Author: நிருபர் காவலன்
கடும் கட்டுப்பாடுகளுடன் அண்ணாத்த படப்பிடிப்பு
கடும் கட்டுப்பாடுகளுடன் அண்ணாத்த படப்பிடிப்பு
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் நடக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
கடும் கட்டுப்பாடுகளுடன் அண்ணாத்த படப்பிடிப்பு
அண்ணாத்த
‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்த்
நடிப்பில் சிவா இயக்கும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜாக்கி ஷெராப் என பல முன்னணி நடிகர்கள் உள்ளனர்.
இந்த படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதமே நிறைவடைந்துவிட்டது.
மார்ச்சில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக புனே, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்குள் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அக்டோபர் மாதம்
படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று சொல்லப்பட, ”டிசம்பர் மாதம் கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் போகலாம்” என்று முடிவெடுத்தார் ரஜினி. இதற்கிடையில் டிசம்பர் 31-ம் தேதி
கட்சியைத் தொடங்கவிருக்கும் அறிவிப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார். அப்போது பேசும்போது, கட்சி வேலைகள்
தீவிரமாகும் முன் முதல் கட்டமாக ‘அண்ணாத்த’ படத்தின் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிடுவதாகவும் கூறியிருந்தார்.
அண்ணாத்த
அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது, அதற்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி அளித்துள்ள பேட்டியில்
கூறியிருப்பதாவது. ” ‘அண்ணாத்த’ படத்தின் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பையும் முழுக்க முழுக்க ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியிலேயே நடத்த திட்டமிட்டுள்ளோம். ஐதராபாத் செல்ல ரஜினி
சாருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவரையுமே ஒரு பயோ பபுளுக்குள்
கொண்டுவர உள்ளோம். கடந்த ஐபிஎல் தொடரில் அதே பயோ பபுள் ஏற்பாடுகள்தான் ‘அண்ணாத்த’ டீமிற்கும் செய்யப்படவுள்ளது. அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஓட்டல்,
படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதேபோல் பயோபபுளில் இருப்பவர்கள் யாரும் வெளியேபோய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது.
மருத்துவர்களின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட சில நாள்களில் கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். தீவிர பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து 40 நாள்கள் ரஜினி சாரின் ஷூட்டிங் இருக்கும். அதன் பின், அவர் சென்னை திரும்பிவிடுவார். படத்தை
2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
தனிமைப்படுத்தப்பட்ட சனம் ஷெட்டி
தனிமைப்படுத்தப்பட்ட சனம் ஷெட்டி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சனம் ஷெட்டி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட சனம் ஷெட்டி…. காரணம் இதுவா?
சனம் ஷெட்டி
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது நடந்து
வருகிறது. இதில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். ரசிகர்களின் ஆதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது
சர்ச்சையை ஏற்படுத்தியது. சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், சனம் ஷெட்டி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி, இன்னும் தனது சொந்த
வீட்டிற்கு செல்லவில்லையாம். அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதலால், யாரும் எதிர்பாராத வகையில் சனம் ஷெட்டி விரைவில் மீண்டும்
பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சனம் ஷெட்டி
கடந்த சீசனில் வனிதா வெளியேற்றப்பட்ட ஒரு சில தினங்களில் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார். அந்த வகையில்
தற்போது சனம் ஷெட்டியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
புகைப்படம் வெளியிட்ட சிம்ரன்… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
புகைப்படம் வெளியிட்ட சிம்ரன்… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த சிம்ரன், தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய், அஜித், விஜயகாந்த், விக்ரம், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவை கலக்கியவர் சிம்ரன்.
திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த சிம்ரன், திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் ரஜினிமுருகன் போன்ற
திரைப்படங்களை தொடர்ந்து மாதவனுடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
சிம்ரன்
தற்போது சிம்ரன் ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல் முடி முழுவதும் நரைத்தும் கன்னமெல்லாம் சுருங்கியும் தற்போதுள்ள நேச்சுரல் லுக்கில் பார்க்கவே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும்
புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்து என்ன சிம்ரன் இப்டி ஆயிடிங்க என கேட்டு வருகின்றனர்.
1.50 கோடிக்கு திருமண பரிசு – நடிகை நிஹாரிகாவுக்கு வாரிவழங்கிய சிரஞ்சீவி
.1.50 கோடிக்கு திருமண பரிசு – நடிகை நிஹாரிகாவுக்கு வாரிவழங்கிய சிரஞ்சீவி
நடிகை நிஹாரிகாவுக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான திருமண பரிசுகளை நடிகர் சிரஞ்சீவி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.1.50 கோடிக்கு திருமண பரிசு – நடிகை நிஹாரிகாவுக்கு வாரிவழங்கிய சிரஞ்சீவி
நிஹாரிகாவுக்கு சிரஞ்சீவி திருமண பரிசு வழங்கியபோது எடுத்த புகைப்படம்
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபு. இவரது மகள் நிஹாரிகா. தெலுங்கில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் விஜய்சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள்
பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்திருந்தார். இவர் தொழில் அதிபர் வெங்கட சைதன்யா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள்
திருமணம் செய்ய விரும்பினர். திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்தனர்.
நிஹாரிகா, சிரஞ்சீவி
இதையடுத்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஓபராய் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் இவர்களின் திருமணம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. திருமணத்தையொட்டி ஐதராபாத்தில் நேற்று
முன்தினம் திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி நிஹாரிகாவுக்கு சிரஞ்சீவி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

என்னை அவர் மிரட்டி விட்டார் – சாய் பல்லவி
என்னை அவர் மிரட்டி விட்டார் – சாய் பல்லவி
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, படப்பிடிப்பில் என்னை மிரட்டி விட்டார் என்று பேட்டி அளித்துள்ளார்.
படப்பிடிப்பில் என்னை மிரட்டி விட்டார் – சாய் பல்லவி
சாய் பல்லவி
பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நான்கு பகுதிகளை
இயக்கியுள்ளனர். இந்தப் படத்தின் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இரவு என்ற பகுதியில்
நடித்துள்ளனர். சாய் பல்லவி இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார்.
பிரகாஷ் ராஜுடன் நடித்த அனுபவம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சாய் பல்லவி கூறியதாவது “பிரகாஷ் ராஜ் என்னை மிரட்டிவிட்டார். அவரிடம் இயற்கையாகவே அப்பாவிற்கான ஒளி வீசுகிறது. பாவ
கதைகள் படத்தின் செட்களில் அப்பாவாகவே செட்டிற்குள் நுழைந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஹலோ
என்று சொன்னேன். அவர் ஏற்கனவே கண்டிப்பாக இருந்தார். என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே அந்தக் கதாபாத்திரமாக மாறியிருந்தார்.
பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ் உடன் பணிபுரிவதை மிகவும் ரசித்தேன். எனது மருத்துவப் படிப்பைப் பற்றி விசாரித்தார். அதைப் பயிற்சி செய்யவும் வலியுறுத்தினார்”. இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரேல் எல்லையில் பெரும் ஆயுத குவியல் கண்டு பிடிப்பு – அதிர்ச்சியில் இஸ்ரேல்
இஸ்ரேல் எல்லையில் பெரும் ஆயுத குவியல் கண்டு பிடிப்பு – அதிர்ச்சியில் இஸ்ரேல்
சிரியா லெபனானை இணைக்கு இஸ்ரேல் எல்லை அருகே மிக
பெரும் ஆயுத குவியல் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது என இஸ்ரேல் அறிவித்துள்ளது
மேற்படி ஆயுதங்கள் எங்கிருந்து இங்கு எடுத்து வரப்பட்டன ,இது எதற்கு இங்கு சேமித்து வைக்க பட்டன என்பது தொடர்பிலான
விசாரணைகளை தமது உளவுத்துறை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது
பல்வேறு நாடுகளின் எதிரிகளை கொன்று குவித்து தமது ஆதிக்கத்தை செலுத்தி வரும் இஸ்ரேல் , ஈரானுக்கு இடையில் பலத்த
முறுகல் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த ஆயுத குவியல்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளமை இங்கே சுட்டி கட்ட தக்கது
சாதனை படைத்த விஜய் செல்பி – அறிவித்த டுவிட்டர்
சாதனை படைத்த விஜய் செல்பி – அறிவித்த டுவிட்டர்
சமூக வலைதளமான டுவிட்டரில் விஜய் பதிவிட்ட செல்பி புகைப்படம் சாதனை படைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதனை படைத்த விஜய் செல்பி – அதிகாரப்பூர்வமாக அறிவித்த டுவிட்டர்
விஜய்யின் செல்பி புகைப்படம்
சமூக வலைதளமான டுவிட்டரில் ஆண்டுதோறும் அதிக லைக்ஸ், ரீ டுவிட், அதிகம் பேசப்பட்ட விஷயம் என்ன என்பது பற்றி சர்வே
எடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் நடிகர் விஜய்யின் செல்பி படம் அதிக அளவில் ரீ டுவிட் செய்யப்பட்டுள்ளது.
இந்த வருட தொடக்கத்தில் நடிகர் விஜய் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் நெய்வேலி ரசிகர்களுடன் செல்பி படம் எடுத்தார்.
அந்த படத்தை டுவிட்டரில் பகிர்ந்தார். இந்த செல்பி படம் தான் இந்த வருடம் டுவிட்டரில் அதிகம் ரீ டுவிட் செய்யப்பட்ட படமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்த தகவலை டுவிட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகர் விஜய்யின்
செல்பி படத்தை ரசிகர்கள் மீண்டும் இணைய தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதேபோல் இந்தாண்டு அதிகம் லைக் செய்யப்பட்ட டுவிட்டாக, அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை அறிவித்த விராட் கோலியின் டுவிட் முதலிடத்தில் உள்ளது.
மேலும் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவிட்டாக, அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்த டுவிட் முதலிடம் பிடித்துள்ளது.
அரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த
அரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என கூறப்படுகிறது.
அரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த’ – ஏப்ரலில் வெளியிட திட்டம்
ரஜினிகாந்த்
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஜனவரி மாதம் கட்சி
தொடங்கப்போவதாகவும் தெரிவித்தார். கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அண்ணாத்த படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு ஐதராபாத்தில் வருகிற 15-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 12-ந்தேதி தனது பிறந்தநாளை ரஜினி பெங்களூரில் உள்ள
தனது அண்ணன் சத்யநாராயணா வீட்டிலேயே கொண்டாடுகிறார். அதன்பிறகு 15-ந்தேதி அவர் ஐதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த்
கொரோனா பரவல் காலகட்டம் என்பதால் ரஜினி மிகவும் பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். படப்பிடிப்பு தளத்திலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு
கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் ரஜினி கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு
முடிந்துவிடும். ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் சரவெடி வசனங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் புத்தாண்டு நேரத்தில் தமிழகத்தில்
தேர்தல் பிரசாரம் மிகவும் உச்சகட்டத்தில் இருக்கும். அப்போது ‘அண்ணாத்த’ படம் திரைக்கு வருவது அவரின் அரசியல்
பிரசாரத்துக்கு மிகவும் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என்று தெரிகிறது.
4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும் பிரபாஸ்
4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும் பிரபாஸ்
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்கு சுமார் ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாம்.
அடுத்தடுத்து 4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும்
‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை
வாரிக்குவித்தது. இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்தவகையில் பிரபாஸின் 20-வது படத்தை, ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே கே
ராதா கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ‘ராதே ஷ்யாம்’ என பெயரிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிரபாஸின் 21-வது படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற ‘மகாநடி’ என்ற படத்தை
இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார். இதில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
பிரபாஸ்
பிரபாஸின் 22-வது படம் ஆதிபுருஷ். ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை ஓம் ராவத்
இயக்குகிறார். இதையடுத்து பிரபாஸின் 23-வது படத்தை கே.ஜி.எப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘சலார்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு படங்களின் பட்ஜெட்டை சேர்த்தால் சுமார் ரூ.1,000 கோடியைத் தாண்டுகிறது. இதற்கு முன்னர் இந்தியத் திரையுலகில்
ஒரே சமயத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்பட்ட நடிகர் வேறு யாருமில்லை என்று கூறப்படுகிறது.
துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் அஜித்
துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் அஜித்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித்குமார், தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறாராம்.
துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் அஜித்
அஜித்
அஜித்குமார் இப்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ்
ஸ்டுடியோவில் நடந்தது. முதலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் ‘பைக்’கில் வேகமாக செல்வது போல் ஒரு காட்சி படமானது.
அப்போது, பைக் சறுக்கி அவருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அதற்காக அஜித் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து
சண்டை காட்சியில் 7 நாட்கள் நடித்து வந்தார். அதன் பிறகு சென்னை திரும்பினார்.
அஜித்
அஜித்குமார் இப்போது, துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறார். துப்பாக்கி சுடுவதில் அவருக்கு நீண்ட கால ஆர்வம் இருந்து
வருகிறது. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார்.
மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் – கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் – கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் – கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகன்,
ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் லலித்
வெளியிடுகிறார். மாஸ்டர் படத்தின் டீசர் கடந்த தீபாவளி அன்று வெளியாகி 4.3 கோடி பார்வையாளர்களுடன் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
விஜய்
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டிரெய்லரை வரும் ஜனவரி 1ந் தேதி அதிகாலை ஒரு மணிக்கு படக்குழுவினர் வெளியிடப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் டீசர் சில
மணி நேரங்களில் கோடிக்கணக்கானோர் பார்த்து வைரலான நிலையில், தற்போது டிரெய்லருக்கு விஜயின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கவினுக்கு விரைவில் திருமணம்… பெண் யார் தெரியுமா?
கவினுக்கு விரைவில் திருமணம்… பெண் யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவினுக்கு விரைவில் திருமணம்… பெண் யார் தெரியுமா?
கவின்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர்பட்டாளத்தை
கொண்டவர் நடிகர் கவின். ஆர்.ஜேவாக அறிமுகமான இவர் தொலைக்காட்சியில் கனா காணும், சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து கவினுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தநிலையில் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். பின்னரே அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்வதற்கான
வாய்ப்பு கிடைத்தது. மேலும் பிக்பாஸ் வீட்டில் அபிராமி, சாக்ஷி ஆகியோருடன் ரொமான்ஸ் மற்றும் லாஸ்லியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.
கவின்
இந்த நிலையில் தற்போது நடிகர் கவினுக்கு திருமணம் என தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. ஸ்டைலிஸ்ட் ஒருவரை கவின்
காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
மத்திய கடலில் அமெரிக்கா ,நேட்டோவுடன் இணைந்து உக்கிரேன் போர் பயிற்சி – கொதிக்கும் ரசியா
மத்திய கடலில் அமெரிக்கா ,நேட்டோவுடன் இணைந்து உக்கிரேன் போர் பயிற்சி – கொதிக்கும் ரசியா
ரஷியாவில் இருந்து பிரிந்த உக்கிரேன் தற்பொழுது அமெரிக்காவுடன் இணைந்து மத்திய தரைக்கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது
நேட்டோ படைகள் மேற்கொள்ளும் இந்த பயிற்சியில் அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளது
மேற்படி சம்பவங்கள் ரசியாவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
ஒரு சிகரெட் புகைத்து முடிப்பதற்குள்; உகிரேன் ரஷியா படைகள் யுத்தம் இல்லாது ஆக்கிரமித்து தமது நாட்டுடன் இணைத்து விடும் வல்லமை கொண்டுள்ளது
அவ்வாறு இருந்தும் உக்கிரேன் இந்த ஆத்திரம் மூட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

புற்றுநோயால் மார்பகங்களை இழக்கும் பெண்கள்
புற்றுநோயால் மார்பகங்களை இழக்கும் பெண்கள்
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மார்பகங்களை நீக்கம் செய்த பின்பு அவர்களுக்கு ஏற்படும்
மனஉளைச்சல் சொல்ல முடியாததாக இருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களின் கவலையையும்,கண்ணீரையும் அருகில் இருந்து பார்த்த ஜெயஸ்ரீ ரத்தன் அவர்கள் வாழ்க்கையில் மீண்டும்
புன்னகையை உருவாக்கச் செய்யும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மார்பகங்களை இழந்த பெண்களின்
வாழ்க்கையில் இதன் மூலம் புது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார். அதற்காக சாய்ஷா என்ற அமைப்பையும் உருவாக்கி நடத்தி வருகிறார்.
“புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழந்த பெண்களை இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திக்கும் சூழ்நிலை உருவானது. அவர்களது மனக்கஷ்டங்களை கேட்டபோது பிராக்களின்
உள்ளேவைக்க கூடிய பொருளை தயார் செய்யலாமா என்று யோசித்தேன். கம்பளி நூலால் மார்பக வடிவம்கொண்ட நாக்கர்ஸ் தயாரிப்பது பற்றி ஏற்கனவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
புற்றுநோயால் மார்பகங்களை இழக்கும் பெண்கள்
அதற்காக அமெரிக்காவில் இயங்கிக்கொண்டிருக்கும் ‘நிட்டட் நாக்கர்ஸ்’ அமைப் பிடம் தொடர்புகொண்டு பேசினேன். அவர்கள் இங்கே அதனை தயார் செய்துகொள்ளும் உரிமையை
வழங்கினார்கள். நாங்கள் இங்கே தயார்செய்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் கண்ணீர் கலந்த
நன்றியை தெரிவிக்கிறார்கள்” என்கிறார், ஜெயஸ்ரீ. இவர் சென்னை குட்ஷெப்பர்டு கான்வென்டில் படித்தவர்.
இவர் குரோஷா மற்றும் நிட்டிங் தெரிந்த தனது தோழிகளுடன் சேர்ந்து அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சாய்ஷா அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இந்த அமைப்புக்கு
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 170 சமூக சேவகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு வருடங்களில்
இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு ‘நாக்கர்ஸ்’ வழங்கியிருக்கிறார்கள். தேவைப்படு பவர்களுக்கு வழங்குவதாகவும் சொல்கிறார்கள்.
“மார்பகம் நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும். அதற்கு செலவு செய்ய முடியாதவர்களுக்கு
இதனை இலவசமாக வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது” என்கிறார், வல்ச மேரி மேத்யூ. திருவனந்தபுரத்தை
சேர்ந்த இவரும் சாய்ஷா அமைப்பின் சேவகராக பணியாற்றுகிறார்.
“நானும், ஜெயஸ்ரீயும் சென்னையில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்தோம். பள்ளிப் படிப்பை முடித்து ஐம்பது ஆண்டுகள் ஆன பின்பு கடந்த ஆண்டு முன்னாள் மாணவிகளான நாங்கள்
புற்றுநோயால் மார்பகங்களை இழக்கும் பெண்கள்
அனைவரும் சென்னையில் ஒன்றுகூடினோம். அப்போதுதான் ஜெயஸ்ரீ, சாய்ஷா அமைப்பின் செயல்பாடுகள் பற்றி என்னிடம் சொன்னார். அப்போது நான் வங்கி மேனேஜராக பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தேன்.
அக்ரிலிக் நூல் மூலம் வழக்கமாக குரோஷா தயார் செய்வார்கள். ஆனால் நமது நாட்டு சீதோஷ்ணநிலைக்கு காட்டன் நூலால்தான் நாக்கர்ஸ் தயார்செய்யவேண்டும். கோவா, வதோரா போன்ற
பகுதிகளில் இருந்துதான் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் காட்டன் நூல் வினியோகிக்கிறார்கள். அதற்கான செலவுகளை வாலண்டியர்களான நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். குரோஷா,
நிட்டிங் தெரிந்த எல்லோருமே ‘பேட்டர்ன்’ தெரிந்தால் நாக்கர்ஸ் வடிவமைக்கலாம். ஏ, பி, சி, டி போன்ற கப் சைஸ்களில் எவ்வாறு
நாக்கர்ஸ் தயார் செய்வது என்ற விவரம் பேட்டனில் தரப்பட்டிருக்கிறது.
நாக்கர்ஸின் உள்ளே ரெக்ரான் பைபரை வைக்கிறோம். இது ஆரோக்கியத்திற்கு எதிரானதல்ல. மட்டுமின்றி கழுவியும் பயன்படுத்தலாம். எடை மிக குறைந்தது என்பதால்
உபயோகிக்கவும் சிரமம் ஏற்படாது. உலகின் பல பகுதிகளில் இருந்து தயார் செய்து அனுப்பப்படும் நாக்கர்ஸில் கப் சைஸ்
அளவுக்கு ஏற்றபடி ரெக்ரான் பைபரை நிரப்பி, லேபிள் செய்யும் பணி மும்பையில் நடக்கிறது.
ஒரு மார்பகம் மட்டும் நீக்கப்பட்டவர்களுக்கு இரண்டு நாக்கர்ஸ் வழங்குகிறோம். கழுவி, காயவைத்து பயன்படுத்துவதற்கு ஏற்ப கூடுதலாக ஒன்று வழங்குகிறோம். ஒருமுறை பெறுபவற்றை
இரண்டு வருடங்கள் பயன்படுத்தலாம். அதன் பிறகு எங்கள் அமைப்பை தொடர்புகொண்டு புதியவற்றை வாங்கிக்கொள்ளலாம். இந்த சேவையில் மனநிறைவு கிடைக்கிறது.
முதலில் எங்களிடம் இருந்து நாக்கர்ஸ் பெற்றவர்கள், பின்பு எங்களோடு சேர்ந்து வாலண்டியராக சேவை செய்ய
முன்வருகிறார்கள். அதனால் எங்கள் சேவை விரிவடைந்துகொண்டிருக்கிறது” என்கிறார், ஜெயஸ்ரீ ரத்தன்.
கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் நோய்
கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் நோய்
கர்ப்ப காலத்தின் இந்த உணவுமுறைகளை பின்பற்றினால் ஸ்பைனா பிபிடா(Spina bifida), என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை 70 முதல் 75 சதவீதம் வரை தடுக்கலாம்.
நிற்பது, நடப்பது, அமர்வது, ஓடுவது என நமது இயக்கத்துக்கு காரணமான ஆணைகளை இடுவது தலைமைச் செயலகமான மூளை. அதை கட்டுப்படுத்தி, செயல்படுத்துவது முதன்மை
கம்பித்தடம் போன்ற நமது தண்டுவட நரம்புகளே. மூளை, தண்டுவடம் என்கிற இந்த முக்கிய உறுப்புகள் இரண்டையும் பல அடுக்கு பாதுகாப்புடன் படைத்துள்ளது இயற்கை. மூளைக்கு எப்படி
மெனிஞ்சஸ் என்கிற மூன்றடுக்கு பாதுகாப்பு உறையும் அதற்கு மேல் மண்டையோடு என்கிற உறுதியான வளையமும் இருக்கின்றனவோ, அதேபோல் மூளையில் இருந்து வெளிவரும்
நரம்பு மண்டலத்துக்கும் மெனிஞ்சியல் உறைகளும் அதற்கு மேல் முதுகுத் தண்டுவட எலும்புகளும் பாதுகாப்பை வழங்குகின்றன.
கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் நோய்
அதேபோல் மூளையை கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவும் சி.எஸ்.எப். என்கிற மூளை தண்டுவட திரவம், தண்டுவட நரம்புகளின் வெப்பத்தைச் சீராக்கி பாதுகாக்கிறது. இவை
அனைத்துக்கும் மேலாக, தோல் என்கிற முக்கிய உறுப்பு, வெப்பத்தின் அளவை மாற்றும் குளிர்சாதன பெட்டிபோல் வேலைசெய்வதால்தான், நம்மால் இயங்கவே முடிகிறது. ஆனால்
ஒரு சிலருக்கு மட்டும் கரு உருவாகும் தொடக்க நாட்களிலேயே, பல்வேறு காரணங்களால் இந்தப் பாதுகாப்பு வளையங்களில் ஒன்றோ இரண்டோ உருவாகாமல் போக நேரிடலாம்.
இதனால், அந்தக் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் எல்லாச் செயல்பாடுகளுக்கும் மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அடிக்கடி மருத்துவ உதவி பெற வேண்டிய
கட்டாயமும், வாழ்நாளின் பெரும் பகுதியை மருத்துவமனைகளில் கழிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம். இவ்வளவு
பிரச்சினைகளை தரக்கூடிய ஸ்பைனா பிபிடா வராமலேயே தடுக்க முடியாதா.
அதை தடுப்பது மிக எளிது. பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பருப்பு, கொட்டை வகைகள், சிறுதானியம் போன்றவற்றை உண்ணும்போது இவற்றில் இயற்கையாகவே
கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் நோய்
காணப்படும் போலிக் அமிலம், செல்களின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. வளர்ச்சிக்கும், மூளை நரம்புகளின் வளர்ச்சிக்கும் பெருமளவு
உதவுகிறது. அத்துடன், ஸ்பைனா பிபிடா, என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை 70 முதல் 75 சதவீதம் வரை தடுக்கிறது.
கருவில் வளரும் குழந்தைக்கு நன்மை செய்வது மட்டுமன்றி, கருச்சிதைவையும் குறைப்பிரசவத்தையும் கட்டுப்படுத்தி, தாயின் ரத்த சோகைக்கும் அருமருந்தாவதால் ‘கருவின் தோழி‘ என்று
கொண்டாடப்படுகிறது போலிக் அமிலம் என்கிற இந்த எளிய ‘பி‘ விட்டமின். ஆனால், இயற்கை தரும் உணவு வகைகளில் இருக்கும் போலிக் அமிலம், சமைக்கும்போது நீரில் கரைந்து
சிதைந்துவிடுவதால், 400 முதல் 600 மெக் போலிக் அமில மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன.
கர்ப்ப காலத்தின் தொடக்க நிலையில் மட்டுமன்றி, கருத்தரிப்பதற்கு முன்பாகவே, ஏன் திருமண வயதை அடையும்போதே பெண்கள் இதை உட்கொள்வது அவசியம்.
இரும்புச்சத்து போலிக் அமில மாத்திரைகளை கர்ப்பிணிப் பெண்களுக்கும், பருவ வயதை எட்டிய பெண்களுக்கும் அரசு இலவசமாக வழங்கிவருவது இதனால்தான்.
பிரபல நடிகையின் தந்தை மரணம்- அதிர்ச்சியில் மரணம்
பிரபல நடிகையின் தந்தை மரணம்- அதிர்ச்சியில் மரணம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீரென மரணமடைந்தது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்
நிகிலா விமல், பவித்ரன்
சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிகிலா விமல். பின்னர் கிடாரி படத்திலும் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். கடந்தாண்டு ஜீத்து ஜோசப்
இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் அடுத்ததாக ரங்கா படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நிகிலா விமல்
இந்நிலையில், நடிகை நிகிலா விமலின் தந்தை பவித்ரன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 61.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாரா வழியை பின்பற்றும் பார்வதி நாயர்
நயன்தாரா வழியை பின்பற்றும் பார்வதி நாயர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா வழியை பார்வதி நாயர் பின்பற்றி ஒரு படத்தில் நடிக்கிறார்.
நயன்தாரா வழியை பின்பற்றும் பார்வதி நாயர்
நயன்தாரா – பார்வதி நாயர்
விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்
உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘க/பெ ரணசிங்கம்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஓடிடி தளத்தில்
வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘டாக்டர்’, ‘அயலான்’, ‘டிக்கிலோனா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது.
இந்த படங்களின் வரிசையில் தங்களுடைய புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் முதன்மை
கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ரூபம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
2021-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, சென்னையிலேயே முழுப் படத்தையும் படமாக்கப் படக்குழு முடிவு
செய்துள்ளது. சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் ‘ரூபம்’ படம் தயாராகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. பார்வதி நாயர் இந்த படத்தில் போலீசாக நடிக்க உள்ளார்.
ரூபம்
நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நிலையில், பார்வதி
நாயரும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ரூபம் படத்தில் நடிக்கிறார்.
இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்ட இளையராஜா
இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்ட இளையராஜா
உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக தேர்வான இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்டிருக்கிறார் இளையராஜா.
இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்ட இளையராஜா
இளையராஜா – இசைவாணி
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”
இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து
விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான்.
இந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும்
தெரிவித்துள்ளார். மேலும் இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்டிருக்கிறார்.
இசைவாணி
இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தேனே” மற்றும் “கானக் கருங்குயிலே” ஆகிய பாடல்களை பாடிக் காண்பித்திருக்கிறார்
இசைவாணி. மேலும், “ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறி மகிழ்ந்திருக்கிறார் இசைஞானி.
அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் – குஷ்பு நெகிழ்ச்சி
அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் – குஷ்பு நெகிழ்ச்சி
நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் குஷ்பு, அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் என்று சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.
அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் – குஷ்பு நெகிழ்ச்சி
குஷ்பு
1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ்
, தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் பி.வாசு இயக்கத்தில் வெளியான ‘நடிகன்’, ‘சின்ன தம்பி’, ‘கிழக்கு கரை’, ‘மன்னன்’, ‘ரிக்ஷா மாமா’, ‘இது நம்ம பூமி’, ‘அம்மா
வந்தாச்சு’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். இதில் பல படங்கள் பெரும் வரவேற்பு பெற்றது.
குஷ்பு – இயக்குனர் வாசு
தற்போது, பி.வாசு குறித்து குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனது குரு, எனக்கு மிகவும் பிடித்தமானவர். என்னை
நன்றாகப் புரிந்துகொண்ட ஒரு இயக்குநர். எனக்குள்ளிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் பி.வாசுதான்.
எனது திரை வாழ்க்கையைச் செதுக்கியதில் அவருக்குப் பெரிய பங்குண்டு. அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன். அவர்
மகளின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். மிகவும் ரசித்தேன். பல உணர்வுகளை இது சொல்கிறது”.
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் எல்லையில் இராணுவம் குவிப்பு – ஈரான் தாக்கலாம் என அச்சம்
இஸ்ரேல் எல்லையில் இராணுவம் குவிப்பு – ஈரான் தாக்கலாம் என அச்சம்
ஈரானின் அணு சக்தி விஞ்ஞானியை இஸ்ரேல் திட்டமிட்டு படுகொலை
புரிந்தது ,இதனை அடுத்து தற்பொழுது ஈரான் ஆதரவு படைகள் தமது பழிவாங்கும்
தாக்குதல்களை இஸ்ரேல் மீது நடத்த கூடும் என்ற நிலையில் தற்போது
எல்லை பகுதியில் இராணுவம் குவிக்க பட்டுள்ளதுடன் தீவிர கண்காணிப்பு இடம்பெற்று வருகிறது
இவ்வாறான சம்பவங்கள் நாடுகளுக்கு இடையில் பெரும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது







