Author: நலன் விரும்பி
இலங்கையில் பத்தாயிரத்தை தாண்டிய கொரனோ நோயாளிகள்
இலங்கையில் பத்தாயிரத்தை தாண்டிய கொரனோ நோயாளிகள்
இன்று பிற்பகல் கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 314 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பேலியகொட மீன்விற்பனை சந்தை கொத்தணியைச்
சேர்ந்தவர்களாவர். 55 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தவர்கள்
என கொவிட் – 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
இன்றைய எண்ணிக்கையுடன் இலங்கையில் கொவிட்-19 தொற்றாளர்களின்
எண்ணிக்கை 10 ஆயிரத்து ஐந்தாக அதிகரித்துள்ளது. இவர்களில் 5,804 பேர்
தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக 4 ஆயிரத்து 282 பேர் குணமடைந்துள்ளனர்.
Covid -19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள்
10105 – உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
5804 – சிகிச்சை பெறும் நோயாளிகள்
314 – புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
4282 – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
கொரனோ எதிரொலி முடங்கிய ஐரோப்பா
கொரனோ எதிரொலி முடங்கிய ஐரோப்பா
ஐரோப்பா எங்கும் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயானது
தீவிரம் பெற்று வருகிறது ,இதனை அடுத்து எதிர் வரும் டிசம்பர் முதலாம்
திகதி வரை பிரான்ஸ் ,பெல்யியம்,ஜெர்மன் போன்ற நாடுகள்
தடாலடி அடித்து பூட்டும் அறிவிப்பை வெளியிட்டுஉள்ளன
இதுவரை நாற்பத்தி நான்கு மில்லியன் மக்கள் நோயினால் பீடிக்க
பட்டுள்ளதாக மிரள வைக்கும் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது
பிரான்ஸ் அதிபருக்கு எதிராக முஸ்லீம்கள் போராட்டம்
பிரான்ஸ் அதிபருக்கு எதிராக முஸ்லீம்கள் போராட்டம்
பிரான்ஸ் ஆளும் அதிபர் மைகிரேனுக்கு எதிராக பல நாடுகளை
சேர்ந்த முஸ்லீம்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்
பங்காளதேஸ்,பாலஸ்தீனம் ,துருக்கி போன்ற நாடுகளில் பல்லாயிரம்
மக்கள் இணைந்து பிரான்ஸ் நாட்டு தேசிய கொடியினை எரித்து
ஆளும் அதிபருக்கு எதிராக வெற்று கோஷங்களை எழுப்பினர்
உலகை அழப்போவது முஸ்லீம்கள் தான் என்ற இனவெறி கோசம் அங்கே முழங்கியது .
பிரான்ஸ் ஊடகம் ஒன்றும் துருக்கிய அதிபரை கேவலமாக சித்தரித்து காட்டூன் வரைந்தமைக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளமை குறிப்பிட தக்கது

வியட்நாமை சூறையாடிய புயல்-வெள்ளம்: 136 பேர் பலி
வியட்நாமை சூறையாடிய புயல்-வெள்ளம்: 136 பேர் பலி
வியட்நாமில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வியட்நாமை சூறையாடிய புயல்-வெள்ளம்: 136 பேர் பலி
வியட்நாமில்
மோலேவே என்று பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பெய்த பலத்த மழையால் பல மாகாணங்களில் வெள்ளம்
சூழ்ந்தது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புயல், மழை, வெள்ளத்தில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குயங்னம் மாகாணம் தற்போது நிலச்சரிவில் சிக்கியுள்ளது. இந்த சூறாவளியினால் 56,000
வீட்டுக்கூரைகள் சேதமடைந்திருக்கிறது. 17 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 ஆயிரம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் வியட்நாமை தாக்கிய புயல்களில் மிக மோசமான புயல் இது என கூறப்படுகின்றது. தற்போது
உயிரிழந்தவர்களில் 12 பேர் மீனவர்கள் என்றும் மேலும் 14 மீனவர்கள் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்கு வெட்டப் பட இருந்த 150 நாய்களை புகுந்து மீட்ட – மாமனிதர்கள்
இறைச்சிக்கு வெட்டப் பட இருந்த 150 நாய்களை புகுந்து மீட்ட – மாமனிதர்கள்
தென்கொரியாவில் இறைச்சிக்கு வெட்டி விற்கப்பட இருந்த நூற்றி
ஐம்பது நாய்களை Humane Society International, என்ற அமைப்பு மீட்டு சென்றுள்ளது
இந்த நாய்கள் மீட்க பட்ட செய்தி மிருக ஆர்வலர்கள் இடத்தில மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அனைத்து நாய்களும் அமெரிக்காவுக்கு ஏற்ற பட அங்கு திறந்த வெளியில்
சுதந்திரமாக உலவிட விடப் பட்டுள்ளது
நாயை
தின்னும் நாய்கள் தென் கொரியார்கள் என மக்கள் திட்டி கமன்ட் செய்து வருகின்றனர்

தீப் பிடித்த வீட்டுக்குள் பாய்ந்து பாட்டியம்மாவை காப்பாற்றிய பொலிஸ்காரன்
