Author: நிருபர் காவலன்
ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
கற்புக்கு பெண் என்று சொல்லாதே
காசிற்கு விற்கிறார் மறக்காதே
உவமைக்கும் இவரை காட்டாதே -இந்த
ஊத்தையில் கண்ணை வைக்காதே
பேருக்கு ஆனாய் இருக்காதே – இந்த
பேரிடரை பெண்ணுக்கு வழங்காதே
தன் பசி போக்க என் செய்வாள்
தன்னிடம் உள்ளதை விற்கிறாள்
கற்பிற்கு விலை வைக்கும் கறையானே
கண்ணீரை உறிஞ்சும் உதையோனே
வெப்பத்தை தூவி போகாதே – இந்த
வேட்கையில் பெண்ணை நீ கொல்லாதே
பூலன் தேவியாய் ஆக்காதே – இவள்
புலியாகி எழுவாள் மறக்காதே
எதை வந்து சொன்னாலும் ஏற்கேனே
ஏளன பெண்ணை மிதிப்பேனே
சிந்திக்கும் ஆற்றலை இழந்தாளை
சிந்தைக்குள் வைக்க முனையாதே
பானைக்குள் புகுந்த அகப்பைகள்
பாதியில் முறியும் மறவாதே
ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
தோன்றுதல் பிறந்திட வேண்டும் என்றால்
தோலுக்குள் புகுந்திட வேண்டும்
அணைத்து பால் மலர்ந்திட வேண்டும் என்றால் – இந்த
ஆகமம் நடந்திட வேண்டும்
எதை வந்து சொன்னாலும் எற்கேனே
இந்த இழிசாதி பெண்ணை நம்பேனே
ஆணை கொல்லும் எமன் என்பேன்
ஆக்கினை இந்த பெண் என்பேன்
நூற்றுக்கு 90நூறு இழிவென்பேன்
நுண்ணறிவில்லா மலடென்பென்
ஆண்கள் பெறுமை இழந்துவிடின்
அத்தனை குடும்பமும் இரண்டென்பேன் ..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-09-2021
சிலம்பம் விளையாட்டுக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய அரசு
சிலம்பம் விளையாட்டுக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய அரசு
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை மத்திய அரசு அங்கீகரித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய அரசு
சிலம்பம்
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம்
விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சிலம்பத்தை சேர்க்கும்படி முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும், தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை மத்திய
அரசு அங்கீகரித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை எனவும் அமைச்சர் மெய்யநாதன் கூறி உள்ளார்
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர்
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர்
கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர் ஜப்பானில் வசித்து வருகிறார்.
ஜப்பானில் விசித்திரம் – ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி (36). இவர் ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேஷன் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் தூங்குகிறாராம். இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ஹோரி கூறுகிறார். மேலும், தூங்கும் நேரத்தை எப்படி குறைப்பது என்பது குறித்து நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து வருகிறாராம்.
இதுதொடர்பாக, தைசுகே ஹோரி கூறியதாவது:
எல்லாரையும் போல நானும் 8 மணி நேரம் தூங்கிக்கொண்டு இருந்தேன். ஆனால் பல வேலைகள் பாதித்தன. எனவே தூங்கும் நேரத்தை குறைக்கத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக
குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறேன். சில நாட்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட தூங்குகிறேன். இதனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…ஆங் சான் சூகி மீதான ஊழல் வழக்குகள் – அக்டோபர் 1ம் தேதி விசாரணை தொடக்கம்
மகளிர் நல அமைச்சகத்தை கலைத்த தலிபான்
மகளிர் நல அமைச்சகத்தை கலைத்த தலிபான்
ஆப்கானிஸ்தானின் பெண்கள் விவகார அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் வரக்கூடாது என்று தலிபான்கள் திருப்பி அனுப்பி விட்டனர்.
மகளிர் நல அமைச்சகத்தை கலைத்த தலிபான்- அதுக்கு என்ன பெயர் மாற்றியுள்ளார்கள் தெரியுமா?
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். 33 பேர் கொண்ட அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை.
தலிபான்கள் ஆட்சியை பிடித்ததால் ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமை கேள்விக்குறியாகி உள்ளது என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஏற்கனவே ஆட்சியில் தலிபான்கள் இருந்தபோது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். பெண்கள் வேலைக்கு செல்வதை தடை செய்திருந்தனர். தற்போது அதுபோன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தலிபான்கள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் அவர்கள் பெண்கள் மீதான பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பெண்கள் விவகார அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் வரக்கூடாது என்று திருப்பி அனுப்பி விட்டனர். இதே போல பல இடங்களில் வேலைக்கு செல்லும் பெண்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் பெண்கள்
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மகளிர் நல அமைச்சகத்தை தலிபான்கள் கலைத்துள்ளனர். அந்த அமைச்சகத்துக்கு பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகம் என்று பெயரை மாற்றி உள்ளனர்.
இந்த அமைச்சகம் ஏற்கனவே 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது செயல்பாட்டில் இருந்தது. இந்த அமைச்சகம் சார்பில் பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள். உறவினர்களுடன் செல்லாமல் தனியாக செல்லும் பெண்களுக்கு தண்டனை கொடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்
நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்
கடந்த வாரம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதிவிட்டு வந்ததில் இருந்தே மாணவி சோகமாக காணப்பட்டார் என்றும் வீட்டில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ராசிபுரம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த சின்ன அரியாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவர் பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளராக உள்ளார். இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு சுவேதா (வயது 19) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
சுவேதா ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி நீட் தேர்வு மையத்தில் ஓராண்டு நீட் தேர்வு பயிற்சி பெற்றார்.
நீட் தேர்வு
கடந்த வாரம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அவர் நீட் தேர்வு எழுதினார். தேர்வு எழுதிவிட்டு வந்ததில் இருந்தே சுவேதா சோகமாக காணப்பட்டார். வீட்டில் உள்ளவர்கள் சுவேதாவை சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அதே பகுதியில் உள்ள தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்
சுவேதாவின் தோழியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சுவேதா அங்கு வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் இரவு வரை சுவேதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சுவேதாவின் பெற்றோர் நேற்று இரவு நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே அறையில் ரகசிய வாழ்க்கை- 11 ஆண்டுக்குப் பின் காதலரை கரம்பிடித்த பெண்
ஒரே அறையில் ரகசிய வாழ்க்கை- 11 ஆண்டுக்குப் பின் காதலரை கரம்பிடித்த பெண்
11 ஆண்டுகள் ரகசிய வாழ்க்கை நடத்தி சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்ட ரஹ்மான்-சஜிதா தம்பதியரை நென்மாரா தொகுதி எம்.எல்.ஏ. பாபு நேரில் வாழ்த்தினார்.
ஒரே அறையில் ரகசிய வாழ்க்கை- 11 ஆண்டுக்குப் பின் காதலரை கரம்பிடித்த பெண்
ரஹ்மான்-சஜிதா தம்பதி
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அய்லூரைச் சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010ம் ஆண்டு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி
அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினர். ஆனால், எங்கு தேடியும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை. இதனால் வேலாயுதன் நென்மரா போலீஸ்
நிலையத்தில் தன் மகளை மீட்டுத் தருமாறு புகார் செய்தார். போலீசார் சஜிதாவை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால், சஜிதா அதே பகுதியில் உள்ள காதலன் ரஹ்மான் என்பவருடன் அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் வசித்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தது ரஹ்மான்
பெற்றோருக்கும் தெரியவில்லை. காலையில் வேலைக்கு செல்லும் ரஹ்மான் வீட்டில் சஜிதாவை வைத்து கதவை பூட்டிவிட்டு சென்றுவந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரஹ்மான் வீட்டில் இருந்து வெளியேறினார். இது குறித்து அவரது சகோதரர் பாலக்காடு நென்மாரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜுன் மாதம் ரஹ்மான் சகோதரர் அவர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இளம்பெண்ணோடு தனியாக வாழ்ந்து வருவதை கண்டுபிடித்தார். இதுகுறித்து போலீசாருக்கும் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது ரஹ்மான் காதலி சஜிதாவுடன் கடந்த 11
ஆண்டுகளாக ரகசியமாக யாருக்கும் தெரியாமல் ஒரே அறையில் வசித்து வந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியதை கோர்ட் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் ரஹ்மான்-சஜிதா ஆகிய இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று நென்மாராவில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு
இருவரும் வந்தனர். அங்கு சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்வதற்கான ஆவணத்தில் கையெழுத்து போட்டு திருமணம் செய்து கொண்டனர்.
11 ஆண்டுகள் ரகசிய வாழ்க்கை நடத்தி சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்ட ரஹ்மான்-சஜிதா தம்பதியரை நென்மாரா தொகுதி எம்.எல்.ஏ. பாபு நேரில் வாழ்த்தினார்.
மேலும் சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
வக்கீலிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறித்து சென்ற குரங்கு
வக்கீலிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறித்து சென்ற குரங்கு
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் வக்கீலிடம் இருந்து பறித்து சென்ற ரூ.2 லட்ச பணத்தை குரங்கு மரத்தில் இருந்து அள்ளி வீசியது. இதனை பொதுமக்கள் போட்டிப்போட்டு எடுத்தனர்.
வக்கீலிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறித்து சென்ற குரங்கு- அடுத்து செய்த காரியம்…
வக்கீலிடம் இருந்து பணப்பையை பறித்து சென்ற குரங்கு
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் சர்மா. வக்கீலான இவர் நிலப்பதிவுக்கான முத்திரை தாள்களை வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வந்தார்.
நேற்று இவர் தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் ரூ.2 லட்சத்தை பெற்றுக்கொண்டு முத்திரை தாள்கள் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார். ராம்பூரில் உள்ள நிலப்பதிவு அலுவலகத்துக்கு அவர் ரூ.2 லட்சம் பணத்துடன் சென்றார்.
ரூ.2 லட்சத்தை அவர் ஒரு பையில் வைத்திருந்தார். அந்த பணத்துடன் அவர் அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குரங்கு அவரது பணப்பையை பறித்து சென்றது. எதிர்பாராத இந்த பணப்பறிப்பால் வக்கீல் வினோத்குமார் சர்மா நிலைகுலைந்து போனார்.
அவர் சுதாரிப்பதற்குள் அந்த குரங்கு பணப்பையுடன் அருகில் உள்ள வேப்பமரத்தில் ஏறியது. வக்கீல் சர்மா என்ன செய்வது என்று புரியாமல் அந்த குரங்கையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பையை போட்டு விடு என்று குரங்கை பார்த்து கூச்சலிட்டார்.
வக்கீல் சர்மாவின் கூக்குரல் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து திரண்டனர். இதைக் கண்டதும் குரங்கு அந்த பையை திறந்து இரண்டு 50 ஆயிரம் ரூபாய் கொண்ட நோட்டு கட்டுகளை கையில் எடுத்துக் கொண்டது. மீதமுள்ள ஒரு லட்சம் ரூபாயுடன் பையை கீழே போட்டு விட்டது.
இதனால் வக்கீல் சர்மாவுக்கு பாதி உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. மீதமுள்ள ஒரு லட்சம் ரூபாயையும் கீழே போட்டு விடும்படி அவர் குரங்கை பார்த்து கத்தினார்.
அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக அந்த குரங்கு கட்டுகளை அவிழ்த்து ரூபாயை அள்ளி வீச தொடங்கியது. மரத்தில் இருந்து பண மழை பெய்தது போல அந்த காட்சி இருந்தது.
பணம்
குரங்கு 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவதை கண்டதும் பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். போட்டி போட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்தனர். ஒரு லட்சம் ரூபாயையும் அந்த குரங்கு அள்ளி வீசியது.
அதிர்ச்சி அடைந்த வக்கீல் சர்மா பொதுமக்களிடம் பணத்தை திருப்பி தந்து விடும்படி பரிதாபமாக கேட்டார். பெரும்பாலானவர்கள் அவரிடம் பணத்தை கொடுத்து விட்டனர். அவற்றை கணக்கிட்ட போது ரூ.95 ஆயிரம் இருந்தது.
