Author: நலன் விரும்பி
பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்த சன்னி லியோன்
பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்த சன்னி லியோன்
இந்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வரும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்து இருக்கிறார்.
பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்த சன்னி லியோன்
சன்னி லியோன்
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.
மேலும் வீரமாதேவி என்ற படத்திலும், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்திலும் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
சன்னி லியோன்
இந்நிலையில், பெட்ரோல் விலையை கிண்டல் செய்யும் விதமாக சைக்கிள் புகைப்படத்தை
பகிர்ந்து, பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டதால் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த நந்திதா ஸ்வேதா
ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த நந்திதா ஸ்வேதா
அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த நந்திதா ஸ்வேதா
நந்திதா ஸ்வேதா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இவர் நடிப்பில் வெளியான அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,
முண்டாசுப்பட்டி என வரிசையாக படங்கள் வெற்றி பெற்றதால் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார்.
இந்நிலையில் நடிகை நந்திதா சமூக வலைத்தள பக்கத்தின் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும் போது, ரசிகர் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன என்று அவருடைய உடல் உறுப்பை
மையப்படுத்தி கேள்வி கேட்டுள்ளார். இதனால் கடுப்பான நந்திதா, இந்த கேள்வியை உங்களுடைய அம்மா, அக்கா, தங்கச்சி போன்றோரிடம் கேட்டால் சரியான விடை கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
நந்திதா ஸ்வேதா
சமீபகாலமாக பல நடிகைகளும் இதே மாதிரி மோசமான கேள்விகளுக்கு பதிலடி கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்
பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்
தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் ஜகமே தந்திரம் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்
சஞ்சனா நடராஜன்
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில், ஓடிடி தளத்தில் வெளிவந்தது. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்தார். மற்றொரு நாயகியாக சஞ்சனா நடராஜன் நடித்திருந்தார்.
சஞ்சனா
இவர் ரகிட ரகிட பாடலில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் சஞ்சனாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று
இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பெண்ணா இப்படி கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார் என்று பலரும் ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்.
சாமி தரிசனம் செய்த யோகி பாபு
சாமி தரிசனம் செய்த யோகி பாபு
கடவுள் பக்தி அதிகம் கொண்ட நடிகர் யோகி பாபு, சிவன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சிறப்பு தரிசனம் செய்து இருக்கிறார்.
சுருட்டப்பள்ளி கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு
கோவிலில் யோகி பாபு
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் யோகி பாபு, கடவுள் பக்தி அதிகம் கொண்டவர். இந்நிலையில் இவர் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளியில் உள்ள பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார்.
யோகி பாபு
அங்கு சிறப்பு தரிசனம் செய்த யோகி பாபுக்கு, கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்தி நிர்வாக அதிகாரிகள் கவுரவித்தனர்.
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபன் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபன் கைது
மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விராளிபத்தனைப் பகுதியில் தனது ஒன்றுவிட்ட 14 வயது சகோதரி ஒருவரை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 25 வயது இளைஞன் மடுல்சீமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் அச்சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயாரை கைது செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுமிக்கு நோய் ஏற்பட்டதையடுத்து, அச்சிறுமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற வேளையில், அச் சிறுமி மூன்று மாத கர்ப்பிணியென்று தெரிய வந்துள்ளது.
இதனை சிறுமியின் தாய் அறிந்து, அச்சிறுமியை ஹொப்டன் பெருந்தோட்டத்தில் தமது உறவினர் வீடொன்றில் மறைத்து வைத்திருந்தார்.
இந்நிலையில்,சிறுமி கர்ப்பிணியாகிய விடயம், பிரதேச குடும்பநல தாதி அறிந்து, மடுல்சீமை பொலிஸ் நிலையத்தின் மகளிர் பிரிவிற்கு புகார் செய்துள்ளார். இதையடுத்து மடுல்சீமை பெண்
பொலிசார் ஹொப்டன் தோட்டத்துக்குச் சென்று, சிறுமியிடம் முன்னெடுத்த விசாரணைக்கமைய, சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன் குறித்த தகவல் கிடைக்கப்பெற்று, அவ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இதைத் தொடர்ந்து சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கர்ப்பிணியான சிறுமி தொடர்பான வைத்திய அறிக்கையைப் பெற சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன், விசாரணையின் பின்னர் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.
மனைவியுடன்சண்டை – கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை
மனைவியுடன்சண்டை – கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை
மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் ஆண் ஒருவர் வீட்டின் கூரையில் தூக்கிட்டுத் தற்கொலை
செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (10) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தாழங்குடா சமுர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான விக்டர் சுஜித்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையை அடுத்து சம்பவ தினமான நேற்று (09) மனைவி பிள்ளைகளுடன் அவரது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தனிமையில் இருந்த
குறித்த நபர் வீட்டின் கூரையில் கயிற்றின் உதவியுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
மின்சாரம் தவிப்பு – 475,000 பேர் பாதிப்பு
மின்சாரம் தவிப்பு – 475,000 பேர் பாதிப்பு
நேற்று இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக 12,000 மின் துண்டிப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனூடாக 475,000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில்-கைக்குண்டு ஒன்று மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில்-கைக்குண்டு ஒன்று மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில் குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பகுதியில் நேற்று மாலை பொலிஸார் சென்று கைவிடப்பட்ட
நிலையிலுள்ள கைக்குண்டை சோதனையிட்ட பின்னர் விசேட அதிரடிப்படையினரின் வெடிபொருட்கள் அகற்றும் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டை நீதிமன்ற அனுமதியை பெற்று வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன
பாயும் படை வேட்டை – 234 பேர் கைது
பாயும் படை வேட்டை – 234 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 234 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு
உட்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள 10 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் கட்ட அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், களனி, களு, ஜின் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் பல பகுதிகளில் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள நிலைமை குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
களனி கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் இதுவரை 150 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தெஹியோவிட, ருவான்வெல்லை, சீதாவத, தொம்பே, கடுவலை, பியகம, கொலன்னாவை மற்றும் வத்தளை பிரதேச செயலகங்களில் உள்ள களனி கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்க படும் -பசில் முழக்கம்
மக்களுக்கு நிவாரணம் வழங்க படும் -பசில் முழக்கம்
இலங்கையில் நிலவி வரும் நோயின் தொற்றை அடுத்து பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ள மக்களுக்கு
நிவாரணம் வழங்க படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார்
அலிபாவாவும் நாற்பது திருடர்கள் காட்டில் இப்பொழுது மழை அடித்து பொழிகிறது
மீள் குடியமர்த்தப்படாத மக்களுக்கு யாழ் மாவட்ட செயலாளரின் விசேட அறிவிப்பு
மீள் குடியமர்த்தப்படாத மக்களுக்கு யாழ் மாவட்ட செயலாளரின் விசேட அறிவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியமர்த்தப்படாத மக்கள் தற்போது வசிக்கும் பிரதேச செயலகத்துடன் தொடர்புகொண்டு தங்களுடைய பெயர், பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கோள்ளுமாறு யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
யுத்தத்தின் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விவரங்களை இற்றைப்படுத்தும் பணி பிரதேச
செயலகங்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலேயே யாழ் மாவட்ட செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து தற்போதும் வேறு இடங்களில் வசித்து வரும் குடும்பங்களின் விவரங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன. பல்வேறு பிரதேசங்கள்
மீள்குடிமர்த்துவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மீள்குடியமராத குடும்பங்களின் விவரங்கள் அவர்கள் தற்போது வசிக்கும் பிரதேச செயலகங்களினால் இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றன
என்று மீள்குடியமர வேண்டியவர்களின் விவர மீளாய்வு தொடர்பில் மேலதிக மாவட்ட செயலாளர் சு.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்,வன்னியில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் – டக்ளஸ்
யாழ்,வன்னியில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் – டக்ளஸ்
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ள அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா, வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நீர் வேளாண்மை பண்ணைகளை அமைப்பற்கு தேவையான காணிகள் தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார்.
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்காவுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
வனஜீவராசிகள் அமைச்சில் நேற்று (07) இடம்பெற்ற சந்திப்பின்போது, வடக்கு மாகாணத்தில் தற்போது வனத்துறையினரினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர்
காணிகளில், யுத்தத்திற்கு முற்பட்ட காலப் பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையினை அமைச்சர் டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அமைச்சர் சி.பி. இரத்நாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.
அத்துடன், குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வடக்கு விவசாயிகள் ஆர்வமாக இருப்பதனையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
சம்மந்தப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தினை விரைவுபடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
அதேபோன்று, வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஏற்றுமதித் தரத்திலான நண்டு, இறால், மீன் வளர்ப்பு பண்ணைகளை உருவாக்கி நீர் வேளாண்மையை விருத்தி செய்வதன் மூலம் மேலதிக வருமானத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதுடன் அந்நியச் செலாவணியைப் பெற்றுக்
கொள்வதற்கும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் நீர் வேளாண்மை பண்ணைகளை
அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை விடுவித்து பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக குறித்த சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சரினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சி.பி. இரத்நாயக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை
மேற்கொள்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பு
தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பு
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவுக்கு 115 முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள்
கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்குழுவின் தலைவர் சபை முதல்வரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அந்தக் குழுக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட 07 அரசியல் கட்சிகளின் மூலம் யோசனைகள் முவைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அந்தக் கட்சிகளுக்கு யோசனைகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த யோசனைகளை sec.pscelectionreforms2021@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கோ அனுப்பிவைக்க முடியும்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேகொள்வது தொடர்பில் 2021 ஜூன் 30 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் யோசனைகளை சபைக்கு
சமர்ப்பித்தல் மற்றும் அந்த யோசனைகள் பற்றிய சாராம்சம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.
உத்தேச மறுசீரமைப்புகள் தொடர்பில் நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற
உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க, கபீர் ஹஷீம், ரஞ்சித் மத்தும பண்டார, எம். ஏ. சுமந்திரன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி இன்று (09) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்துநிலை உடைய கர்ப்பிணித் தாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், முன் களப் பணியாளர்களாக உள்ள கர்ப்பிணித்
தாய்மார்களுக்கும் அவர்களுடைய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் நாளை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசியேற்றும் திட்டத்தில் 2ஆம் கட்டத்தில் முதலாவது டோஸ் . கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழங்கப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின்கீழ் ஜூலை மாதம் 5ஆம் திகதி முதல் நாளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 465 பேருக்கும், 6ஆம் திகதி இரண்டாம் நாளில் 9 ஆயிரத்து 457 பேருக்கும், 7ஆம் திகதி
மூன்றாம் நாளில் 12 ஆயிரத்து 34 பேருக்கும், 8ஆம் திகதியான இன்றைய நான்காம் நாளில் 7 ஆயிரத்து 497 பேருக்கும் என மொத்தமாக 38 ஆயிரத்து 456 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி
மற்றம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைகளிலும் நாளை சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
தொடரும் காவல்துறை வேட்டை – 266 பேர் கைது
தொடரும் காவல்துறை வேட்டை – 266 பேர் கைது
நாட்டில் நிலவி வரும் கொரனோ பாதிப்பை அடுத்து தனிமை படுத்தல் விதிகள் அறிவிக்க பட்டன
,மேற்படி விதிகளை மீறி செயல்பட்ட குற்ற சாட்டின் பேரில் 266 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் முகக்கவசம் இன்றி உலாவியமை மற்றும் ,மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டு சுமத்த பட்டுள்ளது
சின்னத்திரை நடிகரை மணந்தார் மிருதுளா விஜய்
சின்னத்திரை நடிகரை மணந்தார் மிருதுளா விஜய்
தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்த பிரபலமான மிருதுளா விஜய், சின்னத்திரை நடிகரை இன்று திருமணம் செய்து கொண்டார்.
சின்னத்திரை நடிகரை மணந்தார் மிருதுளா விஜய்
கணவருடன் மிருதுளா விஜய்
பிரபல மலையாள நடிகை மிருதுளா விஜய். இவர் தமிழில், நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
மலையாளத்தில் இவர் நடித்த பிரிட்டீஷ் பங்களா, செலிபிரேசன் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இசை ஆல்பங்களிலும் இவர் நடித்து இருக்கிறார்.
இவருக்கும் மலையாள டிவி நடிகர் யுவகிருஷ்ணா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் இவர்கள் திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது.
மிருதுளா விஜய்
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை
அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை
முன்னணி நடிகராக இருக்கும் அஜித் பாணியில் பிரபல நடிகை ஒருவர் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை… குவியும் வாழ்த்துகள்
அஜித் – நிவேதா பெத்துராஜ்
’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு ’டிக் டிக் டிக்’ ’சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள ’பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
நிவேதா
நிவேதா பெத்துராஜ்
கார் ஓட்டுவதில் அதிக விருப்பம் கொண்ட நிவேதா, தனது சமூக வலைத்தளத்தில் கார் ஓட்டியது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை ஏற்கனவே வெளியிட்டு இருந்தார்.
நிவேதா
இந்த நிலையில் தற்போது ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் பலர் அஜித் பாணியில் நிவேதா கார் ரேஸில் இறங்கிவிட்டார் என்று பாராட்டி வருகின்றனர்.
பாட்ஷா ஸ்டைலில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்
பாட்ஷா ஸ்டைலில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாட்ஷா ஸ்டைலில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்
ரஜினி
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்று பாட்ஷா. இந்த படத்தில் வில்லன்களுடன் அமர்ந்து பேசும்போது ரஜினியின் பக்கத்தில் நாய் ஒன்று இருக்கும்.
ரஜினி
அதேபோல் அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் ரசிகர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது ரஜினியின்
பக்கத்தில் நாய் ஒன்று உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அப்படியே பாட்ஷா படக்காட்சியை பார்ப்பது போலவே இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இலங்கையில் கொரனோவுக்கு 40 பேர் மரணம்
இலங்கையில் கொரனோவுக்கு 40 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் நாற்பது பேர் மரணமாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் நாட்டில் அதிகரித்து செல்லும் நோயினை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள
பட்ட பொழுதும் ,மேற்படி மரணங்கள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது







