Posted in இலங்கை செய்திகள்

வெளி நாட்டு சிகரட் கடத்திய ஆண் பெண் கைது

வெளி நாட்டு சிகரட் கடத்திய ஆண் பெண் கைது

இலங்கை கட்டுநாயக்க விமான தளத்தில் டுபாயில் இருந்து சுமார் 323 சிகரட் பெட்டிகளை கடத்தி வந்த ஆண் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இதன் மொத்த இலங்கை ரூபா பெருமாதி சுமார் 3.8 மில்லியன் என தெரிவிக்க பட்டுள்ளது

கைதானவர்கள் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

அவுரேலியாவில் திருட்டில் ஈடுபட்ட இலங்கையர்கள் ஐவர் கைது

அவுரேலியாவில் திருட்டில் ஈடுபட்ட இலங்கையர்கள் ஐவர் கைது

அவுஸ்ரேலியா மெல்போர்ன் பகுதியில் உள்ள மக்கள் நடமாடும் மார்க்கட் பகுதியில் பிற்போக்காட் திருட்டில்

ஈடுபட்ட ஐந்து இலங்கையர்கள் உள்ளிட்ட எட்டு பேர் கைதுசெய்ய பட்டுள்ளனர் .

இவர்களது திருட்டு அங்கு பொருத்த பட்டிருந்த இரகசிய கமராக்களில் பதிவான நிலையில் இவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .

மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் உட்பட எட்டுப்பேர் அடங்குகின்றன .

இரண்டு இந்தியர்கள் ,இலங்கையர் உள்ளிட்ட ரவுடி திருட்டு கும்பலை சேர்ந்தவர்களே திருட்டில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

சீனா செல்பவர்களுக்கு விசேட எச்சரிக்கை

சீனா செல்பவர்களுக்கு விசேட எச்சரிக்கை

இலங்கையில் இருந்து சீன செல்லும் இலங்கையர்களுக்கு விசேட அறிவுரை மற்றும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

அங்கு ஒருவிதமான தோற்று நோய் வேகமாக பரவி வரும் நிலையில் தம்மை அந்த நோய் தாக்கத்தில் இருந்து

காப்பாற்றி கொள்ளும் படி அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

இந்த நோய் தொற்றில் சிக்கி பலர் சீனாவில் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது .

மூச்சு திணறல் ஏற்பட்டு மக்கள் மரணித்தது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

யானை கட்சி இரண்டாக உடைகிறது

யானை கட்சி இரண்டாக உடைகிறது

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இடம்பெற்று வந்த தலைமை பதவி போட்டி சண்டையை அடுத்து தற்போது

சஜித் தலைமையில் புதிய அணியினர் கூட்டாக இணைந்து கூட்டணி ஆட்சி ஒன்றை நிலை நிறுத்தும் வகையில் புதிய சின்னத்தில் போட்டியிட உள்ளனர் .

இதனால் இலங்கையில் சுதந்திர கட்சி பலம் இழந்து ,செயல் இழந்து காணாமல் போனது போல யானை கட்சியும் இப்பொழுது

ரணில் மேற்கொண்ட அடாவடி பதவி மோகத்தால் இப்பொழுது இரண்டாக உடைந்து செயல் இழந்து போகும் நிலைக்கு மாற்றம் பெருகிறது

சஜித்துடன் வெளியேறும் முக்கிய புள்ளிகள் புதிய கூட்டணியில் போட்டியிட உள்ளதால் அது யானை கட்சி

சுதந்திர கட்சி போல காணாமல் போகும் நிலை உருவாக்கம் பெரும் என்றே அடித்து கூறலாம் .

மங்கள சமரவீர,பொன்சேகா போன்றவர்கள் சஜித் பக்கம் உள்ளனர் .

மகிந்தா ஆட்சியில் பலம் பொருந்திய காட்சிகள் அனைத்தும் உடைக்க பட்டு ,அந்த கட்சிகள் செயல் இழந்து

போகும் நிலைக்கு வித்திட்ட வரலாறுகள் அகல கால் பரப்பி நிற்பதை இந்த விடயங்கள் இடித்து கூறுகின்றன

கோட்டா வந்தார் யானை கட்சி இரண்டாக உடைகிறது,அடுத்து யார் ..?

Posted in இலங்கை செய்திகள்

ஒட்டி சுட்டான் ஒட்டு தொழில் சாலையை இயங்க வைக்கும் கோட்டா அரசு

ஒட்டி சுட்டான் ஒட்டு தொழில் சாலையை இயங்க வைக்கும் கோட்டா அரசு

இலங்கை – ஒட்டி சுட்டானில் அமைந்துள்ள ஒட்டு தொழில் சாலையை மீள் ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு முனைப்பு காட்டி வருகிறது .

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று மீளவும் ஆட்சியில் அமர துடிக்கும் கோட்டபாய குழுவினர் இந்த ஒட்டு தொழில்

சாலையை சில மாதங்களில் புனரமைத்து மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

அங்கு ,ஓடு,செங்கல் போன்றவை தயாரிக்க பட்டு வன்னி , மற்றும் யாழ்ப்பகுதி எங்கும் அமோக விற்பனையில் ஈடுபட்டு வந்தது .

இந்த ஒட்டு தொழிற்ச்சாலையால் பல நூறு மக்கள் வேலை வாய்ப்பையும் பெற்று வந்தனர் .


அவ்வாறான வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒட்டு தொழில் சாலை மீள இயங்க வைக்க படவுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது

Posted in மருத்துவம்

பெண்களுக்கு ‘மசாஜ்

பெண்களுக்கு ‘மசாஜ்

கால் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் ஏராளமான உடல்நல நன்மைகளை பெறலாம். தூங்க செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.


கால் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் ஏராளமான உடல்நல நன்மைகளை பெறலாம். தூங்க செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.

முதலில் கட்டை விரல் பகுதியை வட்ட வடிவத்தில் அழுத்தமாக தேய்க்க வேண்டும். பிறகு இரு கால்களின்

கட்டை விரல்களையும் சில நிமிடங்கள் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

அதைத்தொடர்ந்து பாதத்தில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை மிதமான சூட்டில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது

நரம்புகளுக்கு இதமளிக்கும். தொடர்ந்து கால் பாதங்களை மசாஜ் செய்து வந்தால் கழுத்துவலி, தலைவலி, ஒற்றைத்தலைவலி, முதுகுவலி போன்ற

பெண்களுக்கு ‘மசாஜ்

பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். கழுத்துவலி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கால் விரல்களை சில நிமிடங்கள் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வலி குறைய

தொடங்கும். தலைவலி பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள் கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகளை சரியாக அழுத்தினால் வலி நீங்கிவிடும்.

ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் பாதங்களை மசாஜ் செய்து வருவது நல்லது. கால் பாதங்களில் எண்ணெய் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். கணுக்கால்

பெண்களுக்கு ‘மசாஜ்

பகுதிகளையும் மெதுவாக தடவி விட வேண்டும். இரு கால்களிலும் மாறி, மாறி சிறிதுநேரம் மசாஜ் செய்துவிடலாம். அது உடலில் ஆக்சிஜன் சீராக செல்வதற்கு

வழிவகுக்கும். ரத்த நாளங்களும் சிறப்பாக செயல்படும். குறிப்பாக பெண்கள் பாதங்களை அவ்வப்போது மசாஜ் செய்து வருவது நல்லது. அது மாதவிடாய் சமயங்களில்

ஏற்படும் அசவுகரியங்களை தவிர்க்க உதவும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவும். இடுப்புவலி, முதுகுவலி பிரச்சினைகளுக்கும் நிவாரணம் தரும்.

கால் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் ஏராளமான உடல்நல நன்மைகளை பெறலாம். தூங்க செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.

Posted in சினிமா

பிரியா பவானி சங்கரை காதலிக்கிறேனா-எஸ்.ஜே.சூர்யா

பிரியா பவானி சங்கரை காதலிக்கிறேனா-எஸ்.ஜே.சூர்யா

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக வந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

பிரியா பவானி சங்கரை காதலிக்கிறேனா? எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானி சங்கர்
தமிழில் வாலி, குஷி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. நியூ, அன்பே ஆருயிரே,

இசை உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். பொம்மை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

ஏற்கனவே திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். பொம்மை படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் இருந்த பிரியா பவானி சங்கர்

புகைப்படத்தை பார்த்து கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் திரிஷா போன்று தெரிகிறது இல்லையா என்று எஸ்.ஜே.சூர்யா பாராட்டி இருந்தார்.

எஸ்ஜே சூர்யா ட்விட்

இந்த நிலையில் பொம்மை படப்பிடிப்பில் பிரியா பவானி சங்கர் மீது எஸ்.ஜே.சூர்யா காதல் வயப்பட்டு தனது காதலை அவரிடம் சொன்னதாகவும், அந்த காதலை ஏற்க பிரியா

பவானி சங்கர் மறுத்து விட்டதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவியது. இதனை எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில் மறுத்துள்ளார்.

“பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக நான் அவரிடம் சொன்னதாகவும், காதலை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் தவறான தகவல் பரவி உள்ளது. மான்ஸ்டர் படத்தில் இருந்து

எனக்கு அவர் சிறந்த தோழியாக இருக்கிறார். அவர் ஒரு திறமையான நடிகை. தயவு செய்து அடிப்படை இல்லாத தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Posted in உளவு செய்திகள்

ஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்

ஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்

ஈராக் நாட்டில் உள்ள இரண்டு அமெரிக்கா விமான தளங்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது

,இதில் முற்றாக அழிக்க பட்டன ,ஆனால் அமெரிக்கா அரசோ சிறு சேதம் என கூறி உண்மைகளை மூடி மறைத்தது ,

அமெரிக்கா அரசுக்கு
தற்போது ஊடகங்களில் வெளியான காட்சி படங்கள்

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் ,அங்கு இடம்பெற்ற உண்மை நிலவரத்தை அம்பல படுத்தியது

தற்போது இந்த முகாம் முற்றாக துடைத்து அழிக்க பட்டுள்ளதை இங்கே படத்தில் காணலாம் ,மிக முக்கிய

ராடார்,சாதனங்கள் உள்ளிட்டவை அழிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

இந்த தாக்குதல் நடத்த பட்ட பொழுது குறித்த முகாமில் சுமார் 1500 அமெரிக்கா படைகள் நிலை கொண்டு இருந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது ,

தாக்குதல் நடத்த போவதற்கு முன்னதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அவர்கள் பங்கருக்குள் பதுங்கி கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

At the time of the attack, most of the 1,500 US soldiers at the base had been tucked away in bunkers, after advance warning from superiors

அவ்வாறான பெரும் பாதுகாப்பு கொண்ட முகாமையே ஈரானின் ஏவுகணைகள் முற்றாக தாக்கி அழித்துள்ளன

ஈராக்கில் -காணமல் போன
ஈராக்கில் -காணமல் போன
ஈராக்கில் -காணமல் போன
ஈராக்கில் -காணமல் போன
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு நீதிமன்றுக்கு வந்தார் சஜித

கொழும்பு நீதிமன்றுக்கு வந்தார் சஜித

முள்ளம் இலங்கையின் சுகாதார அமைச்சர் இன்று இடம்பெற்ற கொழும்பு உயர் நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொண்டுள்ளார் .

பிணையில் சென்ற இவர் விரைவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது .

கோட்டபாய அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் பழிவாங்கும் அரசிய ல் முன்னெடுக்க பட்டு

வருகின்றமையும் ,முன்னாள் ஆட்சியில் கைதாகி சிறையில் அடைக்க பட்டிருந்த பலரும் விடுதலை செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

மக்களை மோதி தள்ளிய அமைச்சர் வாகனம் – ஒருவர் பலி

மக்களை மோதி தள்ளிய அமைச்சர் வாகனம் – ஒருவர் பலி

இலங்கையின் ஆளும் அமைச்சர் சந்திரேனாவின் வாகனம் ஒன்று ஊந்துருளி ஒன்றுடன் மோதி தள்ளியதில் அதில்

பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்தில பலியானர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

புத்தளம் ,திருமலை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .காயமடைந்தவர்களில் இராணுவ

சிப்பாய் ஒருவரின் மனைவி ,மகள் என கண்டறிய பட்டுள்ளது ,


சிசு ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளது .

போலீசாரை விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்

மக்களை மோதி தள்ளிய
மக்களை மோதி தள்ளிய

Posted in இலங்கை செய்திகள்

சந்திரிக்காவிற்கு ஆப்பு – கட்சியிலிருந்து நீக்கம் திட்டம்

சந்திரிக்காவிற்கு ஆப்பு – கட்சியிலிருந்து நீக்கம் திட்டம்

முன்னால இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவை அதனக்கல அமைப்பாளர் பதவியில்

இருந்து நீக்க போவதாக கட்சியின் பொது செயலர் தெரிவித்துள்ளார் .

சந்திரிக்காவை ஓரம்கட்டி கட்சியை தன் வசப்படுத்தும் நிலையில் மைத்திரி முயன்று வருகின்றார் .

அவரது திட்டத்தின் படியே இந்த விவகாரம் இடம்பெறுவதாக நம்ப படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

மெல்பேணில் கேணல் கிட்டு விளையாட்டு விழா 2020

ஓஸ்ரேலியா மெல்பேணில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவான ”தமிழர் விளையாட்டு விழா 2020” பற்றிய செய்தியறிக்கை

வங்கக்கடலில் 16-01-1993 இல் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் விக்ரோறியா தமிழர்

ஒருங்கிணைப்புக்குழு-வினால் நடாத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த வருடமும் ஓஸ்ரேலியா மெல்பேர்ண் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று

முடிந்துள்ளது. கடந்த 12_01_2020 ஞாயிற்றுக்கிழமையன்று பேர்வூட் றிஸேவ் (East Burwood Reserve) மைதானத்தில் காலை

9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் கோலாகாலமாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றல்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் ஓஸ்ரேலியத் தேசியக்கொடியினை விளையாட்டுவிழா செயற்பாட்டாளர்

திரு அருணகிரிநாதன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை மற்றுமொரு நீண்டகால செயற்பாட்டாளர் திரு அன்ரன் வேதநாயகம் அவர்கள்

ஏற்றிவைத்தார். தொடர்ந்து மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்-களின் திருவுருவப்படத்திற்கு தமிழ் தேசியச் செயற்பாட்டாளர் திரு பரணி அவர்கள்

ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மைதான விளையாட்டுக்கள் ஆரம்பமாகின. சிறுவர்களுக்கான

மெல்பேணில் கேணல் கிட்டு விளையாட்டு விழா 2020

மெய்வல்லுனர் போட்டிகளில் ஓட்டப்போட்டிகள், சமநிலை ஓட்டம், தவளைப்பாய்ச்சல், தேசிக்காய் கரண்டியில்

வைத்து ஓடுதல் அத்தோடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான சங்கீதக்கதிரை என்பனவும் இடம்பெற்றது.

பெரியவர்களுக்கான விளையாட்டுக்களாக சாக்கோட்டம், கயிறு இழுத்தல், நீளம் பாய்தல், ஓட்டப்போட்டிகள்,

குண்டெறிதல் என்பனவும் இடம்பெற்றன. கரப்பந்தாட்டம் மற்றும் துடுப்பந்தாட்டம் என்பன

விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் பலசுற்றுக்களாக இடம்பெற்றன.

மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றிய சிறார்கள் அனைவருக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

அத்தோடு பெரியவர்களுக்கான விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கும் விளையாட்டு விழாவிற்கு வருகை தந்த தமிழ்அமைப்புக்களின் பிரதிநிதி-

களினாலும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், போட்டிகளின் நடுவர்களினால் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

வழமைபோன்று தாயக உணவுவகைகளான தோசை, பூரி, வடை, கொத்துரொட்டி ஒடியற்கூழ் முதலான உணவுகளும்,

வடை, றோல், பற்றீஸ், டோனட் மற்றும் பாபிகியூ போன்ற சிற்றுண்டிகளும் அத்தோடு வலூடா உள்ளிட்ட குளிர்பானங்களும் விற்பனை செய்யப்பட்டன.

துடுப்ந்தாட்டத்தில் MTG அணியும், Shivash Reegal அணியும் இறுதியாட்டத்திற்கு தேர்வுசெய்யப்பட்டு Shivash Reegal அணி 2020ம் ஆண்டிற்கான வெற்றியாளர் விருதை

தனதாக்கிக்கொண்டது. கரப்பந்தாட்டம் மிக்ஸ்கேம் போட்டியில் நொதேர்ன் டைகர்ஸ் நீல அணியினருக்கும், செந்தமிழ் அணியினருக்கு-மிடையில் நடைபெற்ற

இறுதிச்சுற்றுப்போட்டியில் நொதேர்ன் டைகர்ஸ் நீல அணி வெற்றியீட்டி 2020ம் ஆண்டிற்கான வெற்றிக்கேடயத்தைப் பெற்றுக்கொண்டனர். 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான

துடுப்பாட்ட போட்டியின் இறுதியாட்டத்தில் ஈழம் போய்ஷ் – சிவப்பு அணியினர் 2020 ஆண்டு சம்பியனாகவும், ஈழம்

போய்ஷ் – மஞ்சள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

கரப்பந்தாட்டம் மற்றும் துடுப்பந்தாட்டம் என்பவற்றில் இறுதியாட்டங்களுக்கு தேர்வுசெய்யப்பட்டு, இறுதியாட்டங்களில் பங்கெடுத்து வெற்றியீட்டிய

அணிகளுக்கும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, இவ்விளையாட்டுக்களில்

இறுதியாட்டங்களில் பங்கெடுத்த விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இறுதியாக பரிசில்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கும் நிகழ்வையடுத்து மாலை 8.00 மணியளவில்

தேசியக்கொடிகள் இறக்கப்பட்டடு தமிழர் விளையாட்டுவிழா_ 2020 நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவேறியது.

—

மெல்பேணில் கேணல் கிட்டு விளையாட்டு
மெல்பேணில் கேணல் கிட்டு விளையாட்டு
மெல்பேணில் கேணல் கிட்டு விளையாட்டு
Posted in இலங்கை செய்திகள்

சாதிக்க துடிக்கும் மலையத்தின் மரதன் ஒட்ட வீரர் எம். சசிகுமார்

சாதிக்க துடிக்கும் மலையத்தின் மரதன் ஒட்ட வீரர் எம். சசிகுமார்

ராகலை சென்லெனாட்ஸ் தோட்டம் தோட்ட தொழிலாளர்களான திரு திருமதி மெய்யப்பன் ஆழகாய் ஆகியோரின் புதல்வனான சசிகுமார் தனது பாடசாலை

காலத்தில் ஆரம்பிக்கபட்ட தனது விளையாட்டுத்துறையில் தற்போது மரதன் ஒட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல வெற்றிகளை தனதாக்கி கொண்டு வருகின்றார். இவர்

2010 ஆம் ஆண்டு இந்தியா நேரு மைதானத்தில் விளையாட்டு பயிற்சி நெறியை கற்வர் (DIPLOMA COURSE FOR

COACHES)இவரை இவரது வீட்டில் இவரது ஊரான ராகலை சென்லெனாட்ஸ் தோட்;டத்தில் நேரில் சந்திக்கும் வாய்பு கிடைத்தது.

இதன் போது எம் சசிகுமாரிடம் இந்த சாதனைகள் குறித்து வினவிய போது

எம் சசிகுமார் ஆகிய நான் ராகலை சென்லெனாட்ஸ் பாடசாலையில் ஆரம்ப கல்வியை ஆரம்பித்து கல்வி கற்றுக் கொண்டு இருக்கும் வேலையில் 1990 பாடசாலை இல்ல

விளையாட்டு போட்டியில் நடந்த மரதன் ஓட்ட போட்டியிலும் மற்றும் அஞ்சல் ஓட்ட போட்டியிலும் கலந்து எனது விளையாட்டு துறையை ஆரம்பித்தேன்.

அதன் பின் இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த (சா/த) கல்வியை தொடர்ந்தேன். அவ் பாடசாலையில் பல போட்டிகளில் பங்கு பற்றிவெற்றி

சாதிக்க துடிக்கும் மலையத்தின் மரதன் ஒட்ட வீரர் எம். சசிகுமார்

பெற்றேன். 1997 ஆம் ஆண்டு பாடசாலை வலய மட்ட போட்டியில் 10000 M மற்றும் 1500 M ஓட்ட போட்டியில் கலந்து முதலிடம் பிடித்தேன். பின் 1998 ஆம் ஆண்டு கல்வி பொது

சாதாரணதர பரீட்சையில் 06 பாடங்கள் சித்தி அடைந்த நான் தொடர்ந்து கல்வியை தொடர முடியாமல் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை இடை நிறுத்தினேன். பின்னர்

சுயதொழிலில் அதாவது ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டேன். தொடர்ந்து மரதன் 10.000 M ஓட்டம்¸ 1500 M ஓட்ட போட்டிகளில் எனது முயற்சியின் மூலம பயிற்சி பெற்று

நுவரெலியா மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றேன். அதன் பின் எனது அண்ணன் உடன் பிறந்த சகோதரன் சர்வதேச

மரதன் ஓட்ட வீரர் ஆ.மனோகரன் மூலமாக பயிற்சியை துவங்கினேன்.

முறையாக பயிற்சி பெற மைதானம் இல்லை. பயிற்சிக்கான போசனையான உணவுகள் இல்லை. இருந்தும் எனது முயற்சியை கைவிடாமல் 1999 வலப்பனை பிரதேச

போட்டிகளில் கலந்து 4×100 அஞ்சல் ஓட்ட போட்டி 10000 ஆ ஓட்ட போட்டிகள் முதலிடம் பிடித்தேன். 2000 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட மட்ட போட்டிகளில் 1500 M ஓட்ட

போட்டி முதலாம் இடத்தையும் 800அ போட்டி முதலாம் இடத்தையும்¸ மரதன் ஓட்டப் போட்டியில் 4 இடத்தையும் பெற்றேன்.

இவ்வாறான நிலையிலேயே முதன் முதல் கொழும்பு மரதன் ஓட்ட போட்டி 42 முஅ தூரம் ஓட ஆரம்பித்தேன். இந்த போட்டியில் 1800 வீரர்கள் கலந்தும் சிறப்பித்தனர்.

இதில் நான் 13 இடத்தை பெற்றேன். அதே ஆண்டில்SOS வீதி ஓட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றேன் 2001 கண்டியில் நடைபெற்ற 42 KM தூர மரதன் ஓட்ட போட்டியில்

கலந்துக் கொண்டு நான் 13 அம் இடத்தை பெற்றேன். இப்போட்டியில் 2000க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடந்து நடைபெற்ற வீதி மரதன் ஓட்ட போட்டியில் 2002 வருடத்தில் 21km நான்காம் இடம் 2003 வருடத்தில் 21km 14 இடம் 2004 வருடத்தில் 21 km மூன்றாமிடம் 2004 சர்வதேச

புகைத்தல் தடுப்பு தின வீதி மரதன் ஓட்ட போட்டியில் 10000 M முதலாமிடம் பெற்றேன். தொடர்ந்து ஆசிரியர் ஞானசேகரன் வழிகாட்டலில் இரத்தினபுரி மைதானத்தில் தேசிய இளைஞர்

சேவை மன்றத்தினால் நடாத்திய 10000 M மீற்றர் மரதன் ஒட்ட போட்டியில் பங்குபற்றி பெற்றிபெற்றேன். தொடர்ந்து 2005 மத்திய மாகாணம் நடாத்திய 10000 M 1500 M 800 M ஓட்ட

போட்டியில் முதலிடம் பெற்று சிறந்த விளையாட்டு வீரர் விருதினை கௌரவ ஊ.டீ.ரத்நாயக்க அவர்களின் மூலம் சான்றிதழை பெற்றேன்.

சாதிக்க துடிக்கும் மலையத்தின் மரதன் ஒட்ட வீரர் எம். சசிகுமார்

இவ்வாறான நிலையில் 2015 மே 15 இந்தியாவில் பெங்களுர் மரதன் ஓட்ட போட்டி கடும் சிரமத்திற்கு சென்றேன் இதற்கான உதவியினை தோட்ட பொது மக்கள்¸ எனது உடன்

பிறந்த சகோதரர்கள் மற்றும் முன்னால் அமைச்சர் பழனி திகாம்பரம் ஐயா அவர்கள் மூலம் 7000 ரூபாவிற்கு பாதணி

ஒன்று வாங்கி தந்தார். காலஞ்சென்ற அருள்சாமி ஐயா அவர்களும் பாதணி ஒன்று வாங்கி தந்தார். அனைவருக்கும் நன்றிகள்.

பெங்களுர் மரதன் ஓட்ட போட்டியில் 18300 க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கெண்டனர். அதில் நான் 21 km 175 M

தூரத்தை 1 மணித்தியாலயம் 12 நிமிடம் 25 செக்கன் ஓடி முடித்து 12 வது இடத்தை பிடித்து பதக்கமும் சான்றிதழும் பெற்றேன்.

தொடர்ந்து மரதன் ஓட்ட போட்டி ஆர்வத்தோடு கலந்து 2010 விளையாட்டு பயிற்சி நெறியை கற்க இந்தியா நேரு

மைதானத்திற்கு சென்றேன். அங்கு 75 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதில் பயிற்சி பெற்று (DIPLOMA COURSE FOR COACHES) பட்டம் பெற்று வந்துள்ளேன்.

2011 ஆண்டு ஓர் வீதி விபத்தில் இரண்டு விரல்களை இழந்தும் 2015 ஆண்டு சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வீதி ஓட்டம்¸ சூரிய வெப்பம் வானொலி மற்றும் மலையக

கல்வி அபிவிருத்தி மன்றம் நடத்திய போட்டிகளில் முதலிடம் பிடித்து என்னை இவ்வளவு தூரம் உலகரியச் செய்த சூரியன் FM ஏ.லோசன் அண்ணன் மற்றும் அறிவிப்பாளர் அஜித்

அண்ணன் மற்றும் மலையக கல்வி அபிவிருத்தி மன்ற உருப்பினர்களும் தொடர்ந்து மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் வருடதோரும் நடாத்தி வந்த மரதன் ஒட்ட

போட்டிகளில் 2015 முதலிடம்¸ 2016 மூன்றாம்மிடம் 2017 2ம் இரண்டாமிடம் 2018 இரண்டாமிடம் என தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றேன்.

எனது சொந்த முயற்சியாலும் குறிபிட்ட சிலரின் உதவியுடனும் இவ்வாறன வெற்றிகளை பெற்று

வருகின்றேன். எனக்கு மலையத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் பயிற்சிகளை வழங்கவும்

முடியும் இதற்கான அனுசரனையாளர்கள் கிடைக்குமானால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம்

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்களையும்,

வேலை செய்கின்ற வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு குறித்த வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி எம்.பி.எம்.ரஜீஸ் தலைமையில் நேற்று (16) மாலை இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்

பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பார் வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீல், நிந்தவூர் ஆயுர்வேத

ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம்

ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர், கல்முனை பிராந்திய சுகாதார

சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கணக்காளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

குறித்த வைத்தியசாலைக்காக பாடுபட்ட ஆரம்பகால வைத்தியர்கள், தற்போது சேவையாற்றும் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்

உள்ளிட்டோருக்கும் புதிதாக இடமாற்றம் பெற்றுவந்த, பெற்றுச் சென்றவர்கள் ஆகியோர் இன்றைய நிகழ்வின் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வைத்தியர் எம்.ரீ.அமிராவின் புதல்வியும் இன்றைய

நிகழ்வின்போது வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.எம்.ரஜீஸினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

2020 தரம் ஒன்றிற்கு மாணவர்கள் உள்வாங்கள்

2020 தரம் ஒன்றிற்கு மாணவர்கள் உள்வாங்கள்

நுவரெலியா மாவட்டம் கொத்மலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட டன்சினன் தோட்டம் குறிஞ்சி தமிழ் வித்தியாலயத்திற்கு தரம் 01 க்கு மாணவர்களை

உள்வாங்கும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அதிதியாக கொத்மலை கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் எம்.ஆர்.ரவீந்திரன் அவர்கள்

கலந்துக் கொண்டார் இதன் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்களும் அதிதிகளின் உரைகளும் நடைபெற்றன.

2020 தரம் ஒன்றிற்கு மாணவர்கள்
2020 தரம் ஒன்றிற்கு மாணவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

டுபாய் விபத்தில் இலங்கை பெண்பலி

டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கை பெண் ஒருவர் பலி யாகியுளளார் .

குறித்த விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை அபுதாபியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in சினிமா

நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

குடும்ப பிரச்சனை காரணமாக டி.வி. நடிகை ஜெயஸ்ரீ சென்னையில் அவரது இல்லத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

டி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி
நடிகை ஜெயஸ்ரீ
வம்சம் டி.வி. தொடரில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். இருவரும் காதலித்து திருமணம் செய்து

கொண்டனர். பின்னர், அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைபடுத்துவதாகவும்,

தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை ஜெயஸ்ரீ புகார் கொடுத்தார்.

அதன்பின், தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க

வேண்டும் என்றும் ஜெயஸ்ரீ சமீபத்தில் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கூறினார்.

மருத்துவமனையில் ஜெயஸ்ரீ

இந்நிலையில், நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்போது சென்னையில் உள்ள தனியார்

மருத்துவமனையில் ஜெயஸ்ரீ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தில் வருகிறார்கள்.

Posted in சினிமா

யாரும் இல்லாத போது என்னை அழைத்தார்

யாரும் இல்லாத போது என்னை அழைத்தார்

1யாரும் இல்லாத போது என்னை அழைத்தார் என்று நடிகை ரூபஞ்சனா மித்ரா இயக்குனர் மீது மீடூ புகார் அளித்துள்ளார்.

யாரும் இல்லாத போது என்னை அழைத்தார் – இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்
ரூபஞ்சனா மித்ரா


நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தொடர்ந்து ‘மீ டூ’ வில் சிக்கி வருகிறார்கள். நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்னார்.

,.நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்ததாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்களை அம்பலப்படுத்தினார்.

இந்தி இயக்குனர்கள் சாஜித் கான், சுபாஷ் கபூர், சுபாஷ் கை, லவ் ரஞ்சன், நடிகர் அலோக் நாத் மற்றும் தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் மீது ‘மீ டூ’ புகார் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிரபல பெங்காலி இயக்குனர் அரிந்தம் செல் மீது நடிகை ரூபஞ்சனா மித்ரா ‘மீ டூ’ புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

அரிந்தம் செல் – ரூபஞ்சனா மித்ரா

“இயக்குனர் அரிந்தம் செல் தனது அலுவலகத்துக்கு வரும்படி என்னை அழைத்தார். மாலை 5 மணிக்கு அவரது அலுவலகத்துக்கு நான் சென்றபோது அங்கு அவர் மட்டுமே

இருந்தார். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் திடீரென்று எழுந்து வந்து என்னை பிடித்து பின்னால் தள்ளிக்கொண்டு போனார்.

அலுவலகத்தில் நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்றார். அவரது ஆசைக்கு உடன்பட மறுத்தேன். சிறிது

நேரத்தில் அவரது மனைவி அங்கு வந்தார். அதன்பிறகு நான் அரிந்தமின் அலுவலகத்தில் இருந்து அழுதபடியே வெளியே சென்றேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

Posted in உளவு செய்திகள்

அணு ஆயுத உற்பத்தியில் தீவிரம் -ஈரான் அதிரடி அறிவிப்பு

அணு ஆயுத உற்பத்தியில் தீவிரம் -ஈரான் அதிரடி அறிவிப்பு

நாங்கள் 2015 ஆண்டு மேற் கொள்ள பட்ட ஒப்பந்தத்தின் பின்னர் தற்போது ஆணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு பயன் படுத்தப்படும் யுரேனியம் தற்போது தயாரிப்பது அதிகரிக்க

பட்டுள்ளதாகவும் ,தாம் வேகமாக எமது இலக்கை எட்டி விடுவோம் என ஈரான் அதிபர் பரபரப்பாக அறிவித்துள்ளார் .

ஈரம் மீது புதிய பொருளாதார தடையையே அமெரிக்கா விதித்துள்ள நிலையில் செய் அல்லது செத்து மடி என்ற கோட்பாட்டின் கீழ் தற்போது ஈரான் சென்றுள்ளது .

உலக சண்டியர் அமரிக்காவின் விமான தளங்கள் மீது அதிர்ச்சிகர தாக்குதலை மேற்கொண்டு அந்த விமான

தளத்தின் முக்கிய கண்காணிப்பு சாதன பகுதியை நீர்மூலம் ஆக்கியத்துடன்,அதில் பலர் படுகொலை செய்யப் பட்டனர் .

மேலும் அங்கிருந்த விமானங்களும் சேதமுற்றன

ஆனால் இதனை அமெரிக்கா வெளியில் கூறவில்லை ,இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத அமெரிக்கா உக்கிரேன்

விமானத்தை தற்போது தூக்கி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறது .

அதன் ஒரு அங்கமாக இந்த அதிரடி அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது ,இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

அணு ஆயுத உற்பத்தியில் தீவிரம்
அணு ஆயுத உற்பத்தியில் தீவிரம்
Posted in இலங்கை செய்திகள்

தோட்டத்தில் இருந்து தெரிவான மாணவர்களுக்கு தோட்ட இளைஞர்கள் கௌரவிப்பு

பல்கலைகழகத்திற்கு தங்களது தோட்டத்தில் இருந்து தெரிவான
மாணவர்களுக்கு தோட்ட இளைஞர்கள் கௌரவிப்பு

நுவரெலியா மாவட்டம் ராகலை பிரதேசத்திற்கு உட்பட்ட ராகலை குரூப் தோட்டத்தில் இருந்து இம்முறை பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை

கௌரவிக்கும் நிகழ்வு தோட்ட இளைஞர்களின் பாரதி கழகத்தின் ஏற்பாட்டில்; பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னால் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி

வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டு பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவித்து பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.

இதன் பொழுது பிரதேச சபை உறுப்பினர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் உட்பட் தோட்ட இளைஞர்களும் பொது மக்களும் கலந்துக் கொண்டனர்..