தீப் பிடித்த வீட்டுக்குள் பாய்ந்து பாட்டியம்மாவை காப்பாற்றிய பொலிஸ்காரன்
அவுஸ்ரேலியா Perth’s south-east. பகுதியில் திடீரென வீடு ஒன்று
பற்றி எரிந்தது அப்பொழுது அந்த வீட்டுக்குள் பாட்டியம்மா ஒருவர் சிக்கி கொண்டார் ,
அங்கு விரைந்த காவல்துறை சிப்பாய் ஒருவர் தனது உயிரை
துச்சமென மதித்து அந்த முதியவரை காப்பாற்றிய காட்சிகள்
ஊடகங்களில் வைரலாகி பரவி வருகிறது
குறித்த காவல்துறை உத்தியோகத்தருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது

இரு நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம் -17 பேர் பலி -750 பேர் காயம்
இரு நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம் -17 பேர் பலி -750 பேர் காயம்
துருக்கி மற்றும் கிரேக் நாடுகளுக்கு இடையில் இன்று ஏற்பட்ட பாரிய
நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை பதினேழு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் எழுநூற்றி ஐம்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்
மனித உயிரிழப்பு நூறுக்கு மேல் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது ,
கட்டிட இடி பாடுகளுக்குள் சிக்கி பலர் இறந்திருக்க கூடும் என நம்ப படுகிறது ,
மேலும் டசின் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் ,இவ்விதம்
காணாமல் போனவர்களும் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது
மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

ஊரடங்குச் சட்டம் – 1, 259 பேர் கைது
ஊரடங்குச் சட்டம் – 1, 259 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 259 பேர் இதுவரையில்
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்
பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், 178 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
கடந்த 4ஆம் திகதி தொடக்கம் 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல்
ஊரடங்குச் சட்டம் அவ்வப்போது பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
பிரான்சில் மக்களை கழுத்து வெட்டி கொன்ற தீவிரவாதி இவன் தான்
பிரான்சில் மக்களை கழுத்து வெட்டி கொன்ற தீவிரவாதி இவன் தான்
பிரான்ஸ் நாட்டில் கடந்த தினம் பெண்கள் உள்ளிட்ட மூவரை கழுத்து
வெட்டி படு கொலை செய்த இருபத்தி ஒரு வயதுடைய துனிசியா நாட்டை
சேர்ந்த தீவிரவாதி இவர் என காட்சி படங்களுடன் வெளியிட பட்டுள்ளது
பயிற்றுவிக்க பட்ட தீவிரவாதியான இவன் மக்கள் ஒன்று கூடி ஆராதனையில்
ஈடுபட்ட தேவாலயத்திற்குள் புகுந்து திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினான்
மூவர் பலியாகியும் ,மேலும் இருவர் படுகையமடைந்த மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது
அகதியாக நுழைந்த இந்த தீவிரவாதி நடத்திய கொலை வெறி ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரனோ அதிகரிப்பு – இரண்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதும் லொக்கடவுன்
கொரனோ அதிகரிப்பு – இரண்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதும் லொக்கடவுன்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்
அதிகரிப்பை அடுத்து எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாடளாவிய
ரீதியில் அடித்து பூட்டும் நிகழ்வு ஆரம்பிக்கும் படி மருத்துவ நிபுணர்கள் பிரதமர் ஜோன்சனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்
தொடர்ந்து நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதற்கு இந்த பிரகடனம் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
நத்தார் தினம் வரைக்கும் இழுத்தடிப்பு நிலையை
மேற்கொள்ளஜோன்சன் முயற்சித்து வந்த நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தி 280 பேர் பலியாகியும் 23 ஆயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர்
அப்படி என்றால் எதிர் வரும் இரு வாரத்தில் இருந்து புதிய அதிரடி அறிவிப்புக்கள் வெளியாகலாம்
மக்களே பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுங்கள் ,இந்த நீடிப்பு மாசி வரை செல்லும் என எதிர்பார்க்க படுகிறது
குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 13 அதிகாரிகளுக்கு கொரோனா.
குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 13 அதிகாரிகளுக்கு கொரோனா.
கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை, குறித்த பிரிவின் உயர் அதிகாரியொருவர் லங்காதீப இணையத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் அவருடன் தொடர்புகளை பேணிய ஏனைய 20 அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த பி.சி.ஆர். சோதனை முடிவுகளில் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா இல்லாத மாவட்டம் எது
இலங்கையில் கொரோனா இல்லாத மாவட்டம் எது
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (30)
வரையிலும் 5606 ஆக இருந்தது. அவர்கள் எந்ததெந்த மாவட்டங்களில் இருக்கின்றனர் என்பது தொடர்பிலான விவரம்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நபரும் இல்லாத
மாவட்டம், கிளிநொச்சி மாவட்டமாகும் என கொவிட்−19 ஒழிப்பிற்கான
தேசிய செயற்பாடு மையம் அனுப்பிவைத்துள்ள புள்ளிவிவரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன
வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் அமுலாக்குமாறு உத்தரவு
வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் அமுலாக்குமாறு உத்தரவு
கொவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மீள அமுலாக்குமாறு
மேல் மாகாணத்திலும், ஏனைய பிரதான நகரங்களிலும் இயங்கும் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் அமுலானது. அதன் போது கிடைத்த அனுபவங்களைப்
பயன்படுத்தி சேவைகளை வழங்குவதற்கு மாற்றுத் திட்டங்களை வகுக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம
செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களங்கள் – கூட்டுத்தாபனங்கள் – நியதிச் சபைகள் ஆகியவற்றின்
தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர அனுப்பி வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுக்கு இந்த உத்தரவு விசேடமாக ஏற்புடையதாகும்.
இந்த மாவட்டங்களையும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அபாய வலயங்களாக பெயரிட்டுள்ள பிரதேசங்களையும்
தவிர ஏனைய மாவட்டங்களில் இயங்கும் அரச நிறுவனங்கள் சுகாதார விதி முறைகளை கடுமையாக அமுலாக்கி வழமை போல் இயங்க வேண்டும்.
கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதைத் தமது விடயதானத்திற்குள் உள்ளடக்கிய சகல சேவைகளையும் வழங்குவதற்கு நிறுவனத் தலைவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என
ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நிறுவனங்களும் தூரத்திலிருந்து நிறைவேற்றக்கூடிய
பணிகளையும், வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்களையும் தீர்மானிக்கும் அதிகாரம் நிறுவனத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.
உரிய நிர்ணயங்களை மேற்கொண்ட பின்னர், ஆவணங்களையும், உபகரணங்களையும் முறையான அனுமதியுடன் ஊழியர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். காலை 8.30 தொடக்கம்
மாலை 4.15 வரை வீடுகளில் இருந்து வேலை செய்ய முடியும். ஊரடங்குச்சட்டம் அமுலாக்கப்படாத சந்தர்ப்பங்களில் தேவைக்கு ஏற்ற நேர மாற்றங்களை மேற்கொள்ள நிறுவனத் தலைவர்களுக்கு
அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்திற்குள் வராத ஊழியர்களை மேலதிக மனித வளங்கள் தேவைப்படும் நிறுவனங்களுடன் இணைத்துக் கொள்ள முடியும்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை சிறப்பாகவும், செயற்றிறனாகவும் முன்னெடுக்க மாற்று தொலைத்தொடர்பாடல்
ஊடகங்களைப் பயன்படுத்தலாம். இவற்றில் குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி செயலிகள் போன்றவற்றை உள்ளடக்க முடியும்.
