2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி
Posted in விசேட செய்திகள்

2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி

2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி

2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி யாகியுள்ளதாக முக்கிய உளவுத்துறை நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது .2000 North Korean troops killed in Ukraine

ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு எதிராக போரிட வடகொரியா படைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

அவ்விதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த வட கொரியா படையில் ,2000 படையினர் உக்ரைனில் பலியாகி உள்ளதாக இந்த உளவுத்துறை மையம் தெரிவித்துள்ளது .

வடகொரியா சிப்பாய் ஒருவர் பலி A North Korean soldier was killed.

வடகொரியா சிப்பாய் ஒருவர் பலியானதாக தெரிவித்ததை அடுத்து ,அந்த குடும்பத்தை அழைத்து வடகொரியா அதிபர் கிங் யாங் உன் அவர் மரியாதை செய்திருந்தார்.

ஆனால் தற்பொழுது 2000 படைகள் பலியாகியுள்ளதாக உளவுத்துறை நிறுவனம் அறிவித்துள்ள விடயம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது திட்டமிடப்பட்டு வடகொரியாவின் மீது கலங்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படுகிற பரப்புரையாக பார்க்க படுகிறது .

உண்மையில் 2000-க்கு மேற்பட்ட வடகொரியா சிப்பாய்கள் பலியாகி உள்ளனரா Are over 2,000 North Korean soldiers really dead?

உண்மையில் 2000-க்கு மேற்பட்ட வடகொரியா சிப்பாய்கள் பலியாகி உள்ளனரா என்பது தொடர்பாக தெரியவரவில்லை.

ரஷ்யாவுக்கு ஆதரவாக 6000 வடகொரியா படைகள் உக்ரைனில் போர் புரிந்து கொண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் – தேடி வரும் மரணம் – மக்கள் கவலை

வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் – தேடி வரும் மரணம் – மக்கள் கவலை

வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை குறித்து அண்மை காலமாக சர்வதேச இடங்களில் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய சமயத்தில் கிம் ஜாங் அன் பல மாதங்கள் வெளியுலகில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

கொரோனா வைரஸ்

இதனால் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், இறந்து விட்டதாகவும் பல்வேறு தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் உலா வந்தன. எனினும் கிம் ஜாங் அன் சில மாதங்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் மீண்டும் சில மாதங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த கிம் ஜாங் அன், அண்மையில் ஆளும் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதையும் படியுங்கள்…இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 22,868 பேருக்கு பாதிப்பு

அப்போது கிம் ஜாங் அன் வழக்கத்தை விடவும் மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டார்.‌ இதனால் அவரது உடல்நிலை குறித்து சர்வதேச ஊடகங்களில் மீண்டும் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் கிம் ஜாங் அன்னின் தற்போதைய தோற்றம் கண்டு மனமுடைந்த வடகொரிய மக்கள் அவரது உடல்நிலை குறித்து மிகுந்த கவலை கொண்டிருப்பதாக அந்த நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது அடையாளங்களை வெளியிட விரும்பாத வடகொரிய பிரஜை ஒருவர், “கிம்மின் தோற்றத்தை நாங்கள் பார்த்தபோது எங்கள் மக்களின் இதயம் மிகவும் வேதனை அடைந்தது. அவரை

பார்க்கிறபோது இயற்கையாகவே தங்கள் கண்ணில் கண்ணீர் வழிவதாக எல்லோரும் கூறுகின்றனர்” என தெரிவித்தார்

    Posted in உலக செய்திகள்

    உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை- வடகொரிய எச்சரிக்கை

    உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை- வடகொரிய எச்சரிக்கை

    வடகொரியாவில் உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை- வடகொரிய அதிபர் எச்சரிக்கை

    வடகொரியாவில் அடுத்தடுத்து வந்த 3 புயல்கள் மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதாரத் தடை போன்ற

    காரணங்களால் அங்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், வடகொரியாவில் உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.

    அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், உணவை வீணடிப்பது பொருளாதாரத்தை வீணடிப்பதற்குச் சமம் என்றும், எந்த நிகழ்வில்

    எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் பட்டியலிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

    Posted in உலக செய்திகள்

    வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்

    வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்

    மேற்கு வங்காள மாநிலத்தில் சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்…
    வடகொரிய அதிபர் கிம்
    கொல்கத்தா:

    லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20

    இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு\காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. போரை எதிர்கொள்ளும் அளவிற்கு படைகள் தயார்படுத்தப்பட்டன.

    அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில், லடாக்கில் இந்திய படையினர் வீரமரணமடைந்ததையடுத்து நாடு முழுவதும் சீனாவுக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன.

    பல்வேறு பகுதிகளில் சீன பொருட்களை சாலையில் போட்டு உடைத்தும், சீன அதிபரின் புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தியும் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    கிம், பாஜக-வை சேர்ந்தவர், ஜி ஜிங்பிங்

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த ஒரு நபர் கூறுகையில்,’சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சீன பிரதம மந்திரி கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை எரித்து

    எங்கள் எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவோம்’ என்றார். அந்த நபர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக மேற்குவங்காள பாஜகவினர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்த

    சம்பவமும் அது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவும் நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.