Stop Fighting Start Voting’ ஈழத்தமிழர்களுக்கும் பொதுவாக்கெடுப்பு கோரும் பன்னாட்டு இயக்கம்

Spread the love

Stop Fighting Start Voting’ ஈழத்தமிழர்களுக்கும் பொதுவாக்கெடுப்பு கோரும் பன்னாட்டு இயக்கம்

சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக ‘Stop Fighting Start Voting’ எனும் முழக்கத்துடன் ஜனநாயகத்துக்கான பன்னாட்டு பிரச்சார இயக்கமொன்று உலக மக்களின்

உரிமைக்கான குரல்களில் ஈழத்தமிழர்களின் அரசியற் பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்தியுள்ளது.

பிணக்கைத் தீர்க்க ஓர் அமைதியான வழியாக மக்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்தும் பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பினை முன்னிறுத்தி 60 விநாடிகள் ஒடும்

காணொளிப் பரப்புரையில் ஹொங்காங் முதல் சிறிலங்கா வரை உள்ளடக்கப்பட்டுள்ளது. (https://vimeo.com/424953043 ) இதில்

இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களின் நெடுநாளைய விடுதலைப் போராட்டத்தின் அரசியற் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்துகின்றது.

அமெரிக்காவைத் தளமாக கொண்ட Citizens in Charge Foundation எனும் அறக்கட்டளையால் தொடங்கப்பெற்ற www.stopfightingstartvoting.org இவ்இயக்கத்தின் இந்த பிரச்சார முழக்கத்தில் பிரசித்தி பெற்ற பன்னாட்டு ஜனநாயக வல்லுநர்கள், ஆய்வாளர்கள், சட்டத்தரணிகள், அரசுசாரா அமைப்புகள், கல்வியாளர்கள், அமைப்புக்கள் என பலரும் இணைந்துள்ளனர்.

Daniela Bozhinova, Chair, Bulgarian Association for the Promotion of Citizens Initiative; vice-president Democracy International / Paul Jacob, President, Citizens in Charge and Citizens in Charge Foundation / Bruno Kaufmann, Co-president, Global Forum on Modern Direct Democracy;

president of the Initiative and Referendum Institute Europe; board member Democracy International / Joe Mathews, Co-president, Global Forum on Modern Direct Democracy; California journalist; Professor of practice,

Arizona State University; board member Democracy International / John Matsusaka, Charles F. Sexton Chair in American Enterprise ,University of Southern California (USC); Professor of Finance and Business Economics,

USC; Executive Director of Initiative and Referendum Institute, USC / Matt Qvortrup, Professor of Political Science, Coventry University / Dane Waters, Founder and Chair, Initiative and Referendum Institute, USC; board

member Citizens in Charge Foundation; board member Democracy International / Dr. Yanina Welp, Research Fellow at the Albert Hirschman Centre on Democracy

ORGANIZATIONS

Bulgarian Association for the Promotion of Citizens Initiative, a non-governmental, non-profit organization, having 16 years of experience nationally and internationally in the area of democracy, democratic citizenship and human rights.

Citizens in Charge Foundation, a non-partisan organization that works to protect, defend, and expand initiative and referendum rights.

Initiative and Referendum Institute Europe, a European think-tank dedicated to research and education on procedures and practices of modern Direct Democracy.

Initiative and Referendum Institute at the University of Southern California, a non-partisan educational organization dedicated to the study of the initiative and referendum process.

உலகளவில் கொள்கை வகுப்பாளர்கள், இராஜதந்திரிகள் மட்டத்தில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தி வரும் (Citizens in Charge Foundation) இவ்வமைப்பு , இப்பிரச்சாரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக” என்ற பரப்புரை இயக்கம் நெடுங்காலமாகத் தீராமலிருக்கும் பிணக்குகளுக்கு அமைதிவழியில் தீர்வு காண்பதற்குதவும் முக்கியக் கருவியாக பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்தி

தொடங்கப்பெற்றது. ஹொங்காங், கட்டலோனியா, தைவான் குறித்தும், சிறிலங்காவில் தமிழர்கள் குறித்தும் நீடித்து வருவன போன்ற பிணக்குகளுக்கு இவ்வழியில் தீர்வு கானலாம்’ என்று Citizens in Charge Foundation யின் தலைவர் பால் ஜேக்கப் கூறுகின்றார்.