வீட்டிலிருந்து வேலை செய்வதற்குத் தேவையான நிதியை வழங்கும் பொறுப்பு பிரதம கணக்காளரைச் சார்ந்ததாகும். மக்கள் தமது தேவைகளை தாமதமின்றி முன்வைப்பதற்கு வசதியாக,
பொதுமக்களுக்கு நேரடியாக சேவை வழங்கும் சகல நிறுவனங்களும் ஒன்-லைன் தளங்களை உருவாக்க வேண்டுமெனவும் சுற்றுநிரூபத்தில் கூறப்பட்டுள்ளது. சுய
தனிமைப்படுத்தலில் ஈடுபடும் ஊழியர்களையும் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்கலாம். எனினும், கொவிட்-19 நோய்
அறிகுறிகள் தென்படும் ஊழியர்களிடம் எந்தவொரு வேலையையும் ஒப்படைக்கக்கூடாது.
சகல அரச நிறுவனங்களும் கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென சுற்றுநிரூபத்தில் கூறப்பட்டுள்ளது. துறைமுகங்கள்
சார்ந்த பணிகளையும், சுங்கம் – நீர்விநியோகம் – மின்விநியோகம் முதலான சேவைகளையும் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல
வேண்டுமெனவும் ஜனாதிபதி செயலாளர் விடுத்த சுற்றுநிரூபத்தில் கூறப்பட்டுள்ளது.
கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (2020.10.29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், கௌரவ பிரதமர் மற்றும்
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது மத்திய கலாசார நிதியத்தின் கீழ் காணப்படும் நிறுவன கட்டுமானங்கள் நேரடி ஒப்பந்த அடிப்படையில் அரச
கட்டுமான நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு கௌரவ பிரதமர் அறிவுறுத்தினார்.
தம்பானே பழங்குடியினருக்கு சொந்தமான, ஐக்கிய இராச்சியத்தின் எடின்பர்க் பல்கலைக்கழக கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்குடியின மக்களது மண்டைஓடுகள்
மீண்டும் பழங்குடி மக்கள் தலைவர் ஊறுவரிகே வன்னிலஅத்தன் அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை எடின்பர்க்
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இடம்பெற்றது.
அதற்கமைய தொல்பொருள் மதிப்புவாய்ந்த, பழங்குடி மக்களுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் இந்த எலும்புகூடுகளை
வைப்பதற்கு கலைக்கூடமொன்றை நிறுவுவதற்கு மத்திய கலாசார நிதியத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் இதன்போது பிரதமர் அறிவுறுத்தினார்.
2021ஆம் ஆண்டுக்கான மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டத்திற்கான 3400 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதும் இக்கூட்டத்தின் போது இடம்பெற்றது.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் (சட்டம்) கணேஷ் தர்மவர்தன, சுற்றுலாத்துறை அமைச்சின்
செயலாளர் சுனில் ஹெட்டிஆராச்சி, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 98 பேர் கைது
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 98 பேர் கைது
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 98 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) காலை 06 மணிமுதல் இன்று (30) அதிகாலை 05
மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களில் 42 பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா வைத்திருந்த 06 பேர், சட்டவிரோத மதுபானங்களுடன் 37 பேர், கோடா வைத்திருந்த 06 பேர் மற்றும் ஏனைய
குற்றச்சாட்டுகளில் 07 பேர் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஈரான் தூதகர அதிகாரிக்கு பிடியாணை அனுப்பிய லண்டன் – முறுகல் உச்சம்
ஈரான் தூதகர அதிகாரிக்கு பிடியாணை அனுப்பிய லண்டன் – முறுகல் உச்சம்
லண்டனியில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிக்கு பிரிட்டன்
பிடியாணை அனுப்பியுள்ளது ,
இவர் மீது சுமத்த பட்டுள்ள குற்ற சாட்டுக்கள் தொடர்பில் நீதி
விசாரணைக்கு உட்படுத்த பட்ட நிலையில் இந்த பிடிவிறாந்து பிறப்பிக்க பட்டுள்ளது
மேற்படி செயல் ஈரான் மற்றும் பிரிட்டனுக்கு இடையிலான
இராச்சிய உறவுகளில் பலத்த முறுகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

அது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்
அது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட இருந்ததாக ஒரு அறிக்கை நேற்று சமூகவலைதளங்களில் வைரலானது. அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட இருந்ததாக ஒரு அறிக்கை நேற்று சமூகவலைதளங்களில் வைரலானது. அந்த அறிக்கையில்
கொரோனா நோய் தொற்று காரணமாக தன்னுடைய அரசியல் திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியவில்லை
என்பதையும் மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் ஆலோசனைப்படி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்குவது இயலாத செயல்
என்பதையும் ரஜினி விளக்கி இருந்தார். ரஜினி தரப்பில் இருந்து இதை உறுதிபடுத்தாத நிலையில் அந்த அறிக்கை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. அது
என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு
மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி
மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை
ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் கைகோர்த்துள்ளது.
ரஷிய தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை – மேலும் ஒரு நிறுவனம்
ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி, இந்தியாவில்
பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த பரிசோதனை
பணியில், மருத்துவ உலகில் முன்னணி நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் கைகோர்த்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் ஸ்புட்னிக்-5 மருத்துவ பரிசோதனைகள் குறித்து
அந்த நிறுவனம் ஆலோசனை வழங்கும். இதற்காக மத்திய உயிரி தொழில்
நுட்பத்துறையுடனும், உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலுடனும் (பிராக்) இணைந்து செயல்படும்
பிரான்சில் 400,000 பேர்பலியாவர்கள் – புதிய லொக்டவுன் அதிரடி அறிவிப்பு- வெளியில் சென்றால் கைது
பிரான்சில் 400,000 பேர்பலியாவர்கள் – புதிய லொக்டவுன் அதிரடி அறிவிப்பு- வெளியில் சென்றால் கைது
பிரான்சில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து நான்கு லட்சம் மக்கள் பலியாவார்கள் என
அறிவிக்க பட்டுள்ளது ,இதனை அடுத்து பிரான்ஸ் அதிபர் கடந்த தினம் இரவு புதிய லொக் டவுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
நாளை வெள்ளி முதல் எதிர்வரும் டிசாம்பர் முதலாம் திகதி வரை December 1 புதிய முடக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது ,எனினும்
பாடசாலைகள் மற்றும் பொது விடயங்கள் வழமை போல இடம்பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது
வெளியில் நடமாடுபவர்கள் அனுமதி அடையாள பாத்திரம் எடுத்து செல்ல வேண்டும் காவல்துறை சோதனைகள் இடம்பெறும் ,மேலும்
மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என கோரப்பட்டுள்ளது
மேலும் உணவகங்கள்,பார்கள் மீளவும் அடித்து பூட்ட படுகிறது ,நாள் ஒன்றுக்கு
ஒரு மணித்தியாலம் மட்டும் ஒருவர் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிட முடியும்
உயிர் பலி நானூறை தாண்டிய நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு
வெளியாகியுள்ளது ,விரைவில் விமான நிலையங்கள் ,மற்றும் எல்லைகள் மூடப்படலாம் என எதிர்பார்க்கலாம்
ஆனால் ஐரோப்பியை எல்லைகள் அடித்து மூடப்பட்டுள்ளன

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு ஒருலட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு – 85 ஆயிரம் பலியாவர்கள் எச்சரிக்கை
பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு ஒருலட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு – 85 ஆயிரம் பலியாவர்கள் எச்சரிக்கை
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில்
இருந்து எதிர் வரும் டிசம்பர் மாத்திற்குள் எண்பத்தி ஐந்தாயிரம் பேர் பலியாவார்கள்
எனவும் தற்பொழுது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்க பட்ட வண்ணம் உள்ளனர் என தொற்று நோய் தடுப்பு நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இதனை அடுத்து எதிர்வரும் எட்டு வாரத்திற்குள் பிரிட்டன் முழு லொக் டவுன் நிலைக்கு செல்லும் என ஏதிர் பார்க்க படுகிறது
அரசு நிகழ்கால இழப்புக்களை குறைத்தே கூறி வருவதான குற்றசாட்டு
மக்கள் மன்றம், முன் வைத்து வருகிறது .
லண்டன்
அதி உயர் நோயாளர்களை கொண்ட நகரமாக மாற்றம் பெற்றுள்ளது ,
இதனை அடுத்து பாதிப்பு கூடிய கிராம பகுதிகள் வீதிகள் போக்குவரத்து
தடை செய்யப்பட்டுள்ளன ,விரைவில் சில கிராமங்கள் முற்றாக முடக்க நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்க படுகிறது







