Posted in உலக செய்திகள் முக்கிய செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வந்து வாலிபரை – கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை

வெளிநாட்டில் இருந்து வந்து வாலிபரை – கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை

வெளிநாட்டில் இருந்து வந்து ஜாலியாக ஊர் சுற்றிய வாலிபர்: கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை

முகக்கவசத்தை முறையாக அணியாமல் சாலையில் சுற்றித்திரிந்த நபரை சுகாதாரத்துறையினர் கட்டி ஆம்புலன்ஸில் தூக்கிச்சென்ற சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்து ஜாலியாக ஊர் சுற்றிய வாலிபர்: கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை


விதிமுறை மீறிய நபரை தூக்கிச் செல்லும் சுகாதாரத்துறை ஊழியர்கள்


கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முடக்கத்திற்குப் பின்னர் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா

காலத்தில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று கேரள மாநிலம் பத்தனம்திட்டா புனித பீட்டர்ஸ் சந்திப்பு பகுதியில் ஒருவர் முகக் கவசத்தை முழுமையாக

அணியாமல் சுற்றிதிரிவதாகவும், சொன்னாலும் அவர் கேட்க மறுப்பதாகவும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 43 வயதுடைய அந்த நபர் கடந்த 4 நாட்களுக்கு முன் குவைத்தில்

இருந்து வந்தது தெரியவந்தது. அத்துடன் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல் திரிந்தது அறியப்பட்டது.

இதையடுத்து போலீஸார் கொடுத்த தகவலின்படி கவச உடையுடன் வந்த சுகாதாரத்துறையினர், தப்பிக்க முயன்ற அந்த நபரை விரட்டிப்பிடித்து கைகால்களை கட்டி ஆம்புலன்சில் ஏற்றிக்

கொண்டு சென்றனர். தற்போது அந்த நபர் எர்ணாகுளம் கோளஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர்மீது பத்தனம்திட்டா போலீஸார் கொரோனா ஒழிப்பு தனிமைப்படுத்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து
வெளிநாட்டில் இருந்து
      Posted in உலக செய்திகள்

      சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ.

      சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ.

      சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

      சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ.

      சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை

      ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

      சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி

      விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, இதுவரை 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

      இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல்

      அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

      இந்த வழக்கை சிபிஐ ஏற்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சரின்

      கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          வெலிகடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

          வெலிகடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

          வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை கைதியொருவர்

          கொவிட் 19 வைரசு தொற்று நோயாளி என்ற ரீதியில் அடையாளங்

          காணப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

          இந்த கைதி கந்தகாடுவில் அமைந்துள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில்

          இருந்து ஜூன் மாதம் 27 ஆம் திகதியன்று வெலிக்கடை விளக்க மறியல் சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டார்.

          இந்த அடையாளங்காணப்பட்ட நோயாளி மற்றும் இவருடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் பிசிஆர் பரிசோதனை மற்றும்

          தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன் இந்த பரிசேதனைகளுக்காக

          விளக்கமறியல் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

              இலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

              வெளிநாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் வரும் நபர்களை கைது செய்தல் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாத்தல்

              தொடர்பிலான விஷேட வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

              விஷேடமாக இந்தியாவில் இருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள்

              கடல் மார்க்கமாக வடக்கு பிரதேசங்களுக்கு வரும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  6 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு

                  6 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு

                  2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி முறிகள் ஏலங்களில் 52 பில்லியனுக்கும் அதிகமான அரசு நிதியை முறைகேடாகப்

                  பயன்படுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க மற்றும் ஏனைய 5 பேரையும் கைது செய்வதற்கு

                  கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

                  மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம் நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோஹித ராஜகருணா ஆகியோரினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

                  குறித்த மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரையில் இவ்வாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

                  குறித்த உத்தரவின் அடிப்படையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு

                  எவ்வித இடையூறும் இல்லை என மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் தலைவர் நீதிபதி நவாஸ் தெரிவித்துள்ளார்.

                  மூவரடங்கிய நீதிபதிகள் குழு உறுப்பினர்கள் மூவரும் இனக்கப்பட்டதான் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      தப்பி ஓடிய போலீஸ் அதிகாரி சரண்

                      தப்பி ஓடிய போலீஸ் அதிகாரி சரண்

                      போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதாக

                      குற்றம் சுமத்தப்படும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின்

                      பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார இன்று (07) கடவத்த பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

                      சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          84 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு இரண்டு இலட்ச ரூபாய்கள்

                          84 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு இரண்டு இலட்ச ரூபாய்கள்

                          புத்தளம், காக்கா பள்ளி, மனங்குளத்தில் வசிக்கும் 84 வயதான திருமதி எம்.ஏ.எச்.பி.மாரசிங்க ஓய்வுபெற்ற ஆசிரியை இரண்டு

                          இலட்சம் ரூபாய்களை கொவிட் நிதியத்திற்கு ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

                          பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று

                          (06) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்து, மாதம்பை தனிவெல்லே பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்

                          கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இந்த அன்பளிப்பு கையளிக்கப்பட்டது.

                          ஜனாதிபதி அவர்களே,

                          சட்டம், நீதி, தர்மத்தை பாதுகாக்கின்ற அரசாங்கம் – தன்னிறைவடைந்த நாடொன்றை எமக்கு கையளியுங்கள்’

                          அவர் ஐயாயிரம் ரூபாய் தாள் காசுகளை ஒன்று சேர்த்து வழங்கிய இரண்டு இலட்சம் ரூபாவை சுற்றிய கடதாசியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது..

                          84 வயதான ஓய்வுபெற்ற
                          84 வயதான ஓய்வுபெற்ற
                              Posted in இலங்கை செய்திகள்

                              திருமண நிகழ்வுகளுக்கு படை எடுக்கும் மக்கள்

                              திருமண நிகழ்வுகளுக்கு படை எடுக்கும் மக்கள்

                              திருமண வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

                              இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்களினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:

                              வைபவ மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதமானோர் அல்லது ஆகக்கூடிய வகையில் 300 பேருக்கு (

                              மணமகன் உள்ளிட்ட குழு, மணமகள் உள்ளிட்ட குழு , இசைக்குழு மற்றும் ஏனைய கலைஞர்கள் அடங்கலாக) குறைந்த

                              எண்ணிக்கையில் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு 2020 ஜுலை 6ஆம் திகதி தொடக்கம் அனுமதி வழங்கப்படுகின்றது. இதே

                              போன்று திருமண வைபவத்தில் கலந்து கொள்வவோருக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

                              வைபவ மண்டபங்களில் கலந்துகொள்வதற்காக இதற்கு முன்னர் வழங்கிய

                              ஆலோசனைகள் இதற்கும் ஏற்புடையதாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்-மாணவர் வரவு அதிகரிப்பு

                                  பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்-மாணவர் வரவு அதிகரிப்பு

                                  கொவிட் 19 தொற்றின் காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த அரசாங்க பாடசாலைகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டன.

                                  இதற்கு அமைவாக நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள்

                                  சமூகமளித்திருந்தனர். இவர்கள் சுகாதார பாதுகாப்பு நடமுறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தனர்.

                                  பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றன. இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

                                      Posted in உலக செய்திகள்

                                      ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

                                      ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

                                      குஜராத்தில் பெண்ணை மானபங்கம் செய்த வழக்கு தொடர்பாக ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சுவேதா சடேஜாவை போலீசார் கைது செய்தனர்

                                      குஜராத்தில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது
                                      லஞ்சம்

                                      குஜராத்தின் மேற்கு ஆமதாபாத் மகளிர் காவல்நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் சுவேதா சடேஜா. அதே பகுதியை

                                      சேர்ந்த தொழில் அதிபர் கேனல் ‌ஷா என்பவர் ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

                                      வழக்கை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் சுவேதா சடேஜா, வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க தொழில் அதிபரிடம் ரூ.35 லட்சம்

                                      லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர், தரகர் மூலமாக முதல்கட்டமாக ரூ.20 லட்சத்தை சப்-இன்ஸ்பெக்டரிடம்

                                      லஞ்சமாக கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் மீதி ரூ.15 லட்சம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

                                      இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீசார், ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சுவேதா சடேஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்

                                          Posted in உலக செய்திகள்

                                          எம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா

                                          எம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா

                                          மாண்டியா தொகுதியின் எம்.பி.யும், நடிகையுமான சுமலதாவுக்குக்

                                          கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

                                          எம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா
                                          நடிகை சுமலதா
                                          பெங்களூரு:

                                          கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி எம்.பி. ஆன சுமலதா, முன்னாள்

                                          நடிகையும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்துள்ளார்.

