Posted in சினிமா

கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா பாதிப்பு

கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த இரண்டு நடிகைகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா பாதிப்பு
கரீனா கபூர்

பிரபல பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர்கான் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நடைபெற்ற பரிசோதனையின்

முடிவுகளின்படி இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி இருவரும் பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

மும்பையில் அண்மையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கரீனாவும், அம்ரிதாவும் பங்கேற்றனர். அந்த புகைகப்படத்தை இன்ஸ்டாகிராம் சமூக வளைத்தளத்தில் கரீனா

பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில், மல்லிகா அரோரா, கரீஷ்மா கபூர், கரீனா கபூரின் மேலாளர் மசாபா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள்

இதேபோல் நடிகரும் இந்தி திரைப்பட இயக்குநருமான கரண் ஜோகர் வீட்டில் நடைபெற்ற விருந்திலும் இவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். நடிகை அலியா பட் மற்றும் அர்ஜூன் கபூர் உள்பட இதில் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றால் கரீனா கபூர், அம்ரிதா அரோரா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

பிரபல நடிகையான கரீனா கபூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பாலிவுட் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்போது அமீர் கானுடன் லால் சிங் தத்தா என்ற

திரைப்படத்திலும், ரன்வீர் சிங்குடன் தகத் என்ற திரைப்படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Posted in சினிமா

சமந்தா கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு

சமந்தா கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு

அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புஷ்பா படத்தில் இடம் பெற்றிருக்கும் சமந்தாவின் கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

சமந்தா ஆடிய கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு
சமந்தா


அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம்

செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். முதல் பாகம் வரும் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சமந்தா நடனம் ஆடிய பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், “ஓ அண்டா வா மாவா.. ஓஓ அண்டா வா மாவா” என்கிற இந்த பாடல் வரிகள் தெலுங்கில்

இடம் பெற்றுள்ளன. தமிழிலும் இந்த பாடல் ‘ஓ சொல்றியா மாமா.. ஓஓ சொல்றியா மாமா’ என்கிற வரிகளைக் கொண்டு வெளியாகியுள்ளது.

சமந்தா

தமிழில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா இந்த பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில், ஒரு பெண் எவ்விதம் ஆடை அணிந்திருப்பினும், என்ன நிறம், உயரம், தோற்றமாக

இருப்பினும், எப்படி பேசினாலும் ஆண்களின் புத்தி வக்கிரம் நிறைந்ததாக இருப்பதாக இந்த பாடல் பொருள் தருவதாகவும், அனைத்து ஆண்களையும் இந்த வரிகளின் கருத்துக்கள் தவறாக

சித்தரிப்பதாகவும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஆண்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    இரு சிறுவர்களை காணவில்லை தேடும் பொலிஸ்

    இரு சிறுவர்களை காணவில்லை தேடும் பொலிஸ்

    இலங்கை கொட்டதெனிய பகுதியில் 10.12,மற்றும் சிறுவர்கள் காணமல் போயுள்ளனர் ,இவ்விதம்

    காணாமல் போன சிறுவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

    ,இவர்கள் கடத்த பட்டார்களா அல்லது எங்கேனும் விபத்தில் சிக்கி இறந்தார்களா என்ற ஐயம் நிலவுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் கொரானாவுக்கு 27 பேர் மரணம்

      இலங்கையில் கொரானாவுக்கு 27 பேர் மரணம்

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி கடந்த தினம் 27 பேர்

      பலியாகியுள்ளனர் ,இவ்வாறு இறந்தவர்களில் 14 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் என தெரிவிக்க

      பட்டுள்ளது ,மேலும் புதிய கொரனோ தாக்குதலில் சிக்கி முதலாவது நபர் இறந்துள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        சிங்கப்பூருக்கு பறந்த கோட்டபாயா

        சிங்கப்பூருக்கு பறந்த கோட்டபாயா

        இலங்கை ஆளும் தமிழ் இனக்கொலையாளி கோட்டபாய ராஜபக்ஸ்சா


        தனிப்பட்ட விடயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு பயணித்துள்ளார் என ஜனாதிபதி


        ஊடாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் நாளை ரயில்வே சேவைகள் பாதிப்பு மக்களுக்கு எச்சரிக்கை

          இலங்கையில் நாளை ரயில்வே சேவைகள் பாதிப்பு மக்களுக்கு எச்சரிக்கை

          இலங்கையில் நாளை முதல் ரயில்வே சேவைகள் பாதிக்க படும் என ரயில்வே அதிகாரி

          தெரிவித்துள்ளார்

          தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பு அது தொடர்பான வேதன விடயங்கள் பேசு பொருளாக

          உள்ளதினால் இந்த தாமதம் ஏற்படும் என தெரிவிக்க பட்டுள்ளது

            Posted in Uncategorized

            தியத்தலாவ இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் மரணம்

            தியத்தலாவ இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் மரணம்


            இலங்கை அரச ஆயுத படைகளின் மிக முக்கியமான இராணுவ முகாமாக விளங்கும் தியத்தலாவ


            இராணுவ முகாமில் பொறியியல் பிரிவில் பணியாற்றிய 37 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் மரணமாகியுள்ளார்

            குறித்த இராணுவ முகாமில் சுவர் ஒன்றை அகற்றும்


            பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அந்த சுவர் இவர் மீது வீழ்ந்ததில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              கடலில் மூழ்கிய நால் வரை காணவில்லை

              கடலில் மூழ்கிய நால் வரை காணவில்லை

              இலங்கை மன்னார் மற்றும் வத்தலை கடல்பகுதியில் நீராட சென்ற நால்வர் காணாமல் போயுள்ளனர் ,இவ்வாறு காணாமல் போனவர்களில் 15 வயதுடைய சிறுவனும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

              காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடற்படை மற்றும் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கை மீனவர்களுக்கு எச்சரிக்கை

                இலங்கை மீனவர்களுக்கு எச்சரிக்கை

                இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

                அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                2021 டிசம்பர்13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

                மழை நிலைமை:

                காங்கேசந்துறையிலிருந்துதிருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                காற்று :

                நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                கடல் நிலை:

                திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

                நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

                இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

                Posted in Uncategorized

                இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

                இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


                மனித உரிமைகளை மதிக்காதவர்கள், போர்க்குற்றங்களை செய்தவர்கள் உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுதான் பொது விதி என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

                போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
                அன்புமணி ராமதாஸ்
                அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

                இலங்கையில் அப்பாவி ஈழத்தமிழர்கள் 19 பேரை படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதிபர் கோத்தபயாவால் மன்னிக்கப்பட்ட சிங்கள ராணுவ அதிகாரிகள்

                ஹெட்டியாராச்சி, சுனில் ரத்னாயகே ஆகியோர் அமெரிக்காவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

                மனித உரிமைகளை மதிக்காதவர்கள், போர்க்குற்றங்களை செய்தவர்கள் உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுதான் பொது விதி. ஒரு நாடு மனித உரிமையை மதிக்கிறது; பாதிக்கப்பட்ட சமூகத்தின் பக்கம் நிற்கிறது என்பதற்கு அது தான் அடையாளம். அதை அமெரிக்கா சரியாக செய்திருக்கிறது!

                ஆனால், இலங்கையில் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்தியாவுக்கு விருந்தினர்களாக வந்து செல்கின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்தியாவில் நுழைய தடை விதிக்கப்பட வேண்டும்!

                இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  மாணவனை குழாயால் தாக்கி கையை முறித்த டீச்சர்

                  மாணவனை குழாயால் தாக்கி கையை முறித்த டீச்சர்

                  இலங்கை வேயானகொட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த உயர்தரம்

                  படிக்கும் மாணவர் ஒருவரை டீச்சர் ஒருவர் குழாய்கள் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார்


                  இவரது இந்த தாக்குதலில் சிக்கி மாணவன் பலத்த காயமடைந்த நிலையில் Wathupitiwala மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளான்

                  மேற்படி மாணவன் கையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த மருத்துவமனை

                  வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார் ,குறித்த சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

                    Posted in இலங்கை செய்திகள்

                    50 அடி பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ

                    50 அடி பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ

                    நோட்டன் – பம்பரகலை தோட்டத்தில் உள்ளக வீதியோரத்தில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து

                    முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

                    சாரதி உட்பட்ட நால்வர் பயணித்த குறித்த முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து வீடொன்றின் வாசல் முன்றலில் வீழ்ந்துள்ளது.

                    சம்பவத்தில் காயமடைந்த சாரதி உட்பட முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் காயமடைந்த

                    நிலையில் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

                      Posted in Uncategorized

                      மருத்துவ மனையில் வெடிப்பு – பலத்த சேதம்

                      மருத்துவ மனையில் வெடிப்பு – பலத்த சேதம்

                      மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்துக்குட்பட்ட அரசடி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் எரிவாயு அடுப்பு வெடித்ததன் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

                      இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

                      வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலின்டரிலிருந்து வாயு கசிவு

                      வந்துகொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்ததுடன், குறித்த வெடிப்பினால் எரிவாயு அடுப்பு

                      இருந்த அறையின் வாயிற்கதவு வெடித்துச் சிதறியுள்ளதுடன், அறையினுள் இருந்த பொருள்களும் முற்றாக எரிந்துள்ளன

                        Posted in இலங்கை செய்திகள்

                        யாழில் விபத்து =- மூவர் காயம்

                        யாழில் விபத்து =- மூவர் காயம்

                        யாழ்ப்பாணம் வரணிபகுதியில் பயணிகள் சிற்றூர்தியும் டிப்பர் வாகனமும் நேரெதிர்


                        மோதி சிதறியது ,இதனை பொது மூவர் படுகாயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் அரச

                        மருத்துவமனையில் அனுமதிக்க பத்துல்க்ளனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          இராணுவம் தயார்நிலையில் – இராணுவத் தளபதி

                          இராணுவம் தயார்நிலையில் – இராணுவத் தளபதி

                          இலங்கை இராணுவம் பல்வேறு பயிற்சித் தொகுதிகள் மற்றும் பயிற்சிகளையும் அறிமுகப்படுத்தும் அதேவேளை நடைமுறைக்கு உகந்த வகையிலான மிக உயரிய போர்த் தயார்நிலையைகளைப் பேணுகிறது. எல்.ரீ.ரீ.ஈ உடனான மூன்று தசாப்த கால மோதலின் போது பெறப்பட்ட சொந்த அனுபவங்களின் அடிப்படையில் திறனமிக்க நவீன போர் நுட்பங்களுடனான எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகிவருகிறது.

                          போர் அல்லது சமாதானம் உள்ளிட்ட எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் ஒரு சிப்பாய் எப்போதும் தோற்கடிக்க முடியாத சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் நவீன எதிரிகள் வழக்கத்திற்கு மாறானவர்கள், குறிப்பாக அவர்களின் சிறிய செயற்பாடுகள், மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியவை.

                          அதேபோல் 20 ஆம் நூற்றாண்டில் நாடுகளுக்கிடையில் ஏற்படக்கூடிய மோதல்களானது அந்த நாடுகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளதை போன்றே மற்றைய நாடுகளுக்கும் சிக்கல்களை தோற்றுவிக்க கூடியதாக உள்ளது.

                          இராணுவ அழுத்தமானது அதிக சவால் நிலைமைகளாக காணப்படும் பொருளாதார, இராஜதந்திர மற்றும் உளவியல் நெருக்கடிகள் ஆகியவற்றுடன் பிணைந்ததாக காணப்படுகிறது. அடிப்படைவாதம் மற்றும் கருத்தியல் அடிப்படையிலான மோதல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக நவீன எதிரிகளை பொறுத்தவரையில் நபர்கள் மற்றும் ஆயுதங்களை விடவும் அவர்கள் கையாளும் வழிமுறைகள் மிகவும் சிக்கலான வகையில் அமைந்துள்ளன என்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் 08.12.2021 காலை சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் 15 ஆம் இலக்க பாடநெறியை பூர்த்தி செய்து ‘பிஎஸ்சி’ பட்டம் பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இளங்கலை அதிகாரிகளுக்காக நிகழ்த்திய உரையில் சுட்டிக்காட்டினார்.

                          ‘சமகால பாதுகாப்பு பரப்பிற்குள் ஆயுதப்படைகளின் வகிபாகம்’ என்ற தொனிப்பொருளில் உரை நிகழ்த்தியிருந்த இராணுவத் தளபதி, இன்றைய பன்முக மற்றும் சிக்கலான பாதுகாப்பு சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கு இராணுவப் படைகளை நேரடியாகப் பயன்படுத்துவதை விட முறையான, விரிவான மற்றும் பின்னிப்பிணைந்த அணுகுமுறைகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

                          “பாதுகாப்பு சார் சூழ்நிலைகள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது, அதனால் நேரடியான தீர்மானங்களை எடுப்பது கடினமாக அமைந்துள்ளது. எனவே, முன்னைய அனுபவத்தை வைத்து அடுத்த நெருக்கடியை நம்மால் வெல்ல முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு கொடுக்கக்கூடிய சிறந்த உதாரணம் கொவிட் 19. தொற்றுநோய்; ஒரு சிறிய வைரஸ் அனைத்து வழக்கமான பாதுகாப்பு பரிமாணங்களையும் மிஞ்சும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாம் எப்போதாவது நினைத்திருக்கிறோமா? ”என்று அவர் வினவினார்.

                          இலங்கையின் முப்படையினருக்காக சர்வதேச தரத்திலான கற்பித்தல்களை வழங்கும் களமான சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு நுழைவாயில் வளாகத்தில் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து பாதுகாப்பு கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், பாடநெறி எண் – 15 இன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இளங்கலை பட்டதாரிகளால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

                          பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் எண்-15 பாடநெறியில், பாகிஸ்தான், பங்களாதேஷ், ருவாண்டா, மாலத்தீவு, இந்தோனேசியா, நேபாளம், அமெரிக்கா, செனகல் மற்றும் சவுதி அரேபியாவை உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்த 144 இளங்கலை பட்டதாரிகள் கலந்துகொண்டனர். அவர்களில் 78 இராணுவ அதிகாரிகள், 23 கடற்படை அதிகாரிகள், 26 விமானப்படை அதிகாரிகளும் பீஎஸ்சீ பட்டத்தை பெற்றுகொண்டனர்.

                          பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் அக்கல்லூரிக்கு வருகை தந்த விரிவுரையாளருக்கு அன்பான வரவேற்பளித்ததோடு, நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கும் அறிமுகம் செய்தார்.

                          அதேபோல் நிகழ்வின் நிறைவம்சமாக இடம்பெற்ற கேள்வி-பதில் அமர்வைத் தொடர்ந்து இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சிறப்பு நினைவு பரிசொன்றை வழங்கி நன்றிகளையும் கூறிக்கொண்டார். கல்லூரி வளாகத்திலிருந்து விடைபெறும் முன்பாக தளபதியவர்களால் கல்லூரியின் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.

                          பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் இளங்கலைப் பட்டதாரிகளுக்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “வழக்கமான முறைகளை விட எதிரிகளுக்கு பல வழிமுறைகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தீவிரவாத குழுக்கள் இன்று பொது மக்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அணுகுமுறைகளை முன்னெடுக்கின்றனர். மிகவும் சூட்சுமான முறையில் ஆட்சேர்ப்பு, தூண்டுதல், பிரச்சாரம் மற்றும் ஆயுதங்கள் கொள்வனவு செய்தல் மற்றும் வரையறையற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். அதனால் ஒற்றுமைக்கான தேசிய பொறிமுறைகளுடன் இணங்கிச் செயற்பட நாம் மறுக்கின்ற பட்சத்தில் நமது தேசிய பாதுகாப்பு கட்டமைப்பில் மாற்ற முடியாத இடைவெளிகள் ஏற்படுவதற்கு இடமளித்துவிடுவோம். “சாதிக்க முடியாத இலக்குகளையும் அடைவதற்கான ஒரே கருவியாக ஒற்றுமை மட்டுமே உள்ளது என்று நான் நம்புகிறேன்”. இந்த பரந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டுதான் இலங்கை இராணுவத்தின் 2020 – 2025 முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

                          மேற்படி விரிவான மூலோபாய திட்டமிடலை செயற்படுத்துவதற்கு நாடு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது தொடர்பிலான மூலோபாய சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல் 2020 – 2025 முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் அதிமேதகு ஜனாதிபதியவர்களின் “சௌபாக்கியத்திற்கான தெரிவு” என்ற கொள்கைத்திட்டத்துடன் எவ்வாறு பொருந்துகிறது என்பது குறித்தும் விரிவான புரிதலை கொண்டிருப்பது அவசியமாகும். அத்தோடு நமக்கான பயிற்சிகள் இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்புச் சூழ்நிலை மற்றும் அதற்குள்ளான ஆயுத படைகளின் வகிபாகம் பாதுகாப்பு கொள்கைகள் அதற்கு தகுந்த படைகளின் கட்டமைப்பு மற்றும் திறன் ஆகியவை தொடர்பான புரிதல்களை ஏற்படுத்த கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டியதும் அவசியமாகும். அதேபோல் மேற்படி காரணிகளை மீளாய்வு செய்து ஆயுத படையினரை அர்ப்பணிப்பு மற்றும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளகூடிய வகையிலும் கட்டமைக்க வேண்டியது அவசியமாகும் எனவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா வலியுறுத்தினார்.

