Author: நிருபர் காவலன்
மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம்
மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம்
மம்தா பானர்ஜியின் நீண்ட கால உதவியாளராக இருந்த சுவேந்து அதிகாரி திடீரென பா.ஜனதா கட்சிக்கு தாவினார். அவருக்கு நந்திகிராமில் போட்டியிட பா.ஜனதா சீட் வழங்கியது.
மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்
மம்தா பானர்ஜி
மேற்குவங்காள மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதியில் போட்டியிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். ஆனால் இந்த தடவை அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார்.
மம்தா பானர்ஜியின் நீண்ட கால உதவியாளராக இருந்த சுவேந்து அதிகாரி திடீரென பா.ஜனதா கட்சிக்கு தாவினார். அவருக்கு நந்திகிராமில் போட்டியிட பா.ஜனதா சீட் வழங்கியது.
தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜிக்கு சவால் விட்டார். இதை ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் அவர் சுவேந்து அதிகாரியிடம் 1,956 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தேர்தல் முறைகேடு காரணமாகத்தான் தோல்வி அடைந்ததாக மம்தா பானர்ஜி கூறினார். எனவே சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மம்தா பானர்ஜி
இந்த வழக்கு நீதிபதி கவுசிக் சந்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கை நீதிபதி கவுசிக் சந்தா விசாரிக்க மம்தா எதிர்ப்பு தெரிவித்தார்.
நீதிபதி கவுசிக் சந்தா பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். இதனால் எனக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே அவர் இந்த வழக்கை விசாரிக்கக்
கூடாது. வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று மம்தா, ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இன்று நீதிபதி கவுசிக் சந்தா தேர்தல் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அப்போது, ‘‘என் மீது தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இதன் மூலம் நீதித்துறையை இருட்டில் தள்ள
முயற்சிக்கிறார்கள். இந்த வழக்கை நான் விசாரிக்க முடியாது. எனவே இதில் இருந்து விலகிக்கொள்கிறேன். அதே நேரத்தில் நீதித்துறை பற்றி தவறான கருத்துக்களை கூறிய மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கிறேன்’’ என்று கூறினார்.
எனவே மம்தா பானர்ஜி அபராதத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நீதிபதி ஒருவர் மாநில முதல்-மந்திரிக்கே அபராதம் விதித்து இருப்பது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
மலச்சிக்கல் குணமாக இதை சாப்பிடுங்க
மலச்சிக்கல் குணமாக இதை சாப்பிடுங்க
சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும்.
இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும்.
மலச்சிக்கலை குணமாக்கும் வாழைத்தண்டுப் பச்சடி
வாழைத்தண்டுப் பச்சடி
தேவையான பொருட்கள்:
நார் நீக்கி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரை கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தயிர் – ஒரு கப்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சீரகம் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மலச்சிக்கல் குணமாக இதை சாப்பிடுங்க
வாழைத்தண்டுடன் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி தாளித்து, தயிருடன் கலக்கவும்.
அதனுடன் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை விழுது சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
சூப்பரான வாழைத்தண்டுப் பச்சடி ரெடி.
பூசணிக்காயில் துவையலா?
பூசணிக்காயில் துவையலா?
பூசணிக்காயில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
பூசணிக்காயில் துவையலா? எப்படி செய்றதுனு பார்க்கலாமா?
பூசணிக்காய் துவையல்
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் – 1 துண்டு
கடலைபருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
தேங்காய் – அரை மூடி
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
தாளிக்க
கடுகு, உளுந்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
செய்முறை:
பூசணிக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள்.
தேங்காயை பூப்போல துருவி வைக்கவும்.
பின் துருவிய பூசணி துருவலில் உப்பு சேர்த்து பிசறி ஒரு தட்டில் அமுக்கி தட்டை சாய்த்தார் போல் வைத்தால் நீரெல்லாம் வடிந்துவிடும். இப்படி செய்து சமைப்பதால் சளி பிடிக்காது. (பூசணியில் இருந்து வரும் நீரில் மிளகுதூள் சேர்த்து பழச்சாறாகக் குடிக்கலாம்)
வாணலியை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின் அதில் கடலைபருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் மணம் வர வறுத்து, பின் பூசணி துருவல், சிவப்பு மிளகாய், புளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
ஆறியதும் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக நைசாக அரைக்கவும்.
பூசணி துவையல் தயார்.
மணமும் ருசியும் சத்தும் உள்ளது. நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தில் கலந்து சாப்பிடலாம். சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கும் அருமையான சைட் டிஷ்.
தாலிபான்களிடம் வீழ்ந்ந்த 130 நகரங்கள் – தப்பி ஓடும் இராணுவம்
தாலிபான்களிடம் வீழ்ந்ந்த 130 நகரங்கள் – தப்பி ஓடும் இராணுவம்
ஆப்கானில் அமெரிக்கா இராணுவம் அங்கிருந்து விலகிய நிலையில் தற்பொழுது அரச இராணுவத்திற்கு
எதிராக தாலிபான்கள் சமராடி வருகின்றனர் ,
தற்போது வரை ஐந்து மாகாணங்களை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்
உக்கிரமான தாக்குதல்களை மேற்கொண்டு தமது நில ஆக்கிரமிப்பு போரை தாலிபான்கள் விரிவு படுத்தி முன்னேறுவதால் அரச இராணுவம் தினறிய வண்ணம் உள்ளது
ஸ்பெயினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இத்தாலி
யூரோ கோப்பை கால்பந்தில் இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து – டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
யூரோ கோப்பை – ஸ்பெயினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இத்தாலி
வெற்றிக் களிப்பில் இத்தாலி வீரர்கள்
லண்டன்:
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.
இதில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, 6-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 6-0வது நிமிடத்தில் இத்தாலி அணியின் பெட்ரிகோ சிய்சா முதல் கோலடித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா 80வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
போட்டியை கண்டுகளித்த ரசிகர்கள்
கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கு இத்தாலி அணி முன்னேறியது.
பிரிட்டனில் அனைத்து தடைகளும் நீக்கம் – முகக் கவசம் தேவையில்லை
பிரிட்டனில் அனைத்து தடைகளும் நீக்கம் – முகக் கவசம் தேவையில்லை
பிரிட்டனில் கடந்து ஒரு வருடத்திற்கு மேலாக விதிக்க பட்ட புதிய சமூக இடைவெளிகள் மற்றும் முக கவசம் என்பன முடிவுக்கு வருகிறது
எதிர் வரும் பத்தொன்பதாம் திகதியுடன் அணைத்து தடைகளும் நீக்க படுகின்றன ,வீதி தடைகள் மற்றும் சமுக இடைவெளி என்பனவும் நீக்க படுகின்றன
கொரானோவுக்கு முன்னர் போன்ற இயல்பு நிலைக்கு நாடு திரும்புகிறது என அரசு அறிவித்துள்ளது
அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது விமான தாக்குதல்
அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது விமான தாக்குதல்
ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் Green Zone in Baghdad,பகுதி நிலைகள்
மீது உளவு விமான தாக்குதல் நடத்தியுள்ளது ,இதில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஒரு வாரத்தில் நடத்த பட்ட மூன்றாவது தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது
அதி உச்ச பாதுகாப்புடன் கூடிய இந்த முகாம் மீது தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை அமெரிக்கா அபடைகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
28 பேருடன் கடலுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
28 பேருடன் கடலுக்குள் பிவீழ்ந்து நொறுங்கிய விமானம்
ரசியாவின் 28 பேருடன் பயணித்து கொண்டிருந்த அண்டனோவ் ரகத்தை சேர்ந்த விமானம் ஒன்று வீழ்ந்து மூழ்கியுள்ளது
இவ்வேளை இதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த விபத்து சம்பவிக்கும் பொழுது அந்த பகுதியில் அதிக குளிரும் காணப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த விமானத்தை தேடும் பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன
ஒரு வாரத்தில் நடந்தேறிய இரண்டவது விமான விபத்தாக இது பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
பாடசாலைக்குள் புகுந்து 140 மாணவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு
பாடசாலைக்குள் புகுந்து 140 மாணவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு
வடமேற்கு நையீரியாவில் போடிங் ஒன்றுக்குள் புகுந்த ஆயுத தாரிகள் அங்கு தங்கி இருந்த சுமார் 140 மாணவர்களை ஆயுத முனையில் கடத்தி சென்றுள்ளனர்
ஆயுத குழுவின் இந்த தொடர் கடத்தலினால் அங்கு மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் இடம்பெற்ற
வண்னம் உள்ளது ,மேலும் நகரங்களுக்கும் புகும் ஆயுத குழுவினர் மக்களின் ஆடு ,மாடுகளை கடத்தி சென்றுள்ளனர்
இவ்வாறு கடத்த பட்ட விலங்குகள் கொன்று உணவாக்க பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்துள்ளது
எரிந்த நிலையில் காருக்குள் இருந்து மனித சடலம் மீட்பு
எரிந்த நிலையில் காருக்குள் இருந்து மனித சடலம் மீட்பு
தென்கிழக்கு அவுஸ்ரேலிய பகுதியில் எரிந்த கார் ஒன்றுக்குள் கருகிய நிலையில் மனித சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
மேற்படி நபர் படுகொலை செய்ய பட்டாரா அல்லது விபத்தில் சிக்கி இறந்தாரா என்பது
தொட்ரபில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்ஸ் அரச இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அந்த
விபத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை தற்பொழுது ஐம்பதாக அதிகரித்துள்ளது
17 பேர் உயிரிழந்த நிலையில் தற்பொழுது ஐம்பதாக அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது
தாலிபான்கள் மீது இராணுவம் அகோர தாக்குதல் – 30 பேர் மரணம்
தாலிபான்கள் மீது இராணுவம் அகோர தாக்குதல் – 30 பேர் மரணம்
ஆப்கானில் அரச இராணுவம் தாலிபான் மீது அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
Helmand பகுதியில்
போராளிகள் நிலைகள் மீது அரச இராணுவ விமானங்கள் நடத்திய தாக்குதலில் முப்பது போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது
அமெரிக்கா படைகள் அங்கிருந்து விலகிய நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களை தலிபான்கள் மீட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
ரஷியாவில் ஐஸ் தீவிரவாத தாக்குதல் ,முறியடிப்பு – 6 பேர் சுட்டுக்கொலை
ரஷியாவில் ஐஸ் தீவிரவாத தாக்குதல் ,முறியடிப்பு – 6 பேர் சுட்டுக்கொலை
ரசியா தலைநகர் மொஸ் கோவில் ஐஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்த முற்பட்ட மிக பெரும்
தீவிரவாத தாக்குதல் அந்த நாட்டு உளவுத்துறையால முறியடிக்க பட்டுள்ளது
ஆறு பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
மேற்படி குழுவுடன் தொடர்பில் உள்ளவர்களை கைது செய்யும் வேட்டையில் உளவுத்துறை அவசர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது
ஜப்பானில் பாரிய அனர்த்தம் – 3 பேர் மரணம் – 113 பேரை காணவில்லை
ஜப்பானில் பாரிய அனர்த்தம் – 3 பேர் மரணம் – 113 பேரை காணவில்லை
ஜப்பானில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை மூவர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 113 பேரை காணவில்லை என அரசு தெரிவித்துள்ளது
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் மீட்பு பணிகள் துரிதமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தொடர் மழை அதனால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுளள்து
அமெரிக்கா இராணுவ ஒயில் கூதம் மீது வீழ்ந்து வெடித்த 9 ஏவுகணை
அமெரிக்கா இராணுவ ஒயில் கூதம் மீது வீழ்ந்து வெடித்த 9 ஏவுகணை
சிரியாவில் உள்ள அமெரிக்காவின் al-Omar இராணுவ நிலைய ஒயில் கூதங்கள் மீதும் ,அதன்
இராணுவ நிலைகள் மீதும் ஒன்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
உஷாரான நிலையில் குறித்த இராணுவ மையம் வைக்க பட்ட பொழுதும் இந்த ஏவுகணைகள்
வீழ்ந்து வெடித்துள்ளது அமெரிக்கா படைகளிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா இராணுவ முகாமிற்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணை
அமெரிக்கா இராணுவ முகாமிற்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணை
ஈராக்கில் உள்ள அமெரிக்கா Ain al-Assad base இராணுவ தளத்திற்குள் இன்று ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
குறித்த முகமானது தொடராக ரொக்கட் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்ற பொழுதும் அங்குள்ள
அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் வெளியேறும் நிலையில் இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது
பிரிட்டனுக்குள் கடல்வழியாக நுழைந்த இலங்கையர் உள்ளிட்ட 238 அகதிகள்
பிரிட்டனுக்குள் கடல்வழியாக நுழைந்த இலங்கையர் உள்ளிட்ட 238 அகதிகள்
பிரிட்டனுக்கும் பிரான்ஸ் கலை கடல் வழியை பயன்படுத்தி படகுகள் மூலம் 238 அகதிகள்
நுழைந்துள்ளார் இவ்வாறு நுழைந்த அகதிகளில் இலங்கையர் உள்ளிட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவ்வாறான அகதிகள் நுழைவை தடுக்க கடலோர பாதுகாப்பு இறுக்க பட்ட நிலையில் இந்த
அகதிகள் நுழைவது பிரிட்டனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் மக்கள் மீது துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்
அமெரிக்காவில் மக்கள் மீது துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்
அமெரிக்கா Fort Worth பகுதியில் கார் கழுவும் நிலையம் அருகில் வைத்து மர்ம அயுதாரி திடீர்
துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் ,இதில் எட்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளனர்
சமீப காலங்களாக இவ்விதமான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
15 வயது சிறுவனை தின்ற முதலை – கண்ணீரில் குடும்பம்
உலக
15 வயது சிறுவனை தின்ற முதலை – கண்ணீரில் குடும்பம்
இந்தியாவில் பதின் ஐந்து வயது சிறுவன் ஒருவன் நீர் நிலைக்கு அருகில் சென்ற பொழுது அவனை
பதுங்கி வந்த முதலை அடித்து கொன்று தின்றுள்ளது
மேற்படி சம்பவம் அந்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி
துனிசியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 84 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
துனிசியாவில் சோகம் – அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி
மீட்புப் பணியில் வீரர்கள்
துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நகரிலிருந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 130 அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர்.
இந்த படகு துனிசியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஷார்ஷிஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
அப்போது அங்கு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். மேலும் இதுபற்றி துனிசியா கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் இறங்கினர். அதற்குள் பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.







