ரஜினியின் 169-வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது
ரஜினியின் 169-வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினியின் 169-வது படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஜினியின் 169-வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது
ரஜினி
காதலில் விழுந்தேன், எந்திரன், சர்க்கார், அண்ணாத்தே போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம் சன் பிக்சர்ஸ்.
இந்த நிறுவனம் தற்போது விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் விஜேஎஸ்46, சூர்யாவின் எதர்க்கும் துணிந்தவன் படங்களை இயக்கி வருகிறது.
இந்நிலையில் ரஜினியின் 169-வது திரைப்படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா படத்தின்
மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின் நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை
உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஒரு வீடியோவின் மூலம் இந்த படத்தின் அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி மாஸாக அமர்ந்துக்கொண்டு போஸ்
கொடுத்திருக்கிறார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்
விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவம்
விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவம் – அதிர்ச்சியில் இராணுவ தலைமை
ஈராக் Samawah-al-Diwaniyah பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா
இராணுவத்தின் இரண்டு தொடர் அணிகளை இலக்கு வைத்து சமவேளை ஒருங்கிணைத்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில் அமெரிக்கா முப்படைகளின் இராணுவ கவச வண்டிகள் சேதமாகியுள்ளன
தொடர்ந்து அமெரிக்கா இராணுவம் மீது இடைவிடாத தாக்குதல்கள் நடத்த பட்டு
வருகின்றமையும் ,இந்த தாக்குதல் வீச்சு வேகம் பிடித்துள்ள நிலையில் ஈராக்கை விட்டு
அமெரிக்கா படைகள் வெளியேறும் நிலை
ஏற்பட்டுள்ளதாக சர்வதேச இராணுவ நிபுணர்கள் கருத்துரைத்து வருகின்றனர்
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- அல்-அக்ஸா மீது முழுமையான கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்த இஸ்ரேல் வழி வகுக்கிறது
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது
உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா
உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா பதட்டம் அதிகரிப்பு
ரசியா இராணுவம் Belarus, பகுதியில் பத்து நாள் இராணுவ போர் ஒத்திகையில் ஈடுபடுகிறது
இந்த திடீர் முற்றுகை போரினால் ரசியா ,உக்கிரேனுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
நேட்டோ படைகள் ரசியாவின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது செயல்படுவதால்
இராணுவ நடவடிக்கை மூலம் ரசியாவை பாதுகாக்க புட்டீன் முனைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- அல்-அக்ஸா மீது முழுமையான கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்த இஸ்ரேல் வழி வகுக்கிறது
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது
தற்கொலை தாக்குதல்- 4பேர் மரணம் – 10 பேர் காயம்
தற்கொலை தாக்குதல்- 4பேர் மரணம் – 10 பேர் காயம்
சோமாலிய தலைநகர் Mogadishu பகுதியில் நடத்த பட்ட தற்கொலை தாக்குதலில் சிக்கி
நால்வர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
பாரளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,இதனை சீர்குலைக்கும் முகமாக இந்த
தாக்குதல்கள் நடத்த பட்டு வருவதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- அல்-அக்ஸா மீது முழுமையான கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்த இஸ்ரேல் வழி வகுக்கிறது
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது
சவூதி உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்
சவூதி உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்
ஏமான் நாட்டில் அரச படைகளுக்கு எதிராக போராடி வரும் கவுதிய கிளர்ச்சி படைகள்
சவூதி நாட்டின் உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்
குறித்த விமானமானது Hajjah மாகாணத்தின் மேலாக பறந்து கொண்டிருந்த பொழுதி
சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த போராளிகள் மீது சவுதி போர் விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்தி வரும்
நிலையில் இந்த பதிலடி தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது
வெல்ல போறேன் பார்த்து போ …!
வெல்ல போறேன் பார்த்து போ …!
இரவும் இனி அகலும்
இந்த இதயம் இனி மகிழும்
வரும் காலம் ஆளும்
வாழ்வு தேறி பாடும்
பட்ட துயர் எல்லாம்
பாதியிலே போகும்
பகல் இரவு தூங்கா
பல சாதனைகள் பதிக்கும்
இழிந்தார் நா வெல்லம்
இன்று இனி கிழியும்
இந்த வாழ்வை எண்ணி
இவர் இதயம் வியக்கும்
எனக்கான சாலையை
ஏய் நானும் போடவா
ஏறி நாளும் போகவே
எழுந்து நீ பார்க்க வா
நான்ங்காண்டு கடும் பயிற்சி
நாள் ஒன்றை தந்தது
நான் ஆள நாள் ஒன்று
நலமோடு பிறந்தது
பெருக்கெடுத்த கண்ணீரும்
பெரும் துயர் வலியும்
இங்கு இனி கலையும்
இதயம் தினம் மகிழும்
என்னை போல வாழ்ந்தாரை
ஏற்றி நானும் வைப்பேனே
எழுதி விதி வைத்து
என்னை போல மகிழ்வாரே ..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 10-02-2022
லண்டனில் இளம் பெண்ணை கற்பழித்த 10 பேர் கைது
லண்டனில் இளம் பெண்ணை கற்பழித்த 10 பேர் கைது
லண்டன் Folkestone and Canterbury பகுதியில் 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில்
12 வயதுடைய சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
தொடர்ந்து இடம் பெற்று வந்த விசாரணைகளில் இவர்கள் குற்றவாளிகள் என
அடையாளம் காண பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
ஈரான் இராணுவத்தில் 1,450 km பாயும் புதிய ஏவுகணை
ஈரான் இராணுவத்தில் 1,450 km பாயும் புதிய ஏவுகணை
ஈரானிய இராணுவத்தில் தற்போது புதிதாக தயாரிக்க பட்ட ஏவுகணை ஒன்று இணைக்க பட்டுள்ளது
இதன் தூர அவீச்சு 1,450 km ஆக உள்ளது
இவை கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமும் தாக்குதல் நடத்த வல்லமை என தெரிவிக்க படுகிறது
இந்த காட்ச்சிகளை ஈரான் வெளியிட்டு அமெரிக்கா ,இஸ்ரேலுக்கு கொதிப்பை கிளப்பியுள்ளது
கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலை
கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலை
முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு உள்ளூர் நிர்வாகம் அறிவித்தது.
கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலைக்கு விடிவு
கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலைக்கு விடிவு
இந்தோனேசியாவில் சுலாவேசி மாகாணம் பலூ நகரில் உள்ள ஆற்றில் வாழ்ந்து வரும் ஒரு முதலையின் கழுத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் டயர் சிக்கியது. முதலை வளரும் போது டயர் கழுத்தை இறுக்கி முதலை இறக்க கூடும் என
மக்கள் அச்சப்பட்டனர். இதனால் முதலையின் கழுத்தில் சிக்கிய டயரை அகற்ற உள்ளூர் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த
முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு உள்ளூர் நிர்வாகம் அறிவித்தது.
இருப்பினும், முதலை மீதுள்ள அச்சம் காரணமாக யாரும் பெரிதாக அதில் ஆர்வம் காட்டவில்லை. முயற்சித்த ஒரு சிலருக்கும் தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில்
உள்ளூரை சேர்ந்த டிலி (வயது 35) என்ற விலங்குகள் நல ஆர்வலர் பிரத்யேக பொறி ஒன்றினை அமைத்து அதில் கோழியாக இரையாக வைத்து, முதலையை பிடித்தார்
. அதன் பின்னர் உள்ளூர் மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு முதலையின் கழுத்தில் இருந்து டயரை வெட்டி எடுத்தார். அதனை தொடர்ந்து முதலை மீண்டும் ஆற்றில் விடப்பட்டது.
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு
பா.ஜனதா அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் மிகவும் துணிச்சலாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு- போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் துணிகரம்
பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை படத்தில் காணலாம்.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் தேர்தல் களம் களைகட்டி உள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில் தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பா.ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். நேற்று இரவும் அதே போன்று போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
இந்தநிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் வாலிபர் ஒருவர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
பா.ஜனதா அலுவலகம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த வாலிபர் திடீரென தான் மறைந்து வைத்து இருந்த 3 பெட்ரோல் குண்டுகளை எடுத்து சரமாரியாக பா.ஜனதா அலுவலகம் மீது வீசினார்.
இதில் 3 பெட்ரோல் குண்டுகளும் அலுவலக வளாகத்திற்குள் விழுந்து ‘டமார், டமார்’ என்ற சத்தத்துடன் வெடித்து சிதறின.
பெட்ரோல் குண்டுகள் வெடித்த போது அதில் இருந்து தீப்பிடித்தது. இதில் பா.ஜனதா அலுவலக வளாகத்தில் உள்ள சுவர்கள், தரை ஆகியவை லேசாக சேதம் அடைந்தன.
தீப்பிடித்ததால் சுவர்கள் மற்றும் தரையில் போடப்பட்டு இருந்த டைல்ஸ் ஆகியவை கருப்பு நிறத்தில் மாறின. இதற்கிடையே பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் திடீரென ஒரு வாலிபர் வந்து பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசியதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் பெட்ரோல் குண்டுகளை வீசிய வாலிபர் யார் என்று பார்த்து பிடிக்க முயற்சி செய்த நிலையில் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதற்கிடையே பக்கத்து வீடுகளில் இருந்த பாதுகாவலர்களும், அக்கம் பக்கத்தினரும் பா.ஜனதா அலுவலகம் நோக்கி ஓடி வந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் நள்ளிரவில் பா.ஜனதா நிர்வாகிகளும், கட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரான கராத்தே தியாகராஜனும் விரைந்து வந்தார். போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரிப்பதற்காக தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பா.ஜனதா அலுவலக வளாகத்தில் சிதறிக் கிடந்த பெட்ரோல் குண்டு பாகங்களை சேகரித்து அதனை ஆய்வு செய்தனர்.
பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
அதில் இருந்த தடயங்களையும் சேகரித்தனர். பெட்ரோல் குண்டாக பயன்படுத்தப்பட்ட கண்ணாடி பாட்டில் துண்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றையும் தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.
தடயவியல் சோதனை முடிந்த பிறகு பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தப்படுத்தினார்கள்.
பா.ஜனதா அலுவலகத்தில் திரண்ட கட்சி நிர்வாகிகள் நடந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று காலை 9 மணியளவில் பா.ஜனதா அலுவலகம் முன்பு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது பெட்ரோல் குண்டு வீசிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.
இதன் பிறகு நிர்வாகிகள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனையும் நடத்தினார்கள்.
பாஜக அலுவலகம்
பா.ஜனதா அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் மிகவும் துணிச்சலாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பா.ஜனதா அலுவலகத்தில் கண்காணிப்பை அதிகப்படுத்த உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி பா.ஜனதா அலுவலகம் முன்பு இன்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கி ஆறுபேர் மரணம்
விபத்தில் சிக்கி ஆறுபேர் மரணம்
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்னல – கிரியுல்ல வீதியின் தலமெஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) கிரியுல்லயிலிருந்து பன்னல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த பஸ்ஸைக் கடக்கும்போது எதிர்திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சந்தலங்காவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர் போபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிரியன்கல்லிய – அதியாகம வீதியில் அக்கரவெல்லிய கறுப்புப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 52 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) பிற்பகல் துவிச்சக்கர வண்டியுடன் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் முந்தலம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பத்துலுஓயா பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்று காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 78 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுங்கேணி நகரிலிருந்து புளியங்குளம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்துடன் நாரம்மலயிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது மோதியதில் மஹவிலச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பெரகல – ஹாலிஎல வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கல்நேவ – தம்புத்தேகம வீதியில் புல்னேவ சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம்
இலங்கையில் இருந்து வந்த பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம்
பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதில் எவ்விதமான மாற்றம் ஏற்படுத்த பட்டுள்ளது என்பது தொடபில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை
கொரியா பறந்த மைத்திரி
கொரியா பறந்த மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
தென் கொரியாவில் நடைபெறும் மாநாட்டு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே அவர் சென்றார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் மேலும் இருவர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்..
மகன் மரணம் – தாய், தந்தை கைது
மகன் மரணம் – தாய், தந்தை கைது
10 வயதான சிறுவன் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், அச்சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சிறுவனின் சடலம், நீர்கொழும்பு, படல்கம ஆண்டிபொலவில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக, கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அவ்வீட்டின் அறையொன்றுக்குள் இருந்து சிறுவனின் சடலம் நேற்று முன்தினம் (09) மாலை மீட்கப்பட்டுள்ளது.
தொண்டையில் சளி சிக்கியமையால், அச்சிறுவன் கடந்த 7ஆம் திகதியன்று நோய்வாய்ப்பட்டுள்ளார்.
அந்த நோயை சுகப்படுத்துவதற்காக அவருடைய பெற்றோர், தாங்கள் நம்பும் சமயத்தின் அடிப்படையில் தியானம் செய்துள்ளனர்.
அந்த தியானத்தின் போதே சிறுவன் மரணமடைந்துள்ளார். எனினும், அவரை உயிர்பிப்பதற்காக, தொடர்ச்சியாக தியானம் செய்துள்ளனர் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அவரை சுகப்படுத்துவதற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை. இந்நிலையிலேயே தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட மூவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த படல்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்
விளையாட்டு துப்பாக்கி தூக்கியவர் பதவியை இராஜினாமா செய்தார் .
விளையாட்டு துப்பாக்கி தூக்கியவர் பதவியை இராஜினாமா செய்தார் .
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த குழுவொன்று, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச
விமான நிலையத்தை 2014 ஆம் ஆண்டு பார்வையிட சென்றிருந்த வேளையில்,
கைத்துப்பாக்கியை காண்பித்து அக்குழுவினர் அச்சுறுத்தியிருந்தார்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் ஏந்திவந்தது கைத்துப்பாக்கி அல்ல, விளையாட்டுத் துப்பாகியென அவர் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிக்கும் சிங்கள இராணுவம்
யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிக்கும் சிங்கள இராணுவம்
சுகதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கமைவாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது கஜபா
படையணியின் படையினர் 30 ஜனவரி 2022 முதல் 2022 பெப்ரவரி 03 வரையான காலப்பகுதியில் யாழ். நகரப்குதியை உள்ளடக்கிய பகுதிகளில் பொலிஸார் மற்றும்
சுகாதார வைத்திய பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு தொடர்பில் வழிப்புணர்வூட்டுவதற்கான பிரசாரங்களை மேற்கொண்டனர்.
இத்திட்டம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய
512 வது பிரிகேட் தளபதி கேணல் தனூஜ கொடேவத்த அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது.
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- அல்-அக்ஸா மீது முழுமையான கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்த இஸ்ரேல் வழி வகுக்கிறது
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது
குற்றவியல் சட்டத்தில் திருத்தம்
குற்றவியல் சட்டத்தில் திருத்தம்
குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a
pre-trial method which would limit delays in law.) அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) நீதித் துறையுடன் தொடர்புபட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் சட்ட சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் சட்டம் தொடர்பில் மக்களுக்குள்ள நம்பிக்கையை வலுப்படும் வகையிலும் நீதித்துறையில் சில திருத்தங்களை கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார்.
வழக்குகள் பல வருட கால தாமதமாவதால் அதனைத் தடுப்பதற்கு மாற்று வழிகள் அவசியமென்றும் தெரிவித்த அவர் மக்கள் சட்டத்தில் மூலம் நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கின்றனர் இதன் காரணமாக வழக்குகளில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.
சிறுவர் பாலியல் முறைகேடு தொடர்பான வழக்கு ஒன்றை சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்த வழக்கு 20 வருட காலம் நடைபெற்றது. அதன் பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர் இளம் வயதை எட்டியபோதே தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறான தாமதங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
சில வழக்குகள் பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றன. சில வழக்குகள் 50 வருடங்களுக்கு மேல் தொடர்கின்றன இதற்கு மாற்று வழி அவசியம்.இந்தத் திருத்தங்களை முன்வைப்பதற்கு முன்பாக நான் சட்டத்தரணிகளுடன்
கலந்துரையாடினேன்.சபையிலும் அனைவரும் இதற்கான ஒத்துழைப்பை வழங்குவார்களென்ற நம்பிக்கை உண்டு. சில சட்டத்தரணிகள் வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு விருப்பமில்லாமல் உள்ளார்கள் என்ற தவறான கருத்துக்களும் சமூகத்தில்
நிலவுகின்றன. அவ்வாறு விரைவுபடுத்தினால் அவர்களுக்கான தொழில் இருக்காதென்றும் தெரிவிக்கப்படுகிறது. அது தவறானது என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்ககுதல் நடத்தியுள்ளது சிரியா தலைநகரை
இலக்கு வைத்து நடத்த பட்ட இந்த ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது
இஸ்ரேல் வலிந்து தாக்குதல்களை தொடராக நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி
மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி
மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொலம்பியா நாட்டின் அதிபர் இவான் டியூக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் கனமழை- மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி
மண் சரிவு
மேற்கு கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதால் 60க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சரிவில் அடித்து செல்லப்பட்டன. இதில் சிக்கி இதுவரை சுமார் 14 பேர்
உயிரிழந்துள்ளனர். 35 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மேலும், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண் சரிவு
இந்நிலையில், பெரேரா நகராட்சியின் மேயர் கார்லோஸ் மாயா, அப்பகுதியில்
தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், உயிரிழப்புகளை தவிர்க்க மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், கொலம்பியா நாட்டின் அதிபர் இவான் டியூக், மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மனைவியின் தலையை வெட்டி வீதியில் உலவிய கணவன்
மனைவியின் தலையை வெட்டி வீதியில் உலவிய கணவன்
இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஈரான் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் – ஈரானில் வைரலான வீடியோ
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி தனது இளம் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் குறித்த வீடியோ ஈரான் நாட்டின் சமூக வலைதளங்களில் பரவியது. இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவை ஆய்வு செய்த போலீசார், மோனா ஹெய்டாரி என்ற 17 வயது பெண்ணின் தலை அது என்பதை கண்டறிந்தனர். ஈரானின் தென்மேற்கு நகரமான
அஹ்வாஸில் அந்த பெண் வாழ்ந்து வந்த இடத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மறைந்திருந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று
வருகிறது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஈரானிய செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரானின் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் என்சீஹ் கசாலி, பாராளு மன்றத்திற்கு
கோரிக்கை விடுத்துள்ளார்.இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
ஹெய்டாரியின் கொலையைத் தொடர்ந்து, குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களைப் பாதுகாக்க சட்டங்களைச் சீர்திருத்த வேண்டும் என்றும், பெண்களின்
திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஈரானில் கடந்த 2020 ஆண்டு தனது மகளின் தலையை துண்டித்து கௌரவ கொலை
செய்த தந்தைக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.