ரூ.5 ஆயிரம் மட்டும் பறிபோய் இருந்தது. எப்படியோ பணம் கிடைத்ததே என்று ஆறுதல் பட்டபடி வக்கீல் சர்மா புறப்பட்டு சென்றார்.
தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்கொலை
தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்கொலை
தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கேயே
பயிரிடப்பட்ட காய்கறிகளை பார்வையிட்டு, இதுப்போல் காய்கறி உற்பத்தி, இம்மருத்துவமனையில் குணமடைந்த தோழர்களை வைத்து செய்ய அறிவுறுத்தினார்.
மேலும் ரிவைவ் அடுமனையை திறந்து வைத்தார். சமூகநீதி நாள் உறுதிமொழி மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு மாதம் உறுதிமொழி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் எடுக்கப்பட்டது. பின்னர் அவர்
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இம்மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைப் பெற்று குணமடைந்து செல்கிறார்கள். அப்படி சிகிச்சைப் பெற்று செல்பவர்களில் 100 பேர் குணமடைந்தும், தங்களது குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ளாமல், புறந்தள்ளிவிடுகிற
சூழ்நிலையில் இருக்கின்றனர். வேளாண்மை துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, சென்னை மாநகராட்சி ஆகிய துறைகள் இணைந்து காலியாக இருக்கிற இடங்களில் காய்கறிகளைப்
பயிரிடுகிற பணிகளை இங்கு சிகிச்சை பெற்று குணமடையது இருப்பவர்களுக்கு வழங்க இருக்கிறோம்.
இந்த வளமான நிலத்தை பதப்படுத்தி இங்கு சிறப்பாக விளையதிருக்கக்கூடிய மரவள்ளிக்கிழங்கு, பலவகையான வாழை, வெண்டை, கத்தரி போன்ற காய்கறிகளை விளைவித்து, அவற்றையெல்லாம் சென்னையில் இருக்கிற அரசு ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனை,
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டாலின் அரசு மருத்துவமனைகளுக்கு உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வழங்கலாம் என்று
முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த நிலங்களில் அவரவர் உடல் நலத்திற்கேற்ப தங்களது உடலுழைப்பை செலுத்துகிற தோழர்களுக்கு கூலி வழங்கப்பட்டு அவை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உலக தற்கொலைத் தடுப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு தற்கொலை செய்துகொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை 15
ஆயிரத்திலிருந்து 16 ஆயிரமாக உள்ளது. விபத்துக்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரமாக உள்ளது. விபத்துக்களினால் இறப்பவர்களைவிட தற்கொலையினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டாலே, தொடர்யது ஒன்று, இரண்டு, மூன்று முறை தற்கொலை செய்துகொள்வதற்கு முயன்று சாவின் விளிம்புக்குச் சென்றுவிடுகிறார்கள்.
தற்கொலை செய்துகொள்பவர்கள் என்ன காரணத்தினால் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று அதற்கு கவுன்சிலிங் கொடுக்கலாம். 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதம் பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்.
பாலிடாயில், எலிமருந்து, சாணிபவுடர் போன்றவற்றை பயன்படுத்தியும் தற்கொலை செய்துகொள்கின்றனர். அண்மையில் நான் திருமங்கலம் மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, அங்கு இந்த சாணி பவுடரைச் சாப்பிட்டுத்தான் இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அந்தக் காலத்தில் வீட்டில் மாட்டு சாணத்தை பூசுவது என்பது சுபகாரிய விசயமாகக் கருதப்பட்டது. விஷக் கிருமிகள் வீட்டிற்குள் அண்டாமல் இருக்க சாணி பூசுவது என்பது
செய்யப்பட்டது. அதுவும் கூட இப்போது விஷம் கலந்து, விஷப் பவுடராக மாற்றி, வணிகநோக்கத்தோடு செயல்படுகின்றனர். இந்த சாணிப் பவுடரில் விஷத்தின் அளவு கூடுதலாக இருப்பதால், அதைச் சாப்பிடுபவர்களை காப்பாற்றவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவே ஒரு பண்பாட்டிற்கு எதிராக, ஒரு கலாச்சாரத்திற்கு எதிராக, சாணிக்கு பதிலாக சாணி பவுடர் தயாரிக்கிற நிறுவனங்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மிக விரைவில் சாணிப் பவுடர் தமிழகத்தில் தயாரிப்பதற்கு தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாலிடாயில், எலி மருந்துகளை பாதுகாப்பானப் பெட்டகங்களை வைத்து விற்க வேண்டும். அவற்றை வெளிப்படையாக தெரிகிற வகையில் விற்கக் கூடாது என்று வணிகர்களுக்கும், அதேப்போல் பாலிடாயில், எலி மருந்துகளை வாங்க வருபவர்கள் தனியாக வருபவர்களுக்கு
வழங்கக்கூடாது. 2 அல்லது மூன்று பேர் சேர்யது வந்து கேட்டால் மட்டுமே பாலிடாயில், எலி மருந்துகளை வழங்க வேண்டுமென்று வணிகர்களுக்கு அதை வலியுறுத்தி, மருத்துவ துறையின்
அலுவலர்கள் மூலம் அரசு ஆணைப் பிறப்பிக்கப்படும். இதன்மூலம் தற்கொலை செய்கிற எண்ணத்தை மாற்றவும், தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
ஈரானிய எண்ணெய் கப்பல் லெபனான் வந்தடைந்தது
ஈரானிய எண்ணெய் கப்பல் லெபனான் வந்தடைந்தது
ஈரானின் பாரிய எண்ணெய் கப்பல் ஒன்று லெபனானுக்கு வந்தடைந்துள்ளது ,அமெரிக்கா மற்றும்
இஸ்ரேல் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த கப்பல் அங்கு வந்தடைந்துள்ளது
இந்த நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தாம் செயல் படுவோம் என்பதை ஈரான் மீளவும் எடுத்து
கூறியுள்ளதை இது எடுத்துரைக்கிறது என்பதை எடுத்து இயம்புகிறது
மக்களை சுட்டு கொன்ற கொலையாளி கைது
மக்களை சுட்டு கொன்ற கொலையாளி கைது
அமெரிக்காவில் நான்கு பேரை சுட்டு கொன்றை கொலை குற்ற சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
இவ்வாறு கைதானவர் தொட விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண் வியாபாரி.
லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண் வியாபாரி.
லாட்டரி வியாபாரி ஸ்மிஜா தன்னிடம் மீதம் இருந்த சீட்டுகளை தனது நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு விற்பனை செய்தார்.
கடனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண்
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த சுனங்கம் வேலியை சேர்ந்தவர் ஸ்மிஜா மோகன். இவர் அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கேரள அரசின் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு வந்தது.
இந்த நிலையில், குலுக்கல் நடைபெற்ற அன்று பம்பர் லாட்டரி சீட்டுகள் சில மீதம் இருந்தது. அந்த சீட்டுகளை தனது நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு ஸ்மிஜா விற்பனை செய்தார்.
அதில் ஒரு சீட்டை கீழ்மாடு என்ற இடத்தை சேர்ந்த சந்திரன் என்பவரை போனில் தொடர்பு
கொண்டு கடனுக்கு அந்த சீட்டை விற்றார். அதற்கு அத்தாட்சியாக அந்த சீட்டை செல்போன் மூலம் படம் பிடித்து வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பினார்.
இந்த நிலையில் ஸ்மிஜா கடனாக சந்திரனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பம்பர் பரிசு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த சீட்டை எடுத்துக்கொண்டு நேராக சந்திரன் வீட்டிற்கு சென்ற
ஸ்மிஜா ரூ.6 கோடி பரிசு விழுந்த சீட்டை சந்திரனிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த லாட்டரி சீட்டுக்கான பணம் 200-ஐ பெற்று கொண்டார். பரிசு விழுந்த சீட்டை வாக்கு மாறாமல் கொடுத்த ஸ்மிஜாவை பலரும் பாராட்டி வருகின்றனர்
ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் பிரான்சில் சுட்டுக் கொலை
ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் பிரான்சில் சுட்டுக் கொலை
ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவரான ஷராவி பற்றி தகவல் அளிப்போருக்கு 5 மில்லியன் டாலர் பரிசு தரப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை
பிரான்ஸ் அதிபர் மெக்ரான்
சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோவில்
நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
அவரை பற்றிய தகவல் தருவோருக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் அதிரடிப் படையினர் சகாராவில் நடத்திய அதிரடி தாக்குதலில் ஷராவி கொல்லப்பட்டதாக
அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இது மிகப் பெரிய வெற்றி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
கொரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளி 6 அடி போதாது- புதிய ஆய்வு
கொரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளி 6 அடி போதாது- புதிய ஆய்வு
காற்றோட்டத்தின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு காற்றோட்ட உத்திகளுடன் தொடர்புடைய உட்புற காற்று ஓட்ட முறை மற்றும் திரவத்துளி உமிழ்வு முறை ஆகிய மூன்று காரணிகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
கொரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளி 6 அடி போதாது- புதிய ஆய்வு முடிவு
கொரோனா வைரஸ்
உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும்
என்றும் தொடர்ந்து மருத்துவ சமூகம் வலியுறுத்தி உள்ளது. இரு நபர்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளி வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்
தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துள்ளனர். அதேசமயம் வைரசின் தன்மை தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வகையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மூடப்பட்ட அறைகளில் காற்றில் மிதந்து வரும் வைரசில் இருந்து பாதுகாக்க, இரு நபர்களுக்கு இடையிலான 2 மீட்டர் (ஆறரை அடி) இடைவெளி போதுமானதாக இருக்காது என தெரியவந்துள்ளது.
காற்றோட்டத்தின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு காற்றோட்ட உத்திகளுடன் தொடர்புடைய உட்புற காற்று ஓட்ட முறை மற்றும் திரவத்துளி உமிழ்வு முறை ஆகிய மூன்று காரணிகளை ஆய்வு
செய்து, அதன் முடிவுகளை ‘நிலையான நகரங்கள் மற்றும் சமூகம்’ என்ற ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர். ஒருவரிடம் இருந்து வெளியேற்றப்பட்ட வைரஸ் உள்ள திரவத்துளிகள்
மற்றொருவருக்கு பரவுவதை தடுக்க, தனிமனித இடைவெளி மட்டும் அல்லாமல், மூக்கு மற்றும் வாயை முறையாக மறைத்தல், போதுமான காற்றோட்டம் போன்ற பிற கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி- விஜயகாந்த்
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி- விஜயகாந்த்
தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி- விஜயகாந்த் அறிவிப்பு
விஜயகாந்த்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
சென்னை:
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இன்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
தேமுதிக
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
- 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும்.
- போட்டியிட விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.
- மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.4000, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2000 செலுத்தி மனு பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்
பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் காலமானார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்
தாயாருடன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்சன். இவரது தாயார் சார்லட் ஜான்சன் வால் (79). தொழில் முறை பெயிண்டர். லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் அறிக்கையில் உறுதி செய்துள்ளனர்.
2019-ம் ஆண்டு நடந்த கட்சியின் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரது தாயாரை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.
தலிபான்கள் கட்டு பாட்டு பகுதியில் கார் குண்டு தாக்குதல்
தலிபான்கள் கட்டு பாட்டு பகுதியில் கார் குண்டு தாக்குதல்
ஆப்கானிஸ்தான் Kunduz மாநில பகுதியில் இடம் பெற்ற கார் குண்டு தாக்குதலில் சிக்கி
நால்வர் பலியாகியுள்ளனர்
மேலு பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த நாடு முழுவதும் தலிபான்கள் வசம் வீழ்ந்துள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
போலீசாரை போட்டு தாக்கிய வாலிபன் – முதல்ல இதை பாருங்க video
போலீசாரை போட்டு தாக்கிய வாலிபன் – முதல்ல இதை பாருங்க video
அவுஸ்ரேலியா சிட்னி Jacobs Street in Bankstown. பகுதியில் ஆண் ,பெண் அடங்கிய மூன்று காவல்துறை ஊழியர்கள் மீது நபர் ஒருவர் திடீர் தாக்குதலை நடத்தினர் ,மேற்படி தாக்குதல்
காட்சியை நபர் ஒருவர் படம் பிடித்து வெளியிட்ட நிலையில் அது தற்போது சமூக வலைத்தளங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை வைரலாகி வருகிறது
மேற்படி தாக்குதலை நடத்திய ஆப்பிரிக்கா நாநாட்டை சேர்ந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்
பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான் மூன்று காவல்துறை சிப்பாய்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
பற்றி எரிந்த வீடு – கருகி இறந்த 5 உயிர்கள்
பற்றி எரிந்த வீடு – கருகி இறந்த 5 உயிர்கள்
அமெரிக்கா northern Ohio பகுதியில் திடீரென வீடு ஒன்று தீ பற்றி எரிந்துள்ளது ,
இதன் பொழுது அந்த வீட்டுக்குள் இருந்த ஐவர் உடல் கருகி பலியாகினர் ,
மேலும் நான்கு
சிறுவர்கள் அதி தீ காயங்களுக்கு உள்ளான நிலையியல் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி தீ சம்பவம் தொடரப்பிலான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
மசாஜ் செய்துகொள்ளும் முறைகள்
மசாஜ் செய்துகொள்ளும் முறைகள்
அன்றாட பணிகளுக்கு மத்தியில் சுய மசாஜ் செய்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
மசாஜ் செய்வதற்கு அதற்குரிய மையங்களைத்தேடி செல்லவேண்டியதில்லை. ஒவ்வொருவரும் சுயமாகவே செய்துகொள்ளலாம். அதன் மூலம் வலி, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றை
நீக்கலாம். அன்றாட பணிகளுக்கு மத்தியில் சுய மசாஜ் செய்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. மசாஜ் செய்வது
ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். நரம்புகளை வலுப்படுத்தும். தசை இறுக்கத்தை குறைக்கும். தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் ரத்த வெள்ளைஅணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.
சுய மசாஜ் செய்துகொள்ளும் முறைகள்:
கண் மசாஜ்: லேப்டாப், கணினியில் அமர்ந்தபடி தொடர்ச்சியாக வேலை செய்யும்போது கண்களுக்கு அழுத்தம் உண்டாகும். காலப்போக்கில் கண் பார்வை பலவீனமடையும்.
இதனால் கண்களுக்கு மசாஜ் செய்வது நல்லது. உள்ளங்கைகளை நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய
வேண்டும். சிறிதளவு வெப்பம் உண்டானதும் கண்களில் ஒற்றியபடி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் கண்களில் கதகதப்பை உணரலாம்.
மார்பு மசாஜ்: இரு கைகளையும் மார்புக்கு அருகே எதிரெதிரே வைத்தபடி தோள்பட்டையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
மார்பிலும் மென்மையாக மசாஜ் செய்யலாம். அப்படி மசாஜ் செய்வது மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க உதவும். மன அமைதியை உணரலாம்.
வயிறு மசாஜ்: சாப்பிட்டு முடித்த பிறகு கைவிரல்களை வயிற்றில் மேல் பகுதியில் வைத்தபடி கடிகார சுழற்சியை போல வட்ட வடிவில் வயிற்று பகுதியை வருடி மசாஜ் செய்ய வேண்டும்.
அப்படி மசாஜ் செய்யும்போது சாப்பிட்ட உணவு அதே திசையில் சுழன்று குடலுக்கு இதமளிக்கும். அதனால் செரிமானம் எளிதாக நடைபெறும்.
கை மசாஜ்: காலை கடன்களை முடித்த பிறகு கிரீம் அல்லது லோஷன் தடவி கைகளை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். பின்பு விரல்களை கொண்டு உள்ளங்கையில் நன்றாக தேய்த்து மசாஜ்
மசாஜ் செய்துகொள்ளும் முறைகள்
செய்ய வேண்டும். வட்ட வடிவமான இயக்கத்தில் மசாஜை தொடர வேண்டும். கட்டை விரலை
மட்டுமே பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம். இப்படி மசாஜ் செய்வது சரும அமைப்பை மேம்படுத்தும். ரத்த ஓட்டத்தையும் துரிதப்படுத்தும்.
கழுத்து மசாஜ்: நாற்காலியில் அமர்ந்து வேலை செய்பவர்கள் கழுத்துக்கு பின் பகுதியில் கைவிரல்களை அழுத்தி மசாஜ் செய்யலாம். கழுத்தையொட்டிய பகுதியில் உள்ளங்கைகளை
அழுத்தி மேல் நோக்கியும், கீழ்நோக்கியும் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு தலையை இடது புறமாக சாய்த்து கழுத்து தோள்பட்டை வரை தேய்க்க வேண்டும். பின்பு மறு பக்கத்திலும்
தலையை சாய்த்து மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்துவந்தால் கழுத்துவலி எட்டிப்பார்க்காது.
பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்
பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்
கேரட்டை சாப்பிடும்போது, அதன் அளவை கவனிப்பது மிகவும் முக்கியம். அதிக அளவு கேரட்டை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும்.
பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள்
கொரோனா பரவல் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதற்காக பலரும் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள்.
அவை உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியவை. ஆனாலும் சில காய்கறிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நன்மையை விட தீங்குதான் விளைவிக்கும். அத்தகைய காய்கறிகள் பற்றி பார்ப்போம்.
காலிபிளவர்
முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த காலிபிளவர், பிராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பலரும் சாலட்டுகளில் இந்த
காய்கறிகளை சேர்த்து பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிடுவது வாயு தொல்லை மற்றும் அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தும். காலிபிளவரை பச்சையாக சாப்பிடுபவர்களும்
பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்
இருக்கிறார்கள். இந்த காய்கறிகளில் வயிற்றில் கரையாத ஒருவகை சர்க்கரை இருக்கிறது. சமைத்து உட்கொண்டால் மட்டுமே அந்தவகை சர்க்கரை எளிதாக கரையும்.
கத்திரிக்காய்
கத்திரிக்காயை பச்சையாக சாப்பிடுவது வாந்தி, தலைசுற்றல் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கத்தரிக்காயில் காணப்படும் சோலனைன், நரம்பியல் மற்றும் இரைப்பை
குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, கத்தரிக்காயை எப்போதும் சமைத்துதான் உண்ண வேண்டும். பாதி வேகவைத்த நிலையில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
பீட்ரூட்
பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். இதனை சிலர் சாலட்டுகள் மற்றும் சாண்ட்விச்களில் கலந்து சாப்பிடுகிறார்கள்.
பலர் பீட்ரூட்டை சாறு எடுத்து பருகுகிறார்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்றாலும் அளவோடுதான் பருக வேண்டும். பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளும்போது சிறுநீர் சிவப்பு
அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும். இதற்கு காரணம் பீட்ரூட்டிற்குள் காணப்படும் மூலக்கூறுகள்தான். அதுபற்றி பயப்படத்தேவையில்லை என்றாலும் பீட்ரூட்டை குறைந்த அளவு உட்கொள்வதுதான் நல்லது.
காளான்கள்
வைட்டமின் டி அதிகம் காணப்படும் சிறந்த உணவுப்பொருட்களில் ஒன்றாக காளான்கள் கருதப்படுகிறது.
இதனை உட்கொள்ளும்போது சிலருக்கு சருமத்தில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், காளான்களை முழுமையாக சமைத்து சாப்பிடுவது நல்லது.
கேரட்
கேரட்டில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் கேரட்டை சாப்பிடும்போது, அதன் அளவை கவனிப்பது மிகவும் முக்கியம்.
அதிக அளவு கேரட்டை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும்.
ஏனென்றால், கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடலில் அதிகமாக உள்நுழைந்துவிடும். ஆனால் ரத்தத்தில் கலக்காமல் தோலிலேயே படிந்துவிடும்.
அதன் காரணமாக கால்கள், கைகள் மற்றும் உள்ளங்கால்கள் போன்ற பகுதிகளில் நிற மாற்றம் தென்படும்.







