தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கான அறிவிப்பு.

Spread the love

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கான அறிவிப்பு.

சிகிச்சைப் புத்தகத்தைப் பொலிஸ் சாவடியில் வழங்கி வீடுகளுக்கே மருந்து வகைகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மாவட்டங்களில் தற்போது

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மாநகர எல்லை பகுதிக்குள் வட கொழும்பு மற்றும் மத்திய கொழும்பு பிரதேசங்களில் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்ட சில

பிரதேசங்கள் உண்டு. இந்த தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில், அதி உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட ஏனைய நோய்களுக்காக சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளும் நோயாளிகள் இருப்பார்களாயின் அவர்கள் கொழும்பு மாநகர

எல்லைக்குள் அருகாமையில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக தம்மை பதிவு செய்ய வேண்டும். இல்லையாயின் தமது கிளினிக் புத்தகத்தை அருகாமையில் உள்ள பொலிஸ்

சாவடியில் வழங்கினால் உங்களுக்கு தேவையான மருந்துகளை உங்கள் வீடுகளுக்கே கிடைக்கக் கூடிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பல வைத்திய குழுக்களை ஈடுபடுத்தி நடமாடும் சிகிச்சை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நடமாடும் சிகிச்சை குழுக்களிடம் சிகிச்சை

ஆவணத்தை வழங்கினால் சம்பந்தப்பட்ட வைத்தியசாலையிலிருந்து தேவையான மருந்து வகைகளை வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம். யாராவது அல்லது நோயாளிகளுக்கு

சிகிச்சைக்கு சமூகமளிக்க முடியவில்லையாயின் இந்த நடவடிக்கையை பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

நேற்றைய தினம் 335 கோவிட் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 167 பேர் கொழும்பு பிரதேச எல்லைக்கு உட்பட்டவர்கள். ஆகக்கூடுதலான நோயாளர்கள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அடுளுகம கிராம உத்தியோகத்தர் பிரிவிலேயே பதிவாகியுள்ளனர். அங்குள்ள ஏனைய

நோயாளர்களை இனங்காண்பதற்காக இன்றைய தினம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Author: நலன் விரும்பி

Leave a Reply