Posted in Uncategorized

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 12,000 தொன் சீனி

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 12,000 தொன் சீனி

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 600 சீனிக் கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றில், 433 கொள்கலன்கள் ஒன்பது இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் சுமார் 12,000 மெற்றிக் தொன் சீனியைக் கொண்டுள்ளன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வணிக வங்கிகள் வழங்கிய கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி அனுமதிப்பத்திரங்களின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டனர்.

இரண்டு மாதங்களாக 433 சீனிக் கொள்கலன்கள் வெளிவிடப்படாததால், இறக்குமதியாளர்கள் ஒரு கிலோ சீனிக்கு தாமதக் கட்டணமாக ரூ. 20 முதல் 25 வரை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மற்றொரு சீனி இறக்குமதியாளரால் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட மற்றொரு தொகுதி கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இறக்குமதியாளரால் மியான்மாருக்கு அனுப்பப்பட்ட 130 சீனி கொள்கலன்கள் அந்த நாட்டின் பிரச்சனை காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இந்த 130 கொள்கலன்களை நாட்டுக்குள் கொண்டு வர அனுமதிக்காததால், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீனி இருப்பு பற்றி விசாரித்த போது, லங்கா சதொச குறிப்பிட்ட சீனி இருப்பைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளாக ​​துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.

இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், லங்கா சதொச நிறுவனத்திற்கு சீனியை வாங்கும் போது தாமதமான கட்டணத்திலிருந்து இறக்குமதியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர்பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் சதொச மூலம் சலுகை விலையில் சீனி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி, இரவு வேளையிலும் நடமாடுபவர்களை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் இரவு வேளைகளில் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி; வாகனங்களையும் நபர்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

இதற்கமைவாக நேற்று (28) இரவு முழுவதும் அட்டன் மல்லிகைப்பூ சந்தி சோதனை சாவடியில் விசேட சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதன் போது உரிய ஆவணமின்றி அத்தியவசிய தேவைகளுக்காக சென்றவர்கள் கடுமையாக எச்சகரிக்கப்பட்டனர்.

Posted in சினிமா

வரி ஏய்ப்பு செய்த நடிகைக்கு ரூ.338 கோடி அபராதம்

வரி ஏய்ப்பு செய்த நடிகைக்கு ரூ.338 கோடி அபராதம்

ஜெங் ஷூவாங் நடித்து வெளியான நிகழ்ச்சிகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு செய்த நடிகைக்கு ரூ.338 கோடி அபராதம்
ஜெங் ஷூவாங்


சீனாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜெங் ஷூவாங். இவர் சினிமா மற்றும் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் ஒரு டி.வி. தொடருக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தத்தில் அவர் வரி ஏய்ப்பு செய்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

டி.வி. தொடர் ஒப்பந்தத்தில் ஜெங் ஷூவாங் 2 ஆவணங்களை தயார் செய்துள்ளார். ஒரு ஆவணத்தில் தனக்கு குறைந்த வருமானம் கிடைப்பது போல குறிப்பிட்டு இருந்தார்.

அசல் ஆவணத்தை தன்னிடம் வைத்துக் கொண்டு குறைந்த வருமானம் பெறுவது போன்று குறிப்பிட்டிருந்த ஆவணத்தை வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்தார்.

இதன்மூலம் அவர் வரியை குறைவாக செலுத்தி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகை ஜெங் ஷூவாங்குக்கு வரி ஏய்ப்பு செய்த காரணத்தால் ரூ.338 கோடி

அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை ஷாங்காய் நகராட்சி வரி சேவை மையம் பிறப்பித்துள்ளது.

மேலும் ஜெங் ஷூவாங் நடித்து வெளியான நிகழ்ச்சிகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ள

    Posted in சினிமா

    வடிவேலு விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டது எப்படி

    வடிவேலு விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டது எப்படி

    நகைச்சுவை நடிகர் வடிவேலு சுராஜ் இயக்க உள்ள ‘நாய் சேகர்’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.