                                          இதற்கிடையே, மாண்டியா தொகுதியில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் பணிபுரிந்து வந்தார் சுமலதா.

                                          இந்நிலையில், முன்னாள் நடிகையும், எம்.பி.யுமான சுமலதா, தனக்குக்

                                          கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, வீட்டுத் தனிமையில் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                              பிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்

                                              பிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்

                                              பிரிட்டனில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது

                                              இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகள் மற்றும் சிறுவர்களுக்கு

                                              தலா 250 பவுண்டுகள் விகிதம் ஒவ்வொருவருக்கும் பெற்று கொள்ளும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவுள்ளது

                                              New proposals could see all adults receive £500 and children £250 to use in the most badly impacted sectors of the economy

                                              இதற்கான நிதி நிலை கொள்கை வகுப்பு நிபுணர்கள் பரிந்துரையின் கீழ் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவிடவும்

                                              ,மேலும் வீழ்ந்து போன பொருளாதரத்தை மீள நிமிர்த்தி செல்லும் நோக்குட அரசு இந்த பணத்தினை வழங்கவுள்ளது

                                              இதற்கான திட்டங்கள் நிறைவடைந்ததும் மக்களுக்கு பவுச்சர் வழங்க

                                              படும் அதனை வைத்து கடைகளில் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்திட முடியும்

                                              ஐம்பதாயிரம் வியாபர கடன் வழங்கியது போன்று இவை இலவசமாக

                                              வழங்க படவுள்ளது ,ஆளும் அரசின் இந்த திட்ட அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுளளது

                                              ஐரோப்பிய விசாவுடன் இந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு இது வழங்க படமாட்டாது என தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது குறிப்பிட

                                              தக்கது , பிரிதனியர்க்ளுக்கு மட்டும் என அதில் தெரிவிக்க பட்டுள்ளது ,அதன் பொருள் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்களாகும்

                                              ,அபுற்றம் என்ன குஷி தான் ,இந்த செய்தியை நண்பர்களுக்கு பகிர்ந்து தெரிய படுத்துங்கள்

                                              இது எப்படி சாத்தியம் என எண்ணுகிண்றீர்களா ..? இதோ அதற்கான விரிவாக்கம் ,அதாவது ஐநூறு பவுண்டுகள் என்றால் வியாபார

                                              நிலையங்களில் வணிகம் நடக்கும் அதற்கு அவர்கள் இருநூறு பவுண்டு வரி செலுத்த வேண்டும் ,அப்டி என்றால் குடுப்பது போன்று குடுத்து ,மறு பக்கத்தால் எடுப்பதாகும் .

                                              அரசியல் வியாபாரம் என்பது இதைத்தான் ,எது எப்படியோ பணம் வருகிறது அல்லவா

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாமென கோட்டாவிடம் மக்கள் கோரிக்கை

                                                  அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாமென கோட்டாவிடம் மக்கள் கோரிக்கை

                                                  அரிச தட்டுப்பாடை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாமென பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். கடந்த போகங்களின்போது அதிக

                                                  அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு இடமளிக்கக்கூடாதென விவசாயிகள் தெரிவித்தனர்.

                                                  பொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை

                                                  உறுதிப்படுத்துவதற்காக நேற்று(05) முற்பகல் பொலன்னறுவை சிறிபுர பிரதேச சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள்

                                                  சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் விவசாயிகள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

                                                  அழிவுக்குள்ளாகியிருந்த அரிசி களஞ்சியங்களை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புனர்நிர்மாணம் செய்வதற்கும் நெல்லை முறையாக கொள்வனவு செய்வதற்கும்

                                                  முறைமையொன்றை தயாரித்ததாகவும் ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பாதுகாத்து

                                                  பிரச்சினைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                                                  மத்திய வங்கி மோசடிக்கு வகைக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பொலன்னறுவை பிரதேசவாசிகள் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். தொழில்

                                                  பிரச்சினை, காட்டு யானைகளின் அச்சுறுத்தல் என்பன பொலன்னறுவை மாவட்டத்தில் அநேக பிரதேசங்களில் மக்கள்

