Author: நலன் விரும்பி
இலங்கையில் Oxford-AstraZeneca ஊசி செலுத்திய மூவர் இரத்த உறைவால் மரணம்
இலங்கையில் Oxford-AstraZeneca ஊசி செலுத்திய மூவர் இரத்த உறைவால் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் நோக்குடன்
Oxford-AstraZeneca தடுப்பூசிகள் செலுத்த பட்டன
மேற்படி ஊசி செலுத்த பட்ட மூவர் இரத்த உறைவால் மரணமாகியுள்ளதாக சுகாதா அமைச்சர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்
ஐரோப்பவில் இந்த ஊசிகள் தடை செய்ய பட்டுள்ளது ,இதனை அடுத்து இலங்கையிலும் இது தடை விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
மக்களே மேற்படி ஊசியினை செலுத்தி தி கொள்ளாதீர்கள் ,எச்சரிக்கை
இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் தீவிரமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில்
தற்போது சிவப்பு
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
கொழும்பு பகுதியில் 294 பேருக்கு மேலாக பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து தமிழர் பகுதி யாழிலும் இந்த நோயானது வேகமாக பரவி வருவதாக இராணுவம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது
சிறை சாலைகளிற்கு கமரா பொருத்தும் கோட்டா அரசு – ஏன் இந்த அவசரம் ..?
சிறை சாலைகளிற்கு கமரா பொருத்தும் கோட்டா அரசு – ஏன் இந்த அவசரம் ..?
ஆளும் கோட்டா அரசு சிறைச்சாலைகளிற்கு புதிதாக கமரா பொருத்தும் நகர்வை தீவிர படுத்தியுள்ளது ,.
மகசீன் மற்றும் வெலிக்கடை சிறை சாலைகளிற்கே இந்த கமராக்கள் பொருத்த படுகிகின்றன
போதைவஸ்து விநியோகம் தீவிரமாக ஈடுபடுகிறது என கூறியே இந்த கண் காணிப்பு வலயம் இறுக்க படுகிறது
எனினும் விடயம் வேறு பக்க சமாச்சாரம் உள்ளதாக கசிவுகள் தெரிவிக்கின்றன
யாழில் ரவுடிகள் மோதல் – ஒருவர் வெட்டி படுகொலை – ஐவர் காயம்
யாழில் ரவுடிகள் மோதல் – ஒருவர் வெட்டி படுகொலை – ஐவர் காயம்
யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில்
சிக்கி ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
இறந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்க படுகிறது
கட்டாக்காலி ரவுடிகளின் அடடூழியம் யாழ் மண்ணில் சமீப காலங்களாக அதிகரித்து செல்வதும்
,அதுவே இறுதியில் கொலையில் முடிவடைவதும் குறிப்பிட தக்கது
வீதி விபத்துக்களில் 75 பேர் மரணம் – அதிகரிக்கு விபத்துக்கள்
வீதி விபத்துக்களில் 75 பேர் மரணம் – அதிகரிக்கு விபத்துக்கள்
இலங்கையில் கடந்த ஒரு வார காலத்தில் வீதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி சுமார் 75 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பல நூறு பேர் காயமடைந்துள்ளனர் ,சாலை விதிகளை கடைபிடிக்காது சாரதிகள்
செல்வதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் விதமாக இன்று (21) காலை 8.45
மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலத்தப்பட்டது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பங்களிப்புடன் கொச்சிக்கடை தேவலாயத்தில் இந்த நிகழ்வு ஆரம்பித்து கைப்பட்டிருந்து.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டு இன்றுடன் இரண்டு வருங்களை நிறைவை பல்வேறு விஷேட ஆராதனைகளும் இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவில் பிச்சைக்காரர் மார்மாமான முறையில் மரணம்
முல்லைத்தீவில் பிச்சைக்காரர் மார்மாமான முறையில் மரணம்
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் நேற்று (19) இரவு வீதியில் படுகாயமடைந்த
நிலையில் இருந்த நபர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் ஹட்டன் டிக்கோயா பகுதியை சேர்ந்த 36 அகவையுடைய நல்லு சிவராசா என்பவர் முள்ளியவளை தண்ணீரூற்று முல்லைத்தீவு பகுதிகளில் யாகசம் பெற்று வந்துள்ளார்.
இவர் பல தடவைகள் மது அருந்திய நிலையில் வீதிகளில் விழுந்து காணப்பட்டுள்ளார் என குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னிலையில் நேற்று தண்ணீரூற்று பகுதியில் வீதியில் காயமடைந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார்
இவரை அவசர நோயாளர் காவு வண்டிமூலம் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்து முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
புத்தர் சிலை உடைப்பு – 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
புத்தர் சிலை உடைப்பு – 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
கேகாலை நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவனெல்ல உட்பட பல இடங்களிலுள்ள புத்தர் சிலைகளை உடைத்து இனங்களுக்கு
இடையிலான ஒற்றுமையை சீர்குலைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் இந்த குற்றப்பத்திரம்
தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒருவாரம்
ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒருவாரம்
இம்முறை ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்திற்கான பாடசாலைகளின் இரண்டாவது வாரம் சுகாதார பரிந்துரைகளுக்கமைவாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 15 மாணவர்கள் உள்ள வகுப்பொன்று வாரத்தின் எல்லா நாட்களும் நடைபெறவேண்டும்.
அத்துடன், 16 க்கும் 30 க்கும் இடைப்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்பொன்று 2 குழுக்களாகப் பிரித்து ஒரு வாரத்திற்கு ஒருமுறை என்றவாறு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முப்பது மாணவர்களைவிட கூடிய வகுப்புக்கள் மூன்று குழுக்களாகப் பிரித்து சமனான எண்ணிக்கையிலான நாட்களில் வகுப்புக்களை நடத்த வேண்டும்.
மேலும் நேற்றைய தினம் அதிகளவிலான பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை உயர் மட்டத்தில் காணப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதேவேளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஏப்ரல் மாதம் 27ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் விற்பனை நிலையம்
தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் விற்பனை நிலையம்
சுய தொழில் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் நோக்கில் இராஜாங்க
அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நுவரெலியா பருவகால கொள்வனவு தொகுதியில் பிரஜா ஷொப்பிங் விற்பனை குடில் இன்று (20.04.2021) ஆரம்பிக்கப்பட்டது.
பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பளார் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டின் மூலம் பல
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் மற்றும் முதலீட்டாளர்களை கவருவதை இலக்காக கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள்- நாமல் அறிவிப்பு
சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள்- நாமல் அறிவிப்பு
சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது இலக்காகும்.
நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 59 விளையாட்டு வீரர்கள் தொழில் ரீதியில் ஒப்பந்தங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
மஹேல ஜெயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் மூலம் தேசிய விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான திட்டம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
முதல் முறையாக தொழில் ரீதியில் விளையாட்டு வீரர்களுக்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
10 மில்லியன் ரூபா தேயிலை கொண்டனர் மடக்கி பிடிப்பு
10 மில்லியன் ரூபா தேயிலை கொண்டனர் மடக்கி பிடிப்பு
இலங்கை கொழும்பு துறைமுகத்தில் நீண்ட கொண்டனர் ஒன்றுக்குள் இருந்து தேயிலை தூள்
கண்டு பிடிக்க பட்டுள்ளது
ஏற்றுமதிக்கு உகந்த முறையற்ற தேயிலை தூள்களை ஏற்றுமதி செய்ய முற்பட்ட வேளையே இந்த
முற்றுகை இடம்பெற்றுள்ளது
மேற்படி கொள்கலன் தொடர்பில் சுங்க பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
பஸ்வண்டிகளில், புகையிரதத்தில் பயணிப்போருக்கு வயதுக்கட்டுப்பாடு
பஸ்வண்டிகளில், புகையிரதத்தில் பயணிப்போருக்கு வயதுக்கட்டுப்பாடு
பைஷல் இஸ்மாயில் –
பஸ்வண்டிகளில், புகையிரதத்தில் பயணிப்போருக்கு வயதுக்கட்டுப்பாடு இல்லை. ஏனைய சமயத்தலங்களுக்கு செல்வோருக்கு வயதுக் கட்டுப்பாடு இல்லை. பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு கல்வி கற்போர் மிகப்பெரும்பாலானோர் 18 வயதுக்கு
குறைந்தவர்களாகும். இந்நிலைமை இவ்வாறிருக்க பள்ளிவாயல்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் செல்ல முடியும் என்ற வரையறை எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது
என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றேன் என்று திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பினார்.
நோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19) அவரது கிண்ணியா அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், குறித்த சுற்றறிக்கை இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட சமய ரீதியான அடிப்படை உரிமையை மீறுகின்ற செயலாகும். நோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக 20 க்கு
ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன? பள்ளிவாயல்களினால் தான் கொரோனா பரவுகின்றது என்ற ஒரு மாயையை ஏற்படுத்த இதன் மூலம் முயற்சி
எடுக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது. இது முஸ்லிம் சமுகம் பற்றிய மோசமான ஒரு மனப்பதிவை ஏனையோருக்கு ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
இது குறித்து 20 வது திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும். ஒருங்கிணைப்புத் தலைவர் பதவி, ஒருசில வேலைவாய்ப்புகள், வேறு சில தனிப்பட்ட நன்மைகள் என்பவற்றுக்காக தொடர்ந்து முஸ்லிம்
சமுகத்தின் உரிமைகளை பறிகொடுத்து வரலாற்றில் இடம் பிடிக்கப்போகின்றீர்களா? அல்லது முஸ்லிம் சமுகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கப் போகின்றீர்களா? என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
எனவே, 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்கள் தற்போது அரசாங்கத்தின் பக்கம் உள்ளதால் இந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேச வேண்டும். முஸ்லிம்கள் உரிமைகள் தொடர்பான விடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மகிந்த கூட்டத்தில் வாய் சண்டை – மூவர் வெளிநடப்பு
மகிந்த கூட்டத்தில் வாய் சண்டை – மூவர் வெளிநடப்பு
அலரி மாளிகையில் மகிந்த நடத்திய கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்காரஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர்
இவர்களே மகிந்தவின் வெற்றிக்கு முன்னின்று உழைத்தவர்கள் என்பதும் தற்போது அவர்களே
அந்த கட்சிக்குள் மோதலில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிட தக்கது
இலங்கையில் மாகாணசபை தேர்தல் விரைவில் நடத்துங்கள் – இந்தியா வலியுறுத்தல்
இலங்கையில் மாகாணசபை தேர்தல் விரைவில் நடத்துங்கள் – இந்தியா வலியுறுத்தல்
இலங்கையில் மாகாணசபை தேர்தல் விரைவில் நடத்த பட வேண்டும் என இந்தியா இலங்கையிடம் கோரியுள்ளது
இலங்கையில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் இலங்கையை இந்தியா கட்டுப்படுத்த முனைந்து
வருகிறது இதன் ஊடாக அம் பலமாகியுளளது
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு -905 பேர் கைது
18 மணித்தியாலங்களில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 3,871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய கடந்த 18 ஆம் திகதி மதியம் 12 மணி தொடக்கம் 18
மணித்தியலாயங்கள் வரையான காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளபபட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில்
905 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்
இருவர் வெட்டி கொலை – எகிறும் படுகொலைகள்
நுரைச்சோலை ஆலங்குடாவ பிரதேசத்தில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 43 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ரத்கம, சிறிகந்துரவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுத்ததால் தாக்கல் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளி இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய பெண்கள் இருவர் கைது
பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய பெண்கள் இருவர் கைது
இலங்கையில் காவல்துறை அவசர இலக்கத்திற்கு அழைப்பினைமேற் கொண்டு போலி
தகவல்களை வழங்கிய இரு பெண்கள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்ய பட்ட பெண்கள் தற்போது தீவிர விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளனர்
நாடு முழுவதும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு
நாடு முழுவதும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு 2 வருடம் பூர்த்தியடையும் எதிர்வரும் புதன்கிழமை நாடு முழுவதும்
விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அன்றைய தினம் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட தேவாராதனை நடைபெறவுள்ளது.
இவற்றுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இதுதொடர்பாக
அனைத்து பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர்களின் தொகுதி, பொலிஸ் பிரிவின்
அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் இது தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
20ம் திருத்தத்துக்கு வாக்களித்த எம்பீக்களுக்கு “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் இதோ வருகிறது-மனோ கணேசன்
20ம் திருத்தத்துக்கு வாக்களித்த எம்பீக்களுக்கு “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் இதோ வருகிறது-மனோ கணேசன்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
20A திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க “மாட்டோம், மாட்டோம்” என இரண்டு முறை தாம் இப்போது
அங்கம் வகிக்கும் அரசுக்கு இடித்துக்கூறி, பாவமன்னிப்பு பெற சந்தர்ப்பம் வருகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
இன்றைய அரசாங்கம், பாராளுமன்றத்தில் இரண்டு சட்ட மூல மசோதாக்களை கொண்டு வந்து நாட்டையும், இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களையும் ஆபத்தில் போட திட்டமிடுகிறது. இந்த ஆபத்துகள் இன்று எம் கண் முன்னே தெரிகின்றன.
ஒன்று, நமது தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை அழித்து, ஒழிக்கும் உத்தேச இரகசிய திட்டமிடலும், முயற்சியும் ஆகும். அதாவது, இந்நாட்டில் இன்றுள்ள தேர்தல்
முறை சட்டங்களை திருத்தியமைக்க, இவர்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கொண்டுவர திட்டமிடும் சட்டமாகும்.
இரண்டாவது, இந்நாட்டில் நிலவும் சட்டங்களிலிருந்து விலக்களித்து, சீன நாட்டுக்கு விசேட சலுகைகளை அளித்து, கொழும்பு தலைநகரை ஒட்டி, மேற்கு கரையில் அமைகின்ற, தனியொரு நிர்வாகம் கொண்ட “துறைமுக நகர்” ஆகும்.
இந்நாட்டில் தமிழ் மக்களின் ஜனத்தொகையில் 50 விகிதமும், முஸ்லிம் மக்களின் ஜனத்தொகையில் 65 விகிதமும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே, தென்னிலங்கையில்
வாழ்கிறார்கள். இப்படி பரவி, விரவி வாழும் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை பிரதிநிதித்துவங்களை இல்லாமல் ஒழிக்கும் புதிய தேர்தல் முறைமையை, இன்றைய அரசின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன கொண்டு வர முயல்கிறது.
அதிஷ்டவசமாக, இன்று அரசின் உள்ளே இருக்கும் பங்காளி சிறுகட்சிகளின் இருப்பையும் இந்த புதிய தேர்தல் முறை யோசனைகள் சவாலுக்கு உட்படுத்துகின்றன. ஆகவே அரசுக்கு உள்ளே
இருக்கும், சிங்கள மக்களை பிரதிநித்துவம் செய்யும் சிறு பங்காளி கட்சிகள் இதை அரசுக்கு உள்ளேயே இருந்து எதிர்க்கின்றன. நாளை இந்த கட்சிகள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இது தொடர்பில் கலந்துரையாடுகின்றன.
ஆனால், அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் பங்காளி கட்சியினரும், 20ம் திருத்தத்துக்கு ஆதரவாக அரசு பக்கம் தாவிய எம்பீக்களும் அமைதி காக்கின்றனர். இது இன்று தமிழ் பேசும் மக்களின் சாபக்கேடாக இருக்கிறது.
இன்று இருக்கும் தமிழ் பேசும் எம்பீக்கள், அமைச்சர்கள் நாளை இல்லாமல் போகலாம். ஆனால், இந்த நாடு இருக்கும். இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழத்தான் போகிறார்கள். இந்த உத்தேச தேர்தல்முறை மாற்ற முயற்சி, 20ம் திருத்தத்தை விட மிக மிக ஆபத்தானது. எமது மக்களின் இருப்பை இந்நாட்டில் இல்லாமல் செய்யும் உள்நோக்கம் கொண்டது.
ஆகவே எதிர்காலத்தில் எமது தமிழ், முஸ்லிம் இனங்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்யும் சட்டமூலங்களுக்கு முட்டாள்தனமாக கையை தூக்கி, வரலாற்றின் சாபத்துக்கு மீண்டும் ஒருமுறை உள்ளாக வேண்டாம் என சம்பந்தபட்டவர்களுக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.
கடந்த அரசில் பங்காளி கட்சி அமைச்சர்களாக நாம் இருக்கும் போது, நமது மக்களின் இருப்புக்கு ஆபத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் உரக்க குரல் கொடுத்து அரசுக்கு உள்ளேயே சண்டையிட்டு, எமது இருப்பை உறுதி செய்தோம் என்பதையும் இங்கே நான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் பெருமையுடன் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
அதேபோல், அடுத்த தேசிய ஆபத்து, சீன நாட்டுக்கு விசேட சலுகைகளை அளித்து, இந்நாட்டில் நிலவும் சட்டங்களிலிருந்து விலக்களித்து, கொழும்பு தலைநகரை ஒட்டி, மேற்கு கரையில் அமைக்கின்ற தனியொரு நிர்வாகம் கொண்ட “துறைமுக நகர்” ஆகும். இதற்கான விசேட வர்த்தமானி பிரகடனம் வெளியாகி விட்டது.
நாளை பாராளுமன்ற கட்சி தலைவர் கூட்டத்தில், இது தொடர்பில் பேசப்படும். நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின் இந்த சட்டமூலம் பாராளுமன்றம் வருமா, இல்லையா, வருமானால், வரும் திகதி என்பவை மீண்டும் கட்சி தலைவர்கள் கூடி முடிவு செய்வோம்.
இந்நிலையில், 20ம் திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்கள் ஒன்று கூடி, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை ஒழிக்கும் தேர்தல் முறைக்கு ஆதரவாக
நாம் வாக்களிக்க மாட்டோம் என்றும், துறைமுக நகரை சீனாவுக்கு தாரை வார்க்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக நாம் வாக்களிக்க மாட்டோம் என்றும், தாம் இன்று அங்கம் வகிக்கும் அரசுக்கு உறுதியாக இடித்துரைக்க வேண்டும் என நான் இந்நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.