சண்டையிடுவதை நிறுத்துக வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கம் உலகெங்குமிருந்து பொதுவாக்கெடுப்பு பொறிமுறைக்கான வல்லுநர்களும் அமைப்புகளும் –

ஆராய்ச்சியாளர்கள், சட்டத்தரணிகள், அரசுசாரா அமைப்புகள், கல்வியாளர்கள் – அளித்த ஆதரவுடன், இலாபநோக்கற்ற பொறுப்புக் குடிமக்கள் அறக்கட்டளையால் தொடங்கப்பெற்றது. இந்தப்

பரப்புரை இயக்கமானது பிணக்குகளில் உள்ளோடும் சிக்கல்களில் ஆதரவு அல்லது எதிர்ப்பை எடுத்துரைப்பதில்லை. ஆனால் – முன்முயற்சிகள், பொது வாக்கெடுப்பு ஆகிய வடிவில் – நேரடி ஜனநாயகத்தைப் பயன்படுத்தி இந்தப் பிணக்குகளுக்கு அமைதித் தீர்வு காண முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறது. ஏற்புடைத்த பன்னாட்டு நெறிகள், நடைமுறைகளின்படி நேரடி ஜனநாயகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

‘நேரடி ஜனநாயகத்தின் பயன்பாட்டைப் பன்னாட்டளவில் அறிந்தேற்கப்பட்ட சட்ட வரையறைகளுக்குள் நடைமுறைப்படுத்தினால்தான் தேசங்களின் குழாம் அதனை மக்கள் விருப்பத்தின் முறையான வெளிப்பாடாக ஏற்றுக் கொள்ளும்’ என
Bulgarian Association for the Promotion of Citizens Initiative இன் தலைவர் டேனியல் பொழினோவா குறிப்பிடுகின்றார்.

சண்டையிடுவதை நிறுத்துக வாக்களிக்கத் தொடங்குக பரப்புரை இயக்கத்தைத் தொடங்கி வைக்கும் முகத்தான் 60 நொடி விளம்பரம் இன்று உலகெங்கும் சமூக மின்னியல் மேடைகளில்

வெளியிடப்பட்டது. ஹொங்காங்கில் தீராதுள்ள சிக்கல், சிறிலங்காவில் தனியாகத் தமிழர் தாயகம் அமைத்தல் தொடர்பான சிக்கல் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இது செய்யப்பட்டது. பொது வாக்கெடுப்பின்

துணைக்கொண்டு அமைதிவழியில் தீர்வு காண முடியும் என்னும் படியாக உலகெங்கும் நீடிக்கும் பிணக்குகளை அனைவரும் அறியச் செய்வதற்கான காணொலிகளையும் இவ்வியக்கம் தொடர்ந்து ஆக்கம் செய்து வெளியிடும்.

‘பிணக்கும் பூசலும் உலகில் நிறைந்துள்ளன. குருதி சிந்தச் செய்யும் சண்டை மட்டுமன்று, பிரிவினையைக் கூடுதலாக்கும் சொற்களாலும் செயல்களாலும் சண்டையிடுவதும் கூட இந்தப் பிணக்குகளின் தீர்வுக்கு வாய்ப்பில்லாமற் செய்து விடும்.

சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக என்னும் இந்தப் பரப்புரை இயக்கத்தில் பொதுவாக்கெடுப்பு பொறிமுறைக்கான வல்லுநர்கள் ஒன்றுபட்டு, இந்தப்

பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நெறிமுறைசார்ந்த அமைதிப் பாதை பற்றிய விழிப்புணர்வை வளர்க்கத் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள் – பொதுவாக்கெடுப்பினை பயன்படுத்தி வாக்களிப்பதே அந்த வழி’ என்றார் தென் கலிபோர்னியா

பல்கலைக் கழகத்தில் முன்முயற்சி மற்றும் பொதுவாக்கெடுப்புக் கழகத்தின் தலைவராக இருக்கும் (Founder and Chair, Initiative and Referendum Institute, USC; board member Citizens in Charge Foundation; board member Democracy International) டேன் வாட்டர்ஸ் கூறுகின்றார்.

நேரடி ஜனநாயகத்தை மேம்படுத்துவது

நேரடி ஜனநாயகத்தின் கருவிகளை மேம்படுத்துவதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ அல்லது பன்னாட்டளவில் ஏற்புடைய நெறிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரண்பாடான

விதத்தில் அவற்றைப் பயன்படுத்துவதற்கோ உலகெங்கும் நடக்கும் முயற்சிகள் குறித்தும் விழிப்புணர்வைக் கூடுதலாக்க இந்தப் பரப்புரை இயக்கம் பாடுபடும்.

இன்று ருமேனியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு முன்மொழியப்படுகிறது. ஆனால் அதற்கான விதிகளும் நெறிமுறைகளும் அதன் பயனுடைமைக்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லாமற்செய்யும் வகையில் உள்ளன. இந்தப் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதில் அது யாருக்குப் பெரிதும்

தேவைப்படுகிறதோ அந்தக் குடிமக்களின் கைக்கு எட்டாத படி செய்து விடுகின்றன. மேலும், இப்போது சில பொதுவாக்கெடுப்புகளுக்கு எடுத்துக்காட்டாக றஸ்யாவில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது; ஆனால் பொதுவாக்கெடுப்பின் முடிவுகளை முறையானவை ஆக்கும்படியான வரன்முறைகளுக்குள் அது நடத்தப்பட அதிக வாய்ப்பில்லை.

‘இந்தச் சிக்கல்கள் மீது வெளிச்சம் படர நாம் உதவ வேண்டும் இவ்வழியில் பொதுவாக்கெடுப்பின் அந்தக் குறிப்பான வடிவம் அல்லது அதன் பயன்பாடு பன்னாட்டளவில் ஏற்புடைத்த நெறிமுறைகள், நடைமுறைகளின் அடிப்படையில்

முறையானதுதானா என்று தீர்மானிக்கும் போது என்ன தேடுவது என்பது ஊடகங்களுக்கும் கருத்து வழிகாட்டிகளுக்கும் மக்களுக்கும் தெரிந்திருக்கும்’ என்றார் கொவெண்ட்ரி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் மட் க்வோர்ட்ரப்.

சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இந்த இயக்கம் உலகெங்கிலுமிருந்து பொதுவாக்கெடுப்புக்கான வல்லுநர்களும் அமைப்புகளும் அடங்கிய ஓர் அறிவுரைக் குழுவை அமைத்துள்ளது. இந்த இயக்கம் குறித்தும் நேரடி ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளில் சில:

‘ஜனநாயகம் என்பது தொடர்சியான உரையாடல் ஆகும். இவ்வாறான உரையாடல்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியலமைப்புகளைக் கொண்ட நாடுகள் நிரந்தரமாக மோதல் வளர்க்கும் நாடுகளைக் காட்டிலும் சிறந்து விளங்குகின்றன. ஆகவே, குடிமக்களின் முன்முயற்சிகள், மக்கள்சார் பொதுவாக்கெடுப்புகள் போன்ற நவீன கால பொதுவாக்கெடுப்பு வடிவங்கள் எப்படி வார்க்கப்பட வேண்டும் என்றால், அவை பிறர் தலையில் ஓங்கியடிக்கும் முரட்டுச் சம்மட்டிகளாக இல்லாமல் சிக்கல்களைப் பொருத்திக் காட்டும் திறமான திருப்புளிகளாக வார்க்கப்பட வேண்டும். உரையாடல்கள் பெருகுவதும் மோதல்கள் அருகுவதும் இன்றைய உலகின் தேவை. சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக’ என்றார் நவீன கால நேரடி ஜனநாயகம் பற்றிய உலக மன்றத்தின் இணைத் தலைவர் புருனோ காஃப்மன்.

‘ஜனநாயகம் என்பது தமது வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் பொது முடிவுகளை எடுப்பதில் மக்களுக்குப் பங்கிருக்க வேண்டும் என்ற எளிய கருத்தாகும். பிணக்குகளுக்கு அமைதியாகவும் நியாயமாகவும் தீர்வு காண்பதற்கு இது வரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் ஆகச் சிறந்த ஏற்பாடு ஜனநாயகமே ஆகும். ஜனநாயகத்தின் திறமிகு கருவிகளில் இரண்டாகிய முன்முயற்சி பற்றியும் பொதுவாக்கெடுப்பு பற்றியும், முகன்மையான முடிவுகளில் மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் செய்தி பரப்புவதே இந்த இயக்கத்தின் நோக்கம்’ என்றார் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அமெரிக்க முனைவின் தலைவரும், தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்முயற்சி மற்றும் பொதுவாக்கெடுப்புக் கழகத்தின் செயல் இயக்குநருமாகிய சார்லஸ் எஃப். செக்ஸ்டன்.

‘அரசியலின் மாற்றியமைக்கும் வல்லமை குறித்து நம்பிக்கையின்மை வளர்ந்து வரும் சூழலில், பிரதிநிதிகளின் அதிகாரத்துக்கு வரம்பிடவும் மக்களுக்குதவாத முடிவுகளை இழுத்துப் பிடிக்கவும் கொள்கை வகுப்பின் செயல்நிரலைத் திறக்கவும் பொதுவாக்கெடுப்பு கருவிகள் உதவ முடியும். ஆனால் நேரடிப் பங்கேற்புக் கருவிகளின் ஒழுங்காறும் நடைமுறையும் பன்னாட்டளவில் ஏற்புடைத்த நெறிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உடன்பட்டிருக்க வேண்டும். சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இந்த இயக்கம் இத்துணை முகன்மையாவதன் காரணம் இதுவே’ என்றார் ஆல்பர்ட் ஹிர்ஷ்மன் மையத்தைச் சேர்ந்த யனினா வெல்ப்.

Leave a Reply