படப்பிடிப்பில் விஷால் காயம்
படப்பிடிப்பில் விஷால் காயம்
வீரமே வாகைச்சூடும் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், தற்போது லத்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் காயம்… சிகிச்சைக்கு சென்ற விஷால்
விஷால்
விஷால் நடிப்பில் தற்போது வீரமே வாகைச்சூடும் திரைப்படம் வெளியானது. இப்படத்தை அடுத்து லத்தி படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் இடம் பெறும் பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத்தில் நடந்தது. கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 30 நாட்கள் திட்டம் போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தார் பீட்டர் ஹெயின் மாஸ்டர். அடியாட்களுடன் மோதிக் கொண்டு குழந்தையுடன் கீழே குதிக்கும் காட்சியில் காங்ரீட் சுவற்றில் மோதி விஷாலுக்கு கையில் அடிப்பட்டது.
விஷால்
சில மணிநேரம் டிரீட்மெண்ட் எடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடர்ந்தார் விஷால். கை வலியுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு மேலும்
படப்பிடிப்பில் கலந்து கொள்ளமுடியாமல் போனது. இதனால், நடிகர் விஷால் சிகிச்சைக்காக கேரளா சென்றிருக்கிறார். லத்தி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் மார்ச் மாதம் தொடரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தங்கம் வென்ற தமிழ்பெண்ணை வாழ்த்திய கோட்டா – சர்ச்சைகளின் பின் தீர்வு
தங்கம் வென்ற தமிழ்பெண்ணை வாழ்த்திய கோட்டா – சர்ச்சைகளின் பின் தீர்வு
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம்
18 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா –
பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் இல்லாமல் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருந்தார்.
தந்தையை இழந்த நிலையில் சாதித்த குறித்த யுவதியை பல்வேறு தரப்பினரும்
பாராட்டி கௌரவித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் (11) குறித்த யுவதியை ஜனாதிபதி கௌரவித்தோடு அவருக்கு நினைவு பரிசினையும் வழங்கி கௌரவித்துள்ளனர்.
வவுனியா பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து யுவதி
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவால் கௌரவிக்கப்பட்டுள்ளதோடு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மோதி சிதறிய டிப்பர் வாகனங்கள் – இராணுவ சிப்பாய் உள்ளிட்ட 3 பேர் காயம்
மோதி சிதறிய டிப்பர் வாகனங்கள் – இராணுவ சிப்பாய் உள்ளிட்ட 3 பேர் காயம்
இலங்கை தம்புள்ள கபரணையில் இரு கனரக வாகனங்கள் நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்
இவ்வாறு காயமடைந்தவர்களில் இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவர் உள்ளடங்குகிறார்
பாதிக்க பட்ட அனைவரும் தம்புள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர்
வாகனங்கள் இரண்டும் பாரிய சேதமடைந்துள்ளன
இலங்கையில் 12 வயதிற்கு கீழானவர்களுக்கு தடுப்பூசி
இலங்கையில் 12 வயதிற்கு கீழானவர்களுக்கு தடுப்பூசி
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் நோக்கில் 12 வயதிற்கு
கீழானவர்களுக்கு கொரனோ
தடுப்பூசி செலுத்துவதற்கு பரிந்துரைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவ்வாறு சில நாடுகள் அறிமுக படுத்தி செயல் பாட்டில் இடம்பெற்ற வண்ணம்
உள்ளமை குறிப்பிட தக்கது
யாழில் வாலிபன் பரிதாப மரணம்
யாழில் வாலிபன் பரிதாப மரணம்
இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற ஊந்துருளி விபத்தில்
சிக்கி 22 வயதுடைய வாலிபர் பலியாகியுள்ளார்
மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
நாள் தோறும் இலங்கையில் இவ்வாறான விபத்துக்களில் நான்கிற்கு மேற்பட்டவர்கள்
பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் அதிகரிக்க படவுள்ள எரிபொருள் விலை
இலங்கையில் அதிகரிக்க படவுள்ள எரிபொருள் விலை
இலங்கையில் தொடர்நது நாள் தோறும் அத்தியாவசிய பொருட்கள் விலைகள்
அதிகரிக்க பட்ட வண்ணம் உள்ளன ,அவ்விதம் தற்போது எரிபொருளின் விலையும்
அதிகரிக்க யோசனைகள் முன்வைக்க பட்டுள்ளன
ஆளும் அரசின் கண்மூடித்தனமான செயல்பாடுகளினால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்
கள்ள மின்சாரத்தில் தாக்குண்டு இருவர் மரணம் -சோகத்தில் கிராமம்
கள்ள மின்சாரத்தில் தாக்குண்டு இருவர் மரணம் -சோகத்தில் கிராமம்
இலங்கை இரத்தினபுரி பெல்மதுளை பகுதியில் விவசாய நிலமொன்றில் பயன்படுத்த
பட்ட சட்டவிரோத மின்சாரத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்
இவர்கள் மரணம் தொடர்பில் காவல்துறையினர் தொடர் விசாரணைகளை நடத்தி
வருகின்றனர் ,அனுமதி இன்றி இவ்வாறு
மின்சாரம் பயன்படுத்தி வந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள படும் என எதிர் பார்க்க படுகிறது
போலந்து உக்கிரேனில் குவிக்க படும் அமெரிக்கா இராணுவம்
போலந்து உக்கிரேனில் குவிக்க படும் அமெரிக்கா இராணுவம்
உக்கிரன் இது பாரிய படையெடுப்பை ரஷியா மேற்கொள்ள உள்ள நிலையில்
அமெரிக்கா மூவாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை ர் ,போலாந்து மற்றும் உக்கிரேன் பகுதிகளில் குவிக்க பட்டுள்ளன
ரசியா உக்கிரேன் மீது தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில் எதிர் தாக்குதல் புரியாது
உக்கிரேன் படைகள் ரசியாவிடம் சரண் அடையும் என எதிர் பார்க்க படுகிறது
ஆறுபேர் மீது கத்தி வெட்டு தாக்குதல்
ஆறுபேர் மீது கத்தி வெட்டு தாக்குதல்
அமெரிக்கா Philadelphia பகுதியில் நபர் ஒருவர் அங்கிருந்த ஆறு மக்கள் மீது சரமாரி
கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினார் ,இதில் பெண்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
நெஞ்சு ,நெத்தி ,கழுத்து கை ,உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள்
ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- அல்-அக்ஸா மீது முழுமையான கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்த இஸ்ரேல் வழி வகுக்கிறது
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது
உக்கிரேனில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற – அமெரிக்கா அவசர உத்தரவு
உக்கிரேனில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற – அமெரிக்கா அவசர உத்தரவு
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் முடிவதற்குள் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: வெள்ளை மாளிகை கெடு
ஜேக் சல்லிவன், விளாடிமிர் புடின்
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில்
ரஷியா 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை குவித்துள்ளது. இதனால்,உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசியதாவது:
உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.உளவுத்துறை மூலம் நமக்குக் கிடைத்த தகவல்கள்படி, புடின் தனது
படைகளை அதிகரிக்கும் விதம், அவற்றை (உக்ரைனில்) பயன்படுத்த என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.
அது விரைவான காலக்கட்டத்தில் நடக்கும்.பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் முடிவதற்குள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை மற்றும் படையெடுப்புக்கு உத்தர விடுவார்.
எப்படியும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.அவர் இராஜ தந்திரத்தில் ஈடுபட விரும்பினால், நாங்கள் ஒரு இராஜதந்திர பாதை நோக்கி செல்ல விரும்புகிறோம். அவர்
படையெடுப்பை தேர்வு செய்தால், தீர்க்கமாகப் பதிலளிப்பதற்காக எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவோம்.
ஜெர்மனி, போலந்து, ஆர்மீனியா நாடுகளில் அமெரிக்கப் படைகள் நிலை நிறுத்தப்படுவது உக்ரைனில் ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதற்காக அல்ல. உக்ரேனிய
எல்லைக்கு வரும் புதிய படைகள் உட்பட ரஷ்ய ராணுவ விரிவாக்கத்தின் அறிகுறிகளை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்
ஆண்ட்ரியா செய்த காரியம்
ஆண்ட்ரியா செய்த காரியம்
நடிகை, பாடகி என பண்முகம் கொண்ட நடிகை ஆண்டியா செய்த காரியத்தால் அவருடைய ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
ஆண்ட்ரியா செய்த காரியம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்
ஆண்ட்ரியா
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா,
விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல்
கொடுத்திருக்குறார். தமிழ் சினிமாவில் இடம் பெற்று வெற்றியடைந்த பல பாடல்களை இவர் பாடியுள்ளார். சமீபத்தில் இவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
தற்போது இவர் சமூக வலைத்தளம் மூலமாக தனது ரசிகர்களுக்கு உடல்நலன் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ரத்த
தானம் அளிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு சில வேண்டுகோளையும் விடுத்துள்ளார். அதில் “இன்று ஒரு நல்ல
செயலைச் செய்ய வேண்டுமா? அப்போ இரத்த தானம் செய்யுங்கள்! இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்ததால், நேற்று
இரத்த வங்கிக்குச் சென்று ரத்த தானம் செய்தேன் என்று நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விஜய் மகனுடன் இணைய தயார்.. பிரபல நடிகர்
விஜய் மகனுடன் இணைய தயார்.. பிரபல நடிகர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், விஜய் மகனுடம் இணைய தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
விஜய் மகனுடன் இணைய தயார்.. பிரபல நடிகர் ஆர்வம்
சஞ்சய்
2019-இல் வெளியான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகனான இவர், முதல் படத்திலேயே
பல ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மகான் படத்தில் அவருடைய தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்தார். இப்படத்தில் சிம்ரன், வாணி
போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ்
நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் துருவ் விக்ரம் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, “சிறு வயதிலிருந்தே நானும் விஜய் சாருடைய மகன்
சஞ்சய்யும் நல்ல நண்பர்கள், அவர் நல்ல கதையுடன் வந்தால் அந்த படத்தில் நடிக்க
நான் தயாராக இருக்கிறேன். மேலும் அந்தப்படம் பாலிவுட் படங்களை போல இரண்டு நாயகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
முடங்கியது டுவிட்டர்- அவதியில் மக்கள்
முடங்கியது டுவிட்டர்- அவதியில் மக்கள்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
திடீரென முடங்கியது டுவிட்டர் வலைதளம் – அவதியடைந்த பயனாளர்கள்
டுவிட்டர் வலைதளம்
உலகம் முழுவதும் நள்ளிரவு டுவிட்டர் சமூக வலைதள சேவை திடீரென முடங்கியது. இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து உள்பட பல்வேறு
நாடுகளில் இந்த பாதிப்பு காணப்பட்டது. இதனால், அவதியடைந்த டுவிட்டர் பயனாளர்கள் புகாரளித்தனர்.
ஒரு மணி நேரத்திற்கும் பிறகு டுவிட்டர் வலைதளம் செயல்பாட்டிற்கு வந்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.
ட்வீட்களை இடுகையை தடுக்கும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது,
நிலைமை சீரடைந்து விட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்தது. மேலும் தொழில்நுட்ப கோளாறுக்கு பயனாளர்களிடம் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது.
உன்னால் தவித்தேன் …!
உன்னால் தவித்தேன் …!
ஊர் உறங்கும் வேளையில
உன் மடி நானுறங்க
என்னை நானும் மறந்தேனே
என் உயிரில் மிதந்தேனே
அந்தி வந்து தாலாட்ட
அத்தை மகள் பேச்சிழக்க
உச்சி வானம் வெட்கப்பட்டே
உச்ச இருளை கொட்டிவிடும்
இந்த ஒரு நாளிற்காய்
இத்தனை நாள் தவமிருந்தேன்
இன்றிந்த பொழுதினிலே
இவ் வையம் மறந்திருந்தேன்
எட்டு கால் நண்டாக
என் மேனி கீறலிட
தொட்டு உன்னை மகிழ்ந்தனே
தொட்டா சிணுங்கி ஆனேனே
மூச்சு முட்டி நீ பேச
மூச்சடக்கி நான் கேட்க
வீழ்ந்துடைந்த மொழி எல்லாம்
வீரத்தின் சோடனையோ
உடல் முழுதும் நீர் விழவே
உன் நிக கீறல் வலியெடுக்க
தாங்கி சிரித்தேனே
தாராளம் உன்னை இரசித்தேனே
இது தானே வாழ்வாச்சு
இன்றெங்கும் கலந்தாச்சு
கலையாத இருள் ஒன்றை
கை கூப்பி தொழுதேனே
ஆனாலும் ஏமாற்றம்
ஆதவன் விடியலிட்டான்
அடுத்து வரும் நாளிற்காய்
அடி உன்னாலே அவதியுற்றேன் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 11-02-2022
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிப்பு
புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு
பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில்
ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை சேவை முடக்கம்
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை சேவை முடக்கம்
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை போக்குவரத்துச் சேவை கடந்த மூன்று தினங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் மக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கப்படுகின்றன.
குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
படகு பாதையின் வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளமையாலேயே சேவை நிறுத்தப்பட்டுள்ளது என காரணம் கூறப்பட்டுள்ளது.
மேற்படி படகு இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி இடம்பெற்றது. எனினும், பின்னர் புதிய கேபிள் இணைக்கப்பட்டு அண்மைக்காலமாக தடையின்றி சேவை இடம்பெற்றது.
இரு வெளியிணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, ஒன்று பழுதடைந்தால் மற்றையதை பயன்படுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது
பொருத்தப்பட்டிருந்த ஒரு வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளது எனக் கூறி மூன்று தினங்களாக பாதை சேவையில் ஈடுபடாமல் உள்ளது.
அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் தற்காலிகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட மோட்டார் படகில் ஆபத்துக்களுக்கு மத்தியில் தினமும் பயணம் செய்கின்றனர்.
படகில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்குவதில் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
வீதி அபிவிருத்தி அதிகார சபை ஒரு வெளியிணைப்பு இயந்திரத்தை மூன்று நாள்களுக்கு திருத்தம் செய்கின்றதா என படகு பாதைப் பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, படகு பாதையின் சீரான சேவைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழில் 10 பேரை கடித்த விசர் நாய்
யாழில் 10 பேரை கடித்த விசர் நாய்
யாழ். நகர் மத்தி பகுதியில் இன்றைய தினம் கட்டாக்காலி நாய் ஒன்று வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டித்துள்ளது.
யாழ். நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் இன்று
மதியம் முதல் மாலை வரையிலான நேரத்தினுள் 10க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது.
அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு இரண்டு கால்களிலும் நாய் கடித்துள்ளது. அதேவேளை அப்பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்களை குறித்த நாய் கடித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , குறித்த நாயினை மாநகர சபை ஊழியர்கள் ஊடாக பிடிப்பதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் , நாய் தொடர்பிலான தகவல்கள் தெரியாமையால் நாயினை பிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
குறித்த நாய் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் மாநகர சபைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்
சுவிசில் இருந்து இலங்கை வந்தவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
சுவிசில் இருந்து இலங்கை வந்தவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத
சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். நேற்று இந்த சம்பவம் நடந்தது.
சுவிஸிலுள்ள குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில் வந்து, கோண்டாவிலிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
அந்த வீட்டுக்காரர்களும், சுவிஸ் குடும்பமும் நேற்று காலையில் வீட்டை விட்டு புறப்பட்டு சென்றனர். இதன்போது, பெறுமதியான தங்க நகைகள், சேலைகளை
அலுமாரிக்குள் மறைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர். மாலையில் வீடு திரும்பினர்.
அலுமாரியில் பொருட்கள் கிளறியிருந்ததை அவதானித்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை தேடிய போது, அவை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தடம் புரண்ட ரயில் – பல சேவைகள் பாதிப்பு
தடம் புரண்ட ரயில் – பல சேவைகள் பாதிப்பு
இலங்கை கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயில் ஒன்று
தடம் புரண்டதில் மலையக ரயில் சேவைகள் பாதிக்க பட்டுள்ளன
விரைவில் மீட்பு பணிகள் சீர் படுத்த பட்டு சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என
தெரிவிக்க படுகிறது
இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
இலங்கை மோதர பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர்
இணைந்து நடத்திய தேடுதலின் பொழுது பாதாள உலக குழுவை சேர்ந்த நபர் ஒருவர்
சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
இவர் பல கடத்தல் ,கொலை மற்றும் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடையவர் என
தெரிவிக்க பட்டுள்ளது







