ஏழு மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்த வாலிபன்
ஏழு மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்த வாலிபன்
பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி, க்ரஸ்டர் பிளேஸில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இருந்து நேற்று (28) மாலை குறித்த சிறுவன் தவறி விழுந்துள்ளார்.
இதில், படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் -விமானங்கள் சேதம்
அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் -விமானங்கள் சேதம்
ஈராக்கில் தலைநகர் அருகில் அமைக்க பெற்றுள்ள அமெரிக்காவின் விக்ட்டோரியா இராணுவ விமானம் தளம் மீது ஆறு ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது
இதனால அங்கிருந்த அமெரிக்கா படைகள் விமானங்கள் சேதமடைந்துள்ளன ,மேலு குறித்த முகாம் ,ஆளணி மற்றும் ,இராணுவ தளபாடங்கள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடராக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா படைகள் துரத்தி தாக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்திய தம்பதிகள் குளிரில் சிக்கி மரணம்
கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்திய தம்பதிகள் குளிரில் சிக்கி மரணம்
கனடா நாட்டுக்கு அதன் எல்லையோரமாக கால் நடையாக நுழைய முயன்ற இந்திய
தம்பதிகள் குளிரில் நடுங்கி இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
39 மற்றும் 37 வயதுடைய தம்பதிகள் மற்றும் 11 வயது உள்ளிட்ட இரண்டு சிறுமிகள் அடங்கலாக நால்வர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
அதிக சினோ கொண்ட நாடுகளை அடையாளம் காணாது இலங்கை இந்தியாவின்
வெப்ப நிலையை கருத்தில் கொண்டு ஆசிய நாட்டவர் நுழைவதால் ,ஆளை கொள்ளும்
குளிரில் சிக்கி இறந்து வருகின்றமை கண்ணீர் கதையயாக தொடர்கின்றமை குறிப்பிட தக்கது
காதலிக்காக ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு மரண தண்டனை
காதலிக்காக ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு மரணதண்டனை
இரண்டு பேரை கொலை செய்து ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2022-ல் முதல் மரண தண்டனை: காதலிக்காக ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு நிறைவேற்றம்
டொனால்டு கிராண்ட்
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வந்த டொனால்டு கிராண்ட் என்பவர் கடந்த 2001-ம் ஆண்டு தனது 25 வயதில், ஓட்டல் ஒன்றில் புகுந்து இரண்டு ஊழியர்களை கொலை செய்து கொள்ளையடித்தார்.
டொனால்டு கிராண்ட் ஒரு ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததுடன், மற்றொருவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். விசாரணையின்போது, ஜெயிலில் இருந்து அவரது காதலியை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
விசாரணை முடிவில் அவருக்க்கு நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்காவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால் டொனால்டு கிராண்டின் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போனது. பல்வேறு மாகாணங்களில் மரண தண்டனை நிறைவேற்றம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒக்லஹோமா மாகாணமும் ஒன்று. கடந்த 2015-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்ற தடைவிதிக்கப்பட்டது. அந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இந்த நிலையில் டொனால்டு கிராண்டிற்கு மூன்று விஷ ஊசிகள் செலுத்தப்பட்டு மரண் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 23 மாநிலங்களில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேகமாக பரவும் புதிய வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை
வேகமாக பரவும் புதிய வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை
ஒமைக்ரான் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொடிய உயிர்க்கொல்லி தன்மையுடன் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாக கண்டறியப்பட்ட ‘நியோகோவ்’ வைரஸ் : பயங்கர உயிர்க்கொல்லி என எச்சரிக்கை..!
நியோகோவ்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்தடுத்த உருமாற்றம்தான்.
கொரோனா வைரஸ் தொற்று டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்தது. ஆனால், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. அதிக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது.
டெல்டா அலை ஒருவழியாக ஓய்ந்த நிலையில், ஒமைக்ரான் என்ற வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மைகொண்டதாக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.
வேகமாக பரவினாலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இல்லை என்பதால் உலக நாடுகள் பெருமூச்சுவிட்டன. இரண்டு டோஸ், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள் என கருதப்படுவதால், பொது முடக்கம் இல்லாமல் உலக நாடுகள் செல்கிறது.
உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வர இருக்கிறது எனத் தெரிவித்தன.
இந்த நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாம். இந்த வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அல்ல. திரிபு அல்லது வவ்வாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரஸாக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது முதற்கட்ட சோதனைதான். முழுமையாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர்தான் அதன் பாதிப்பு குறித்து தெரியவரும்.
இருந்தாலும், தற்போதைய நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோகிபாபுவின் பன்னிக்குட்டி புரோமோ – கொண்டாடும் ரசிகர்கள்
யோகிபாபுவின் பன்னிக்குட்டி புரோமோ – கொண்டாடும் ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் யோகிபாபு நடித்து வெளிவர காத்திருக்கும் பன்னிக்குட்டி படத்தின் புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் யோகிபாபுவின் பன்னிக்குட்டி புரோமோ – கொண்டாடும் ரசிகர்கள்
யோகிபாபு
தமிழ் திரையுலகில் காமெடியனாக களம் இறங்கி கதாநாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் யோகிபாபு. இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து பீஸ்ட்,
அஜீத்துடன் இணைந்து வலிமை, சிவகார்த்திகேயனுடன் அயலான், விஜய் சேதுபதியுடன் கடைசி விவசாயி, விஷாலுடன் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் முன்னணி காமெடியனாக நடித்து வருகிறார்.
இதனிடையே யோகிபாபு கதாநாயகனாக நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் பன்னிக்குட்டி. கிருமி பட இயக்குனர் அனுசரண் முருகையன் இயக்கத்தில்
யோகிபாபு மற்றும் கருணாகரன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் திண்டுக்கல்.ஐ.லியோனி, சிங்கம் புலி, ராமர், டைகர் கார்டன் தங்கதுரை ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 11:11 புரோடக்சன்ஸ் வழங்கும் பன்னிகுட்டி திரைப்படத்திற்கு கிருஷ்ணகுமார் இசையமைக்க, சதீஷ் முருகன் ஒளிப்பதிவு
செய்திருக்கிறார். இந்நிலையில் பன்னிக்குட்டி திரைப்படத்தின் பாடல் புரோமோ
வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புரோமொ வீடியோவை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இணையத்தை சுற்றி வளைக்கும் மகான் பாடல்
இணையத்தை சுற்றி வளைக்கும் மகான் பாடல்
விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் ‘மகான்’ படத்தின் எவன்டா எனக்கு கஸ்ட்டடி பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இணையத்தை சுற்றி வளைக்கும் மகான் பாடல்
விக்ரம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் ‘மகான்’. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய
எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. மகான் திரைப்படம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாடலான எவன்டா எனக்கு
கஸ்ட்டடி என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி அந்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர்
விவேக் வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ள இப்பாடல் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
லண்டன் வீதியில் மனித மலம் – கொதித்தெழுந்த எம்பி
லண்டன் வீதியில் மனித மலம் – கொதித்தெழுந்த எம்பி
லண்டன் கென் பகுதியில்; லொறிகள் மற்றும் மினி பஸ்களை என்பன தரித்து விடும்
தரிப்பிடம் முறையாக அமையாததால் அங்கு மனித மலம் வீதிகளில் காண
படுவதாகவும் , அதனை அகற்றுவதில் சிரமங்கள் ஏற்படுவதான புதிய குற்ற சாட்டை பாரளுமன்றில் எம்பி ஒருவர் முன் வைத்துள்ளார்
வெளிநாடுகளில் இருந்து உள்ளே நுழையும் வாகன தரிப்பிடங்கள் முறையாக
பராமரிக்க பட்டு அவர்களுக்குரிய வசதிகள் செய்து கொடுக்க பட வேண்டும் என்பது இவரது கொதிப்பாக அமைய பெற்றுள்ளது
லண்டனுக்கு வந்த சோதனை.
லண்டன் வீதியில் மனித சடலம் – விசாரணைகள் ஆரம்பம்
லண்டன் வீதியில் மனித சடலம் – விசாரணைகள் ஆரம்பம்
லண்டன் M20 வேகசாலையில் மனித சடலம் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த நபர் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என கருத படுகிறது
மேற்படி குற்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கருத படும் மூவர் அப்பகுதியில் கைது செய்ய போட்டுள்ளாராம்
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இறந்த நபரது குடும்பத்திற்கு தகவல் வழங்க பட்டுளளது
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை
- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை
27 நபர்களை சுட்டு கொன்ற இராணுவம்
27 நபர்களை சுட்டு கொன்ற இராணுவம்
ஜோர்டான் நாட்டில் போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்ட குழுவினரை தேடி இராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர்
இதன் பொழுது கடத்தலில் ஈடுபட்ட இருபத்தி ஏழுபேரை இராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்துள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து மேலும் பலர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய பட்டுள்ளனர்
பயங்கரவாத தடை சட்ட முழு நீக்கம் அவசியம்-மனோ கணேசன் எம்பி
பயங்கரவாத தடை சட்ட முழு நீக்கம் அவசியம்-மனோ கணேசன் எம்பி
பயங்கரவாத தடை சட்ட முழு நீக்கம் அவசியம்; இதுவும் வெளிநாட்டு அழுத்தத்தின் பலாபலன்
- தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி
பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையகத்தை, ஐரோப்பிய ஜிஎஸ்பியை நோக்கி, அரசு சார்பாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இதை வேறு வழியில்லாமல் அறிவித்துள்ளார். எனினும் இதுவும் ஒரு முன்னேற்றம்தான். ஆனால், இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது.
அதேவேளை, “உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐநா என வெளி சக்திகளுடன் பேசாதீர்கள்” என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
வெளிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கை வெளிநாட்டு தூதர்களை அழைத்து, பயங்கரவாத தடை சட்ட திருத்தங்கள் பற்றி அறிவித்துள்ளமை மற்றும் இதுபற்றிய வர்த்தமானி வெளியாகியுள்ளமை தொடர்புகளில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது
என்னை பொறுத்தவரையில், திருத்தம் அல்ல, இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதற்கான காலம் இன்று கணிந்து விட்டது என நினைக்கிறேன். அவசர நிலைமைகளுக்கு சாதாரண சட்டங்களே போதும். அதி அவசரம் ஏற்படுமானால், சடுதியாக இந்த சட்டத்தை மீள உடன் கொண்டும் வரலாம். ஒரே நாளில் அரசியலமைப்பு திருத்தங்களையே கொண்டு வந்தவர்களுக்கு இது பெரிதல்ல.
ஆனால், இன்று சட்ட புத்தகங்களில் இருந்து இச்சட்டம் முழுமையாக அகற்றப்படுவது அவசியம். ஏனெனில் போர் முடிந்த பத்து ஆண்டுகள் ஆன பிறகும் அமுலில் இருக்கும் இச்சட்டம் ஏற்கனவே கணிசமான துன்புறுத்தல்களை தந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களை நோக்கி இது பாய்கிறது.
ஆனால், இதில் நடப்பு ராஜபக்ச அரசை மட்டும் குறை கூற முடியாது. இந்த அரசு மட்டுமல்ல, எந்த இலங்கை அரசும் முழுமையாக இச்சட்டத்தை நீக்க முன்வரவில்லை. இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் சிலரே இச்சட்டம் முழுமையாக நீக்க கூடாது என கொடி பிடிக்கிறார்கள்.
எனினும், அரசுக்கு அரசு இச்சட்டம் அமுல் செய்வதில் வேறுபாடு உண்டு. எமது நல்லாட்சியில் அது அப்பட்டமாக தெரிந்தது. எமது ஆட்சியின் போது இந்த சட்டம் கவனமாகத்தான் பயன்படுத்தபட்டது. எமது அரசு காலத்தில், இது தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்களில் நான், தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக கலந்துக்கொண்டுள்ளேன்.
1979ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாத தடை சட்டம் மீள திருத்தப்படுகிறது என்ற வெளிவிவகார அமைச்சரால், ஜனவரி 21ம் திகதி வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி பிரகடனம், எமக்கு ஒரு அடிப்படை உண்மையை மீளவும் எடுத்து உரைக்கிறது.
ஐநாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ, இந்தியாவோ, ஏதாவது வெளி சக்திகள் சொன்னால்தான் இந்த அரசு கொஞ்சமாவது நகருகிறது. இதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம்.
“உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐநா என சக்திகளுடன் பேசாதீர்கள்” என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம்
கவிழ்ந்த படகு – 39 பேரை காணவில்லை
கவிழ்ந்த படகு – 39 பேரை காணவில்லை
அமெரிக்கா புளோரிடா கடல் பகுதியில் சட்டவிரோதமாக படகில் நுழைய முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 39 பெரும் காணாமல் போயுள்ளனர்
இவ்வாறு காணாமல் போனவர்களில் நால்வரது சடலங்கள் மீட்க பட்டுள்ளன
,ஏனையவர்களை தேடும் பணி
முடுக்கிவிட பட்டுள்ளது
கிளிநொச்சியில் இளம் பெண் மாயம்
கிளிநொச்சியில் இளம் பெண் மாயம்
கிளிநொச்சி நகரப்பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக
அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி 17ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதும் குறித்த சிறுமி காணாமல் போனமை
தொடர்பில் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பள்ளத்தாக்கில் வீழ்ந்த பயணிகள் பேரூந்து
பள்ளத்தாக்கில் வீழ்ந்த பயணிகள் பேரூந்து
ஹட்டன் சலங்கந்தை வீதியின் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (28) காலை 6.30 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் டீ.கே டபீள்யூ தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி 72 அடி பள்ளத்தில் உள்ள ஆற்றினுள் விழுந்துள்ளது.
15 பேர் சென்ற இப்பஸ்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்த
நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
மாங்குளத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு
மாங்குளத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீதிமன்ற கட்டடத் தொகுதியினை நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று (27) திறந்து வைத்தார்.
முல்லைத்தீவு மாவட்டம் நிலபரப்பில் அதிகளவான நிலப்பரப்பாக காணப்படுகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு மக்கள் மிகுந்த தூரங்களில் இருந்து வருகை தரும் போது அவர்களுடைய வழக்குகள் கூப்பிடப்பட்டு அவர்களுக்கு
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சம்பவங்கள் போன்ற பல்வேறு பாதிப்புகளை கருத்திற்கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் நீதிமன்றத்தில் கடமையாற்றிய
அதிகாரிகளின் அயராத முயற்சியின் பயனாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் சுற்றுலா நீதிமன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பகாலத்தில் துணுக்காய் பகுதியில் இடம்பெற்ற இந்த நீதிமன்றத்தின் செயற்பாடுகள் காலப்போக்கில் மாங்குளத்தில் நிரந்தர கட்டடம் ஒன்றை
அமைப்பதற்கு வழிவகுத்தது அந்த வகையிலே மாங்குளத்தில் நீதிமன்ற கட்டடத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு தற்போது வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அங்கு வழக்கு விசாரணைகள் இடம் பெறுகின்றது.
குறிப்பாக மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம், நட்டாங்கண்டல் உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் வருகின்ற வழக்குகள் புதன்கிழமைகளில் இங்கே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள
நீதிமன்ற கட்டடத் தொகுதியினை இன்றைய தினம் வைபவரீதியாக நாட்டினுடைய நீதி அமைச்சர் அலி சப்ரி திறந்து வைத்தார்.
மாலை 3 மணி அளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சின் செயலாளர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முல்லைத்தீவு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத்
தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், சட்டத்தரணிகள் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
காலப்போக்கில் குறித்த நீதிமன்றத்தின் செயல்பாடுகள் வாரத்தின் 5 நாட்களும் இடம்
பெறக்கூடிய வகையில் தனியாக நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு குறித்த நீதிமன்றம் இயங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது
கடல்வாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
கடல்வாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலைமற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2022 ஜனவரி28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மழை நிலைமை:
பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை
காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும்
காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது
மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான
கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போதுகொந்தளிப்பாகக் காணப்படும்
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்..
இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – 10 பேர் சுட்டு கொலை
இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – 10 பேர் சுட்டு கொலை
உக்கிரேனின் இராணுவ வளாகத்தில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி பத்து பேர் படுகொலை செய்ய பட்டனர்
மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்
இந்த சூட்டு படுகொலை சம்பவத்திற்குரிய காரணம் தெரியவில்லை
சந்தேக நபர் கைது செய்ய பட்டு விசாரணிகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்
துரத்தும் கொரனோ – மூட படும் நிலையில் இலங்கை
துரத்தும் கொரனோ – மூட படும் நிலையில் இலங்கை
எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாடு மூடப்படும் பட்சத்தில், மாதச் சம்பளம் வாங்குபவர்களும் சிக்கலை சந்திக்க நேரிடும் என பிரதி சுகாதார சேவைகள்
பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்தகைய சூழ்நிலைக்கு நாடு தள்ளப்படாமல் இருக்க, மக்கள் தடுப்பூசி அளவை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மற்றும் சுகாதார நடைமுறைகளைப்
பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எந்த வகையான வைரஸ் பரவுகிறது என்பது முக்கியம் அல்ல, ஆனால் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம் என்றார்.
இதேவேளை, நாட்டில் நேற்று மேலும் 942 கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை
- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவின் செயலால் ரசிகர்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்
ராஷ்மிகா மந்தனா
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
அதேநேரம் ராஷ்மிகாவுக்கு அழகு இருக்கிறது. ஆனால் நல்ல மனது இல்லை என்று ரசிகர்கள் எரிந்து விழும் அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இதற்கு காரணம்
உள்ளது. சமீபத்தில் ராஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஒரு சிறுமி அவரிடம் எதாவது கொடுங்கள் என்று கேட்கிறாள். அந்த சிறுமியை ராஷ்மிகாவின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர்.
ராஷ்மிகா மந்தனா
ஆனாலும் அந்த குழந்தை ராஷ்மிகாவை நோக்கி கையை நீட்டி பசிக்கிறது சாப்பிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் ராஷ்மிகா அந்த குழந்தைக்கு எதுவும் கொடுக்காமல் சிரித்துக்கொண்டே சென்று காரில் உட்கார்ந்து விட்டார்.
இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி பலரும் ராஷ்மிகாவின் செயலை சாடி
வருகின்றனர். மேலும் பல ரசிகர்கள் அந்த குழந்தைக்கு எதாவது கொடுத்திருக்கிலாம் என்றும் பதிவு செய்து வருத்தமடைந்திருக்கிறார்கள்.
டோஹாவில் இலங்கையர் சுட்டு கொலை
டோஹாவில் இலங்கையர் சுட்டு கொலை
கத்தாரின் டோஹாவில் அடுக்குமாடி கட்டிடம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு இளைஞர் ஒருவர் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு திரும்பிய இளைஞர் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் இலங்கையர் என்பது பின்னர் தெரியவந்தது.
.
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை

- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை






