                                                  முகங்கொடுக்கும் பிரச்சினைகளாகும். அதற்கு தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேசவாசிகள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

                                                  பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, முன்னாள் பிரதி

                                                  அமைச்சர் சிறிபால கம்லத் மற்றும் வேட்பாளர் ஜகத் சமர விக்கிரம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பொதுஜன

                                                  முன்னணியின் அபேட்சகர் ஜயசிங்க பண்டா மஹியங்கனை பொலன்னறுவை வீதியில் கலுகெலே பிரதேசத்தில் ஏற்பாடு

                                                  செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

                                                  மன்னம்பிட்டிய பிரதிபா மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு பிரதேசத்தின் மகாசங்கத்தினர் முன்மொழிவொன்றை சமர்ப்பித்தனர்.

                                                  ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிவேண்டி பிரித் பாராயணம் இடம்பெற்றது. பிரதிபா மண்டபத்தின் முன்னால் ஒன்றுகூடியிருந்த சில ஆசிரியர்கள் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து

                                                  முன்மொழிவொன்றை சமர்ப்பித்தனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

                                                  முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன, கதுருவல பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார். பிரதேசத்தில் உள்ள குளங்களை புனரமைத்து

                                                  தருமாறு அங்கு கூடியிருந்த மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். விதை நெல் மற்றும் உரப்

                                                  பிரச்சினை குறித்தும் அவர்கள் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

                                                  தம்பாலை கல்வல சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மக்களுடனும் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால

                                                  சிறிசேன அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பொன்று பொலன்னறுவை தீப உயனவுக்கு முன்னால் இன்று இடம்பெற்றது.

                                                  அந்நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடி விபரங்களை கேட்டறிந்தார்.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      அரசாங்க பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களுக்கு மாடி வீட்டு கட்டிட தொகுதி

                                                      அரசாங்க பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களுக்கு மாடி வீட்டு கட்டிட தொகுதி

                                                      அரசாங்க பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்காக சொந்தமாக வீடுகளை கொள்வனவு

                                                      செய்வதற்கு வசதியாக மாடி வீட்டு கட்டிட தொகுதி ஒன்று கொழும்பில்; அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

                                                      என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.

                                                      அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் மற்றும் தொடர்பாடல்

                                                      தொழில்நுட்பம் , உயர்கல்வி புத்தாக்க அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

                                                      பெரும்பாலான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நீண்ட தூரங்களில் இருந்தே கடமைகளுக்கு வருகின்றனர்.

                                                      இவ்வாறு வருவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனை கருத்தில் கொண்டு உத்தேச மாடி வீட்டு கட்டிட

                                                      தொகுதியை கொழும்பு ஒருகொடவத்தையில் அமைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தார்.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          பளையில் குண்டு வெடிப்பு – ஒருவர் காயம்

                                                          கிளிநொச்சி – பளை, இயக்கச்சியில் நேற்று முன் தினம் (03) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

                                                          குறித்த வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் 3, கரும்புலி நாளை குறிக்கும் பதாகை ஒன்றும், வெடிப் பொருட்கள்

                                                          சிலவும், முன்னாள் போராளி ஒருவரின் புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

                                                          இவற்றுடன் ஆசிரியை ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

                                                          குறித்த ஆசிரியையின் வீட்டில் கடந்த 3 ஆம் திகதி வெடிச் சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் அதில் ஆசிரியையின் கணவரே காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                                                          காயமடைந்தவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம்

                                                          வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                                          வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என கிளிநொச்சி பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

                                                          காயமடைந்த ஆசிரியை 43 வயதானவர் எனவும் இவர் இயக்கச்சி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிப் புரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                                          குறித்த இருவரும் எந்த நோக்கத்திற்காக இவ்வாறு வெடிப் பொருட்களை தயாரித்தார்கள் என்பது தொடர்பில் கண்டறிய பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

                                                          கைது செய்யப்பட்ட ஆசிரியை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கும்

                                                          பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              கட்டுநாயக்க விமான நிலைய வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன

                                                              கட்டுநாயக்க விமான நிலைய வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன

                                                              கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் இன்று (06) முதல் திறக்கப்பட்டுள்ளன.

                                                              இதன்படி வர்த்தக நிலையங்கள் காலை 8.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                              கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த விமானப் பயணிகளுக்காக

                                                              மாத்திரம் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

                                                              இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் முன், விமான நிலையத்தை தொடர்பு

                                                              கொண்டு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                              அத்துடன் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் நபர்கள், தாம் தனிமைப்படுத்தப்பட்டமைக்காக நிலையங்கள் வழங்கிய சான்றிதழ்கள் அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு

                                                              உட்படுத்தப்பட்டமைக்காக பொது சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                              இதனை தவிர கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

                                                              அத்துடன் விமான நிலையத்தின் பணத்தை பரிமாற்றம் செய்ய சந்தர்ப்பம் தற்போது இல்லை என்பதால், பொருட்களை

                                                              கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர்களை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                              இல்லை எனின், கடன் அட்டைகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

                                                                  100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

                                                                  நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா – ஹட்டன் பிரதான சோட்கட் வீதியில், ரதல்ல கார்லிபெக் பகுதியில் பார ஊர்தி

                                                                  ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் அதில் காயமடைந்த இருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                                                  இச்சம்பவம் இன்று (06) காலை 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                                                                  பொலன்நறுவையில் இருந்து நுவரெலியாவுக்கு அரிசி கொண்டு சென்று, மீண்டும் பொகவந்தலாவை பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

                                                                  இந்த விபத்தினால் பார ஊர்தி பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                                                                  இவ்விபத்து பார ஊர்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார், மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

                                                                  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                  லொறி
                                                                  லொறி
                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      வீடு – சுமந்திரனால் இடிக்கப்படுகிறது

                                                                      வீடு – சுமந்திரனால் இடிக்கப்படுகிறது

                                                                      வாக்குகளைச் சிதறடித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கும், வீட்டுச் சின்னத்தை இல்லாமல் ஆக்குவதற்குமே மாற்று அணி என்று சொல்லிக் கொள்பவர்களும்

                                                                      பல சுயேச்சைக் குழுவினர்களும் பாராளுமன்றத் தேர்தலில் இறக்கிவிடப் பட்டுள்ளார்கள் என்று கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசிவருகிறார்கள் என்று தமிழ்த் தேசியப்

                                                                      பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

                                                                      கூட்டமைப்பை மற்றவர்கள் அல்ல, அவர்களே சிதைத்து வருகிறார்கள். தந்தை செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன், அழகக்கோன், இராஜவரோதயம், இராசமாணிக்கம், அமிர்தலிங்கம்

                                                                      போன்ற பல தலைவர்களின் உழைப்பால் உருவான வீடு, எம்.ஏ. சுமந்திரனால் இன்று இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

                                                                      தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பாராளுமன்றத் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றது. இதன் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (05) கோண்டாவிலில்

                                                                      இடம்பெற்றபோதே முதன்மை வேட்பாளரான பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

                                                                      அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் முன்னெடுத்துச் செல்லும் நோக்குடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

                                                                      உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் தான், தங்களை உருவாக்கியதாக கூட்டமைப்பினரே சொல்லி வருகிறார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதும்

                                                                      கூட்டமைப்பு படிப்படியாகத் தன்னைப் புலி ஆதரவு நீக்கம் செய்ததோடு, தமிழ்த் தேசிய நீக்கத்தையும் செய்துவருகிறது.

                                                                      முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது தமிழினப் படுகொலையே என்று உலக நாடுகளின் பல தலைவர்களும் கூறிவரும் நிலையில்,

                                                                      கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் இனப்படுகொலை நடைபெறவில்லை அதற்கான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி

                                                                      இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கும் விதமாகவே செயற்பட்டார்.

                                                                      இவர்களே போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையையே இல்லாமல் செய்கின்ற அரசாங்கத்தின் சூழ்ச்சி நிரலுக்கு அமைவாகத் தமிழ் மக்களின் உணர்வுகளைப்

                                                                      புறந்தள்ளிக் கால நீடிப்பைப் பெற்றுக் கொடுத்து அரசாங்கத்தைப் பிணை எடுத்தார்கள். இவையே கூட்டமைப்பின் கூடாரம் இன்று காலியாகிக் கொண்டிருப்பதற்கான காரணங்கள் ஆகும்.

                                                                      இப்போது தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளைத் தொடர்வதற்கு மீண்டும் தங்களுக்கு ஆணை வழங்குமாறு, கடந்த தேர்தல்களின் போது பாடிய அதே பல்லவியை

                                                                      மீண்டும் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் ஆணை கேட்பது காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காகவோ அரசியல்

                                                                      கைதிகளை விடுவிப்பதற்காகவேர் அல்ல. நல்லாட்சி அரசாங்கத்தில் வகித்து வந்த நிழல் அமைச்சர்கள் பதவிகளை

                                                                      மீண்டும் பெறுவதற்காகவே ஆணை கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்கள் இந்தப் போலித்தேசியவாதிகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                                                                          Posted in உலக செய்திகள்

                                                                          டிரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா

                                                                          டிரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா

                                                                          ஜனாதிபதி டிரம்பின் பிரசார குழுவில் முக்கிய பங்காற்றி வரும் கிம்பெர்லி கில்போயில் என்ற அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

                                                                          டிரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா தொற்று
                                                                          டிரம்ப், பிரசார குழு அதிகாரி கிம்பெர்லி கில்போயில்
                                                                          வாஷிங்டன்:

                                                                          கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

                                                                          அங்கு நேற்று மதியம் நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 32 ஆயிரத்தை கடந்துள்ளது.

                                                                          இதனிடையே அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் திட்டமிட்டபடியே ஜனாதிபதி தேர்தலை நடத்த முடிவு

                                                                          செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் மாதம் அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.

                                                                          இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில்

                                                                          முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் இறங்கி இருக்கிறார்.

                                                                          கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருக்க தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்பின்

                                                                          பிரசார குழுவில் முக்கிய பங்காற்றி வரும் கிம்பெர்லி கில்போயில் என்ற அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                                                          இவர் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்துக்காக ஜனாதிபதி டிரம்புடன் தெற்கு டகோட்டா மாகாணத்துக்கு சென்று வந்த

                                                                          நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி டிரம்புக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

                                                                              Posted in உலக செய்திகள்

                                                                              தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த கொரனோ வைரஸ் நோயாளர்கள்

                                                                              தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த கொரனோ வைரஸ் நோயாளர்கள்

                                                                              தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்தது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.

                                                                              தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக விவரம்
                                                                              கோப்பு படம்
                                                                              சென்னை:

                                                                              தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                                                              இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது.

                                                                              இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம்.

                                                                              வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                                                                              மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

                                                                              ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                                                              மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

                                                                              அரியலூர் – 468
                                                                              செங்கல்பட்டு – 6,633
                                                                              சென்னை – 68,254
                                                                              கோவை – 741
                                                                              கடலூர் – 1,257
                                                                              தர்மபுரி – 121
                                                                              திண்டுக்கல் – 704
                                                                              ஈரோடு – 248
                                                                              கள்ளக்குறிச்சி – 1,205
                                                                              காஞ்சிபுரம் – 2,547
                                                                              கன்னியாகுமரி – 560
                                                                              கரூர் – 166
                                                                              கிருஷ்ணகிரி – 185
                                                                              மதுரை – 4,085
                                                                              நாகை – 285
                                                                              நாமக்கல் – 109
                                                                              நீலகிரி – 124
                                                                              பெரம்பலூர் – 168
                                                                              புதுக்கோட்டை – 350
                                                                              ராமநாதபுரம் – 1,385
                                                                              ராணிப்பேட்டை – 1,148
                                                                              சேலம் – 1,247
                                                                              சிவகங்கை – 512
                                                                              தென்காசி – 448
                                                                              தஞ்சாவூர் – 496
                                                                              தேனி – 1,009
                                                                              திருப்பத்தூர் – 259
                                                                              திருவள்ளூர் – 4,806
                                                                              திருவண்ணாமலை – 2,497
                                                                              திருவாரூர் – 539
                                                                              தூத்துக்குடி – 1,162
                                                                              திருநெல்வேலி – 1,030
                                                                              திருப்பூர் – 204
                                                                              திருச்சி – 972
                                                                              வேலூர் – 1,932
                                                                              விழுப்புரம் – 1,186
                                                                              விருதுநகர் – 895
                                                                              விமானநிலைய கண்காணிப்பு
                                                                              வெளிநாடு – 432
                                                                              உள்நாட்டு – 366
                                                                              ரெயில் நிலைய கண்காணிப்பு – 416

                                                                              மொத்தம் – 1,11,151