Author: நிருபர் காவலன்
ஈரானுக்குல் தாக்குதல் சிதறிய இராணுவம் முகாம் அதிர்ச்சியில் இராணுவம்
ஈரானுக்குல் தாக்குதல் சிதறிய இராணுவம் முகாம் அதிர்ச்சியில் இராணுவம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தேரர் ஒருவரும், இரண்டு பெண்களும் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு பொல்லால் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
தேரர் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களின் ஆடைகளை கலைத்து, அவர்களை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.
உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
உயர் பாதுகாப்பு வலயத்தை வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை
உயர் பாதுகாப்பு வலயத்தை வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை
உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை வளாகத்தினை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் கைது செய்ததுடன் குறித்தகேமராவில் பதிவான காட்சிகளை நீக்க பொலிஸ் தொழில்நுட்ப பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 வயதான அமெரிக்க பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
6 மாசமா அவர் விடுமுறை கேட்டு கொடுக்கல.. டிஐஜி உயிரிழப்பு குறித்து..சீமான் சொன்ன அதிர்ச்சி தகவல்
6 மாசமா அவர் விடுமுறை கேட்டு கொடுக்கல.. டிஐஜி உயிரிழப்பு குறித்து..சீமான் சொன்ன அதிர்ச்சி தகவல்.
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

கள்ள காதலனுக்கு மனைவியை கல்யாணம் செய்து வைத்த கணவன்
கள்ள காதலனுக்கு மனைவியை கல்யாணம் செய்து வைத்த கணவன்
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
by நிருபர் காவலன் - DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
by நிருபர் காவலன் - டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்
by நிருபர் காவலன் - ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
by நிருபர் காவலன் - நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்
by நிருபர் காவலன் - ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது
by நிருபர் காவலன் - இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை
by நிருபர் காவலன் - இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்
by நிருபர் காவலன்
கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி
கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி
கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி திகழி, ஏத்தாளையைச் சேர்ந்த சஹாப்தீன் சல்மான் (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும், சிறிய ரக லொறியொன்றும் கற்பிட்டி பள்ளிவாசல்துறை கண்டல்குடா பாலத்திற்கு அருகே மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை சிகிச்சைக்காக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி
எனினும், புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த குறித்த இளைஞன், கற்பிட்டி, குறிஞ்சிப்பிட்டியில் நேற்று (07) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ரேஸ் போட்டியை பார்வையிட்ட பின் தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை
நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை
அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்ற, ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (06) நடைபெற்ற இந்திய சுற்றுலா சம்மேளன நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எல்லைகளுக்கு அப்பால் பிம்ஸ்டெக் (BIMSTEC) வலயத்தை அபிவிருத்தியடைந்த சுற்றுலாப் பிரதேசமாக மேம்படுத்த, அனைத்து பிம்ஸ்டெக் நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அழைப்பின் பேரில் இந்திய சுற்றுலா சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு “எல்லைகளைக் கடந்து – வாழ்வை மாற்றும்” என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை
இலங்கை பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம் என்பதை உலகுக்கு அறிமுகப்படுத்த நடத்தப்படும் இந்த மாநாட்டில், இந்திய சுற்றுலாப் பயண முகவர் சம்மேளத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் கலந்துகொண்டுள்ளன. இதில் செய்தி சேகரிப்பதற்காக சுமார் 50 இந்திய ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தமை விசேட அம்சமாகும்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் திருமதி. ஜோதி எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கூற வேண்டும். புதிய திட்டங்களின் ஊடாக இலங்கையை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுறுவேன் என நான் உறுதியளிக்கிறேன். அதற்காக எமது சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.
இந்த மாநாட்டிற்குப் பின்னர், இங்கு வருகை தந்துள்ள பலர் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வார்கள். திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தையும், கதிர்காமக் கந்தன் சன்னதியை தரிசிக்க தவறாமல் செல்ல வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஆலயம் 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. வலயத்தில் மிகப் பழைமையான ஆலயமொன்றாகும். சில நாட்களுக்கு முன்னர் அங்கு சென்றிருந்தபோது பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் நல்லூருக்கு சென்று வருடாந்த உற்சவத்தை கண்டுகளிக்கலாம். மலைகளையும் மற்ற அழகிய இடங்களையும் நீங்கள் பார்த்திருந்தாலும், நான் இங்கு சொன்ன இடங்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
ஒகஸ்ட் மாதம் நல்லூர் திருவிழாவும் கண்டி பெரஹெராவும் நடைபெறுகின்றன. இது நமது கலாசாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது. ஒரு சிறப்பு சுற்றுலா ஈர்ப்புள்ள தலமாக இது திகழ்கிறது. காலி இலக்கிய விழா ஜனவரி மாதம் நடைபெறுகின்றது. தென்மாகாணத்தின் காலியிலுள்ள
நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை
ஒவ்வொரு நகரத்திலும் தனித்துவமான திருவிழாக்கள் உள்ளன. ஹிரிகெட்டிய கடற்கரையில் சுற்றுலா பயணிகளைக் கவரும் டிஸ்கோடெக் நவீன ஜாஸ்
இசை என்பன பல இருக்கின்றன . மாத்தறையில் பல பாரம்பரிய இசைக் கச்சேரிகள் நடைபெறுவதுடன் ஜனவரி மாதம் கொழும்பில் ஆண்ட்ரியோ பொசெல்லியின் பாடலைக் கேட்கலாம்.
இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கும் வகையில் கடனை மறுசீரமைக்க வேண்டும். சுற்றுலாத்துறை என்பது கடன் அல்லாத நிதியை திரட்டுவதற்கான ஒரு வழியாகும். எனவே அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
தற்போது இலங்கைக்கு வருடாந்தம் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இதனை 5 மில்லியனாக உயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். ஒரு சுற்றுலா பயணி ஒரு இரவுக்கு குறைந்தபட்சம் 1000 டொலர்களை செலவழிக்கும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை உருவாக்க வேண்டும். தெற்காசிய நாடுகளில் மிகச்சிறிய மாலைத்தீவிலிருந்து சுற்றுலா பற்றி நாம் கற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் பல உள்ளன.
நுவரெலியாவை கொல்ப் விளையாட்டின் மையமாக மாற்றுவதற்கு மேலும் 7 கொல்ப் மைதானங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
பெரிய சுற்றுலா விடுதிகளை உருவாக்க வேண்டும். தெதுவ பிரதேசத்தை அண்மித்து, நீர்த்தேக்கத்திற்கு அண்டிய 1000 ஏக்கருக்கும் அதிகமான பகுதி, சுற்றுச் சூழலுக்கு உகந்த சுற்றுலாத் துறைக்குப் பொருத்தமான பகுதியாக அடையாளம் கண்டுள்ளோம்.
ஹோடன் சமவெளிக்கு அருகில் மேலும் 900 ஏக்கர் உள்ளது. பசுமை சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் பங்களிப்பதன் மூலம் அங்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.
மேலும் பல இடங்களில் துடுப்புப் படகு சவாரி சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை
அண்மையில் சென்று வந்த எல்ல பயணத்தின் அற்புதமான அனுபவத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்தப் பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இன்னும் பல விடயங்களை செய்ய வேண்டும்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதுடன், அதன் வருமானத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இலங்கை அதன் தனித்துவமான உணவு மற்றும் கலாச்சார துறைகளுடன் ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக உலகிற்கு காண்பிக்க முடியும்.
கிழக்கு மாகாணத்தை சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம். அங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க
விரும்பினால் அதற்கான வசதிகளை செய்துதர தயாராக உள்ளோம். அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்கரையின் அழகை நீங்கள் அனுபவிக்க முடியும்.
இந்த சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் சட்டங்களை மாற்றுவது அவசியம். சுற்றுலாத் துறை மூலம் அதிக வருமானம் பெறுவதன்
மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். சுற்றுலாத் துறை தொடர்பான இந்தத் திட்டங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்

- இன்று பல பகுதிகளில் மழை

- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்

- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்

பதவிக்காலம் மேலும் நீடிப்பு
பதவிக்காலம் மேலும் நீடிப்பு
பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எனவே நாளை அல்லது திங்கட்கிழமை சி.டி.விக்ரமரத்ன பணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்

- இன்று பல பகுதிகளில் மழை

- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்

- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணம் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணத்தின் மொத்த தொகை 2,822.6 மில்லியன் டொலர் எனவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்திரி கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்திரி கைது
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், மேற்படி நட்டஈடு பணம் இன்று (09) வரை வழங்கப்படவில்லை.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் ஜனவரி 12ஆம் திகதி ஏகமனதாக இந்த தீர்ப்பை வழங்கியதுடன், உரிய இழப்பீட்டை ஆறு மாதங்களுக்குள் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவிட்டது.
இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை (12) ஆறுமாத காலம் நிறைவடையவுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காவிட்டால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என மூத்த சட்ட நிபுணர் ஒருவர் கூறினார்.
இதனால் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்திரி கைது
இதேவேளை, பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு ஐம்பது மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் சிசிர மெண்டிஸிற்கு பத்து மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை அவர்களது சொந்தப் பணத்தில் இருந்து வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் பிரதிவாதிகள் யாரும் இதுவரை நஷ்டஈடு வழங்கவில்லை எனவும், உரிய இழப்பீட்டை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டன் ஏவுகணை ரஷ்யா ஈரான் வசம் அதிர்ச்சியில் லண்டன்
பிரிட்டன் ஏவுகணை ரஷ்யா ஈரான் வசம் அதிர்ச்சியில் லண்டன்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
by நிருபர் காவலன் - இன்று பல பகுதிகளில் மழை
by நிருபர் காவலன் - ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
by நிருபர் காவலன் - வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற
by நிருபர் காவலன் - பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
by நிருபர் காவலன் - 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
by நிருபர் காவலன் - கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
by நிருபர் காவலன் - மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
by நிருபர் காவலன் - எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
by நிருபர் காவலன் - புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
by நிருபர் காவலன்
மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டிய கப்பல்
.மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டிய கப்பல்
இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று இன்று (7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த கப்பலை ஏராளமான பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருவதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
மூன்று பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
மூன்று பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மீட்டியாகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொடர் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது, போகஹவெல பிரதேசத்தில் உள்ள ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருப்பவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், உரிய இராணுவ சீருடைகள் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கிராண்ட்பாஸ் கொலை தொடர்பில் ஐவர் கைது
கிராண்ட்பாஸ் கொலை தொடர்பில் ஐவர் கைது
கிராண்ட்பாஸ் பகுதியில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஐந்து பேர், நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கிராண்ட்பாஸ் கொலை தொடர்பில் ஐவர் கைது
சில மாதங்களுக்கு முன்னர், கொல்லப்பட்ட நபர், போதைப்பொருள் தொடர்பான பணத் தகராறு காரணமாக மற்றுமொருவரை இதே போன்று கூரிய ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியமையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
முல்லைத்தீவு மனித புதைகுழி 13 உடலங்கள் இனங்காணப்பட்டன
முல்லைத்தீவு மனித புதைகுழி 13 உடலங்கள் இனங்காணப்பட்டன
முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலை புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் வியாழக்கிழமை(6) இடம் பெற்ற நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ன
அதே நேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உட்பட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன
முல்லைத்தீவு மனித புதைகுழி 13 உடலங்கள் இனங்காணப்பட்டன
முதல் நாள் அகழ்வில் 13 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்னும் பல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை ஆண், பெண் இருபாலரும் இருக்கலாம் எனவும் மேலதிக அகழ்வு பணி இடம்பெறவுள்ள நிலையில் அகழ்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் வருகின்ற வியாழக்கிழமை இடம்பெற உள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் போரை நடத்தும் ஈரான் நேட்டோ ஈரானுக்கு தடை
உக்ரைனில் இடம்பெற்று வரும் எதிரிகளின் ஆக்கிரமிப்பு போருக்கு ,
உக்ரைனில் இடம்பெற்று வரும் எதிரிகளின் ஆக்கிரமிப்பு போருக்கு ,
ஆததரவாக செயல் கொடுத்த பேரழிவு ஆயுதங்களை ஈரான் வாழ்க்கி வருகுவதால் ,அதற்கு நேட்டோ தடைகளை விதித்துள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

டுவிட்ருக்கு போட்டியாக பேஸ்புக் களமிறக்கிய புதிய திரட் சமூக வலைத்தளம்
டுவிட்ருக்கு போட்டியாக பேஸ்புக் களமிறக்கிய புதிய திரட் சமூக வலைத்தளம்
உலக மக்களை ஆட்டி படைத்தது வரும் சமுக வலைத்தளங்களில் ,
டிவிட்டர் பேஸ்புக் என்பன முக்கிய பங்காற்றி வருகின்றன .
இவ்வாறான நிலையில் தற்போது டிவிட்ருக்கு போட்டியாக,
பேஸ்புக் ,திரட் என்கின்ற புதிய சமுக வலைதளத்த்தை உருவாக்கியுள்ளது .
ஆரம்பித்த இரண்டு நாட்களில் இருபது மில்லியனுக்கு ,
மேற்பட்ட மக்கள் அதில் தம்மை பதிவு செய்துள்ளனர் .
இவ்வரசு தொடர்ந்து நீடித்தால் ,டிவிட்ருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ,
எதிர் பார்க்க படுகிறது .
டுவிட்டரில் இல்லாத பல வசதிகளை பேஸ்புக் நிறுவியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்

- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்

- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

இத்தாலியில் தீயில்கருகி 6 பேர் மரணம் 68 பேர் காயம்
இத்தாலியில் தீயில்கருகி 6 பேர் மரணம் 68 பேர் காயம்
இத்தாலி மிலனில் உள்ள முதியோர் இல்லத்தில்,
கடந்த இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 68 பேர் காயமடைந்துள்ளதாக இத்தாலிய அவசர சேவைகள்தெரிவித்துள்ளது .
காயமடைந்தவர்கள் 15 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த தீ பற்றலுக்கான கரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளன
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்

- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்

- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

சகோதரனை கொலை செய்த இளைய சகோதரன்
சகோதரனை கொலை செய்த இளைய சகோதரன்
பொலன்னறுவை பெலத்தியாவ பகுதியில் இளைய சகோதரனால் கத்தியால் குத்தப்பட்டு மூத்த சகோதரன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை (06) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாய்த்தர்க்கத்தை அடுத்து மூத்த சகோதரனை இளைய சகோதரன் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சகோதரனை கொலை செய்த இளைய சகோதரன்
தாக்குதலில் படுகாயமடைந்த மூத்த சகோதரன் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மானம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ராகுல் காந்தியின் தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்
ராகுல் காந்தியின் தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம்
இன்று(வெள்ளிக்கிழமை) நிராகரித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ராகுல் காந்திக்கும், 2024 தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியின் தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்
கடந்த 2019-இல் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி எனப் பெயர் வந்தது எப்படி?” என்று விமர்சித்தார்.
இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராகுலின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, “ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை காரணமாக, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தண்டனைக்கு தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால், அது ராகுல் காந்திக்கும், அவரைத் தேர்வு செய்த பாராளுமன்ற தொகுதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேலும், இந்த வழக்கில், நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறைக்குப் பின்னர் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.



























