Author: நிருபர் காவலன்
அமெரிக்கா விமான தளம் அருகில் வீழ்ந்து வெடித்த ரொக்கட்
அமெரிக்கா விமான தளம் அருகில் வீழ்ந்து வெடித்த ரொக்கட்
ஈராக்கில் உள்ள Ain al-Assad விமானம் தளம் அருகே ரொக்கட் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடடியாக தெரியவரவில்லை ,இந்த விமானம் தளம்
அருகே அமெரிக்காவின் இராணுவ கம்பனிகள் அமைந்துள்ளன ,அதன் மீதே இந்த ஏவுகணை
தாக்குதல் நடத்த பட்டுள்ளது
தொடர்ச்சியாக ஈராக்கில் உள்ள அமெரிக்கா தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகினறமை இங்கே குறிப்பிட தக்கது
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்
- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
- வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
பூங்காவில் 8 சிங்கத்திற்கு கொரோனா
பூங்காவில் 8 சிங்கத்திற்கு கொரோனா
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள வன உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 8 சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றின் உடல்நிலை சீராக உள்ளது. உயிரியல் பூங்காவில் பணிபுரியும் பணியாளா்கள் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு பூங்காவும் மூடிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்தின் (சிசிஎம்பி) ஆலோசகா் ராகேஷ் மிஸ்ரா கூறியது:
சிங்கங்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவற்றின் எச்சில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு
சிசிஎம்பிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை முழுமையாக பரிசோதித்தபோது சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
உயிரியல் பூங்காவில் அவை நெருக்கமாக வசிப்பதால் அவற்றுக்கிடையே கொரோனா பரவியிருக்கலாம்.
எனினும் அவை உருமாற்றம் அடைந்த கொரோனா தீநுண்மிகளால் பாதிக்கப்படவில்லை. உயிரியல் பூங்காவில் உள்ள பணியாளா்களிடம் இருந்து சிங்கங்களுக்கு கொரோனா பரவியிருக்க
வாய்ப்புள்ளது. மனிதா்களை போல் மிருகங்களும் பாலூட்டிகள் என்பதால் அவையும் கொரோனா தீநுண்மியால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தெரிவித்தாா்.
இதற்கு முன்பு ஸ்பெயினின் பாா்சிலோனா, அமெரிக்காவின் பிராங்க்ஸ் நகரங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சிங்கங்கள் மற்றும் புலிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது
உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீபிகா படுகோனேவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா
தீபிகா படுகோனேவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா
இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா தீபிகா படுகோனேவின் தந்தை, தாய், தங்கை என அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீபிகா படுகோனேவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா
குடும்பத்தினருடன் தீபிகா படுகோனே
இந்தி திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா
படுகோனே, முன்னாள் இந்திய பாட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள். பிரகாஷ் படுகோனே பெங்களூருவில் வசித்து வருகிறார்.
பிரகாஷ் படுகோனே தற்போது கொரானோவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார். மேலும் பிரகாஷ் அவரது மனைவி உஜ்ஜாலா, இளைய மகள் அனிஷா ஆகியோருக்கும் பரிசோதனை செய்ததில் கொரானோ தொற்று என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தந்தையுடன் தீபிகா படுகோனே
அவர்கள் தங்களை வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால், பிரகாஷுக்கு
உடல் வெப்பநிலை குறையாத காரணத்தால் பெங்களூருவில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
வாலிபனை இடித்து தள்ளிய லொறி – ஊசலாடும் உயிர்
வாலிபனை இடித்து தள்ளிய லொறி – ஊசலாடும் உயிர்
அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போன் வீதியில் டிராக் ஒன்று வாலிபன் ஒருவரை மோதி தள்ளியது
,இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .,தொடர்ந்து உயிர்
ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
சாரதி கைது செய்ய பட்டு விளக்கமறியலில் வைக்க பட்டுள்ளார்
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்
கோவையை அடுத்த சூலூர் நீலாம்பூர் பகுதியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அவருடன் அவரது நண்பரான
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பூபதியும் தனியே வீடு எடுத்து தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டனுக்கு, அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். எனவே
மணிகண்டன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தர்மபுரிக்கு
மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இதற்கு பூபதி தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து உதவியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் பொலிஸார் தர்மபுரிக்கு சென்று சிறுமியை மீட்டனர். மணிகண்டனை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இதை அடுத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற
மணிகண்டன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பூபதி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து பொலிஸார் கைது செய்தனர்.
நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய பூஜா
நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய பூஜா
தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு அவர் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
தற்போது தென்னிந்திய மொழிகளில், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது. இதுவரை அவர் தெலுங்கு, இந்தியில் நடித்த படங்கள் நல்ல வசூல் ஈட்டி உள்ளன.
சமீபத்தில் அல்லு அர்ஜுடன் நடித்த தெலுங்கு படமும் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம் பூஜா ஹெக்டே.
பூஜா ஹெக்டே, நயன்தாரா
இது நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு இணையானது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கில் மகேஷ்பாவுடன் நடித்தபோது ரூ.2 கோடி சம்பளம் வாங்கினாராம்.
தற்போது இந்தியில் 2 படங்கள், தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘தளபதி 65’ படம், தெலுங்கில் 2
படங்கள் என்று 5 படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி பெறுவதால் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
சித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை
சித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை
தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்ட மறைந்த நடிகை சித்ராவின் புகைப்படத்திற்கு கேக் ஊட்டி அவரது தந்தை கண்கலங்கி இருக்கிறார்.
சித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை
சித்ரா
பிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்டவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நள்ளிரவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலைக்கு காதல் கணவர் ஹேமந்த்தான் காரணம் என விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சித்ரா
இந்நிலையில் விஜே சித்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெற்றோர் தங்களின் போலீஸ் குடியிருப்பில்
அவரது பிறந்த நாளை கொண்டாடினர். சித்ரா போட்டோவுக்கு முன்னால் அவருக்கு பிடித்த பொருட்களை வைத்தும் கேக் வெட்டியும் பிறந்த நாளை கொண்டாடினர்.
சித்ரா
அப்போது சித்ராவின் தந்தை சித்ராவின் போட்டோவுக்கு கேக் ஊட்டிவிட்டு கலங்கினார். காண்போரை கலங்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மனித கடத்தல் படகு கவிழ்ந்தது – 3 பேர் மரணம் – 29 பேர் மீட்பு
மனித கடத்தல் படகு கவிழ்ந்தது – 3 பேர் மரணம் – 29 பேர் மீட்பு
அமெரிக்கா கடல் வழியாக சட்டவிரோத மனித கடத்தலில் ஈடுபட்ட படகு ஒன்று விபத்தில் சிக்கி
கவிழ்ந்ததில் அதில் பயணித்த மூவர் மரணமாகினர் ,மேலும் 29 பேர் உயிரோடு மீட்க பட்டுள்ளனர்
இதில் ஆபத்தான நிலையில் உள்ள ஐவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
அதில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேலும் தேடுதல்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன
ஈரானில் சுவிஸ் தூதரக அதிகாரி மாடியில் இருந்து வீழ்ந்து மரணம்
ஈரானில் சுவிஸ் தூதரக அதிகாரி மாடியில் இருந்து வீழ்ந்து மரணம்
ஈரான் தலைநகரில் டவர் ஒன்றில் பயணித்த ஈரானுக்கான சுவிஸ் நாட்டின் தூதரக பெண்
அதிகாரி அதில் இருந்து தவறி வீழ்ந்து மரணமாகியுள்ளார்
51 வயதுடைய தூதரக அதிகாரி தவறி வீழ்ந்தார் ,அல்லது திட்டமிடப்பட்டு படு கொலை செய்ய
பட்டாரா ..?என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
தேர்தலில் தோற்றாலும்… எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்- சுருதி.
தேர்தலில் தோற்றாலும்… எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்- சுருதி.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
தேர்தலில் தோற்றாலும்… எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்- சுருதிஹாசன்
கமல்ஹாசன், சுருதிஹாசன்
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை தழுவினார்.
கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தோல்வி அடைந்தாலும், அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்துள்ளார் என்று அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சுருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு
இந்நிலையில் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான சுருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் கமல்ஹாசன் கையில் டார்ச் லைட் வைத்திருக்கும் (கட்சியின் சின்னம்) புகைப்படத்தை
வெளியிட்டு, அதில் ‘என்னுடைய தந்தையை நினைத்து எப்போதும் நான் பெருமைப்படுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளா
கருக்கலைப்பு செய்தநடிகை இலியானா
கருக்கலைப்பு செய்தநடிகை இலியானா
நடிகை இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
கர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்… வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா
இலியானா
தமிழில் கேடி படத்தில் அறிமுகமான இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக
இருக்கிறார். இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் காதலித்தனர்.
இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இலியானா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார். ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும்
கிசுகிசுத்தனர். ஆனால் சமீபத்தில் இலியானாவுக்கும், காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
இலியானா
இதற்கு விளக்கம் அளித்து நடிகை இலியானா கூறியதாவது: “நான் கர்ப்பமாக இருந்தேன். கருக்கலைப்பு செய்தேன் என்று வெளியான தகவல்கள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
நான் தற்கொலைக்கு முயன்று பிறகு உயிர்பிழைத்ததாக எனது வேலைக்காரி சொன்னார் என்றும்
தகவல் வெளியானது. எனக்கு வேலைக்காரியே இல்லை. நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவும் இல்லை. இப்போது உயிருடன்தான் இருக்கிறேன்” என்றார்
மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்
மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்
கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை பியாவின் சகோதரர் மரணமடைந்ததையடுத்து, அவருக்கு ரசிகர்கள் டுவிட்டரில் ஆறுதல் கூறி வருகிறார்கள்
கொரோனா பாதிப்பு… மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்
பியா பாஜ்பாய்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து அஜித்தின் ஏகன், வெங்கட்பிரபு
இயக்கிய கோவா, கே.வி.ஆனந்தின் கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தன் சகோதரருக்கு இன்று காலை முதலே டுவிட்டர் மூலம் உதவிகேட்டு வந்தார் பியா. “உத்தர பிரதேசத்தில் உள்ள பரூகாபாத் நகரில் தனது சகோதரர்
இருப்பதாகவும், உடனடியாக படுக்கையும், வென்டிலேட்டர் வசதியும் அவருக்குத் தேவை, தயவு செய்து உதவுங்கள்” என பதிவிட்டிருந்தார்.
பியா பாஜ்பாயின் டுவிட்டர் பதிவு
ஆனால், நடிகை பியாவின் சகோதரருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை போலிருக்கிறது.
சிறிது நேரத்தில் “எனது சகோதரர் இறந்துவிட்டார்” என பதிவிட்டுள்ளார் பியா. அவருக்கு ரசிகர்கள் டுவிட்டரில் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
துருக்கியின் தாக்குதலில் 57 குருதீஸ் போராளிகள் படுகொலை
துருக்கியின் தாக்குதலில் 57 குருதீஸ் போராளிகள் படுகொலை
வடக்கு ஈராக் பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ் போராளிகள் மீது துருக்கிய
இராணுவம் நடத்தி வந்த பெரும் இராணுவ படையெடுப்பில் சிக்கி 57 போராளிகள் மரணமாகியுள்ளனர்
இவர்களுக்கு எதிரான வழி மறிப்பு சமரில் ஏழு துருக்கிய இராணுவம் பாலியாகியுள்ளது
தொடர்ந்து பெரும் சண்டை இடம்பெற்ற வண்ணம் உள்ளது
லண்டன் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி மீட்பு
லண்டன் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி மீட்பு
லண்டன் Charing’ Metro and Cross Station நிலையத்தில் மர்ம பொதி ஒன்று கண்டு பிடிக்க பட்டதால்
அங்கு பெரும் பர பரப்பு நிலவியது ,மக்கள் வெளியேற்ற பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டு
சோதனைகள் முடிவடைந்த பின்னர் மீள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது
மேற்படி மர்ம பொதி என்ன என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை
கொலம்பியா போராட்டம் – 18 பேர் மரணம் -856 பேர் காயம்
கொலம்பியா போராட்டம் – 18 பேர் மரணம் -856 பேர் காயம்
கொலம்பியாவில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய அமைதி வழி போராடடத்தில் கலந்து கொண்டவர்கள்
மீது இராணுவம் ,போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 19 பேர் மரணமாகியுள்ளனர்
மேலு 856 பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஆங்காங்கே மோதல்கள் வெடித்து பறக்கின்றன
பிரான்சின் ஆதிக்க பகுதியில் நடந்துள்ள இந்த மோதல்களை அடுத்து அங்கு இயல்பு நிலையை
நிலை நாட்ட பிரான்சு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
பிரான்சிடம் 30 விமானங்களை வாங்கி குவிக்கும் எகிப்து
பிரான்சிடம் 30 விமானங்களை வாங்கி குவிக்கும் எகிப்து
எகிப்து நாடானது அதி உயர் Rafale fighter jets சண்டை விமானங்கள் முப்தினை பிரான்சிடம் இருந்து
வாங்கி குவிக்கிறது
இதன் மொத்த பெறுமதி 4.5 பில்லியன் டலராகும் ,உலகத்தில் அதிகரித்துள்ள ஆயுத போட்டியின்
காரணமாக உலக சந்தையில் அதி நவீன ஆயுதங்கள் அதிகம் விற்க படுகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்
- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி
- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்
புலிகள் பாணியில் புகுந்தடித்த தாலிபான்கள் – 20 இராணுவம் படுகொலை – முகாம் அழிப்பு
புலிகள் பாணியில் புகுந்தடித்த தாலிபான்கள் – 20 இராணுவம் படுகொலை – முகாம் அழிப்பு
ஆப்கானிஸ்தான Farah’s Bala Buluk இராணுவ முகமை கடந்த தினம் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி கைப்பற்றிய
தாலிபான்கள் அங்கிருந்த இருபது இராணுவத்தினரை கொன்று ஆயுதங்களை அள்ளி
சென்றுள்ளதுடன் ,முகாமை முற்றாக துடைத்து அழித்துள்ளனர்
அமெரிக்கா இராணுவம் அங்கிருந்து விலகி வரும் நிலையில் ,தாலிபான்கள் புலிகள் பாணியில் பல ஊடறுப்பு தாக்குதலை
தொடராக நடத்திய வண்ணம் உள்ளனர் ,.இந்த போராளிகள் குழுவுக்கு ஈரான் பின்புலத்தில் உதவி வருவதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றமை குறிப்பிட தக்கது
ஈராக் பக்தாத் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் பக்தாத் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் தலைநகர் பக்தாத் தலைநகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய அருகில் உள்ள
அமெரிக்கா இராணுவ தளம் மீது இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
பத்து நாட்களின் பின்னர் மீளவும் அதே இராணுவ தளம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது அமெரிக்கா படைகளிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
நேற்று நடத்த பட்ட இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தினருக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்து வருகின்றமை குறிப்பிட்ட தக்கது
சவுதிக்குள் பாய்ந்து வந்த ஏவுகணை – இடையில் தடுத்த சவூதி
சவுதிக்குள் பாய்ந்து வந்த ஏவுகணை – இடையில் தடுத்த சவூதி
சவூதி நாட்டின் தெற்கு Najran பகுதி நோக்கி ஈரானிய ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய உளவு விமானங்கள்
மூலம் வீச பட்ட ஏவுகணைகளை சவுதி வான் காப்பு அணியின் இடையில் தடுத்து அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது
தற்போது என்றும் இல்லாதவாறு சவுதியை நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல்கள்தீவிர படுத்த
பட்டுள்ளது சவுதிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
லிபியாவில் கவிழ்ந்த அகதிகள் படகு 12 பேர் மரணம்
லிபியாவில் கவிழ்ந்த அகதிகள் படகு 12 பேர் மரணம்
அகதிகளை காவியபடி பயணித்த அகதிகள் படகு ஒன்று ;லிபியாவின் கடற்பரப்பில் திடீரென
கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்களில் 12 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்
மீட்பு படையினர் விரைந்து வந்து தத்தளித்து கொண்டிருந்தவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர் .ஐரோப்பாவுக்குள்
நுழையும் முகமாக மத்திய கிழக்கு ,ஆப்ரிக்க நாடுகளில் இருந்து கப்பல் மூலம் ,நுளையய
முயன்றவர்களில் 20 ஆயிரத்துக்கு மேலானவர்கள் கடலில் மூழ்கி பலியான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

















