புயலில் சிக்கிய விமானம் தப்பிய பயணிகள்
புயலில் சிக்கிய விமானம் தப்பிய பயணிகள்
Madeira Airport. விமான தளத்தில் புயலில் சிக்கி பயணிகள் விமானம் ஒன்று தரை இறக்கும் பொழுது ,பெரும் விபத்தில் இருந்து தப்பியது .
பலத்த புயல் காற்று வீசிய வேளையில் தரை இறங்கிய Ryanair passenger jet விமானம் ,காற்றின் வேகத்தில் இழுத்து செல்ல பட்டு ,பின்னர் பெரும் விபத்தில் இருந்து தப்பித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது .
இவ்வேளை விமானத்தில் இருந்த பயணிகளின், கதறல் சத்தம் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது .
எனினும் விமானியின் சாதூரியத்தால் , பயணிகள் ஆபத்தின்றி தப்பித்து கொண்டனர் .
மேற்படி காணொளி காட்சியை, விமானி ஒருவர் பதிவு செய்துள்ளது வெளியாகியுள்ளது.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் மிரட்டும் சாணக்கியன்
விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் மிரட்டும் சாணக்கியன்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவிலேயே ஆட்சியிலிருந்து
வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று (04) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “xcl technologies lanka (pvt) ltd என்ற நிறுவனம் கடந்த 12 வருடங்களில் 5 ஆயிரத்து 325 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளனர். இது நாட்டிற்கு நல்லதொரு விடயம் தான்.
எனினும் வெளிமாவட்டங்களிலிருந்து குறிப்பாக மன்னார், யாழ்ப்பாணம் என வெளியிடங்களிலிருந்து வருகை தந்து இந்த நிறுவனங்களில் பணிபுரியும்
ஊழியர்கள் கொழும்பில் தங்களது அன்றாட வாழ்க்கையினை கொண்டு செல்வதில் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
ஏனெனில் குறித்த ஊழியர்களுக்கு குறைந்த அளவிலேயே சம்பளம் வழங்கப்படுகின்றது. எனினும் தங்குமிடம், உணவு என ஊழியர்கள் அதிகளவில் பணத்தினை செலவழிக்கின்றனர். இதனால் குறைந்தளவான பணமே அவர்களிடம் எஞ்சியுள்ளது.
விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் மிரட்டும் சாணக்கியன்
எனவே, கொழும்பிற்கு வெளியேயும் குறித்த நிறுவனம் தங்களது அலுவலங்களை திறந்தால், அவர்களின் வியாபாரம் விருத்தியடையும் என்பதுடன், நாடும் நன்மையடையும், ஊழியர்களும் நன்மையடைவார்கள்.
அத்துடன், இளைஞர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண அரசாங்கம் பொருத்தமான கொள்கைகளை வகுக்கவில்லை.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சட்டத்தை திருத்தம் செய்வதால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
கடந்த ஓரிரு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஏற்றுமதி அதிகரிக்கப்படவில்லை, மாறாக ஏற்றுமதி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் அந்நிய செலாவணி மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் வீழ்ச்சியடைந்தது.
சட்ட திருத்தங்கள் செய்வதால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது, கொள்கை ரீதியில் நடைமுறைக்கு பொறுத்தமான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதை தவிர்த்து விட்டு அரசாங்கம் போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர் யுவதிகளை பின்தொடர்ந்து செல்கிறது.
நாம் கடந்த சில நாட்களுக்கு முன்னர், காங்கேசன் துறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்.
இன்று நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உணவு கூட இன்று இல்லை.
மேலும், வசந்த முதலிகே உள்ளிட்ட போராட்டத்தின் ஈடுபட்ட பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
47 நாட்களாக இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் செய்ய தவறு என்ன என்பதை பாராளுமன்றில் வெளிப்படுத்த வேண்டும்.
விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் மிரட்டும் சாணக்கியன்
2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தச் சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் தொடர்பான விசாரணைக்கு என்ன நடந்தது? அந்த இளைஞர்கள் செய்த தவறு என்ன?
பல தமிழ் இளைஞர்கள் வருடக்கணக்கில் சிறையில் உள்ளார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது அவர்களின் வழக்கு விசாரணைகளையேனும் துரிதப்படுத்த வேண்டும்.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முகநூலில் கருத்து வெளியிட்டார்கள் என்றுக்கூட சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு இளம் தலைமுறையினரை கைது செய்ய என்ன காரணம்? இவர்கள் செய்த பயங்கரவாதச் செயற்பாடுகள் என்ன?
இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டால் நிச்சயமாக விரைவிலேயே
ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

வீட்டின் பின்புறத்தில் பதுங்கிய சிறுத்தை
வீட்டின் பின்புறத்தில் பதுங்கிய சிறுத்தை
கொட்டகலை – திம்புளைபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின்
பின்பகுதியில் ,சிறுத்தைப் புலி ஒன்று இன்று காலை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உணவு தேடி இந்த பகுதிக்கு வரும் வழியில் இவ்வாறு வீட்டின் பின்பகுதிக்கு இறங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வீட்டின் பின்புறத்தில் பதுங்கிய சிறுத்தை
இதனை கண்ட வீட்டாளர்களும், பிரதேசவாசிகளும் திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன், நுவரெலியா வனஜீவராசிகள்
காரியாலயத்திற்கும் அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதிகாரிகள் வரும் வரை, அப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

ஜெனிவா மனித உரிமைகூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடி
ஜெனிவா மனித உரிமைகூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடி
இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்னெடுக்கப்படும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு மிக்க குறைவான ஆதரவே
கிடைக்கும், அதற்கான இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையுடன் இணங்கப்போவதில்லை என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
உண்மைகளை கண்டறியும் பொறிமுறை அவசியம் எனவும், அது உள்ளக பொறிமுறையாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், உண்மைகளை கண்டறியும் விதமாக உள்ளக பொறிமுறையை
ஜெனிவா மனித உரிமைகூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடி
உருவாக்குவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் இது குறித்த பொறிமுறை ஒன்றினை உருவாக்க
அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர், பயங்கரவாதத்தடைச் சட்டத்தில் தேவையான மாற்றங்களை
செய்துள்ளதாகவும், இச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 200க்கும் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இம்முறை பிரேரணையில் பொருளாதார குற்றங்கள் குறித்து தெரிவித்துள்ள போதிலும்,
பொருளாதார விடயங்களை சுட்டிக்காட்டும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
பேரவைக்கு இல்லை என தெரிவித்த அமைச்சர்,
இலங்கைக்கு எதிராக மேலும் மேலும் குற்றங்களை சுமத்தி இலங்கையை நெருக்கடிக்குள்
தள்ளவே சர்வதேச தரப்பு முயற்சிப்பதாகவும்,
பிரிவினையினை வலுப்படுத்தும் பிரதான இரண்டு நாடுகளே இந்த முயற்சிகளின்
பின்னணியில் இருந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். நாளைய தினம் (6)
இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில்,
இன்று காலையில் ஜெனிவாவில் இருந்து அமைச்சர் சூம் தொழிநுட்பம் மூலமாக
நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு
கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு
இலங்கைக்கான புதுடெல்லியில் உள்ள கொரிய குடியரச தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஹான் ஜொங்ஹூன் அவர்கள்
(அக் 04) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த லெப்டினன்ட் கேணல் ஜொங்ஹூன்ஐ ஜெனரல் குணரத்ன அவர்கள் வரவேற்றார்.
கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு
இச்சந்திப்பின் போது, கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக சுமுக கலந்துரையாடல் நிகழ்ந்தது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு
அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்துகொண்டார்.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின
வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின
இலங்கை வடக்கு பகுதிக்கான ரயில்வே சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .
பொருளாதர நெருக்கடி காரணமாக தடை பட்டிருந்த சேவைகள் மீள் செயல் நிலைக்கு திரும்பியுள்ளது ,
வடக்கு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

இலங்கையின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, எலபாத, அயகம, கிரியெல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 09.00 மணி வரை குறித்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய
கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

குளத்தில் மூழ்கிய இருவர் சடலங்கள் மீட்பு
குளத்தில் மூழ்கிய இருவர் சடலங்கள் மீட்பு
மட்டக்களப்பு – உன்னிச்சை குளதில் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 33 வயதுகளையுடைய இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு உன்னிச்சை குளதில் நண்பர்களுடன் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை நீரில் மூழ்கி
காணாமல் போன நிலையில், 16 வயதுடைய சிறுவன் திங்கட் கிழமை சடலமாக மீடக்கப்பட்டார், மற்றுமொருவர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குளத்தில் மூழ்கிய இருவர் சடலங்கள் மீட்பு
சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலங்களை பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியிருந்தார்.
உயிரிழந்த இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

