Posted in குற்ற செய்திகள்

காதலனுடன் சேர்ந்து மகளைஅடித்து கொன்ற தாய்

காதலனுடன் சேர்ந்து மக்களைஅடித்து கொன்ற தாய்

கள்ள காதலனுடன் இணைந்து ,தனது ஏழுவயது மகளை அடித்து கொலை செய்திட ,உதவி புரிந்த தாயின் செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

தனது மனைவி மற்றும் இரு காதலிகளுடன் , ஒரே வீட்டில் வசித்து வந்த கசிப்பு வியாபாரியான ,காதலன் தனது காதலி ஒருவரின்,ஏழுவயது மகளை அடித்து கொலை செய்துள்ளார் .

மகள் தமக்கு இடையூறாக இருக்கிறாள் என்பதால் ,இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது .

கள்ள காதலன் தனது மகளை அடித்து கொலை செய்திட ,கள்ள காதலனுக்கு தாய் உதவி புரிந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது .

மகளை அடித்து கொன்று பையில் அடைத்து ,மாணிக்க கல் தோண்டிய பகுதியில் புதைத்துள்ளனர் .

பின்னர் மகள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் தெரிவிக்க சென்ற நிலையில் ,காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்தில் மேற்படி படுகொலை சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது .

பெற்ற மகளை படுகொலை செய்த தாயின் செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .