Posted in Uncategorized

துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்

துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்

துருக்கியில் இருந்து பாகிஸ்தானும் நேரடியான ரயில்சேவை ஆரம்பிக்க பட்டுள்ளது ,இந்த

தொடரூந்து ஈரான் ஊடாக பாகிஸ்தான் சென்றடையும் ,இதனால் மூன்று நாடுகள் கூட்டணிவோ

டு இந்த சேவை இடம் பெறுவதால் மூன்று நாடுகளும் பயன அடைகின்றது எனலாம் .

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உன் காதலை சொல்லிடு …!

    உன் காதலை சொல்லிடு …!

    நான் உலாவும் வீதியிலே
    நாளை நீயும் உலவிடு
    நானும் நொந்த நாளினையே
    நகல் எடுத்து சென்றிடு

    ஆள் உலாவும் வீதியிலே
    அமைதியானால் ஏற்று விடு
    அன்பு உலாவும் வீதியிலே
    அமைதி ஆனாய் செத்திடு

    வான் நிலவு வீதியிலே
    வந்து விட்டால் பார்த்திடு
    வந்து நின்ற செய்தியென்ன
    வாசல் வந்து சொல்லிடு

    ஏற்று விட்டால் என்னன்பே
    ஏறி வந்து சொல்லிடு
    என்னுறக்கம் தொலைத்த நாளை
    எழுதி வைத்து சென்றிடு

    உன்னுறக்கம் நீ தொலைத்தால்
    உள்ளம் என்னை ஏற்றிடு
    உன் உளமதில் யானமர்ந்தேன்
    ஊர்ந்து வந்து கொஞ்சிடு …!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 26-12-2021

      Posted in Uncategorized

      5 வயது சிறுவனை கடித்து கொன்ற நாய்

      5 வயது சிறுவனை கடித்து கொன்ற நாய்

      அவுஸ்ரேலியா நாட்டில் தங்க கடற்கரை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் ஐந்து வயது சிறுவன்

      ஒருவனை நாய் ஒன்று அவனது கழுத்தில் கடித்து கொலை செய்துள்ளது

      பலத்த கடி காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்ட சிறுவன் மருத்துவ மனையில்

      அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்

      தற்போது நாயின் உரிமையாளர் கைது செய்ய பட்டுள்ளார் ,மேற்படி சம்பவம் உலக அரங்களில்

      பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

        Posted in Uncategorized

        உணவகத்திற்குள் இருவர் சுட்டு கொலை

        உணவகத்திற்குள் இருவர் சுட்டு கொலை

        அமெரிக்கா Kentucky பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் வைத்து இருவர் சுட்டு கொலை

        செய்ய பட்டுள்ளனர்

        இறந்த இரு ஆண்கள் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது

        இந்த கொலை ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          Posted in Uncategorized

          உலகை அதிரவைத்த ஈரான் ஏவுகணைகள் – பாரிய போர் ஒத்திகை

          உலகை அதிரவைத்த ஈரான் ஏவுகணைகள் – பாரிய போர் ஒத்திகை

          ஈரான் நாடு தான் தயாரித்துள்ள மிக முக்கிய ஏவுகணைகள் உள்ளிட்ட போர் ஆயுதங்களை பயன்

          படுத்தி பாரிய இராணுவ ஒத்திகை ஒன்றை நடத்தியது

          பாரசீர வளைகுடாவை நோக்கி நடத்த பட்ட இந்த ஏவுகணை தாக்குதல் மற்றும் ஒத்திகை என்பன

          உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,

          ஈரானின் திடீர் இராணுவ நடவடிக்கை எந்த நாட்டுக்கு விடுக்க பட்டுள்ளது என்பதே இன்றைய

          கேள்வியாக எழுந்துள்ளது

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டனில் எகிறிய கொரனோ – 122 ஆயிரம் பேர் ஒரே நாளில் பாதிப்பு

            பிரிட்டனில் எகிறிய கொரனோ – 122 ஆயிரம் பேர் ஒரே நாளில் பாதிப்பு

            பிரிட்டனில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 122 ஆயிரம்

            பேர் பாதிக்க பட்டுள்ளனர்

            மேலும் வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற நிலையில் நாடு இடைக்கால

            முடக்க நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              இதுதான் மனித வாழ்வு பார் …!