பாடசாலையில் சகா மாணவர்கள் உணவை திருடி உண்ணும் மாணவர்கள்
பாடசாலையில் சகா மாணவர்கள் உணவை திருடி உண்ணும் மாணவர்கள்
சக மாணவர்களின் பகலுணவை திருடி உண்ணும் மாணவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், பகலுணவை கொண்டுவரும் மாணவர்கள், பகலுணவை கொண்டுவருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
குருணாக்கல்லில் உள்ள பிரசித்திப் பெற்ற பாடசாலையில் தரம்-10லேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என அறியமுடிகின்றது.
இதனால், சாப்பாடு கொண்டு வரும் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக இவ்வாறு பகலுணவு திருடப்படுவதாகவும், தங்களுடைய புத்தகப் பையில் வைக்கப்பட்டிருக்கும் சாப்பாடும் திருடப்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், சிலர் பாடசாலைக்கு பகலுணவை கொண்டு வருவதை விரும்பவில்லை என்றும் அறியமுடிகின்றது.
சாப்பாட்டை களவெடுத்தும் உண்ணும் மாணவர்களுக்கு எதிராக மனிதாபிமானத்தை கவனத்தில் கொண்டு,
எவ்விதமான நடவடிக்கைக்கு எடுக்க முடியாதுள்ளது என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2022 ஒக்டோபர் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது
மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில்
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக்
காணப்படுவதுடன் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்புமுதல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன்
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலிவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே, காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம்
செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதோடு,
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும்
இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு
இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது
எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாரென ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.
அத்துடன், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டிருக்கும் மதிப்பீட்டு அறிக்கை இவ்வருட
இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்படுமென்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டதைப் பாராட்டி, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர்
திருமதி. எர்சூலா ஃவொன் டேயர் லைன் (Ursula von der Leyen) அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வாழ்த்துச் செய்தியில்,
”இலங்கை மக்கள் எதிர்பாரா சவால்களைச் சந்தித்துள்ளனர். இந்த நெருக்கடியிலிருந்து மீள, இலங்கை இந்தக் காலகட்டத்தில் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்.
நாட்டை மீண்டும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவும், நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் தேவையான மறுசீரமைப்புகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
சட்டத்தின் ஆட்சி, கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் உரிமை, அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்துதல், அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்தல் என்பன இச்செயன்முறையின் மிக முக்கியமான அம்சங்களாகும்.
அதனடிப்படையில் இலங்கையின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெகு விரைவில் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளும்.
இலங்கையரின் குறுகிய மற்றும் நீண்டகால நலன்களை உறுதி செய்யும் வகையில், நிலையான கொள்கைகளை அறிமுகம் செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்.
எதிர்பாராத பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களுடனும், கடன் வழங்குனர்களுடனும் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்க வேண்டுமென நான் வாழ்த்துகின்றேன்.
எமது உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பொதுவான விருப்புகளின் அடிப்படையில் தொடர்ந்தும் உங்களுடன் மிக நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகின்றேன்.”
என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் திருமதி. எர்சூலா ஃவொன் டேயர் லைன் தெரிவித்துள்ளார்.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி
பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி
பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி வழங்கும் வேலைத்திட்டம் ஆயிரம் பாடசாலைகளில் இன்று (03) தொடக்கம் ஆரம்பிக்கப்படுவதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் மந்த போசாக்கு நிலைமைக்கு தீர்வாக 2 ஆயிரம் சமூக வைத்திய சேவை ஊழியர்களின் பங்களிப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும்
நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி மேலும் தெரிவித்தார்.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா அஇஸ்ரேலுக்கு ஈரான் சுபிரீம் லீடர் Ayatollah Ali Khamenei கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ,அப்பாவி மக்களை கொன்று குவித்து வெறியாட்டம் நடத்தி வருகிறது இஸ்ரேல் இராணுவம் .
அப்பாவி முசுலீம் பெண்ணை கைது செய்து சென்ற இஸ்ரேல் இராணுவம் ,அந்த பெண்ணை சிறையில் அடைத்து கொடுமையாக வதைகள் ,புரிந்து அடித்து கொன்றுள்ளது .
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரான், சுபிரீம் லீடர் ,இஸ்ரேல் நடத்தும் இந்த அரச பயங்கரவாதத்திற்கு அமெரிக்காவும் ம் துணை புரிந்துள்ளது .
இஸ்ரேல் அமெரிக்கா இநனைந்தே இந்த மக்கள் மீது கூட்டு தாக்குதலை நடத்தி வருவதாக ஈரானிய சுபிரீம் லீடர் குற்றம் சுமத்தியுள்ளார் .
இவரது இந்த எச்சரிக்கையின் பின்னர் ,ஈரானின் முக்கிய தலைவர்கள் கொலை செய்திட இஸ்ரேல் முனைய கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
பிரிட்டன் லீவர்பூல் பகுதியில் நாய் கடித்து, அறுபது வயது பெண் பலியாகியுள்ளார் .
நாயின் பலத்த கடி காயங்களுக்கு உள்ளான , பெண்மணி ,சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .
இந்த பெண் மரணம் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
மேற்படி பெண்ணின் மரண செய்தி, அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் சமீப காலங்களாக, நாய் கடிக்கு உள்ளாகி ,பலர் இறந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

