Author: நிருபர் காவலன்
இஸ்ரேல் தாக்குதல் 5 சிரியா இராணுவம் பலி
இஸ்ரேல் தாக்குதல் 5 சிரியா இராணுவம் பலி
இஸ்ரேல் இராணுவம் கடந்த தினம் ,சிரியாவின் மேற்கு பகுதியில் உள்ள .சிரியா இராணுவ முகாமை இலக்கு வைத்து நடத்திய ,வான் வழி ,ஏவுகணை தாக்குதலில் தாக்குதல் 5 சிரியா இராணுவம் பலியாகியுள்ளனர் .
ஈரான் முக்கிய இராணுவ அதிகாரி கொலை செய்ய பட்டு இரண்டாவது நாளில் ,இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிட தக்கது .
ரூவாண்டாவில் அகதிகளுக்கு பாதுகாப்பு பிரிட்டன் Braverman தெரிவிப்பு
ரூவாண்டாவில் அகதிகளுக்கு பாதுகாப்பு பிரிட்டன் Braverman தெரிவிப்பு
ரூவாண்டாவிற்கு பிரிட்டனில் இருந்து அனுப்ப படும் அகதிகளுக்கு, பாதுகாப்பு உள்ளது என பிரிட்டன் குடிவரவு குடியகல்வு அமைச்சர் Braverman தெரிவித்துள்ளார் .
பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழையும் அகதிகளை ,ரூவாண்டாவிற்கு அனுப்புவதில் ,இந்திய பூர்விக குடிகள் அதி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .
இவர்களின் இந்த அடடூழிய செயலினால் ,எதிர் வரும் தேர்தலில் ஆளும் சுனெக் ,ஆட்சி வெற்றி பெறாது என எதிர் பார்க்க படுகிறது .
பொருட்களின் விலைகள் 10 வீதத்தால் குறைப்பு
பொருட்களின் விலைகள் 10 வீதத்தால் குறைப்பு
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எந்த பொருட்களிலும், தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை எனவும் பண்டிகைக்காலத்தில் அனைத்து பொருட்களும், தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Featured
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
யாழ்ப்பாணம் – சிறிதளவில் மழை பெய்யும்
கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மன்னார் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
Featured
ரஷ்ய இராணுவ ஊடக நபர் படுகொலை
ரஷ்ய இராணுவ ஊடக நபர் படுகொலை
ரஷ்யா நாட்டின் வாடகை இராணுவத்தின் மிக முக்கிய ஊடக நபர் ஒருவர் ,
மத்திய செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஓட்டலில் குண்டு வெடிப்பு
மூலம் படு கொலை செய்யப்பட்டுள்ளார் .
ரஷ்ய ராணுவ செய்தியாளர் விளாட்லன் டாடர்ஸ்கி கொல்லப் பட்டார்
என உக்ரைன் அறிவித்துள்ளது .
வாடகை இராணுவத்தினருக்கு உரிய கொட்டல் ஒன்றில் வைத்தே,
இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிறது உக்ரைன் தரப்பினர் .
இது ரஷ்ய மற்றும் ரஷ்ய வடக்கை இராணுவத்தினருக்குள் மோதல்
உள்ளதான தோற்ற பாட்டை காண்பிக்கிறது .
சமீப காலங்களாக புதின் மற்றும் ரஷ்ய முக்கிய நபர்கள் ,
இவ்விதமான குண்டு வெடிப்பின் மூலம்,
கொலை செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
போலந்து கவச வண்டிகளை வாங்கி குவிக்கும் உக்ரைன்
போலந்து கவச வண்டிகளை வாங்கி குவிக்கும் உக்ரைன்
போலந்தில் தயாரிக்கப்பட்ட 100 ரோசோமாக் பல்நோக்கு கவச வாகனங்களை ,
உக்ரைன் ஆர்டர் செய்துள்ளது என்று போலந்தின் பிரதமர் தெரிவித்தார்.
தெற்கு போலந்து நகரமான சிமியானோவிஸ் ஸ்லாஸ்கியில் உள்ள ரோசோமாக் உற்பத்தித் தளத்திற்கு விஜயம் செய்தபோது, ஆர்டர் செய்துள்ளேன் என்று மேட்யூஸ் மொராவிக்கி கூறினார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து போலந்து பெற்ற நிதி மற்றும் உக்ரைன் பெற்ற
அமெரிக்க நிதிகள் மூலம் இந்த கவச வண்டிகள் வாங்கிட நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
ஆயுதங்களை வாங்கி வாங்கி உக்ரைன் ரஸ்யாவை அடிக்கின்ற பொழுதும் ,ரஷ்யஎனக்கு நோ ஏதும் இல்லை என எழுந்து ,வேகமாக உக்ரைனை தாக்கி வருவதால் ,ஜெலன்ஸி சீற்றம் அடைந்துள்ளார் .
உக்ரைன் ரஷ்ய இன்றும் கடும் மோதல்
உக்ரைன் ரஷ்ய இன்றும் கடும் மோதல்
உக்ரைன் ரஷ்ய இராணுவத்தினர் இன்றும் கடும் மோதலில் ஈடுபட்டனர் .
உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதியில் ரஷ்ய பாரிய முன்னேற்ற நகர்வை மேற்கொண்டது .
இந்த படை நகர்வுக்கு கடும் ஏவுகணைகள் ,மற்றும் பீரங்கி
தாக்குதல் சூட்டு ஆதரவுடன் முன்னேற்ற நகர்வை மேற்கொண்டது .
உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்
விமானங்கள் தாக்குதலை நடத்தின .
ரஷ்ய ஏவிய தற்கொலை விமானங்களில் ஆறு சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் ,
620 ரஷ்ய வீரக்ள பலியாகியுள்ளதாக வழமையான ஊடக அறிக்கையில் ,
உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
உக்ரைன் ரஷ்ய இன்றும் கடும் மோதல்
எனினும் தமது தாக்குதல்களில் உக்ரைன் பலத்த ஆயுத ஆளணி
சேதங்களை சந்தித்து உள்ளது எனரஸ்யா தெரிவித்துள்ளது .
முன்னேறும் ரஷ்ய படைகளை தடுத்து நிறுத்தி நாட்டை
காப்பாற்ற எப் 16 ரக போர் விமானங்கள் ,சிறுத்தை டாங்கிகள் ,
விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அவசரமாக வழங்கும் படி ,
அமெரிக்க பிரிட்டனிடம்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி கோரிக்கை விடுத்துள்ளார் .
அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த திரை அரங்கு கூரை ஒருவர் மரணம் 28 பேர் காயம்
அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த திரை அரங்கு கூரை ஒருவர் மரணம் 28 பேர் காயம்
அமெரிக்கா இல்லினாய்ஸ், பெல்விடேரில் உள்ள அப்பல்லோ
தியேட்டரில் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியும் , 28 பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கலீல் – ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .
பணியாளர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட சுமார் 260 பேர்,
ஹெவி மெட்டல் இசை நிகழ்ச்சியை நடத்தும் இடத்திற்குள் இருந்ததாக,
பெல்விடேர் தீயணைப்புத் தலைவர் ஷான் ஷாடில் தெரிவித்தார்.
கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
இருப்பினும் சம்பவ தினம் இரவு 7:45 மணிக்கு ஒரு சூறாவளி எச்சரிக்கை குறித்து,தேசிய வானிலை சேவை அறிவுறுத்தல் விடுக்க பட்டிருந்ததாக தெரிவிக்க படுகிறது .
உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா தயக்கம்
உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா தயக்கம்
உக்ரைனுக்கு அவர்கள் கேட்கும் நீண்ட ஏவுகணைகளை வழங்கிட,
அமெரிக்கா தயக்கம் காண்பித்து வருகிறது .
பல்வேறு பட்ட ஏவுகணைகள் ,ராடர்கள் ,உளவு விமானங்கள் ,
மற்றும் பெருமளவு ஆயுத தளபாடங்களை வழங்கியது .
எனினும் அவற்றை வைத்து ரஸ்யாவை ,உக்ரைன் ராணுவத்தினரால்,
வெற்றி கொள்ள முடியவில்லை .
அதனால் இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க பட்டால் ,
ஒருவேளை அவை ரஷ்ய படைகள் வசம் சிக்கிவிட்டால் ,
அதனை போல வடிவமைத்து ,தமக்கு எதிராக பயன் படுத்த ,
ஆரம்பித்து விடும் என்பதால் ,இந்த ஏவுகணைகளை
வழங்கிவிட அமெரிக்கா இராணுவ தலைமையகம் தயக்கம் காண்பித்து வருகிறது .
இந்த சம்பவம் ,உக்ரைனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .
வேகமாக பரவும் புதிய நோய் குறித்து எச்சரிக்கை
வேகமாக பரவும் புதிய நோய் குறித்து எச்சரிக்கை
குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண்டு நோய்கள் வேகமாக பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பிள்ளைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
இருமல், காய்ச்சல் அல்லது சளி மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்
2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Featured
தந்தையை வெட்டிக் கொன்ற மகன்கள்
தந்தையை வெட்டிக் கொன்ற மகன்கள்
தந்தையின் துன்புறுத்தலைத் தாங்க முடியாத 3 பிள்ளைகள் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவி்க்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் கொடிகாமம் மிரிசுவில் பகுதியைச் சேர்ந்த 21, 20 மற்றும் 28 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சகோதரர்கள் மூவரும் சேர்ந்து கொலையை செய்து இருப்பதாகவும் கொலை செய்யப்பட்ட 44 வயதுடைய அவர்களின் தந்தை, கராத்தே சிவா என அழைக்கப்படும் சிவசோதி சிவகுமார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்களிடம் பொலிஸார் விசாரணை நடாத்திய போது, சிறிது காலமாக தந்தையின் தொல்லை தாங்க முடியாததால் அவரை வெட்டிக் கொன்றதாக தெரிவித்துள்ளனர்.
Featured
தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி
தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி
இன்று (02) காலை எரிபொருள் ஏற்றிச் செல்லும் புகையிரத தண்டவாளத்தில் அமர்ந்திருந்த ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த நபர், வாத்துவ மொல்லிகொட, சாந்த பற்றிக் வீதியில் வசித்து வந்த குணசிங்க சமந்த சந்திரகுமார சில்வா என்ற 36 வயதானவர் ஒரு பிள்ளையின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.
மருதானையிலிருந்து மாத்தறை செல்லும் எரிபொருள் ஏற்றிச் செல்லும் புகையிரதம் மொல்லிகொட பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை மோதியதால் அவர் உயிரிழந்ததுடன் சடலம் களுத்துறை வடக்கு புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.
Featured
கிழக்கில் பிச்சை எடுத்த கொழும்பு ஐஆர்சி சிக்கினார்
கிழக்கில் பிச்சை எடுத்த கொழும்பு ஐஆர்சி சிக்கினார்
பிச்சைக்கார வேடம் பூண்டு மட்டக்களப்பு நகரில் துவிச்சக்கரவண்டியை திருடிச் சென்றவர், வௌ்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் பல குற்றங்கள் புரிந்து குற்றவாளியான இவர், பொலிஸின் ஜஆர்சி பட்டியலில் உள்ள தெமட்டகொடையைச் சேர்ந்த ஒருவர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டுள்ளது. மட்டு பொதுச் சந்தை பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார் .
பாடசாலை மாணவன், நகரில் மத்திய வீதியிலுள்ள உணவு கடை ஒன்றின் முன்னால் துவிச்சக்கரவண்டியை மார்ச் 22ஆம் திகதி நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று திரும்பிய போது 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான துவிச்சக்கரவண்டி திருட்டுபோயுள்ளது
கிழக்கில் பிச்சை எடுத்த கொழும்பு ஐஆர்சி சிக்கினார்
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டடையடுத்து பொலிஸார் அந்த பகுதி வீதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்கள் மூலம் திருடனை தேடிவந்தனர். அதிலிருந்த காட்சிகளின் அடிப்படையிலேயே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பில், ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, பொலிஸ் ஜஆர்சி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர் எனவும் தெரியவருகின்றது,
இவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று சனிக்கிழமை(01) ஆஜர்படுத்திபோது எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
Featured
உக்ரைனுக்கு குண்டுகளை கண்டு பிடிக்கும் 11 நாய்களை வழங்கும் கொலண்ட்
உக்ரைனுக்கு குண்டுகளை கண்டு பிடிக்கும் 11 நாய்களை வழங்கும் கொலண்ட்
உக்ரைனுக்கு குண்டுகளை கண்டு பிடிக்கும் 11 நாய்களை கொலண்ட்
இராணுவத்தினர் வழங்கு கின்றனர் .

இந்த நாய்களின் செயல் சாப்பாடு மிக அளப்பெரியது என்கிறது கொலண்ட் இராணுவம் .ரஷ்ய படைகள் மண்ணுக்குள் ,மரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும்,குண்டுகளை தமது மோப்பம் ஊடக இலகுவாக கண்டு பிடிக்கும் வல்லமை கொண்டவை .
மேலும் வாகனங்களில் குண்டுகள் எடுத்து செல்ல பட்டாலும்,
இந்த நாய்கள் ,அந்த குண்டுகளை கண்டு பிடிக்கும் செயல் திறன்,
கொண்டவை என நெதர்லாந்து இராணுவம் தெரிவிக்கிறது .
அவ்விதமான 11 நாய்களையே கொலண்ட் ,
உக்ரைனுக்கு இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளது
சரிந்த ராஜபக்ஸ கோட்டை வெறுக்கும் மக்கள் video
சரிந்த ராஜபக்ஸ கோட்டை வெறுக்கும் மக்கள் video
இன்றைய இலங்கையில் சரிந்த ராஜபக்ஸ கோட்டை,
வெறுக்கும் இலங்கை ,தமிழ்,சிங்கள ,முஸ்லீம் மக்கள் .
வெளியான புதிய மக்கள் கருத்து கணிப்பில் ராஜபக்ஸ
செல்வாக்கு சரிந்து கீழ் நிலைக்கு சென்றுள்ளது .
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஸ ,கோட்டபாய ராஜபக்ஸ ,
ஆகியோரும் பொது மக்களால் வெறுக்க படும் நபர்களாக மற்றம் பெற்றுள்ளனர்
இந்த புதிய கருத்து கணிப்பு மகிந்த குடும்ப அரசியல் முடிவுக்கு வந்துள்ளதாகவும்
தேர்தலில் பலத்த தோல்வியை சந்திப்பார்கள் என ,
பெறப்பட்ட கருத்தியல் விருப்பு தெரிவித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
Featured
லண்டனில் வீதியில் குப்பை வீசிய பெண்ணுக்கு 4 லட்சம் ரூபா தண்டம்
லண்டனில் வீதியில் குப்பை வீசிய பெண்ணுக்கு 4 லட்சம் ரூபா தண்டம்
லண்டன் Ashford Borough Council பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ,
குப்பை வாளிகளுக்குள் ,குப்பைகளை போடாது ,வீதியில் கொட்டி வீசிய குற்றத்திற்கு ,மாநகரசபை 1000 பவுண்டுகள் தண்டம் ,
அதாவது நான்கு லட்சம் இலங்கை ரூபாய்களை தண்டமாக அறவிட்டுள்ளது .
பிரிட்டனில் பிளாஸ்டிக்,போத்தல்கள் ,மட்டைகள் ,
குப்பைகள் போடுவதற்கு என குப்பை வாளிகள்
வைப்பதுண்டு ,அந்த விதிகளை மீறி ,வீதியில் வீசியதால் இந்த தண்டம்
அறவீடு நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளது .
பணத்தை செலுத்த தவறிய நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு
அந்த நபர்கள் அழைக்க பட்டுள்ளனர் ..
இவ்வாறு இலங்கை,இந்தியாவில் சட்டம் வந்தால்
நாடு உருப்படும் என வெளிநாட்டு தமிழர்கள் கருத்தாக உள்ளது .
சீனா இந்தியா நண்பர்கள் உலகை அலறவிட்ட ரஷ்யா
சீனா இந்தியா நண்பர்கள் உலகை அலறவிட்ட ரஷ்யா
சீனா இந்தியா என் நண்பர்கள் என ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதின் தெரிவித்துஅமெரிக்கா ,நேட்டோ ,உலக,நாடுகளை அலறவிட்டுள்ளார் .
ரஷ்யா ஜனாதிபதி விளாதிமீர் புதின் இந்த திடீர் அறிவிப்பு ,
நேட்டோ அமெரிக்காவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
இன்றைய உக்ரைன் போர் நிலவர செய்திகளின் பின்னரும், ரஷ்யாவுடன் , இந்தியா,சீனா, இணைந்து பயணிப்பதால் ,இந்த அறிவிப்பை முதலாவது
சோவியத் வல்லரசின் தலைவர் அறிவித்துள்ளார் .
உக்ரைன் நாட்டுக்கு கொலண்ட் ,நாடு குண்டுகளை கண்டு பிடிக்கும் நாய்களை வழங்கியுள்ளது .இதன் மூலம் எதிரி படைகளை விரட்டியடிக்க முடியும் என்பதாக நெதர்லாந்து நாட்டின் கனவாக காணப்படுகிறது .
உக்ரைன் ரஷ்யா போர் என்றும் தணியும் ,மக்கள் நின்மதியாக வாழ முடியும்
என்பது உலக மக்கள் நிலையாக உள்ளதை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் காண முடிகிறது .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
விடுதலை படத்தை பார்க்க விடாமல் தடுத்த காவலர்கள்வீடியோ
விடுதலை படத்தை பார்க்க விடாமல் தடுத்த காவலர்கள்வீடியோ
வெற்றி மாறன் விடுதலை படத்தை திரை அரங்கில் பார்க்க விடாது தடுத்த காவல்துறை அதிகாரியை திரை அரங்கில் வைத்து தமிழிச்சி ஒருவர் வெளுத்து வங்கியுளளார் .
தமிழ் அரசியலை காவல்துறை அட்டூழியங்களை பேசும் படமாக விடுதலை திரைப்படம் உள்ளது .
அதில் நிர்வாண காட்சிகள் காண படுகின்றன ,அதனால் இந்த விடுதலை திரைப்படத்தை, திரையில் பார்க்க அனுமதிக்க முடியாது என தெரிவித்து காவல்துறையினர் கலகத்தில் ஈடுபட்டனர் .
விடுதலை படத்தை பார்க்க விடாமல் தடுத்த காவலர்கள்
காவல்துறையின் இந்த அட்டூழிய செயலானது, விடுதலை திரை படத்தை பார்க்க வந்த திரை அரங்கில், மக்கள் கொதித்து பேசும் காட்சிகள் , சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன ..
இந்த மக்கள் பேச்சுக்கள் வைரலாகிய வண்ணம் உள்ளதால் ,விடுதலை திரைப்படம் தொடர்பிலான எதிர் பார்ப்பும் மக்கள் ஆதரவும் அதிகரித்து காணப்படுகிறது .
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள் போர் ரோந்துகளை நடத்தி பதட்டத்தை அதிகரித்துள்ளன .இது தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வெனின் அமெரிக்க விஜயத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது.
தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், ஒன்பது சீன விமானங்கள் , இடைநிலைக் கோட்டின் வடக்கு, மையம் மற்றும் தெற்கில் உள்ள புள்ளிகளில் கடந்து சென்றதாக தெரிவித்துள்ளது .
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
இந்த எல்லை கோடானது , இது இரு தரப்புக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற இடையகமாகப் பயன்படுத்தப்பட்டது.
தைவானின் ஆயுதப் படைகள் அதன் சொந்த விமானம் மற்றும் கப்பல்களைப் பயன்படுத்தி நிலைமையைக் கண்காணித்தன .எனினும் மோதல்களை ஏதும் மேற்கொள்ள படவில்லை .
தைவானில் பதற்றத்தை ஏற்படுத்த அல்லது தாய்வானை மிரட்ட, சீனா இவ்வாறான அத்துமீறல்களை புரிந்து வருவதாக தெரிவிக்க படுகிறது .
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டமூலம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.











