              இதுதான் மனித வாழ்வு பார் …!

              ஊருக்குள் வேட்டை நடக்குது பார்
              உரையாடல் வீதி கேட்குது பார்
              ஆளுக்குள் மோதல் வெடிக்குது பார்
              ஆயிரம் புகார் கொட்டுது பார்

              முன்னைய பகை போராடுது பார்
              முகங்கள் இங்கே கிழியுது பார்
              தன் மானம் இங்கே தவறுது பார்
              தறிகெட்டு வார்த்தை கொட்டுது பார்

              தானே மேலென கொத்துறார் பார்
              தவறுகள் இங்கே கொட்டுறார் பார்
              வீழ்வேனோ தானென விரட்டிறார் பார்
              வீழ்ந்திட்டார் இப்போ மறந்திட்டார் பார்

              சிந்தையில் தவறு சிரிக்குது பார்
              சீக்கிரம் உன்னை மாற்றும் பார்
              முன்னைய நிகழ்வு தவறுதான் பார்
              மூளை கூறும் பொறுத்து பார்

              பக்குவம் உன்னில் படருது பார்
              பகையிலும் பாசம் பொழியும் பார்
              போர்குணம் இன்று செத்தது பார்
              பொற்குணம் உன்னில் மலருது பார்

              இது தான் முதுமை இன்றுபார்
              இளைப்பாறும் காலம் இதுவே பார்
              தவறுகள் திருத்தும் அகவை பார்
              தவறா மனிதம் இதிலே பார்

              கடந்ததை எண்ணி வருத்தும் பார்
              கல்லான மனமும் கனியும் பார்
              இதுதான் பக்குவ முதுமை பார்
              இதுதான் மனித வாழ்வு பார் …!

              வன்னி மைந்தன்
              ஆக்கம் 25-12-2021

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                காத்திரு உன் கடன் தீர்ப்பேன் ..!

                காத்திரு உன் கடன் தீர்ப்பேன் ..!

                உள்நாட்டு போர் வெடிக்க
                ஊந்துகணை வாசல் விழ
                கதறி வாய் குழற
                கால் பிடித்து நாமோட

                சிங்களத்து வாசலிலே
                சிறை பட்டு நான்கிடக்க
                ஓடி வந்தென்னை
                ஒத்திக்கு எடுத்தவரே

                வேரூன்றி யான் நிமிர
                வேண்டுதல் செய்தவரே
                உன்செயல் கடன்தீர்க்க
                உள்ளத்தால் முடியலையே

                ஆண்டு பல கடந்திருச்சு
                ஆனாலும் இயலையே
                மறந்துவிட்டேன் என்றே
                மனதில் நினைத்திருப்பாய்

                ஆவி பிரியு முன்னே
                அக்கடனை யான் முடிப்பேன்
                உன் செயல் யான் மறப்பின்
                உலகம் அழிந்து விடும்

                விரைவில் கை பேசி
                விடயம் பகிரும்
                அன்று வியப்பாய்
                அழுதே களைப்பாய் …!

                வன்னி மைந்தன்
                ஆக்கம் 23-12-2021

                Posted in உலக செய்திகள்

                ஒரே நாளில் இரு உயிர்களை காப்பாற்றிய 11 வயது செல்ல தம்பி

                ஒரே நாளில் இரு உயிர்களை காப்பாற்றிய 11 வயது செல்ல தம்பி


                அமெரிக்கா Oklahoma பகுதியில் 11 வயது கறுப்பின சிறுவன் ஒ ,இரு உயிர்களை

                காப்பாற்றியுள்ளான் ,அங்கவீனமுற்ற ஒருவர் சென்று கொண்டிருந்த பொழுது அவரது வீடு

                தீப்பற்றி கொண்டது, அதில் இருந்து அவரை காப்பாற்றியுள்ளான் ,அதுபோலவே சிறார் ஒருவர்

                தொண்டைக்குள் மூடி ஒன்று சிக்கியுள்ளது ,அதனை இவர் வெளியே எடுத்து அந்த உயிரையும் காப்பாற்றியுள்ளார்

                இவரது இந்த செயல் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் அவர் பாராட்ட பட்டுள்ளதுடன்

                ஊடகங்களில் வெளியாகி கீரோவாகியுள்ளார் ,இந்த செல்ல தம்பி ,தற்போது இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது

                  Posted in Uncategorized

                  பிரான்ஸ் -பிரிட்டனில் எகிறிய கொரனோ நோயாளிகள்

                  பிரான்ஸ் -பிரிட்டனில் எகிறிய கொரனோ நோயாளிகள்

                  பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் என்றும் இல்லாதவாறு கடந்த தினம் மட்டும் கொரனோ


                  நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது


                  பிரிட்டனில் 119,789 பேர் ஒரே நாளில் பாதிக்க பட்டுள்ளனர் ,அதுபோலவே பிரான்சில் 91 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                  மேற்படி நோயின் தாக்குதல் வேகம் அதிகரித்து செல்வதால் விரைவில் நாடு முடக்க படும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                    Posted in உலக செய்திகள்

                    வீழ்ந்து நொருங்கிய விமானம் – பலர் மரணம்

                    வீழ்ந்து நொருங்கிய விமானம் – பலர் மரணம்

                    கொங்கோவில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியதில்


                    அதில் பயணித்த மூவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் ,குறித்த விபத்து தொடரப்பிலான பூரண விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                    விமான கறுப்பு பெட்டி மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இவை விசாரணைக்கு பெரிதும் உதவவும் என தெரிவிக்க பட்டுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                      இந்தியா அமெரிக்கா முயற்சியில் தமிழர்களுக்கு தீர்வு – உடைந்த இரகசியம்

                      இந்தியா அமெரிக்கா முயற்சியில் தமிழர்களுக்கு தீர்வு – உடைந்த இரகசியம்

                      இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாத அரசினால் தமிழர்கள் தொடர்ந்து அடக்க பட்டு ,அந்த

                      இனம் சொல்லெண்ணா துயரில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை சீனாவின் ஆக்கிரமிப்பும் ,அதிகாரமும் அந்த மண்ணில் மேலோங்கி நிற்கிறது

                      தமிழர் பகுதிகளை ஏப்பம் இட்டு உலக வல்லாதிக்க நாடாக தன்னை உருமாற்றி பயணிக்கும் சீனா ,தமிழர் மண்ணை நாசம் செய்து அதன் ஊடாக தமிழர்களை கொத்தடிமையாக்கி சரணாகதியாக்கும் நிலைக்கு சென்றுள்ளது

                      சீனாவின் இந்த ஆக்கிரமிப்பும் ,வள சுரண்டலும் ,பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும்

                      நிலையை இந்தியா மாற்றிட தவறினால் ,அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையான நிகழ்வு அரசியலாக மாற்றம் பெற்றுள்ளது

                      இவ்வேளை ஆளும் சிங்கள அரச பயங்கரவாத அரசு புரிந்த தமிழ் இனப் படு கொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டிய தேவை ஏற் பட்டுள்ளது

                      அதற்கு ஏற்ப தமிழர்கள் தமது ஆளும் பலத்துடன் வாழ கூடிய தீர்வு ஒன்று வழங்க படும் என்பதும் ,அந்த ஆட்சியை சிறந்த நபர் ஒருவர் தலைமையில் வழிநடத்த கூடிய நிகழ்வு ஒன்று இடம்பெற போகிறது ,

                      அது யார் அந்த நபர் ..? இவர் இப்பொழுது இந்தியா அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக மாற்றம் பெற்றுள்ளாரா
                      அப்டி என்றால் அவரை சீனா ,இலங்கை உயிரோடு விட்டு வைக்குமா ..?

                      அவர் கொலை செய்ய பட்டால் யார் அடுத்து வருவது என்ற தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளதக கணிக்க தோன்றுகிறது

                      நாம் முன்னே கூறியது போன்று 2025 ஆம் ஆண்டு நேர்மறை மாற்றத்தை இலங்கை அரசியல்

                      நடத்தி முடிக்க போகிறது ,தற்போது அதற்கு ஏற்ப ஆளும் கோட்டா அரசை ஆடவிட்டு உலகம்

                      வேடிக்கை பார்க்கிறது ,விரைவில் பல்லு புடுங்க படும் நாட்கள்
                      ஆரம்பிக்க பட போகின்றது என்பதனை நிகழ்கால நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன

                      • வன்னி மைந்தன் –
                      Posted in Uncategorized

                      லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் – பல லட்சம் சேதம்

                      லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் – பல லட்சம் சேதம்

                      கடந்த தினம் லண்டன் Wingham பிரதான வீதியில் உள்ள வீடொன்றுக்குள் வேகமாக வந்த கார்

                      ஒன்று புகுந்துள்ளது

                      சாரதியின் காட்டு பாட்டி இழந்து வீட்டுக்குள் கார் மோதி சிதறியதால் குறித்த வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன ,

                      மேற்படி சம்பவத்தில் வீட்டுக்குள் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் , இந்த

                      விபத்து தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                        Posted in Uncategorized

                        காருக்குள் பதுங்கிய பாம்பு – தப்பிய குஞ்சு தம்பி

                        காருக்குள் பதுங்கிய பாம்பு – தப்பிய குஞ்சு தம்பி

                        அவுஸ்ரேலியா நாட்டின் குயின்லாந்து பகுதியில் நபர் ஒருவர் ஓடிய கார் ஒன்றுக்குள் இருந்து


                        மிக கொடிய பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது ,அவ்வேளை அந்த காரை ஒட்டி சென்ற


                        நபர்தப்பித்தார் ,குறித்த நாட்டில் வீடுகளுக்குள் முதலைகள் ,பமைப்புகள் என்பான் ஊடுருவி


                        சென்று வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          துருக்கியில் 13 ஐ எஸ் தீவிரவாதிகள் கைது

                          துருக்கியில் 13 ஐ எஸ் தீவிரவாதிகள் கைது

                          துருக்கிய நாட்டில் பதுங்கி இருந்து பெரும் தாக்குதலுக்கு தயாராகி கொண்டிருந்த


                          ஐ எஸ் தீவிரதிகள் 13 பேரை தாம் கைது செய்துள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது

                          தொடர்ந்து தேடுதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளது

                            Posted in Uncategorized

                            ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா படைகள்

                            ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா படைகள்

                            ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் பயன்பட்டு கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் வாகன


                            தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் பல வண்டிகள் சிதறின

                            சமீப காலங்களாக அமெரிக்கா படைகள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்த பட்டு வருவதும் ,இவை

                            வேகம் பெற்றிறுப்பதும் அமெரிக்கா படைகள் அந்த நாட்டில் இருந்து முற்றாக விலக்க படவேண்டும்


                            என முக்கிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது

                              Posted in மருத்துவம்

                              மாதவிடாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீங்க

                              மாதவிடாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீங்க

                              மாதவிடாய் நாட்களில் வெகுநேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது, பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.

                              • ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும். மாதவிடாய் நாள்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்.
                              • உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஹார்மோன் சுரப்பை சமநிலையில் வைத்துக்கொள்ளலாம். மாதவிடாயின்போது மட்டுமன்றி தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
                              • மாதவிடாய்க் காலத்தில் செய்யும் உடற்பயிற்சிகள் மிகவும் எளிமையானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
                              • மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். திரவ வடிவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
                              • மாதவிடாய் நாட்களில் வெந்நீர் அருந்துவது, சூடான நீரைக்கொண்டு வயிற்றுப்பகுதியில் ஒத்தடம் கொடுப்பது போன்றவை வலி உணர்வைக் குறைக்கும்.
                              • மாதவிடாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீங்க
                              • மாதவிடாயின்போது பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை, `மூட் ஸ்விங்க்ஸ்’. அதைக்கட்டுபடுத்த, உணவில் ஒமேகா 3 போன்ற, நல்ல கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளலாம். தியானம் செய்வது, மனதை ஒருநிலைப்படுத்தும்.
                              • அடிக்கடி நாப்கினை மாதவிடாய் நாட்களில் மாற்றிக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டும்.
                              • வெகுநேரம் மாதவிடாய் நாட்களில் நாப்கின் மாற்றாமல் இருப்பது,
                              • பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.
                                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                உன்னை எண்ணி வியந்தேன் …!

                                உன்னை எண்ணி வியந்தேன் …!

                                நெஞ்சுக்குள் எரிகின்ற தீபம் – நீ
                                நெடுநாள் வாழும் கோலம்
                                அன்புக்குள் நீளும் பாலம் – நீ
                                அழியாத வாழ்வின் காலம்

                                தென்புக்குள் உறைகின்ற வீரம் – நீ
                                தெளிந்த கடல்நீர் ஓடம்
                                ஒன்றுக்குள் ஒன்றான ஓர்மம் – நீ
                                ஓயா ஒலிக்கின்ற கீதம்

                                நெஞ்சுக்கு நேர்பேசும் வீரம் – நீ
                                நெசவாகும் பட்டறை கூடம்
                                பண்புக்கு முதலான மாடம் – நீ
                                பகலவன் விடிகின்ற வானம்

                                அந்திக்குள் ஒளிர்கின்ற ஞாலம் – நீ
                                அழியா புகழின் மாயம்
                                சிந்தைக்குள் உதிர்கின்ற பேரம் – நீ
                                சீரிய நட்பின் உதயம்

                                முன்னைய வாழ்வின் காலம் -நீ
                                முன்னே தந்த பாடம்
                                ஏழ்மைக்கு உதவும் அறம் – நீ
                                ஏறியே ஆள்வாய் உலகம் …!

                                வன்னி மைந்தன்
                                ஆக்கம் 22-12-2021

                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  கொரனோ ஊசி செலுத்த களத்தில் இறக்க பட்ட இராணுவம்

                                  கொரனோ ஊசி செலுத்த களத்தில் இறக்க பட்ட இராணுவம்

                                  பிரிட்டனில் புதிதாக பரவி வரும் ஒமிக்ரோன் நோயின் தாக்கத்தை கட்டு படுத்தும் முகமாக அதன்

                                  சோதனையை நடத்திட Dartford and Maidstone பகுதியில் பிரிட்டன் இராணுவத்தினர் களத்தில் இறக்கிவிட பட்டுள்ளனர்

                                  கடந்த தினம் அடு ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் அளவில் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க

                                  பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in உலக செய்திகள்

                                    பிலிப்பைன்ஸ் புயலுக்கு 380 பேர் மரணம்

                                    பிலிப்பைன்ஸ் புயலுக்கு 380 பேர் மரணம் பிலிப்பைன்ஸ் புயலுக்கு 380 பேர் மரணம்

                                    பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டி போட்ட ராய் புயலில் சிக்கி இதுவரை 380 பேர் பலியாகியுள்ளனர்

                                    ,மேலும் ஒருலட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                                    மின்சாரம் ,போக்குவரத்து என்பன துண்டிக்க பட்டுள்ளது


                                    ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                    பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது