அமெரிக்கா இராணுவம்
Posted in Uncategorized

விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவம்

விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவம் – அதிர்ச்சியில் இராணுவ தலைமை

ஈராக் Samawah-al-Diwaniyah பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா

இராணுவத்தின் இரண்டு தொடர் அணிகளை இலக்கு வைத்து சமவேளை ஒருங்கிணைத்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

இதில் அமெரிக்கா முப்படைகளின் இராணுவ கவச வண்டிகள் சேதமாகியுள்ளன

தொடர்ந்து அமெரிக்கா இராணுவம் மீது இடைவிடாத தாக்குதல்கள் நடத்த பட்டு

வருகின்றமையும் ,இந்த தாக்குதல் வீச்சு வேகம் பிடித்துள்ள நிலையில் ஈராக்கை விட்டு

அமெரிக்கா படைகள் வெளியேறும் நிலை
ஏற்பட்டுள்ளதாக சர்வதேச இராணுவ நிபுணர்கள் கருத்துரைத்து வருகின்றனர்

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

வெல்ல போறேன் பார்த்து போ …!

வெல்ல போறேன் பார்த்து போ …!

இரவும் இனி அகலும்
இந்த இதயம் இனி மகிழும்
வரும் காலம் ஆளும்
வாழ்வு தேறி பாடும்

பட்ட துயர் எல்லாம்
பாதியிலே போகும்
பகல் இரவு தூங்கா
பல சாதனைகள் பதிக்கும்

இழிந்தார் நா வெல்லம்
இன்று இனி கிழியும்
இந்த வாழ்வை எண்ணி
இவர் இதயம் வியக்கும்

எனக்கான சாலையை
ஏய் நானும் போடவா
ஏறி நாளும் போகவே
எழுந்து நீ பார்க்க வா

நான்ங்காண்டு கடும் பயிற்சி
நாள் ஒன்றை தந்தது
நான் ஆள நாள் ஒன்று
நலமோடு பிறந்தது

பெருக்கெடுத்த கண்ணீரும்
பெரும் துயர் வலியும்
இங்கு இனி கலையும்
இதயம் தினம் மகிழும்

என்னை போல வாழ்ந்தாரை
ஏற்றி நானும் வைப்பேனே
எழுதி விதி வைத்து
என்னை போல மகிழ்வாரே ..!

வன்னி மைந்தன்
ஆக்கம் 10-02-2022

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    விரைவில் அழுவாய்

    விரைவில் அழுவாய் …!

    நாள் தோறும் விலையேற்றம்
    நா டெங்கும் போராட்டம்
    இது தானே விதியாச்சு
    இதயத்தை தொலைத் தாச்சு

    வீடு தேடி வந்தாங்க
    விடுதலை என்று சொன்னாங்க
    பட்டினியாய் குடிகளை தான்
    பாழ் பட்டார் போட்டாங்க

    அரியணை வந்தாலே
    அடக்குமுறை விரிந்திடுமோ
    அரியணையில் வைத்தாரை
    அவர் பாவி மறந்திடுமோ

    ஐந்தண்டு ஒரு முறைதான்
    ஐயோ மக்கள் பார்ப்பீரா
    ஓட்டெடுத்து ஏறிட்டு
    ஓலத்தை திணிப்பீரா

    கோ மகனே கோ மகனே
    கோலமிட்ட வன்முறையே
    கொடும் ஆட்சி வீழ்த்திடுமே
    கோவணத்தை இழப்பீரே

    நாளை ஒரு நாள் வருமே
    நன்றே அதை மறந்தீரே
    புரட்சி ஒன்று வெடித்திடும்-உம்
    புகழ் தனை கிழித்திடும்…..!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 08-02-2022

      Posted in Uncategorized

      ஐரோப்பா எமது இராணுவத்தால் முற்றுகையிட படும் – ரசியா மிரட்டல்

      ஐரோப்பா எமது இராணுவத்தால் முற்றுகையிட படும் – ரசியா மிரட்டல்

      உக்கிரேனுக்கும் ரசியாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை அதி உச்சம் பெற்றுள்ளது ,இதனால்


      அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ரசியாவை சுற்றி இராணுவத்தை குவித்து வருகின்றனர்

      தமது நாட்டின் பாதுகாப்பை கருத்தில் மதிக்காது செயல் படும் நேட்டோ படைகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரசியா,

      தற்போது நேரடியா எமது இராணுவ கட்டுப் பாட்டுக்குள் ஐரோப்ப உள்ளாக்கப்படும் என்ற செய்தி போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது

      ரசியா உக்கிரேன் மீது போர் ஒன்றை ஆரம்பிக்கும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்க படுகிறது


      ,அவ்விதம் படை எடுப்பை மேற்கொண்டால் , ரசியா மீது பொருளாதார தடை விதிக்க படும் என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிட தக்கது

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        உன்னால் தவிக்கிறேன் ..!

        உன்னால் தவிக்கிறேன் ..!

        கறுப்பு தார் வீதியிலே
        கட்டழகு நடக்குது
        கன்னிப்பூ அது ஒன்றை
        கால் இரண்டு துரத்துது

        பூ வாசம் அது வீச
        புது மனது வாடுது
        பூகம்ப நில அதிர்வாய்
        பூ மனது அதிருது

        இடை காட்டும் உன்னழகு
        இதயத்தை வருடுது
        இளம் நெஞ்சே உனைதழுவ
        இரு விரல்கள் துடிக்குது

        கால் பிடித்த நடை பிடித்தே
        கால் இரண்டு நோகுது
        கட்டழகு உன் கூந்தல்
        கண் இமையை மறைக்குது

        உனை பார்த்த நாள் முதலாய்
        உறங்க விழி மறுக்குது
        உன் உதட்டு மொழி கேட்க
        உள் மனது துடிக்குது

        என் மனதை தொலைத்து விட்டேன்
        ஏ நெஞ்சே பேசயா
        என் ஏக்கம் தனித்துவிட
        என் அருகில் கூடாயா !

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 06-02-2022

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          நானுறங்க என்னை தாலாட்டு ….!

          நானுறங்க என்னை தாலாட்டு ….!

          கரை தேடும் அலையாக கரைகிறேன் – உந்தன்
          கால் தடம் தேடி அலைகிறேன்
          எங் கோடி நீ மறைந்தாய்
          என் முன்னே உன்னை காட்டாய்

          இதய சிறையிலே இன்று கைதியாய்
          என்னை அடைத்தாய் ஏன் வதைத்தாய்
          உருளும் உலகில் உன்னிழலில் வாழ்கிறேன்
          உயிரே உயிரே உயிர் உறவாகிறேன்

          ஓடி வரும் காற்றாய் உரசாய்
          ஓர் ஆயிரம் கதைகள் பேசாய்
          நிதம் தோறும் நான் மகிழ
          நீ வந்து தழுவாய் தொழுவாய்

          நூறாண்டு நாம் வாழ வேண்டும்
          நூலகமாய் நாம் மாற வேண்டும்
          உன்னை படிக்க பக்கம் திறப்பாய்
          உன்னை எழுத வெட்கம் கலைவாய்

          நீளும் எந்தன் இரவில்
          நீயே என் வெண் நிலவு
          ஆழ்ந்து நானும் உறங்க
          ஆராரோ நீ பாடு நீ பாடு …!

          வன்னி மைந்தன்
          ஆக்கம் 17-01-2022

            Posted in மருத்துவம்

            ஆண், பெண் மூளையின் வித்தியாசம்

            ஆண், பெண் மூளையின் வித்தியாசம்

            மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள்.

            உலகம் முழுவதும் இருக்கும் ஒட்டு மொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது என்னவென்றால் ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள்தான் வித்தியாசம்.

            மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டுமல்ல மூளையும் வித்தியாசப்படுகிறது.

            இப்படி மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆணின்

            மூளையும், பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் உளவியல் சொல்லும் காரணம்.

            மருத்துவம்

            பெண்ணின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழிவளத்துக்கானது. இது வார்த்தைகளையும்,

            உரையாடல்களையும் ரசிக்கும் தன்மைக்கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.

            ஆண், பெண் மூளையின் வித்தியாசம்

            ஆண் மூளையிலும் இந்த 3 மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதை போல் ஆணால் விவரித்து

            கொஞ்சம் ‘வளவள’ என்று இழுத்துக் கூறமுடியாது. தான் உணரும் அந்த உணர்வுகளை ஒரு பெண்ணைப்போல் ஆணால் மொழியால் விவரிக்க முடியாது. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடியும் திறனும் குறைவு.

            ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவதற்கு ஆணின் மூளை அமைப்பே காரணம். ஆனால், பெண்ணின் மூளை அப்படியல்ல.

            பெண்ணுக்கு பார்வை இன்பம் என்று ஒன்று கிடையாது. அதனால்தான் பெண்ணுக்கு காட்சிகளால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை. பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது.

            ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கிறது. ஆண் அழகாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

            இதுபோன்ற அடிப்படையான வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு.

              உடல் எடையைக் குறைக்கும்
              Posted in மருத்துவம்

              உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்

              உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்

              ரா புட் டயட்டில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் கீரை வகைகள் என சைவ உணவுகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன.

              இதன் வழியாக ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

              உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்’
              ரா புட் டயட்
              இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

              சமைக்காத உணவுகளை அதிகமாக சாப்பிடும் உணவு முறை ‘ரா புட் டயட்’ எனப்படுகிறது.

              இந்த உணவு முறையின் மூலம் அதிக கலோரிகள், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்கலாம்.

              இதன் வழியாக ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் முடியும். ரா புட் டயட்டில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் கீரை

              வகைகள் என சைவ உணவுகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. சிலர் பச்சை முட்டை மற்றும் பால் பொருட்களையும் இந்த உணவு முறையில் சாப்பிடுவார்கள்.

              104-118 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சூடுபடுத்தாமல் இருக்கும் உணவு, பச்சை

              உணவாகவே கருதப்படுகிறது. உணவை சமைக்கும்போது அதில் உள்ள நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களில் இழப்புகள் ஏற்படுகிறது.

              ஆகையால் ரா புட் டயட்டில், சமைத்த உணவுகளுக்கு மாறாக, காய்கறி மற்றும் பழங்கள் சேர்த்த சாலட், ஜூஸ், புட்டிங், ஊறவைத்த மற்றும் முளைகட்டிய தானியங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

              இம்முறையில் உணவு உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, ஆற்றல்

              மற்றும் ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்கும். மேலும், ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு இந்த முறை சிறந்தது.

              பச்சைக் காய்கறிகளில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இதனால், உடலில் தேவைக்கும் அதிகமான அளவு கலோரி சேர்வதைத் தவிர்க்க முடியும்.

              ரா புட் டயட்டில் நாம் உட்கொள்ளும் உணவுகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். சோடியம், கலோரி, சர்க்கரை மற்றும்

              கொழுப்பு குறைவாக இருக்கும். இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலை புத்துணர்வு அடையச் செய்யும்.

              இதில் சில உணவுப் பொருட்களில் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கும்.

              அதன் காரணமாக உணவு செரிமானமாகாமல் வாயுவை உண்டாக்கும். ஆகையால், தினமும் இஞ்சியை ஒரு வேளையாவது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

              உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்

              ரா புட் டயட்டில், சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவதால் அவ்வப்போது பசி எடுத்துக்கொண்டே இருக்கும். ஆகையால் சாப்பிடும் உணவை காலை உணவு,

              சிற்றுண்டி, மதிய உணவு, மாலை நேர சிற்றுண்டி, இரவு உணவு மற்றும் நாள் இறுதியில் ஏதேனும் ஒரு இனிப்பு வகை என ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிட வேண்டும்.

              முந்திரி, உலர் திராட்சை, பாதாம், வேர்க்கடலை, ஊறவைத்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, பட்டை, கிராம்புத் தூள், மிளகுத் தூள், கொத்தமல்லித்தழை, புதினா,

              ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், டிராகன் பழம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கேரட் ஆகிய உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

              மேலும், புட்டிங், சாலட், உருண்டைகள், ஸ்மூத்தீஸ் போன்ற வடிவிலும் சாப்பிடலாம்.

                Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்

                எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்

                ஒருவரை திருமணம் செய்த சில நாட்களுக்குப் பிறகு நகைகள் மற்றும் பணத்துடன் அவள் தப்பிச் சென்று விடுவாள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

                எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது
                எட்டு ஆண்களை ஏமாற்றிய பெண் கைது

                மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஊர்மிளா அஹிர்வார். 28 வயதான அவருக்கு ரேணு ராஜ்புத் என்ற மறுபெயரும் உண்டு. வசதியான ஆண்களை வளைத்து பிடித்து மயக்கி

                திருமணம் செய்து கொள்வதும் பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு ஓடுவதுதான் இவரது வேலை.

                ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா, மத்திய பிரதேசத்தின் தாமோ மற்றும் சாகர் ஆகிய இடங்களிலும் இவ்வாறு ஏமாற்றிய வந்துள்ளார். ஊர்மிளா அஹிர்வார் மீதான புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

                இந்த நிலையில் சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் படேல் என்ற நபரை 8 வதாக திருமணம் செய்து கொண்ட ஊர்மிளா, காரில் அவரது கிராமத்திற்கு புறப்பட்டுள்ளார்.

                ஒரு கட்டத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஏற்பாடு செய்து வைத்திருந்த பாக்சந்த் கோரி என்பவர் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

                இதையடுத்து மணமகன் படேல் தன்னிடம் கொடுத்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு கல்யாண பெண் ஊர்மிளா வழக்கம் போல் தப்பிச் சென்றுள்ளார்.

                இது குறித்து அறிந்த காவல்துறையினர் அவரை விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர். திருமண மோசடிக்கு உதவியதாக அர்ச்சனா ராஜ்புத், பாக்சந்த் கோரி, அமர் சிங்

                ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓம்டி காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.எஸ்.பாகேல் தெரிவித்துள்ளார். விசாரணையில் ஏழு ஆண்களை ஏமாற்றியதை ஊர்மிளா ஒப்புக் கொண்டார்.

                  கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால்
                  Posted in Uncategorized

                  பிரிட்டனில் -கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால் 200 தண்டம் 6 பொயின்ஸ் – புதிய சட்டம்

                  பிரிட்டனில் -கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால் 200 தண்டம் 6 பொயின்ஸ் – புதிய சட்டம்

                  பிரிட்டனில் எதிர்வரும் பங்குனி மாதம் முதல் புதிய சட்டம் அறிமுக படுத்த படுகிறது

                  ,இதன் பிரகாரம் வண்டிகளை ஓட்டுபவர்கள் கைபேசி பேசியவாறு செலுத்தினால்

                  அவர்களுக்கு இருநூறு பவுண்டுகள் தண்டம் அறவிடுவதுடன் ,ஆறு புள்ளிகள் நிரந்தரமாக பறிக்க படும் என்ற புதிய சட்டம் அறிமுகமாகிறது

                  வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த இந்த விடயம் அமூல் படுத்த படுகிறது

                  வேக சாலைகளில் மேலே பொருத்த பட்டுள்ள கமராக்கள் மூலமும் இந்த அவதானிப்பு செலுத்த படவுள்ளமை குறிப்பிட தக்கது

                  சாரதிகள் யாக்கிரதை

                    மனநோய் அல்ல
                    Posted in உலக செய்திகள்

                    தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் மனநோய் அல்ல

                    தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் மனநோய் அல்ல

                    நம்மை சுற்றியுள்ள பலர் சில நேரங்களில் தனக்குத்தானே பேசிக்கொள்வதை பார்த்திருப்போம்.

                    பார்ப்பதற்கு வித்தியாசமாக தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் இருந்தாலும் இப்படி பேசிக்கொள்வது உளவியல் ரீதியாக நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன.

                    நம்மை சுற்றியுள்ள பலர் சில நேரங்களில் தனக்குத்தானே பேசிக்கொள்வதை பார்த்திருப்போம். சில சமயங்களில் நாமே இவ்வாறு செய்திருக்கலாம். பார்ப்பதற்கு

                    வித்தியாசமாக இருந்தாலும் இப்படிபேசிக்கொள்வது உளவியல் ரீதியாக நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன. தனக்குத்தானே பேசிக்கொள்ளும் வழக்கம் பற்றிய தகவல்கள் சில

                    சுய பேச்சு

                    சுயபேச்சு மனநோய் அல்ல என்பது உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்வதாகும். இது ஆழ் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் எண்ணங்கள் நம்பிக்கைகள், கேள்விகள் மற்றும் யோசனைகளை வெளிப்படுத்துகிறது.

                    சுய பேச்சு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இருக்கலாம். இதன் பெரும் பகுதி உங்கள் ஆளுமையைப்பொறுத்தது. னக்கு தானே நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவராக இருந்தால்

                    உங்கள் பேச்சு மிகவும் நபிக்கையூட்டுவதாக அமையலாம். அவநம்பிக்கையாளராக இருந்தால் எதிரிமறையானதாக இருக்கலாம்.

                    எதிர்மறையான பேசிக்கொள்ளுதல் சுயபேச்சை முயற்சியின் மூலம் நேர்மறையானதாக மாற்றி கொள்ள முடியும். இது மன உளைச்சலைச் தடுக்கும். நேர்வழி காட்டும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

                    தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் மனநோய் அல்ல

                    ஒரு வேலையை செய்வதற்காக உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்வது தானே உங்கள் லட்சியத்தை அடைவதற்காக யோசனைகளை கூறித்கொள்வது, செய்த தவறுகளுக்காக உங்களை நீங்களே திட்டிக்கொள்வது. இனி அத்தகைய தவறுகள்

                    செய்யக்கூடாது என்று தட்டிக்கொடுத்து கொள்வது, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளை குறித்து நினைவுபடுத்தி கொள்வது போன்றவை நேர்மறையான தனக்கு தானே பேசிக்கொள்ளும் சுயபேச்சு ஆகும்.

                    நன்மைகள்

                    சுயபேச்சு, தனக்கு தானேசெயல்திறன் மற்றும் பொது வாழ்வை மேம்படுத்தும். எடுத்துக்காட்டாக

                    விளையாட்டு வீரர்கள் சுய பேச்சு அவர்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும் மனநோய் என்பதை சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

                    சுய பேச்சால் உயிர்ச்சத்து பெருகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வலி குறையும். இதய ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் குறையும்.

                    தனக்குள் பேசும் நேர்மறையான சுய பேச்சு உள்ளவர்கள் மனநல திறன்களை கொண்டிருப்பார்கள். சவால்களை தீர்க்கவும், வித்தியாசமாக சிந்திக்கவும், கஷ்டங்கள்

                    , சவால்கள் திறமையாக சமாளிக்கவும் உதவுவதாக வல்லுநல்கள் கூறுகிறார்கள். சுய பேச்சு மன அழுத்தம், பதற்றத்தின் தீங்கு தரும் விளைவுகளை குறைக்கும் சக்தி வாய்ந்தது.

                    மனநோய் சுயபேச்சு எண்ண ஓட்டங்களை சீராக்குகிறது. மனதை கட்டுப்படுத்துகிறது.

                    இலங்குகளை அடைய உதவுகிறது. தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் செய்யும் வேலையை சிறப்பாக செய்ய ஊக்குவிக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்ற வைக்கிறது.

                    உன்னால் முடியும், முயற்றி செய், வெற்றி நிச்சயம் போன்ற வாக்கியங்களை தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் நேர்மறையான சுயபேச்சு, வாழ்வில் சிறந்த இடத்தை அடைவதற்கு உதவுகிறது.

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      உயிரே உயிர் தா வாழ்கிறேன் ..!

                      உயிரே உயிர் தா வாழ்கிறேன் ..!

                      வா வா நீயெந்தன் கனவுக்குள்
                      வாழ வழி காட்டு செயலுக்குள்
                      உன்னை நானும் நம்புகிறேன்
                      உயிர்வாழ தென்பு தா வாழ்கிறேன்

                      கடலாட்டும் அலையாக ஆடவா – நான்
                      கரை தேடும் படகாய் ஓடவா
                      உயர்ந்திட வாழ்விலே என்ன வழி
                      உயிரே நீ சொல்லு புதுவழி

                      எனக்கான சாலையை நான் அமைக்க
                      ஏறியே நாளும் பயணிக்க
                      வா வா நீயெந்தன் அருகிலே
                      வாழ வழி காட்டு முடிவிலே

                      அல்லும் பகல் துடித்து விட்டேன்
                      அழுது அழுது களைத்து விட்டேன்
                      இது வென்ன வாழ்வேன்றே
                      இன்று வெறுத்து விட்டேன்

                      நீயே எந்தன் பேரழகு
                      நீயே தா எனக்கழகு
                      உன்னை நானும் நம்புகிறேன்
                      உயிரே உயிர் தா வாழ்கிறேன் ..!

                      வன்னி மைந்தன்
                      ஆக்கம் 01-02-2022

                        தலிபான்கள்
                        Posted in Uncategorized

                        100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்

                        100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்

                        ஆப்கனிஸ்தான் நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் தலிபான் அமைப்பினர் கொண்டு

                        வந்தனர் .முழு நாட்டையும் ஆக்கிரமித்து தமது அதிகாரத்தை நிலை நிறுத்திய நிலையில் அரச இராணுவத்தினர் கைது செய்ய பட்டனர்

                        இவ்வாறு கைது செய்ய பட்ட அரச இராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களை

                        தலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

                        இவர்கள் தலிபான்களை முன் நின்று கொன்று குவிக்கவும் ,அவர்கள் மீது போர்

                        நடத்தவும் உடந்தையாக விளங்கியவர்கள் என்பதால் ,அவ்வாறானவர்கள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                        பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனை
                        Posted in மருத்துவம்

                        பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனை

                        பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனை

                        பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அது தொங்கி அசிங்கமாக காணப்படுவது. சரி, எவை மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று தெரியுமா?

                        மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அது தொங்கி அசிங்கமாக காணப்படுவது. மார்பகங்கள் தொங்குவதால் பெண்களால் எந்த

                        ஒரு விருப்பமான உடையையும் அணிய முடியாமல் தவிப்பார்கள். சரி, பெரிய மார்பகங்களைக் ஏன் தொங்குகின்றன என்று தெரியுமா? எவை மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று தெரியுமா?

                        பெண்கள் மார்பகங்கள் வயது அதிகரித்தால், உடல் பருமன் அதிகரித்தால், புகைப் பிடித்தால், கருத்தரித்தால் தொங்க ஆரம்பிக்கும். இப்படி தொங்கும் மார்பகங்களை ஒருசில

                        இயற்கை வழிகளின் மூலம் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை சிக்கென்று மாற்ற முடியும். இங்கு அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

                        கூன் போட்டு குனிந்து உட்கார்ந்தவாறு இருந்தால், அது மார்பகங்களைப் பாதிக்கும்.

                        எனவே கூன் போட்டு உட்காராமல் எப்போதும் நேரான நிலையில் இருக்க வேண்டும். இதனால் மார்பகங்கள் சிக்கென்று நேராக இருக்கும்.

                        தொங்கும் மார்பகங்களை கொண்ட அழகை அதிகரிக்க, தினமும் ஐஸ்கட்டிகளைக் கொண்டு 1 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.

                        கற்றாழை ஜெல்லைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்தால், அது அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இணைப்புத்திசுக்களை வலிமையாக்கும்.

                        அதற்கு தினமும் 15 நிமிடம் கற்றாழை ஜெல்லை மார்பகங்களில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை

                        வெள்ளரிக்காயை துருவி, அத்துடன் சிறிது வெண்ணெய், மில்க் க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, இரவி முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மார்பகங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.

                        ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது மார்பக திசுக்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பை வழங்குவதுடன்,

                        பாதிக்கப்பட்ட மார்பக திசுக்களைப் புதுப்பிக்கும். ஆகவே தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மார்பகங்களை 15 நிமிடம் மசாஜ் செய்து வர, ஒரே மாதத்தில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

                        முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதனை மார்பகங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முட்டையில் உள்ள புரோட்டீன், பெரிய மார்பக செல்களுக்கு ஊட்டமளிக்கும்.

                        தொங்கும் பெரிய மார்பகங்களை சிக்கென்று மாற்ற உதவும் சிறப்பான மற்றொரு வழி தான்

                        உடற்பயிற்சி. பெண்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு தினமும் பெண்கள் புஷ்-அப், செஸ்ட் பிரஸ் போன்ற பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், மார்பக திசுக்கள் இறுக்கமடையும்.

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          உன்னை நீ நம்பு …!

                          உன்னை நீ நம்பு …!

                          நீ அழுது பூமி குளிப்பதா – இந்த
                          நிலையிலே நீயும் தவிப்பதா
                          உனக்குள் ஏனோ உன்னை புதைத்தாய்
                          உலகில் ஏனோ உன்னை மறைத்தாய்

                          எழுந்தின்று பொங்கி விடு
                          ஏரி மலையாய் கொதித்துவிடு
                          தடை கண்டு தளராதே
                          தளர்நது மனம் சோராதே

                          வெடி குண்டாய் மாறிவிடு
                          வெடித்தே பகை வென்றுவிடு
                          உலகேறி நீதி தனை
                          உயிராய் உயிரே நாட்டிவிடு

                          வழி வந்த துயர் எல்லாம்
                          வழி விழுந்தே மறைந்து விடும்
                          உயிர் வழங்கும் தாயவளாய்
                          உலகுன்னை போற்றி விடும்

                          வர லாறை நீ எழுது
                          வழி காட்டி நீ செல்லு
                          புத்தகமாய் உன்னை படிக்க
                          புது விதி செய்து விடு

                          இறந்தும் நீ வாழ்ந்திருப்பாய்
                          இதயத்தில் உறைந்திருப்பாய்
                          அழியா புகழ் ஒன்றை
                          அகிலத்தில் வைத்திருப்பாய் ….!

                          வன்னி மைந்தன்
                          ஆக்கம் 30-01-2022

                            கடலடியில் நடக்கும் போர்
                            Posted in உளவு செய்திகள்

                            அமெரிக்கா விமானத்தை கடலில் தேடும் சீனா நீர்மூழ்கி- கடலடியில் நடக்கும் போர்

                            அமெரிக்கா விமானத்தை கடலில் தேடும் சீனா நீர்மூழ்கி- கடலடியில் நடக்கும் போர்

                            தென் சீனாவின் சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் வின்சன் விமான தாங்கி கப்பலில்

                            தரை இறங்க முற்பட்ட எப் 35 ரக அதி உயர் போர் விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியது

                            இவ்வாறு கடலில் மூழ்கிய விமனாத்தை சீன மீட்டு தப்பி செல்ல முன்னர் அதனை தாம் மீட்டு விட அமெரிக்கா துடிக்கிறது

                            இந்த விமானத்தை சீனா மீட்டு எடுத்தால், அது அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை

                            ஏற்படுத்தும் எனவும் அது அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பிற்கு வித்திடலாம் என

                            இராணுவ வல்லுநர்கள் சிலர் கருத்துரைத்துள்ளது அரசியல் இராணுவத்தில் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

                            சீன இந்த விமனாத்தை மீட்டு சென்று விட்டது என்ற சந்தேகமும் நிலவுகிறது ,சீன

                            கடலில் அமெரிக்காவுக்கு பெரும் தோல்வி ஏற்படுத்த பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                            தற்கொலை
                            Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                            அவுஸ்ரேலியாவில் இரு பிள்ளைகளை கொன்று இலங்கையர் தற்கொலை

                            அவுஸ்ரேலியாவில் இரு பிள்ளைகளை கொன்று இலங்கையர் தற்கொலை

                            அவுஸ்ரேலிய பேர்த் நகரில் 40 வயதுடைய இந்தி குணதிலக என்பவர் தனது மகள் ,மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்

                            மனைவியை பிரிந்து வசித்து வரும் இவரே இந்த தற்கொலையினை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            அதிக மன விரக்தியில் இருந்த நிலையில் இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளது

                            மக்கள் கண்ணீருடன்குழந்தைகள் கொலை புரிய ப்பட்ட பகுதியில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

                            இலங்கையர்கள் வெளி நாடுகளில் அதிக மன அழுத்தம் காரணமாக இவ்வாறான
                            மரணங்கள் இடம்பெற்று வருவது குறிப்பிட தக்கது

                              இந்திய தம்பதிகள்
                              Posted in இந்தியா செய்திகள்

                              கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்திய தம்பதிகள் குளிரில் சிக்கி மரணம்

                              கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்திய தம்பதிகள் குளிரில் சிக்கி மரணம்

                              கனடா நாட்டுக்கு அதன் எல்லையோரமாக கால் நடையாக நுழைய முயன்ற இந்திய

                              தம்பதிகள் குளிரில் நடுங்கி இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              39 மற்றும் 37 வயதுடைய தம்பதிகள் மற்றும் 11 வயது உள்ளிட்ட இரண்டு சிறுமிகள் அடங்கலாக நால்வர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

                              அதிக சினோ கொண்ட நாடுகளை அடையாளம் காணாது இலங்கை இந்தியாவின்

                              வெப்ப நிலையை கருத்தில் கொண்டு ஆசிய நாட்டவர் நுழைவதால் ,ஆளை கொள்ளும்

                              குளிரில் சிக்கி இறந்து வருகின்றமை கண்ணீர் கதையயாக தொடர்கின்றமை குறிப்பிட தக்கது

                                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                ஏன் பேச மறந்தாய் ..?

                                ஏன் பேச மறந்தாய் ..?

                                உன் கொலீசு காதுக்குள்ளே
                                ஊளையிட்டு மகிழுதடி
                                உன் கொண்டை மல்லிகை
                                ஊர் வாசம் வீசுதடி

                                தேர் ஓடும் வீதியிலே
                                தேவதை நீ நடக்கையிலே
                                தெறித்தோடும் காளை எல்லாம் -உன்
                                தோகை கூந்தல் தொடருமடி

                                பாலை வன புல்வெளியில்
                                பா வினங்கள் மேய்ந்திடுமோ
                                பாவை உந்தன் பூவிதழில்
                                படரா வண்டு உறங்கிடுமோ

                                நீர் தேடும் வேர்கள் எல்லாம்
                                நிழல் தர மறந்திடுமோ
                                நிலவே உன் பேரழகை
                                நிழல் தழுவ அஞ்சிடுமோ

                                தொலை தூர நடை பிடித்து
                                தொலையாம வீதி வந்து
                                கண் முன்னே நிற்பவரே
                                கதை பேசா நிற்பதென்ன

                                காளை உந்தன் நெஞ்சுக்குள்ளே
                                காதலாகி நான் இருக்க
                                என் அருகில் வந்து நின்று
                                ஏன் பேச நீ மறந்தாய் ..?

                                வன்னி மைந்தன்
                                ஆக்கம் 25-01-2022

                                  உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட்
                                  Posted in Uncategorized

                                  பறந்து வந்த ஏவுகணை – சுட்டு வீழ்த்திய இராணுவம்

                                  பறந்து வந்த ஏவுகணை – சுட்டு வீழ்த்திய இராணுவம்

                                  ஏமான் நாட்டி கவுதிய போராளிகள் குழுவினர் அபுதாபி மற்றும் சவூதி நாடுகள் மீது தொடர்

                                  ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

                                  இவ்விதம் ஏவ பட்ட இரண்டு ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக UAE பாதுகாப்பு

                                  அமைச்சர் தெரிவித்துள்ளார்

                                  அமெரிக்காவுடன் நல்லுறவை உறவை பேனி முசுலீம் நாடுகளை கூறு போட்டு தாக்கி வரும்

                                  சவுதிக்கு பதிலடி கொடுக்க ஈரான் இந்த வவுகணைகளை தமது ஆதரவு குழுக்களுக்கு வழங்கி வருகிறது

                                  அவ்விதமான ஏவுகணைகள் மூலமே இந்த தாக்குதல் தொடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது