பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              தமிழ் மக்களின் வாழ்வு கேள்வி குறியாக்க பட்டுள்ளது – சிறிதரன்

                                                              தமிழ் மக்களின் வாழ்வு கேள்வி குறியாக்க பட்டுள்ளது – சிறிதரன்

                                                              எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற

                                                              உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

                                                              நேற்று (07) கிளிநொச்சி செல்வாநகர் பிரதேசத்தில் மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

                                                              அவர் மேலும் தெரிவிக்கையில்,

                                                              எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது. எங்கள்

                                                              இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம்.

                                                              நாளாந்தம் புதிய புதிய காவலரண்கள் வருகிறன. இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம்.

                                                              முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ பிரசன்னத்திற்குள் வாழுகின்ற சூழல் எங்களை நோக்கி

                                                              நகர்ந்துகொண்டுள்ளது. இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

                                                              இப்போது தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு ஒன்றாக பயணிக்க வேண்டிய நேரம். அவ்வாறு ஒன்றாக

                                                              பயணித்தால் வடக்கு கிழக்கில் இந்த பாராளுமன்ற தேர்தலில் இருபது ஆசனங்களை நாம் பெற முடியும்.

                                                              225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நாம் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணில் ஏதாவது பேசக்கூடிய அறுத்துறுத்து சொல்லக் கூடிய அல்லது எங்கள்

                                                              உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு கிடைக்கும் இல்லை என்றால் யாரோ அபிவிருத்தி

                                                              என்கின்ற மாய வலையை விரித்து வாக்குக் கேட்பவர்களுக்கும், அரச முகவர்களுக்கும்,ஒட்டுக்குழுக்களுக்கும் வாக்களித்துக் கொண்டிருக்க போகின்றோம் என்றார்

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இடையில் – பேச்சு

                                                                  பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இடையில் – பேச்சு

                                                                  பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் அரசியல் செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனை சந்தித்து கலந்துரையாடினர்.

                                                                  வடக்கில் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும்

                                                                  அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

                                                                  கொரோனா இடர் நிலைமையின் போது யாழ்ப்பாணத்தில் எவ்வாறான நிலைமை காணப்பட்டது மற்றும் தற்போதைய

                                                                  யாழ்ப்பாண நிலவரம் தொடர்பாகவும் துணைத்தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

                                                                  யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்த பிரித்தானிய

                                                                  தூதரகத்தின் துணைத் தூதுவர், எதிர்காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திதிட்டங்களுக்கு தங்களாலான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்

                                                                  .

                                                                  பிரித்தானிய தூதரகத்தின்
                                                                  பிரித்தானிய தூதரகத்தின்
                                                                      Posted in உலக செய்திகள்

                                                                      முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா

                                                                      முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா

                                                                      சமூக விலகல், முகக்கவசம் தேவையில்லை என்று கூறி வந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

                                                                      முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி
                                                                      பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ


                                                                      பிரேசில் நாட்டு அதிபராக இருப்பவர் ஜெய்ர் போல்சோனாரோ. கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்தவர்.

                                                                      மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக

                                                                      பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து போல்சனாரோ பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அதிபர்

                                                                      போல்சனாரோவும் வெளியே சென்றால் முகக்கவசத்தை அணிவதில்லை. நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததால் தற்போது முகக்கவசம் அணிகிறார்.

                                                                      பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ

                                                                      இந்நிலையில் போல்சோனாரோ கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார்.

                                                                      வெளியில் வரும்போது என்னுடைய நுரையீரல் சுத்தமாக உள்ளது என்று கூறினார்.

                                                                      இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. என்றாலும் அவருக்கு லேசான அறிகுறி

                                                                      மட்டுமே இருப்பதாகவும், அவர் சிறப்பாக இருப்பதாக உணர்வதாகவும் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

                                                                      இவரின் மோசமான கொள்கையால் பிரேசில் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது

                                                                      முகக்கவசம் அணிய
                                                                      முகக்கவசம் அணிய