Posted in இலங்கை செய்திகள்

கைது செய்யப்பட்டவர்கள் கடலில் சடலங்களாக மிதப்பு

கைது செய்யப்பட்டவர்கள் கடலில் சடலங்களாக மிதப்பு

வடக்கில் பல்வேறான கடற்கரையோரங்களில் சடலங்கள் கரையொதுங்குகின்றன. இந்த சடலங்கள் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளனவென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக்

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இராணுவத்திடம் சரணடைந்தவர்களா? இவ்வாறு சடலங்களாக கரையொதுங்குகின்றனர் என்றும்
கேள்வியெழுப்பினார்.

சரணடைந்தவர்கள், இப்போதுதான் கொலை செய்து கடலில் வீசுகிறார்களா? எனும் சந்தேகமும் எழுந்துள்ளது என்றும் சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.


2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதம்


நேற்று (10) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணியில் கரையொதுங்கிய உடல் எங்கேயென யாருக்கும் தெரியாது. மருதங்கேணி பொலிஸார் அந்த உடலை சென்று பார்த்துள்ளனர். இப்போது அந்த

உடலை காணவில்லை. கரையொதுங்கிய உடல் எவ்வாறு காணாமற்போகும்? அதனை யார் எங்கே கொண்டு சென்றனர் என்பது தெரியாதுள்ளது” என்றார்.

சரணடைந்தவர்கள், காணாமல்போனவர்களை வைத்திருந்து, கொலை செய்து கடலில் வீசியுள்ளார்களா?

அந்த உடல்கள்தான் கரையொதுங்கியுள்ளனவா? என காணாமல் போனவர்களின் உறவுகளினால் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன என்றார்.

மேலும், பாகிஸ்தானுக்கு 3,500 கண்களை இலங்கையில் இருந்து தானம் செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள்

. அந்த கண்கள் யாருடையவை என்பதில் சந்தேகங்கள் உள்ளன. எனவே இது தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

    Posted in இலங்கை செய்திகள்

    போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறைபிடிப்பு

    போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறைபிடிப்பு

    இலங்கை தெற்கு கடல்பகுதியில் போதைவஸ்துடன் நடமாடிய வெளிநாட்டு கப்பல் ஒன்று

    இலங்கை கடல் படையினரால் சுற்றிவளைக்க பட்டு சிறை பிடிக்க பட்டுள்ளது


    மேற்படி கப்பலில் பயணித்த ஆறு பேர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

      Posted in சினிமா

      சாதனை படைத்த ஜெய் பீம்ர்

      சாதனை படைத்த ஜெய் பீம்ர்

      ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்த ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.

      முதல் இடம் பிடித்து சாதனை படைத்த ஜெய் பீம்
      சூர்யா


      ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்தியாவில் 2021-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள் பட்டியலை

      கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் முதல் இடம் பிடித்துள்ளது.

      இந்தி படங்களான ஷேர்ஷா இரண்டாவது இடத்திலும், ராதே 3-வது இடத்திலும், பெல் பாட்டம் 4-வது இடத்திலும், எட்டேர்னல்ஸ் 5-வது இடத்திலும், விஜய்யின் மாஸ்டர் 6-வது இடத்திலும்,

      சூர்யவன்சி 7-வது இடத்திலும், மற்றும் காட்சில்லா காங் 8-வது இடத்திலும், திரிஷ்யம் 2-ம் பாகம் 9-வது இடத்திலும், புஜ் : த பிரைட் ஆப் இந்தியா 10-வது இடத்திலும் உள்ளன.

      ஜெய் பீம்

      ஜெய்பீம் போலீஸ் சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் படமாக வந்தது. இந்த படத்தை ஞானவேல் இயக்கி இருந்தார். இதில் சூர்யா

      வழக்கறிஞராக நடித்து இருந்தார். படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக பா.ம.க, பா.ஜனதா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

        Posted in சினிமா

        80 கோடிக்கு திருமண வீடியோ விற்ற நடிகை

        80 கோடிக்கு திருமண வீடியோ விற்ற நடிகை

        பிரபல இந்தி பட நடிகை கத்ரினா கைப்புக்கும், விக்கி கவுசலுக்கும் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றுள்ளது.

        இந்தி நடிகரை மணந்தார் கத்ரினா கைப்
        கத்ரினா கைப்- விக்கி கவுசல்


        பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும், நடிகர் விக்கி கவுசலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் ராஜஸ்தானில் உள்ள பழமையான கோட்டையில் நேற்று நடந்தது.

        திருமணத்துக்கு 120 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

        இந்த திருமணம் பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக நடந்துள்ளது. சொகுசு விடுதியில் மணமக்கள் தங்கிய அறையின் ஒருநாள் வாடகை ரூ.7 லட்சம் ஆகும். திருமணத்துக்கு செல்போன்

        கேமராக்கள் கொண்டுவர தடை விதித்து இருந்தனர். திருமண வீடியோவை ஓ.டி.டி. தளத்துக்கு ரூ.80 கோடிக்கு விற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

        கத்ரினா கைப்
        கத்ரினா கைப்- விக்கி கவுசல்

        கத்ரினா திருமணம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமண நிகழ்ச்சிக்காக கோவிலுக்கு செல்லும் பாதையை மூடிவிட்டதாக கத்ரினா மற்றும் விக்கி கவுசல் மீது சட்ட ஆணையத்தில்

        புகார் அளிக்கப்பட்டது. கத்ரினாவும், விக்கி கவுசலும் திருமணம் முடிந்த கையோடு குடியேற மும்பை ஜூஹூ கடற்கரை பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு

        எடுத்துள்ளனர். வீட்டின் மாத வாடகை ரூ.8 லட்சம் ஆகும். இந்த வீட்டில் 5 வருடம் தங்குவதற்காக முன்பணமாக ரூ.1.75 கோடி கொடுத்துள்ளன

          Posted in இலங்கை செய்திகள்

          தொடரும் மனித உரிமைகள் எப்போது முடியும் கேள்வி கணைகளால் துளைத்த இலங்கை தூதரகம் -படங்கள் உள்ளே

          தொடரும் மனித உரிமைகள் எப்போது முடியும் கேள்வி கணைகளால் துளைத்த இலங்கை தூதரகம் -படங்கள் உள்ளே

          இன்று பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் இலங்கை இனவாத அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டி காட்டி,
          குற்றங்களை உடனடியாக நிறுத்த கோரி ஒரு போராட்டத்தை தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் . , (10:12:2021 )வெள்ளி கிழமை மதியம் 12:30 மணியளவில் அமைதியான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் .போராட்டத்தில் .
          தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் அரசாங்கத்தை தமிழர்களுக்கு சரியான நீதி கிடைக்க பல கோரிக்கை களை முன்வைத்து கோவிட் விதிகளை பின் பற்றி செய்வனவே செய்திருந்தனர் .
          இதன்போது

          போலி என்கவுன்டர்களை அரங்கேற்றுவதை நிறுத்துங்கள்

          ஆதிக்கம் செலுத்தும் தமிழ் பகுதிகளில் உள்ள அதிகப்படியான ராணுவத்தை அகற்றவும்,

          போரின் விதவைகளை மிரட்டி பணம் பறிப்பதையும் பாலியல் துன்புறுத்தலையும் நிறுத்து

          தமிழர்களை அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ விடுங்கள்

          சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இனவெறியை ஊக்குவிக்காதீர்கள்

          ஆதிக்கம் செலுத்தும் தமிழ் பகுதிகளில் அதீத இராணுவத்தின் இருப்பை அகற்றவும்

          இலங்கையின் இறையாண்மையை சீனாவிடம் ஒப்படைக்க வேண்டாம்

          ஓரினச்சேர்க்கை பாலியல் சித்திரவதை செய்யாதீர்கள்

          PTA ஐ உடனடியாக ரத்து செய்

          போதை மருந்துகள் தமிழ் மண்ணிற்குள் வருவதை நிறுத்து

          அப்பாவி அரசியல் கைதிகளை விடுதலை செய்.

          என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்களாக முழங்க
          பட்டது .

          Posted in இலங்கை செய்திகள்

          கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் கோட்டா

          கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் கோட்டா

          எமது நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றதெனச் சுட்டிக்காட்டினார்.

          கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09) பிற்பகல் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

          அங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்திலேனும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதோடு, தற்கால உலகை வெற்றிகொள்வதற்கு அவசியமான ஏனைய திறன்களையும் பெற்றிருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

          நமது பல்கலைக்கழகங்களால், ஏற்கெனவே பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர் தொகையைப் பத்தாயிரத்தால் அதிகரித்தமை தற்போதைய அரசாங்கம் அடைந்த பாரிய வெற்றியாகுமென்றும், அவ்வாறு அதிகரித்தாலும்கூட, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும், பல்கலைக்கழகக் கல்வியைப் பெறமுடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னமும் இருக்கின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

          இதற்குக் காரணம், தகுதிபெறும் அனைத்து மாணவர்களுக்கும் இடமளிப்பதற்கு அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் போதுமான கொள்ளளவின்மையாகும். இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எமது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாக மாத்திரம் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகில் உள்ள அனைத்துச் சிறந்த பல்கலைக்கழகங்களும், அரச பல்கலைக்கழகங்கள் அல்ல என்றும் எடுத்துரைத்தார்.

          பெரும்பாலானவை சுதந்திரமான சுயநிர்வாக நிறுவனங்களாகவும் தொண்டு நிறுவனங்கள் அல்லது கல்வியில் கவனம் செலுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் இவ்வாறான நிறுவனங்களை நிறுவ முடியாமைக்குக் காரணமில்லை என்றும் குறிப்பிட்டதோடு, இதைச் சாத்தியமாக்குவதற்கான சட்டக் கட்டமைப்பை மாற்ற வேண்டுமென்றால், அதைச் செய்ய முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

          அரச பல்கலைக்கழகங்களுக்கு வெளியே உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள், பட்டங்களை விற்கும் கல்விக் கடைகள் என்ற பழைய ஆட்சேபனைகள் முட்டாள்தனமானவை என்பதோடு, பட்டப்படிப்புக்குப் பிறகு தொழிற்சந்தையில் வாய்ப்புகளை வழங்க முடியாத பல்கலைக்கழகங்களை மாணவர்கள் நாட மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

          “நாட்டில் மூன்றாம் நிலைக் கல்விக்கான சுதந்திரமான சூழலை ஏற்படுத்துவதன் மூலம், சர்வதேசத் தரம்வாய்ந்த பிராந்திய உயர்க்கல்வி நிறுவனங்களை இலங்கைக்குள் ஈர்க்க முடிவதோடு, அதன் மூலம் இந்நாட்டில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும்.

          “காலப்போக்கில், இது இலங்கையின் உயர்க்கல்வித் துறையை பொருளாதாரத்துக்குச் சாத்தியமான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்ற வருமானம் ஈட்டக்கூடிய ஒரு வழியாக மாறும்” என்று நம்பிக்கைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாடு விரைவாக அபிவிருத்தியடைந்து, எதிர்காலத்தில் வளமான நாடாக மாற வேண்டுமாயின், இலங்கைக்கு அவசியப்படுவது உயர்க்கல்வி கட்டமைப்பில் பரந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும் என்றும் குறிப்பிட்டார்.

          சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பாதுகாப்புக் கல்வி, முகாமைத்துவம், வர்த்தக மேலாண்மை, சட்டம், மருத்துவம், பொறியியல் மேம்பாட்டு முகாமைத்துவம், தொழில்நுட்ப விஞ்ஞானம், சமூகவியல், இணை சுகாதார விஞ்ஞானம் மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில் 1,408 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

          இவர்களில் கலாநிதிப் பட்டதாரி ஒருவரும் பட்டப் பின்படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா ஆகியோரும் அடங்குவர். இதன்போது, 1,180 பேர் தமது முதல் பட்டத்தைப் பெற்றுக்கொண்டனர்.

          சிறந்த இராணுவப் படை அதிகாரியாக கெடட் அதிகாரி எஸ்.எச்.ரொத்ரிகோ, சிறந்த கடற்படை அதிகாரியாக லெப்டினன் எஸ்.டி.கருணாசேன, சிறந்த விமானப்படை அதிகாரியாக பறக்கும் அதிகாரி எஸ்.கே.எஸ்.ருக்ஷான், அதிசூர அதிகாரியாக லெப்டினன் எல்.டி.ஐ.லியனாரச்சி ஆகியோர், ஜனாதிபதி அவர்களிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

          முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடம், 1981இல் நிறுவப்பட்டது. 2009ஆம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் அது முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 2009ஆம் ஆண்டில் சிவில் மாணவர்களுக்கும் பட்டக் கல்வியை தொடர்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தற்போது, முப்படை மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலாநிதிப் பட்டம் மற்றும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா பாடநெறிகளை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.

          கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தற்போது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமாக பொதுநலவாய அமைப்பின் பல்கலைக்கழக சங்கம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழக சங்கத்தின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            திருமணவீட்டுக்கு சென்ற வான் சிதறல்- பலர் காயம்

            திருமணவீட்டுக்கு சென்ற வான் சிதறல்- பலர் காயம்

            இலங்கை அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பஸ்ஸுடன் வான் ஒன்று

            மோதியதில் சம்பவ இடத்தில இருவர் படுகாயமடைந்தனர் .


            மேற்படி விபத்தில்சிக்கிய வான் திருமண நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த பொது இந்த விபத்து

            நேர்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              இந்தியா பறந்த இலங்கை இராணுவ தளபதி

              இந்தியா பறந்த இலங்கை இராணுவ தளபதி

              இந்தியாவின் இராணுவ தளபதி விபத்தில்பலியானதை அடுத்து தற்பொழுது அவரது உடலுக்கு

              அஞ்சலி செலுத்திட இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா டில்லிக்கு பயணமானார்

              இந்த விபத்து சதி என பேச படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                பிரேசில் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

                பிரேசில் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

                சர்வதேச (‘இன்டபோல்’) பொலிஸாரினால் ‘சிவப்பு அறிவித்தல்’ பிறப்பிக்கப்பட்டிருந்த ,பிரேசில்

                நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

                பிரேசில் பொலிஸார் இவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட போது, இவர்

                தாய்லாந்துக்கு தப்பிச் சென்றதாக, விமான நிலைய அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

                இலங்கையில் தங்கியிருக்கும் நோக்கில் இவர் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

                கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை, குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் மீண்டும் பிரேசிலுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

                  செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                  Posted in Uncategorized

                  கொரானாவுக்கு இலங்கையில் 22 பேர் மரணம்

                  கொரானாவுக்கு இலங்கையில் 22 பேர் மரணம்

                  இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 22 பேர்

                  பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

                  மேலும் நோயானது பரவாமல் தடுக்க பல பாதுகாப்பு வழிமுறைகள் பேணப்பட்டு வருகின்ற

                  பொழுதும் நோயினை கட்டு படுத்த முடியாது அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    பாம்பு தீண்டி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு புதிய வீடு

                    பாம்பு தீண்டி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு புதிய வீடு

                    வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கட்டுமுறிவு கிராமத்தில் வருமானம் குறைந்த

                    குடும்பம் ஒன்றுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக, புதிய வீட்டை அமைத்துக்

                    கொடுப்பதற்கான நடவடிக்கை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் அண்மையில் ஆரம்பமானது.

                    பின்தங்கிய பிரதேசமான கட்டுமுறிவு கிராமத்தில், பாம்பு தீண்டி உயிரிழந்த ரவித்திரன்

                    கிருத்திகா எனும் 4 வயது சிறுமியின் பெற்றோருக்கே இந்த வீடு அமைக்கப்படுகிறது..

                    இதுதொடர்பான நிகழ்வில் வாகரை பிரதேச செயலக உயர் அதிகாரிகள், தேசிய வீடமைப்பு

                    அதிகாரசபையின் அதிகாரிகள், இராஜாங்க அமைச்சரின் செயலாளர்கள், பிரதேச இணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

                      Posted in சினிமா

                      இறந்து விடுவேன் என்று நினைத்தேன் – சமந்தா

                      இறந்து விடுவேன் என்று நினைத்தேன் – சமந்தா

                      விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று நடிகை சமந்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

                      மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன் – சமந்தா
                      சமந்தா


                      நடிகை சமந்தா கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். அவரது விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி

                      அளித்தது. விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்கள் பரவின. சமந்தா மீதும் பழி சுமத்தப்பட்டன.

                      இதனை மறுத்த சமந்தா தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கோர்ட்டுக்கும் சென்றார்.

                      இந்தநிலையில் விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

                      சமந்தா

                      இதுகுறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில், ‘‘மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள்.

                      விவாகரத்து செய்து பிரிவதால் மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால்

                      நான் இவ்வளவு வலிமையானவளாக இருப்பேன் என்று நினைக்கவில்லை. நான் வலிமையானவள்

                      என்பதில் பெருமைப்படுகிறேன். சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மூலம் எனது

                      வலிமை எனக்கு தெரிந்துள்ளது. நான் இன்னும் எனது வாழ்க்கையை வாழவேண்டும்” என்றார்

                      Posted in சினிமா

                      நடிகைகளுக்கு சிபாரிசு செய்த அமலாபால்

                      நடிகைகளுக்கு சிபாரிசு செய்த அமலாபால்

                      தமிழில் மைனா படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அமலாபால், சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்து தன் படங்களில் நடிக்க வைத்துள்ளார்.

                      சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்த அமலாபால்
                      அமலாபால்


                      முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆரம்பித்தது முதல், தீவிர கதை தேடுதலில் இறங்கியிருக்கிறார்.

                      அதோடு கதை பிடித்திருந்தால் அவரே தயாரிப்பிலும் ஈடுபடத் தயங்குவதில்லை. தற்போது

                      கடாவர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அனூப்.எஸ் என்பவர் சொன்ன கதை பிடித்திருந்ததால், படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

                      அமலாபால்

                      அதோடு மட்டுமல்லாமல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதுல்யா ரவி, ரித்விகா

                      இருவரையும் நடிக்க வைக்க இயக்குநரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். சக நடிகைகள் மீது

                      அமலா பால் வைத்திருக்கும் இந்த நட்புதான் இந்த சிபாரிசுக்குக் காரணம் என்கிறார்கள்

                        Posted in இலங்கை செய்திகள்

                        முல்லை கடலில் செத்து மிதக்கும் மீன்கள்

                        முல்லை கடலில் செத்து மிதக்கும் மீன்கள்

                        முல்லைதீவு கடல்பகுதியில் மீன்கள் செத்து மிதக்கின்றன ,இந்த மீன்கள் ஏன் இவ்விதம் செத்து மிதக்கின்றன என தெரியவில்லை

                        கரை ஒதுங்கிய டொல்பின் வகை மீன்கள் என கணடறிய பட்டுள்ளது

                        மீன்கள் செத்து இறந்தால் சுனாமி வரும் பேராபத்து என மக்கள் அச்சமடைந்த வருகின்றனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          மனைவி கள்ள காதலனை மடக்கிப்பிடித்து -கத்தியால் வெட்டிய கணவன்

                          மனைவி கள்ள தொடர்பு -கத்தியால் வெட்டிய கணவன்

                          தனது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கிய சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100,000 ரூபா சரீரப் பிணையில்  விடுவிக்குமாறு தம்புத்தேகம நீதவான் நுவன் கௌசல்ய உத்தரவிட்டார்.

                          இராஜாங்கனை பகுதியில் வசிக்கும் ஒருவரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

                          சந்தேக நபர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நிலையில் அவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

                          இந்த நிலையில் அவரது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.

                          இதனை கேள்வியுற்ற சந்தேகநபர், வீட்டுக்கு அருகில் மறைந்திருந்து இரவு வேளையில் வீட்டிற்குள் சென்று இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

                          காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                          சம்பவத்தன்று இரவு இராஜாங்கனை பொலிஸில் சரணடைந்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக நொச்சியாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

                          சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை மற்றும் நொச்சியாகம பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                          சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஸ்ரீ லால் மகேஷ் தலங்கல்ல, தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

                          இந்த நிலையில் சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100,000 ரூபா சரீரப் பிணையில்  விடுவிக்குமாறு தம்புத்தேகம நீதவான் நுவன் கௌசல்ய உத்தரவிட்டார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            பெருமளவு இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

                            பெருமளவு இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

                            இலங்கை இராணுவத்தின் மிக்க முக்கிய பதவி நிலைகளில் உள்ளவர்கள் மற்றும் கீழ் நிலையில்

                            உள்ளோர் என 84 கடற்படை அதிகாரிகள் and 1,684 பேருக்கு திடீர் பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது

                            கோட்டா ஆட்சியில் இராணுவம் நவீன மயமாக்களுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in இலங்கை செய்திகள்

                              நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க பணிந்து செல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை

                              நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க பணிந்து செல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை

                              நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணிந்து செல்ல வேண்டிய

                              தேவை இலங்கைக்கு இல்லை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

                              இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் 07 ஆம் திகதி நடாத்தப்பட்ட பொருளாதார செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

                              கடனை திருப்பி செலுத்த எந்தவொரு விடயத்திலும் தங்கியிருக்க வேண்டிய தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

                              இதேவேளை தனியார் நிறுவனங்களின் கடன் சுமை குறித்து ஆளுநர் குறித்து தெரிவிக்கையில்,

                              பேச்சு வார்த்தை நடாத்jp, வட்டி விகிதங்களை குறைக்க, வெளிநாட்டு கடன் மற்றும் உள்நாட்டு கடன் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

                              அரசாங்கத்தின் கடன் சுமைகளை கூடுமானவரையில் குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம்.

                              இலங்கை கடன்களை மட்டும் பெற்றுக் கொள்வதிலிருந்து விலகி கடன் இல்லாதா வரவுகளை

                              உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

                                60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

                                60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்ட பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள்

                                மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக

                                மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே. கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

                                மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை பிரிவிற்குட்பட்ட மண்முனை வடக்கு பொது

                                சுகாதார பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட பைஸர் தடுப்பூசிகளில் முன்னுரிமை

                                அடிப்படையில் 60 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, 7 தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில் இடம்பெறுகின்றன.

                                இதற்கமைவாக பாலமீன்மடு, சின்னஊறணி, கருவப்பங்கேணி, இருதயபுரம் கிழக்கு ஆகிய

                                நான்கு பொதுசுகாதார பிரிவுகளில் நேற்று (08) பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                பள்ளத்தில் வீழ்ந்த கார்

                                பள்ளத்தில் வீழ்ந்த கார்

                                தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று (09) அதிகாலை ஒரு

                                மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

                                நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று நுவரெலியா – அட்டன்

                                பிரதான வீதியில் சென்.கிளயார் பகுதியில் வீதியை விட்டு விலகி குறித்த கார் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

                                மேற்படி காரில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாகவும், இதனால் அவரின் கவனயீனம் காரணமாகவே

                                இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

                                இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                                  Posted in சினிமா

                                  துப்பறிவாளன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு

                                  துப்பறிவாளன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு

                                  முன்னணி நடிகர் விஷால் நடித்து இயக்க இருக்கும் துப்பறிவாளன் 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

                                  துப்பறிவாளன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு
                                  விஷால்
                                  விஷால் ஏற்கனவே பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி செல்லமே படம் மூலம்

                                  கதாநாயகன் ஆனார். அந்த படத்தின் வெற்றியால் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் டைரக்டர் அவதாரம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

                                  ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் வெளியாகி

                                  வரவேற்பை பெற்ற நிலையில் அதன் 2-ம் பாகமும் இதே கூட்டணியில் உருவானது. இதன்

                                  முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தபோது மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் மோதல்

                                  ஏற்பட்டதால் படத்தை இயக்க முடியாது என்று மறுத்து மிஷ்கின் வெளியேறிவிட்டார். இதையடுத்து துப்பறிவாளன் 2-ம் பாகத்தை நானே இயக்குவேன் என்று விஷால் அறிவித்தார்.

                                  ஆனாலும் பட வேலைகளை தொடங்காமல் வேறு படங்களில் அவர் நடித்து வந்ததால் துப்பறிவாளன்-2 படத்தை கிடப்பில் போட்டு விட்டதாக பேச்சு கிளம்பியது. இந்த நிலையில்

                                  துப்பறிவாளன்-2 படப்பிடிப்பை ஜனவரி மாதம் லண்டனில் தொடங்க இருப்பதாகவும், 3 மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் விஷால் அறிவித்துள்ளார்.

                                  இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். விஷால் இயக்கும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.