Tag: கர்ப்ப
மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்
மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்
பிறந்து மூன்று நாள்களேயான சிசுவின் சடலம், கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (05) பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியின் கிட்டங்கி ஆற்றில் இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த சிசுவையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக கைதாகிய சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபருடன் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து வீசப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டெடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசுவின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது.
நாளாந்த கூலி தொழிலாளியான சந்தேக நபர், இரண்டு திருமணம் செய்தவர் என்பதுடன், தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபன் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபன் கைது
மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விராளிபத்தனைப் பகுதியில் தனது ஒன்றுவிட்ட 14 வயது சகோதரி ஒருவரை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 25 வயது இளைஞன் மடுல்சீமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் அச்சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயாரை கைது செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுமிக்கு நோய் ஏற்பட்டதையடுத்து, அச்சிறுமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற வேளையில், அச் சிறுமி மூன்று மாத கர்ப்பிணியென்று தெரிய வந்துள்ளது.
இதனை சிறுமியின் தாய் அறிந்து, அச்சிறுமியை ஹொப்டன் பெருந்தோட்டத்தில் தமது உறவினர் வீடொன்றில் மறைத்து வைத்திருந்தார்.
இந்நிலையில்,சிறுமி கர்ப்பிணியாகிய விடயம், பிரதேச குடும்பநல தாதி அறிந்து, மடுல்சீமை பொலிஸ் நிலையத்தின் மகளிர் பிரிவிற்கு புகார் செய்துள்ளார். இதையடுத்து மடுல்சீமை பெண்
பொலிசார் ஹொப்டன் தோட்டத்துக்குச் சென்று, சிறுமியிடம் முன்னெடுத்த விசாரணைக்கமைய, சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன் குறித்த தகவல் கிடைக்கப்பெற்று, அவ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இதைத் தொடர்ந்து சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கர்ப்பிணியான சிறுமி தொடர்பான வைத்திய அறிக்கையைப் பெற சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன், விசாரணையின் பின்னர் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.
கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் நோய்
கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் நோய்
கர்ப்ப காலத்தின் இந்த உணவுமுறைகளை பின்பற்றினால் ஸ்பைனா பிபிடா(Spina bifida), என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை 70 முதல் 75 சதவீதம் வரை தடுக்கலாம்.
நிற்பது, நடப்பது, அமர்வது, ஓடுவது என நமது இயக்கத்துக்கு காரணமான ஆணைகளை இடுவது தலைமைச் செயலகமான மூளை. அதை கட்டுப்படுத்தி, செயல்படுத்துவது முதன்மை
கம்பித்தடம் போன்ற நமது தண்டுவட நரம்புகளே. மூளை, தண்டுவடம் என்கிற இந்த முக்கிய உறுப்புகள் இரண்டையும் பல அடுக்கு பாதுகாப்புடன் படைத்துள்ளது இயற்கை. மூளைக்கு எப்படி
மெனிஞ்சஸ் என்கிற மூன்றடுக்கு பாதுகாப்பு உறையும் அதற்கு மேல் மண்டையோடு என்கிற உறுதியான வளையமும் இருக்கின்றனவோ, அதேபோல் மூளையில் இருந்து வெளிவரும்
நரம்பு மண்டலத்துக்கும் மெனிஞ்சியல் உறைகளும் அதற்கு மேல் முதுகுத் தண்டுவட எலும்புகளும் பாதுகாப்பை வழங்குகின்றன.
கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் நோய்
அதேபோல் மூளையை கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவும் சி.எஸ்.எப். என்கிற மூளை தண்டுவட திரவம், தண்டுவட நரம்புகளின் வெப்பத்தைச் சீராக்கி பாதுகாக்கிறது. இவை
அனைத்துக்கும் மேலாக, தோல் என்கிற முக்கிய உறுப்பு, வெப்பத்தின் அளவை மாற்றும் குளிர்சாதன பெட்டிபோல் வேலைசெய்வதால்தான், நம்மால் இயங்கவே முடிகிறது. ஆனால்
ஒரு சிலருக்கு மட்டும் கரு உருவாகும் தொடக்க நாட்களிலேயே, பல்வேறு காரணங்களால் இந்தப் பாதுகாப்பு வளையங்களில் ஒன்றோ இரண்டோ உருவாகாமல் போக நேரிடலாம்.
இதனால், அந்தக் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் எல்லாச் செயல்பாடுகளுக்கும் மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அடிக்கடி மருத்துவ உதவி பெற வேண்டிய
கட்டாயமும், வாழ்நாளின் பெரும் பகுதியை மருத்துவமனைகளில் கழிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம். இவ்வளவு
பிரச்சினைகளை தரக்கூடிய ஸ்பைனா பிபிடா வராமலேயே தடுக்க முடியாதா.
அதை தடுப்பது மிக எளிது. பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பருப்பு, கொட்டை வகைகள், சிறுதானியம் போன்றவற்றை உண்ணும்போது இவற்றில் இயற்கையாகவே
கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் நோய்
காணப்படும் போலிக் அமிலம், செல்களின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. வளர்ச்சிக்கும், மூளை நரம்புகளின் வளர்ச்சிக்கும் பெருமளவு
உதவுகிறது. அத்துடன், ஸ்பைனா பிபிடா, என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை 70 முதல் 75 சதவீதம் வரை தடுக்கிறது.
கருவில் வளரும் குழந்தைக்கு நன்மை செய்வது மட்டுமன்றி, கருச்சிதைவையும் குறைப்பிரசவத்தையும் கட்டுப்படுத்தி, தாயின் ரத்த சோகைக்கும் அருமருந்தாவதால் ‘கருவின் தோழி‘ என்று
கொண்டாடப்படுகிறது போலிக் அமிலம் என்கிற இந்த எளிய ‘பி‘ விட்டமின். ஆனால், இயற்கை தரும் உணவு வகைகளில் இருக்கும் போலிக் அமிலம், சமைக்கும்போது நீரில் கரைந்து
சிதைந்துவிடுவதால், 400 முதல் 600 மெக் போலிக் அமில மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன.
கர்ப்ப காலத்தின் தொடக்க நிலையில் மட்டுமன்றி, கருத்தரிப்பதற்கு முன்பாகவே, ஏன் திருமண வயதை அடையும்போதே பெண்கள் இதை உட்கொள்வது அவசியம்.
இரும்புச்சத்து போலிக் அமில மாத்திரைகளை கர்ப்பிணிப் பெண்களுக்கும், பருவ வயதை எட்டிய பெண்களுக்கும் அரசு இலவசமாக வழங்கிவருவது இதனால்தான்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா ?
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா ?
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணம் செய்ய வேண்டாம் மருத்துவர்கள் கூறுவார்கள். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்?
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு சில விஷயங்களை செய்யலாம். ஒரு சில விஷயங்களை செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதற்கு பின்னால் எல்லாம் ஒரு முக்கிய காரணம்
இருக்க தான் செய்கிறது. கர்ப்பமாக உள்ள பெண்கள் பயணம் செய்யலாமா என்று கேள்வி பலருக்கும் இருக்கும் ஒன்று தான்.
வீட்டிற்குள்ளேயே கர்ப்ப காலத்தில் அடைந்து கிடைப்பதும் இயலாத ஒன்று தான். உங்களது மருத்துவரும் கர்ப்ப காலத்தில் வெளியில்
அதிகமாக பயணம் செய்ய வேண்டாம் என்று கூறியிருப்பார். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
கர்ப்ப காலத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது தான். அதற்காக நீங்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும்
என்று அர்த்தமில்லை. நீங்கள் அருகில் உள்ள உங்களது அலுவலகம், மார்க்கெட், பார்க் போன்ற இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்வதினால் எந்த பிரச்சனையும் இல்லை.
நீங்கள் தொலைத்தூரப் பயணங்களை கண்டிப்பாக தவிர்ப்பது மிகவும் நல்லது. தொலைதூரப் பயணங்களை கர்ப்பத்தின் முதல்
மூன்று மாதங்களில் தவிர்ப்பது சிறப்பு. இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் என்னவென்றால், இதனால் கருக்கலைப்பு அல்லது வேறு சில பிரச்சனைகள் உண்டாகலாம்.
நீங்கள் சாலைப்பயணம் செய்யும் போது கழிப்பிட வசதிகள் அவ்வளவு சுகாதாரமனதாக இருக்காது. இந்த கழிப்பிடங்களை பயன்படுத்துவதால் சிறுநீர் பாதையில் கிருமிகளின் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
நீண்ட தூரப்பயணத்தில் காற்று மாசுபாடு போன்றவை இருக்கும். இந்த நச்சுக்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்க கூடியது. எனவே
நீண்ட தூரப்பயணத்தை கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் தவிர்க்கலாம்.
பொதுவாகவே நீண்ட தூரப்பயணமானது களைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது பெண்களுக்கு அதீத களைப்பை உண்டாக்க கூடியதாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக தான் இருக்கும். இந்த நேரத்தில் வெளியிடங்களுக்கு பயணம் செய்வதால் சில தேவையற்ற நோய்களை தேடி சென்று
பெருவது போல ஆகிவிடும். எனவே கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.






