Posted in Uncategorized

தாலிபான்கள் வெறியாட்டம் -30 பேர் படுகொலை

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து

வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தபேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத

தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில்

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான காந்தஹாரில் உள்ள அர்கந்தாப் மற்றும் ஜாரி மாவட்டங்களில் தலீபான்

பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் 30 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 8 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்‌.

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நன்றி உனக்கு

நன்றி உனக்கு

நேற்றெந்தன் அகவையில
நேர் வந்த இளங்கிளியே
நீயுரைத்த வாழ்த்தொன்றால்
நிமிடங்கள் பேசுதடி

நாள் தோறும் அகவையில
நீ வந்து வாழ்த்திவிடு
நான் வாழ நீ தானே
நலமுடனே வாழ்த்து இடு

உன்போல உறவொன்றை
உயிரே நான் காணவில்லை
உள்ளத்தில் நீ இருக்க
ஊந்துகணை பயமில்லை

கரை பதிந்த அலை தடத்தை
காற்றே அழித்திடுமோ ..?
காயா நினைவலையை
கறையான் புற்று அரித்திடுமோ …?

ஓயாத அலை ஒன்றாய்
ஒலிக்கின்றாய் நெஞ்சுக்குள்
வரலாற்று சமரதுவாய்
வாழ்கின்றாய் நெஞ்சுக்குள்

குடாரப்பு தரையிறக்கம்
குழி தோண்டிய முற்றுகையாய்
வெறி கொண்ட வெற்றி ஒன்றாய்
வெளிச்சத்தை நீ தந்தாய் …!

  • வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம்-11-03-2021
  • வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

    இந்தியாவில் ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி

    இந்தியாவில் ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி

    இந்தியாவில் கோவிஷீல்டு, கொவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி, அவை கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

    தடுப்பூசி திட்டத்தின் 52ஆவது நாளான நேற்று முன்தினம் (08) ஒரே நாளில் 2,019,723 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இதுதான் ஒரு நாளின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இவர்களில் 1,715,380 பேர், 28,884 அமர்வுகள் மூலம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தப்பெற்றனர்.

    மேலும் 304,343 சுகாதார பணியாளர்களும், முன்கள பணியாளர்களும் தடுப்பூசியின் 2ஆவது டோஸ்களை

    பெற்றுக்கொண்டனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரையில் 2,308,733 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    Posted in Uncategorized

    மோடி சீமானுக்கு விட்ட தூது – தெறிக்கவிட்ட சீமான் -வீடியோ

    மோடி சீமானுக்கு விட்ட தூது – தெறிக்கவிட்ட சீமான் -வீடியோ

    ஆளும் இந்திய பிரதமர் மோடியிடம் இருந்து சீமானுக்கு விடப்பட்ட தூது ,அதில் என்ன நடந்தது உடைக்கிறார் அந்த மர்மங்களை

    இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    இறந்தால் உன்னை மறப்பேன் …!

    இறந்தால் உன்னை மறப்பேன் …!

    நினைத்து நினைத்து உருகிடத்தான்
    நீ வந்து போகிறாய்- உன்
    நினைவுகளை தந்து விட்டு
    நிதம் ஏனோ மறைகின்றாய்..?

    ஆழ் மனதில் நீயிருக்க
    அன்பே உனை மறப்பேனா
    அடியே உனை மறந்தால்
    ஆவி உடல் தங்குமா ?

    நீயெடுத்த முடிவொன்றால்
    நிகழ் காலம் இதுவாச்சு
    ஏதெடுத்து உனை மொழிவேன்
    எப்படி உனை உமிழ்வேன்

    காதோரம் செய்திகளை
    காதலியே சொல்லிட வா— நான்
    காணாமல் போகு முன்னே
    கதை ஒண்ணு சொல்லிட வா

    உருமாறும் அகவையில
    உள்ளத்தை மாற்றிட வா
    உனக்காக நான் வாழ்ந்தேன்- இந்த
    உண்மையை ஏற்றிடவா

    எதை உரைத்தும் இன்றென்ன
    எனக்கில்லை நீதானே
    எதை விதைத்தும் இன்றென்ன
    எல்லாமே வீன்தானே

    இருவருக்கும் இடையிலின்று
    இடையே ஒர் வேலியிட்டாய்
    இரு வேறாய் பிரிவதற்கா
    இடையில் ஒரு பதி வைத்தாய்?

    இதயத்தை சலவை செய்ய
    இன்றென்னால் முடியாது
    இறந்தால் உனை தொடரேன்
    இதயமே வருந்தாதே …!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் -10-03-2021

      Posted in Uncategorized

      சிரியா அதிபர் ,மனைவிக்கு கொரனோ

      சிரியா அதிபர் ,மனைவிக்கு கொரனோ

      சிரியாவின் ஆளும் அசாத் மற்றும் அவரது மனைவி கஸ்மா ஆகியோருக்கு

      நடத்த பட்ட கொரனோ சோதனையில் இருவருக்கும் கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

      இதனை அடுத்து இருவரும் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

      Posted in Uncategorized

      போராளி குழுக்களை வேட்டையாடும் துருக்கி

      போராளி குழுக்களை வேட்டையாடும் துருக்கி

      துருக்கிய ஆளும் அதிபர் இலங்கையின் மகிந்தா ,கோட்டாவை போன்ற சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார் ,இவரது அடச்சியில் போராளி குழுக்கள் அடக்க பட்டு நசுக்க பட்டு வருகிறது .

      அவர்களது தார்மீக கொள்கைகள் ஏற்க மறுத்து முற்றாக அந்த அமைப்புக்கள் இல்லாது அழிக்கும் நகர்வில் துருக்கி ஈடுபட்டுள்ளது

      இவ்விதம் தற்போது Fetullah Terrorist Organization (FETO)சி 2 முக்கியய நபர்களை கண்ட இடத்தில் கைது செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      தங்கம் அள்ளி சென்ற மக்கள்

      மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது

      இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத் தீ போல கிராமம் முழுவதும் பரவியதையடுத்து மக்கள் அனைவரும் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மலை பகுதிக்கு விரைந்தனர்.

      அங்கு அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மண்ணை தோண்டினர். பின்னர் அதனை பைகளில் போட்டு வீட்டுக்கு

      எடுத்துச்சென்று தண்ணீரில் அலசி தங்கத் தாதுக்களை எடுத்தனர். இது தொடர்பான வீடியோவை அகமது அல்கோபரி என்ற

      பத்திரிகையாளர் டுவிட்டரில் பகிர்ந்ததை தொடர்ந்து, அது சமூக வலைதளங்களில் வைரலானது.

      இதனிடையே இந்த தகவல் அரசுக்கு தெரிந்தவுடன் மலையில் மண்ணை தோண்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.

      இந்த மலை முழுவதிலும் தங்கத் தாது இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே மலையை சுற்றிலும் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

      Posted in சினிமா

      சூர்யா – ஜோதிகா’ பாணியை பின்பற்றும் ‘ஆர்யா – சாயிஷா

      சூர்யா – ஜோதிகா’ பாணியை பின்பற்றும் ‘ஆர்யா – சாயிஷா

      தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா, கடந்த 2006-ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

      . திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

      தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. திருமணத்துக்கு பின் ஜோதிகா நடிக்கும் படங்களை சூர்யா தனது 2டி பட நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

      ஆர்யா, சாயிஷா

      இந்நிலையில், நடிகர் ஆர்யாவும் அதே பாணியை பின்பற்ற முடிவு செய்துள்ளாராம். ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கும் ஜோதிகா போன்று கதையின் நாயகியாக நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளதாம்.

      அதனால் மனைவிக்காக தானே ஒரு படம் தயாரிக்க ஆர்யா முடிவு செய்துள்ளாராம். இதற்காக சில இளம் இயக்குனர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம்.

      ஆர்யாவின் மனைவி சாயிஷா, வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

      தற்போது ஆர்யாவுடன் டெடி படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மார்ச் 12-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது.

      Posted in சினிமா

      விஜய்… நீங்கள் மனிதரே அல்ல, கடவுள் – நடிகை கங்கனா

      விஜய்… நீங்கள் மனிதரே அல்ல, கடவுள் – நடிகை கங்கனா

      மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா

      வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

      இப்படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

      வருகிறது. இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத், இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

      கங்கனா ரணாவத், ஏ.எல்.விஜய்

      அதில் “அன்புள்ள விஜய் சார், ‘தலைவி’ படத்தின் டப்பிங் முதல் பாதி முடிந்தது. இன்னும் இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளது. நமது இந்தப் பயணம் முடிவுக்கு வர இருக்கிறது. ஒரு நடிகையாக நான்

      நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் பிரகாசமாகும். பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும், நான் உங்களிடம் ஒரு துளி கோபத்தையோ, அச்சத்தையோ, விரக்தியையோ பார்த்ததே இல்லை.

      உங்களை பல வருடங்களாக அறிந்தவர்களிடம் உங்களைப் பற்றி பேசினேன். உங்களைப் பற்றி பேசும்போது, அவர்கள் கண்களும் பிரகாசமடைகின்றன. விஜய், நீங்கள் மனிதரே அல்ல, கடவுள்.

      உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நான் உங்களை மிஸ் பண்றேன்”. இவ்வாறு கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

      Posted in சினிமா

      நடிகையாக களமிறங்கும் சாய் பல்லவியின் தங்கை

      நடிகையாக களமிறங்கும் சாய் பல்லவியின் தங்கை

      மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது

      . இதையடுத்து தமிழில், தியா, மாரி 2, என்.ஜி.கே. போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் பிசியான

      நடிகையாக வலம் வருகிறார். ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

      பூஜா, சாய் பல்லவி

      இந்நிலையில், நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜாவும் நடிகையாக அறிமுகமாக உள்ளாராம். இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குனராக

      #அறிமுகமாகும் படத்தில் பூஜா நடிக்கிறாராம். இதில் நடிகர் சமுத்திரகனியின் மகளாக அவர் நடிக்கிறார். பொள்ளாச்சி சம்பவம் சாயலில் இப்படம் தயாராவதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு

      கோவையில் நடந்து வருகிறது. சாய் பல்லவியின் தங்கை பூஜா, ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

      Posted in சினிமா

      காணாமல் போன 76 குழந்தைகளை மீட்ட பெண் போலீஸ் பற்றிய வெப் தொடர் உருவாகிறது

      காணாமல் போன 76 குழந்தைகளை மீட்ட பெண் போலீஸ் பற்றிய வெப் தொடர் உருவாகிறது

      டெல்லியின் சமயபூர் பத்லி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை கான்ஸ்டபிளான சீமா தாகா, கடந்த வருடம், காணாமல் போன 76 குழந்தைகளை மூன்று மாதத்திற்குள் மீட்டார். இதனால் அவருக்கு துணை ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்தது.

      சீமா தாகா, மீட்ட 76 குழந்தைகளில் 56 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சீமா குழந்தைகளை மீட்டார். 20 வயதில் இருந்து காவல்துறையில் பணிபுரிய ஆரம்பித்த

      சீமா, அவரது கல்லூரியிலிருந்து தேர்வாகி, நேர்காணலின் மூலம் போலீஸ் வேலை கிடைத்த ஒரே நபராவார். சீமாவின் கணவரும் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

      சீமா தாகா

      இந்நிலையில், தற்போது சீமாவின் இந்தச் சாதனை பற்றிய புதிய வெப் தொடர் உருவாகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. தற்போது இந்த வெப் தொடருக்கான முதற்கட்ட

      பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சீமா தாகா வேடத்தில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Posted in Uncategorized

      திமுக கூட்டணி – தொகுதிகளில் போட்டி- இன்று அறிவிப்பு

      திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி- இன்று அறிவிப்பு

      நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன்

      முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.

      இக்கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:-

      தி.மு.க.- 174

      காங்கிரஸ்- 25

      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி- 6

      இந்திய கம்யூனிஸ்டு கட்சி- 6

      ம.தி.மு.க.- 6

      விடுதலை சிறுத்தைகள் கட்சி- 6

      இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 3

      கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 3

      மனிதநேய மக்கள் கட்சி- 2

      தமிழக வாழ்வுரிமை கட்சி- 1

      மக்கள் விடுதலை கட்சி- 1

      ஆதித் தமிழர் பேரவை- 1

      இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று மதியம் 12 மணிக்கு தி.மு.க அறிவிக்கிறது.

      Posted in Uncategorized

      காதலியை கொன்று வீசிய காதலன்

      காதலியை கொன்று வீசிய காதலன்

      தெற்கு அவுஸ்ரேலியா பகுதியில் 21 வயது இளம் காதலி ஒருவர் கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,

      இவரது வீட்டின் அருகே கார் தரித்து நின்றுள்ளது ,அதில் இருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் இவரது சடலம் மீட்க பட்டுள்ளது

      முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

      சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

      Posted in Uncategorized

      காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு – மரணத்தில் சந்தேகம்

      காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு – மரணத்தில் சந்தேகம்

      அவுஸ்ரேலியா குயின்லாந் பகுதியில் நேற்று காணாமல் போன இரண்டு வயது சிறுமி ஒருத்தி சடலமாக மீட்க பட்டுள்ளார்


      போலீசார் மக்கள்,மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதலின் பின்னர் மோப்ப நாய்களின் உதவியுடன் குறித்த சிறுமி சடலாமாக கண்டு பிடிக்க பட்டுள்ளார்

      இவரது மரணத்தில் சந்தேகம் நீடிப்பதாக தெரிவிக்கும் போலீசார் அது தொடர்பான தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

      Posted in Uncategorized

      திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய பிரபல நடிகர்

      திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய பிரபல நடிகர்

      தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிகர் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர். கடந்த 2011-ம் ஆண்டு இவருக்கும், ஆந்திராவின் பிரபல தொழிலதிபரின் மகள்

      ஸ்நேகா ரெட்டி என்பவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் மற்றும்

      பெண் குழந்தைகள் உள்ளனர். தெலுங்கு சினிமாவின் ‘ஸ்டார் கப்பிள்’ என்று சொல்லும் அளவுக்கு நட்சத்திர ஜோடிகளாக இருவரும் உள்ளனர்.

      மனைவியுடன் அல்லு அர்ஜுன்

      இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்நேகா ரெட்டி இருவரும் தங்களுடைய 10-ம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில்

      கொண்டாடி இருக்கிறார்கள். இதுதொடர்பான புகைப்படங்களை அல்லு அர்ஜுன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

      Posted in சினிமா

      சண்டைக்காட்சிகளில் சாகசங்கள் செய்த கார்த்திக்

      சண்டைக்காட்சிகளில் சாகசங்கள் செய்த கார்த்திக்

      மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை

      தயாரித்தவருமான டி.எம்.ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம் பாடல்களையும் எழுதி அசத்தியுள்ளார்.

      இந்த படத்தில் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா

      லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

      படம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது: இன்றைய நவீன காலத்தில் நம் கிராமத்து பண்பாடும், நாகரீகமும், உறவுகளும் மறைந்து வருகிறது. அதனை இந்த தலைமுறைக்கு

      தரும் படமாக இது உருவாகி உள்ளது. அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல நிறைய படங்கள் வந்திருந்தபோதும் இதில் ரத்தமும்,

      சதையுமான அந்த உறவை சொல்கிறோம். உயிரை விட மானம் பெரிது என்பதுதான தமிழர்களின் உச்சபட்ட நாகரீகம் என்பதை உணர்த்தும் படமாக இது இருக்கும்.

      சுகன்யா – கார்த்திக்

      படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சி பிரபல பாலிவுட் நடிகையை வைத்து மும்பையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்க இருக்கிறோம்.

      இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹார்லி டேவிட்சன் பைக்கில் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்துள்ளார். இன்றைக்கு நடிக்க வரும் இளம் நடிகர்களே இந்த

      காட்சிகளை நடிக்க தயங்குவார்கள் அப்படியான காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். அந்த சண்டைகாட்சிகள் படத்தில் பிரமாண்டமாக இருக்கும் என்றார்.

      Posted in Uncategorized

      26 வயது பெண்ணை 5-வது திருமணம் செய்துக்கொண்டார் 57 வயது நடிகர்

      26 வயது பெண்ணை 5-வது திருமணம் செய்துக்கொண்டார் 57 வயது நடிகர்

      பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ‘பேஸ் ஆப், கோஸ்ட் ரைடர், ஹான் இன் 60 செகண்ட்ஸ், ரைசிங் அரிசோனா,

      தி ராக்’ உள்பட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நிக்கோலஸ் கேஜ் நடித்து இருக்கிறார். ‘லீவிங் லாஸ் வேகாஸ்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்றார்.

      நிக்கோலஸ் கேஜுக்கு 57 வயது ஆகிறது. இவருக்கு 4 தடவை திருமணம் நடந்து விவாகரத்தில் முடிந்தது. முதலாவதாக 1995-ல் நடிகை பாட்ரிசியாவையும், இரண்டாவது 2002-ல் லிசா மேரி

      பிரெஸ்லியையும், 3-வதாக 2004-ல் ஆலீஸ் கிம்முவையும், 4-வதாக மேக்கப் கலைஞர் எரிகா கோய்கேவையும் திருமணம் செய்து

      விவாகரத்து பெற்றார். எரிகா கோய்கேவை திருமணமான 4-வது நாளிலேயே விவாகரத்து செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

      நிக்கோலஸ் கேஜ், ரிக்கோ ஷிபாடா

      இந்த நிலையில் தற்போது 57 வயதாகும் நிக்கோலஸ் தனது 26 வயது காதலி ரிக்கோ ஷிபாடாவை 5-வது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ரகசியமாக நடந்த இவர்கள் திருமணம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

      Posted in Uncategorized

      பல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா video

      பல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா

      மகளிர் தினத்தை முன்னிட்டு சாய் தன்ஷிகா நடித்து வரும் யோகி டா படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

      பல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா… வைரலாகும் வீடியோ
      சாய் தன்ஷிகா
      நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’.

      இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே,

      மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன.

      தற்போது இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தன்ஷிகா பல்டி அடிப்பது போன்ற ஒரு ஆக்‌ஷன் காட்சியை

      சிறப்பாக செய்துள்ளார். பெண்களால் எதையும் சாதிக்க இயலும் என்பதை வலுயுறுத்தவே பெண்கள் தினமான இன்று இக்காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

      Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

      சட்டசபை தேர்தல் – மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி.

      சட்டசபை தேர்தல் – மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி.

      தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன.

      தமிழக சட்டசபை தேர்தல் – மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி
      கமல்ஹாசன்
      சென்னை:

      தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

      இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 இடங்களிலும், சமக மற்றும் ஐஜேகே ஆகியவை தலா 40 இடங்களில்

      போட்டியிட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தாகி உள்ளது.

      இந்த ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொது செயலாளர் குமரவேல், சமக சார்பில் சரத்குமாரும், ஐஜேகே சார்பில் ரவி பச்சமுத்துவும் கையெழுத்திட்டனர்.