முன்னேறி தாக்கும் உக்கிரேன் தப்பி ஓடும் ரசியா
முன்னேறி தாக்கும் உக்கிரேன் தப்பி ஓடும் ரசியா
உக்கிரேன் இராணுவம் முன்னரங்க நிலைகள் இரண்டை மீட்டுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம்.
தொடரும் உக்கிர தாக்குதல்களால் ,ரசியா இராணுவம் தப்பி ஓடிய வண்ணம் உள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .
அமெரிக்கா ,பிரிட்டன் நாடுகள் வழங்கிய ஆயுத தளபாட உதவிகளுடன் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் உக்கிரேன் .
ரசியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்டவாறு உக்கிரன் முன்னேறிய வண்ணம் உள்ளது .
முன்னேறி தாக்கும் உக்கிரேன் தப்பி ஓடும் ரசியா
தொடர்ந்து தமது பகுதிகளை மீட்கும் ,மீட்பு போர் நாவடிக்கை தீவிர படுத்த பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்துள்ளது .
ரசியா இராணுவத்தின் பின் வாங்குதல் ,உக்கிரேன் இராணுவத்தை பொறிக்குள் சிக்க வைக்கும் ,தந்திரபோயம் மிக்க ஒன்று என முக்கிய உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன .
எனினும் மேற்குல நாடுகளின் ஊடகங்கள் ரசியா தோல்வியடைந்து விட்டது என்கின்ற பரப்புரையை தொடர்ந்த வண்ணம் உள்ளனர் .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்
மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி ..? இது போல மீன் செஞ்சா வீடே மணக்கும் ,
அவ்வாறான தரணமான மிகவும் சுவை தரவல்ல மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .
மீன் குழம்பு செய்வது எப்படி .
மீனை நனறாக வெட்டி கழுவி ,அதன் பின்னர் மஞ்சள் தூள் போட்டு கலக்கி நன்றாக ஊற வைத்திடுங்க .
தமிழ் சமையல்
சுவையாக மீன் குழம்பு வருவதற்கு காரணம் புளி தாங்க .அவ்வாறான புளியை நீரில் போட்டு ஊற வைத்து வடித்து எடுத்து வைத்திடுங்க .
கரைத்து வடித்த புளிக்குள்ள இப்போ ,மஞ்சள் தூள் ,இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,மூணு கரண்டி மல்லி தூள் ,ஒரு கரண்டி சீராக தூள் ,அரை கரண்டி சோம்பு தூள் ,
ஒரு கரண்டி உப்பு ,சேர்த்து இப்போ எல்லாத்தையும் நன்றாக் கலக்கிடுங்க .
நன்றாக் கலக்கிய பின்னர் ,அதற்குள் தேவையான பச்சை மிளகாய் ,கூடவே கருவேப்பிலை சேர்த்திடுங்க .
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்
அதன் பின்னர் இரண்டு தக்காளி நனறாக பொடியாகி வெட்டி தட்டு ஒன்றில் வைத்திடுங்க .
இப்போ மீன் குழம்பு செய்வதற்கு ,அடுப்பில கடாய வைத்து அதில் மூன்று கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாகா சூடாக்கிடுங்க .
எண்ணெய் சூடானதும் வெந்தயம் ,கடுகு ,சோம்பு சேர்த்து பெரிய வைத்திருங்க ,அதுகூட பெரிய வெங்காயம் ,பூண்டு நன்றாக பொடியாக்கி ,அது கூடவே பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,யாவரும் போட்டு நன்றாக வதக்கி வாங்க .
வெங்காயம் கலர் மாறி வந்ததும் ,மசித்து வைத்த தக்காளியை சேர்த்திடுங்க .அதன் பின்னர் கரைத்து வைத்த புளிகூட்டு கலவையை இப்போ ஊற்றி நன்றாக கலக்கிடுங்க .
மசாலா பச்சை வாசம் போனதன் பின்னர் ,இப்போ மாங்காய் ,மற்றும் மீனை போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
இப்போ மீனும் மாங்காயும் ,வேகி வருவதற்கு ஐந்து நிமிடம் விட்டிருங்க .
அதன் பின்னர்,தாளிப்பு வடகம் ,வெங்காய வடகம் எண்ணையில் பெரிய வைத்து, இப்போ இதில சேர்த்திடுங்க .
இப்போ மிக சுவையான மீன் குழம்பு ரெடியாடிச்சு .
இதனை சாதம் ,இட்லி ,தோசை கூட சேர்த்து சாப்பிட்டா சும்மா பிச்சுக்கிட்டு போகும் தலைவரே .
ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு
ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு
ஈரான் Mahan Air மஹான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் 340 பயணிகள் விமானம் டெஹ்ரானில் இருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்ததது .
அப்பொழுது விமானிக்கு விமானம் குண்டு வைத்து தகர்க்க படவுள்ளதாக செய்திகள் கிடைக்க பெற்றதை அடுத்து ,விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகளை மேற்கொண்டார் .
இந்தியா வான் தளத்தில் அவசர தரை இறக்கும் படி கோரிக்கை விடுக்க பட்ட பொழுதும் ,இந்தியா அனுமதி வழங்க மறுத்துள்ளது .
ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு
அதன் பின்னர் , விமானம் பாதுகாப்பாக உள்ளது ,தொடர்ந்து பறக்கும் படி அறிவித்ததை அடுத்து ,ஈரான் Mahan Air விமானம் சீனா விமான நிலையத்தில் தரை இறங்கியது .
ஈரான் விமான சேவைகளை முடக்கும் நோக்குடன் எதிரிகளினால் திட்டமிட்டு பரப்பப் பட்ட வதந்தி என குறித்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது .
இது போலவே மியன்மார் நாட்டில் மூவாயிரம் அடி உயரத்தில் பறந்த பயணிகள் விமனம மீது துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த பட்டதில் ,
அதில் பயணித்த பயணி ஒருவர் காயமடைந்து இருந்தமை குறிப்பிட தக்கது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி திணறும் இலங்கை
உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி திணறும் இலங்கை
இலங்கை வரும் உலலாச பயணிகள் வருகை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. .
இதனால் உல்லாச பயணிகள் மூலம் இலங்கைக்கு ,கிடைக்க பெறும் ,அண்ணிய செலாவணி குறைவடைந்துள்ளது .
இலங்கையில் உல்லாச பாயணிகள் வருகை மூலமே, பல மில்லியன் பணத்தை ஆண்டு தோறும் ஈட்டி வந்தது .
தற்போது அவை வீழ்ச்சியடைந்துள்ளதால் இலங்கை பொருளாதாரத்தில் திணறிய வண்ணம் உள்ளது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

தென் பகுதியில் நிரம்பி வழியும் குளங்கள்
தென் பகுத்தியில் நிரம்பி வழியும் குளங்கள்
தென் பகுதியில் நிரம்பி வழியும் குளங்கள் .
கடந்த சில நாட்களாக தைக்களவு மழை வீழ்ச்சி இடம்பெற்று வருவதால் ,குளங்கள் நிரம்பி வழிகின்றன .
இதனை அடுத்து நீர் நிலை பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன .
மேலும் குளங்களின் வான் கதவுகள் திறந்து வீட்டா பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இனம்பெற்ற வண்ணம் உள்ளது .
கடந்த தினம் மட்டும் நூறு மில்லி மீட்டர் மலை வீழ்ச்சி கிடைத்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

பொலி கண்டி கடல்கரையில் 217 கிலோ கஞ்சா மீட்பு
பொலி கண்டி கடல்கரையில் 217 கிலோ கஞ்சா மீட்பு
இலங்கை வல்வெட்டித்துறை பொலிகண்டி கடல்கரை பகுதியில் 217 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகள் மீட்க பட்டுள்ளன .
இந்த பொதிகள் தொடர்பாக புலனாய்வு துறையினருக்கு கிடைக்க பெற்ற ,இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தினர் .
அப்பொழுதே இவை மீட்க பட்டுள்ளன .
இந்த கஞ்சா கடத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கை தற்போது கஞ்சா போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்று வருகிறது .இவை ஊடாக மேலும் அம்பல பட்டுள்ளது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

- வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை