Author: நிருபர் காவலன்
ஐ ஐஸ் தலைவரை போட்டு தள்ளிய அமெரிக்கா
ஐ ஐஸ் தலைவரை போட்டு தள்ளிய அமெரிக்கா
ஐ எஸ் முக்கிய தாக்குதல் தளபதியாக சிரியாவின் மேற்கு பகுதியில் விளங்கி வந்த ,leader as Khalid ‘Aydd Ahmad Al-Jabouri. என்பவர் ,அமெரிக்கா உளவுத்துறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், விமான தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் .
அமெரிக்கா உளவுத்துறையால் நீண்ட நாட்களாக, கண்காணிக்க பட்டு வந்த ,ஐ எஸ் முக்கிய, சிரியாவின் தாக்குதல், கட்டளை தளபதியாக, விளங்கி வந்த ,
முக்கிய தளபதியே ,கொலை ,செய்யப்பட்டுள்ளதாக ,அமெரிக்கா அறிவித்துள்ளது .
அமெரிக்கா ,இஸ்ரேல் ,இணைந்து மிக முக்கிய நாடுகளை தலைவர்கள் ,தளபதிகளை போட்டு தள்ளிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்
இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் செவ்வாயன்று ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த 6 பேரும் சுற்றுலாப் பயணிகள் என்றும், குறைந்தது 70 பேர் பனியில் சிக்கியிருக்கலாம் என்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இமயமலை மாநிலத்தின் தலைநகரின் புறநகரில், சாங்கு ஏரிக்கு செல்லும் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் அதிகாரி டென்சிங் லோடன் தெரிவித்துள்ளார் .
பாரம்பரிய வைத்தியர்களுக்கான பயிற்சி செயலமர்வு
பாரம்பரிய வைத்தியர்களுக்கான பயிற்சி செயலமர்வு
கொழும்பு சுகாதார அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பாரம்பரிய வைத்தியர்களுக்கான ஒருநாள் பயிற்சி செயலமர்வு இன்று தம்பலகாமம் – முள்ளிப்பொத்தானை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
கொழும்பு சுதேச வைத்தியப் பிரிவின் தலைவர் பி.தயாநந்தன் தலைமையில் ஆரம்பமான இச்செயலமர்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவின் வைத்தியர் சி.சிவகுமார் உள்ளிட்ட
வைத்தியர்களும், திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பாரம்பரிய வைத்தியர்களுக்கான பயிற்சி செயலமர்வு
இதன்போது, சுதேச வைத்தியப் பிரிவின் தலைவர் பி.தயாநந்தன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மற்றும் வைத்தியர் சி.சிவகுமார் ஆகியோரினால் பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றி எடுத்துரைத்தனர்.
இதில் திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்களின் அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும், அவர்களின் வைத்திய முறைகளை எவ்வாறு
கடைப்பிடித்துச் செல்லல்வேண்டும் என்ற விளக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாரிவு செய்யப்பட்ட பாரம்பரிய வைத்தியர்களுக்கு மருந்துப் பொருட்களை கொண்டு செல்லக்கூடிய பைகளும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அபு அலா
புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ
புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ
ரஷ்யா வாடகை இராணுவத்தின் களமுனை இராணுவ ஊடகவியலாளராகவும் ,
ரஷ்யாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் புரிந்து வந்த விளாட்லன் டாடர்ஸ்கி கொல்லப்பட்டார் .
இவரை கொலை செய்வதற்கு பொம்மை ஒன்றுக்குள் குண்டு மறைத்து வைக்க பட்டு,அவருக்கு பரிசாக அது வழங்க படுகிறது .
அந்த பொம்மையின் தலையில் ,அந்த ஊடக நபர் அழுத்தும் பொழுது அது வெடித்து சிதறுகிறது .
இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது ,கொழும்பில் டக்கிளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து கரும்புலி பெண் ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்தினர் .அதில் அந்த பெண் வயிற்றுக்கு மேலே துண்டாகி வீழ்கிறார் .
புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ
அதே போன்ற ஓத்த தாக்குதலே இந்த ஊடக நபருக்கும் ஏற்பட்டுள்ளது
,வயிற்றுக்கு மேல் குண்டு வெடித்து சிதறுகிறார் ,
அந்த மேசையின் அருகில் 40 மீட்டர் தொலைவில் இருந்த ,
நாஸ்தியா என்கின்ற பெண் தப்பித்து கொள்கிறார் ,
இவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை .
இவ்வாறு தான் தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டமிடப்பட்டு,
தாக்குதல் நடத்த படுகிறது .அதற்கு ஏற்ப
திட்டங்கள் நகர்த்த பட்டு ரஷ்ய வாடகை இராணுவத்தின்
விளாட்லன் டாடர்ஸ்கி கொல்லப்பட்டுள்ளார் .
குண்டு வெடிக்கும் முன் அந்த பெண் அழுத்ததே என்பதை போல கை காண்பிப்பதையும் ,அவர் ஒருவித பதட்டத்திற்கு உள்ளாகி உள்ளதை அவரது உடல் மொழி அசைவின் மூலம் காண முடிகிறது .
இராணுவ புலனாய்வு ஊடக நபர் அதனை ,அவ்விடத்தில் அடையாளம்
காணமல் விட்டது ,அந்த பெண்ணில் உள்ள நம்பிக்கை போல் உள்ளது .
இந்த கூட்னு வெடிப்பில் ஒருவர் பலியாகியும் 30 பேர் காயமடைந்தனர் .
இந்த குண்டு வெடித்து ஒரு மணித்தியாலத்திற்குள் ரஷ்யா
ஊடகம் ஒன்றுக்கு ,குறித்த காணொளி சிக்கிய நிலையில் ,
அதனை அவர்கள் வெளியிட்டனர் .
காணொளியில் உள்ள கொலையாளி நாஸ்தியா என்கின்ற அழகிய பெண்,
மற்றும் அவருக்கு உதவியாக செயல் பட்ட இருவர் அடையாளம் காண பட்டுள்ளனர் .
இவர்களை தூக்கிடும் நகர்வில் ,வாக்கினர் வாடகை
இராணுவத்தின் உளவுத்துறையினரும் ,ரஸ்யா உளவுத்துறையினரும் ,
தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர் .
கொலையாளி பெண் கைது செய்யப்பட்டால் ,
மேலும் பல விடயங்கள் அம்பலமாகும் என எதிர் பார்க்க படுகிறது .
பெண்கள் எப்பொழுதும் மிக ஆபத்தானவர்கள் என்பது மீளவும்
ஒரு தடவை இங்கே அம்பலமாகியுள்ளது .
முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் பெண்களுடன் உறவாடுவதை
தவிர்த்து விலகி இருப்பது மிக சிறந்தது என்பது இதன் ஊடாக தெரிய வந்துள்ளது எனலாம் .
துருக்கியியில் 56 நாட்களின் பின்னர் தாயுடன் இணைந்த சிசு
துருக்கியியில் 56 நாட்களின் பின்னர் தாயுடன் இணைந்த சிசு
துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ,பிரிந்த தாயும் சிசுவும்,
ஒன்றாக இணைந்துள்ள அதிசயம் நடந்துள்ளது .
Vetin என்று அழைக்கப்படும் மூன்றரை மாத வயதுடைய அதிசயக் குழந்தை,
பிப்ரவரி 6 நிலநடுக்கத்திற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு,
எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லாமல், Hatay மாகாணத்தில் ஒரு கட்டிடத்தின்,இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
பேரழிவு நடந்த 54 நாட்களுக்குப் பிறகு ,
அதானா நகரில் உள்ள மருத்துவமனையில் ,
அவரது தாயார் யாசெமின் பெக்தாஸ் சிகிச்சை பெற்று வந்தார் ,
அவருடன் சிசு ஒப்படைக்க பட்டுள்ள அதிசயம் நடந்துள்ளது .
ஒரு தாயையும் அவரது குழந்தையையும் ,
மீண்டும் இணைப்பது உலகின் மிக மதிப்புமிக்க பணிகளில் ஒன்றாகும்,
என்று குடும்ப மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் டெரியா யானிக் தெரிவித்தார் .
வெடித்த குண்டு இருந்த பேரூந்து 16 பேர் காயம்
வெடித்த குண்டு இருந்த பேரூந்து 16 பேர் காயம்
சிரியா தலைநகர் டமாஸ்கஸுக்கும் ஜோர்டான் தலைநகர்,
அம்மானுக்கும் இடையிலான நெடுஞ்சாலையில்,
குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது .
இதன் போது பயணிகள் பேரூந்தில் பயணித்தவர்களில் 16 பேர் காயமடைந்தனர் .காயமடைந்தவர்களில் எவரும் உயிராபத்து இன்றி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
.
உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கிய போலந்து
உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கிய போலந்து
உக்ரைனுக்கு போலந்து MiG-29 போர் விமானங்களின் முதல் தொகுதியை
வழங்கியுள்ளதாக , போலந்து ஜனாதிபதி அலுவலகத்தின் சர்வதேச கொள்கை
தலைவர் திங்களன்று தெரிவித்தார்.
எத்தனை ஜெட் விமானங்கள் வழங்கப்பட்டன என்பதை குறிப்பிடவில்லை.
வரும் நாட்களில் வார்சா முதல் நான்கு MiG-29 போர் விமானங்களை
உக்ரைனிடம் ஒப்படைக்கும் என்று போலந்து தெரிவித்துள்ளது
போலந்து அதிகாரியின் அறிக்கை குறித்து ,
உக்ரைனின் விமானப்படை இன்னும் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் உக்ரைனுக்கு
ஆயுதங்களை வழங்கி வருகிறது குறிப்பிட தக்கது .
Featured
IMF ஒப்பந்தத்தில் முக்கிய விடயங்கள் சட்டமாக்கப்படும்
IMF ஒப்பந்தத்தில் முக்கிய விடயங்கள் சட்டமாக்கப்படும்
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் ஜூன் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதிகரித்த சுற்றுலா பயணிகள் வருகை
அதிகரித்த சுற்றுலா பயணிகள் வருகை
2023 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இலங்கைக்கு 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்திற்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125,495 ஆக இருந்தது.
மார்ச் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறையின் முதல் மூன்று நாடுகளாக ரஷ்யா,
இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் தோன்றியுள்ளதாக சுற்றுலா அமைச்சர் தெரிவித்தார்.
Featured
தமிழர் காணிகளில்180 சிங்களக் குடும்பங்களை குடியேற்ற முயற்சி
தமிழர் காணிகளில்180 சிங்களக் குடும்பங்களை குடியேற்ற முயற்சி
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியில் பொலிஸ் நிலையத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய காணிகளே, இவ்வாறு அபகரிக்கப்பட்டு 180 சிங்களக் குடும்பங்களை குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் கீர்த்தி தென்னக்கோனின் வழிகாட்டலில், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினாலேயே இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அவ்வாறு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை பார்வையிடுவதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இன்று (03) கருநாட்டுக்கேணிப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு முன்னாள் வடமாகாண சபை துரைராசா ரவிகரன் மற்றும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் ஆகியோர் இணைந்து தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
கடந்த 1973, 1979 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்ட இக் காணிகளில் தாம் குடியிருந்ததுடன், பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாகவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.
தமிழர் காணிகளில்180 சிங்களக் குடும்பங்களை குடியேற்ற முயற்சி
தமது பூர்வீகமான இக்காணிகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு தாம் ஒருபோது இடமளிக்க முடியாது எனவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களான கெக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நீர்ப்பாசன வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா பகுதி சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்குச் சொந்தமான மானாவாரி விவசாய நிலங்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக் காணிகளையும் அபகரிப்புச் செய்து அங்கு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களை மேலும் அதிர்ப்திக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கு தாம் எந்த எல்லைக்குப் போகவும் தயாராக உள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதித் தமிழ் மக்களும், ரவிகரனும் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் பூர்வீக எல்லைக் கிராமமான கருநாட்டுக்கேணித் தமிழ் மக்களின் குடியிருப்புக்காணிகளை ஆக்கிரமிப்புச் செய்து அங்கு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளும் முயற்சிகள் தற்போது முனைப்புப் பெற்றுள்ளன.
குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியிலுள்ள பொலிஸ் நிலயத்தைச் சூழவுள்ள, தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரித்து அங்கு 180சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் இங்கு இடம்பெறுவதாக அறிகின்றோம்.
ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளரான கீர்த்தி தென்னக்கேன் என்னும் நபருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையே இந்த சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தமிழர் காணிகளில்180 சிங்களக் குடும்பங்களை குடியேற்ற முயற்சி
இந்தப் பகுதிகளிலுள்ள காணிகள் அனைத்திலும் எமது தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்தனர். இந்நிலையில் கடந்த 1973மற்றும், 1979ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணி உத்தரவுப் பத்திரங்கள் அவர்களுடைய கைகளிலே இருக்கின்றன.
இந்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி எனப்படுகின்ற இந்த எல்லைக் கிராமங்கள், பூர்வீக பழந்தமிழ் கிராமங்களாகும்.
இங்கு வாழ்ந்த மக்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு இந்தப் பகுதிகளிலிருந்து சிங்கள இனவெறி இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.
அவ்வாறு வெளியேற்றப்பட்டபின்னர் இங்குள்ள தமிள் மக்கள் நெற்பயிற்செய்கைக்காக பயன்படுத்திய நீர்ப்பாசனக்குளங்கள் அவற்றின் கீழான வயல் நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந் நிலையில் தமிழ் மக்கள் 1984 ஆம் ஆண்டுக்குமுன்னர் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்திய உந்திராயன் குளம், மறிச்சுக்கட்டிக்குளம், ஆமையன்குளம் ஆகிய குளங்களையும் அவற்றின் கீழான வயல் நிலங்களையும் தற்போது சிங்களவர்களே பயன்படுத்தி வருகின்றார்கள்.
இதுதவிர தமிழ் மக்களுடைய மானாவாரி விவசாய நிலங்கள் பலவும் தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவருகின்றது.
அத்தோடு கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணித் தமிழ்மக்கள் தமது மானாவாரி விவசாய நிலங்களில் பயிற்செய்கை நடவடிக்கை செய்யும்போது மகாவலி அபிவிருத்தி அதிகிரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்களால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. சிங்கள மக்களாலும் கூட இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றது.
எமது எல்லைக்கிராமங்களிலுள்ள தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும்பான்மையினத்தவர்களால் தாக்கப்படுவதும், தமிழர்ளுடைய கால்நடைகள் திருடப்படுகின்ற சம்பவங்கள் கூட ஒருபுறம் இடம்பெறுகின்றன.
இவ்வாறாக எல்லைக்கிராமங்களிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் பலவித அழுத்தங்களுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர்.
இவ்வாறான சூழலில் தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக்காணிகளில் கூட சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முனைப்புப் பெற ஆரம்பித்துள்ளன.
இவ்வாறான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளின் ஊடாக, இங்கு வாழும் ஆதிக்குடிகளான தமிழ் மக்களை முற்றுமுழுதாக அப்புறப்படுத்திவிட்டு, தமிழர்களின் எல்லைக் கிராமங்களில் சிங்களவர்களை குடியேற்றவேண்டும் என்ற நோக்குடனேயே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது. எமது தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களை பாதுகாப்பதற்கு நாம் எந்த எல்லைக்கும் போகத் தயாராக உள்ளோம் என்றார்.
Featured
எரிவாயு விலை பாரிய அளவில் குறைப்பு
எரிவாயு விலை பாரிய அளவில் குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,005 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,728 ரூபாவாகும்.
அத்துடன் 5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,502 ரூபாவாகும்.
இதேவேளை 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 700 ரூபாவாகும்.
Featured
ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video
ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video
வடகொரியா நடத்தின் ஏவுகணை சோதனையை அடுத்து ,அமெரிக்கா
,தென்கொரியா ,ஜப்பன் இணைந்து
இரண்டு நாள் நீர்மூழ்கி கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன .
வடகொரியாவின் முன்னணி தாக்குதல் கப்பல்களில் ,
இருந்து ஏவப்படும் ,ஏவுகணைகளை தாக்குவது ,
அதன் வீச்சு மற்றும் பாதிப்புக்களை கணடறிந்து தடுப்பது ,
போன்ற மிக பெரும் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன .
நாளுக்கு நாள் ,வடகொரியா ,தனது ஏவுகணை சோதனைகளை ,
அதிக படுத்தி பயணிக்கும் நிலையில் ,
அமெரிக்கா ,தென்கொரியா,ஜப்பான் என்பன,
இணைந்து இந்த, கூட்டு கடல் படை பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன .
2017 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற மிக பெரும் ,
அபாயம் நிறைந்த நீர்மூழ்கி மற்றும் ,போர் கப்பல்கள்
அடங்கிய குழு ,பயிற்சியாக இது பார்க்க படுகிறது .
ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video
தொடர்ந்து விரிந்து பரந்து செல்லும் போர் பதட்டத்தின் மத்தியில் ,
இடம்பெற்றுள்ள இந்த இராணுவ ஒத்திகையின் பின்னர் ,
வடகொரியா மேலும் பல ஏவுகணை சோதனைகளை ,
வரும் மணித்தியாலங்களில் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அமெரிக்காவுக்கு போட்டியாக ,வடகொரியா ஆணு ஆயுத செறிவாக்கத்தில் ,
முதல் இடம் பிடித்துள்ளது என்கின்ற கூற்று வலுப்பெற்றுள்ள நிலையில்,
வடகொரியாவை வீழ்த்திட அமெரிக்கா ,தனது தந்திர நயவஞ்சக ,
வேலையில் ஈடுப்பட்டு வருவதாக ,வடகொரியா குற்றம் சுமத்தியுள்ளது .
தொடர்ந்து கொரியா பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது .
எவ்வேளையும் ஏதும் நடக்கலாம் என்கின்ற நிலையே காண படுகிறது .
மூன்று நாடுகளின் கூட்டு போர் ஒத்திகையை கண்டு வடகொரியா ,
அடங்கி விடுமா எனறால் பதில் இல்லை என்றே கூறலாம் .
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 4 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 4 பேர் காயம்
அமெரிக்காவாயில் கடந்த தினம் பார் ஒன்றுக்குள் இடம்பெற்ற ,துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியும் ,நால்வர் காயமடைந்துள்ளனர் .
அமெரிக்கா hookah bar in Fayetteville, North Carolina பகுதியில் உள்ள ,பாருக்குள் மர்ம நபர் நடத்திய திடீர் ,துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இந்த அசம்பாவிதம் இடம் பெற்றுள்ளது .
ஆயுத தாரி சம்பவ இடத்தில பலியாகியுள்ளார் ,காயமடைந்தவர்களில் ஒருவர் ,மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக ,மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
தொடர்ந்து இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான,
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக ,அமெரிக்கா போலீஸார் தெரிவித்துள்ளனர் .
முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் புறக்கணிக்கப்படும் புல்மோட்டை பாடசாலை
முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் புறக்கணிக்கப்படும் புல்மோட்டை பாடசாலை
புல்மோட்டையிலுள்ள சகல பாடசாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும் இந்நிலையில், புல்மோட்டை ஜின்னா வித்தியாலயத்தில் கடமையாற்றும் விஞ்ஞானப்பாட ஆசிரியர் எஸ்.எம்.லத்தீபின் இடமாற்றத்தால் பாடரீதியான பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்களும், அப்பிரதேச மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றம் உதவிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு) மேகனேந்திரனின் திட்டமிட்ட இன ரீதியான மற்றும் பிரதேச ரீதியான இடமாற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கு தகுந்த நடவடிக்கை எட்டப்படும்வரை எங்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் என அப்பிரதேச மக்களும், பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பில் உடனடி நடவடிக்கையினை எடுக்கக்கோரிய கடிதத்தினை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களினால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் இன்று (03) ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர்,
கல்வி அமைச்சர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் புறக்கணிக்கப்படும் புல்மோட்டை பாடசாலை
அனுப்பி வைக்கப்பட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறவிருக்கின்ற இந்நிலையில், புல்மோட்டையில் காணப்படும் சகல பாடசாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடம் காணப்படும் நிலையில்,
புல்மோட்டை ஜின்னா வித்தியாலயத்தில் கடமையாற்றும் விஞ்ஞானப்பாட ஆசிரியரான எஸ்.எம்.லத்தீபின் இடமாற்றம் மூலம், பாடரீதியான பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான இடமாற்ற நடவடிக்கைகளில் திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றம் உதவிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு) மேகனேந்திரனின் திட்டமிட்ட இன ரீதியான மற்றும் பிரதேச ரீதியான இடமாற்றங்களை செய்வருவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள
முடியாது. அவரின் இவ்வாறான செயற்பாடுகளின் ஆவனங்களை எங்களால் நிருபிக்கக்கூடியதாக இருக்கின்றது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வலயக்கல்வி அலுவலகம் ஓர் பழிவாங்கள் அலுவலகமாக திகழ்ந்து வருவதை, பெற்றோர்களாகிய நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்விடயங்களைப் பார்க்கின்றபோது பெரும் கவலையளிக்கின்றது.
அச்செயற்பாட்டை நாங்கள் மிக வன்மையாகவும் கண்டிக்கின்றோம். எனவே, இவ்வாறான திட்டமிட்ட இடமாற்றங்களை உடனடியாக ரத்துச் செய்வதுடன், அந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் இருப்பதற்கு தகுந்த
நடவடிக்கையினை ஜனாதிபதி உள்ளிட்ட கிழக்கு மாகாண ஆளுநர் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
(அபு அலா)
Featured
ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்
ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்
ரவையில் அட்டகாசமான சுவையில் வீட்டில் இப்படி ஸ்வீட்/ஸ்நாக்ஸ்
செய்து அசத்துங்க மக்களே .
வாங்க இப்போ ஒரு கப் ரவையில் வைத்து ,எப்படி இந்த ஸ்னேக்ஸ், செய்வது என்பதை பார்ப்போம் .
ரவை சினேக்ஸ் செய்வது எப்படி ..?
அதற்கு தேவையான பொருட்கள் என்ன .
ஒரு கப் ரவா ,அரை கப் தேங்காய் பால் ,வைத்து நன்றாக கலக்கி ,பத்து நிமிடம் ஊற வைத்திடுங்க .ஊறி வந்ததும் , இது கூட அரை கப் அளவு மை தா மா .முக்கால் கப் சக்கரை ,மூன்று பொடி அரைத்த ஏலக்காய் ,தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து கலக்கி எடுங்க

செய்முறை இரண்டு .
இப்போ அடுப்பில கடாய வைத்து ,தேவையான அளவு எண்ணெய் விட்டு ,எண்ணெய் சூடானதும் ,சின்ன சின்ன உருண்டையாக அப்டியே எண்ணைக்குள் போட்டு பொரித்து எடுங்க .

அம்புட்டு தாங்க வேல ,இது போல தினமும் செஞ்சு சாப்பிடுங்க .
ஐந்து நிமிடத்தில் ,மிக இலகுவான முறையில் ,ரவையில், சூப்பரான ,இனிப்பு ஸ்னேக்ஸ் ரெடியாகிடிச்சு .

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு
கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு
கருவேப்பில்லை கார தொக்கு இப்படி வீட்டில செஞ்சு பாருங்க .இட்லீ, தோசைக்கு ,செம கூட்டு ,சிறுவர்கள் முதல் ,பெரியவர்கள் வரை விரும்பி உண்பாங்க .கடை சுவையில் அம்புட்டு தரமா இருக்கும். இந்த கருவேப்பிலை கார தொக்கு .
சுவையான கருவேப்பிலை கார தொக்கு செய்வது எப்படி .
மிக இலகுவான முறையில் இப்படி வீட்டில் செஞ்சு பாருங்க ,வாங்க இப்போ
செய்முறைக்கு போகலாம் .
இந்த கருவேப்பிலை கார தொக்கு ,செய்திட தேவையான பொருட்கள் .
மூன்று கப்பு ,கருவேப்பிலை ,ஒன்றை கரண்டி மிளகு ,சின்ன எலுமிச்சம் பழ அளவுக்கு புளி ,15 காய்ந்த மிளகாய் ,இப்போ இது ஓட தேவையான தண்ணீர் சேர்த்து,மிக்சியில் போட்டு சட்னி போல அரைத்து எடுத்து கொள்ளுங்க .
கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு
செய்முறை இரண்டு
அப்புறம் அடுப்பில கடயா வைத்து ,நல்லெண்ணெய் சேர்த்து ,எண்ணெய் ,சூடானதும் அரை கரண்டி கடுகு ,ஒரு கப் உளுத்தம் பருப்பு ,ஒரு கரண்டி சீரகம் ,அரை கரண்டி தேங்காய் பூ பவுடர் ,சேர்த்து நொறுங்கி பொரிந்து வந்ததும் ,அரைத்து வைத்த கருவேப்பிலை சட்னியை ,இதுல ஊற்றி கலக்கி விடுங்க .

அப்புறம் இது கூடவே தேவையான அளவு மஞ்சள் தூள் ,வறுத்து அரைத்த வெந்தய பொடி ,போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
மூடி போட்டு நன்றாக கொதிக்க விடுங்க ,இடை இடையே திறந்து ,நன்றாக கலக்கி விடுங்க .நன்றாக வதங்கி வரும் பொழுது ,தேவையான உப்பு ,அப்புறம் ஒரு கரண்டி வெல்லம் ,போடு நன்றாக சுருங்கி வரும் வரை கலக்கி விடுங்க .
நன்றாக எண்ணெய் வற்றி உதிரி உதிரியாக வந்ததும் ,அடுப்பை நிப்பாட்டி விடுங்க ,அம்புட்டு தாங்க இப்போ வாய்க்கு சுவையான கருவேப்பில்லை கார தொக்கு ரெடியாகிடுச்சு .

இந்த கருவேப்பிலை கார தொக்கு ,சாதம் ,இட்லீ ,தோசை ,சப்பாத்தி கூட சேர்த்து சாப்பிடுங்க மக்களே .
ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்கா விமானம் |துரத்திய ஈரான் போர் விமானங்கள்
ஈரானுக்கும் நுழைந்த அமெரிக்கா விமானம் |துரத்திய ஈரான் போர் விமானங்கள்
அமெரிக்க கடற்படையின் EP-3E விமானம் ஓமன் வளைகுடாவிற்கு அருகில் உள்ள .ஈரான் நாட்டின் நாட்டின் எல்லைக்குள் நுழைந்தது .
இதனை கண்டறிந்த ஈரான் வான் பாதுகாப்பு பிரிவினர் கடும் எச்சரிக்கை விடுத்தனர் .மேலும் உள்ளே மீறி வந்தால் சுட்டு வீழ்த்த பாடுமென அறிவித்தது .
ஈரானின் இந்த அபாய எச்சரிக்கையை அடுத்து ,அமெரிக்கா கடல் படை ,
கண்காணிப்பு போர் விமானம் தப்பி சென்றது .
அமெரிக்கா இராணுவத்தின் போர் விமானம்,
ஈரான் கடல் பகுதிக்கு நுழைந்த சமபவம் .,
ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுளளது .
அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்
அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்
புதிதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
சனிக்கிழமை (01) சங்கானை பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்மாதம் பாராளுமன்றத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயங்கரவாத சட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயருடன் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த நிலையில் தற்போது தெற்கில் வாழும் மக்களும் குறித்த சட்டத்தினால் அடக்கப்பட்டு வருகின்றனர்.
அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்
கடந்த வருடம் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டும் எனக் கோரி பருத்தித்துறை முனையில் இருந்து தெய்வேந்திர முனைவரை பேரணியாக நாம் சென்றோம்.
எமது பேரணி இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் ஊடறுத்துச் சென்ற நிலையில் எந்த ஒரு பகுதியிலும் எமது பேரணிக்கு எதிர்ப்புக்கள் எழவில்லை.
இந்த நாட்டினுடைய மக்கள் பெரும்பாலானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில்
தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் என கூறி ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முனைகிறது.
குறித்த சட்டமூலத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன அண்மையில் அறிவித்துள்ள நிலையில் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்.
அதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு இன மத மொழிகளுக்கு அப்பால் சென்று மக்கள் பேரழிச்சியுடன் போராட்டங்கள் இடம்பெற வேண்டும்.
அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஊடக நிறுவனங்கள்
தொழிற்சங்கங்கள் சுயாதீன அமைப்புக்கள் என அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வரையறை இல்லாத நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில்
அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு ஜனநாயக வழியில் போராடுபவர்களை கட்டுப்பாடுத்துவதற்கான வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நீதி அமைச்சர் குறித்த சட்டமூலத்தை தெளிவு படுத்துவதற்கு நீதிமன்றம் செல்வோம் என்கிறார் நீதிமன்றம் அரசியல் அமைப்பு உட்பட்டே வியாக்கியானங்களை முன்வைக்கும்.
நாங்கள் குறித்த சட்டமூலத்தை தோற்படிப்பதற்கு சிங்கள புத்திஜீவிகள் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து பாரி ஒரு போராட்டத்தை நடத்தவுள்ளோம்
ஆகவே, ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் பேர் எழுச்சியாக வீதியில் இறங்கினால் தோற்கடிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Featured
போலி கையெழுத்தைப் பயன்படுத்தி 180 மாணவிகள் சேர்ப்பு
போலி கையெழுத்தைப் பயன்படுத்தி 180 மாணவிகள் சேர்ப்பு
மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளரின் போலியான கையெழுத்தைப் பயன்படுத்தி 180 இற்கும் அதிகமான மாணவிகளைப் பெண்கள் பாடசாலையில் இணைத்து கொண்ட சம்பவம் ஒன்று கண்டியில் பதிவாகியுள்ளது.
மேலதிக கல்விப் பணிப்பாளர் அவ்வாறாக எந்த பாடசாலை நிர்வாகங்களிடமும் மாணவர்களை இணைத்துக் கொள்ளும்படி கூறவில்லை என மாகாண கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த மோசடி செயற்பாடு 2018 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறுவதாக மாகாண கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாகாண கல்வி அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரு தணிக்கை விசாரணையின் போது குறித்த மோசடி செயல் வெளி வந்துள்ளது.
Featured
அமெரிக்கா ஈரான் வானில் மோதல் |துரத்திய ஈரான் விமானங்கள் |Ethiri News
அமெரிக்கா ஈரான் வானில் மோதல் |துரத்திய ஈரான் விமானங்கள் |Ethiri News
அமெரிக்கா கடற்படை விமனம ஒன்று ,ஈரான் ,வான் எல்லைக்கு நுழைந்த நிலையில் ,ஈரான் போர் விமானங்கள் அமெரிக்கா விமானத்தை துரத்தி சென்றன .இதனால் இரு நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது .
தமது நாட்டின் எல்லை கோட்டை கடந்து ,அத்து மீறி ,
அமெரிக்கா இராணுவ போர் ,விமானங்கள் தமது நாட்டுக்குள் நுழைந்தன.
அந்த வானூர்திங்க்ளை கண்ணுற்ற ,வான் காப்பு படையினர் ,
அத்துமீறி நுழைந்த வான் பறவைகளுக்கு , அவசர அபாயகர எச்சரிக்கையை விடுத்தனர் .
அபாயகர ,சிவப்பு எச்சரிக்கை, விடுக்க பட்டதை அடுத்து ,
வெள்ளை மாளிகை ,சண்டை வானூர்திகள், அங்கிருந்து தப்பி சென்றன .





































































