Posted in Uncategorized

கொரனோவால் பாதிக்க பட்ட 104 வயது மூதாட்டி நலம் பெற்று வீடு திரும்பினார்

கொரனோவால் பாதிக்க பட்ட 104 வயது மூதாட்டி நலம் பெற்று வீடு திரும்பினார்

கொரனோ நோயினால் பாதிக்க பட்டு மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த 104

வயது மூதாட்டி ஒருவர் அந்த நோயிலோ இருந்து நலம் பெற்று தற்போது தனது வீடு திரும்பினார்

இவருக்கு அங்குள்ள மருத்துவர்கள் தாதிமார் பலத்த கரகோஷம் எழுப்பி அவரை வாழ்த்தி

வழியனுப்பி வைத்தனர்

கொரனோ
கொரனோ
    Posted in உலக செய்திகள்

    அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு – பீதியில் கிராம மக்கள்

    அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு – பீதியில் கிராம மக்கள்

    தெற்கு அவுஸ்ரேலியா சிட்னி பகுதியில் திடீரென துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது ,இதன்பொழுது அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர்

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மற்றும் இராணுவம் வரவழைக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

    இந்த தாக்குதல்; இலக்கு எது என்பது இதுவரை தெரியவரவில்லை ,தொடர்ந்து விசாரணைகள்

    இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் உலங்கு வானூர்திகள் குறித்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன

    அங்கு தொடர்ந்து ஒருவித பதட்டம் நிலவுகிறது

    துப்பாக்கி சூடு
    துப்பாக்கி சூடு
      Posted in Uncategorized

      ஈரானில் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து

      ஈரானில் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து

      ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் நடைபெறும் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது.

      ஈரானில் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து
      ஈரான்

      அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

      தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கி கொள்ளவும் இரு தரப்பிலும் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

      இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்த நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்து கொள்ளலாம், எந்த அளவுக்கு அதை செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

      அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது கையெழுத்தான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி வந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.

      அதுமட்டும் இன்றி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும் ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார்.

      அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. அதன்படி தடை விதிக்கப்பட்ட போர்டோ நகர நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியது.

      மேலும் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலையை ஈரான் கட்டியது. ஈரான் இந்தப் புதிய ஆலையை கட்டுவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

      இதனிடையே அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

      இது தொடர்பாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இரு நாடுகளுக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

      ஆனாலும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளுக்கு திரும்பாமல் யுரேனியம் செறிவூட்டலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

      அதன் ஒரு பகுதியாக நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டும் புதிய மேம்பட்ட ஐ.ஆர்.6 ரக மையவிலக்குகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது‌.

      இந்தநிலையில் நேற்று நாதன்ஸ் நகரின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது.‌ இந்த விபத்து காரணமாக ஆலையின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்தது. மேலும் இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது.‌

      எனினும் இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரானின் சிவிலியன் அணுசக்தி திட்டத்தின் செய்தி தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வெண்டி கூறினார்.

      மேலும் ஆலையில் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

      வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பெஹ்ரூஸ் கமல்வெண்டி கூறினார்.

      அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளிடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் இந்த விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

      கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த ஆலையில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோது பயங்கர தீ விபத்து நேரிட்டதும், இதில் பல லட்சம் மதிப்புள்ள நவீன எந்திரங்கள் எரிந்து நாசமானதும், இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என ஈரான் குற்றம் சாட்டியதும் நினைவு கூரத்தக்கது.

      உலக
      உலக
        Posted in சினிமா

        இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

        இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

        அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.

        இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்
        உதயநிதி ஸ்டாலின்


        நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது.

        இந்நிலையில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

        இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.

        படக்குழுவினருடன் உதயநிதி ஸ்டாலின்

        இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும்,

        வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது

        சினிமா
        சினிமா
          Posted in சினிமா

          அமெரிக்காவில் குடும்பத்துடன் ‘கர்ணன்’ படம் பார்த்த தனுஷ்

          அமெரிக்காவில் குடும்பத்துடன் ‘கர்ணன்’ படம் பார்த்த தனுஷ்

          அமெரிக்காவில் கர்ணன் படம் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடியதைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

          அமெரிக்காவில் குடும்பத்துடன் ‘கர்ணன்’ படம் பார்த்த தனுஷ்
          கர்ணன் படத்தின் போஸ்டர்


          மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

          அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இப்படம் முதல் நாளில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

          இந்நிலையில், தற்போது தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள தனுஷ், தனது மனைவி மற்றும் மகன்களுடன், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கில் ‘கர்ணன்’ படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார்.

          தனுஷ்

          அமெரிக்க திரையரங்குகளில் கர்ணன் படம் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடியதைக் கண்டு

          தான் மகிழ்ச்சியடைந்ததாக தயாரிப்பாளர் தாணுவிடம் நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

            Posted in Uncategorized

            தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா

            தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா

            விமான பயணத்தின் போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

            தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

            இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

            அந்தவகையில், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்.

            விமான பயணத்தின் போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

            நயன்தாரா, விக்னேஷ் சிவன்

            கேரளாவில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

            அதற்காக தான் அவர்கள் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு ஓணம் பண்டிகையை கொண்டாட இருவரும், இதேபோல் தனி விமானத்தில் கேரளா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

            நடிகை நயன்தாரா, தற்போது ரஜினி – சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார்.

            இதுதவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்து வருகிறார்.

            நயன்தாரா, விக்னேஷ் சிவன்
            நயன்தாரா, விக்னேஷ் சிவன்
            Posted in மருத்துவம்

            தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

            தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

            ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம்.


            ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என

            சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம். அவற்றை பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி அகற்ற பல தீர்வுகள் உள்ளன. அவை பற்றிய தொகுப்பு..

            தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

            தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யை தேய்த்து நீராவியை முகத்தில் சிறிது நேரம் படிய விடலாம். நாளடைவில் முகத்தில் உள்ள துளைகளும், தழும்புகளும் மறையத்தொடங்கும்.

            சந்தன பவுடரை ரோஸ்வாட்டர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம்.

            பால் அல்லது நீரில் பாதாம் பருப்பை 12 மணிநேரம் ஊறவைத்து அதன் தோலை அகற்றி விட்டு ரோஸ்வாட்டர் விட்டு அரைத்து தழும்புகளின் மீது தடவி வரலாம்

            எலுமிச்சை சாற்றில் பஞ்சை நன்றாக ஊறவைத்து மெதுவாக முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும்.

            தோலில் மேற்பரப்பில் சாறு நன்றாக படியும் வகையில் சிறிது நேரம் உலர வைத்து விட்டு பின்னர்

            முகத்தை கழுவிக்கொள்ளலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தழும்புகளை மறைய செய்வதுடன் தோலின் இயற்கை நிறத்தை பாதுகாக்கவும் உதவும்.

            தீக்காயம் நன்றாக ஆறிய பிறகு இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும். எலுமிசை சாற்றை தினமும், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். பாதாம் ஆயில்

            , ஆலிவ் ஆயில் இவற்றுள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தியும் தினமும் இருமுறை தடவி மசாஜ் செய்து வரலாம். அதனால் தழும்புகள் படிப்படியாக மறையத்தொடங்கும்.

            கசகசா, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து காயம் காரணமாக ஏற்பட்ட தழும்புகள் மீது தேய்த்து குளித்து வரலாம். நாளடைவில் தழும்புகள் மறையும்.

            தக்காளியை தோல் உரித்து மிக்சியில் இட்டு அரைத்து எடுத்து தினமும் இரவு நேரத்தில் பிரசவ தழும்புகள் உள்ள பகுதியில் தடவ வேண்டும்.

            காலையில் குளிர்ந்த நீரில் கழுவ விடலாம். மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்த முறையை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

            சோற்று கற்றாழையின் மேல் தோலை நீக்கி அதில் உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து அறுவை சிகிச்சை தழும்புக்கு மேல் நன்றாக தடவவும்.

            தினமும் இரவில் தடவி காலை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நாளடைவில் தழும்பு மறைந்து விடும்

              Posted in சினிமா

              ராக்கி சாவந்த்யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

              ராக்கி சாவந்த்யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

              தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

              யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
              யோகி பாபு


              தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

              அந்த புகார் மனுவில், நடிகர் யோகிபாபு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

              புகார் மனு விவரம் வருமாறு:-

              யோகி பாபு

              நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் முடிதிருத்தும்

              தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன.

              முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள

              இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

              இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

              யோகி பாபு
              யோகி பாபு
              Posted in Uncategorized

              செல்பி எடுக்க வந்த ரசிகரை விரட்டிய நடிகை

              செல்பி எடுக்க வந்த ரசிகரை விரட்டிய நடிகை

              பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்த போது அவரை கண்டித்து அனுப்பி இருக்கிறார்.

              செல்பி எடுக்க வந்த ரசிகரை விரட்டிய நடிகை
              ராக்கி சாவந்த்


              பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குகிறார். ஏற்கனவே மல்யுத்த

              வீராங்கனையுடன் மோதி காயம் அடைந்தார். இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஶ்ரீ தத்தாவை கண்டித்தார். சமீபத்தில் லண்டன் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டதாகவும் அறிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமானார்.

              ராக்கி சாவந்த்

              இந்த நிலையில் மும்பையில் ராக்கி சாவந்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஓடிச்சென்று அவருடன் செல்பி எடுக்க முயன்றார்.

              அந்த ரசிகர் முக கவசம் அணியாததால் தன்னுடன் புகைப்படம் எடுக்க ராக்கி சாவந்த் மறுத்ததுடன் அவரை

              கடுமையாக கண்டித்து விரட்டவும் செய்தார். அந்த ரசிகரை பார்த்து முக கவசம் அணியாமல் என்னுடன் செல்பி எடுக்க முடியாது.

              முக கவசம் அணியுங்கள். உங்களை போன்றவர்களால்தான் மும்பையில் கொரோனா பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முக கவசம் அணியாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

              நடிகை,சினிமா,
              நடிகை,சினிமா,
                Posted in சினிமா

                திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க நடிகை

                திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க நடிகை

                தமிழில் காதலில் விழுந்தேன், நீர் பறவை, வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த சுனைனா, திருமணத்தை பற்றி பேசுவதை நிறுத்துங்க என்று கூறியிருக்கிறார்.

                திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க… சுனைனா வருத்தம்
                சுனைனா


                காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து நீர் பறவை, வம்சம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் சுனைனாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

                சமீபத்தில் டிரிப் என்னும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

                இந்நிலையில் சுனைனா அளித்த பேட்டியில், ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.

                பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குனர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது” என்கிறார் சுனைனா.

                சுனைனா

                தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து வெளியாகும் செய்திகளை மறுத்த அவர் இவை அனைத்தும்

                வந்ததிகளே என்றும் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

                திரை வாழ்க்கையில் கவனம் செலுத்துவதாக கூறிய சுனைனா, தனது திருமணம் பற்றி பேசுவதை விட்டுவிட்டு தனது திரைப்படங்கள் பேச வேண்டும்’ என்றார்.

                  Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                  மூன்று பிள்ளைகளை வெட்டி கொன்ற தாய் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்

                  மூன்று பிள்ளைகளை வெட்டி கொன்ற தாய் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்

                  அமெரிக்கா லொஸ் அஞ்சல் பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடரில் தாய் ஒருவர் தனது மூன்று

                  பிள்ளைகளை மிக கோரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                  கடந்த தினம் காலை ஒன்பது முப்பது மணியளவில் இந்த படுகொலையை வெறியாட்டத்தை அவர் அரங்கேற்றியுள்ளார்

                  இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                  ,கைது செய்ய பட்ட தாயாரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் நீதி விசாரணைக்கும் அவர் உட்படுத்த பட்டுளளார் ,

                  மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                  மூன்று பிள்ளைகளை வெட்டி கொன்ற தாய்
                  மூன்று பிள்ளைகளை வெட்டி கொன்ற தாய்
                    Posted in உலக செய்திகள்

                    இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் -7 பேர் மரணம்

                    இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் -7 பேர் மரணம்

                    இந்தோனேசியாவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி ஏழுபேர் மரணமாகியுள்ளனர்

                    ,மேலும் பல வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளது


                    இந்த நில அதிர்வு 6.0 ஒன்றாக பதிய பெற்றுள்ளது , இதே நாட்டில் தொடராக நில நடுக்கம் ஏற்பட்டு

                    வருகின்றமை அந்த மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

                    நிலநடுக்கம்
                    நிலநடுக்கம்
                      Posted in உலக செய்திகள்

                      ஆர்ப்பாட்ட காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு -82 பேர் மரணம்

                      ஆர்ப்பாட்ட காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு -82 பேர் மரணம்

                      மியான்மாரில் அரச இராணுவத்தினர் அப்பாவி போராட்ட காரர்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை

                      நடத்தினர் ,இதில் 82 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதுடன் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

                      தொடர்ந்து இராணுவத்தினர் மக்கள் மீது அடக்குமுறை தாக்குதலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        பிரிட்டன் இளவரசர் உடல் 17 நல்லடக்கம்

                        பிரிட்டன் இளவரசர் உடல் 17 நல்லடக்கம்

                        பிரிட்டன் இளவரசர் பிலிப் அவர்கள் தனது 99 தாவது வயதில் மரணமானார் ,இவரது உடல் ராயல்

                        குடும்பத்தின் முறைப்படி எதிர்வரும் 17 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப் படும் என குடும்பம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது

                        இவரது இறுதி கிரியைகளின் பொழுது 800 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்க பட்டுள்ளனர்

                        ,மேலும் மிக நெருங்கிய உறவினர் முப்பது பேர் மட்டும் நல்லடக்கம் செய்யப் படும் பகுதியில் அனுமதிக்க படுகின்றனர்

                        அதிக வேண்டியவர்கள் வருகை தரவுள்ளதால் ஆளும் பிரதமர் போரிஸ் அங்கு செல்லாது

                        தவிர்த்து கொள்கிறார் என தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                          Posted in சீமான் பேச்சு

                          நான் உன்னை காதலித்தேன் – என்னை காதலி – வீடியோ

                          நான் உன்னை காதலித்தேன் – என்னை காதலி – வீடியோ

                          சீமான் தேர்தலின் இறுதி பொழுது பேசிய அசத்தல் பேச்சு ,வெல்ல வேண்டும் ஏன் எதற்கு

                          .,என்பதை தமிழன் சிந்திக்க செயல் நிறுத்த வேண்டிய களம் இது

                          click here video

                          Posted in சீமான் பேச்சு

                          மேடையில் கண்கலங்கிய சீமான் பாரதிராஜா உருக்கமான பேச்சு video

                          மேடையில் கண்கலங்கிய சீமான் பாரதிராஜா உருக்கமான பேச்சு video

                          அண்ணன் சீமான் அவர்களை வெற்றி பெற செய்வதின் மூலம் திருவெற்றியூர் வருங்கால வரலாற்றில் இடம்பெறும்.👍


                          இந்த வீடியோவைப் பார்க்கிற எங்களையும் அறியாமல் கண்ணீர் வருகிறது. அது உணர்ச்சி வயப்பட்டு வருவதில்லை. ஆனந்தக் கண்ணீர்

                          ஆண்மகன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றவரைமுறையூடன் வாழ்பவர் சிமான்ஜீ கண்ணீர்வேண்டாம்

                          வெல்வது உறுதி சத்யம் எப்போதும் ஜெய்க்கும். பாரதிராஜா ஐயா அவர்கலுக்கு என்தலைகுனிந்த வணக்கங்கள் . நாம் தமிழர். ஐ. லவ் லைக் சீமான்ஜீ

                          click here video

                          https://www.youtube.com/watch?v=Mg9Kei0XLZI
                          Posted in மருத்துவம்

                          கழுத்தை சுற்றி கருப்பாக இருக்கா அப்ப இத போடுங்க

                          கழுத்தை சுற்றி கருப்பாக இருக்கா? அப்ப இத போடுங்க

                          சுகாதாரத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றாலும் அல்லது ஒவ்வாமை காரணமாகவும் கழுத்தை சுற்றிலும் கருமை வரலாம். அப்படி வந்துவிட்டால் எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.

                          கற்றாழையில் சதையை மட்டும் தனியாக எடுத்து தினமும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து ஊற வையுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சரியாகும்.

                          ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து கழுத்தை சுற்றிலும் தடவி வர கருமை நீங்கும்.

                          பாதாம் எண்ணெயை இரவு தூங்கும் முன் கழுத்தை சுற்றிலும் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை சுடுதண்ணீரில் கழுவிவிடுங்கள். தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

                          தயிரை கழுத்தை சுற்றிலும் தடவிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும்.

                          கருமை நிறத்தை நீக்குவதில் உருளைக்கிழங்கு சாறு ஆற்றல் மிக்கது. எனவே உருளைக்கிழங்கு சாறை கழுத்தை சுற்றிலும் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் தண்ணீரில் கழுவிவிடுங்கள்.

                          Posted in மருத்துவம்

                          புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்

                          புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்

                          புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.


                          காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்கு செல்லுதல், ஐ.டி வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது.

                          புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

                          ஆய்வினை மேற்கொண்டவர்கள் 40 முதல் 69 வயதுள்ள 5 லட்சம் பேரை ஆய்வுக்குட்படுத்தினர். இதயம் மற்றும் ரத்த நாள நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததை தொடக்கத்தில்

                          உறுதிப்படுத்திக் கொண்டனர். இவர்களை 7 வருடங்கள் வரை தொடர்ந்து கண்காணித்ததில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு முதல் தடவை ஏற்பட்டது தெரிய வந்தது. அவர்களில், 29%-வினர் பெண்களாக இருந்தனர்.

                          புகைப்பழக்கம் இல்லாத ஆண்கள், அப்பழக்கம் உடைய ஆண்கள் ஆகியோரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிகரெட் பழக்கம் உடைய ஆண்களுக்கு குறைந்தது 2 தடவையாது மாரடைப்பு

                          வரும் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதேவேளையில், பெண்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புகைப்பழக்கம் அற்ற மகளிரைவிட, சிகரெட் பழக்கம் உள்ள பெண்களுக்கு இது 3 தடவையாக அதிகமாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

                          இந்த ஆய்வின் மூலம், புகைப்பிடித்தல் காரணமாக ஆண்களைவிட பெண்களுக்கு 83% உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதும், டைப்-1 நீரிழிவு நோயின் தாக்கம் ஆடவரைவிட பெண்களுக்கு 3

                          மடங்கு அதிகமாகவும், டைப்-2 நீரிழிவு பாதிப்பு, மகளிருக்கு ஆண்களைவிட 47%-ம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது.

                          ‘‘பெண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து இதன் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. இதன்மூலம் சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கு உதவ முடியும் என்பதையும் வலியுறுத்துவதாக

                          இந்த ஆய்வு அமைந்தது’ என்கிறார்கள் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஆய்வுக்குழுவினர். புதுமையான இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டனில் இருந்து வெளியாகும் BMJ என்ற இதழில் வெளியாகின.

                          Posted in மருத்துவம்

                          பெண்களிடம் இருக்கும் ஆபத்தான பழக்கங்கள்

                          பெண்களிடம் இருக்கும் ஆபத்தான பழக்கங்கள்

                          நீரின்றி அமையாது உலகு என்பது போல பெண்ணின்றி அமையாது குடும்பம்.ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தின் பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

                          பொதுவாகவே பெண் என்பவள் மற்றவர்களை கவனித்துக்கொண்டு தன் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் எப்பொழுதுமே கண்டுகொள்வதில்லை.

                          அதிலும் முக்கியமாக இந்த 5 பழக்கங்களை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. அதைப்பற்றி என்ன என்பதனை பார்ப்போம்.

                          1.வேலைச்சுமையால் எப்பொழுதும் வேலையையே நினைத்துக்கொண்டு இருப்பதாலும் அவர்கள் நீர் அருந்துவதை மறந்து விடுகின்றனர்.ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகக் குறைவான நீரை

                          அருந்துகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது. தாகத்தின் போது நம் உடலுக்கு ஏற்ப போதுமான நீரை அவ்வப்போது குடித்து விடவேண்டும்.

                          1. வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகட்டும் வீட்டில் இருக்கும் பெண்கள் ஆகட்டும் காலை உணவு என்பதனை நேரத்திற்கு பெண்கள் அதிகம் எடுத்துக்கொள்வது இல்லை.
                          2. இதனால் அவர்கள் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.முடிந்த அளவு காலை உணவை நேரத்திற்கு எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

                          பெண்களிடம் இருக்கும் ஆபத்தான பழக்கங்கள்

                          1. நேரமின்மையால் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி பெண்கள் செய்வது இல்லை. வீட்டு வேலை செய்வதே உடற்பயிற்சி தானே என்றும் கேட்கும் பெண்களுக்கு, அது உடற்பயிற்சி அல்ல
                          2. . வீட்டு வேலையினால் உங்க கலோரிகள் எரிக்கப்படுவது இல்லை. எனவே பெண்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சியை மேற்கொள்வது மிக மிக அவசியமாகிறது.இது உங்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகிறது.
                          3. பெண்கள் நொறுக்கு தீனி அதிகமாக சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் நொறுக்கு தீனியை வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பர்.
                          4. இதனால் உடலில் கொழுப்பு அதிகரிப்பது போன்ற பல உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
                          5. பெண்களைப் பொறுத்தமட்டில் ஒரே மாதிரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வர். நியூட்ரிஷன் சார்ந்த பழவகைகளை அவர்கள் பெரும்பாலும் எடுத்துக்கொள்வது இல்லை.
                          6. ஆனால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் பழங்களை அதிகம் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மாதவிடாயின் போது உதிரப்போக்கு ஏற்பட்டு மிகவும் வலிமை இழந்து போகாமல் இருக்க நீங்கள் உண்ணும் பழ வகைகள் உங்களை பேணிக்காக்கும்.

                          பெண்களே நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உங்கள் வாழ்வில் இந்த அறிந்து பழக்கங்களை கட்டாயமாக்க முயற்சி செய்யுங்கள்.

                            Posted in சினிமா

                            தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை.

                            தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை.

                            கன்னடம் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர் நடிகை சைத்ரா. இவர் கடந்த மாதம் நாகார்ஜூனன் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டர்.

                            இருவரும் கடந்த சில வருடங்கள் காதலித்து வந்ததாகவும், அதன் பின்னரே திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கூறப்பட்டது.

                            இந்த நிலையில் திடீரென நடிகை சைத்ரா தனது வீட்டில் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

                            இதனை அடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவருடைய தற்கொலை முயற்சி கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                            சைத்ரா

                            இவர் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் நடிகை சைத்ராவை தொழிலதிபர் நாகார்ஜூனன்

                            மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணமாகி ஒரு மாதம் ஆகியும் இன்னும் இருவரும் ஒன்றாக வாழவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

                            வரும் நடிகை சைத்ராவின் வாக்குமூலத்தை வாங்கிய பின்னரே இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.