Tag: ஜனாதிபதி மீது விமர்சனம்
13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மீது விமர்சனம்
13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மீது விமர்சனம்
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
நாடு ஜனநாயக அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்வதாக அதன் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை பிளவுபடுத்த முயற்சித்ததன் காரணமாகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரத்தை இழந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மீது விமர்சனம்
எவ்வாறாயினும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினைக்கு ஏதேனும் தீர்வு காணப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள், ஹர்த்தால்கள் மற்றும் போராட்டங்களிலிருந்து எந்தவொரு கட்சியும் பாடம் கற்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டில் அனைத்து துறைகளிலும் நெருக்கடியான சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி
by நிருபர் காவலன் - கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது
by நிருபர் காவலன் - 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது
by நிருபர் காவலன் - வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது
by நிருபர் காவலன் - ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை
by நிருபர் காவலன்







