வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

இந்திய பெருங்கடலில் மேலுமொரு நிலநடுக்கம்

இந்திய பெருங்கடலில் மேலுமொரு நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பகுதியில் 4 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேன தெரிவித்தார்.

இந்திய பெருங்கடலில் மேலுமொரு நிலநடுக்கம்

முன்னதாக, ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.

இந்த நிலநடுக்கங்கள் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுக்கு அருகில் பதிவாகியுள்ளன.

கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

பிரான்ஸல் 14 தமிழருக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) பிற்பகல் சுகயீனமுற்றிருந்த குறித்த நபர், வைத்தியசாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட பின்னர் மீண்டும் சுகயீனமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் ஹெரோயின் போதைப்பொருளுக்காக சிறைச்சாலையில் இருந்தவர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார்.

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

இதேவேளை, மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோயொன்றும் பரவி வரும் நிலையில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தனர்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக மாத்தறை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள கைதிகள் அகுனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மூளைக் காய்ச்சலுக்கான நோயெதிர்ப்பு மருந்துகளை அவதான நிலையில் உள்ள மற்ற சிறைச்சாலைகளுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ

இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

மதுபானங்களில் விலை அதிகரிப்பு

மதுபானங்களில் விலை அதிகரிப்பு

DCSL தனது மதுபானங்களில் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் 90 ரூபாவாலும், 375 மில்லிலீற்றர் மதுபான போத்தல் 50 ரூபாவாலும் மற்றும் 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல் 20 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் வெட் வரி அதிகரிப்பிற்கு அமைவாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

வீடியோ

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய செந்தில் தொண்டமான்
Posted in இலங்கை செய்திகள்

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய செந்தில் தொண்டமான்

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய செந்தில் தொண்டமான்


மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கேப்டனுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்ததுடன், விஜயகாந்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

வெலிபன்ன, பல்லேகொட வீதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெலிப்பன்ன பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

JN 1 கொரோனா அறிகுறிகள் என்ன
Posted in இலங்கை செய்திகள்

கம்பஹா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

கம்பஹா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

கம்பஹா பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு நோய்களினால் அவதிப்பட்டு வந்த குறித்த பெண், சுவாச கோளாறு காரணமாக அண்மையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது உடல்நிலை மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது, இதன்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

கம்பஹா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

65 வயதுடைய குறித்த பெண்ணுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உறவினர் ஒருவருக்கும் கொவிட் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அண்மையில் பதிவான முதலாவது மரணம் இதுவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோ

ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி
Posted in உலக செய்திகள்

ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி

ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி

பாலஸ்தீனம் ஹமாஸ் படைகளின் இரண்டா நிலை துணை தளபதியாக விளங்கி வரும் மர்வான் இசாவின் மகன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

ஹமாஸின் இராணுவப் பிரிவின் துணைத் தலைவரான மர்வான் இசாவின் மகன் ,முஹம்மது இசா கடந்த தினம் அதிகாலை நடத்த பட்ட வான்வழித்
தாக்குதலில் பலியானதாக தெரிவிக்க படுகிறது

இறந்தவர தாக்குதல் தளபதி இசாவின் இரண்டாவது மகன் என தெரிவிக்க படுகிறது .


முன்னேறி வரும் இஸ்ரேல் படைகளுக்கு பலத்த இழப்பினை வழங்கி பெரும் பின்னடைவை தருவித்து
பேரழிவை ஹமாஸ் ஏற்படுத்தி வருகிறது .

ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி

அதனால் மீளவும் ஹமாஸ் தலைவர்களை அழித்திட மிக பெரும்
முயற்சிகளை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டு வருகிறது .

அனல் அது முடியாத நிலையில் ,இவ்வாறான சில தாக்குதல் மூலம்
தாம் வெற்றியாளர்களாக காண்பிக்க முனைகிறது என்பதாக
ஹமாஸ் ஆதரவு சக்திகள் கருத்துரைத்துள்ளன

தமது தளபதியின் மகன் மாரணமடைந்த நிலையில் பலமான தாக்குதலை
இஸ்ரேலுக்கு எதிராக அல்கஸாம் படை பிரிவு நடத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வீடியோ

காசாவில் எரியும் டாங்கிகள் ஓட ஓட தாக்கிய ஹமாஸ்|தீவிரமாகும் இஸ்ரேல் காஸா போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

காசாவில் எரியும் டாங்கிகள் ஓட ஓட தாக்கிய ஹமாஸ்|தீவிரமாகும் இஸ்ரேல் காஸா போர்


காசாவில் எரியும் டாங்கிகள் ஓட ஓட தாக்கிய ஹமாஸ்|தீவிரமாகும் இஸ்ரேல் காஸா போர்

காசாவில் எரியும் டாங்கிகள் ஓட ஓட தாக்கிய ஹமாஸ்|தீவிரமாகும் இஸ்ரேல் காஸா போர்

காசாவில் எரியும் இஸ்ரேல் மெர்க்கவா யுத்த டாங்கிகள்,
சுற்றிவளைத்து ஓட ஓட தாக்கிய ஹமாஸ் படைகள் .

தீவிர பெறும் திடீர் மோதல்கள் ,ரணகளமாகும் இஸ்ரேல் போர் களம்

வீடியோ

ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்

ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்

ஜெருசலேமுக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில் இடம்பெற்ற கத்திக்குத்து
தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹார் ஹோமாவின் தெற்கு ஜெருசலேம் சுற்றுப்புறத்திற்கு அருகிலுள்ள
மஸ்முரியா சோதனைச் சாவடியில் 20
இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

தாக்குதலை நடத்தியவரின் கத்திக்குத்து தாக்குதலில் சிக்கி 20 வயதுடைய பெண்ணும் 25 வயது
ஆணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்

இருவரும் பலமில்லா காயங்களுக்கு உள்ளானதாகவும் ,உயிர் ஆபத்து இன்றி ர் உள்ளதாகமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

வீடியோ
தாக்குதலை நடத்தியவர் ஆயுத படைகளினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .

காரில் வந்த நபரே இந்த திடீர் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க படுகிறது .
போலீசாரை மீது தாக்குதலை நடத்த முயன்ற பொழுது ஒரு காவல்துறை
ஊழியர் நடத்திய சூட்டு தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்க பட்டுள்ளது .

போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் இதே பகுதியில் இடம்பெற்ற ,
ஆறாவது தாக்குதலாக இது உள்ளதாக தெரிவிக்க படுகிறது குறிப்பிட தக்கது .

கில்மிஷாவை வரவேற்ற யாழ் மக்கள்- இது கில்மிசாவா
Posted in இலங்கை செய்திகள் கில்மிசா பாடல் kilmisha zee tamil

கில்மிஷாவை வரவேற்ற யாழ் மக்கள்- இது கில்மிசாவா

கில்மிஷாவை வரவேற்ற யாழ் மக்கள்- இது கில்மிசாவா

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் கில்மிஷாவை வரவேற்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழ் கலாசார பாராம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, முத்து சப்பரத்தில் கில்மிஷாவை ஏற்றி ஊர் மக்கள் தூக்கி சென்றனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திறந்த காரில் புறப்பட்ட கில்மிஷா வுக்கு வீதியெங்கும் மக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.

கில்மிஷாவை வரவேற்ற யாழ் மக்கள்- இது கில்மிசாவா

அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலைய முன்றலில் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. சாரங்கா இசைக்குழுவினரின் இசையில் கில்மிஷா சில பாடல்களையும் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தொலைக்காட்சி ஜீ தமிழ் நடாத்திய சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிஷா வெற்றியாளராக தெரிவாகியிருந்தார்

வீடியோ

அமெரிக்காக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்

அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்

செங்கடல் பகுதியில் ஹவுதிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து பல முக்கிய கப்பல் நிறுவனங்கள்
செங்கடலை பயன்படுத்துவதை தவிர்த்து தப்பி ஓடியுள்ளது .

அமெரிக்கா பாதுகாப்பு தருவதாக தெரிவித்த பொழுதும் ,
அதனை நம்பாது அவர்கள் தப்பி ஓடியுள்ளனர் .

அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்

இந்த வாரம், மொத்தம் 4.3 மில்லியன் கொள்கலன்கள் கொள்ளளவு
கொண்ட 299 கப்பல்கள் செங்கடலைத் தவிர்த்து பாதையை மாற்றி செல்வதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதனால் பல மில்லியன் மேலதிக செலவு ஆவதுடன் ,
கப்பல் போக்குவரத்தில் தாமதமும் ஏற்படுகிறது .
இது ஹவுதிகளுக்கு கிடைக்க பெற்ற வெற்றியாகும் என தெரிவிக்க பட்டுள்ளது . .

வீடியோ

ஓடவிட்டு அடித்த ஹமாஸ் 501 இராணுவம் பலி|செங்கடலை முடக்கிய ஹவுதி ஓடும் கப்பல்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஓடவிட்டு அடித்த ஹமாஸ் 501 இராணுவம் பலி|செங்கடலை முடக்கிய ஹவுதி ஓடும் கப்பல்கள்


ஓடவிட்டு அடித்த ஹமாஸ் 501 இராணுவம் பலி|செங்கடலை முடக்கிய ஹவுதி ஓடும் கப்பல்கள்

இஸ்ரேல் இராணுவத்தை ஓடவிட்டு அடித்த ஹமாஸ்,
501 இராணுவம் பலியாகியுள்ளதாக அறிவிப்பு .

செங்கடலை முடக்கிய ஹவுதி ஓடும் பெரும் கப்பல் நிறுவன கப்பல்கள் ,
திணறும் அமெரிக்கா கடற்படை கலங்கள் ,

வீடியோ

முல்லைத்தீவில் 4500 துப்பாக்கி ரவைகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் 4500 துப்பாக்கி ரவைகள் மீட்பு

முல்லைத்தீவில் 4500 துப்பாக்கி ரவைகள் மீட்பு

வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4,500 நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் குறித்த காணி உரிமையாளர் காணியில் மண்ணை அகழ்ந்தெடுக்கும் போது துப்பாக்கி ரவை பெட்டிகள் இருந்ததனை அவதானித்துள்ளார்.

அதனையடுத்து அப்பகுதியில் உள்ள கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த சம்பவ இடத்திற்கு வருகைதந்து குறித்த துப்பாக்கி ரவைகளை மீட்டெடுத்துள்ளனர்.

T-56 வகை துப்பாக்கி ரவைகள் அடங்கிய ஆறு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 4,500 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளது.

வீடியோ

வீழ்ந்து நொறுங்கிய விமானம் விமானி பலி
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் விமானி பலி

வீழ்ந்து நொறுங்கிய விமானம் விமானி பலி

கிரேக்க இராணுவத்தின் பயிற்சி விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொருங்கயத்தில் அதில் பயணித்த விமானி பலியாகியுள்ளார் .

41 வயதான இவர்தான் T-2E Buckeye என்ற இரட்டை எஞ்சின் பயிற்சி ஜெட் விமானத்தை செலுத்தி சென்றார் . .

கலமாதா விமானப்படை தளத்திற்கு அருகே சென்ற பொழுது இந்த விமானம் வீழ்ந்து நொறுக்கி விபத்தில் சிக்கியது .

இந்த விமான விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன என இராணுவம் அறிவித்துள்ளது .

இயந்திர கோளாறு காணமாக விமானம் விபத்தில் சிக்கி இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .

வீடியோ

இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை


இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை

இஸ்ரேல் விமான தளம் மீது கடும் விமான வழி ஊடான தாக்குதல்
நடத்த பட்டுள்ளது .

கப்பல்களை தாக்குவோம் என ஹவுதி அன்சர் அல்லா
அமைப்பு எச்சரிக்கை விடுப்பு .

இந்த எச்சரிக்கை காரணமாக பதட்டமாகும் போர்க்களம்

வீடியோ

ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்

ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் எர்பில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள,
அமெரிக்கா இராணுவ தள்மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக
ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது .

தாம் நடத்திய இந்த தாக்குதலில் அமெரிக்கா
இராணுவ படைத்தளம் பலத்த சேதங்களுக்கு
உள்ளாகியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அணைத்து அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதும்
தொடராக தாக்குதலை நடத்துவோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .

எமது நாட்டில் இருந்து ஆக்கிரமிப்பு அமெரிக்கா இராணுவம்
விலகும் வரை எமது தாக்குதல் தொடரும் என அந்த அமைப்பினர்
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா படைகளை
தமது நாட்டில் இருந்து விலகுமாறு கூறிய பின்னரும்,
அமெரிக்கா தொடர்ந்து அங்கு நிலைகொண்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

வீடியோ

துரத்தி அடித்த ஹமாஸ் வீழ்ந்த தளபதிகள்|திணறும் இஸ்ரேல் இராணுவம்|ஈரான் மிரட்டல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

துரத்தி அடித்த ஹமாஸ் வீழ்ந்த தளபதிகள்|திணறும் இஸ்ரேல் இராணுவம்|ஈரான் மிரட்டல்


துரத்தி அடித்த ஹமாஸ் வீழ்ந்த தளபதிகள்|திணறும் இஸ்ரேல் இராணுவம்|ஈரான் மிரட்டல்

துரத்தி துரத்தி அடித்த ஹமாஸ் வீழ்ந்த இஸ்ரயேல் படையணியின் முக்கிய தளபதிகள்.


கடும் சமரினால் தாக்குதலில் திணறும் இஸ்ரேல் இராணுவம்,
ஈரான் யூத அரசுக்கு கடும் மிரட்டல் ,பதிலடி வழங்க படும் என சூளுரை

வீடியோ

நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்
Posted in உலக செய்திகள்

நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்

நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்கள் ஜெர்மனியின் முன்னாள்
ஹிட்லர் என அவர் தெரிவித்துள்ளார் .

பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ,
காட்டமாக பேசிய அவர் தனது கோபத்தை இவ்வாறு அங்காராவில்
வைத்து வெள்காட்டியுள்ளார் .

நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்

மேலும் பலஸ்தீஹனத்தில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் முக்கிய
பிரமுகர்களை தமது நாட்டில் வந்து தங்கிட அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி,
பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இஸ்ரேலுக்கு எதிராக தனது எதிர்
கருத்தை முதன்மையாக வைத்து வருகிறார் .

ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் அமைப்பு ,தனது மக்களுக்காக
போராடுபவர்களை அவ்வாறு பேசுதல் தவறு என கூறி இந்தமை குறிப்பிட தக்கது .

வீடியோ

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து 15 லீற்றர் கசிப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூகுண விகாரைக்கு மேலே உள்ள ஏரிக்கு அருகில் நேற்று (27) காலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், ஆனால் அவர் 45-50 வயது மதிக்கத்தக்க, 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

மேலும் அவர் மேலே ஊதா நிற சட்டையும், ஆரஞ்சு மற்றும் ஊதா கலந்த சாரமும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல புகையிரத கடவைக்கு அருகில் உள்ள மா ஓயாவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் ரம்புக்கனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