Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

லண்டன் Belmont Road பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று முடக்கு திரும்புகையில் சாரதியின் கட்டு பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது .

இந்த கார் தலைக்கீழாக கவிழ்ந்த பொழுதும் சாரதி காயங்களுடன் தப்பிக்கொண்டார் .

தற்போது கார் சாரதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற பொழுதும் ,உயிர் ஆபத்து ஏதும் இல்லை என தெரிவிக்க படுகிறது .

லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கார் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது.

    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

    உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

    உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா


    உக்கிரேன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல்களை தொடுத்து வருகிறது .

    இவ்வேளை உக்கிரேனை தாம் ,பாதுகாப்பதற்கு ,அதன் சுதந்திர தின நாளில் ,மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

    உக்கிரேன் மீது ரஷ்ய கடும் போரினை தொடுத்து வரும் நிலையில் ,ரஸ்யாவுக்கு எதிராக பல முக்கிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா ,கனடா ,பிரிட்டன் என்பன வழங்கி வருகின்றன .

    உக்கிரேன் ரஷ்ய மோதல்களினால் ,அமெரிக்கா பிரித்தானியா போன்றவை ,அதிக ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளிக் கொள்கின்றன.

    அவரச ஆயுத உதவி வழங்குதல் என்ற போர்வையில் ,தமது ஆயுத வியாபாரத்தை கச்சிதமாக நடத்தி வருகின்றனர்.

    தற்போது ரஷ்ய உக்கிரேன் மோதல் தொடர்ந்து , செல்வதையே அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன என்பதை ,மேற்படி ஆயுத விற்பனை எடுத்து காட்டுகிறது .

      Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

      கனடா 63 ரஷ்ய முக்கிய நபர்கள் மீது தடை விதிப்பு

      கனடா 63 ரஷ்ய முக்கிய நபர்கள் மீது தடை விதிப்பு

      கனடா அரசு அதிரடியா 63 ரஷ்ய முக்கிய நபர்களுக்கு தடை விதித்துள்ளது .

      இந்த தடை உத்தரவு ரஷ்ய செல்வந்தர்கள் ,அரசியல்வாதிகள், இராணுவ மற்றும் பாதுகாப்பு ,தரப்பை சேர்ந்தவர்கள் உள்ளடக்க படுகின்றனர் .

      உக்கிரேன் மீதான ,தொடர் இராணுவ ஆக்கிரமிப்பு ,தாக்குதலை அடுத்து ,ரஷ்ய மீதான தடைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

      அமெரிக்கா நேச கூட்டு நாடுகளின் தொடர் ,இவ்விதமான அறிவிப்பால் , ரஸ்யாவின் பொருளாதாரம் மற்றும் ,அதன் செயல்படும் திறன் முடக்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .

      கனடா 63 ரஷ்ய முக்கிய நபர்கள் மீது தடை விதிப்பு

      மத்திய கிழக்கு நாடுகள் மீது ,அமெரிக்கா மற்றும் ,அதன் நேச நாடுகள் தொடர்ந்து வரும், பயங்கரவாதம் ,என்ற போரின் போது ,அதன் நேச நாடுகளுக்கு இவ்விதமான தடைகள் எதுவும் விதிக்க படவில்லை .

      இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் , ரஷ்யா உக்கிரேன் மீதான போரை தொடுத்துள்ளது .


      அதற்கு இவ்விதாமன் அதிரடி தடைகளை கனடா ,அமெரிக்கா அணிசேர் நாடுகள் விதித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

        Posted in இலங்கை செய்திகள்

        கோட்டபாயவுக்கு பல மில்லியன் மக்கள் பணம் செலவு நெருக்கடியில் இலங்கை

        கோட்டபாயவுக்கு பல மில்லியன் மக்கள் பணம் செலவு நெருக்கடியில் இலங்கை

        இலங்கையில் மக்களினால் துரத்தியடிக்க பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவுக்கு , பல மில்லியன் மக்கள் பணம் செலவு செய்திட பட்டுள்ளது .

        இலங்கை வரவுள்ள கோட்டாவுக்கு ,மேலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு மற்றும் விசேட உலங்குவானூர்தி என்பன கோர பட்டுள்ளன .

        தேவை ஏற்படும் பொழுது அவர் உலங்குவானூர்தி மூலம் ,தப்பி செல்ல இந்த விசேட ஏற்பாடுகள் கோரப்பட்டுள்ளன .

        நாடு எதிர் நோக்கியுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியில் ,கோட்டபாயவுக்கு ,இதுவரை நூறு மில்லியன் டொலர்கள் வரை, செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

        இலங்கை வரும் கோட்டாவுக்கு ,மேலும் மக்கள் எதிர்ப்பு வலுக்கும் எனவும் ,ராஜபக்ச குடும்பங்கள் மீளவும், இலங்கையில்
        மக்களினால் ஒட்டுமொத்தமாக துரத்தியடிக்க ,படும் நெருக்கடி ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

          சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்
          Posted in இலங்கை செய்திகள்

          சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

          சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

          இலங்கை காலி பகுதியில் உள்ள சிறுவர் ,மையத்தில் தங்கி இருந்த மூன்று சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .

          இவ்வாறு தப்பி ஓடியவர்களில் பத்து மற்றும், எட்டு வயதுடைய சிறுமிகள் மற்றும் 12 வயதுடைய சிறுவன் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.

          இவ்வாறு தப்பி ஓடிய மூன்று சிறுவர்களையும் ,தேடி கண்டு பிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

          இலங்கைக்கு 367 பொருட்கள் இறக்குமதி செய்திட தடை
          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கைக்கு 367 பொருட்கள் இறக்குமதி செய்திட தடை

          இலங்கைக்கு 367 பொருட்கள் இறக்குமதி செய்திட தடை

          இலங்கையில் இன்று முதல் 367 பொருட்கள் இறக்குமதி செய்திட அரசு தடை விதித்துள்ளது .

          விசேட வர்த்தமானி மூலம் இந்த அதிரடி உத்தறவு பிறப்பிக்க பட்டுள்ளது .

          இவ்வாறு தடை விதிக்க பட்டுள்ளவற்றில் சொக்கலைட் ,மற்றும் வாசனை திரவியங்கள் ,ஆடம்பர பொருட்கள் என்பன அடக்கப் பட்டுள்ளது .

          இந்த பொருட்கள் யாவும் வெளிநாடுகளில் இருந்து ,இலங்கைக்கு இறக்குமதி செய்ய படுகின்றன .

          அதனால் ,இதற்கு முக்கியத்துவம் இல்லை என கருதி ,இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

          மேற்படி பொருட்களை மைய படுத்தி இறக்குமதியில் ஈடுபட்ட ,மிக பெரும் கம்பெனிகள் ,பெரும் இழப்பை சந்திக்க கூடும் எனவும் ,எதிர் வரும் நாட்களில்
          இலங்கையில் ,இவ்வாறான பொருட்கள் , அதிக விலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

            தமுகூ தலைவர் மனோ கணேசன் குழுவினர் - அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு
            Posted in இலங்கை செய்திகள்

            தமுகூ தலைவர் மனோ கணேசன் குழுவினர் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு

            தமுகூ தலைவர் மனோ கணேசன் குழுவினர் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு

            தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தூதக அதிகாரிகளுக்கும் அவசர சந்திப்பு சற்றுமுன் இடம்பெற்றது. கூட்டணி சார்பில்

            தலைவர் மனோ கணேசனுடன், அரசியல் குழு உறுப்பினர் எம். உதயகுமார் எம்பி, பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இடம் பெற்றனர். அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.


            “பயனுள்ள இந்த சந்திப்பில் இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாத தடை சட்டம்,


            தமிழர் தேசிய பிரச்சினைகள், தேசிய அரசாங்கம்,தேசிய பொருளாதார நெருக்கடி, புலம் பெயர்ந்த தமிழர்


            விவகாரம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யும் பெருந்தோட்ட மக்கள் பிரச்சினைகள்


            ஆகியவை தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டன” என மனோ கணேசன் எம்பியின் டுவீட்டர் தளத்தில் கூறப்பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              மாணவனின் சப்பாத்துக்கள் பாம்பு

              மாணவனின் சப்பாத்துக்கள் பாம்பு

              கொழும்பில் உயர் தரம் கற்கும் மாணவன் ,ஒருவரது சப்பாத்துக்குள் பாம்பு ,குட்டி ஒன்று இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

              கொழும்பில் உள்ள தனது பாடசாலைக்கு வந்து ,அந்த சப்பாத்தை கழற்றி பார்த்த பொழுது ,அதற்குள் பாம்பு குட்டி ஒன்று உள்ளது கண்டு பிடிக்க்க பட்டுள்ளது.

              எனினும் மாணவனுக்கு பாம்பின், விஷ பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது.

              மாணவர்கள் மற்றும் மக்கள் சப்பாத்தை அணிவதற்கு ,முன்னர் அதனை சோதனை செய்த பின்னர் ,அணிந்து செல்லும் அப்டி அறிவிக்க பட்டுள்ளது.

                சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்
                Posted in உலக செய்திகள்

                சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்

                சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்

                சிரியா நாட்டில் ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா இராணுவம் , அங்கிருந்து 137 டாங்கிகளில் எரிபொருளை திருடி சென்றுள்ளது .

                பயங்கரவாதம் என்ற போர்வையில் இராணுவத்தை ஏவியுள்ள , அமெரிக்கா மற்றும் ,அதன் நேச நாடுகள் ,இவ்விதம் எரிபொருள் திருட்டில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது.

                இந்த வாரம் மட்டும் 137 டாங்கிகளில் எரிபொருள், திருடிசென்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

                அமெரிக்கா இராணுவத்தின் , இந்த எரிபொருள் திருட்டில் ,மூலம் பல மில்லியன் டொலர்களை ஆண்டுக்கு வருமானமாக பெற்று வருகின்றனர் .

                உலக மகா கொள்ளையில் அமெரிக்கா,இராணுவம் ஈடுபட்டுள்ளது ,இதன் மூலம் அமபலமாகியுளளது.

                  துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்
                  Posted in உலக செய்திகள்

                  துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்

                  துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்

                  துருக்கி இராணுவம் ஈராக் பகுதியில் உள்ள குருதீஸ் போராளிகள் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .

                  துருக்கிய இராணுவம் நடத்தி வரும், இந்த தாக்குதல்களில் சிக்கி பலத்த சேதங்களை குருதீஸ் பகுதி உள்ளாகியுள்ளது .

                  துருக்கி இராணுவத்தின் தாக்குதல்களில் மக்கள் வாழ்விடங்கள் சேதமாக்க பட்டுள்ளன.

                  தொடரும் துருக்கி இராணுவத்தின் தாக்குதல்களினால் ,குருதீஸ் மக்கள் அகதிகளாக இடம்பெயந்தரந்த வண்ணம் உள்ளனர்.

                    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை
                    Posted in உலக செய்திகள்

                    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை

                    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை

                    அமெரிக்காவின் இருவேறு பகுதிகள் நடத்த பாட் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .

                    அமெரிக்காவில் நாள் தோறும் அதிகரித்து , செல்லும் துப்பக்கி சூட்டு சமப்வத்தினால், மக்கள் பெரிதுக்கும் பீதியில் உறைந்துள்ளனர்,

                    இந்த வருடம் மட்டும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் சிக்கி, 180 பேர் பலியாகியுள்ளனர்.

                    துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்லும் நிலையில், அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை நிறுத்திடும், புதிய நகர்வு ஆரம்பிக்க படவுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையிடம் பிரித்தானியா முக்கிய வேண்டுதல்

                      இலங்கையிடம் பிரித்தானியா முக்கிய வேண்டுதல்

                      பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

                      பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது எனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

                      இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான உறுதிமொழிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.

                        ஆட்டோ தொழில்சாலைக்கு திடீரென பயணித்த போக்குவரத்து அமைச்சர்
                        Posted in இலங்கை செய்திகள்

                        தமிழர்களை அடக்கிட புதிய சட்டம்

                        தமிழர்களை அடக்கிட புதிய சட்டம்

                        எதிர்வரும் காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்படவுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

                        இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                        பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் அச்சட்டம்
                        நிறைவேற்றப்பட்டதும் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்துச் செய்யப்படும் என்றார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        ரணில் வீட்டில் சாராய போத்தல் திருடியவர் கைது

                        ரணில் வீட்டில் சாராய போத்தல் திருடியவர் கைது

                        இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டில், சாராய போத்தல் திருடிய குற்ற சாட்டில் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .

                        ரணில் விக்கிரமசிங்க வீட்டை சுற்றிவளைத்து எரியூட்டிய பொழுது, அங்கிருந்த விலை உயர்வான மதுபான போத்தல்களை, திருடி சென்றனர்என்ற குற்ற சாட்டில் ,இந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்.

                        போராட்டக்காரர்களை தொடராக கைது செய்து மிரட்டும் நகர்வை, ரணில் விக்கிரமசிங்க அரசு முடுக்கி விட்டுள்ளது .

                        இவை கோட்டபாய மீள நாடு வரும் பொழுது இவ்வாறான போராட்டங்கள் ,மீள் எழுச்சி கொள்ளாது இருக்க ,ரணில் விக்கிரமசிங்க அதனை புரிந்து வருகிறார்.

                        ஆனால் ரணில் அரசுக்கு எதிராக விரைவில் மக்கள் போராட்டம் ,நாடு முழுவதும் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் மடக்கி பிடிப்பு

                          திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் மடக்கி பிடிப்பு

                          பண்டாரகம, நாமலுவ பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் பணத்தை திருட முற்பட்ட 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

                          குறித்த கடை உரிமையாளர் அவரைத் தடுக்க முயற்சி செய்த போது சிறுவன் கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி, கடையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

                          சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மறைந்திருந்த நிலையில் பொலிஸார், அவரை கைது செய்துள்ளனர் .

                          33 வயதான கடை உரிமையாளரின் வயிறு மற்றும் வலது கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான குறித்த சிறுவன் இதற்கு முன்னர் பல தடவைகள்
                          கடைக்கு வந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

                            பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

                            தரம் 10ல் கல்வி கற்கும் மூன்று பாடசாலை மாணவிகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் டிக்வெல்ல பாடசாலை சங்கீத பாட ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

                            சங்கீத வகுப்புக்கு சென்ற மூன்று சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதின் பெயரில் கிடைத்த முறைப்பாடுகளின் விசாரணைகளின்

                            அடிப்படையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                            பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

                            குறித்த சிறுமிகளின் பெற்றோர்கள் குழந்தை பராமரிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் விசாரணைகளை தொடங்கி

                            உள்ளத்துடன், இதனுடன் தொடர்புடைய 14 மற்றும் 15 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகளையும் மருத்துவப் பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ.வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

                            சந்தேக நபர் 38 வயதான நபர் எனவும், அவரை மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் பாண் விலை குறைக்க படும் எப்போது

                              இலங்கையில் பாண் விலை குறைக்க படும் எப்போது

                              பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

                              வெதுப்பக தொழிற்துறையை தற்போது கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் பாரிய

                              விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது என இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

                              அரசாங்கம் மற்றும் அதனுடைய நிறுவனங்கள் உதவி வழங்குமாயின் வெதுப்பக உற்பத்தி


                              பொருட்களின் விலையினை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

                                பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்
                                Posted in இலங்கை செய்திகள்

                                பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்

                                கொழும்பிலும், பெருந்தோட்டங்களிலும் பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக

                                மண்ணெண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் முகமாக, குறைவருமான மக்களுக்கு,
                                பணக்கொடுப்பனவுகளை நேரடியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமது தினசரி வாழ்வு
                                தேவைகளுக்காக மண்ணெண்ணெயை பயன்படுத்தும் பின்தங்கிய மக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.

                                பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்

                                எனினும் இந்த நிவாரணம், மண்ணெண்ணெயை தவறாது பயன்படுத்தும் மலைநாட்டு பெருந்தோட்டங்களில்
                                வாழும் பின்தங்கிய மக்களுக்கும், கொழும்பு மாநகரத்தில் வாழும் பின்தங்கிய குடியிருப்பு மக்களுக்கும் வழங்கப்படுவதை
                                கட்டாயமாக உறுதிப்படுத்தும்படி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன்,
                                மின்சக்தி மற்றும் வலுசக்தி கஞ்சன விஜேசேகரவிடம் வலியுறுத்தி தெரிவித்துள்ளார்

                                  இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  சீனா கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறியது

                                  சீனா கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறியது

                                  இலங்கை கம்பந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரம் இட்டிருந்த,சீனாவின் ஆய்வு கப்பல் இன்று அங்கிருந்து விலை செல்கிறது.

                                  இந்தியா ,அமெரிக்காவின் கடும் கண்டனத்திற்கு மத்தியில் ,இலங்கையில் தரித்து நின்ற சீனா ஆய்வு கப்பல் அங்கிருந்து விலகி சென்றுள்ளது .

                                  இந்த சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை , வருகை தொடர்பில் இலங்கை மீது இந்த கடும் சீற்றத்தில் உறைந்துள்ளது .

                                  சீனா இலங்கையில் தான் நினைத்ததை ,சாதித்துள்ளதை மேற்படி கப்பல் வருகை அம்பல படுத்தியுள்ளது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் இருவர் சுட்டு கொலை அதிகரிக்கும் ஆயுத கொலைகள்

                                    இலங்கையில் இருவர் சுட்டு கொலை அதிகரிக்கும் ஆயுத கொலைகள்

                                    இலங்கை அம்பலாங் கொடை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ,நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை,அடுத்து இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்.

                                    மேலும் இருவர் துப்பாக்கி சூட்டு , தாக்குதலில் காயமடைந்துள்ளனர் .

                                    இந்த உணவகத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கி சூட்டில், காயமடைந்த இருவர் மீட்க பட்டு மருத்துவமனையில் ,சிகிச்சை பெற்று வருகின்றனர் .

                                    இந்த தாக்குதலை நடத்தியவர்களை ,கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .