Posted in Uncategorized

மனைவியை குத்திக்கொன்று கணவன் தற்கொலை-அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்

மனைவியை குத்திக்கொன்று கணவன் தற்கொலை-அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்

மராட்டிய மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார் (வயது 32). இவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆரத்தி (வயது 30). குடும்பத்தலைவி.

இந்த தம்பதியருக்கு 2014-ம் ஆண்டு டிசம்பரில் திருமணமானது. அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் நார்த் ஆர்லிங்டனில்

உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஆரத்தி மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு பாலாஜி, ஆரத்தி தம்பதியரின் மகள் வீட்டின் பால்கனியில் நின்று அழுதுகொண்டு இருந்திருக்கிறாள்.

இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தினர் என்னவோ ஏதோ என பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, பாலாஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.

போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

கணவன், மனைவி இருவருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஆரத்தியை, பாலாஜி கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இதுபற்றி அம்பாஜோகையில் உள்ள பாலாஜியின் தந்தையும், தொழில் அதிபருமான பரத் ருத்ரவாருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பரத் ருத்ரவார் கூறியதாவது:-

உள்ளூர் போலீசார் நடந்த துயர சம்பவம் குறித்து எனக்கு தெரிவித்தனர். என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னர் அது பற்றிய தகவல்களை தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

என் மருமகள் 7 மாத கர்ப்பிணி. நாங்கள் அமெரிக்கா சென்று அவர்களுடன் இருந்து விட்டு வந்தோம். மீண்டும் அமெரிக்காவுக்கு அவர்களை பார்க்கச்செல்ல திட்டமிட்டிருந்தோம்.

இந்த நிலையில்தான் இப்படி ஒரு துயரம் நடந்து விட்டது. இதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் மகிழ்ச்சியான தம்பதியராகத்தான் இருந்து வந்தார்கள்.

எல்லா சட்டநடைமுறைகளும் முடிந்து அவர்களது உடல்களை எடுத்து வர 10 நாட்கள் வரை ஆகலாம். எனது பேத்தி, எனது மகனின் நண்பர் வீட்டில் இருக்கிறாள். என் மகனுக்கு அங்கு நிறைய இந்திய நண்பர்கள் உள்ளனர்.

அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்
அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்
    Posted in Uncategorized

    இஸ்ரேல் எவ்வேளையும் தாக்கலாம் – உசார் நிலையில் ஈரான் இராணுவம்

    இஸ்ரேல் எவ்வேளையும் தாக்கலாம் – உசார் நிலையில் ஈரான் இராணுவம்

    ஈரான் எல்லை வழியாக எதிரிகள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் முப்படைகளும் தமது கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளன

    தரை,வான்,மற்றும் கடல் பகுதிகள் உஷார் நிலையில் வைக்க பட்டுள்ளன
    ஈரான் அணு

    உலைகள் மீது இஸ்ரேல்,திடீர் தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ,எல்லை பகுதிகளில் ஏவுகணைகள்

    தயார் நிலையில்,வைக்க பட்டுள்ளதுடன் ,விமானங்கள் மற்றும் கப்பல் படையின் விசேட அணிகளும் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன

    இந்த அதி உயர் உச்ச கட்ட விழிப்பில் ஈரான் இராணுவம் வைக்க பட்டுள்ளது எனின் ,உளவுத்துறைக்கு

    இஸ்ரேல் பெரும் தாக்குதல் ஒன்றுக்கு தயராகி வருகிறது என்கின்ற உளவு தகவல் கிடைத்துள்ளதால் இந்த பிரகடனத்தை அது செய்து வருகின்றது எனலாம்

    ஈரான் இராணுவம்
    ஈரான் இராணுவம்

      Posted in Uncategorized

      வீழ்ந்து நொறுங்கிய துருக்கி இராணுவ விமானம் – விமானிகள் தப்பினர்

      வீழ்ந்து நொறுங்கிய துருக்கி இராணுவ விமானம் – விமானிகள் தப்பினர்

      துருக்கி நாட்டுக்கு சொந்தமான இராணுவ விமானம் ஒன்று Aegean கடல் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது


      இதன் பொழுது அதில் பயணித்த இரு விமானிகளும் காப்பாற்ற பட்டுள்ளனர்

      மேற்படி விபத்து தொடர்பில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,விமானம் சுட்டு

      வீழ்த்த பட்டதா அல்லது இயந்திர கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியதா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

      Turkish military aircraft crashes
      Turkish military aircraft crashes
        Posted in உளவு செய்திகள்

        இஸ்ரேல் இராணுவ முகாமுக்குள் நுளைந்து ஆயுதங்களை திருடி சென்ற மர்ம நபர்

        இஸ்ரேல் இராணுவ முகாமுக்குள் நுளைந்து ஆயுதங்களை திருடி சென்ற மர்ம நபர்

        உலகின் முதல்தர உளவுத்துறையாக வலம் வரும் இஸ்ரேல் மொசாட் உள்ள நாட்டுக்குள் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

        Paratroopers Brigade இராணுவ முகாமுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த முக்கிய துப்பாக்கிகளை

        சோதனை செய்து பார்க்க வேண்டும் என கூறி எடுத்து சென்றுள்ளார் ,மேற்படி விடயம் பெரும் அதிர்ச்சியை இராணுவ வட்டத்துக்குள் ஏற்படுத்தியுள்ளது

        குறித்த நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை ,மேற்படி விடய தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

        ஆயுதங்களை திருடி
        ஆயுதங்களை திருடி
        Posted in உலக செய்திகள்

        சிவப்பு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல்

        சிவப்பு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல்

        இந்த வார முற் பகுதியில் சிவப்பு கடல் பகுதியில் வைத்து ஈரானுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது

        தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக உலங்குவானூர்தி ஒன்று பறப்பில் ஈடுபட்டு

        கண்காணித்துள்ளது ,அதன் பின்னர் ஒருமணி இடைவெளிக்குள் இரண்டு வேக தாக்குதல் படகுகள் குறித்த சரக்கு கப்பலை சுற்றிவளைத்து தாக்கின .

        மேற்படி தாக்குதல் சம்பவம் ராடர் ,சாட்லைட் உதவியுடன் கண்டுபிடிக்க பட்டுள்ளது

        குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீது நாம் பழிவாங்கும் தாக்குதல்களை தொடுப்போம் என ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது நாடுகளுக்கு இடையில் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது

        இஸ்ரேல் மேற்படி தாக்குதலை நடத்தியுள்ளதாக முக்கிய உளூவுத்துறை ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

        இஸ்ரேல் தாக்குதல்
        இஸ்ரேல் தாக்குதல்
          Posted in Uncategorized

          நெதர்லாந்தில் AstraZeneca ஊசி பாவனைக்கு தடை – அரசு அதிரடி அறிவிப்பு

          நெதர்லாந்தில் AstraZeneca ஊசி பாவனைக்கு தடை – அரசு அதிரடி அறிவிப்பு

          உலைகளில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த புதிய தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்க பட்டன

          இவற்றில் மக்களுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்ற தடுப்பூசிகளில் AstraZeneca முன்னிலை பிடித்துள்ளது

          இந்த ஊசியினை செலுத்தி கொண்டவர்களில் பலருக்கு இரத்த உறைதல் ,ஏற்பட்டுள்ளது ,அதனால் கால் ,கைகள்,வீங்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மக்கள் இறந்துள்ளனர்

          இதுவரை உத்தியோக பூர்வமாக 12 பேர் இவ்விதம் இரத்த உறைவால் இறந்துள்ளதாக தெரிவிக்க

          படுகிறது ,அப்படி என்றால் உத்தியோக பூர்வமற்ற நிலையில் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்பதே மக்கள் பேசு பொருளாக இடம்பெறுகிறது

          மேலும் சில மாதங்கள் கழிந்து செல்ல மேலும் தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது

          ,அதனால் நெதர்லாந்தில் அறுபது வயதுக்கு கீழானவர்களு இந்த ஊசி செலுத்திட சுகாதர அமைச்சு தடை விதித்துள்ளது

            Posted in Uncategorized

            இன்டர்போல் வேட்டை – 500 பேரை கடத்திய 195 எய்னசிகள் கைது

            இன்டர்போல் வேட்டை – 500 பேரை கடத்திய 195 எய்னசிகள் கைது

            லண்டன்,மற்றும் ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தி வந்த மிக பெரும் வலைய
            மைப்பு ஒன்றை சர்வதேச போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்

            பிரிட்டனை இலக்கு வைத்து மிக பெரும் மனித கடத்தலை மேற் கொண்டு வந்த முக்கிய சூத்திரதாரிகளே இவ்வாறு மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

            ஆப்ரிக்கா போலீசார் இணைந்து இந்த வேட்டையை நடத்தியுள்ளனர் ,ஐரோப்பாவுடன் இருந்து பிரிட்டன் விலகிய

            நிலையில் கடல்வழியாக பிரிட்டனுக்கும் நாள் தோறும் பல நூறு அகதிகள் நுழைந்து வந்த நிலையில் இந்த

            வேட்டையை பிரிட்டன் அரசு மேற்கொண்டது ,கொரனோவில் மக்களை வீடுகளுக்குள்

            முடக்கி,சர்வதேச உளவுத்துறையுடன் இணைந்து இந்த எய்னசிகளுக்கு ஆப்படித்துள்ளது பிரிட்டன் என்பதே மேற்படி செய்திகள் இடித்துரைக்கின்றன

              Posted in சினிமா

              எனக்கு கொரோனா இல்லை – ராதிகா

              எனக்கு கொரோனா இல்லை – ராதிகா

              தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

              இந்நிலையில் ராதிகா சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

              எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா இரண்டு நாட்களாக எந்த பதிவும் செய்யாததால்,

              கொரோனா தான் காரணம் என்று ரசிகர்களும், ராதிகா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் பதிவு செய்து வந்தார்கள்.

              ராதிகாவின் பதிவு

              இந்நிலையில் ராதிகா இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், அனைவரின் அன்புக்கும் நன்றி. எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லாம் இல்லை.

              தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு உடம்பு வலி மட்டுமே. என் உடல்நலம் மற்றும் வழக்கு குறித்து ஆன்லைன்

              மீடியாக்கள் கண்டதையும் எழுதுகின்றன. நாங்கள் மேல் நீதிமன்றங்களில் முறையிடுவோம். நான் வேலைக்கு திரும்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

                Posted in Uncategorized

                மூச்சுதிணறலால் அவதி… நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

                மூச்சுதிணறலால் அவதி… நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

                மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரான நடிகர் கார்த்திக்குக்கு, கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென உடல்

                நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

                இதனை தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில்

                கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்

                அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கார்த்திக்குக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

                அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என்று

                தெரியவந்த போதிலும் மூச்சுத்திணறல் சரியாகாமலேயே உள்ளது. இதை தொடர்ந்து டாக்டர்கள் கார்த்திக் உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள்

                கார்த்திக்
                கார்த்திக்
                  Posted in சினிமா

                  தனுஷ் பட நடிகைக்கு கொரோனா.

                  தனுஷ் பட நடிகைக்கு கொரோனா.

                  மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ்

                  இயக்கி உள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

                  ஐஸ்வர்யா லட்சுமி

                  இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு பாசிடிவ் வந்துள்ளது.

                  இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கை முறைகளையும் அவர் எடுத்துள்ளார்

                  Posted in சினிமா

                  ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி

                  ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி

                  நடிகர் விஜய் சேதுபதி, தனது ரசிகரின் குழந்தையைக் கொஞ்சி, தலையில் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

                  ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி
                  விஜய் சேதுபதி


                  தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளன. இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

                  இவ்வாறு பிசியான நடிகராக வலம் வந்தாலும், ரசிகர்கள் மீது தீராத அன்பு கொண்டவர் விஜய் சேதுபதி. அவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார்.

                  விஜய் சேதுபதி

                  இந்நிலையில் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு விஜய் சேதுபதியிடம் கேட்டுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று அந்த ஆண் குழந்தைக்கு

                  துருவன் என பெயர் சூட்டியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி, அந்த ரசிகரின் குழந்தையைக் கொஞ்சி, தலையில் முத்தமிடும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது

                  Posted in Uncategorized

                  தாக்கினால் கடைசிவரை விடமாட்டோம் – சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை

                  • தாக்கினால் கடைசிவரை விடமாட்டோம் – சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை

                  சீனா, தைவான் நாட்டை தனது சொந்த பிரதேசமாக அறிவித்து அமைதியான முறையில் அல்லது ராணுவ பலத்தால் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது.

                  எங்களை தாக்கினால் கடைசிவரை விடமாட்டோம் – சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை

                  சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. ஆங்காங் நாட்டை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

                  அதேபோல் தென் சீன கடல் பகுதியில் முழு ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து வருகிறது. இதனால் தென் சீன கடலில் ராணுவ கட்டமைப்புகளை பெருமளவில் அமைந்துள்ளது.

                  சீனா, தைவான் நாட்டை தனது சொந்த பிரதேசமாக அறிவித்து அமைதியான முறையில் அல்லது ராணுவ பலத்தால் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது.

                  இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை. தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து வரும், அமெரிக்கா, தைவானுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது. மேலும் தைவானுடன் அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டது.

                  இது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த 5-ந் தேதி சீனாவின் 10 போர் விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டது.

                  இந்த நிலையில் சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா, எங்களை தாக்கினால் கடைசி வரை விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

                  இதுகுறித்து தைவான் வெளியுறவு மந்திரி ஜோசப் வூ கூறியதாவது:-

                  நாங்கள், எங்களை தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறோம். அதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. நாங்கள் போரில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவோம். தேவைப்பட்டால் எங்களை தற்காத்து கொள்ள கடைசி நாள் வரை போராடுவோம்.

                  தைவானில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சீனா அங்கீகரிக்கவில்லை.

                  அவர்கள் (சீனா) ஒருபுறம் தங்களது ஆறுதல்களை அனுப்புவதன் மூலம் தைவான் மக்களை கவர்ந்திழுக்க விரும்புகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் தைவான் மக்களை அச்சுறுத்துவதை நோக்கமாக கொண்டு தைவானுக்கு அருகில் தங்களது ராணுவ விமானங்களையும், ராணுவ கப்பல்களையும் அனுப்புகிறார்கள்.

                  சீனர்கள், தைவான் மக்களுக்கு மிகவும் கலவையான சமிக்கைகளை அனுப்புகிறார்கள். அதை நான் தோற்கடிப்பதாகவே வகைப்படுத்துவேன்.

                    Posted in Uncategorized

                    இந்தோனேசியாவில் 13 பேருக்கு மரண தண்டனை

                    இந்தோனேசியாவில் 13 பேருக்கு மரண தண்டனை

                    இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் 13 பேரைக் கொண்ட ஒரு கும்பல் சிக்கியது.

                    இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை

                    இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தியதாக ஒரு பாகிஸ்தானியர், 3

                    ஈரானியர், 9 இந்தோனேசியர்கள் என 13 பேரைக்கொண்ட ஒரு கும்பல் சிக்கியது. அத்துடன் 400 கிராம் போதைப்பொருளும் (மெத்தாம்பேட்டமைன்) சிக்கியது. இவர்கள் கைது செய்யப்பட்டு,

                    மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுகபூமி நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கருதி, 13 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

                    இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு திட்டம் போட்டுக்கொடுத்த ஈரானியருக்கு, அவரது மனைவியுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில்

                    போதைப்பொருள் கடத்தலில் ஒரே நேரத்தில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது. தண்டிக்கப்பட்ட அனைவரும் அந்த நாட்டு வழக்கப்படி சுட்டுக்கொல்லப்படுவார்கள்.

                      Posted in உலக செய்திகள்

                      ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார் – அமெரிக்கா

                      ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார் – அமெரிக்கா

                      ஈரான் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்து போட்டன.

                      ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார் – அமெரிக்கா அறிவிப்பு

                      ஈரான் 2015-ம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்து போட்டன. முழுமையான கூட்டு செயல்திட்டம்

                      என்றழைக்கப்படுகிற இந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிடவும், யுரேனியம் கையிருப்பை 15 ஆண்டுகளில் குறைக்கவும், அதற்கு பதிலாக

                      அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின்மீதான பொருளாதார தடைகளை திரும்பப்பெறவும் வழிவகை செய்துள்ளது.

                      ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து, அவருக்கு பின்னர் வந்த டிரம்ப் காலத்தில் (2018) அமெரிக்கா விலகியது. இப்போது அமெரிக்காவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜோ பைடன் ஜனாதிபதியாகி இருக்கிறார். இந்த நிலையில், அணுசக்தி தவிர்ப்பு

                      ஒப்பந்தத்துக்கு ஒவ்வாத வகையில் ஈரான் மீது போடப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

                      இதுகுறித்த அறிவிப்பை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ளார். ஆனால் அதுபற்றிய கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

                      வியன்னாவில் அமெரிக்காவும், ஈரானும் திரைமறைவு பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                        Posted in Uncategorized

                        டிரைவர் இல்லாமலேயே மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்

                        டிரைவர் இல்லாமலேயே மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்

                        துபாயில் கஸ்டம் ஷோ என்ற தலைப்பில் மேம்படுத்தப்பட்ட 3 நாள் வாகன கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தீயணைப்புத்துறையின் பொது இயக்குனர் ராஷித் தானி அல்

                        மத்ரூசி தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

                        இந்த மின்சார தீயணைப்பு வாகனம் ஆஸ்திரிய நாட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் சாதாரண தீயணைப்பு வாகனத்தை விட 20 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. அதேபோல 40 சதவீதம் கூடுதல் செயல்திறனுடையது.

                        இதன் உட்புறத்தில் ஓட்டுனர் அமரும் பகுதியில் 17 அங்குலம் அளவுள்ள எல்.ஈ.டி. திரை உள்ளது. இதில் உள்ள தொடுதிரை அமைப்பில் ஸ்மார்ட் முறையில் வாகனத்தை கட்டுப்படுத்தலாம்.

                        அதேபோல இதனை தொலைதூரத்தில் இருந்தபடியும் இயக்க முடியும். அதாவது ரெலிமேட்டிக் தொழில்நுட்பம் மூலம் இந்த வாகனத்தை டிரைவர் இல்லாமலேயே தீயணைப்புத்துறையின்

                        கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி இயக்கலாம். இந்த வாகனத்தில் 6 தீயணைப்பு ஊழியர்கள் பயணம் செய்யலாம். இதில் உள்ள டேங்கில் 4 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்து

                        வைத்துக்கொள்ளலாம். அதேபோல மின்சார தீ போன்றவற்றை கட்டுப்படுத்தும் நுரை திரவம் 400 லிட்டர் டேங்கில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ்

                        ஏற்றிக்கொள்ளலாம். அதேபோல வாகனத்தில் 8 மணி நேரம் தொடர்ந்து தீயணைப்புப்பணியை மீட்புக்குழுவினர் மேற்கொள்ளலாம். மேலும் 500 கி.மீ தொலைவு இடைநில்லாமல் பயணம்

                        செய்யலாம். இந்த வாகனம் சந்தைப்படுத்தப்படவில்லை. துபாய் தீயணைப்புத்துறைக்கு மட்டும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

                          Posted in உலக செய்திகள்

                          ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா

                          ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா

                          ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா
                          ரஷிய கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை உளவு

                          கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

                          ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா
                          பயிற்சியில் ஈடுபட்டுள்ள ரஷிய படை

                          உக்ரைன் எல்லை அருகே ரஷிய ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது. உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லை பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்ற ரஷியா முயற்சி செய்வதாக அந்நாடு

                          குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ரஷிய எல்லையில் உக்ரைன் படைகளை குவித்து வருகிறது. இதை காரணம் காட்டி ரஷியாவும் தன் பங்கிற்கு படைகளை குவித்து வருகிறது. எல்லையில் ரஷியா மேற்கொண்டுள்ள ராணுவ பயிற்சி பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

                          இந்த சூழ்நிலையில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை விரைவில் கருங்கடல் பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வழக்கமாக கருங்கடலில் பயிற்சி

                          மேற்கொள்கிறது. ஆனால் இப்போது போர்க்கப்பல்களை அனுப்புவதன்மூலம், ரஷியாவுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவிப்பதையே காட்டுகிறது.

                          மேலும், ரஷிய கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் கிரிமியாவில் துருப்புக்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை கருங்கடல் பகுதியில் உள்ள சர்வதேச

                          வான்வெளியில் உளவு கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          தொடரும் Northern Ireland கலவரம் எரிக்க பட்ட பேரூந்து

                          தொடரும் Northern Ireland கலவரம் எரிக்க பட்ட பேரூந்து

                          பிரிட்டன் – வட அயர்லாந்து பகுதியில் கலகக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தொடர்

                          வன்முறைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இந்த கலவரத்தில் பேரூந்து ஒன்றை மடக்கி பிடித்த கலக காரர்கள் அதனை தீ வைத்து எரித்தனர்

                          இதனால் அந்த பேரூந்து முற்றாக எரிந்து அழிந்தது ,அருகில் உள்ள கட்டடங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன

                          இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது

                          எரிக்க பட்ட பேரூந்து
                          எரிக்க பட்ட பேரூந்து
                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            பிரிட்டனில் வெடித்து சிதறிய பக்டரி வீடியோ

                            பிரிட்டனில் வெடித்து சிதறிய பக்டரி வீடியோ

                            சற்று முன்னர் லண்டன் பகுதியில் அமைய பெற்றுள்ள Ohio என்ற பெயிண்ட் தயாரிக்கும்

                            தொழில்சாலை ஒன்று திடீரென வெடித்து சிதறியது .

                            இந்த வெடிப்பு சம்பவத்தில் அந்த நிறுவனம் பற்றி எகிறது .

                            மேற்படி வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இதனால் ஏற்பட்ட முழுமையான சேதங்கள் இந்த செய்தி எழுதும் வரை தெரியவரவில்லை

                            மேற்படி சம்பவம் தொடர்ப்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                            வெடித்து சிதறிய பக்டரி

                            வெடித்து சிதறிய பக்டரி
                              Posted in Uncategorized

                              சிரியா தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – நால்வர் காயம்

                              சிரியா தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – நால்வர் காயம்

                              சிரியாவின் தலைநகர் டமஸ்கத் பகுதியில் இஸ்ரேல் இராணுவ விமானங்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி நால்வர் பாடுகாயமடைந்துள்ளனர்

                              மேலும் அந்த பகுதியில் உள்ள கட்டடங்கள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                              சிரியா மீது தொடர் வலிந்து தாக்குதலை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளதுடன் ,அதே போன்ற

                              தாக்குதல்களை ஈரானுக்குள்ளும் இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்ட வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                சூடானில் தொடரும் கலவர ம் -87 பேர் பலி

                                சூடானில் தொடரும் கலவர ம் -87 பேர் பலி

                                சூடான் Darfur பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கலவரத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை சுமார் 87 ஆக அதிகரித்துள்ளது

                                மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 200 க்கு மேலாக அதிகரித்துள்ளது

                                கட்டுக் கடங்காது பரவி வரும் இந்த வன்முறை சம்பவம் பெரும் கொலைக்களமாக மாறும்

                                அபாயம் எழுந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

                                உலக
                                உலக