Author: நிருபர் காவலன்
தெலுங்கிலும் பட்டையை கிளப்பிய மாஸ்டர்
தெலுங்கிலும் பட்டையை கிளப்பிய மாஸ்டர்
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.
தெலுங்கிலும் மாஸ் காண்பித்த மாஸ்டர்
விஜய்
விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக
நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியானது. யூடியூப் தளத்தில் ‘மாஸ்டர்’ டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
மாஸ்டர்
தற்போது மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. சில நிமிடத்தில் இந்த டீசர்
ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. மேலும் அதிக லைக்குகளையும் குவித்து வருகிறது.
தலைகீழாக தொங்கிய நடிகை
தலைகீழாக தொங்கிய நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தற்போது தலைகீழாக தொங்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய் இருக்கிறார்கள்.
தலைகீழாக தொங்கிய நடிகை… பதறிய ரசிகர்கள்
அமலாபால்
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல, கடாவர் திரைப்படம்
உருவாகியுள்ளது. சமீப காலமாக அமலாபால் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால்.
ஆண் நண்பர்களுடன் மதுகோப்பையுடன் இருக்கும் படங்களை வெளியிட்டார். இன்னொரு ஆண் நண்பர் அருகில் நிற்க
கடற்கரையில் படுத்திருப்பதுபோன்ற புகைப்படம் வந்தது. பின்னர் புகைப்பிடித்து வாயில் இருந்து வரும் புகையை வட்டமாக
வெளியிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அமலாபால்
தற்போது துணியில் தலைகீழாக தொங்குவது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். வித்தியாசமாக யோகா செய்யும் அமலா
பாலின் இந்த போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் பதறிவிட்டனர்
ஈராக்கிய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
ஈராக்கிய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
ஈராக்கில் தளம் அமைத்து தங்கியுள்ள அமெரிக்கா இராணுவத்தினர்
ஈராக்கிய அரச இராணுவத்திற்கு சொந்தமான டிரோன் ரக உளவு விமானம் ,அதாவது ஆள் இல்லா உளவு விமானத்தை திடீரென சுட்டு வீழ்த்தியுள்ளனர்
இது தவறுதலாக இடம்பெற்ற ஒரு சம்பவம் என தெரிவித்துள்ளது ,குறித்த விமானத்தின் மொத்த செலவை தாம் தருவதாக
அமெரிக்கா அறிவித்துள்ளது ,உண்மையில் இது தான் காரணமா என்றால் அது அல்ல என்பதே சமாச்சாரம்
அப்டி என்றால் அதே நாட்டில் தங்கி அந்த நாட்டின் முக்கிய விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்துகிறது என்றால் சமாச்சாரம் வேறு ஏதோ நடக்கிறது
சில வாரங்களுக்கு முன்னர் ஈரான் புரட்சி காவல் படையின் தளபதி ஈராக்கிற்கு
சென்று முக்கிய விடயங்கள் தொடர்பாக பேசி வந்ததன் பின்னர் இடம்பெற்ற சம்பவம் இது என்பது கவனிக்க தக்கது
ஈரான் தீவிரவாதத்திற்கு உதவுகிறது – கொதிக்கும் பிரிட்டன் எம்பி
ஈரான் தீவிரவாதத்திற்கு உதவுகிறது – கொதிக்கும் பிரிட்டன் எம்பி
ஈரானின் முக்கிய புரட்சி காவல் படையினர் உலகின் மிக முக்கிய தீவிரவாத
இயக்கங்களை ஒருங்கிணைந்து அதன் ஊடாக தனது எதிரிகளுடன் சமரிட்டு
வருகிறது எனவும் அதற்குரிய ஆயுதங்கள் மற்றும் பண உதவி என்பனவற்றை
ஈரான் செய்து வருவதாக பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சிலர் கொதித்து பொங்கியுள்ளனர்
ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் பனிப்போர் உச்சம் பெற்று வரும் நிலையில் இந்த முடிவுகள் அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
தேர்தலில் போட்டியிடும் சத்யராஜ் மகள்
தேர்தலில் போட்டியிடும் சத்யராஜ் மகள்
வருகிற சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய மகளுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
தேர்தலில் மகளுக்கு ஆதரவாக களமிறங்கும் சத்யராஜ்
மகளுடன் சத்யராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின்
தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவர் அரசியலில் இறங்க இருப்பதாகவும் வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் சமூக வலைத்தளங்களில்
வெளியாகின. இதுகுறித்து நாம் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவரும் அவர் மகள் திவ்யா சத்யராஜும் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு,
என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை
நினைத்து பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் என் மகளுக்கு
பக்கபலமாக இருப்பேன். நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன்.” இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ் கூறும்போது, அப்பா என் உயிர் தோழன் என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால் ஒரு
முக்கியமான விஷயம், I am a selfmade independent person, சொந்த வளர்ச்சிக்காக ஒரு போதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்’ என்று திவ்யா சத்யராஜ் கூறினார்.
சத்யராஜ் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க மகிழ்மதி” என்ற இயக்கத்தை
ஆரம்பித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக
வலைதளங்களில் வைரல் ஆனது. கொரோனா நேரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க
வேண்டும் என்று திவ்யா விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் திவ்யா சத்யராஜ் எந்த கட்சி சார்பாக போட்டியிட போகிறார் என்ற விவரத்தை வெளியிட இருக்கிறார்.

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கடுப்பை கிளப்பிய நடிகை
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கடுப்பை கிளப்பிய நடிகை
ஜெமினி’ படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’,
கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த ‘வின்னர்’ படம் சூப்பர் ஹிட்டானது. இதில் அதிக கவர்ச்சியில்
கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கிரண்
இந்நிலையில் தற்போது வெறும் சட்டை மட்டும் அணிந்துகொண்டு பட்டன் போடாமல் இருக்கும் புகைப் படம் ஒன்று
வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

முதலமைச்சரை நேரில் சந்தித்த பிக்பாஸ் சரவணன்
முதலமைச்சரை நேரில் சந்தித்த பிக்பாஸ் சரவணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் சரவணன் தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்திருக்கிறார்.
முதலமைச்சரை நேரில் சந்தித்த பிக்பாஸ் சரவணன்… காரணம் தெரியுமா?
சரவணன் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
‘பொண்டாட்டி ராஜ்யம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து 90களில் கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன்.
பருத்திவீரன் திரைப்படம் அவருக்கு சித்தப்பு என்ற பெயரை வழங்கியதோடு தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்யவும் முக்கிய காரணமாக அமைந்தது.
சரவணன் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டார். சில காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
அண்மையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி
பெற்ற சரவணன், தற்போது மரியாதை நிமிர்த்தமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ரசியா ஏவுகணையை வாங்கிய துருக்கிக்கு – பொருளாதார தடை விதித்து மிரட்டும் அமெரிக்கா
ரசியா ஏவுகணையை வாங்கிய துருக்கிக்கு – பொருளாதார தடை விதித்து மிரட்டும் அமெரிக்கா
ரசியாவின் வான் இடைமறித்து ஏவுகணையாக விளங்கும் எஸ் 400 ரக ஏவுகணையை துருக்கி வாங்கி குவித்தது ,இந்த ஏவுகணைகள்
உடனடி களமுனை பாவனைக்கு தருவித்து எல்லைகளில் குவிக்க பட்டுள்ளன
தம்மிடம் மேற்படி ரக ஏவுகணையை வாங்கிட அமெரிக்கா துருக்கிக்கு அழுத்தம் கொடுத்தது ,ஆனால் துணிந்து செயல் பட்ட
எடகோன் ,டிரம்பின் மிரட்டலை மீறி ரசியாவுடன் ஒப்பந்தம் செய்து சொன்னபடி ஏவுகணையை வாங்கி குவித்தார்
வாங்கி விடீர்கள் எப்படி கொண்டு வறுகிண்றீர்கள் பார்க்கலாம் என சவாலும் விட்டது ,அதற்கு ரஷியா உரிய மாற்று வழிகளை பயன் படுத்தி துருக்கியில் குவித்தது
இதன் எதாரொலியாக தற்போது பாதுகாப்புத்துறை தொழில் இயக்குநகரம்
மற்றும் அதன் தலைவர் இஸ்மாயில் டிமீர் மற்றும் 3 நிர்வாகிகள் மீது பொருளாதாரத்தடை விதித்தது.
