எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் - பாடசாலைகள் அடித்து பூட்டு
Posted in உலக செய்திகள்

எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு

எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு

உகாண்டாவில் எபோலா நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி எட்டு பேர் பலியாகியுள்ளனர் .இதனால் அந்த நாட்டில் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .

தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவும் என்பதால், இந்த அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது .

தொடர்ந்து நோயின் தாக்குதலை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக ,அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

வெளிநாடுகளுக்கும் இந்த நோயானது பரவலாம் என்பதால ,நாடுக்ளின் ,எல்லைகளில் சோதனைகள் அராம்பிகை படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

லண்டன் வானில் தோன்றிய இரட்டை வானவில் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் வானில் தோன்றிய இரட்டை வானவில் வீடியோ

லண்டன் வானில் தோன்றிய இரட்டை வானவில் வீடியோ

லண்டன் தென் கிழக்கு லண்டன் லூசியம் பகுதியில் இரட்டை வானவில் தோன்றிய அதிசயம் நிகழ்ந்துள்ளது .


மதியம் இரண்டு மணியளவில் ,நமது கமராவுக்குள் , இந்த காட்சிகள் பதிவாகின .

பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் இறந்த பொழுதும் ,இது போன்ற இரட்டை வானவில் தோன்றின .
அதுபோலவே இன்றும் இவ்வாறு தோன்றியுள்ளது குறிப்பிட தக்கது .

அந்த காட்சிகளை காணொளியில் பாருங்கள் .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

https://www.youtube.com/watch?v=WdHZlLk_Rts
பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்

மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்

எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என

அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் நலிவடைந்த பிரிவினர் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்

ஆகியோர் கூட்டாக கொண்டு வந்த கவன ஈர்ப்பு பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்நாட்டில் நாம் 1958, 1977, 1983 கால கட்டங்களில் இனவாத கலவரங்களை பார்த்துள்ளோம். 1971, 1988, ஆண்டுகளில் தெற்கில் ஆயுத போரை பார்த்துள்ளோம். 2004ல் சுனாமி அழிவை பார்த்துள்ளோம். அதன் பின் 30 ஆண்டுகால போருக்கு முகம் கொடுத்துள்ளோம்.

மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்

எதுவாக இருந்தாலும், எக்காலத்திலும் இன்றைய நிலைமையை போல் நமது மக்கள் நெருக்கடியை சந்திக்கவில்லை என எண்ணுகிறேன். எக்காலத்திலும் மக்கள் எப்படியாவது மூன்று வேளையும் சாப்பிட்டார்கள்.

பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடி வாழ்ந்தார்கள். இந்த காலத்தில்தான் இப்படி மிகவும் மோசமான நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறார்கள்.

நாம் இன்று இந்த யோசனையை கொண்டு வந்ததன் நோக்கம், இந்த நெருக்கடிக்குள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிவாரணங்களை ஏற்பாடு செய்யுங்கள் என்ற கோரிக்கையின்படி ஆகும்.

அது அரசின் கடப்பாடு. அரசு கடமைப்பட்டுள்ளது. எதிரணி என்ற முறையில் நாம் அதை அரசுக்கு எடுத்து கூட கடமைப்பட்டுள்ளோம்.

சபை தலைவர் அவர்களே, நான் அன்றும் சொன்னேன். இன்றும் சொல்கிறேன். இன்று இந்நாட்டில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, துன்புறும், நலிவுற்ற பிரிவினர், தோட்ட தொழிலாளர் ஆகும்.

இடதுசாரி தலைவர் என்பதால் இது உங்களுக்கு நன்கு தெரியும். இதை நாம் எப்போதும் சொல்லி வந்தோம்.

யாரும் கவனத்தில் பெரும்பாலும் எடுக்கவில்லை. இன்று உலகம் சொல்ல ஆரம்பித்து விட்டது. இன்று ஐநா அமைப்புகள் கூறுகின்றன.

ஐநா உணவு விவசாய ஸ்தாபனம் தனது விசேட அறிக்கையில் என்ன கூறுகிறது? இந்நாட்டில் அதிகூடிய உணவின்மை நிலைமையினால், அதிகம் வாழ்க்கை சுமையை சுமக்கும் பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுகிறது.

தோட்டப்புறத்தில் பெண்கள் மேலதிக மையை சுமந்து குடும்பங்களை நடத்துகிறார்கள்.

அதேவேளை உலக உணவு நிறுவனம், தோட்டப்புறங்களில் உணவின்மை 51 விகிதம் என கூறுகிறது.

நகர பகுதிகளில் 43 விகிதமும், கிராம பகுதிகளில் 34 விகிதமும் என கூறுகிறது. இந்த உணவின்மை என்பது ஜனாதிபதி அவர்கள் தினந்தோறும் பேசும் ஒரு விஷயம் ஆகும்.

நான் சொன்னது போன்று, மூன்று வேளை உணவு என்பது, இன்று இரண்டு வேளை ஆகிவிட்டது.

இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் இன்று ஒருவேளைதான் சாப்பிடுகிறார்கள். அது அதிகம் நிகழ்வது இங்கேதான்.

இதை இன்று நாம் கூறுவதை விட ஐநா கூறுகிறது. உலகம் கூறுகிறது என்பதை அரசாங்கம் அறிய வேண்டும்.

அது மட்டுமல்ல, ஐநாவின் நவீன அடிமைத்துவத்துக்கான அறிக்கையாளர் டோமாயா ஒபகாடா, சமீபத்தில் நடந்து முடிந்த ஐநா மனித உரிமை ஆணையக அவைக்கு அறிக்கை சமர்பித்துள்ளார்.

அவர் என்ன கூறுகிறார்? இலங்கையில் பெருந்தோட்டங்களை காணப்படும் ஒடுக்கு முறைக்கு பின்னால் இனத்துவ காரணம் இருக்கிறது என கூறுகிறார்.

பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் துன்பங்களுக்கு காரணமாக அவர்கள் தொழிலாளர் என்பதை விட, அவர்கள் சிறுபான்மை தமிழர்கள் என்ற காரணமும் உள்ளது என அவர் கூறுகிறார். இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு.

எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு, சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்.

நாம் அநேகமான பாரபட்சங்களுக்கு முகம் கொடுக்கின்றோம். இங்கே கல்வி அமைச்சர் இருப்பதால் ஒன்றை அவர் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

நீங்கள் கல்வி துறையில் பல புனர்மாற்றங்களை செய்கிறீர்கள். கொழும்பு நகர கல்வி வலயத்தை வட-மத்திய கொழும்பு வலயம் என்றும், தென் கொழும்பு வலயம் என்றும் இரண்டாக பிரிக்க நாம் முடிவு செய்துள்ளோம்.

அது நல்லது. நுவரேலியாவில், நுவரேலியா, ஹட்டன், நோர்வுட், தலவாக்கலை ஆகிய நான்கு வலயங்கள் உருவாக வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஏனெனில், இன்றுள்ள நுவரேலியா, ஹட்டன் வலயங்களில் சுமார் 250 பாடசாலைகள் உள்ளன.

80,000 மாணவர்கள் உள்ளனர். ஆகவே நான்கு வலயங்கள் என்பது மிக நியாயமான கோரிக்கை.

மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்

உண்மையில் எமக்கு அங்கே ஆறு வலயங்கள் வேண்டும். ஆனால், மூன்று வலயங்களுடன் முடித்து விட விட சிலர் முயல்கிறார்கள்.

அதேபோல், நமது நல்லாட்சி காலத்தில் 2019ம் வருடம் வர்த்தமானி பிரகடனம் மூலம், புதிய பிரதேச செயலகங்கள், நுவரெலியாவில், மேலதிகமாக ஐந்தும்

இரத்தினபுரியில் இரண்டும், காலியில் இரண்டும் அமைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதில் இரத்தினபுரி, காலி என்பவற்றில் புதிய பிரதேச செயலகங்கள் அமைக்கப்பட்டு விட்டன. ஆனால், நுவரெலியாவில் இல்லை. ஏன் இந்த அநீதி?

அதேபோல் நாட்டின் ஏனைய இடங்களில் 500 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு சென்றால், பெருந்தோட்ட பகுதிகளில் 1000 முதல் 5000 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு அமைக்கபட்டு உள்ளது.

ஏன் இந்த அநீதி? இப்போது போலிஸ் அதிகாரம் கிராம சேவகர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது என்ன பாரபட்சம்?

அடுத்த வருடம் 2023 ஆகும் பொழுது இந்த மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்கள் நிறைவடைய போகின்றன. இவர்கள் இங்கே நாடு பிடிக்க வரவில்லை. நாட்டை உருவாக்கவே வந்தார்கள்.

அவர்கள் இங்கே வந்த பாதையே ஒரு சோக பாதை. பல கதைகள் உள்ளன. வரும் வழியிலேயே 25 விகிதமானோர் இறந்து போனார்கள்.

இங்கே வந்து காடுகளை வெட்டி, இன்றுள்ள தேயிலை, இறப்பர் தோட்டங்களை உருவாக்கினார்கள். பின்னர் அந்த தேயிலை, இறப்பர் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் கொழும்பு துறைமுகத்தை உருவாக்கவும் அவர்களது உழைப்பு பயன்பட்டது.

பின்னர் மலைநாட்டுக்கும், கொழும்பு துறைமுகத்துக்கும் இடையில் ரயில் பாதைகளை உருவாக்கவும், நெடுஞ்சாலைகளை உருவாக்கவும் அவர்களது உழைப்பு பயன்பட்டது.

200 வருடங்களாக உழைத்துக்கொண்டு இருக்கும் இம்மக்களுக்கு இந்நாடு தரும் பரிசு என்ன? இங்கே தீர்வு, நியாயம் இல்லை என்பதால்தான் இவர்களது இன்றைய நிலைமையை ஐநா அமைப்புகள் பேசும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இதை மாற்றுவோம். புதிதாக சிந்திப்போம்.

இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாக விரும்புவதை தவிர, சமீபத்தையை இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களது அபிலாஷைகள் வேறு ஒன்றும் இல்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். தேசிய நீரோட்டத்தில் எம்மை உள்வாங்குங்கள்.

இந்நாட்டின் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்ட மக்களுக்கு இன்று காணி உரிமை,
வீட்டு உரிமை இல்லை.

வறுமை அதிகம். மந்தபோசனம் அதிகம். வேலை வாய்ப்புகள் குறைவு.
அவர்களது நிர்வாக கட்டமைப்புகள் தோட்ட நிர்வாகங்களிடம்தான் அதிகம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


நாட்டின் ஏனைய மக்களை போல அவர்களையும் மாவட்ட செயலக, பிரதேச செயலக,


கிராம செயலக தேசிய நிர்வாக கட்டமைப்புக்கு உள்ளே கொண்டு வாருங்கள்.
இன்று மலையக தமிழ் இனத்தின் உள்ளே வாழும் பெருந்தோட்ட பிரிவினரை
பின்தங்கிய பிரிவு மக்களாக கருதி அவர்களை தேசிய மட்டத்துக்கு கைதூக்கி விடுங்கள்.

இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு

இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு

இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு இடம்பெற்றுளளது

வீட்டுக்குள் நுழைந்த திருடர் அங்கிருந்த பணம் ,மற்றும் மூன்று லட்சம் ரூபா பொருட்கள் உள்ளிட்டவை திருடி கொண்டு தப்பித்து சென்றுள்ளார்

இந்த திருட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கை சிறையில் 200 கைதிகள் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை சிறையில் 200 கைதிகள் தப்பி ஓட்டம்

இலங்கை சிறையில் 200 கைதிகள் தப்பி ஓட்டம்

இலங்கை கந்தகாடு சிறை உடைத்து 200 கைதிகள் தப்பியோடியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது .

இவ்வாறு தப்பித்து சென்றவர்களில் ,தொடர்ந்து 30 பேரை காணவில்லை என்கிறது சிறைச்சாலை வட்டாரங்கள் .

இந்த சிறை உடைப்பு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைக்க திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைக்க திட்டம்

22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைக்க திட்டம்

புலமைப் பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் பிற்போடப் படமாட்டாது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமயந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ,வருட இறுதியில் ஏற்படும் 32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை

நிரப்ப கல்வி அமைச்சுத் திட்டமிட்டுள்ளது. இதற்கமைவாக, 22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் கூறினார்.

தற்போது பாடசாலைகளில் 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. அமுலுக்கு வரும் புதிய ஓய்வூதியக் கொள்கை காரணமாக இந்த வருட இறுதியில் சுமார் 10 ஆயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைக்க திட்டம்

ஆரம்பத் திட்டமாக பட்டதாரி ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான பரீட்சையை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது அபிவிருத்தி உதவியாளர்களாக பணிபுரிபவர்களும், அரச சேவையில் உள்ள ஏனைய பட்டதாரிகளும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

இதற்கு அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த வருட முதல் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது திட்டமிட்டபடி பாடப் புத்தகங்களை வழங்க தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் .


இதற்காக இந்திய கடனுதவி கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் கூறினார்.

No posts found.
மூழ்கி கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பல் 300 பேர் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மூழ்கி கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பல் 300 பேர் மீட்பு

மூழ்கி கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பல் 300 பேர் மீட்பு

சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த

ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை இன்று தெரிவித்துள்ளது.

படகிலிருந்த இலங்கைப் பிரஜையொருவர் கடற்படையை இன்று தொடர்பு கொண்டதாகவும், தாங்கள் ஆபத்திலிருப்பதாகவும் கூறியதாகத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்

மூழ்கி கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பல் 300 பேர் மீட்பு

இந்நிலையில், கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸிடமிருந்து உதவியைக் கோரியிருந்தது.

அந்தவகையில், படகிலிருந்தவர்கள் மீட்கப்பட்டதாகவும், வியட்நாம் நோக்கிச் செல்வதாகவும் இலங்கைக்கு சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், படகிலிருந்த இலங்கையரொருவரின் பிரசன்னத்தை மாத்திரமே உத்தியோகபூர்வமாக கடற்படை அறிந்துள்ளதாகத் தெரிவித்த டி சில்வா,

ஏனையோரின் அடையாளங்கள்,
அவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் உறுதிப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

No posts found.
ஜனாதிபதி ரணில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனெக் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனெக் பேச்சு

ஜனாதிபதி ரணில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனெக் பேச்சு

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனிக்குடன் இலங்கை ஜனாதிபதி ரணில் பேச்சு

எகிப்துக்கு பயணித்துள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனிக்கை சந்தித்து பேசியுள்ளார் .

இதில் அவர் பிரதமராக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து கொண்டார் .

மேலும் இவ்வேளை இலங்கை தொடர்பான விடயங்களும் பேச பட்டுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.

பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் - சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் – சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்

பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் – சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்

பிரிட்டனில் ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் ஆட்சியை கவிழ்க்கும் நகர்வுகளை எதிர்கட்சியாகி விளங்கும் ,தொழில் கட்சி ஆரம்பித்துள்ளது .

முன்னாள் பிரதமர் ரிஸ் அவர்கள் ஆட்சியில்,உள்துறை அமைச்சராக நியமிக்க பட்டு பின்னர், பதவி விலகி ,அவரது ஆட்சியை கவிழ்க்க ரிஷி சுனெக்குடன் இணைந்து செயல்பட்டார் Suella Braverman என்கின்ற சந்தேகம் அதிகரித்துள்ளது .

இதனால் ,தவறு செய்த ஒருவரை மீளவும் எவ்வாறு அதேபதவியில் நியமிக்க முடியும் என ,எதிர்க்கட்சி கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளது .

Suella Braverman உளவுத்துறை அமைச்சராக இருக்கும் வரை ,ரிஷி சுனெக் ஆட்சிக்கு பெரும் நெருக்கடி தோன்றும் நிலை ஏற்படும் .

பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் – சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்

இதனால் பெரும் தலைவலிக்கு உள்ளாகியுள்ளனர் ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் .


இவரது ஆட்சியு இரண்டு மாதத்தில் கவிழ்த்து புதிய தேர்தலை நடத்துவதில் தொழில் கட்சி அதிக நாட்டம் காண்பித்து வருகிறது .

அதற்கு ஆளும் உள்துறை அமைச்சர் Suella Braverman முக்கிய காரணமாக விளங்குவார் என இதன் மூலம் கணிக்க பெறுகிறது .

ரசியா போர் விமானங்கள் 278 சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரசியா போர் விமானங்கள் 278 சுட்டு வீழ்த்தல்

ரசியா போர் விமானங்கள் 278 சுட்டு வீழ்த்தல்

ரசியா இராணுவத்தின் 278 போர் விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் இராணுவ அறிவித்துள்ளது .

உக்கிரேன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு போரில் வரலாற்று பெரும் தோல்வியாக ,இந்த விமான இழப்பு உள்ளதாக உக்கிரேன் அறிவித்துள்ளது .

ரசியா சற்றும் எதிர் பாராத படு தோல்வியை சந்தித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

மேலும் இழந்த விமானங்களுக்கு பதிலாக ,புதிய விமானங்களை தயார் செய்து, தாக்குதலை தொடுக்க முடியா பெரும் நெருக்கடியில் ,ரசியா இராணுவம் சிக்கியுள்ளது என்கிறது ,உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு .

தொடர்நது வரும் மோதல்களினால் தற்போது ரசியா நீண்ட தூர
ஏவுகணைகள் மூலம் ,தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளமைக்கு, இதுவே காரணம் என்கிறது உக்கிரேன் இராணுவம் .

எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை சோதனை - படங்களை வெளியிட்ட வடகொரியா
Posted in உளவு செய்திகள்

எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா

எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா


வடகொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .
ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


தென் கொரியாவின் கடற்படை ,விமானப்படை மற்றும் ,முக்கிய இராணுவ நிலைகளை தாக்கி அழிக்கும் ,இலக்குகளை கொண்ட ஏவுகணைகள் சோதனை செய்யப் பட்டுள்ளன .

தமது நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொள்ள ,அமெரிக்கா தென்கொரிய இணைந்து கூட்டு போர் பயிற்சிகளை நடத்திய வண்ணம் உள்ளனர் .


இந்த கூட்டு போர் ஒத்திகை மூலம் தம்மை அடக்கிட நினைக்கும் ,எதிரிகளுக்கு பதிலடியாக இதனை நடத்தியுள்ளது .

எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா

தென்கொரியாவின் எல்லையில் துல்லியமாக ஏவுகணைகள், சிலது வீழ்ந்து வெடித்துள்ளன .

மேலும் அமெரிக்காவுக்கும் தாக்கிடும் நீண்டதூர ஏவுகணைகளும் இதில் உள்ளடக்க பட்டுள்ளன .

வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அடுத்து ,தற்போது தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து, போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

ஒரு இரவு £13,000 மின்சார பணம் - பிரிட்டனில் நடந்த பயங்கரம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டன் நாட்டில் வீட்டு காரர் ஒருவருக்கு ,ஒரு இரவு electricity to OVO Energy நிறுவனம் 13,000 மின்சார கட்டணம் அற விட்டுள்ளனர் .

மாதம் தோறும் 156 பவுண்டுகள் மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கு செலுத்தி வந்த இவர்களது கட்டணம் ,திடீரென மாதம் 189,99 ஆக அதிகரித்துள்ளது .

முதல் நாள் சோதனை தனது வங்கியை சோதனை செய்துளளர் .அதனை அடுத்து மாறு நாளும் அவ்விதம் சோதனை செய்த பொழுது ஒரு இரவில் மட்டும் 13,000 குறித்த மின்சாரா மற்றும் எரிவாயு பெறும் நிறுவனத்தினர் அறவிட்டுள்ளனர் .

அதிர்ச்சியுற்ற அவர் குறித்த நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார் .

ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

அதற்கு அவர்கள் மிகவும் சாதாரணமாக ,உங்களுக்கு வேண்டும் எனறால் அந்த பணத்தை மீள செலுத்தி விடுகிறோம் என்கின்றனர் .

இவர்களது பேச்சால் அவர் அதிந்து போயுள்ளளார் .இந்த சம்பவம் முக்கிய ஊடகங்களில்வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது .

மக்களே ,சிமாட் மீட்டருக்கு மாறிவிடாதீர்கள் .


இந்த சிமாட் மீற்றர் மூலம் இவர்கள் ,அதிக பணத்தை அறவீடு செய்து வருகின்றனர் .


தற்போது அந்த மீட்டர் மூலம் இவ்விதம் , பெரும் தொகையில் பணம் அறவிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு

பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு

இன்று பிரிட்டன் Rockingham Road, Wheatley, பகுதியில் ஆயுத தாரி ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .இதில் ஒருவர் காயமடைந்தார் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,ஆயுத தாரி மீது துப்பாக்கி சூட்டை நடத்தினர் .

இதில் ஆயுத தாரி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

முடக்கு பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குஅருகில் இந்த தாக்குதல் இடம்பெற்ற தாக தெரிவிக்க படுகிறது .

இந்த சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஆயுத பொலிஸ் குவிக்க பட்டு, கண்காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது .இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

நீ வாழ என் வாழ்த்து |tamil kavithaikal
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நீ வாழ என் வாழ்த்து |tamil kavithaikal

நீ வாழ என் வாழ்த்து |tamil kavithaikal

நண்பர் ஆனந்தம் அவர்கள் அகவை நாளில் ,அவரை எண்ணி சிலவரிகள் ,நீ வாழ என் வாழ்த்து ,நினைந்துருகி வாழ்த்துகிறேன்.

https://www.youtube.com/watch?v=U7Z4ayazNCA
இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்

வெலிகந்தை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) ஏற்பட்ட மோதலையடுத்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதுடன் பொலிஸார் இராணுவத்தினர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள்,வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தப்பியோடிய 35 பேர் சரணடைந்துள்ளதாகவும் ஏனையவர்களை இராணுவத்தினர் பொலிஸார் இணைந்து தேடிவருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவார் தெரிவித்தார்.

பொலன்னறுவை மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை தடுத்துவைத்து இராணுவத்தினர் புனர்வாழ்வழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் காலி பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருபவரை மாதம்பை பகுதியைச் சேர்ந்த ஒருவர் மண்டையில் தாக்கியதையடுத்து காலி மாத்தறையானை தாக்குவதாக

காலி மாத்தறையைச் சேர்ந்த ஒருவர் குரல் கொடுத்ததையடுத்து காலி மாத்தையைச் சேர்ந்த குழுவினருக்கும் மாதேம்பே பகுதியைச் சேர்ந்த குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்

இதனையடுத்து அங்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டிற்கு கோண்டுவர வெலிகந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையல் சென்ற

பொலிஸாரை தாக்கியதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, இரு பொலிஸார் ஒரு இராணுவத்தினர் மற்றும் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இதனை தொடர்ந்து அங்கிருந்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ள நிலையில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தப்பியோடிய கைதிகளை தேடியவரும் நிலையில் இன்று காலை வரையில் 35 கைதிகள் சரணடைந்ததுடன் ஏனைவர்களை தேடி இராணுவத்தினரும் பொலிஸாரும் மதுறு ஓயா காட்டுப்பகுதியில் தேடுதல்களை நடாத்தி வருகின்றதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து வேலியை உடைத்து சுமார் 600 மேற்பட்டோர் தப்பிச் சென்ற நிலையில்

அவர்கள் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பித்தக்கது

இலங்கை பெண்கள் 150 பேர் அடிமைகளாக விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பெண்கள் 150 பேர் அடிமைகளாக விற்பனை

இலங்கை பெண்கள் 150 பேர் அடிமைகளாக விற்பனை

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் உள்ளதாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்கள் அங்கிருந்து தகவல்களை அனுப்பி வைத்துள்ளதுடன், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அவர்களால் வெளியிடப்பட்ட தகவல்களில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் ஜனாதிபதியிடம் உருக்கமாக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

அதில் அவர்கள் தெரிவிப்பதாவது, ஓமான் நாட்டில் நிர்க்கதியாகிய நிலையில் இலங்கைக்கு திரும்ப முடியாமல் தினமும் கண்ணீருடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் இலங்கைப் பெண்கள் 150 பேரின் துயரக் கதையை இதனூடாக இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் தூதரகங்களுக்கும் அறிவிக்கிறோம்.

இலங்கையிலுள்ள முகவரும் இங்கே ஓமான் நாட்டிலுள்ள முகவரும் எங்களை ஏமாற்றி சுற்றுலா விசாவில் அழைத்து வந்து எங்களை இங்கே ஓமானில் விற்று விட்டார்கள். இதனால் நாங்கள் இப்போது அடிமைகளாக இங்கே அகப்பட்டுக் கொண்டுள்ளோம்.

இந்த முகவர்கள், எங்கள் ஒவ்வொருவர் சார்பாகவும் சுமார் 18 இலட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டே எங்களை அடிமைகளாக விற்றிருக்கிறார்கள்.

இலங்கை பெண்கள் 150 பேர் அடிமைகளாக விற்பனை

கையில் பாஸ்போட்டும் இல்லை. அதனையும் பறித்துக் கொண்டார்கள். அதனால் நாங்கள் எங்களது நாட்டுக்குத் திரும்ப முடியாதுள்ளது. தொடர்பாடல் எதுவுமே இல்லாமல் தொடர்பு கொள்ளக் கூடிய அலைபேசிகள் எதுவுமே நாம் பாவிக்க முடியாது மறுக்கப்பட்டுள்ளோம்

எங்களது துயரங்களை ஏறெடுத்துப் பாருங்கள், எமது தாய் தந்தையர், சகோதரர்கள், பிள்ளைகள் அவர்களது நிலைமை அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கூட எமக்குத் தெரியாது. ஏனென்றால் எங்களுக்குத் தொடர்பு கொள்ளும் எல்லா வழிகளும் மறுக்கப்பட்டு விட்டன.

சம்பளம் இல்லை. சாப்பாட்டுக்கு வழியில்லை. சவர்க்காரம் வாங்கக் வாங்கக் கூட கையில் காசு இல்லை. நாங்கள் பரம ஏழைகள் என்றபடியால்தான் இங்கு வீட்டுப் பணிப்பெண்களாக வந்தோம்.

நாங்கள் அனைவரும் பெண்கள். இங்கே சுகாதார வசதிகளும் பாதுகாப்பும் அற்ற சூழ்நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். மாற்றிக் கொள்ள ஆடைகள் கூட இல்லாது அவஸ்தைப் படுகின்றோம்

நோயுள்ள பெண்கள் இங்கே கடும் துயரத்தோடு காலங் கழிக்கிறார்கள். சிலர் எழுந்திருக்க முடியாத நிலையில் உடல் உபாதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார்கள்.

நாங்கள் இங்கே வந்தது எமது வறுமையைப் போக்கவும் பொருளாதார நெருக்கடியிலுள்ள இலங்கை நாட்டுக்கு டொலர் வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குமாகும்.

ஆனால் பெரும் தியாகத்தின் மத்தியில் எங்களது தாயை தந்தையை கணவனை, பிள்ளைகளைப் உறவுகளைப் பிரிந்து வந்து குடும்பத்துக்கும் நாட்டுக்கும் உதவி செய்ய வந்த எங்களை இங்கே அடிமைகளாக விற்று எங்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக நாங்கள் இங்கே துயரம் தாங்க முடியாமல் கடந்த 26 ஆம் திகதி ஆர்ப்பாட்டமும் செய்தோம் அதற்கும் எந்தத் தீர்வும் இல்லை. இங்குள்ள இலங்கைத் தூதரகமோ, இந்ந நாட்டு அரசாங்கமோ, எவருமே கண்டு கொள்ளவில்லை.

நவம்பர் 1ஆம் திகதி தொழில் நீதிமன்றத்துக்கும் சென்றோம். ஆனால். அங்கும் எங்கள் சார்பாக நீதி வழங்கப்படவில்லை. நீதிமன்றம் நாங்கள் பெற்றுக் கொண்ட 18 இலட்சம் ரூபாய் பணத்தையும் கட்டிவிட்டு போகுமாறு கேட்கிறார்கள்.

உண்மையில் இலங்கையிலுள்ள பணிப்பெண்களை இங்கே அழைத்து வரும்பொழுது இலங்கை முகவர்கள், எங்களுக்கு ஒரு இலட்சம் அல்லது இரண்டு இலட்சத்தை மாத்திரம் தந்து விட்டு மிகுதிப் பணத்தை இரு நாடுகளிலுமுள்ள முகவர்கள் சுருட்டிக் கொள்கிறார்கள்.

இது ஒரு மோசடியும் மனிதக் கடத்தலும் அடிமை வியாபாரமுமாகும். எனவே மனித உரிமை அமைப்புக்கள், பெண்ணுரிமை அமைப்புக்கள் இந்த மோசடியை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களை இந்தத் துயரத்தில் இருந்து மீட்டெடுத்து எங்களது உறவுகளுடன் எங்களைச் சேர்ப்பிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இப்பொழுது அடிமைகளாக விற்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் 150 பேரைப் போல இன்னும் பல நூற்றுக் கணக்கான பெண்கள் அடிமைகளாக இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்டு விற்கப்படுவார்கள்.

இனிமேல் சுற்றுலா வீசாவில் எந்த இலங்கைப் பெண்ணும் இந்த நாட்டுக்கு வீட்டுப்
பணிப்பெண்களாக வர வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் குடிகாரர்கள் வீழ்ச்சி வருமானம் இன்றி தவிக்கும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் குடிகாரர்கள் வீழ்ச்சி வருமானம் இன்றி தவிக்கும் இலங்கை

இலங்கையில் குடிகாரர்கள் வீழ்ச்சி வருமானம் இன்றி தவிக்கும் இலங்கை

இலங்கையில் குடிகாரர்கள் மதுபானம் அருந்துதல் வீழ்ச்சியடைந்துள்ளதல் ,இலங்கை வருமானம் இன்றி சிக்கி தவித்து வருகிறது .

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,குடி மக்கள் மதுபானம் அருந்துவதில் , ஏற்பட்டுள்ள தக்கம் மகாரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .

இலங்கையில் மதுபானம் மற்றும் புகைத்தல் பொருட்கள் ஊடாக, ஆண்டு தோறும் அதிக வருமானம் கிடைக்க பெற்று வருகிறது .

இந்த வருமான வீழ்ச்சி நாட்டின் பொருளாதரத்தை பலமாக பாதித்துள்ளதாக ,.இலங்கை மதுபான திணைக்களம் தெரிவித்துள்ளது .

மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

சீரற்ற கால நிலை காரணமாக ஏற்படும் மழையால் மண் சரிவு அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

கேகாலை ,கருணாகலா ,பதுளை .கண்டி ,மாத்தளை ,மொனராகலை ,நுவரெலியா ,குருணாகல பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

அபாய எச்சரிக்கை விடுக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சிலர் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்ந்து வருகின்றனர் .

கள்ள உறுதி முடித்து காணிகள் விற்பனை - மக்களே உசார்
Posted in இலங்கை செய்திகள்

கள்ள உறுதி முடித்து காணிகள் விற்பனை – மக்களே உசார்

கள்ள உறுதி முடித்து காணிகள் விற்பனை – மக்களே உசார்

யாழ்ப்பாணம் வசாவிளான், ஒட்டகப்புலம் பகுதிகளில் கள்ள உறுதி முடித்து காணிகள் விற்கப்படுவதாகவும், அதனால் அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில், கடந்த 32 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த சில காணிகள் தற்போது விடுக்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர்கள் அவற்றினை அடையாளம் கண்டு அறிக்கைப்படுத்த முன்னர், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு உரிமையாளரின் பெயர்களை

மாற்றம் செய்தும் , உறுதிகளில் மோசடி செய்தும், கள்ள உறுதிகள் முடித்து, அக்காணிகளை விற்பனை செய்யும் முயற்சிகளில் சில குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

எனவே, அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் உறுதி விடயத்தில் அவதனாமாகவும் விழிப்பாகவும் இருக்குமாறும், வாங்கப் போகும் காணிகள் தொடர்பில் தீர விசாரிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்தேவி ரெயில் மதவாச்சி வரையில் சேவை
Posted in இலங்கை செய்திகள்

யாழ்தேவி ரெயில் மதவாச்சி வரையில் சேவை

யாழ்தேவி ரெயில் மதவாச்சி வரையில் சேவை

யாழ்தேவி ரெயில் தடம் புரண்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரெயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக, மதவாச்சி மற்றும் வவுனியாவிற்கு இடையில் பஸ்கள் மூலம் பயணிகள்செல்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து மதவாச்சி வரையில் ரெயில்சேவை இடம்பெறுகிறது. மதவாச்சியிலிருந்து வவுனியா தொடக்கம்
காங்கேசன்துறை வரையில் ரெயில்சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.