    வடிவேலு விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டது எப்படி?
    வடிவேலு


    இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கி, வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கர் முன்வந்தார். இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    இப்படத்துக்காக அவருக்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், அதற்கு ‘அட்வான்ஸ்’ ஆக ரூ.5 கோடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து திடீரென்று அந்த படத்தில் இருந்து

    வடிவேலு நடிக்க மறுத்து விலகினார். இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் புகார் அளித்தார். இதனால் நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. வடிவேலு வாங்கிய ‘அட்வான்ஸ்’ தொகை ரூ.5 கோடியை இயக்குனர் ஷங்கரிடம் திருப்பிக் கொடுக்கும்படி, பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

    வடிவேலு கொடுக்க வேண்டிய ரூ.5 கோடியை, அவரை வைத்து படம் தயாரிக்கும் ஒரு பட நிறுவனம், ஷங்கரிடம் திருப்பி கொடுத்ததால், இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு சுமுகமாக

    முடிந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் வடிவேலு படங்களில் நடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

      Posted in சினிமா

      ரவிசங்கருடன் நடிகர் ரஜினி சந்திப்பு – வைரலாகும் புகைப்படம்

      ரவிசங்கருடன் நடிகர் ரஜினி சந்திப்பு – வைரலாகும் புகைப்படம்

      நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


      ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள்கள் சந்தித்தபோது எடுத்த


      ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். ஆன்மீக குருக்களை அவ்வப்போது சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி.

      அந்த வகையில் தற்போது வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

      இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் உடன் இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ்,

      தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

      நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய

      நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

        Posted in Uncategorized

        ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்

        ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்

        நடிகர் விஷால் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு வழங்கினார்.

        ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்
        ஆதரவற்ற குழந்தைகளுடன் விஷால் பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்த புகைப்படம்


        தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷால். இவர் கைவசம் தற்போது எனிமி, துப்பறிவாளன் 2, வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் உள்ளன.

        இதில் எனிமி படத்தை ஆனந்த் சங்கரும், வீரமே வாகை சூடும் படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணனும் இயக்கி உள்ளனர்.

        மேலும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் நடிகர் விஷால் நடிப்பதோடு, இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார்.

        நடிகர் விஷால் இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

        இந்நிலையில், நடிகர் விஷால் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு வழங்கினார்.

        மேலும் குழந்தைகளோடு கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

          Posted in இலங்கை செய்திகள்

          கொரோனாவுக்கு நேற்றைய தினம் 192 பேர் மரணம்

          கொரோனாவுக்கு நேற்றைய தினம் 192 பேர் மரணம்

          இலங்கையில் நேற்றைய (28) தினம் மேலும் 192 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

          சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          திணறும் இலங்கை – எகிறும் பண இழப்பு

          திணறும் இலங்கை – எகிறும் பண இழப்பு

          நாட்டை மேலும் மூடி வைப்பதை இலங்கையால் தாங்க முடியாது என்று நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

          மக்கள் தொகையில் பாதி பேரைப் பூட்டுவதால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்வது கடினம் என்று தெரிவித்த அவர், இது நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகத் துறையில் 4.5

          மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

          நாடு பூட்டப்பட்டதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நாளாந்த இழப்பு ரூ .15 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

          இலங்கை போன்ற ஒரு நாட்டை மூடுவதால் ஏற்படும் பொருளாதார தாக்கம் சிறியதல்ல என்றும், முடக்கத்தைக் குறைக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

            Posted in Uncategorized

            யாழ் மக்களுக்கு அவசர கோரிக்கை – இதில் நீங்கள் உண்டா ..?

            யாழ் மக்களுக்கு அவசர கோரிக்கை – இதில் நீங்கள் உண்டா ..?


            யாழ் மாவட்டத்தில் மோதல்களினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமராத மக்கள் தங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டுமென வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

            யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிசாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் மீளக்குடியமராத குடும்பங்களின் விபரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

            பகுதியளவில் விடுவிக்கப்பட நகுலேஸ்வரம், காங்கேசன்துறை மேற்கு, காங்கேசன்துறை மத்தி, காங்கேசன்துறை தெற்கு, கட்டுவன், குரும்பசிட்டி இகுரும்பசிட்டி கிழக்கு, வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு , மயிலிட்டித்துறை வடக்கு, தையிட்டி வடக்கு, தையிட்டி தெற்கு,பலாலி

            கிழக்கு,பலாலி தெற்கு,பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளையும் முழுமையாக விடுவிக்கப்படாத பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, மயிலிட்டித்துறை தெற்கு கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

            அவர் மேலும் தெரிவிக்கையில்,உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்து பல வருடங்களாக மீள்குடியேறாத குடும்பங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மாவட்ட செயலகங்கள் ஊடாக தற்போது இடம்பெற்று வருகின்றன.யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை வலிகாமம்

            வடக்கிலேயே அதிகளவில் மக்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்கள்.18 கிராம சேவகர் பிரிவுகள் பகுதியளவில் விடுவிக்கப்படாமலும் 3 கிராம

            சேவகர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படாமலும் இருக்கிறது.7ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளார்கள்.

            இந்த அடிப்படையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூலம் இந்த விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பிரதேச செயலகம்இ மாவட்ட செயலகம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையிலும் இந்த விண்ணப்பங்களை பெற்று உடனடியாக நிரப்பி

            வழங்கவேண்டும்.இதனை வழங்குவதன் மூலமே மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தி காணிகள் எவ்வளவு மக்களுடையது என்பதை அடையாளப்படுத்த முடியும்.

            உண்மையான தகவல்களை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.ஏற்கனவே விபரங்களை வழங்கி இருந்தாலும் இந்த முறை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல்கள் சரியாக பேணப்படாமையால் மீள்குடியேற்றம் தாமதமாகி வருகிறது.

              Posted in Uncategorized

              தமிழர்களுக்கு சீனா ஊசியை போட்டு தள்ளும் அரசு – அதிகரிக்கும் மரணம்

              உலக

              தமிழர்களுக்கு சீனா ஊசியை போட்டு தள்ளும் அரசு – அதிகரிக்கும் மரணம்

              இலங்கை வட கிழக்கு பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஆளும் அரசு சீனாவின் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது

              இந்த ஊசியினை பெற்று கொண்ட பல மக்கள் பலியாகியுள்ளதாக மக்கள் மத்தியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன ,

              மேலும் உடல் வீக்கம் ஏற்படுவதாக குற்ற சாட்டும் முன் வைக்க படுகிறது ,ஆனால் அரசோ இதனை ஏற்க மறுத்து ,இது வதந்தி என பரப்புரை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                Posted in சினிமா

                16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்

                16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்

                பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்ற அர்ச்சனா, தனது உடல்நிலை குறித்து உருக்கமாக கூறியிருக்கிறார்.

                16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்
                அர்ச்சனா
                இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார். சமீபத்தில் இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பெற்றதாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

                இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா முதல் முறையாக யூடியூப் சேனலில் நேரலையில் வந்து பேசினார். அவரை பார்த்த ரசிகர்களோ, எப்பொழுது மீண்டும் வேலைக்கு வருவீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னால் இப்போ கூட வர முடியும். ஆனால் என் வலது தொடையில் 16 தையல் போடப்பட்டிருக்கிறது.

                அர்ச்சனா

                16 தையல் போடப்பட்டிருப்பதால் கால் பலவீனமாக இருக்கிறது. ஷூட்டிங்கிற்கு வந்தால் 15, 16 மணிநேரம் நிற்க வேண்டும். என்னால் தற்போது அவ்வளவு நேரம் நிற்க முடியாது. நான் சரியாக இன்னும் சில மாதங்கள் ஆகும். என் மகளும், சகோதரியும் என்னை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார்கள். செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஒரு பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது’ என்றார்.

                Posted in இலங்கை செய்திகள்

                மட்டக்களப்பில் டெல்டா

                இலங்கை

                மட்டக்களப்பில் டெல்டா

                மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொற்றும் வீதம் அதிகமாகவும் மரண வீதம் அதிகமாக ஏற்படுத்தக்கூடியது எனவும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

                மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

                மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 274 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

                மட்டக்களப்பு பகுதியில் 56 பேரும், களுவாஞ்சிகுடியில் 47 பேரும், செங்கலடியில் 48 பேரும், வவுணதீவில் 27பேரும், வெல்லாவெளியில் 28 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

                மரணமடைந்தவர்களில் மட்டக்களப்பில் மூவரும், களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர், வவுணதீவு, வெல்லாவெளி, ஆரையம்பதி பகுதிகளில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.

                மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 211 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

                கடந்த வாரத்தில் 1982 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 36 பேர் மரணமடைந்துள்ளனர்.

                மட்டக்களப்பு மாவட்டத்தில் சராசரியாக 300 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுவதுடன் சராசரியாக ஐந்து மரணங்களும் நிகழ்கின்றன.

                நேற்று மருத்து ஆராய்ச்சி நிறுவகத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையின்படி முதன்முறையாக டெல்டா திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

                அல்பா திரிபு மட்டுமே மட்டக்களப்பில் அடையாளம் காணப்பட்டிருந்தது. அல்பா திரிபுடன் ஒப்பிடும்போது டெல்டா திரிபு தொற்றும் தன்மை அதிகமாகவும் மரண வீதம் அதிகமாகவும் காணப்படுகின்றது.

                பொதுமக்கள் வீட்டில் இருப்பதன் மூலமே கொவிட் தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரமுடியும். அத்துடன் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும்.

                தடுப்பூசியைப் பொறுத்தவரையில் முதல் தடுப்பூசி 270,000வரையில் ஏற்றப்பட்டுள்ளது.

                30வயதுக்கு மேற்பட்ட 92 வீதமானவர்களுக்கு முதலாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 30 வயதுக்கு மேற்பட்ட 108,000 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. 37 சதவீதமான மக்களை உள்ளடங்குகின்றனர்.

                இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கு 115,000 வரையான தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன. நாளை இன்னும் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன என்றார்.

                Posted in சினிமா

                தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்

                தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்

                முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் திரைப்படங்களை விட வெப் தொடர்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள்.

                வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்
                சமந்தா – அமலாபால்
                வெப் தொடரில் நடிக்க சமீபகால கதாநாயகிகள் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், சினிமாவை விட வெப் தொடர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள்.

                வெப் தொடர்களுக்கு தணிக்கை கிடையாது. படுகவர்ச்சியான வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் வெப் தொடர்களில் அனுமதிக்கப்படுகின்றன. படுக்கை அறை காட்சிகள் தாராளமாக இடம்பெறுகின்றன. இதற்காகவே அதில் நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள்.

                அதிக சம்பளம் என்ற வசிய வலையில் சிக்கி, படுகவர்ச்சியாக நடித்துள்ள கதாநாயகிகள் வருமாறு:-

                1. சமந்தா. இவர், ‘பேமிலி 2’ என்ற வெப் தொடரில் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார்.

                ரெஜினா
                ரெஜினா

                1. ரெஜினா கசன்ட்ரா. பெண்ணும் பெண்ணும் உறவு கொள்கிற ‘லெஸ்பியன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
                2. அமலாபால். தன்னை விட பல வயது மூத்த ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்கிற பெண்ணாக, ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். (அமலாபால், ஏற்கனவே மாமனாருடன் உறவு கொள்ளும் மருமகளாக ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து இருந்தார்.)

                இந்த மூன்று பேரும் வெப் தொடர்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

                Posted in இலங்கை செய்திகள்

                கொரானாவுக்கு ஒரே நாளில் 202 பேர் பலி

                கொரானாவுக்கு ஒரே நாளில் 202 பேர் பலி

                கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 212 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

                109 ஆண்களும் 103 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 173 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 37 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குட்பட்டோரில் 2 பேரும் மரணித்துள்ளனர்.

                அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,583 பேர் உயிரிழந்துள்ளனர்.

                நாட்டில் மேலும் 4,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 421,557 ஆக அதிகரித்துள்ளது.

                அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,203 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 355,394 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 57,580 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா

                  தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா

                  தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் கொரோனா பரவுவது தொடர்ந்தால், அடுத்தகட்ட நடவடிக்கையை பரிந்துரைப்பதற்காக சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, சுகாதார துறை பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

                  கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதமும், இரண்டாவது டோஸ் சுமார் 56 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்த மாத இறுதிக்குள் கணிசமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

                  30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதா அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதா அடுத்த முன்னுரிமை என்பதை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைக்குமாறு சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

                  Posted in சினிமா

                  அதிரடியாக களமிறங்கும் வடிவேலு-ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.

                  அதிரடியாக களமிறங்கும் வடிவேலு-ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.

                  தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.

                  நல்ல நேரம் பொறந்தாச்சு…. மீண்டும் அதிரடியாக களமிறங்கும் வடிவேலு
                  வடிவேலு
                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                  இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தனக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஷங்கர் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

                  புகார் காரணமாக வடிவேல் புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

                  வடிவேலு

                  இது தொடர்பாக வடிவேலுவிடம் கேட்டபோது, ‘மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு போல் இருக்கிறது. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான்.

                  என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். ஐந்து படங்களில் என்னை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார். நல்ல நேரம் பொறந்தாச்சு. இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

                  Posted in Uncategorized

                  பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து பங்களாவிற்கு குடியேறும் வனிதா

                  பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து பங்களாவிற்கு குடியேறும் வனிதா

                  பவர் ஸ்டார் சீனிவாசனும் வனிதாவும் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

                  பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து பங்களாவிற்கு குடியேறும் வனிதா
                  வனிதா – பவர் ஸ்டார்
                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                  பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கும் படம் ‘பிக்கப்’. இப்படத்தில் இவர்களுடன் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

                  பவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறும் வனிதா, அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து உருவாக்கி வருகிறார்கள்.

                  வனிதா – பவர் ஸ்டார்

                  இப்படம் குறித்து கூறும் பவர்ஸ்டார் சீனிவாசன், ‘இப்படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கத்துடன் செமத்தியான பாடல்களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன். இந்தப் படத்தோட
                  டைட்டிலில் வனிதாவுக்கு “வைரல் ஸ்டார்” என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்”. என்றார்.

                  Posted in சினிமா

                  தலைகீழாக தொங்கிய நடிகை

                  தலைகீழாக தொங்கிய நடிகை

                  தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஒருவர் தலைகீழாக யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

                  தலைகீழாக தொங்கிய நடிகை…. வைரலாகும் புகைப்படங்கள்
                  அஞ்சலி


                  ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் ‘அங்காடித் தெரு’ படம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தது. எங்கேயும் எப்போதும்,

                  இறைவி உள்ளிட்ட படங்களில் அவர் நடிப்புக்கு பெயர் கிடைத்தது. நடிகை அஞ்சலி கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ படத்தில் நடித்திருந்தார்.

                  தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஞ்சலி

                  துணியில் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                    Posted in சினிமா

                    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

                    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

                    டாக்டர், அயலான், டான் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

                    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை
                    சிவகார்த்திகேயன்
                    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கைவசம் டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உள்ளன. இதில், டாக்டர் படம் அனைத்து

                    பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதேபோல் அயலான் படமும் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டான் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

                    இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘ஜாதி ரத்னலு’ என்ற தெலுங்கு படத்தை இயக்கிய

                    அனுதீப், சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், இப்படதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

                    சிவகார்த்திகேயன்
                    சிவகார்த்திகேயன் – ராஷ்மிகா மந்தனா

                    பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                      Posted in Uncategorized

                      கொரனோவுக்கு 48 பேர் மரணம்

                      கொரனோவுக்கு 48 பேர் மரணம்

                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி கடந்த தினம் 48 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                      மேலும் இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது