ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா
.ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா
இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனரும் நடிகருமான பிரபு தேவா, ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா.. வைரலாகும் வீடியோ
பிரபு தேவா
ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது ‘பயணி’ மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக
அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில்
இப்பாடல் உருவாகியுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி என இசை கலைஞர்கள் பாடியுள்ளனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வாழ்த்தி, நெகிழ்ந்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்
. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்த சுருதிஹாசன்
அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்த சுருதிஹாசன்
சுருதிஹாசன் தனக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக சிரஞ்சீவி சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார்.
பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்த சுருதிஹாசன்
சுருதிஹாசன்
சுருதிஹாசன் நடிப்பில் கடந்த வருடம் லாபம் படம் வெளியானது. மேலும் அவர் நடித்த 3 தெலுங்கு படங்கள், ஒரு இந்தி படம் ஆகியவையும் ரிலீசானது. தற்போது பிரபாஸ்
ஜோடியாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகும் சலார் படத்தில் நடித்து வருகிறார். ரூ.150 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகிறது.
அடுத்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது பாலகிருஷ்ணாவுக்கு 107-வது படம். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சிரஞ்சீவியின் 154-வது படத்தில் அவருக்கு
ஜோடியாக நடிக்க சுருதிஹாசனிடம் பேசி வந்தனர். வயதான நடிகரான சிரஞ்சீவியுடன் ஜோடிசேர சுருதிஹாசன் சம்மதிப்பாரா என்று சிலர் சந்தேகம் கிளப்பினர். இந்த
நிலையில் சுருதிஹாசன் தனக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக சிரஞ்சீவி சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்
வீடு புகுந்த திருடன் – மடக்கிய போலிஸ்
கல்முனையில் வீடு புகுந்து திருட்டில் ஈடபட்ட நபர் 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு, கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கல்முனை வைத்தியசாலை வீதியில் வசிக்கும் ஒலுவில் துறைமுகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரின் வீட்டிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த திருடன், மேசையில் இருந்த மணிபேர்ஸை திருடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சிசிடிவி கெமராவின் உதவியுடன்,குறித்த நபர் நற்பிட்டிமுனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை தமிழ்ப் பிரதேசத்தில் 24 மணிநேரத்துள் திருடனைக் கண்டுபிடித்தமை இதுவே முதற்தடவையாகும்.
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- அல்-அக்ஸா மீது முழுமையான கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்த இஸ்ரேல் வழி வகுக்கிறது
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது
கொடிகாமதில் மணல் கொள்ளையர்கள் அடாவடி
கொடிகாமதில் மணல் கொள்ளையர்கள் அடாவடி
கொடிகாமம் – பாலாவி தெற்கு கடற்கரை பகுதியில் தனது காணிக்குள் அத்துமீறி
நுழைந்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தடுக்க சென்ற காணி உரிமையாளர் தாக்கப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கொடிகாமம் பாலாவி தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த மணல் கொள்ளையர்கள் , காணிக்குள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்த காணி உரிமையாளர் மணல் கொள்ளையை தடுக்க சென்ற போது , கொள்ளையர்கள் காணி உரிமையாளரை தாக்கி , அவரது மோட்டார் சைக்கிளையும் தீ மூட்டி எரித்து விட்டு சென்றுள்ளனர்.
கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான காணி உரிமையாளர் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
பாண்,சாப்பாட்டு பொதி ,எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு
பாண்,சாப்பாட்டு பொதி ,எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு
.450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலை, 30 ரூபாவினாலும் பணிஸ் 10
ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள்களின் விலை அதிகரிப்பை அடுத்து, சாப்பாட்டு பொதியின் விலை 20 ரூபாவினாலும்,
கொத்துரொட்ட 10 ரூபாவினாலும், சிற்றுண்டி விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
விமானப் பயணச் சீட்டு விலை அதிகரிப்பு
.விமானப் பயணச் சீட்டு விலை அதிகரிப்பு
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து விமானப் பயணச் சீட்டுகளின் விலைகளும்; 27 சதவீதத்தால்
அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 203 ரூபாய் 60 சதமாக இருந்த நிலையில், இன்று அதன் பெறுமதி 259 ரூபாய் 99 சதமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
விபத்தில் இறந்தால் 20 லட்சம் இழப்பு
விபத்தில் இறந்தால் 20 லட்சம் இழப்பு
தொழிலாளர் இழப்பீட்டுத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நேற்று (10) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றிய தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நபர் ஒருவர் பணியில் ஈடுபடும்போது, விபத்துக்குள்ளானால், வழங்கப்படும்
இழப்பீட்டு தொகையை ஐந்து இலட்சம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
தனியார் துறையில் ஊழியர் சேவைக்கு வரும்போதோ, பணியிலிருந்து திரும்பும்போதோ விபத்துக்குள்ளானால், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், இந்த இழப்பீட்டு திருத்தச் சட்டமூலத்தில் அவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் இந்த இழப்பீடு தொடர்பான சட்டம் 16 வருடங்களின் பின்னர் திருத்தப்படுகிறது
கடமையில் ஈடுபட்டிருக்கையில் அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நஷ்ட ஈடு வழங்கும் சட்டம் 08 தசாப்தங்குளுக்கு முன்னர்
தயாரிக்கப்பட்டது. 2005 இல் இந்த சட்டம் திருத்தப்பட்டு நஷ்ட ஈட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டது. கடந்த 16 வருடங்களாக இந்த தொகை அதிகரிக்கப்படவில்லை. சம்பள தொகை அதிகரித்துள்ளது.
வேலையாட்கள் நஷ்டஈடு திருத்தச் சட்டமூலத்தை திருத்துவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதன் பிரகாரம் இந்த திருத்தம்
தொடர்பில் தொழிற்சங்கங்களுடனும் முதலாளிமார்களுடனும் கலந்துரையாடினேன்.
தோட்டத் தொழிலாளர் ஒருவரை பாம்பு கடித்தால் நஷ்ட ஈடு கிடைக்காது. வேலைத்தளத்திலிருந்து வீட்டுக்கு வருகையிலோ தொழிலுக்கு வருகையிலே அனர்த்தம்
நடந்தால் நஷ்ட ஈடு கிடைக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரச ஊழியர்களை போன்றே தனியார் ஊழியர்களுக்கும் நஷ்டஈடு கிடைக்க இந்த திருத்தங்கள் வழிவகுக்கும்.
ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதியத்தை வழங்காவிட்டின் 50 வீத அபராதம் விதிக்கப்படுகிறது. பணத்தை வழங்குவதை தாமதித்தால் 05 முதல் 30 வீத
அபராதம் விதிக்க புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அபராத தொகை ஊழியர்களுக்கு கிடைக்கும். ஊழியர்களின் நலனுக்காக இந்த திருத்தங்கள்
செய்யப்படுவதாக அமைச்சர் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேல் தெரிவித்தார்
மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை
மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை
ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து கொழும்பு இரத்மலானை விமான
நிலையத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் இந்த விமான சேவை இடம்பெறும்.இன்று (10)
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இதனை தெரிவித்தார்.
அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக இரத்மலானை விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை கேந்திரமாகக் கொண்டு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக
அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 இல் அமைக்கப்பட்டது.
1968 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதால், பிராந்திய மற்றும் சர்வதேச விமானங்கள் செயல்படவில்லை
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!
கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!
பக்கத்தில நீ இருந்தும்
பாய் விரிக்க நேரமில்லை
பகலிரவு வேலையால
பார்க்க மனம் கூடவில்லை
உனக்கொரு முத்தமதை
உதட்டினில எழுதிவிட
ஆள் மனசு துடிக்கிறது
ஆனாலும் நேரமில்லை
பட்ட கடன் பாதியில
பாதிவழி துரைத்தையில
பாய்க்கின்று விடுமுறை தான்
பாவியுனக்கு கொடும் துயர்தான்
சொர்க்கத்தில வாழ்வென்று
சொல்லி வைத்த திருமணமோ
சொகமிழந்து வாடுறது
சோகமதில் தேய்கிறது
சிக்கனத்தை சிறைபிடிக்க
சீதேவி மறந்ததினால்
விழியிரண்டில் நீராச்சு
விழுந்து உடல் ஒடிந்தாச்சு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-03-2022
.
பிரிட்டனில் எகிறிய எரிபொருள் – விலை லீட்டருக்கு 2 பவுண்டு அதிகரிப்பு
பிரிட்டனில் எகிறிய எரிபொருள் – விலை லீட்டருக்கு 2 பவுண்டு அதிகரிப்பு
.
பிரிட்டனில் எகிறிய எரிபொருள் – விலை லீட்டருக்கு 2 பவுண்டு அதிகரிப்பு
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் இடம்பெற்று வரும் நிலையில் தற்பொழுது
எரிபொருள் விலை லிட்டருக்கு இரண்டு பவுண்டுகளினால் கென்ட் A2 near Canterbury was charging 206.9p பகுதியில் அதிகரிக்க பட்டுள்ளது
இந்த திடீர் விலை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை
. ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 14 நாட்களைக் கடந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரைனில் உள்ள ஐந்து முக்கிய நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது.
இதற்கிடையே, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைன் தனது பிராந்தியத்தில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்,
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், ரஷ்யாவின் கூற்று அபாண்டமானது. உக்ரைனுக்கு எதிராக இத்தகைய பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா தனக்கான அடித்தளத்தை அமைக்கிறது என தெரிவித்தார்
பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு
பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு
டேவிட் பென்னட் பன்றியின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதத்தில் உயிரிழப்பு
ஆபரேஷன் செய்துகொண்ட டேவிட் பென்னட்
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57), இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. மனித இதய
மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்காது என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த முடிவானது. இதற்கு டேவிட் பென்னட்டும் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து அவருக்கு மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஜனவரி 7-ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் 8 மணி நேரம் நடந்த அறுவை
சிகிச்சையில் பன்றியின் இதயத்தை நோயாளிக்கு டாக்டர்கள் வெற்றிகரமாக பொருத்தினார்கள். அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், பன்றியின் இதயம் பொருத்திய 2 மாதத்தில் டேவிட் பென்னட்
காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது என்பதை மட்டும் மருத்துவர்கள் தெரிவித்தனர்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு
தனுஷின் பிரிவிற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற
திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.
ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி
ஐஸ்வர்யா தனது முசாபிர் மியூஸிக் ஆல்பம் வீடியோ வேளைகளை ஆரம்பித்து அது குறித்த அறிவிப்புகளை தொடர்ச்சியாக அறிவித்து வந்தார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருவதாகவும், அதில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. சினிமா
துறையில் தனுஷுக்கு நேர்எதிர் போட்டியாளராக கருதப்படும் சிம்புவை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்கப்போவதாக வரும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
புலிகள் ஆவணங்கள் மீட்பு
புலிகள் ஆவணங்கள் மீட்பு
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகிதத்துக்கிடமான
ஆவணங்கள் சில, நேற்று (09) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இப்புத்தகங்கள், விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதில் விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள், நிர்வாகம்
செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் புத்தகங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
காணி உரிமையாளர், நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக நிலத்தை பன்படுத்திக் கொண்டிருந்தபோது இந்த ஆவணங்கள் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு காணி உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
பணம் இன்றி தவிக்கும் இலங்கை – மக்கள் தலையில் ஏற்ற பட்ட சுமைகள்
பணம் இன்றி தவிக்கும் இலங்கை – மக்கள் தலையில் ஏற்ற பட்ட சுமைகள்
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம்
மாதாந்தம் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் சேமிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது.
எவ்வாறாயினும், 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது.
ஆனால், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதியை
கட்டுப்படுத்தும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்கள் மட்டுமே உரிமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இறக்குமதிக் கட்டுப்பாட்டிற்காக மத்திய வங்கி முன்மொழிந்த பொருட்களின்
பட்டியலின்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்குச் செல்லும் என்று மதிப்பிடப்பட்டது.
இதை கட்டுப்படுத்தவே 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது
விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை
பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார்
இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
விஜய், ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா ‘தளபதி 66’
படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது
யாழில் இளம் பெண் கைது
யாழில் இளம் பெண் கைது
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையை காண்பித்து திருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்துள்ளார்.
அவரது நடவடிக்கைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் கொண்டமையால் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இத்தகவலின் பிரகாரம் வீட்டுக்கு சென்ற பொலிஸார் வாடகை அறையில் தங்கியிருந்த யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்போது யுவதி மருத்துவ பீட மாணவி அல்ல என்பதனையும் அது போலியான அடையாள அட்டை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
மாட்டு வண்டியில் பயணிக்கும் அரசியல்வாதிகள்
நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட
பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச
சபை உறுப்பினர்கள் இன்று மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்றுள்ளனர்.
நாட்டின் இந்த நிலைமைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில்
கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர்,
உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேசசபையை நோக்கி இன்று நகர்ந்து செல்கின்றனர்
பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்
பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை. அவர்தான் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக வேறு
உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றனர். நிதி அமைச்சரைச் சபைக்கு வரச் சொல்லுங்கள். இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்குக் கட்டளை அனுப்புங்கள்.
-இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணியளவில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.,
நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. டிசம்பர் 10ஆம் திகதியே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபையில் உரையாற்றினார். அதன்பின்னர் நாட்டின் நிதி
நிலைவரம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தவில்லை.
எனவே, நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்துமாறு, நிதி அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும் – என்றார்
இலங்கையில் 4 மணிநேரம் மின்சாரம் வெட்டு
இலங்கையில் 4 மணிநேரம் மின்சாரம் வெட்டு
இலங்கையில் இன்று நான்கு மணிநேரம் மின்சார வெட்டு என மின்சார வாரியம் அறிவித்துள்ளது
நாள் தோறும் பலமணி நேரம் மின்சார வெட்டு இடம்பெற்று வருவதால் மக்கள் ஆளும்
ஆட்சியர்கள் மீது கொதிப்பில் உறைந்துள்ளனர்