                          “அண்மைய காலங்களில், இராணுவம் குறிப்பாக போர்ச் சூழலுடன் தொடர்பற்ற பணிகளை மேற்கொண்டது, எதிர்காலத்திலும் இவ்வாறான பணிகளை தொடர நேரிடலாம். எனவே, நமது ஆயுதப் படைகள் அதற்கு தகுந்த வகையில் முழுமையாக பயிற்றுவிக்கப்படவேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வகையில் உரிய வளங்கள் மற்றும் சட்டங்கள், அதிகாரங்களுடன் பாதுகாப்பு தொடர்பான வகிபாகத்தை பேண வேண்டும், மேலும் புதிய மூலோபாய ரீதியில் வரையறுக்கப்பட்ட மற்றும் நியாயமான நோக்கங்களுக்காக ஆயுதப்படைகளை பயன்படுத்துவதன் மூலம் நிறுவன கட்டமைப்பின் மட்டத்திலும் சர்வதேச அளவிலும் பொறுப்புகூறலுடன் செயற்பட முடியும் என்றும் கூறினார்.

                          இராணுவத் தளபதியின் உரையின் முக்கிய விடயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

                          “நான் கல்வி பயின்ற கல்விக்கூடத்தில் உங்களுக்கு உரை நிகழ்த்துவதை மரியாதையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன்.

                          இந்த மதிப்புமிக்க நிறுவனம் கட்டளைகள், திறன், அறிவுசார் ஊழியர்களை கொண்ட்ட கூட்டிணைப்பாகும்.முப்படை அதிகாரிகளுக்கும் நிறுவனத்தில் உயர் பொறுப்புகளை வழங்க வேண்டும் வலியுறுத்தியதன் விளைவாக இன்றைய நிலைமைக்கு என்னை உருவாக்கிய பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரிக்கு உயர்வான மரியாதையை செலுத்துகிறேன்.

                          அதேபோல் ஆரம்ப கட்டத்தில், ஒரு அதிகாரியின் தொழில் வாழ்க்கையின் மிக முக்கியமான அடைவை ஒன்றை நீங்கள் நிறைவு செய்கிறீர்கள் என்பதை நினைவூட்டுகிறேன். எனவே, இந்த நிறுவனத்திலிருந்து கற்றல் மற்றும் வடிவமைப்பை உங்கள் ஆளுமை, தொழில்முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவற்றை ஊக்குவிப்பாக எடுத்துக் கொண்டு உங்களது முன்னேற்றத்தை ஆரம்பிக்க வேண்டும்.

                          மேலும் நமது நட்பு நாடுகளைச் சேர்ந்த பயிலிளவல் அதிகாரிகள் தொடர்பாக சிறப்பாக எடுத்துரைக்க விரும்புகிறேன். சர்வதேச மாணவர்களின் பங்கேற்பானது, வெவ்வேறு கலாச்சார், கல்வி, கோட்பாடு மற்றும் தனிப்பட்ட மாறுபாடுகளின் அடிப்படையில் வெவ்வேறு கொள்கைகளின் கீழ் எவ்வாறு நிலைமையைக் காண முடியும் என்பதை விளங்கிக்கொள்வதற்கு பயிலிளவல் அதிகாரிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்றும், அதனால் பாடநெறிக்கு மெலும் தரம் சேர்க்கப்படுகிறது எனவும் இப்பாடநெறியின் போது நீங்கள் கொள்கை ரீதியான, தந்திரோபாய மற்றும் கொள்கை ரீதியான அறியியல் திறன்களை மேம்படுத்துகொண்டிருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

                          இராணுவக் கோட்பாட்டாளரான, கார்ல் வான் கிளாஸ்விட்ஸ் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு “போரின் மூடுபனி” என்னும் நூலில் மைதானத்தில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை அறிந்து வைத்திருப்பது எப்போதுமே கடினமானது என குறிப்பிட்டுள்ளார். எனவே நேற்றை போரை வெற்றிகொண்டதால் நவீன மோதல்களையும் அதேபோன்று அணுக முடியுமென கருதுவது மிகவும் ஆபத்தானதும் விவேகமற்றதுமான அனுமானமாகும். எனவே வெறும் நிகழ்தகவுகளை மாத்திரம் நம்பிகொண்டிருப்பதை விடவும் சாத்தியமான சிந்தனைகளை தூண்டுவது மிகவும் அவசியமாகிறது.

                          சமகால பிரச்சினையை கடக்க வேண்டுமானால் அவை தொடர்பில் ஆழமாக கற்றறிய வேண்டும். எனவே, நிலையான விழிப்புணர்வு மற்றும் பரந்த அளவிலான தெரிவுகள் என்பன மாத்திரமே புதிய சவால்களுக்கு ஏற்ப நமது படைகளை வடிவமைக்க ஒரே வழியாகும் எனவும் வலிறுத்தினார்.

                          தீவிரவாத குழுக்கள் இன்று பொது மக்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அணுகுமுறைகளை முன்னெடுக்கின்றனர். மிகவும் சூட்சுமான முறையில் ஆட்சேர்ப்பு, தூண்டுதல், பிரச்சாரம் மற்றும் ஆயுதங்கள் கொள்வனவு செய்தல் மற்றும் வரையறையற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இன்றளவில் சைபர் தாக்குதல்கள் எதிரிகள் விரும்பிய இலக்குகளை அடைவதற்கான மிகச் சிறந்த வழிமுறையாக மாறியுள்ளது. இது எதிரிகளின் கையொப்பத்தை மறைப்பதற்கும், பாரம்பரிய பாதுகாப்பு வழிகளை தகர்க்கவும் அவர்களின் இலக்கை அடையவும் உதவியாக அமைந்துள்ளது.

                          மோதல்களுக்கு எவ்வேளையிலும் தயாராக இருந்தாலும் எதிர்பாராத மோதல் நிலைமைகளுக்கு தயாராக இல்லாமல் இருப்பதானது பேரழிவை தருகிறது. குறிப்பாக எதிரிகளுக்கு வழமையான முறைமைகளுக்கு மாறான புதிய உபாயங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும். மறுமுனையில் தீவிரவாத குழுவினர் இன்று பொதுமக்களுக்கு பரீட்சயம் இல்லாத முறைமைகளை கொண்டுள்ளதோடு அதனூடாக மிகவும் சூட்சுமான முறையில் ஆட்சேர்ப்பு, தூண்டுதல், பிரச்சாரம் மற்றும் ஆயுதங்கள் கொள்வனவு செய்தல் மற்றும் வரையறையற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

                          மேலும் மோதலை தூண்டுவோரின் நோக்கங்களை அறிந்துகொள்வது கடினமானதாகும். அதேபோல் மோதல்களும் நல்ல மற்றும் தவதறான நோக்கங்களை அடிப்படையாக கொண்டதாகவும் அமைந்திருக்கூடும். ஆசியா-பசுபிக் பிராந்தியத்தின் பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றம் காரணமாக பாதுகாப்பு செயற்பாடுகளில் பரிணாமங்களை உருவாக்க வேண்டிய அவசியம் தோன்றியுள்ளது. குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளுக்கு புவிசார் மூலோபாய பாதுகாப்பு பொறிமுறைகளை மேம்படுத்துவதற்கான அவசியங்களும் தோன்றியுள்ளன.

