Posted in Uncategorized

சிறந்த பொருளாதாரநிபுணர் என்ற பெருமை விருதை தட்டி சென்ற இலங்கை பெண்

சிறந்த பொருளாதாரநிபுணர் என்ற பெருமை விருதை தட்டி சென்ற இலங்கை பெண்

இலங்கையில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் Ermila Jayasuriya என்ற பெண்மணி

நிறுவனம் ஒன்றின் முதன்மை நிறைவேற்று அதிகாரியாக திகழ்ந்து வருகிறார் ,இவரினால் அந்த நிறுவனம் அசுர வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது

இதற்காக அவருக்கு பிரிட்டனின் சிறந்த பொருளாதார மேதை என்கின்ற பட்டம் வழங்க பட்டு கவுரவிக்க பட்டுளளார்

சிங்களவராக இருந்தாலும் நமது இலங்கை பெண்மணி என்பதில் இலங்கையர்கள் மகிழ்ச்சி அடைவதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர்

சிங்கள மக்களுடன் தமிழர்களுக்கு மோதல் இல்லை என்பதும் ஆளும்


ஆட்சியர்கள் இனவாத பரப்பாலே தமிழர்களுக்கு எதிரான ஒன்றாக விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு – தப்புமா நாடு ..?

    சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு – தப்புமா நாடு ..?

    இலங்கையில் வீழ்ச்சி அடைந்து செல்லும் பொருளாதார நிலை காரணமாக


    அதனை நிவாரத்தி செய்திடும் முகமாக சர்வதேச நாணய நித்தியதுடன் பேச்சுக்களில் ஈடுபட இலங்கை நிதியமைச்சர் குழுவினர் செல்லவுள்ளனர்

    இவர்களின் இந்த சந்திப்பின் பிரதான நோக்கம் கடன் தள்ளுபடி ,மேலும் உதவி திட்டங்கள் வழங்குதல் தொடர்பான ஒன்று என எதிர்வு கூற படுகிது

    ஆனால் இலங்கையோ அவ்விதம் இல்லை என குத்துகரணம் அடிக்கிறது

      கொரானா
      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் கொரானாவுக்கு 7 பேர் மரணம்

      இலங்கையில் கொரானாவுக்கு 7 பேர் மரணம்

      இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஏழுபேர்

      மரணமாகியுள்ளனர்

      மேலும் இந்த நோயின் தொற்று குறைவடைந்து செல்வதாக தோற்ற பாட்டில் இலங்கை

      சுகாதர அமைச்சு கருத்துரைத்துள்ளது

        Posted in மருத்துவம்

        ரத்த சோகை அறிகுறிகள் – தடுக்கும் வழிமுறைகள்

        ரத்த சோகை அறிகுறிகள் – தடுக்கும் வழிமுறைகள்

        இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் ரத்தசோகை நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

        ரத்த சோகை அறிகுறிகளும் தடுக்கும் வழிமுறைகளும்…
        ரத்த சோகை


        உலக அளவில் 800 மில்லியனுக்கும் அதிகமான பெண்களை ரத்தசோகை நோய் பாதிக்கிறது என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இந்தியாவில், இது ஒரு பெரிய

        பொது சுகாதார பிரச்சனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில், திருமண வயதுடைய பெண்களில் ஐம்பத்தி இரண்டு சதவீதம் பேர் இரத்த சோகையால்

        பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த சோகைக்கான முதன்மை காரணம் இரும்புச்சத்து குறைபாடு.

        ரத்த சோகை அறிகுறிகள்:

        மிகுந்த சோர்வு, பலவீனம், வெளிறிய தோல், மார்பு வலி, வேகமான இதயத்துடிப்பு அல்லது மூச்சுத் திணறல், தலைவலி, தலைசுற்றல், கை கால்களில் சில்லென்ற உணர்வு, நாக்கில் புண் அல்லது வீக்கம், பலமற்ற உடையக்கூடிய நகங்கள், பசியற்ற உணர்வு.

        ரத்த சோகை அறிகுறிகள் – தடுக்கும் வழிமுறைகள்

        இதுபோன்ற பிரச்சனைகளில் ஏதாவது ஒன்று இருந்தாலும் உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வதுடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

        தடுக்கும் வழிமுறைகள்:

        இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் ரத்தசோகை நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். இறைச்சி, கடல் உணவு, பீன்ஸ், அடர் பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள் கீரைகள், திராட்சை மற்றும் ஆப்ரிகாட் போன்ற

        உலர்ந்த பழங்கள், இரும்பு செறிவூட்டப்பட்ட தானியங்கள். உங்கள் உடல் மற்ற மூலங்களிலிருந்து பெறுவதைவிட இறைச்சியிலிருந்து அதிக அளவு இரும்புச்சத்தை உறிஞ்சுகிறது.

        நீங்கள் இறைச்சி சாப்பிடாதவராக இருக்கும்பட்சத்தில் தாவர அடிப்படையிலான உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டியிருக்கும். ஆரஞ்சு பழச்சாறு போன்ற சிட்ரஸ் பழச்சாறுகளில் உள்ள வைட்டமின் சி, உணவில் உள்ள இரும்புச்சத்தை

        சிறப்பாக உறிஞ்சுவதற்கு உங்கள் உடலுக்கு உதவுகிறது. ப்ராக்கோலி, திராட்சைப்பழம், கிவி, கீரைகள், முலாம் பழங்கள், ஆரஞ்சு, மிளகு, ஸ்ட்ராபெரி மற்றும் தக்காளியில் வைட்டமின் ‘சி’ ஆனது காணப்படுகின்றது

        இதனால் இதனை அதிகம் மக்களே விரும்பி உண்ணுங்கள் நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்

          Posted in சினிமா

          மாலத்தீவில் கவர்ச்சி.. வைரலாகும் வரலட்சுமி

          மாலத்தீவில் கவர்ச்சி.. வைரலாகும் வரலட்சுமி

          தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கவர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.

          மாலத்தீவில் கவர்ச்சி.. வைரலாகும் வரலட்சுமி வீடியோ
          வரலட்சுமி சரத்குமார்‘


          ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. அதன்பின் வரலட்சுமி

          சரத்குமார், ’விக்ரம் வேதா’, ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’, ,சர்க்கார்’

          உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

          வரலட்சுமி சரத்குமார்

          இந்நிலையில், வரலட்சுமி மாலத்தீவிற்கு சென்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனை பதிவி செய்யும் வகையில் அங்கு எடுத்துக்கொண்ட

          கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

            Posted in இலங்கை செய்திகள்

            முல்லையில் வெடித்த காஸ் சிலிண்டர்

            முல்லையில் வெடித்த காஸ் சிலிண்டர்

            இலங்கை வடக்கு முல்லைதீவு செல்வபுரம் பகுதியில் வீடொன்றில் பயனப்டுத்த பட்ட

            சமையல் எரிவாயு சிலிண்ட வெடித்து சிதறியது
            எனினும் இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

            இலங்கையில் தொடராக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளது


            இது ஆளும் ஆட்சியாளர்களினால் திட்டமிட்டு நடத்த பட்டும் படுகொலை அரங்கேற்ற நிகழ்வின் ஆரம்ப பகுதி என நம்ப தோன்றுகிறது

            மக்களை அச்சுறுத்தும் முதல் கட்ட நகர்வாக பார்க்க படுகிறது

              Posted in சினிமா

              சென்னை மேயருடன் நயன்தாரா-அவருடைய காதலர் விக்னேஷ்

              சென்னை மேயருடன் நயன்தாரா-அவருடைய காதலர் விக்னேஷ்

              நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சென்னை மேயருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

              சென்னை மேயருடன் நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்
              நயன்தாரா


              நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது,

              நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

              பிரியா ராஜன் – நயன்தாரா – விக்னேஷ் சிவன்
              பிரியா ராஜன் – நயன்தாரா – விக்னேஷ் சிவன்

              இந்நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய

              செறுள்ளனர். அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சியின் புதிய பெண் மேயர் பிரியா ராஜனை சந்தித்து பேசி, இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

              அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது

                Posted in Uncategorized

                பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதால்

                பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதால்

                இந்திய வல்லாதிக்கம் பாகிஸ்தான் நாட்டுக்குள் ஏவுகணை தாக்குதலை

                மேற்கொண்டது ,இந்த ஏவுகணை தாக்குதலினால் நாடுகளுக்கு இடையில் பதட்டம் நிலவியது

                தபோது தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் நாட்டுக்குள் குறித்த

                ஏவுகணைகள் செலுத்த பட்டு விட்டதாக இந்திய தரப்பில் விளக்கம் அளிக்க பட்டுள்ளது

                இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

                  Posted in Uncategorized

                  சீனாவில் 9 மில்லியன் மக்கள் வாழும் நகர் அடித்து பூட்டு – பரவும் கொரனோ

                  சீனாவில் 9 மில்லியன் மக்கள் வாழும் நகர் அடித்து பூட்டு – பரவும் கொரனோ

                  சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள Changchun என்ற நகரம் அது பூட்ட பட்டுள்ளது

                  குறித்த நகரில் ஒன்பது மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர் ,இங்கு தற்பொழுது கொரனோ
                  நோயானது பரவி வரும் நிலையில் இந்த அடித்து பூட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது

                  இங்கிருந்து கொரனோ மீளவு உலகில் வேகமாக பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சம் வெளியிட பட்டுள்ளது

                    Posted in Uncategorized

                    ரசியா அதிரடி – பேஸ்புக்கின் இன்சகிராம் பாவிக்க தடை

                    ரசியா அதிரடி – பேஸ்புக்கின் இன்சகிராம் பாவிக்க தடை

                    ரசியா நாட்டு அரசு மற்றும் இராணுவத்தை தரக்குறைவாக பேஸ்புக் மற்றும் அதன்

                    குழுமத்தில் பரப்புரைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன


                    தொடர்ந்து அந்த அரசுக்கு எதிராக செயல் பட்டு வந்த இன்ஸகிராம் ரஷியாவில் மக்கள் பாவிக்க தடை விதிக்க பட்டுள்ளது

                    அமெரிக்கா நிறுவனங்கள் ரசியா மீது தடைகளை விதித்து செயல்பட மறுத்து வரும் நிலையில் குறித்த


                    நிறுவனங்களை இலக்கு வைத்து ரசியா தனது வேட்டையினை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in பங்கு சந்தை Forex Trade

                      பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு

                      பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு

                      பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு அரசு பயன்படுத்த தடை விதித்துள்ளது .அரசின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக இந்த இயந்திரங்களை பயன் படுத்த படுகிறது .

                      .உலகளாவிய மக்கள் மத்தியில் பங்கு சந்தையில் அதிக விலை உயர்வை கொண்ட ஒருடியிட்டல் கரன்சியாக விளங்கி வருபது பிட்கொயின் ஆகும் .இதில் அதிக மக்கள் முதலீடு செய்து வருகின்றனர் ,

                      இதில் அழுத்தி பதிந்து பணத்தை அள்ளுங்க -TRY A FREE DEMO என்பதை அழுத்திய பின்னர்

                      ஆனால் பிரிட்டனில் நிதி கையாடல்களை கையாளும் fca , Financial Conduct Authority என்ற லைசன்ஸ் வழங்கும் நிறுவனத்தின் அனுமதி இன்றி திருட்டு தனமாக பிட்கொயின் காசு இயந்திரங்கள் இயங்கி வருகிறது .

                      பிரிட்டனில் பொருத்த பட்டுள்ள பிட்கொயின் காசு இயந்திரங்கள் அனைத்தும் உடனடியாக அகற்ற வேண்டும் ,அல்லது அவர்கள் மீது கடும் நாடவடிக்கை எடுக்க படும் என குறித்த அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது .

                      மேலும் இந்த நாணயத்துடன் தொடர்பு பட்ட சுமார் 110 கிரிப்ட்டோ கரன்சிகளும் சட்டவிரோதமாக இயங்க படுகின்ற என அவை மேலும் சுட்டி காட்டியுள்ளன .


                      இந்த நிறுவனத்தில் பிட்கொயின் பதிவு செய்ய பட்டால் ,குறித்த நிறுவனம் மோசடி புரிந்து தப்பி சென்றாலும் அதில் முதலீடு செய்திட்ட மக்களுக்கு இந்த அதிகார சபை பணத்தினை வழங்கும் .

                      பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு

                      ஆனால் பதிவு செய்திடாது திருட்டு தனமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் மீதே இப்படி திடீர் அதிரடி நடவடிக்கையினை குறித்த அதிகார சபை மேற்கொண்டுள்ளது.

                      மேலும் பிரிட்டன் மக்கள் பிட்கொயின் பங்காரு சந்தையில் இதில் முதலீடு செய்து தங்கள் பணத்தினை இழக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

                      பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு

                      இதே பங்கு சந்தையில் பிட்கொயின் டிரேடிங் செய்யாது ஒருவரை இணைத்து அதன் கீழே ஒருவரை இணைக்கும் ஆள்பிடிக்கும் பிட் கொயின் போலி வியாபாரம் நடக்கிறது

                      மக்களே இந்த அதிகார சபையில் பதியப்படாத எதிலும் பிரிட்டனில் இருந்து இணைந்து கொள்ளாதீர்கள் .

                      அது உங்களுக்கு ஆபத்தை ,பெரும் தொகை பணத்தை இலாபமாக பெற்று கொண்டு அதன் பின்னர் அதில் இருந்து பந்தை மீள் பெறும் பொழுது உஙக்ளுக்கு சிக்கல் ஏற்படும் .

                      எனவே இதில் கவனமாக செயல்பட்டு உங்களை தற்காத்து கொள்ளுங்கள் .

                      தமிழர்களேயாக்கிரத்தை ,போலிளை நம்பி மோசம் போகாதீர்கள்

                        Posted in Uncategorized

                        உக்கிரேன் தலை நகர் மீது பெரும் தாக்குதலை நடத்திட குவிக்க படும் ரசியா இராணுவம்

                        உக்கிரேன் தலை நகர் மீது பெரும் தாக்குதலை நடத்திட குவிக்க படும் ரசியா இராணுவம்

                        ரசிய நாட்டின் இராணுவம் உக்கிரேன் தலைநகரை அதிரடி தாக்குதல் மூலம் மீட்டிட

                        தற்பொழுது அதி நவீன ஆயுதங்களுடன் கீவ் நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை நோக்கி குவிக்க பட்டு வருகிறது

                        ஏவுகணைகள் ,மற்றும் இரசாயன ஆயுதங்கள் என கணிக்க படும் வண்டிகளும் அங்கு குவிக்க பட்டுள்ளது

                        சில நாட்களுக்குள் உக்கிரேன் தலைநகர் ரசிய படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது

                        உக்கிரேன் தலைநகர் வீழ்ச்சியடைந்தால் உக்கிரேன் முழுவதும் ரசிய இராணுவத்தின்

                        வசமாவதுடன் உக்கிரேன் இராணுவம் சரண் அடையும் நிலைக்கு தள்ள படும் என எதிர் பார்க்கலாம்

                        அவ்வாறான நகர்வை மையப்படுத்தியே ரசியா படைகள் மிக பெரும் அழித்தொழிப்பு தாக்குதலுக்கு தயாராகிய வண்ணம் உள்ளன

                        • வன்னி மைந்தன் –
                          Posted in Uncategorized

                          ரஷியா சாராயங்களுக்கு அமெரிக்காவிலும் தடை – வோட்கா போச்சே

                          ரஷியா சாராயங்களுக்கு அமெரிக்காவிலும் தடை – வோட்கா போச்சே

                          உக்கிரேன் மீது ரசியா தொடர்ந்து வரும் தாக்குதலை அடுத்து அந்த நாட்டின் மீதான

                          சர்வதேச அளவில் பொருளாதார தடைகள் விதிக்க பட்டு வருவதுடன் ,அந்த நாட்டின்

                          தயாரிப்புகள் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திட தடை விதிக்க பட்டுள்ளது

                          கனடாவை அடுத்து தற்பொழுது அமெரிக்காவும் ரசியாவின் அதி பிரபலமான வோட்கா,மற்றும் டைமனுக்கும் தடை விதித்துள்ளது குறிப்பிட தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            தமிழருக்கான நீதி கிடைப்பதற்கு சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                            தமிழருக்கான நீதி கிடைப்பதற்கு சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                            மியான்மர், ஈரான் நாடுகள் போல் இன-மத அடிப்படைவாதிகளின் பிடியில் சிறிலங்கா அரசு, அதன் அரச கட்டமைப்புகள், அரச குழுமம் ஆகியன சிக்கியிருப்பதாலேயே தமிழருக்கான நீதிக்கும், பொறுப்புக்கூறலுக்கும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                            தமிழருக்கான நீதிகிடைப்பதற்கும், தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த அரசின் கொடுங்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கும் பல்முனைப்பட்ட காத்திரமான அணுகுமுறையொன்றினை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

                            சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் பாஷேலே அம்மையாரின் அறிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது

                            ‘இராணுவ மயமாக்கல் மற்றும் இன-மதவாதத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள் சனநாயக அமைப்புக்களை சிதைக்கின்றன’ என்ற ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையளரின் கூற்றினை சுட்டிக்காட்டியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ‘தண்டனைப் பயமின்மையானது சிறிலங்காவின் கலாச்சாரத்தில் ஊறிப்போன ஒன்று என்பதோடு அதனது அரசியலில் சிங்கள பௌத்தமத இனவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளது’ என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களது அவதானிப்பினையும் இவ்விடயத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. ‘கொடுங்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு தடையென்பது அரசியல் திடமின்மை அல்லது செயல் திறனின்மையோ காரணமல்ல என்பதற்கு அப்பால், சிங்கள பௌத்த மத அடிப்படைவாதமே காரணமென்பது தெளிவாகின்றது என இடித்துரைத்துள்ளது.

                            இவ்வகையிலேயே சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கையின் முன்வைத்ததுபோல், பன்னாட்டு சமூகம் சர்வதேச நீதிக்கான நோக்கினை கொள்ளவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

                            மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

                            ஆணையாளர் தனது அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக அதனை உபயோகிப்பதற்கு ஒரு தற்காலிக தடையும் அதன் மீதான அடிப்படை மாற்றங்கள் செய்யப்படவேண்டும் எனவும் கேட்டுள்ளார். (மார்ச் 7ம்-2022) மனித உரிமைகள் கண்காணிப்பகம், (மார்ச் 4-2022) சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியனவற்றின் வாய்மொழி அறிக்கையிலும், பயங்கரவாத தடைச் சட்டமானது சித்திரவதைகளை ஏதுவாக்கும் வகையில் திரும்ப திரும்ப உபயோகிக்கப்பட்டு வருவதாகவும், அது காணாமல் ஆக்கப்படுவோரை அதிகப்படுத்தும் அபாயத்திற்கு இட்டுச்செல்வதாக கூறியுள்ளது. ‘பயங்கரவாத தடைச் சட்டம் தமிழரையே அதிகமாக பாதிப்பதாக’ மனித உரிமைகள், மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் கூறியுள்ளார்.

                            1979இல் பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு சட்டமாக நிலைக்கொண்தில் இருந்து பல மனித உரிமைகள் அமைப்புக்களினாலும் அதனை இரத்துச் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான அதனுடைய இருப்பு, சிறிலங்கா அரசால் உத்தேசிக்கப்பட்டவாறான திருத்தங்களோடு கூட, சிறிலங்காவின் அரசியல்-இராணுவ கட்டமைப்புக்கள் மீதான சிங்கள பௌத்தமத அடிப்படைவாதத்தின் கிடுக்கிப் பிடியினை நிலைப்படுத்தவே செய்யும்.

                            தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியதற்கு காரணமே தமிழர்கள் மீதான இனவழிப்பும், சிங்கள- தமிழ் அரசியல் தலைமைகள் இன முரண்பாடுகளுக்கான தீர்வினை எட்டுமுகமாக எடுக்கப்பட்ட ஒப்பந்தங்களை சிங்கள தலைவர்கள்

                            தொடர்ச்சியாக மீறியதும் தான் என இரா.சம்பந்தன தனது அறிக்கையில்கூறியுள்ளார். சிங்கள பௌத்த இனவாதமே அதன் வேராக இருப்பதே காரணமாகும்.
                            வழமைபோலவே, ஐ.நா மனித உரிiமைச்சபை ஆணையாளரது அறிக்கைக்கு

                            சிறிலங்கா பௌத்த இனவாத அரசு பதிலளிக்கையில், சர்வதேச அமைப்புகளை, குறிப்பாக மனித உரிமைச்சபை, தமது ‘நாட்டு இறையாண்மை’ என்ற கோட்பாட்டின் பின்னின்று தாக்கியும் பயமுறுத்தியும் உள்ளது என தெரிவித்துள்ளது. இது

                            சிறிலங்காவின் சந்தர்ப்பவாதப் போக்கையே காட்டுகிறது, அதாவது, பொருளாதார மேம்பாட்டிற்கு நிதியுதவி, பேரிடர்காலத்தில் தனது மக்களுக்கு தடுப்பூசி போடுதல் என தனக்கு தேவை என வரும்போது, சர்வதேச அமைப்புக்களிடம் செல்வதும், ஆனால் தான்

                            இழைத்த கொடுங்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் என வரும்போது நாட்டின் இறையாண்மை என்ற கேடயத்தினை பாவிப்பதுமாக இருக்கின்றது.

                            சர்வதேச குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடும் போது, சிறிலங்கா அரசு இறையாண்மை என்ற அடிப்படையிலான தற்காப்பை இழக்கிறது.

                            நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இங்கே குறிப்பிட விரும்புவது என்னவெனில், சிறிலங்காவின் 1972 இல் உருவாக்கப்பட்ட அதன முதலாவது குடியரசுக்கான அரசியலமைப்பு, அல்லது 1978இல் உருவாக்கப்பட்ட அதன் இரண்டாவது அரசியல்

                            அமைப்பிலோ தமிழர்கள் எவ்வகையிலும் பங்குபற்றவோ அல்லது அதனை ஆதரிக்கவோ இல்லை. அவை தமிழர்களின் பெரும் ஆட்சேபணைகளுக்கிடையே

                            தமிழர்கள் மீது சுமத்தப்பட்டவையாகும். ஆகவே, சிறிலங்கா அரசின் இந்த ‘நாட்டின் இறையாண்மை’ என்ற கோட்பாட்டின் பின்னே தமது கொடூர குற்றங்களை மறைக்கப்பார்ப்பது என்பது ஒரு தார்மீக கபடநாடகம் ஆகும்.

                            தற்போது சிறிலங்கா அரசானது, இலங்கைத்தீவின் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பகுதிகளான வடக்கு கிழக்கில், தமிழ் பேசும் மக்களை ‘சிறுபான்மையினராக’ ஆக்கும் விதத்தில் குடிப்பரம்பலை மாற்றி அமைக்கும் காரியங்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

                            அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தளமாக கொண்டுள்ள ஓக்லண்ட் அமைப்பு 2021 மார்சில் வெளியிட்ட ‘முடிவற்ற யுத்தம்’ என்ற தமது ஆய்வுக்கட்டுரையில் ‘தமிழர் பெரும்பான்மையாக செறிந்து வாழும் பிரதேசங்களில் வலிந்து மேற்கொள்ளப்படும்

                            சிங்கள குடியேற்றங்கள், இராணுவ வெற்றிச்சின்னங்கள், அகழ்வாராய்வு ஒதுக்கிடங்கள், வனவிலங்கு காப்பகங்கள், வன ஒதுக்கிடங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார பிரதேசங்கள் அமைக்கப்படுகின்றன. இவை யாவுமே, தமிழர்களது

                            பிரதிநிதிகளிடம் சம்மதமோ அல்லது எந்த விதமான ஆலோசனைகளும் தமிழர் தரப்பிடம் பெறப்படாமலே, தமிழர்களது நிலங்களை அபகரிக்கும விதமாகவும், அவர்களது அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் விதமாகவும், மற்றும் அவர்களது

                            அடையாளத்தினையே துடைத்து அழிக்கும் வகையிலும் தெளிவான ஒரு நோக்கில் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் சிங்கள மக்களது விகிதாசாரத்தினை அதிகரிக்கும் விதமாக சிங்கள கிராமங்களை தமிழ்

                            மாவட்டங்களோடு இணைக்கும் வகையில் எல்லைகளை மறுசீரமைக்கிறார்கள். இது சிறிலங்காவின் அதிகமாக சிங்களவரைக் கொண்ட இராணுவம் தமிழர் பிரதேசங்களில்

                            நிலைகொண்டுள்ளமையால் சாத்தியப்படுகிறது. இந்த தமிழர் தாயகத்தின் நிலம் அபகரித்தலால் தமிழ் மக்களது தனித்துவமான அடையாளம் அற்றுப் போய்விடும்.

                            தமிழரின் அரசியல் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்புக்கான கோரிக்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கு ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளால் அனுப்ப்பட்ட கடிதத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவனத்தில் கொள்கின்றது. ஆயினும், நாட்டில் நிலவும்

                            சரித்திர பூர்வமான சிங்கள பௌத்தமத அடிப்படைவாதம், அத்துடன் சிங்கள தலைவர்கள் அவர்கள் இழைக்கும் கொடூர குற்றங்களுக்கு தண்டனைப் பயமின்மை மற்றும் தமிழர்களை பரவலாக துன்புறுத்துதல், தமிழரது அடையாளங்களை அழித்தல்

                            என்பவற்றை மனதில் கொண்டு, தமிழர்தாம் இங்கே பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் அவர்களது அரசியல் எதிகாலத்தை தீர்மானிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

                            ஆகையினால், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் பாஷேலே அம்மையாரின் அறிக்கைக்கு சர்வதேச சமூகம் கவனம் கொடுத்து சிறிலங்கா அரசு பொறுப்புக்கூறும் வண்ணம் ஒரு மாறுபாடான ஏற்பாட்டை எடுப்பதன் பேரில் இலங்கைத்தீவில்

                            தமிழருக்கான அரசியல் தீர்வு, நீதி, மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை சாத்தியமாக்க பல்முனைப்பட்ட காத்திரமான அணுகுமுறையொன்றினை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும்என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              கிழக்கு மாகாண ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான தரவுக்கட்டமைப்பு அங்குரார்ப்பனம்!

                              கிழக்கு மாகாண ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான தரவுக்கட்டமைப்பு அங்குரார்ப்பனம்!

                              பைஷல் இஸ்மாயில் –

                              மாகாண வரலாற்றில் ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான விபரங்களடங்கிய தரவுத்தள கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட முதலாவது மாகாணமாக கிழக்கு மாகாணம் வரலாற்றில் பதிவாகியதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் தெரிவித்தார்.

                              கிழக்கு மாகாண கல்வியமைச்சு ஏற்பாடு செய்த ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான தரவுக்கட்டமைப்பை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு திருகோணமலை கிழக்கு மாகாண கல்வியமைச்சில் (10) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                              அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களின் விபரங்கள், கடமையாற்றும் பாடசாலை, ஆசிரியர் வெற்றிடங்கள், மாணவர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் உட்பட பல விடயங்களை உடன் அறியக்கூடியதாக இது அமையும். அத்துடன் உரிய விபரங்களை மையமாக வைத்து ஆக்கபூர்வமான தீர்மானங்களை கல்விசார் விடயங்களில் எட்டுவதற்கு இத்தரவுத்தளம் ஏதுவாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

                              நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பி வணிகசிங்க, ஆளுநரின் செயலாளர் எல். பி.மதநாயக்க, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச். ஈ. எம்.டபிள்யு. ஜி.திஸாநாயக்க, மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி அதிகாரிகள் வலயக்கல்விப் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

                              Posted in Uncategorized

                              ரஷியா மீதான தடையால் உலகளவில் உணவு பொருட்கள் விலை உயரும்

                              ரஷியா மீதான தடையால் உலகளவில் உணவு பொருட்கள் விலை உயரும்

                              ரஷிய அதிபர் புதின் தனது நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

                              ரஷியா மீதான தடையால் உலகளவில் உணவு பொருட்கள் விலை உயரும்- புதின் எச்சரிக்கை
                              விளாடிமிர் புதின்


                              ரஷியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா

                              அதிரடியாக தடைவிதித்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களும் ரஷியாவில் தங்களது சேவைகளை நிறுத்தி உள்ளது.

                              இந்தநிலையில் ரஷிய அதிபர் புதின் தனது நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

                              ரஷியா உலகின் முக்கிய உர உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது உலகளாவிய வினியோக சங்கிலிக்கு மிகவும் அவசியம். ரஷியாவுக்கு எதிரான மேற்கத்திய

                              பொருளாதார தடைகள் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்திவிடும். இதனால் உலகளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்.

                              இவ்வாறு அவர் கூறினார்

                                Posted in உலக செய்திகள்

                                ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- லிதுவேனியா

                                ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- லிதுவேனியா

                                உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் அந்நாட்டின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

                                ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- லிதுவேனியா அதிபர் வலியுறுத்தல்
                                லிதுவேனியா அதிபர்


                                ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மாதம் விண்ணப்பித்தார். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதையும் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவில்லை. இதற்கிடையே

                                ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டம் நடந்தது. 27 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

                                இது தொடர்பாக லிதுவேனியா அதிபர் கிடானாஸ் நவுஸ்தா டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, “5 மணி நேர விவாதங்களுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்

                                உக்ரைனின் ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு சம்மதம் என்று தெரிவித்தனர். அதற்கான செயல்முறை தொடங்கியது. அதை விரைவாக நிறைவேற்றுவது நமக்கும், உக்ரைனுக்கும் முக்கியமானது. வீர உக்ரைனிய நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் வரவேற்கப்படுவதற்கு தகுதி உடையது” என்றார்.

                                உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் அந்நாட்டின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. சிறு நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.

                                இந்த நிலையில் ரஷியா மேலும் ஒரு நகரை கைப்பற்றி உள்ளது. வோல்னோவாகா நகரை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த நகர் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

                                ரஷியா சில நாட்களுக்கு முன்பு முதல் முதலாக தற்காலிக போர் நிறுத்தத்தை 2 நகரங்களில் அறிவித்தது. அதில் வோல்னோவாகா நகரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

                                Posted in Uncategorized

                                ரஷிய ராணுவத்துக்கு எதிரான கருத்துகளுக்கு பேஸ்-புக் அனுமதி

                                ரஷிய ராணுவத்துக்கு எதிரான கருத்துகளுக்கு பேஸ்-புக் அனுமதி

                                ரஷிய படை வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகளில் தற்காலிக அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக பேஸ்-புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

                                ரஷிய ராணுவத்துக்கு எதிரான கருத்துகளுக்கு பேஸ்-புக் அனுமதி
                                பேஸ் புக்

                                ரஷிய ராணுவத்துக்கு எதிரான கருத்துகளுக்கு பேஸ்-புக் அனுமதி


                                உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

                                இந்தநிலையில் ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்-புக் தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது.

                                இதுகுறித்து பேஸ்-புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரஷிய படை வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகளில்

                                தற்காலிக அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் குடிமக்களுக்கு எதிரான நம்பகத்தன்மை வாய்ந்த அச்சுறுத்தல்களுக்கு அனுமதி இல்லை’’ என்று தெரிவித்துள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  சினிமா நடிகை கத்தி முனையில் கற்பழிப்பு

                                  சினிமா நடிகை கத்தி முனையில் கற்பழிப்பு

                                  சினிமா துறையில் துணை நடிகையாக நடித்து வருபவரை கத்தி முனையில் கற்பழித்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

                                  சினிமா நடிகை கத்தி முனையில் கற்பழிப்பு.. இருவர் கைது
                                  சினிமா நடிகை கற்பழிப்பு


                                  சென்னை வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் பகுதியில் சினிமா துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் துணை நடிகை வீட்டில் இருந்தபோது கதவு

                                  தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனடியாக துணை நடிகை வெளியில் சென்று பார்த்த போது அங்கு 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்பதற்குள் இருவரும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தனர்.

                                  பின்னர் இருவரும் துணை நடிகை வீட்டில் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். இதன் பிறகு அவர் அணிந்திருந்த 4½ பவுன் நகையையும்

                                  பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அப்போது அவர்கள் துணை நடிகையை ஆபாசமாக செல்போனில் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

                                  இதனால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

                                  அதில், அடையாளம் தெரியாத இருவர் என்னை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததுடன், பணம், நகையையும் கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று

                                  குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
                                  உதவி கமி‌ஷனர் கலியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம்குருஸ், சப்-இன்ஸ் பெக்டர் மகாராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக விசாரித்தனர்.

                                  அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

                                  இதில் துணை நடிகையின் வீட்டுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் 2 பேர் செல்வது தெரியவந்தது. வீட்டு அருகில் கேமராக்கள் இல்லாத நிலையில் சற்று தூரத்தில் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இருவரின் உருவமும் பதிவாகி இருந்தது.

                                  ராமாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் முதலில் அடையாளம் காணப்பட்டார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அயப்பாக்கம்

                                  பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரும் கண்ணதாசனும் சேர்ந்து துணை நடிகையின் வீட்டுக்கு சென்று கத்தி முனையில் கொள்ளையடித்தது கண்டு பிடிக்கப்பட்டது.

                                  இருவரிடமும் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பமாக துணை நடிகை கத்தி முனையில் மிரட்டி கற்பழிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


                                  துணை நடிகை தனியாக இருப்பதை அறிந்து கொண்ட கண்ணதாசனும், செல்வக்குமாரும் அவரது வீட்டுக்குச் சென்று கொள்ளையடிக்க

                                  திட்டமிட்டிருக்கின்றனர். இதன்படி நேற்று இரவு இருவரும் துணை நடிகையின் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்ததுடன் கத்தி முனையில்

                                  மிரட்டி கற்பழிப்பிலும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

                                  கைதான செல்வக்குமார் சென்னை அயப்பாக்கம் பகுதியில் தங்கியிருந்து பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆகும். கைதான இன்னொரு வாலிபரான கண்ணதாசன்

                                  மீன் வியாபாரம் செய்து வருகிறார். இருவர் மீதும் 376 ஐ.பி.சி. மற்றும் 397 ஐ.பி.சி. ஆகிய 2 சட்டப்பிரிவுகள் போடப்பட்டு உள்ளன. இதில் 376 சட்டப்பிரிவு கத்திமுனையில் மிரட்டி வழிப்பறி மற்றும் கற்பழிப்பு குற்றத்துக்காக போடப்பட்டு உள்ளது. 397 என்பதும் வழிப்பறிக்காக போடப்படும் வழக்காகும்.

                                  இருவரும் துணை நடிகையிடம் இருந்து பறித்துச் சென்ற நகை, பணத்தை போலீசார் மீட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடியிருப்புகள் மிகுந்த வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் பகுதியில் வீடு புகுந்து துணை நடிகை கத்தி

                                  முனையில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

                                    Posted in உலக செய்திகள்

                                    ஈரானின் எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா

                                    ஈரானின் எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா

                                    உக்ரைனுடன் ரஷியா போரிட்டு வருவதால், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

                                    ஈரானின் எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா
                                    ஈரானின் எண்ணை கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா
                                    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                                    ஈரான் நாடு எண்ணெய் வளம் மிக்க நாடு. ஈரானில் இருந்து மற்ற நாடுகளுக்கு எண்ணெய் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் இறக்குமதி செய்து கொள்வதற்கு அமெரிக்கா ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது.

                                    ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தை அமெரிக்க முறித்து கொண்டது. இதனால் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியாவது தடைபட்டது. எண்ணெய்

                                    வியாபாரம் தான் முக்கிய பொருளாதாராம் என்பதால் அதனை மீட்டெடுக்க ஈரான் முயன்று வருகிறது.

                                    இந்த நிலையில் ஈரான் நாட்டில் இருந்த வந்த 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க கைப்பற்றியுள்ளது. தற்போது உக்ரைனுடன் ரஷியா போரிட்டு வருவதால், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

                                    இதனால் கச்சா எண்ணெய் அமெரிக்காவில் குறைந்துள்ளது. இந்த சமயத்தில் இந்த எண்ணெய் கப்பல் பிடிபட்டுள்ளது. இதனை ஈடுசெய்வதற்கு ஈரானுடனான தடைகளில் சிலவற்றை தளர்த்த அமெரிக்கா முயன்று வருவதாக கூறப்படுகிறது