Author: நிருபர் காவலன்
ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்- மு.க.ஸ்டாலின்
ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்- மு.க.ஸ்டாலின்
கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களாகிய நீங்கள் வாக்களித்த காரணத்தால் தான், இந்த முதல்-அமைச்சர் பொறுப்பில் நான் உட்கார்ந்திருக்கிறேன்.
நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் – இன்றைக்கு நான் கோட்டையில் உட்காருவதற்கு அடித்தளமாக அமைந்தது. இவர்களுக்கு வாக்களித்தால், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள். மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்வார்கள் என்று நம்பி நீங்கள் வாக்களித்திருக்கிறீர்கள்.
நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை நாங்கள் இம்மியளவும் பிசகாமல் காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்.
நீங்கள் எங்களுக்கு வாக்களித்தீர்கள். நாங்கள் உங்களுக்குக் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளைக் காப்பாற்றி இருக்கிறோம். அதனால்தான் உங்கள் முன்னால் தைரியமாகப் பேசுகிறேன்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம்.
நான் அதை வெளியிட்ட போது, தலைவர் கலைஞர் பாணியில் ‘சொன்னதைச் செய்வோம் – செய்வதைத்தான் சொல்வோம்’- என்று சொன்னேன். ஆட்சிக்கு வந்து இன்றோடு 4 மாதங்கள்தான் கடந்துள்ளன. இந்த 4 மாதங்களுக்குள் சொன்னவற்றில் பெரும்பாலானவற்றைச் செய்து விட்டோம்.
505 வாக்குறுதிகளைத் தந்தோம். அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டோம். என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை நீங்களே பாருங்கள்.
மே 7-ந்தேதி பதவியேற்ற சில மணி நேரத்திலேயே ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டேன்.
- 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4,000 கொரோனா நிவாரண நிதியுதவி.
*ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு.
*மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
*மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்” துறை.
*தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதல்- அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு.
இந்த ஐந்தில் முதல் நான்குமே திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை. இதன் தொடர்ச்சியாக,
- வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், முதன்முறையாக வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
- கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.
3.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
- பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
- ஊரகப் பகுதிகளில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்துவது.
6.‘நமக்கு நாமே’ திட்டத்தை உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்துவது.
7.“இயற்கை வேளாண்மை வளர்ச்சித்திட்டம்” என்ற உன்னதத் திட்டம் நடப்பு 2021-22-ம் ஆண்டு செயல்படுத்துவது.
- அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைத்தல் மற்றும் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்தல்.
- ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 3 கோடி ரூபாய், வெள்ளிப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 2 கோடி ரூபாய் மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ. 1 கோடி வழங்குதல்.
- பத்திரிகையாளர்கள்; இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டுவழிச் சாலைத் திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், பொதுமக்கள்மீது போடப்பட்ட 5,570 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
11.மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் தாக்கல் செய்தல் மற்றும் தீர்மானம் நிறைவேற்றுதல்.
- கொரோனா சிகிச்சை பணியில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் கொரோனா இழப்பீட்டுத் தொகை.
- கொரோனா நோய்த் தொற்றால் காவல்துறையில் உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணத்தொகை.
- குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குதல். இத்திட்டத்தின்கீழ் 5 லட்சத்து 49 ஆயிரத்து 505 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
- தமிழக அரசிற்கு ஆலோசனைகளை வழங்கிட ‘முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’அமைக்கப்பட்டுள்ளது.
- பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.
- ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து தவறாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டது.
- மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.
- அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்வு.
இப்படி, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
சட்டசபை விவாதங்களை முழுமையாக கவனித்தவர்களுக்கு நான் சொல்வது முழு உண்மை என்பது தெரியும்!
வேளாண் நிதி நிலை அறிக்கையில் 23 வாக்குறுதிகளும்;
அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 64 வாக்குறுதிகளும்;
இதர அறிவிப்புகளில் 16 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.
மொத்தம் 202 வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன என்ற மகிழ்ச்சியான செய்தியை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்.
இன்னொரு முக்கியமான செய்தியை நான் சொல்ல வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன.
- அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து தொழிற்கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்தல். இப்படி இடம் பெற்றவர்களுக்குக் கட்டணம் முழுமையாகச் செலுத்த வேண்டியது இல்லை.
- அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு.
- திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை.
- கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி, கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும்.
- கொரோனாவால் தந்தை அல்லது தாயை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை.
- தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர் நலனைப் பேணிட வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ‘தமிழ்நாடு ஆதி திராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்’என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கச் சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கை.
- பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறையினர் “முன்களப் பணியாளர்”களாக அறிவிப்பு.
- அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கான சிறப்பு ஊக்கத்தொகை 5,000 ரூபாய் ஆக உயர்வு.