                          உலகெங்கிலும் உள்ள பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் குற்றச் செயல்களால் நிகழ்கால பாதுகாப்பு சூழலுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலால் வன்முறைகள் இடம்பெறுகின்றன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அரசியல் மற்றும் சமூக பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. எனவே, இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கு இராணுவத்தின் தயார் நிலைமை அவசியமாகும்.

                          ஜனநாயக சமூகங்கள் மத்தியில் ஆயுதப் படைகளின் அளவு மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு படைகளுக்கான செலவீனங்கள் தொடர்பிலான நியாயமாக கேள்விகள் மற்றும் ஆயுதப் படைகள் பன்முகத் திறன்கள் கொண்டதாகவும் நவீனத்துவத்தில் இராணுவ முயற்சியில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்தை அடித்தளமாகக் கொண்டதாகவும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

                          நவீனகால பாதுகாப்பு மற்றும் நிகழ்கால சூழலின் நடைமுறைகள் முன்பை விட இராணுவ சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன. இதனால் அடுத்த சில வருடங்களிலும் கூட உலகம் ஒரு சிக்கலான, நிலையற்ற, கணிக்க முடியாத மற்றும் ஆற்றல்மிக்க பாதுகாப்பு சூழலை எதிர்கொள்ள நேரிடும் என நம்புகிறேன்.குறிப்பாக மோதல்களின் தன்மையை பொருத்து பாதுகாப்பு சூழல் கட்டுப்படுத்த கூடியதாகவும் கட்டுக்குள் அடங்காததாகவும் மாற்றம் அடைகிறது. எவ்வாறாயினும் நாம் வாழ வேண்டும் எனில் சூழலுக்கு மாற வேண்டும் என்பதுதான் நிதர்சனமாகும். இலங்கையின் புவிசார் மூலோபாய அமைவிடம், தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகளால் பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

                          பொதுவாக வெளிநாட்டில் இடம்பெறும் மோதல்களை மையப்படுத்திக்கொண்டு அடிப்படைவாதச் சிந்தனைகள் மற்றும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெறுவதோடு, அதன் விளைவாக உள்நாட்டு மக்களையும் எதிரிகளாக கருதிக்கொண்டு செயற்படுவோரால் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

                          அதேபோல் நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றுமொரு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதோடு. மேற்கத்திய மற்றும் கிழக்கு உலக அதிகார தொகுதிகளின் மேலாதிக்கச் செயற்பாடுகளின் விளைவாக பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அடிப்படை வாதத்தை மையப்படுத்திய தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் அவை பொருளாதார,இராஜதந்திர அல்லது இராணுவ வழிமுறைகளில் நடத்தப்படலாம் என்றார். மேற்கு மற்றும் கிழக்கு அதிகாரத் தொகுதிகள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மேலாதிக்கத்திற்கான பாதுகாப்புப் போட்டி அல்லது கருத்தியல் போரில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, இது பொருளாதார, இராஜதந்திர, பினாமி அல்லது இராணுவ வழிமுறைகளின் மீது நடத்தப்படலாம்.

                          இந்த செயற்பாடுகள் இலங்கையின் எதிர்காலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமையும். எனவே வெறுமனே தந்திரோபாய செயற்பாடுகள் மூலம் மாத்திரம் வெற்றிகளை அடைந்துகொள்ள எதிர்பார்ப்பதும் எதிரிகளின் ஒரு தொகுதியை மற்றும் வெற்றிகொள்ள முற்படுவதும் பொருத்தமற்றதாகும். வழமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மாறாக வேறு சிறிய அளவிலான அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. காலநிலை மாற்றம், நாடுகடந்த குற்றங்கள், இணைய பயங்கரவாதம் மற்றும் நிலையற்ற பிரச்சினைகள், பொருளாதார ஸ்தம்பிதம் மற்றும் பேரழிவு தரும் தொற்றுநோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகளும் எழுந்துள்ளன. அதே சமயத்தில் பழமையான அச்சுறுத்தல்கள் புதியவகை அச்சுறுத்தல்கள் என வேறுபாடுகளை ஏற்படுத்துவதும் கடினமானது. எனவே அத்தகைய கணிப்புக்களை சரியாக மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கான ஆளணி மற்றும் தொழில்நுட்ப வளங்களும் அவசியமாகும்.

                          போரின் போது எதிரிகள் தங்களது நகர்வுகள் மற்றும் வழிமுறைகளை நுட்பமாக கட்டமைக்கிறார்கள், இவ்வாறன விடயங்களில் உண்மை நிலைமைகைள ஏற்றுக்கொள்ள நாம் பின்வாங்ககூடாது. எனவே, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி என்ற வகையில் நான் ஒருபோதும் எதிரியின் தோல்விகளை குறைத்து மதிப்பிடுவதில்லை அதேபோன்று, சொந்த படைகளின் வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை மையப்படுத்தி தயார்படுத்தல்களை மேற்கொள்வதும் இல்லை. எனவும் தெரிவித்தார்.

                          இலங்கை இராணுவம் தேசத்தின் மீட்பாளர்கள் என்ற அடையாளத்தை நீண்ட காலமாகக் கொண்டுள்ளது ஏனெனில் இராணுவம் ஒவ்வொரு அவசரநிலைகளிலும் தலையிட்டு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. “இலங்கையின் குடிமக்கள் எங்கள் தாய்நாட்டிற்கான எங்கள் தியாகங்களையும் பங்களிப்புகளையும் பாராட்டுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.” எதிர்வரும் காலத்திலும் இராணுவம் மக்களின் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் நலன்களை பேணுவதில் அக்கறை செலுத்தும். வளர்ந்து வரும் நாடு என்ற வகையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு முன்னுதாரணமாக நமது நாடு மாறியிருக்கிறது. அவ்வப்போது இந்த நிலைமைகள் மாற்றமடைந்துகொண்டு இருக்கும். எவ்வாறாயினும் நாட்டின் முன்னேற்றத்திற்கான மக்களின் கோரிக்கை அவ்வண்ணமே உள்ளது.

                          எனவே, இலங்கை இராணுவப் படைகளை இப்போது ஒரே விதமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தகுந்தவையாக விரிவுபடுத்த முடியாது, மாறாக அச்சுறுத்தல்களின் தன்மைகளுக்கு ஏற்ப பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டும். எனவே, தற்போது நம்மிடம் உள்ள எண்ணக்கருக்கள், கோட்பாடுகள் மற்றும் திறன்கள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் அதனால் மேலும் நாம் மறுசீரமைக்க வேண்டும் என்றார்.

                          இன்று ஒரு சில முக்கியமான கேள்விகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; என்ன அச்சுறுத்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்? ஆயுதப் படைகள் எந்த அளவில் பயன்படுத்தப்படும்? எதிர்காலத்தில் எந்தச் சூழலில், சுதந்திரம் மற்றும் கட்டுப்பாடுகளின் கீழ் ஆயுதப் படைகள் செயல்படும்? மிக முக்கியமாக, மோதலின் எந்தப் பகுதியை இராணுவம் ஒட்டுமொத்த பாதுகாப்புக் கட்டமைப்பின் கருவியாகப் பயன்படுத்தப்படும்? யார் சண்டையிடுவார்கள், யாருடன் போரிடுவார்கள், எங்கு போரிடுவார்கள், என்ன உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று ஆயுதப் படைகள் கணிக்க இந்த கேள்விகள் வழிவகுக்கும்.

                          மேற்படி விடயங்களுடன் தொடர்புடையதான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தி எதிர்பார்க்கும் இராணுவ இலக்குகளை அடைந்துகொள்ளகூடிய வகையில் அடிக்கடி இராணுவ கட்டமைப்பை மறுசீரமைப்பது அவசியமாகும். அதன்படின நிலையாக தேசிய பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்கு பல்துறை சார் திறன்களை கொண்டதார இராணுவ கட்டமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படகூடிய திறன் மிக்கதாகவும் இராணுவம் இயங்க வேண்டும்.

                          இறுதியாக, இலங்கை தற்போது உள்ளுர் மற்றும் சர்வதேச சூழல்களில் தோன்றிய பொருளாதார முன்னேற்றம், ஊழலை மட்டுப்படுத்தல், போர்க்குற்றங்களுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான ஈடுபாடு, வெற்றி-வெற்றி செயற்றிட்டத்தை நோக்கிய வெளியுறவுக் கொள்கைக்கு புத்துயிர் அளிப்பது, நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தேசிய பாதுகாப்பு அணியை வலுப்படுத்துதல், சமூக-பொருளாதார மேம்பாடு, அண்மைய காலமாக பரவிவரும் தொற்றுநோய் நிலைமை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு மற்றும் அரசாங்கத்திற்கு எழுந்துள்ள நெருக்கடிகள் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் சாதகமான பயணத்தில் முன்னேறி வருகிறது.

                          தேசிய பாதுகாப்புக்கு வரும் சவால்களை எதிர்கொள்வதற்கு சிறந்த கருவியாக அனைத்து தரப்புக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பையே கருத முடியும். இது சம்பந்தமாக, இராணுவ பிரதானிகளுக்கு மூலோபாய சூழல் குறித்து உறுதியான புரிதல் இருக்க வேண்டும். எனவே, இன்று அதிகாரிகள் அரசாங்கத்தின் அனைத்து கூறுகளினதும் ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய நோக்க கொள்கைகளை புரிந்துகொண்டு அதனுடன் இணைந்ததாக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும். “இலங்கை இராணுவம் ஒரு வளமான மற்றும் நிலையான தேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்குமான திறன்களை கொண்டுள்ளது”. எனவும் சுட்டிக்காட்டினார்.

                          விரைவில் நீங்கள் பணியாளர் கல்லூரியில் தேர்ச்சி பெற்றவர் என்ற பண்புடன் புதிய நியமனங்களைத் தொடங்குவீர்கள். எனவே, இன்றைய பாதுகாப்பு சூழல் மற்றும் ஒரு தளபதி, பணியாளர் அதிகாரி அல்லது பயிற்றுவிப்பாளிடம் எதிர்பார்க்கப்படும் புரிதலை கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள் எனவும் எதிர்பார்க்கிறேன். அதனால் இங்கும் இங்கிருந்து சென்ற பின்னரும் நீங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அதேவேளை சிக்கலான இராணுவ பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்குவீர்கள் எனவும் நம்புகிறேன் என்றார்.

                          இந்த மதிப்பிற்குரிய பயிற்சி நிறுவனத்தின் தரத்தை இராணுவக் கல்விக்கு மிகவும் உகந்த நிலைக்கு உயர்த்துவதற்கும் பராமரிப்பதற்கும் அயராத முயற்சிகளை மேற்கொண்ட பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நான் சிறப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இறுதியாக, நட்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர் அதிகாரிகளுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எதிர்கால முயற்சிகளில் சிறந்து விளங்க உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

                          பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் இருந்து வரவிருக்கும் உங்கள் அனைவருக்கும் இனிவரும் காலங்களில் உங்கள் இராணுவப் பணியில் வெற்றியின் உச்சத்தை அடைய எனது ஆசிகள் எப்போதும் உண்டு.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் ஒமிக்ரோன் எச்சரிக்கை

                          இலங்கையில் ஒமிக்ரோன் எச்சரிக்கை

                          நாட்டில் ‘ஒமிக்ரோன் வைரஸ் திரிபு’ இனங்காணப்பட்டிருப்பதனால் பண்டிகைக் காலத்தில்

                          பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான

                          விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹோரத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

                          இம்மாதம் மற்றும் ஜனவரி மாதங்களில் மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில்

                          மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            17 உணவுப் பொருட்கள் – இறக்குமதி நிறுத்தப்படும் பசில் அறிவிப்பு

                            17 உணவுப் பொருட்கள் – இறக்குமதி நிறுத்தப்படும் பசில் அறிவிப்பு

                            விவசாயிகள் பயிரிடக்கூடிய 17 உணவுப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன.

                            அவை உள்ளூரில் பயிரிடப்பட்ட பின்னர் அவற்றுக்கான இறக்குமதி நிறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

                            பாராளுமன்றத்தில் 2022 வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

                            நாடு செலுத்த வேண்டிய சகல வெளிநாட்டு கடனுக்கான டொலர்களையும் அடுத்த வருடத்தில் செலுத்துவதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

                            கடன் செலுத்திய பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் கடன் பெறப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர் ,அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் 500 மில்லியன் டொலரும், ஜூன் மாதத்தில் ஆயிரம் மில்லியன் டொலரும் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

                            டுபாயும் மாலைதீவும் அச்சமின்றி சுற்றுலா பயணிகளுக்காக நாட்டை திறந்துள்ளன. சுற்றுலா அமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

                            சேவைத் துறையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கப்பற்துறையில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டின் அமைவிடம் காரணமாக விமான சேவை வாயிலாகவும் அதிக வருமானம் பெற முடியும். தகவல் தொழில் நுட்ப கம்பனிகள் எமது நாட்டுக்கு வந்துள்ளன. 2,000 இளைஞர்களை அதிக சம்பளத்துக்கு நியமித்துள்ளனர். 5,000 பேருக்கு வரை தொழில் கிடைக்க இருக்கிறது என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

                            கடன் பெற்று ஏன் வீதி அமைக்கிறீர்கள் என்று வினவுகின்றனர். கைத்தொழில் துறை முன்னேற்றத்திற்கு வீதி அபிவிருத்தி பிரதானமானது. மின்சாரத் துறை மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முன்னேற்றப்பட்டது.ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் நீர் வழங்குவோம். பலமான நாடொன்றை உருவாக்க ஒத்துழையுங்கள். இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் நிதியை சேமிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

                            வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது தெளிவான வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டது. நாட்டின் அந்நியச் செலாவணியில் நெருக்கடி நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார். உலக வங்கியின் பிரதி தலைவர் இலங்கைக்கு வருகை தந்து 500 மில்லியன் டொலரை வழங்கினார். அது வீதி அபிவிருத்திக்காக வழங்கப்பட்டது. விவசாயம் மற்றும் சேவை வழங்கலில் மாத்திரமல்லாது கைத்தொழில் துறையிலும் நாட்டை அபிவிருத்தி செய்வது இலக்கு என்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்

                            Posted in சினிமா

                            ரஜனிக்கு இன்று பிறந்த நாள் 71

                            ரஜனிக்கு இன்று பிறந்த நாள் 71

                            பெங்களூருவில் சிவாஜிராவ் கண்டக்டராக இருந்த சமயம். போக்குவரத்து கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நண்பர்களோடு நாடகம் நடத்துகிறார். அந்த நாடகத்தில் துச்சாதணனாக வேடம் போட்டிருந்த சிவாஜிராவின் நடிப்பு அங்கிருதவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மிகவும் எளிமையாக நடந்த நாடகத்தை தன் நடிப்பால் பிரமாண்டப்படுத்தினார் சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்த்.

                            அவரை அப்படியே அலேக்காக தூக்கி சென்னைக்கு அனுப்பி வைத்தார் ரஜினியின் நண்பரும் பேருந்து ஓட்டுனருமான ராஜ்பகதூர். அங்கேயே ரஜினியின் நடிப்பைப் பார்த்து சிலர் மோசமாகத் திட்டவும் செய்தார்கள். இப்படி தன்னுடைய நடிப்பிற்காக பாராட்டையும் விமர்சனங்களையும் திரைக்கு வருவதற்கு முன்பே எதிர்கொண்டவர் ரஜினிகாந்த்.

                            பெரும் பொராட்டத்தோடு தொடங்கிய ஆரம்ப காலகட்டத்திலும் தனக்கென்று சில குணாதிசயங்களை கடைபிடித்து வந்தார். அதில் யாருக்காகவும் ஒளிவு மறைவும் இல்லாமல் மனதில் பட்டத்தை பேசுவதுதான். இந்த குணத்தை தன் திரைவாழ்க்கை முழுவதிலும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. தன் திரைப்பயணத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் எடுத்த முடிவுகள், சொன்ன கருத்துக்கள் இப்போதும் வியப்பைத்தருகின்றது.

                            ஒரு முறை ரஜினி நடித்த சிவா படம் ரிலீஸ் ஆகியிருந்த சமயம். படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதே நேரத்தில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படம் சூப்பர் ஹிட். இதுபற்றி ரஜினியிடம் நீங்கள் அபூர்வ சகோதரர்கள் ரிலீஸ் சமயத்தில் ‘சிவா’ படத்தை வெளியிட்டிருக்க வேண்டாமே என கேட்டபோது நல்ல படம் எப்போது வந்தாலும் ஓடும் என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் ரஜினி.

                            படப்பிடிப்பு தளத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்னரே வரும் பழக்கத்தை நடிகர் திலகத்திடம் இருந்து கற்றுக்கொண்ட ரஜினி, படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவது, அதில் குளறுபடி வராமல் பார்த்துக்கொள்வது ஆகியவற்றை சிவகுமாரிடம் இருந்து கற்றுக்கொண்டதாக வெளிப்படையாக கூறினார்.

                            0அண்ணாத்த படத்தில் அவர் துள்ளலோடு நடித்திருப்பதைத்தான் பலரும் வியந்து பேசினார்கள். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பதில் சொல்லியிருந்தார் ரஜினி, அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு, அகம், புறம், தூய்மையோடு தனி அறையில் அமர்ந்து தியானம் செய்து பாருங்கள். உடல் பொலிவும், அழகும் பெறுவதை கண்கூடாகக் காணலாம்” என்பதே அவர் இன்ரு வரைக்கும் கடைப்டித்து வரும் ஒரு பழக்கம்.

                            ரஜினிக்கு மிகவும் பிடித்த நாளாக கருதுவது ராகவேந்திரருக்கு உகந்த நாளான வியாழக்கிழமை. ‘அபூர்வ ராகங்கள்’ படப்பிடிப்பு திங்களன்றே துவங்குவதாக கூறப்பட்டதும் ‘முதன்முதலாக கேமரா முன் நிற்கப் போகிறோம். அது ராகவேந்திரருக்கு உகந்த நாளான வியாழனன்று இருக்கக் கூடாதா?’ என்று மனதிற்குள் கேட்டு ஏங்கினார். ஆனால் திங்களன்று படப்பிடிப்பு ரத்தானதால் செவ்வாயன்று அழைப்பு வந்தது. அன்று முழுவதும் படப்பிடிப்பு நடந்தாலும் பாலசந்தர் ரஜினியை அழைக்கவே இல்லை. புதன் அன்று ‘‘இடைவேளைக்குப் பின்புதான் உங்கள் காட்சி வரும். அதனால் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் வாருங்கள்’’ என்று கூறியிருந்தார்கள். ஆனால் புதனன்று ஒரு மணிக்குப் பிறகு கடுமையான மழை பிடித்துக் கொண்டுவிட்டதால் படப்பிடிப்பு கேன்சலானது.. வியாழனன்று சரியாக காலை பத்து மணிக்கு பாலசந்தர் அழைக்க, ரஜினி கேமரா முன் நின்றார். இதை ரஜினி தனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாக நினைத்தார்.

                            திரையுலகிலுள்ள பெரும்பாலான ஐயப்ப பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து வழிகாட்டியவர் எம்.என். நம்பியார்தான். அப்படித்தான் முதன்முதலாக 1978-ல் அவர் தலைமையில் சபரிமலைக்குச் சென்றார் ரஜினி. அப்போது அவருடன் நடிகர்கள் முத்துராமன், ஸ்ரீகாந்த், கன்னட ‘சூப்பர்ஸ்டார்’ ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் ஆகியோரும் போனார்கள். 1984-ல் ரஜினிகாந்த் சபரிமலை சென்றபோது, அந்த முறை அமிதாப்பச்சனும் கலந்து கொண்டார். இதுவரை ஒன்பது முறை சபரிமலைக்குச் சென்று வந்திருக்கிறார் ரஜினி!

                            ‘பதினாறு வயதினிலே’ படத்திற்காக பாரதிராஜா ரஜினியை அணுகியபோது சம்பளமாக ஐந்தாயிரம் ரூபாய் கேட்டாராம். “குறைந்த பட்ஜெட் படமென்பதால் கொஞ்சம் குறைக்கச் சொல்லிக் கேட்கவே மூவாயிரம் ரூபாய்க்கு இறங்கினார் ரஜினி. நாங்கள் ரூ.2500 என்று பேசி அவரைச் சம்மதிக்க வைத்தோம். படத்தில் கமல்ஹாசனுக்கு 11 நாட்கள் வேலை என்றால், ரஜினிக்கு வேலை ஐந்தே நாட்கள்தான்” என ‘பதினாறு வயதினிலே’ படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு அறிமுக விழாவில் பேசினார் பாரதிராஜா.

                            ரஜினி கன்னடத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அங்கு நடித்தது என்னவோ வெறும் பத்து படங்களில்தான். 1981-க்குப்பின் அவர் கன்னடத்தில் நடிக்கவில்லை. கர்ஜனை என்ற அந்த படம்தான் கன்னடத்தில் ரஜினி நடித்த கடைசி படம்.

                            நண்பர்கள் கேலி

                            திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது பணப்பற்றாக்குறை வரும்போது கல்லூரி முதல்வர் ராஜாராமிடம் அனுமதி பெற்று ஒரு மாதம் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை செய்து மொத்தமாகப் பணம் திரட்டி வருவார் ரஜினி. கல்லூரி முதல்வர் ராஜாராமும் ரஜினியின் நிலையறிந்து பண விஷயத்தில் கெடுபிடி செய்யாமல் அன்புடன் பல வழிகளிலும் உதவியிருக்கிறார். ஒரு முறை ரஜினி பட வாய்ப்புக் கிடைக்காமல் பெங்களூரு சென்றபோது, தன்னோடு பணியாற்றியவர்கள் தன்னை மறமுகமாக கேலி பேசுவதையும், அவமதிப்பதையும் தெரிந்து கொண்ட ரஜினிகாந்த் இனிமேல் சினிமாவில் நடித்தப் பிறகுதான் பெங்களூரு வர வேண்டும் என்று முடிவு செய்து , சென்னைக்கு வந்து விட்டார். அதன் பிறகு ஹீரோவாக அவர் நடித்த படங்கள் வெளியான பிறகுதான் பெங்களூரூ சென்றிருக்கிறார்.

                            ரஜினியும் சிரஞ்சீவியும்

                            ரஜினியும் சிரஞ்சீவியும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து வாய்ப்பு தேடும் காலத்தில் இருந்தே நண்பர்கள். இருவரும் இணைந்து ‘ராணுவ வீரன்’, ‘மாப்பிள்ளை’, ‘காளி’ என மூன்று படங்களில் நடித்துள்ளனர். ‘காளி’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரானது. இதில் இரண்டு மொழிகளிலும் ரஜினியே ஹீரோவாக நடிக்க, தமிழில் ரஜினியின் நண்பராக விஜயகுமாரும் தெலுங்கில் சிரஞ்சீவியும் நடித்தனர். தமிழில் வெளியான ‘அவர்கள்’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டபோது அங்கே ரஜினி கேரக்டரில் நடித்தார் சிரஞ்சீவி. இன்று ரஜினி அரசியலிலிருந்து விலகிக் கொண்டதற்கு பின்னணியில் சிரஞ்சீவி இருக்கிறார் என்பதே பலரும் அறியாத நிஜம் அரசியலில் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து சிரஞ்சீவி விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

                            வள்ளி படத்தின் பிற்பகுதியில் முதல் அமைச்சராக நடித்த அசோக், ரஜினியின் திரைப்பட கல்லூரி நண்பர். அசோக் அடிக்கடி ரஜினியிடம் “நான் ஹீரோவானா நீதாண்டா வில்லன்” என்று கூற, “சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் வில்லனாத்தாண்டா நடிப்பேன்” என்பாராம் ரஜினி. “என்ன இருந்தாலும் ஹீரோ ஹீரோதான்.. வில்லன் வில்லன்தான்” என்று அசோக் சொல்லும்போது “நீ எத்தனை நாளைக்கு ஹீரோவா நடிப்பே? இளமை இருக்கிற வரையில்தானே. ஆனா நான் வயசானா கூட வில்லனா நடிக்க முடியும்’’ என்று இருவரும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்வார்களாம். ஆனால் காலத்தின் மகிமை வயதானாலும் ரஜினி கதாநாயகனாகவே நடித்துக்கொண்டிருக்கிறார்.

                            நடத்துனராக வேலை பார்த்தபோது பஸ்சில் சில சமயம் ரஜினி விசித்திரமான வேலைகள் செய்வார். ஆங்கில வார்த்தையே கலக்காமல் தூய கன்னடத்தில் பயணிகள் இறங்குமிடத்தைக் குறிப்பிடுவார். ‘மெஜஸ்டிக் சர்க்கிள்’ என்றால் ‘மெஜஸ்டிக் வட்டம்’ என்பார். ‘காந்திஜி ரோடு’ என்றால் ‘காந்திஜி ரஸ்தே’ என்று சொல்லி பயணிகளை வெகுவாகக் கவர்ந்துவிடுவாராம்.

                            நடிக்க ஆரம்பித்த புதிதில் ரஜினிகாந்துடன் படப்பிடிப்புக்கு உதவியாளனாக ஒரு சிறுவனும் வருவான். ரஜினிக்கு சிகரெட், நெருப்புப் பெட்டி இவற்றைக் கொடுப்பது போன்ற வேலைகள்தான் அவனுக்கு. சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டதும் நெருப்புப் பெட்டியை ரஜினி தூக்கித்தான் போடுவார். அதை அவன் கீழே விழாமல் பிடித்துக் கொள்வான். அவன் எப்போதும் விழிப்போடு இருக்கிறானா என்று அறியவே ரஜினி அப்படிச் செய்வது வழக்கம்.

                            ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ ஹிந்தியில் வெளிவந்த ‘குதார்’ படத்தின் தழுவலாகும். அதில் இல்லாத சோகப் பாடல் ஒன்றை தமிழில் இணைக்க முடிவு செய்தபோது அதற்காக பாடல் பதிவானது. ஆனால் ரஜினி, ‘‘ஏற்கெனவே படத்தின் நீளம் 17 ஆயிரம் அடி வளர்ந்திருக்கிறது. இன்னும் தேவையா?’’ என்று கேட்டாரம். ஆனால் இயக்குனர் ராஜசேகரும் பிடி கொடுக்காமல் விடாப்பிடியாக “எனக்காக இரண்டு நாள் இரவு கால்ஷீட் கொடுங்க போதும்’’ என்று வற்புறுத்தி நடிக்க வைத்தாராம்.. ரிலீஸான பின் தியேட்டரில் படம் பார்த்த ரஜினி, அந்தப்பாடலுக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இயக்குனரின் தீர்க்கதரிசனத்தை பாராட்டினாராம். அந்தப் பாடல்தான் “ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்’’.

                            1979-ல் ரஜினிக்கு அவரது உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டபோது, நெருக்கமான நட்பில் இருந்தவர்கள்கூட அந்த நேரத்தில் ரஜினிக்கு உதவாமல் ஒதுங்கிப் போனார்கள். ‘கடவுள்கூட ரஜினிக்கு உதவமாட்டார்’ என்று சொல்லப்பட்ட நேரத்தில் அவரிடம் அன்பு காட்டி ஆதரித்தவர் திருமதி ரெஜினா வின்சென்ட். ரஜினியின் அகராதியில் ‘அம்மா’, ‘மம்மி’ என்றால் அது ரெஜினா வின்சென்ட் மட்டுமே. ‘தர்மயுத்தம்’ படப்பிடிப்பு சென்னையில் ரெஜினாவின் வீட்டில் நடந்தபோது, ரெஜினா காட்டிய பாசத்தால்தான் மன அழுத்தத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்தார். அன்னையை இழந்து தாய்ப்பாசம் அறியாமல் வளர்ந்த ரஜினி அவரைத் தாயாகவே தத்து எடுத்துக் கொண்டார். ரஜினிக்குத் திருப்பதியில் திருமணம் நடந்தபோது உடன் இருந்த முக்கியமானவர்களில் ரெஜினாவும் ஒருவர்.

                            ‘சுட்டாது உன்னாரு ஜாக்ரதா’ (சொந்தக்காரங்க இருக்காங்க ஜாக்கிரதை) என்று தெலுங்கில் கிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்த படத்தை ஏவிஎம் சரவணன் தமிழில் ரஜினியை வைத்து ரீமேக் செய்ய விரும்பினார். ஆனால் அதற்கு முன்பே அந்தப் படத்தைப் பார்த்திருந்த ரஜினி அந்த தெலுங்குப்படத் தயாரிப்பாளரே தமிழில் தன்னை நடிக்கச் செய்ய விரும்பியபோது ரஜினிக்குப் படம் பிடிக்காததால், நடிக்க மறுத்தும் விட்டிருந்தார். ஆனால் சரவணனின் வற்புறுத்தல் காரணமாக அதன் ரீமேக்கில் நடிக்க அரைமனதாக சம்மதித்தார் ரஜினி. ஆனால், அப்படம் தமிழில் வெளியானபோது இவ்வளவு பெரிய வெற்றிபெறும் என ரஜினியே எதிர்பார்க்கவில்லை. அந்தப் படம்தான் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘போக்கிரி ராஜா’

                            ‘சூப்பர்ஸ்டார்’ அந்தஸ்தை எட்டிய பின்னும் ரஜினி ஸ்கூட்டரிலேயே வருவதும் போவதுமாக இருந்தார். ஒருமுறை அப்படி வந்தபோது கீழே விழுந்து அடிபட்டுவிட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ரஜியினிடம் ஸ்கூட்டர் ஓட்டுவதை விட்டுவிடுமாறு சொல்லியிருக்கிறார். ‘‘சும்மா ஜாலிக்காகத்தான்’’ என்று கூறிய ரஜினியிடம், ‘‘அவரது குடும்பம், அவரை நம்பி லட்சங்களை முடக்கியுள்ள தயாரிப்பாளர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டாவது ஸ்கூட்டர் ஓட்டுவதை விட்டுவிடுங்கள்’’ என்று மீண்டும் வற்புறுத்த அன்றிலிருந்து காரில் பயணிக்க ஆரம்பித்தார் ரஜினி.

                            சம்பளத்தை குறைக்க சொன்ன ரஜினி

                            ‘மனிதன்’ படம் துவங்குவதற்கு முன் ரஜினி தனக்கு ஊதியமாக இவ்வளவு தொகை வேண்டுமென்று கேட்க, அது நியாயமானதாகப் பட்டதால் சரியென்று ஒப்புக்கொண்டார் ஏவிஎம் சரவணன். அதன்பின் சில நாட்களுக்குப் பிறகு சரவணனை சந்தித்த ரஜினி, ‘‘நான் உங்களிடம் ‘மனிதன்’ படத்திற்கு எனது சம்பளம் பற்றிப் பேசினேன். இதே தொகையை நான் வேறு இரு நிறுவனங்களுக்குச் சொன்னபோது அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவர்கள் என்ன சம்பளம் சொன்னார்களோ, அதே தொகையைத் தந்து விடுங்கள் போதும்’’ என்று தன் சம்பளத்தைக் குறைக்கும்படி கேட்டுக் கொண்டாராம் ரஜினி. அதுதான் சூப்பர்ஸ்டார்!

                            குறுகிய காலத்திற்குள் ரஜினியின் 25 படங்களை இயக்கிய சாதனைக்குரியவர் எஸ்.பி.முத்துராமன். ‘ப்ரியா’ படத்தில் படகு சேசிங் காட்சி ஒன்றை ‘க்ளோஸ் அப்’பில் ரஜினியை வைத்து படமாக்கி, மற்றதெல்லாம் டூப்பை வைத்து எடுத்துவிட நினைத்தார்களாம். ஆனால் அதற்கு ஒத்துக்கொள்ளாத ரஜினி, ‘நானே நடிப்பேன்’ என்று கூறியிருக்கிறார். அத்துடன் படகு ஓட்டவும் தெரியாத, நீச்சலும் தெரியாத ரஜினி ஒரு மணி நேரத்தில் படகு ஓட்டக் கற்றுக்கொண்டு அந்தக் கட்சியில் நடித்தார்.

                            ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அவரது நூறாவது படமான ‘ராகவேந்திரர்’ ஒரு மைல்கல். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மனமார பாராட்டியதோடு, மறுநாள் மதுரையிலிருந்து டிரங்கால் மூலம் உத்தரவு போட்டு படத்திற்கு வரிவிலக்கும் அளித்தார்.

                            ரஜினிக்கு அப்போதெல்லாம் இளநீர் அருந்துவதென்றால் மிகவும் இஷ்டம். யூனிட் ஆட்களிடம் இளநீர் வாங்கித் தரச் சொல்லுவார். ஆனால் யாரும் அவரைப் பொருட்படுத்தமாட்டார்கள். அதனால் தன்னிடமுள்ள பணத்தைக் கொடுத்து இளநீர் வாங்கி வரச் செய்து அருந்துவார். இப்படி ரஜினிக்கு இளநீர் வாங்கித் தர மறுக்கும் யூனிட்டிலுள்ளவர்களைக் கண்ட தயாரிப்பு நிர்வாகி ஒருவர் அவர்களிடம், ‘‘இப்படி அவரை நீங்க இளக்காரமா நினைக்கிறீங்க. அவர் ஒரு நாள் பெரிய நடிகராக வரப்போறாரு பாருங்க’’ என்று ஆதரவாகப் பேசியிருக்கிறார்.

                            ‘ஜானி’ படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். இதில் கேமரா உதவியாளராக சுஹாசினி இருந்தார். அந்த நேரத்தில்தான் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’யில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டும் இருந்தார் அவர். அதில் ஒரு பகுதி முடித்துவிட்டு மீண்டும் ‘ஜானி’யில் வேலை செய்ய வந்துவிடுவார். அப்போது ரஜினி, ‘‘சுஹாசினி நடிகையாயிட்டாங்க. அவரை கனமான லைட்டுகளை தூக்கச் சொல்லாதீங்க! பார்த்து நடந்துக்குங்க’’ என்று யூனிட்டிலுள்ளவர்களிடம் மரியாதையாகச் சொல்வதுபோல் பேசி கலாட்டா செய்வாராம்.

                            ரஜினிகாந்த்

                            சொந்தமாக படம் எடுத்து அதில் நஷ்டப்பட்டு துவண்டுபோயிருந்த வி.கே.ராமசாமி உட்பட மொத்தம் தனக்கு வேண்டிய எட்டு பேர்களை, ஒரு ரூபாய் கூட வாங்காமல் பங்குதாரர்களாக சேர்த்து ஆரம்பிக்கப்பட்ட படம் தான் ‘அருணாச்சலம்’. அதில் கிடைத்த லாபத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்ததோடு அதில் நடித்த வி.கே.ராமசாமிக்கு தனியாக மிகப்பெரிய சம்பளமும் கொடுத்தார் ரஜினி. வி.கே.ராமசாமி தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் நிம்மதியாக கழிக்க அந்தப்பணம் ரொம்பவே உதவியது. இதனால் ரஜினியின் புகைப்படத்தை தனது பூஜை அறையில் வைத்திருந்தார் வி.கே.ராமசாமி.

                            ஆங்கில படம்

                            ரஜினி நடித்த ஒரே ஆங்கிலத் திரைப்படமான ‘பிளட்ஸ்டோன்’ திரைப்படத்துக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா தான். ரஜினி தனது திரைவாழ்வில் பாடிய ஒரே பாடலான ‘‘அடிக்குது குளிருஞ்’’ பாடலை ‘மன்னன்’ திரைப்படத்தில் பாடவைத்ததும் அவர்தான்.. ‘பணக்காரனி’ல் இடம்பெற்ற ‘‘உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி’’ பாடல்தான் ரஜினிக்காக இளையராஜா பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

                            இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரிவுக்கு பின்னர் ரஜினி, இசையமைப்பாளர் சந்திரபோஸ் கூட்டணியில் உருவாகிய ‘மனிதன்’, ‘ராஜா சின்ன ரோஜா’ திரைப்படங்கள்தான் வைரமுத்துவுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இரண்டு திரைப்படங்களிலும் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவே எழுத, அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட்டானது. குறிப்பாக ‘ராஜா சின்ன ரோஜா’வில் ‘‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா’’ பாடல் ரசிகர்களின் மிகப்பெரும் அபிமானம் பெற்ற பாடலாக அமைந்தது.

                            ரஜினி படங்களில் ஓப்பனிங் பாடலை பாடும் ஆஸ்தான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தமிழ் சினிமாவில் அதிக பாடல்களைப் பாடிய இந்த ஜாம்பவான்தான் ரஜினிக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார் என்பது சிறப்பு. ஒரு இசையமைப்பாளராகவும் வலம்வந்த எஸ்.பி.பிதான், ரஜினி நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                            ஹிந்தியில் அமிதாப் நடித்த 12 படங்களின் தமிழ் ரீமேக்கில் நடித்திருக்கிறார் ரஜினி. அதில் மெகாஹிட் படங்களான ‘பில்லா’, ‘தீ’, ‘படிக்காதவன்’, ‘பாட்ஷா ஆகியவை இப்படி உருவானவைதான். ஆனால் ரஜினி தன் வாழ்நாள் முழுக்க ஒரு கொள்கையைக் கடைபிடித்து வந்தார். அதாவது தான் நடித்த படங்களை மொழிமாற்றம் செய்யும்போது அந்தப் படங்களுக்கு தான் குரல் கொடுப்பதில்லை என்ற பாலிஸிதான் அது.

                            1986-ல் வெளிவந்த ஜீவனப்போராட்டம் ரஜினி நடித்த நேரடி தெலுங்குபடம். தொழிலாளர்களைப் பற்றிய இந்தப்படத்தில் ரஜினி தொழிலாளியாக நடித்திருப்பார். இதப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யக்கூடாது என்ற கண்டிசனோடு நடித்தார். ஆனால் தயாரிப்பு தரப்பு தமிழில் மொழிமாற்றம் செய்தது. ஆனால் ரஜினி டப்பிங் பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதோடு மொழிமாற்றம் செய்யும் படங்களுக்கு நான் குரல் கொடுப்பதில்லை என்பது எனது கொள்கை முடிவு என்று அதிகாரப்பூர்வமாகவும் அதை அறிவித்தார்.

                            திரைப்படக் கல்லூரியில் ரஜினி படித்துக் கொண்டிருந்தபோது அங்கே சிறப்பு வகுப்பு எடுக்கவந்த இயக்குனர் கே.பாலசந்தரிடம் கேட்ட முதல் கேள்வி, “நடிப்பைத் தவிர நடிகர்களிடம் நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்பதுதான். அதற்கு பாலசந்தர் பளிச் என்று பதில் சொன்னார், “நடிகர்கள் திரைப்படத்துக்கு வெளியே நடிக்கக்கூடாது”. என்பதை இன்றுவரை கடைப்டித்து வருகிறார். நிஜ முகப்பூச்சு இல்லாமல், மனதில் பட்டதை பேசும் அந்த குணம்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமரவைத்திருக்கிறது.

                            Posted in சினிமா

                            பூதமாக மாறிய பிரபுதேவா

                            பூதமாக மாறிய பிரபுதேவா


                            பொன் மாணிக்கவேல் படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில், தேள், யங் மங் சங், பஹிரா உள்ளிட்ட பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

                            பூதமாக மாறிய பிரபுதேவா… வைரலாகும் புகைப்படம்
                            பிரபுதேவா


                            நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முக திறமையுடன் இருக்கும் பிரபுதேவா வித்தியாசமான கதையம்சம் மற்றும் கதாபாத்திரம் உள்ள படங்களை

                            தேர்வு செய்து நடிக்கிறார். பொய்க்கால் குதிரை என்ற படத்தில் ஒற்றைக்காலுடன் நடிக்கிறார். ஒரு

                            நிஜ கால் மற்றும் ஒரு செயற்கை காலுடன் இருக்கும் பிரபுதேவாவின் தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

                            இந்தநிலையில் `மை டியர் பூதம்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் பூதமாக நடிக்கிறார்.

                            பிரபுதேவா பூதம் தோற்றத்தில் இருக்கும் போஸ்டரை படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

                            பிரபுதேவா

                            படத்தை ராகவன் இயக்குகிறார். இதில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

                            படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத்தயாராக இருந்த தேள் படம் சில பிரச்சினைகளால் தள்ளி

                            வைக்கப்பட்டுள்ளது. யங் மங் சங்',பஹிரா’ மற்றும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் பிரபுதேவா.

                            Posted in சினிமா

                            சிம்பு மருத்துவமனையில் அனுமதி

                            சிம்பு மருத்துவமனையில் அனுமதி

                            மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்பு, காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

                            நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி
                            சிம்பு
                            இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                            நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு இருக்கும் படம்

                            மாநாடு. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

                            இப்படத்தை அடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.

                            சிம்பு

                            இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக சிம்பு தனியார் மருத்துவமனையில்

                            அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.