இந்த பொருளாதார தடையால்
இரு நாட்டுக்கும் இடையே கடும் மோதல் வெடித்து பறக்கிறது
அடிபணிய வைக்க முனையும் அமெரிக்காவின் நய வஞ்சகத்திற்கு துருக்கி அடிபணியுமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
விமான நிறுவன வங்கி கணக்கில் இருந்து மாயமான 2 மில்லியன்
விமான நிறுவன வங்கி கணக்கில் இருந்து மாயமான 2 மில்லியன்
டப்பிலினை தலமாக கொண்டு இயங்கு வரும் சீனா விமான லீசிங் நிறுவனம்
ஒன்றின் வாங்கி கணக்கில் இருந்து சுமாரா இரண்டு மில்லியன் டொலர்கள் மாயமானது
வாங்கி மோசடியாளர்கள் இணையத்தை கைக்கிங் புரிந்து அதன் ஊடக இந்த பணத்தை காங் காங்கிற்கு மாற்றியுள்ளனர்
மேற்படி பணம் காணாமல் போன சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய
நிலையில் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இவ்வாறு பெரும் தொகையில் பணம் திருட்டு போனது குறித்த நிறுவனத்தை
அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,இது தொடர்பான நீதி விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன
கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரி
கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரி
பிரபல நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவருமான கஸ்தூரி கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரி
கஸ்தூரி
செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள
படம் இ.பி.கோ 302. இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள், கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரிக்கு துணைபுரியும் போலீசாக வின்ஸ்குமார், வையாபுரி மற்றும் ராபின்
பிரபு,போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சலங்கைதுரை.
இ.பி.கோ 302 படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகை கஸ்தூரி பேசியதாவது..
கஸ்தூரி
இந்த படத்தில் இப்படியொரு கேரக்டரை கொடுத்த டைரக்டர் சலங்கைத்துரை அவர்களுக்கு முதல் நன்றி. தமிழில் நான்
போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. இந்தப்படம் வழக்கமான போலீஸ் கதையாக இருக்காது. நிச்சயம் இது ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து காத்திரமான குரலை எழுப்பும் படமாக இது இருக்கும் என்று உறுதியாகச்
சொல்லலாம். இப்படத்தை மக்கள் அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். ஏன் என்றால் இது இன்றைய சமூகத்திற்கு
தேவையான அறம் சார்ந்த படம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. குறிப்பாக காதலர்கள் அனைவரும் இப்படத்தைப்
பார்க்கவேண்டும். எது காதல் என்பதை இப்படம் பேசியுள்ளது என்றார். வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களின் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களின் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 வது சீசனில் இருந்து வெளியேறியவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களின் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி 16 போட்டியாளர்கள் கொண்டு ஆரம்பமானது. பின்னர் அர்ச்சனா, சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட்
போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இரண்டாவது வாரத்தில் முதல் நபராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா.
அவரைத் தொடர்ந்து வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட கடந்த வார இறுதியில் ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா ஆகிய இரண்டு
பேர் வெளியேற்றப்பட்டனர். இதுவரை 8 பேர் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் வீட்டுக்குள் 10 பேர் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் மீண்டும்
சந்தித்துக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரேகா, வேல்முருகன் ஆகியோர் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
பிக்பாஸ்
மேலும் வீடியோ பதிவிட்டிருக்கும் நடிகை ரேகா, ரமேஷூம், நிஷாவும் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார்கள். சுசித்ரா, சனம் ஆகியோர் பிஸியாக இருக்கிறார்கள். அதனால் தான்
அவர்களால் வர முடியவில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் தான் அது போட்டி. வெளியே வந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான்.” என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி படத்தின் தடை நீக்கம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விஜய் சேதுபதி படத்தின் தடை நீக்கம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி படத்தின் தடை நீக்கம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விஜய் சேதுபதி
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி,
நடிகை காயத்ரி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில்
உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளனர். விரைவில் இத்திரைப்படம்
திரைக்கு வர உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் தாங்கள்
வாங்கியதாகவும் எனவே விநியோக உரிமை தங்களுக்குத் தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார்.
விஜய் சேதுபதி
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர்
யுவன்சங்கர்ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை என்றும் அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் எனவே படத்தை வெளியிட
விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
முதல் படமே கடைசி படமான சோகம்…. சித்ரா ஹீரோயினாக நடித்த படம் விரைவில் ரிலீஸ்
முதல் படமே கடைசி படமான சோகம்…. சித்ரா ஹீரோயினாக நடித்த படம் விரைவில் ரிலீஸ்
சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சித்ரா வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமான படம் விரைவில் ரிலீசாக உள்ளதாம்.
முதல் படமே கடைசி படமான சோகம்…. சித்ரா ஹீரோயினாக நடித்த படம் விரைவில் ரிலீஸ்
சித்ரா
இன்பைனைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த “கால்ஸ்” என்ற திரைப்படம் கடந்த 2019 ஜூலை மாதம் நடிகர் டெல்லி கணேஷ்
அவர்களால் பூஜையுடன் துவங்கி தஞ்சாவூர், திருச்சி , சென்னை, வாரணாசி என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்த படத்தில் விஜே சித்ரா கதாநாயகியாகவும், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும்
நடித்துள்ளனர். இயக்குனர் ஜெ.சபரிஸ் இயக்கி, தமீம் அன்சாரி இசையமைத்த இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு (2020) ஜனவரி மாத இறுதியில் நிறைவடைந்தது.
இதையடுத்து படத்தின் பின்னணி பணிகள் முழுவீச்சில் நடந்த நிலையில், ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட
திட்டமிடப்பட்டது. கொரோனா காரணமாக மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட இறுதிக்கட்ட பணிகள், செப்டம்பர் மாதம் முதல்
மீண்டும் வேகமாக தொடங்கி டிசம்பர் 13, பர்ஸ்ட் லுக் ரிலீஸ், ஜனவரி 1 (2021) டிரெய்லர் ரிலீஸ் மற்றும் ஜனவரி இறுதியில் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டது.
கால்ஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஆனால் அதற்குள் எதிர்பாராத விதமாக படத்தின் கதாநாயகி விஜே சித்ரா காலமானார். அவரின் கனவு வெள்ளித்திரையில் தன்னை காண வேண்டும் என்பது, அதற்குள் அவர் எதிர்பாராதவிதமாக
மறைந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இருப்பினும் அவருடைய விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
அண்ணாத்த’ கிளம்பியாச்சு…. வைரலாகும் ரஜினியின் புகைப்படம்
அண்ணாத்த’ கிளம்பியாச்சு…. வைரலாகும் ரஜினியின் புகைப்படம்
அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார்.
‘அண்ணாத்த’ கிளம்பியாச்சு…. வைரலாகும் ரஜினியின் புகைப்படம்
ரஜினிகாந்த்
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப்
போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாகவும் தெரிவித்தார். கட்சி தொடங்கும் முன்பு
‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அண்ணாத்த படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று தனி
விமானம் மூலம் ஐதராபாத் கிளம்பியுள்ளார். விமான நிலையத்தில் ரஜினி போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில்
வைரலாகி வருகிறது. ரஜினியுடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் சென்றுள்ளார்.
ரஜினிகாந்த்
கொரோனா பரவல் காலகட்டம் என்பதால் ரஜினி மிகவும் பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்
. படப்பிடிப்பு தளத்திலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் ரஜினி கட்சி
தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்படுகிறது.
தென் கொரியாவில் குவிக்க படும் 40,000 அமெரிக்கா இராணுவம்
தென் கொரியாவில் குவிக்க படும் 40,000 அமெரிக்கா இராணுவம்
வடகொரியா தனது ஏவுகணை சோதனையைம தொடராக நடத்தி வரும் நிலையில் மேலதிகமாக அமெரிக்கா படைகளை தென்
கொரியாவில் தரித்து வைக்க தென்கொரியா ஒப்புதல் அளித்துள்ளது ,இதனை அடுத்து மிக முக்கிய பன்னிரண்டு
படைப்பிரிவுகளை சேர்ந்த நாற்பது ஆயிரம் அமெரிக்கா இராணுவத்தினர் அவசரமாக குவிக்க படுகின்றனர்
இந்த இராணுவ குவிப்பின் பின்னர் வடகொரியா தனது ஏவுகணை
சோதனையை நிறுத்தி விடுமா என்றால் அது இல்லை என்றே பதில் கிடைக்கும்
அமெரிக்காவும் மிரட்டி பார்க்கிறது .ஆனால் வளைந்து கொடுக்க மறுத்து தமது
உயர் மட்டங்களில் முக்கிய மாற்றங்களை புரிந்துநாட்டின் பாதுகாப்பை இறுக்கி செல்கிறது வடகொரியா தலைமை
லெபனான் கைகளில் ஈரான் ஏவுகணைகள் – பதறும் ஐநா ,இஸ்ரேல்
லெபனான் கைகளில் ஈரான் ஏவுகணைகள் – பதறும் ஐநா ,இஸ்ரேல்
ஈரான் நாட்டின் முக்கிய தலைகளை மர்ம கொலைகள் மூலம் கொன்று
அழிப்பதால் அந்த நாட்டின் மூளைகளை அழித்துவிட்டு நாட்டை தமது
கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என இஸ்ரேல் கணக்கு போட்டு
நடக்க ,அதற்கு முதுகில் அடித்தால் போல அதன் எல்லை நாடுகளில் உள்ள
லெபனான் போராளிகள் கைகளில் ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகள்
சென்றடைந்துள்ளது ,என ஐநாவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்
இது நாடுகளின் சட்டங்களை மீறிய கொடும் செயல் என அவர் தெரிவித்துள்ளார் ,
.ஆனால் இஸ்ரேல் புரியம் படுகொலைகள் தொடர்பாக அவர் வாயை திறக்கவில்லை
தமது பழிவாங்கும் தாக்குதல் தொடரும் என ஈரான் அறிவித்த நிலையில்
இந்த ஏவுகணைகள் சென்றடைந்துள்ளது இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
தேர்தலில் போட்டியிடும் விஷால்
தேர்தலில் போட்டியிடும் விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் விஷால்
விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல், நடிகர் சங்க தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றி கண்டிருக்கிறார். நடிகராக
இருந்தாலும் சமூக அக்கறையுடனும் சமூக சிந்தனையுடனும் சமூகத்திற்கு தேவையான நிறைய உதவிகளையும் செய்து வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிட விண்ணப்பித்த போதிலும் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஷால் வருகின்ற
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவருடைய வட்டாரத்திலும், தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்.
விஷால்
விரைவில் எந்த தொகுதியில் விஷால் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாராவை பார்க்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு,
நயன்தாராவை பார்க்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு,
படப்பிடிப்பில் நயன்தாராவை பார்க்க பொது மக்கள் குவிந்ததால் அந்த இடத்தில் பரபரப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
‘நானும் ரவுடிதான்’ படத்துக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல 2 காதல்’ என்ற படத்தில் மீண்டும்
நடிகர் விஜய்சேதுபதியும், நடிகை நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள். நடிகை சமந்தாவும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார்.
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ்.டி. சாலை அருகே உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று இந்த
படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை நயன்தாராவை நேரில் பார்க்க அப்பகுதியில் ஏராளமான வாலிபர்கள் உள்பட பொதுமக்கள்
குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த படப்பிடிப்பிற்கு முறையான அனுமதி பெறவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் நயன்தாராவை காண
திரண்டிருந்த பொது மக்களை கட்டுப்படுத்த போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நயன்தாரா
படக்குழு சார்பில் அங்கு தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பொதுமக்களை தடுத்ததால் அவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 பேர் எலிமினேட்… யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 பேர் எலிமினேட்… யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் 2 எலிமினேட்டில் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 பேர் எலிமினேட்… யார் யார் தெரியுமா?
கமல்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய
இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்
. அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரமேஷ் – நிஷா
இந்நிலையில், இந்த வாரம் 2 பேர் எலிமினேட் செய்ய இருப்பதாக புரமோ வீடியோவில் கமல் கூறினார். தற்போது யார் எலிமினேட் ஆனார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் இன்றைய
(சனிக்கிழமை) நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷும், நாளை நிஷாவும் வெளியேற்றப்பட்டுள்ளதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல நடிகை
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல நடிகை
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பின் போது பிரபல நடிகை ஒருவர் மயங்கி விழுந்து இருக்கிறார்.
விஜய் சேதுபதி படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல நடிகை
விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் அனபெல்
சுப்ரமண்யம். பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர் ராஜன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில்
விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, ‘ஜாங்கிரி’ மதுமிதா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஜெய்ப்பூரில் துவங்கி நடைபெற்றது. அப்போது விரதம் மேற்கொள்வதை தவறாமல் கடைப்பிடித்து வரும் மதுமிதா, ஒருநாள் படப்பிடிப்பின்போது
விரதம் மேற்கொண்டிருக்கிறார். நாள் முழுவதும் உணவருந்தாமல் படப்பிடிப்பில் நடித்துள்ளார். அன்றைய தினம் இரவு நேர
படப்பிடிப்பும் தொடரவே, ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார் மதுமிதா.
மதுமிதா
பதறிப்போன படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்து மயக்கம் தெளிவிக்க, அதன்பிறகும் கூட, தன்னுடைய காட்சியில் நடித்து முடித்த பின்பே சாப்பிட சென்றிருக்கிறார் மதுமிதா. தன்னால்
படக்குழுவினருக்கு சிறிய அளவில் கூட பாதிப்பு வந்துவிடக் கூடாது என்கிற மதுமிதாவின் எண்ணத்தை படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.