- கொரோனா தொற்றால் உயிரிழந்த அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்துறையினர்களுக்கான இழப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்வு.
- தமிழன், திராவிடம் ஆகிய சொற்களை அரசியல் களத்தில் முன்னெடுத்து போராடிய அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம்.
- கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-யின் பெருமையைப் போற்ற 14 அறிவிப்புகள்.
- பாட்டுக்கொரு புலவன் பாரதியை போற்றும் வகையில் 14 அறிவிப்புகள்.
- சமூகநீதியை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்கக் குழு.
- 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பலியான சமூக நீதிப் போராளிகளின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும்.
மக்களைத் தேடி மருத்துவம்
- இந்தியாவிலேயே முன்மாதிரித் திட்டமான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ தொடக்கம்.
- எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு அரசு மரியாதை, கோவில்பட்டியில் சிலை, இடைச்செவலில் அவர் படித்த பள்ளி புதுப்பிப்பு.
- தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்துச் சிறப்பிக்கும் வகையில், 5 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய ‘இலக்கிய மாமணி’ விருது உருவாக்கம்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.
- தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி, கலைஞரின் கனவை நனவாக்கும் வகையில் அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் – பெண் ஓதுவார் நியமனம்.
- ‘தகைசால் தமிழர்’ விருது உருவாக்கப்பட்டு, முதல் ஆண்டில் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் விடுதலைப் போராட்டத் தியாகியுமான தோழர் என். சங்கரய்யாவுக்கு நேரில் வழங்கப்பட்டது.
- சிவகளை ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தமிழர் நாகரிகத்தின் வேர்களைத் தேடி இந்தியத் துணைக்கண்டம் மற்றும் உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு.
இவை அனைத்துக்கும் மேலாக பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து சமூகநீதி உறுதிமொழி ஏற்பு.
இவை எல்லாம் நாங்கள் அறிவிக்காதது. ஆனால் செய்து கொடுக்கப்பட்டவை.
சொன்னதைச் செய்தவர்கள் மட்டுமல்ல – சொல்லாததையும் செய்து கொடுத்தவர்கள் நாங்கள்!
505 வாக்குறுதிகளில் நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியத் துணைக்கண்டத்திலேயே தி.மு.க. அரசாகத்தான் இருக்கும்.
இதனை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம்; எப்போதும் இப்படித்தான் இருப்போம். எல்லா நாளும் இப்படித்தான் செயல்படுவோம்.
இப்போது அறிவித்தது போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை நானே உங்களிடம் இதைச் சொல்வேன். நிறைவேற்றிய வாக்குறுதிகளை நானே உங்களுக்கு பட்டியல் போட்டுக் காண்பிப்பேன்.
வாக்களித்த மக்களை ஐந்து ஆண்டுகள் கழித்துத்தானே பார்க்கப் போகிறோம் என்று அலட்சியமாக இருப்பவன் இல்லை நான். என்னை இயக்கிக் கொண்டு இருப்பது மக்களாகிய நீங்களும் எனது மனசாட்சியும்தான்.
நீங்கள் உத்தரவிடுங்கள். உங்களுக்காகவே உழைக்கக் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வக்கிர எண்ணங்கள் நாட்டை உருப்படவிடாது! சிறி எம்பி
இலங்கை அரசாங்கத்தின் வக்கிர எண்ணங்கள் நாட்டை உருப்படவிடாது! (முன்ணோட்டம்)
தமிழர் வாழ இவர்கள் வருவார்களா
தமிழர் வாழ இவர்கள் வருவார்களா
சோழ பரம்பரை ஆண்ட கடலினுள்
வேங்கை படை இல்லையா ?
கரிகாலன் ஆண்ட பூமியில்
காக்கை வன்னியரா
கொல்லி வைத்தவன் குடிமனை புகுந்து
கொள்கை சொல்லிடவோ
அள்ளி வைத்தவர் ஆக்கினை புரிந்தவர்
அரியணை ஆண்டிடவோ
செந்தமிழ் பாடியே ஆடிய புலவர்
செம்மண் மிதிபடவோ
வந்தேறி ஆரியர் வழங்களை சுரண்டி – தமிழ்
வம்சம் அழிப்பதுவோ
கந்தக தீயில் வெந்திட இலங்கா
கலகம் பிறந்திடுமா
கொன்றவன் வாயிலில் கொலைகள் வீழ்ந்திட
கொடும் பகை தகர்ந்திடுமா
வான் படை காவியே வானில் ஏறிய
வரி புலி வந்திடுமா ?
வரும் தளிர் செழித்திட மொழியும் விழித்திட
வாயில் வந்திடுமா ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 24-09-2021
காபூல் பல்கலைக்கழகத்தில் 70 பேராசிரியர்கள் ராஜினாமா.
காபூல் பல்கலைக்கழகத்தில் 70 பேராசிரியர்கள் ராஜினாமா.
ஆப்கானிஸ்தான் காபூல் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் நியமனத்துக்கு தலிபான் உறுப்பினர்களில் சிலரும் கூட தங்களுடைய விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் காபூல் பல்கலைக்கழகத்தில் 70 பேராசிரியர்கள் ராஜினாமா
காபூல் பல்கலைக்கழகம்
காபூல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான போரில் ஆட்சியை தலிபான்கள் அமைப்பு கைப்பற்றியது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடினார். அந்நாட்டில் போதிய உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 5 வயதுக்கு உட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வருகின்றனர் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள மிகப்பெரிய காபூல் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தவர் முகமது உஸ்மான் பாபுரி. பிஎச்.டி. முடித்தவர். அனுபவம் வாய்ந்தவர்.
இதற்கிடையே, தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அவரை நீக்கி விட்டு, பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ள முகமது அஷ்ரப் கைராத் என்பவரை அந்தப் பதவிக்கு நியமித்துள்ளனர். இதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் கொலையை நியாயப்படுத்தி கைராத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை விமர்சகர்கள் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், காபூல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த துணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் என மொத்தம் 70 பேராசிரியர்கள் பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் – பிரதமர் மோடி புகழாரம்
கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் – பிரதமர் மோடி புகழாரம்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்தியா வரவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் – பிரதமர் மோடி புகழாரம்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை இன்று சந்தித்தார். அதையடுத்து, இருவரும் இணைந்து கூட்டறிக்கை
வெளியிட்டனர். அதன்பின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
அமெரிக்காவின் துணை அதிபராக உங்களை தேர்வு செய்தது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வாகும். நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள்.
ஜோ பைடன் மற்றும் உங்கள் தலைமையின் கீழ் எங்கள் இருதரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள். இந்தியா வருகைக்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டபோது இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியதற்காக நான் அமெரிக்காவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான பங்காளிகள். அவர்கள் ஒரே மாதிரியான மதிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
துணை அதிபர் கமலா ஹாரிஸ்
இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான துடிப்பான மற்றும் வலுவான மக்கள் தொடர்பு எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக உள்ளது, அவர்களின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை என தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் கூட்டறிக்கைக்குப் பிறகு வெள்ளை மாளிகை வளாகத்தில் உரையாடினர்.
இதையும் படியுங்கள்…அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி இந்தியா – கமலா ஹாரிஸ் பெருமிதம்
எங்கள் தலைவிதி ….!
எங்கள் தலைவிதி ….!
இளம் காற்று பாடும் ஈழ கரையோரம்
இதயங்கள் நொறுங்கும் சோக துயரம்
எவர் செய்த சதியோ இத்துயர் கோலம்
எங்களின் வாழ்வில் ஏனோ இப் பாரம்
கரும்புகை ஏறி வானை மறைக்கும்
கந்த துகளில் மூச்சு உறையும்
வெடியோசை மண் கிளற வீழ்ந்தே இறந்தோம்
உடன் இருந்தார் விட்டே ஊர் ஏறி கடந்தோம்
வலியில் நெஞ்சு வாடி தவிக்க
வழி தெரியா நின்றோம்
உரிமை போரும் முடிவில் தவிக்க
உதவுவார் இன்றி ஏங்கி தவித்தோம்
தரணியில் நாங்கள் பிறந்தது கேடா
தமிழனாய் இங்கு வாழ்தல் பிழையா
சுதந்திரம் கேட்டோல் சூடு காடா
சுதந்திர தேசமே நீதி இல்லையா
மொத்த தமிழன் அழித்தான் உலகில் நடக்கிறான்
ஒட்டு துணி இல்லா தமிழன் தவிக்கிறான்
இத்துயரில் தினமும் எங்களின் தேசம்
இதயம் இல்லா நடக்கும் உலகம்..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 25-03-2021
http://ethirinews.com/
சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட பிரேசில் அதிபர்
சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட பிரேசில் அதிபர்
ஜெய்ர் போல்சனரோ சாலையோரத்தில் நின்று பீட்சா சாப்பிடும் புகைப்படத்தை அவரது சக மந்திரிகள் டுவிட்டரில் பகிர்ந்தனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஓட்டலில் அனுமதி மறுப்பு: சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட பிரேசில் அதிபர்
சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட பிரேசில் அதிபர்
கொரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல் போன்றதே என கூறிவரும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முககவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதே போல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அவர் மறுத்து வருகிறார்.
இந்தநிலையில் அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. சபை பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் தனது சக மந்திரிகளுடன் சேர்ந்து நியூயார்க் நகரில் உள்ள ஓட்டலுக்கு இரவு உணவு அருந்த சென்றார்.
ஆனால் அந்த ஓட்டலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே உணவு அருந்த முடியும் என்பதால் ஜெய்ர் போல்சனரோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து, ஜெய்ர் போல்சனரோ தனது சக மந்திரிகளுடன் சேர்ந்து சாலையோரம் உள்ள ஒரு உணவகத்தில் ‘பீட்சா’ வாங்கி சாப்பிட்டார்.
ஜெய்ர் போல்சனரோ சாலையோரத்தில் நின்று பீட்சா சாப்பிடும் புகைப்படத்தை அவரது சக மந்திரிகள் டுவிட்டரில் பகிர்ந்தனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் பிரதமர் மோடியை – வரவேற்ற இந்தியர்கள்
அமெரிக்காவில் பிரதமர் மோடியை – வரவேற்ற இந்தியர்கள்
வாஷிங்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோர் வரவேற்றனர்.
அமெரிக்காவில் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்ற இந்தியர்கள்
குவாட் மாநாடு, ஐநா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இன்று வாஷிங்டன் சென்றடைந்த அவரை விமான நிலையத்தில் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து
ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான அமெரிக்கவாழ் இந்தியர்கள் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுடன் மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.
தனது சுற்றுப்பயணத்தின் முதல் நாளான இன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்,
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை மோடி சந்தித்து பேசுகிறார்.
மோடியை வரவேற்ற இந்திய பெண்கள்
மோடி உடனான சந்திப்பில் குவல்காம், அடோப், பர்ஸ்ட் சோலார், ஜெனரல் ஆட்டோமிக்ஸ், பிளாக்ஸ்டோன் நிறுவன தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஓடிப்போன இளம்ஜோடிக்கு நூதன தண்டனை வழங்கிய கிராம மக்கள்.
ஓடிப்போன இளம்ஜோடிக்கு நூதன தண்டனை வழங்கிய கிராம மக்கள்.
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குந்தி கிராமத்தில் ஓடிப்போன இளம்ஜோடிக்கு கிராம மக்கள் நூதன தண்டனை வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஓடிப்போன இளம்ஜோடிக்கு நூதன தண்டனை வழங்கிய கிராம மக்கள்
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குந்தி கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஜூலை மாதம் காணாமல் போனார். அதுதொடர்பாக அவருடைய பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
அவர் அதே கிராமத்தை சேர்ந்த 21 வயது வாலிபருடன் ஓடிப்போனது தெரிய வந்தது. அவர்கள் ஓடிப்போக 13 வயது சிறுமி உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் ஆத்திரத்துடன் அவர்களின் வருகைக்காக காத்திருந்தனர். ஓடிப்போன இருவரும் குஜராத் மாநிலத்துக்கு சென்று வசித்தனர். இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு இருவரும் தங்கள் கிராமத்துக்கு திரும்பினர்.
அவர்களை பிடித்த கிராம மக்கள், ஓடிப்போனதற்கு தண்டனையாக, நடுரோட்டில் அவர்களது கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயரை போட்டு, அவர்களை ஆட வைத்தனர். அவர்களும் வேறுவழியின்றி கழுத்தில் டயருடன் நடனம் ஆடினர். அவர்களுக்கு உதவிய 13 வயது சிறுமிக்கும் அதே தண்டனை அளிக்கப்பட்டது.
அப்போது, ஒரு நபர் அவர்களை பிரம்பால் அடித்தபடி இருந்தார். இந்த காட்சியை மற்றொருவர் வீடியோ எடுத்தார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தார் போலீசார், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மீதி 2 பேரை தேடி வருகின்றனர்.
கனடா பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கட்சி வெற்றி
கனடா பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கட்சி வெற்றி
பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால் அடுத்த 4 ஆண்டுகள் சிறுபான்மை அரசின் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ தொடர உள்ளார்.
கனடா பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கட்சி வெற்றி
ஜஸ்டின் ட்ருடோ
கனடா நாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 338 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை.
ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சி 155 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இதனால் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ நீடித்தார்.
இதற்கிடையே பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்துவதை விரும்பாத ஜஸ்டின் ட்ருடோ முன் கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி கனடா பாராளுமன்றம் கலைக்கப்பட்டு செப்டம்பர் 20-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் லிபரல் கட்சிக்கும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஜஸ்டின் ட்ருடோ (லிபரல் கட்சி), எரின் ஓடூல் (கன்சர்வேட்டிங் கட்சி) ஆகியோர் மல்லுக்கட்டினர்.
கனடா பாராளுமன்ற தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. உடனே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் லிபரல் கட்சி 156 இடங்களில் முன்னிலை பெற்றது. இதனால் அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ
கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலை பெற்றது. பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால் அடுத்த 4 ஆண்டுகள் சிறுபான்மை அரசின் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ தொடர உள்ளார்.
தேர்தல் வெற்றியை அடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும் போது, “நன்றி கனடா. உங்கள் வாக்கை அளித்ததற்காக, லிபரல் கட்சி மீது நம்பிக்கை வைத்ததற்காக பிரகாசமான எதிர்காலத்தை தேர்ந்தெடுத்தற்காக நன்றி. நாம், கொரோனாவுக்கு எதிராக போராட்டத்தை முடிக்க போகிறோம். நாம் கனடாவை முன்னோக்கி கொண்டு செல்ல போகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
ரஷ்ய தேர்தலில் அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி
ரஷ்ய தேர்தலில் அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி அபார வெற்றி பெற்றது.
ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி
450 இடங்களைக் கொண்ட ரஷ்யா பாராளுமன்றத்துக்கு கடந்த 17-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் தேர்தல் நடந்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் நடந்தது.
அதிபர் புதினின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு புதின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு பாராளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்பட்டது.
மேலும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத்தது, அவரது கட்சி உள்பட பல எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தது போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை
இந்நிலையில், நேற்றுமுன்தினம் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின.
ஆரம்பத்தில் இருந்தே அதிபர் புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சி முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதன்படி இந்த தேர்தலில் அதிபர் புதினின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதுவரை எண்ணப்பட்ட 80 சதவீத வாக்குகளில் ஐக்கிய ரஷ்யா கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அத்துடன், மொத்தம் உள்ள 450 இடங்களில் 350-க்கும் அதிகமான இடங்களில் தங்கள் கட்சி வெற்றி பெற்றதாக ஐக்கிய ரஷ்யா கட்சியின் மூதத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
லொஹான் ரத்வத்த பதவியை பிடுங்கு–பாராளுமன்றில் வெடித்த ஸ்ரீதரன் எம்பி -video
லொஹான் ரத்வத்த பதவியை பிடுங்கு–பாராளுமன்றில் வெடித்த ஸ்ரீதரன் எம்பி -video
அரசியல் கைதி யாரும் கொல்லப்பட்டிருந்தால் லொஹான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லியிருப்பார்கள்: சபையில் சிறீதரன் எம்.பி!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், ஓமந்தையில் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ் வழங்குவது என்பது அவர்கள் இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்பதையா எடுத்துக் காட்டுகிறது? சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி!
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்து அதில் தமிழ் கைதிகள் மரணித்திருப்பார்களாயின், லொஹான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியிருப்பார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நின்றிருந்தவர்களை, இராணுவ சிப்பாய் ஒருவர் 1985ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார். அதில் 10 பேர் மரணித்தனர்.
அச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பின்னர் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்தனர்.
அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயும், அவரது சகாக்களும் துப்பாக்கியை காண்பித்து தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து அச்சுறுத்தியிருந்தனர்.
தங்களுடைய சப்பாத்துக்களை நக்கி சுத்தம் செய்யுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
துப்பாக்கி அல்லது வெடி பொருட்களை சாதாரண ஒருவர் வைத்திருந்து கைது செய்யப்பட்டிருந்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால், லொஹான் ரத்வத்தேயின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்திருந்தால், அதில் தமிழ் கைதிகள் மரணித்திருப்பார்களாயின், லொஹான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியிருப்பார்கள்.
தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் காலம் காலமாக தொடர்ச்சியாக வன்முறை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லொஹான் ரத்வத்த அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து சுட்டு கொள்வேன் என துப்பாக்கியால் விரட்டிய செயற்பாடு அரசின் எதேச்சதிகார செயற்பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் மிலேச்சத்தனமான செயற்பாடு இந்த நாட்டின் சட்டத்தையும் நீதியையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.
சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர், கொழும்பிலிருந்து அனுராதபுரத்துக்கு ஹெலியில் பயணித்து, தனது நண்பர் குழாமுடன் சிறைச்சாலைக்குள் நுழைந்ததோடு, அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை மிலேச்சத்தனமாக, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியுள்ளமை கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
இச் செயற்பாடானது, இந்த நாட்டின் சட்டம், நீதி, இனநல்லிணக்கம் என்பவற்றை கேள்விக்குட்படுத்துவதோடு, கடந்தகாலங்களில் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் அப்பாவித் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புச் சம்பவங்களை மீள நினைவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.
1983 ஆம் ஆண்டு கொழும்பின் உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையான வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைத்து 53 தமிழ் அரசியல் கைதிகள், சக சிங்களக் கைதிகளால் குத்தியும், வெட்டியும் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
2000.10.25 ஆம் திகதியன்று மத்திய மாகாணத்தின் பிந்துனுவேவா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் காடையர் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2012.07.04 ஆம் திகதி வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளான நிமலரூபன், டில்றுக்சன் ஆகிய இரு தமிழ் அரசியல் கைதிகளும் சிறைச்சாலைப் பொலிசாராலும், இராவத்தினராலும் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறான சிறைச்சாலைப் படுகொலைகள் அனைத்தும் தமிழ் அரசியல் கைதிகளை இலக்குவைத்து தொடர்ச்சியாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த நிலையில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் ப
video
வடகொரிய அதிபர் கிம்மை – திட்டிய டிரம்ப்
வடகொரிய அதிபர் கிம்மை – திட்டிய டிரம்ப்
ஒரு கட்டத்தில் டிரம்ப், கிம்மை நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவும் சுமுக உறவு ஏற்படும் எனத் தோன்றியது.
வடகொரிய அதிபர் கிம்மை சர்ச்சைக்குரிய வகையில் திட்டிய டிரம்ப்- வெளியான அதிர்ச்சி தகவல்
கிம் ஜாங், டிரம்ப்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் பொது இடங்களில் நட்பு பாராட்டி வந்தார். அப்படி இருப்பினும் டிரம்ப், கிம்மை சர்ச்சைக்குரிய வகையில் திட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
டிரம்ப், அதிபராக இருந்தபோது வடகொரியாவில் நடந்து வந்த அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவதற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஒரு கட்டத்தில் டிரம்ப், கிம்மை நேரடியாக
சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவும் சுமுக உறவு ஏற்படும் எனத் தோன்றியது.
ஆனால், இப்போது வரை இரு நாடுகளுக்கும் இடையில் சுமுக போக்கு இல்லை. இந்நிலையில் வெளிப்படையாக கிம்மை தன் நண்பன் என்று சொல்லி வந்தாலும், அவரை சர்ச்சைக்குரிய வகையில் டிரம்ப் திட்டி தீர்த்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் பாப் உட்வார்டு மற்றும் ராபர்ட் கோஸ்டா ஆகியோர், டிரம்ப் – கிம் சம்பந்தமான ஒரு புத்தகத்தை வெளியிட உள்ளனர்.
அந்தப் புத்தகத்தில்தான், கிம் குறித்து டிரம்ப் தன் உயர் அதிகாரிகளோடு உரையாடுகையில், ‘அவர் ஒரு பைத்தியக்காரன்’ என்று சொல்லியிருப்பதாக தகவல்.
ஜோ பைடனை சந்திக்கிறார் பிரமதர் மோடி
ஜோ பைடனை சந்திக்கிறார் பிரமதர் மோடி
குவாட் அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவில் செப்டம்பர் 24ம் தேதி நடைபெற உள்ளது.
செப்டம்பர் 24-ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார் பிரமதர் மோடி – வெள்ளை மாளிகை
அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி
வாஷிங்டன்:
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில் வரும் 24-ம் தேதி நடக்க உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குவாட் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செப்டம்பர் 22-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். 23-ம் தேதி அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களைச் சந்திக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரையும் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி சந்தித்துப் பேசுகிறார். அதன்பின், செப்டம்பர் 25-ம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை நிகழ்த்த உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
107 வயதில் உலக சாதனை படைத்த ஜ இரட்டை சகோதரிகள்
107 வயதில் உலக சாதனை படைத்த ஜ இரட்டை சகோதரிகள்
107 வயதான ஜப்பானிய இரட்டையர்கள் உலகின் வயதானவர்கள் என்ற சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.
107 வயதில் உலக சாதனை படைத்த ஜப்பானிய இரட்டை சகோதரிகள்
உமேனோ, கோமே
டோக்கியோ:
ஜப்பானில் உள்ள 125 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 29 சதவீதம் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்று சுகாதார நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 107 வயதான ஜப்பானிய இரட்டையர்கள் உலகின் வயதானவர்கள் என்ற சாதனையை படைத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். இரு
சகோதரிகளும் 107 வயது, 330 நாட்களை கருத்தில் கொண்டு உலகின் வயதான இரட்டையர்கள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
சகோதரிகளான உமேனோ சுமியாமா மற்றும் கோமே கோடாமா 1913, நவம்பர் 5-ல் 11 உடன்பிறப்புகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது பிள்ளைகளாக மேற்கு ஜப்பானில் உள்ள ஷோடோஷிமா தீவில் பிறந்தனர்.
பல பத்தாண்டுகளாக தங்கள் சொந்த வாழ்க்கையில் பிசியாக இருந்த சகோதரிகள், 70 வயது வரை அரிதாகவே சந்தித்துள்ளனர். தற்போது தனித்தனியாக ஹோம்களில் வசித்து வரும் இவர்களிடம் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.
முன்னதாக, பிரபல ஜப்பானிய இரட்டை சகோதரிகள் கின் நரிதா மற்றும் ஜின் கேனி ஆகியோர் 107 ஆண்டுகள் மற்றும் 175 நாட்கள் என்ற முந்தைய சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் வாழ உயிர் கொடு
நான் வாழ உயிர் கொடு
இடையாலே எந்தன் இதயத்தை
இடித்தேண்டி போகிறாய்
முலை காட்டி எந்தன் ஆசைக்கு
மூட்டி தீ ஏன் வைக்கிறாய்
கூந்தலில் காய்கின்ற மல்லிகையாய்
கூடியே நானும் உலர்ந்திடவா –?
அத்தனை ஆனந்தம் உனக்கென்றால்
அடியே நானும் காய்ந்திடவா ..?
ஊருக்கு ஊரடங்கு போட்டு வைத்து
உள்ளத்துள் புகுந்து விடு
யாருக்கும் தெரியாமல் நாமினைந்து
யாகம் நடத்திடுவோம் வந்து விடு
கரை தேடும் அலையாக ஓடி வந்து – எந்தன்
காதல் கால்தடம் நனைத்து விடு
பூமழை பொழியும் மார்கழியாய் – உந்தன்
புன்னகை வந்து கொட்டி விடு
கட்டுடைத்து பாயும் வெள்ளம் போல – என்
கன்னத்தில் வந்து முத்தமிடு
நீயிட்ட முத்தத்தை நான் குடித்து – இந்த
நிகழ் காலம் வாழ உயிர் கொடு ..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 20-09-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
http://ethirinews.com/
சிரியா -ஈராக் எல்லையில் திடீரென நுழைந்த அமெரிக்கா இராணுவம்
சிரியா -ஈராக் எல்லையில் திடீரென நுழைந்த அமெரிக்கா இராணுவம்
சிரியா ஈராக்கிய எல்லை பகுதியில் திடீரென அமெரிக்கா இராணுவம் நுழைந்துள்ளது ,இந்த இராணுவ படை நகர்வு அவர்களின் இலக்கை எட்டியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது
ரசியா ஈரான் ,சிரியா அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் அமெரிக்கா படைகளின் திடீர் நகர்வு சநதேக த்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
படகு கவிழ்ந்து 8 பேர் மரணம் – பலரை காணவில்லை
படகு கவிழ்ந்து 8 பேர் மரணம் – பலரை காணவில்லை
சீனாவில் கால்வாய் ஒன்றில் புறப்பட்டு சென்று கொண்டிருந்த படகு ஒன்று தீடிரென கவிழ்ந்ததில்
அதில் பயணித்த எட்டு பேர் சடலங்களாக மீட்க பட்டுள்ளனர் ,மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்
காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்
இறப்பு எணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது
சிறுநீர் -பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை
சிறுநீர் -பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை
பெண்களுக்கு பிரசவத்தின் போதும், கர்ப்பப்பை தொடர்பான அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப்பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப் பை (Uterus), சிறுநீர்ப் பை (UrinaryBladder) கர்ப்பப் பை வாய்க்குழாய் (Vagina),சிறுநீர் குழாய் (Urethra) மலக் குடல் (Rectum) ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன.
இதனால் பிரசவத்தின்போதும், கர்ப்பப்பை தொடர்பான
அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப் பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. விளைவு, சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை (Incontinence) 63 சதவீத
பெண்களுக்கு உள்ளது. இப்பிரச்சினையை வெளியே சொல்லுவதற்கு பெண்களிடம் தயக்கம், கூச்ச சுபாவம் இன்னமும் தொடர்கிறது.
மருத்துவ முன்னேற்றம் காரணமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நவீன சிகிச்சை உள்ளது.
ஒரு பெண் வளர்ந்து பூப்பெய்து, திருமணம் செய்து கொள்ளும் வரை பெரும்பாலும் தொடர் சிறுநீர்ப் பிரச்சினைகள் வருவதில்லை. ஏற்கெனவே சொன்னது போல், பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பப்பை, சிறுநீர்ப் பை, கர்ப்பப்பை வாய்க்குழாய், சிறுநீர்க் குழாய், மலக்குடல் ஆகியவை மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன.
இயல்பான பிரசவத்தின் போது குழந்தை வெளியே வரும்போது கர்ப்பப் பையை ஒட்டினாற்போல் உள்ள சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவை அழுத்தத்துக்குள்ளாகி சிறுநீர்ப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.
இதே போன்று பிரசவம் தாமதமாகி ஆயுதம் பயன்படுத்தப்படுதல், சிசேரியன்,
கர்ப்பப்பை நீக்குதல் அறுவைச் சிகிச்சைகளின் போதும் இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையில் ஓட்டை ஏற்படலாம்.
இதனால் சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை சிறுநீர்ப் பை இழக்க (Incontinence) நேரிடும். தொடர்ந்து சிறுநீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.
சிறுநீர் -பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை
சிறுநீர் கட்டுப்பாடு இல்லாத பிரச்சினைகளுக்குச் சிகிச்சை என்ன?
- சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறும் பிரச்சினைக்கு (Uroflowmeter) பிரச்சினையின் தன்மைக்கு ஏற்ப கூபகத் தசைப் பயிற்சி, மருந்துகள், அறுவைச் சிகிச்சை ஆகியவை பலன் அளிக்கும்.
- சிறுநீரை வெளியேற்றுவதில் சிறுநீர்ப் பைக்குப் பயிற்சி (Bladder Training): பெண்கள் வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையில், சிறுநீர் கழித்துவிட்டுப் புறப்படுவது வழக்கம்.
- ஏனெனில் போகும் இடத்தில் கழிப்பறை இருக்குமோ, இருக்காதோ என்ற சந்தேகம். இதனால் சிறு நீர்ப்பை முழுவதும் நிரம்பாமலேயே சிறுநீரை வெளியேற்றும் பழக்கம் ஆரம்பிக்கிறது.
- இதனால் சிறிதளவு மட்டுமே சிறுநீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மைக்கு சிறுநீர்ப்பை (Bladder) உட்படுகிறது.
- தொடர் பழக்கம் காரணமாகச் சிறிதளவு சிறுநீர் சேர்ந்தவுடனேயே வெளியேற்றும் தன்மையும் உருவாகி விடுகிறது. இது நல்லது அல்ல.
- குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தில் கழிப்பறை சுகாதாரமின்மையை மனத்தில் கொண்டு மாலை வரை சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள்.
- இதனால் சிறுநீர்ப் பையில் சிறுநீர் நிரம்பு நோய்த் தொற்றும் ஏற்படும். எனவே அலுவலகத்திலும் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும்.
- மேலும் கழிப்பறைக்குச் செல்வதில் குறிப்பிட்ட நேரங்களை ஆரம்பம் முதலே நிர்ணயித்துக் கொள்ளுதல் நல்லது.
- கூபகத் தசைகளுக்குப் பயிற்சி (Pelvic Floor Exercises): கூபகத் தசைகளுக்கு எளிய பயிற்சிகள் கொடுத்து சிறுநீர்ப் பையின் கட்டுப்பாட்டுத் தன்மையை மேம்படுத்த முடியும். பெண்கள் எப்போது வேண்டுமானாலும் அப்பயிற்சியினை செய்யலாம்.
- தினந்தோறும் செய்ய வேண்டிய அப் பயிற்சிகளின் பலன் வெளிப்படுத்துவதற்கு சில வாரங்கள், சில மாதங்கள் ஆகலாம். பொறுமை அவசியம்.
ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் திறப்பு: மாணவிகளுக்கு அனுமதி இல்லை
ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் திறப்பு: மாணவிகளுக்கு அனுமதி இல்லை
மகளிர் நலத்தறை அமைச்சகத்தின் பெயரை ஊக்குவித்தல் மற்றும் நல் ஒழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமையைத் தடுத்தல்துறை என்று தலிபான் அரசு பெயர் மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் திறப்பு: மாணவிகளுக்கு அனுமதி இல்லை – தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவிகள் பள்ளிக்கு வருவது குறித்து தலிபான் அரசு ஏதும் அறிவிக்கவில்லை.
ஆப்கானிஸ்தான் முழுவதும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைத் திறக்க தலிபான்கள் தலைமையிலான கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவில் பள்ளிக் கூடத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து, 1990-களில் இருந்த அடக்கு முறை ஆட்சியைப்போன்று இந்த ஆட்சி இருக்காது. என்றும், பெண்களுக்கு கல்வி உரிமை, வேலைக்குச்
செல்லும் உரிமை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்து இருந்தது. இந்த நிலையில், மாணவிகள் பள்ளிக்கு வருகை தருவது குறித்து எதுவும் அறிவிக்கப்படாததால், அளித்த வாக்குறுதிக்கு மாறாக தலிபான்கள் தற்போது செயல்படுவதாக தெரிகிறது.
ஆரம்பப்பள்ளிகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவ-மாணவிகளை தனித்தனி வகுப்புகளில் அமர வைத்து பாடம் எடுக்கின்றனர். ஒரு சில ஆசிரியைகளை கடும் ஆடை கட்டுப்பாடுகளுடன் பல்கலைக்கழகத்திற்கு செல்லவும் அனுமதித்துள்ளனர்.
ஆனால் மகளிர் விவகாரத்துறை அமைச்சகத்தில் பெண் ஊழியர்கள் அனுமதிக்கப்படவில்லை. மகளிர் நலத்தறை அமைச்சகத்தின் பெயரையும் “ஊக்குவித்தல் மற்றும் நல் ஒழுக்கத்தை
மேம்படுத்துதல் மற்றும் தீமையைத் தடுத்தல்துறை” என்று தலிபான் அரசு பெயர் மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.







