Author: நலன் விரும்பி
மட்டக்களப்பில் 14 நாட்களில் 190 கொரோனா தொற்றாளர்கள்
மட்டக்களப்பில் 14 நாட்களில் 190 கொரோனா தொற்றாளர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 நாட்களில் 190 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஒரு வாரத்தில் 143 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும்
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (05) காலை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது
அலையில் 14 நாட்களில் 190 பேர் தொற்றுக்குள்ளானதாகவும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 143 பேர் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொவிட் சிகிச்சை நிலையங்கள் முற்றுமுழுதாக நிரம்பியுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்படும் கொரோனா
தொற்றாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பவேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 30 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் 12 பேர் களுவாஞ்சிகுடியிலும் 09 பேர் மட்டக்களப்பிலும் 05 பேர் செங்கலடி பகுதியிலும் 04 பேர் காத்தான்குடியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1173 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இவர்களின் 1020 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.143 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரையில் 10 மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது அலையினைப்பொறுத்தவரையில் 14 நாட்களில் 190 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதிலும் இறுதி ஏழு நாட்களும் 143 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். மூன்றாவது அலை காரணமாக ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கொரோனா சிசிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. காத்தான்குடி, கரடியனாறு, பெரியகல்லாறு ஆகிய இந்த மூன்று வைத்தியசாலைகளும் 400 நோயாளர்களை பராமரிக்ககூடிய வகையில் உள்ளன.
இந்த மூன்று வைத்தியசாலைகளும் முற்றுமுழுதாக நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன. இதன்காரணமாக புதிதாக அடையாளம் காணப்படுபவர்கள் அனுப்பவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் 1000 கட்டில்களை அதிகரிக்குமாறு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் நூறு கட்டில்களை அதிகரிக்கவுள்ளோம்.
கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக ஒட்சிசன் தேவைப்பாடு அதிகளவில் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்சிசன் சிலின்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்சிசன் திட்டம் இல்லாத காரணத்தினால் ஒட்சிசன் தேவைக்காக மகாஓயா, தெகியத்தன்கண்டிய பகுதிகளில் இருந்து ஒட்சிசனை எடுத்துவரவேண்டியுள்ளது. ஒரு
ஒட்சிசன் தொகுதியை நிறுவுவதற்கு 42மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொவிட் தொற்றாளர்கள் தீவிரமான நிலையினையடைந்து நியுமோனியாவுக்கு தள்ளப்படும்போது அவர்களை பராமரிப்பதற்காக காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை
போன்ற வைத்தியசாலைகளில் எச்யு மற்றும் ஐசியு ஆகியவற்றினையும் நிறுவவுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஏழு நாட்களில் அவை செயற்பாட்டுக்கு வருமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்
இந்தியர்கள் இலங்கை வர முற்றாக தடை
இந்தியர்கள் இலங்கை வர முற்றாக தடை
இந்தியர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி
நுழைபவர்கள் செய்ய படுவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இந்தியாவில் அதிகமாக நோயானது பரவி வருவதால் இந்த இடைக்கால பயண தடை விதிக்க
பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
கொரனோவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்வு
கொரனோவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்வு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 734
ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு நிவாரணம்
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு நிவாரணம்
நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு
நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் அங்குராந்கெத்த, ரன்தெட்டிய, வலப்பனே நில்தண்டாஹின்ன, நோர்வூட் இன்ஜஸ்டி
கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், ஹட்டன் பொலிஸ் பிரிவின் புரொடைஸ் தோட்ட மேற்பிரிவிற்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் சிலவற்றை திறப்பதற்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்கான சுமார் இரண்டாயிரம் பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரனோ விதிகளை மீறிய 238 பேர் கைது
கொரனோ விதிகளை மீறிய 238 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறிய 238 பேர் காவல் துறையினரால் கைது செய்ய
பட்டுள்ளனர்
கைதானவர்களில் பலருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முன்னிலை படுத்த
பட்டுள்ளனர்
யாழில் முககவசம் அணியாதவர்கள் – நாய்கள் போல பிடித்து செல்லும் பொலிஸ் VIDEO
யாழில் முககவசம் அணியாதவர்கள் – நாய்கள் போல பிடித்து செல்லும் பொலிஸ்
இலங்கை யாழ்ப்பாணத்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து அணைத்து
மக்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்து வருகின்ற
பொழுதும் ,அதனை அலட்சியம் செய்து தமிழர்கள் செல்கின்றனர்
அவ்வாறானவர்களை கண்ணுற்ற போலீசார் அவர்களை தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது
நான் புலி எண்டா நீ நாயா –? சீறிய சாணக்கியன் – video
நான் புலி எண்டா நீ நாயா –? சீறிய சாணக்கியன் – video
இலங்கை பாரளுமன்றில் சாணக்கியன் எம்பி சிங்கள எம்பியோ ஒருவர் கொட்டி யா என கூப்பிடும் பொழுது
நான் புலி எண்டால் நீ நாயா …போடா …என பேசியுள்ள பேச்சு தற்போது வைரலாகி வருகிறது
ஸ்ரீதரனுக்கு போட்டியாக இவரது பேச்சு இவ்விதம் அமைவதும் ,சுமந்திரனின் செல்ல பிள்ளையாக
விளங்கி வருவதும் மக்கள் அறிந்ததே
10 இலட்சம் தடுப்பூசிகளைஇலங்கைக்கு வழங்கும் பைசர் நிறுவனம்
10 இலட்சம் தடுப்பூசிகளைஇலங்கைக்கு வழங்கும் பைசர் நிறுவனம்
எதிர்வரும் 3 மாதங்களில் 1 இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும்
இலங்கைக்கு வழங்க பைசர் நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ‘ஸ்புட்நிக்’ என்ற கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கின்றது.
மக்களுக்கு முறையான விதத்தில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றதா? என்பதை ஆராய்ந்த பின்னர் இந்தத் தடுப்பூசி தொகையை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்தது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியாவின் ‘சீரம்’ நிறுவனத்திடமிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைத்திருந்தன.
இதனைத் தொடர்ந்து சீனாவிடமிருந்து 6 இலட்சம் ‘சைனோபாம்’ தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்தன. இதேவேளை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் அமெரிக்காவின் ‘பைசர்’
நிறுவனத்துடனும், ரஷ்யாவின் ஸ்புட்நிக் நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றன.
ஸ்புட்நிக் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு 13 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவிருக்கின்றன. பைசர் நிறுவனம் இந்த மாதத்தில் 35 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
எதிர்வரும் 3 மாதங்களில் 1 இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு வழங்க பைசர் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக விநியோகிக்கப்படும் அஷ்ரா செனேக்கா தடுப்பூசியைப்
பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையும் தற்சமயம் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல!-மாணவர்களுக்கான செய்தியில் மனோ கணேசன்
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல!
உயர்தர மாணவர்களுக்கான செய்தியில் மனோ கணேசன்
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல. இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. பலநூறு,
ஆயிரம் புத்தம் புதிய வழிகளை, சந்தர்ப்பங்களை இன்று உலகம் உங்களுக்கு தினந்தோறும் வாரி வழங்குகிறது. ஆகவே சந்தோஷத்தையும், கவலையையும் ஒருசேர ஓரிரு நாட்களில், ஓரமாக
வைத்து விட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி, காரியத்தில் கண்ணாக நகருங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தொடர்பில் கருத்து கூறிய மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
உயர்தரப் பரீட்சை எழுதி அதில் பலன் பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள். முயற்சிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
பெறுபேறு என்பது ஒரு புள்ளிவிபரம். அது எதுவானாலும், அதைக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள். வானம் பரந்து, விரிந்து, திறந்திருக்கின்றது.
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல. இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. பலநூறு,
ஆயிரம் புத்தம் புதிய வழிகளை, சந்தர்ப்பங்களை இன்று உலகம் உங்களுக்கு தினந்தோறும் வாரி வழங்குகிறது.
அந்த வகையில் நீங்கள், உங்களுக்கு முன்னர் பிறந்தவர்களை விட அதிஷ்டசாலிகள். ஆகவே,
சந்தோஷத்தையும், கவலையையும் ஒருசேர ஓரிரு நாட்களில், ஓரமாக வைத்து விட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி, காரியத்தில் கண்ணாக நகருங்கள்.
கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம்
கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம்
கொவிட் எச்சரிக்கை காரணமாக, தனிமைப்படுத்தப்படுத்தப்படும் தனியார் ஊழயர்களுக்கு
நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
கொவிட் வைரஸ் பரவல் காரணமாக ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தனியார் நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
யாழில் – 55 மில்லியன் கேரளா கஞ்சா கடத்தல் முறியடிப்பு – மடக்கிய கடற்படை photo
யாழில் – 55 மில்லியன் கேரளா கஞ்சா கடத்தல் முறியடிப்பு – மடக்கிய கடற்படை photo
இந்தியா கேரளவில் இருந்து படகுகள் மூலம் 58 பொதிகளில் பொதி செய்ய பட்டு கடத்தி வரப்பட்ட
சுமார் 183 கிலோ கஞ்சா ஐலங்கை கடல் படையினரால் காங்கேசன்துறை கடல் பகுதியில் வித்து மடக்கி பிடிக்க பட்டது
இவ்வாறு கடத்தி வரப்பட்ட கஞ்சா தீயிட்டு கொழுத்த பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது


சூதாட்டம் ,கிளப்புக்களில் தங்கி குத்தாட்டம் போட்ட 73 பேர் கைது
சூதாட்டம் ,கிளப்புக்களில் தங்கி குத்தாட்டம் போட்ட 73 பேர் கைது
இலங்கையில் உடனடி அமுலுக்கு வரும் நிலையில் இரவிபு விடுதிகள் ,சூதாட்டம் ,பப்புக்கள்
என்பன அடித்து பூட்ட பட்டுள்ளன
அவ்வாறான தடை உத்தரவுகள் விதிக்க பட்ட பொழுதும் அதனை மீறி திறந்து நடத்திய குற்ற
சாட்டில் 73 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
யாழில் 42 பேருக்கு கொரனோ – நெருப்பு காய்ச்சலில் இறந்தனர் என கூறும் மருத்துவமனை
யாழில் 42 பேருக்கு கொரனோ – நெருப்பு காய்ச்சலில் இறந்தனர் என கூறும் மருத்துவமனை
யாழ்ப்பாணத்தில் கடந்த தினம் மட்டும் சுமார் 42 பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை இடம் பெற்று வருகிறது
இதே நோயினால் இறந்தவர்களை நெருப்பு காய்ச்சல் மற்றும் டெங்கு நோயினால் இறந்ததக கூறி அனுப்பி வைக்க படுகின்றனர்
கொரனோ இழப்பை மூடி மறைக்க இவ்விதம் இடம்பெறுவதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிகின்றனர்
துரத்தும் கொரனோ – 12 கிராமங்கள் தனிமை படுத்தல்
துரத்தும் கொரனோ – 12 கிராமங்கள் தனிமை படுத்தல்
இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ பரவலை அடுத்து தற்போது 12 கிராமங்கள்
தனிமை படுத்த பட்டுள்ளன
நாள் தோறும் பத்து ஆயிரம் பேர் பாதிக்க பட்டு வருவதால் நாடு முற்று முழுதான முடக்க நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது
எவ்வேளையு முழு லொக்கடவுனுக்கு இலங்கை செல்ல கூடும் என அதிகாரிகள் கருத்து தெருவித்து வருகின்றனர்
காவல்துறையால் 173 பேர் அதிரடி கைது
காவல்துறையால் 173 பேர் அதிரடி கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 173 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
இதில் பலருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் குறிப்பிடத்தக்க நபர்கள் நீதி மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக பல விழிப்புணர்வு விடயங்களை அரசு
தெரிவித்து வரு நிலையிலும் மக்கள் அதனை அலட்சியம் செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் – படம் உள்ளே
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் – படம் உள்ளே
இன்று 04-05-2021 மதியம் லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் அறவழி போராட்டத்தை நடத்தினர் ,
இலங்கை அரசு புரிந்த மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள் ,இனப் படுகொலை, புலிகளின் பெயரால் கைது செய்ய பட்ட அப்பாவி மக்களை விடுதலை செய்ய கோரியும் ,தமிழர்களை
துன்புறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டாம் என கோரியும் ,பாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வினை வேண்டியும் இந்த போராட்டம் முன்னெடுக்க பட்டுள்ளது
இந்த நிகழ்வு சமகால கொரனோ விதிகளை பின்பற்றி ,காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்க அமைதி வழியில் நடத்த பட்டுள்ளது ,
எனினும் சிங்கள அரச மற்றும் உளவுத்துறை அதிகாரிகளினால் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்களை காணொளி ,மற்றும் புகைப்படங்கள் பிடிக்க பட்டுள்ளன
இவ்வாறு பிடிக்க பட்ட காட்சிகளினால் அங்கு கலந்து கொண்ட மக்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் என அஞ்ச படுகிறது
இங்கே கலந்து கொண்ட மக்களை கழுத்து வெட்டுவேன் என இராணுவ தளபதி ஒருவர் முன்னர் தெரிவித்து
அவை லண்டன் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்தத நிலையில் ,அவ்விதம் இவர்களை படம் பிடித்தவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளக்க நேரிடும் என்பது இயல்பாகிறது
தமிழர்களை கொன்று குவித்த சகோதர்கள் ஆட்சி இலங்கையில் இடம் பெற்று வரும் நிலையில் சொல்லென்னா அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் உள்ளாகி வருகின்ற நிலையில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது





என் ஆட்டத்தை இனித்தான் பாக்க போறீங்க சீமான் -கடும் பேச்சு -video
என் ஆட்டத்தை இனித்தான் பாக்க போறீங்க சீமான் -கடும் பேச்சு -video
தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ள நாம் தமிழர் வரும்
தேர்தலில் மகத்தான வெற்றிகளை தட்டி செல்லக் கூடும் என கருத்துக்கள் தெரிவிக்கின்ற வேளை
இந்த பணநாயகத்தை மீறி எப்படி ஜனநாயகம் வெல்லும் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளதுடன்
,திராவிடத்தை தமிழகத்தில் வேரோடு அழிக்க முடியாது என எவர் சொல்வது என கிண்டலடித்துள்ளார்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
ரஷியாவில் இருந்து இலங்கைக்கு வந்தடைந்த கொரனோ தடுப்பூசி
ரஷியாவில் இருந்து இலங்கைக்கு வந்தடைந்த கொரனோ தடுப்பூசி
ரசியாவின் தயாரிப்பில் உருவான Sputnik V COVID-19 மருந்துகள் இலங்கைக்கு முதல் கட்டமாக
வந்தடைந்துள்ளது
15,000தடுப்பூசி மருந்துகள் இவ்விதம் கிடைக்க பெற்றுள்ளன, மேலும் மறு தொகுதி விரைவில்
வந்தடையும் என எதிர்பார்க்க படுகிறது
மிரட்டும் கொரனோ – மேலும் 9 கிராமங்கள் அடித்து பூட்டு
மிரட்டும் கொரனோ – மேலும் 9 கிராமங்கள் அடித்து பூட்டு
இலங்கையில் தொடரு வைரஸ் தாக்குதலை அடுத்து ,கொழும்பு ,நுவரெலியா,இரத்தினபுரி,கம்பாக
,களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த ஒன்பது கிராமங்கள் மறு அறிவித்தல்வரை
அடித்து பூட்ட பட்டு தனிமை படுத்த பட்டுள்ளது
மேலும் அதிகரித்து செல்லும் நோயின் பரவலை அடுத்து நாடு முழு லொக் டவுனுக்கு செல்லும்
அபாயம் எழுந்துள்ளது
இலங்கையில் ஒருமாத வீதி விபத்தில் 205 பேர் மரணம்
இலங்கையில் ஒருமாத வீதி விபத்தில் 205 பேர் மரணம்
இலங்கையில் கடந்த சித்திரை மாதம் மட்டும் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் சிக்கி 205 பேர் மரணமாகியுள்ளனர் ,
மேலும் இதே மாதத்தில் மாட்டு சுமார் 1,959 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன .மேலும் 1,254 பேர் படுகாயமடைந்துள்ளனர்
சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளதுடன் வீதி
விதிமுறைகளை பின்பற்றாது சென்றமையும் ஒரு காரணமாக உள்ளது
பெருக்கெடுக்கும் விபத்துக்களை தடுக்க முடியாது சிங்கள காவல்துறை திணறி வருகிறது















